கிராமத் தம்பீ மறுமலர்ச்சித் திட்டம் எங்கே?
April 8, 2022
பார்த்திட்டாயா தம்பீ?
கேட்டிட்டாயா கதையை??
வயிறு எரிகிறதே! கும்பி காய்ந்து கருகுகிறதே!!
அனைத்து கிராம அண்ணாக்களுக்கு மட்டுமே இந்த மறுமலர்ச்சித் திட்டமாம்! ப்ளடி.
அதுவும் அனைத்து அண்ணாக்களுக்கும்! அதுவும் ஜாதிவாரி இடஒதுக்கீடே இல்லாமலாம்!
ஐயகோ!!
ஆனால்… அனைத்து கிராமத் தம்பிகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? தம்பீ என்றாலே இளிச்சவாயனா?
அவர்கள் மறுமலரவே கூடாது என்பதில் ஏனிந்தப் பிடிவாதம்?
சரி – ஒரு பேச்சுக்கு, அண்ணாக்களை மட்டும் மறுமலர்ச்சி செய்யவைக்கும் இந்தத் திட்டம் சரியென ஒப்புக்கொண்டாலும்…
…நான் கேட்கிறேன்… முகஸ்டாலினின் இந்தத் திட்டத்தால் அவருடைய அண்ணா முக அழகிரி மறுமலர்ச்சி செய்யப்படுவாரா?
:-(
மேலும் நகரத்தில் இருக்கும் அண்ணாக்களைக் கண்டுகொள்ளாமல் கமுக்கமாக இருப்பது ஏன்? அவர்கள் என்ன பாவம் செய்தனர்?
ஒருவேளை அவர்கள் அனைவருக்கும் விதம்விதமாக கலர்கலராகக் கமிட்டி வைத்து வேலைவாய்ப்புகளை நல்கலாம் எனவொரு திட்டம் இருக்கிறதோ?
:-(
April 8, 2022 at 17:44
பாவம் சார் நீங்கள் ! அவர் அன்ணாவிற்கு தேர்தல் நடப்பதற்கு முன்பே வேண்டிய மறுமலர்ச்சி செய்ததால்தான் முதலில் குரைக்க ஆரம்பித்த அவர் இன்று வரை வாலை சுருட்டி கவுட்டையில் வைத்துக் கொண்டு முனக கூட இல்லை. இந்த திட்டம் மற்ற தறுதலை அண்ணாக்களுக்குத்தான்