பத்திரிகையாளர் கேஆர் அதியமான், திமுக திராவிடத் தலைவர் எம்எம் அப்துல்லா, ‘மனைவி தற்கொலை புகழ்’ டாக்டர் ப்ரூனோ – தொடர்புகள், குறிப்புகள்

May 4, 2021

எனக்கு இவர்கள் மூவருடன் நேரடி அறிமுகமேயில்லை. ஆனால் பின்னவர்கள் பற்றியும் அவர்களின் தொண்டுகள் பற்றியும் நன்றாகவே அறிவேன்.

இந்த புதுக்கோட்டை அப்துல்லா அவர்களுடன் நன்றாக அறிமுகமுள்ள, அவரைப் பற்றிப் பலவிஷயங்களையும் அறிந்த சிலரை மாமாங்கங்களாக அறிவேன், இதில் ஒருவர் இன்னமும் திமுகவில் இருக்கிறார், பழைய ஆள், கருணாநிதிக்கு ஓரளவு நெருங்கியவராகவே இருந்தார் – ஆச்சரியம்தரும் விஷயமாக, இவருக்கு அடுத்த தலைமுறையினர் கட்சியில் இல்லை. மாறாக, நேர்மையாகப் பிழைத்துக்கொள்ள விருப்பப் பட்டிருப்பார்களாக இருக்கும், என்ன கஷ்டகாலமோ!

டாக்குட்டர் ப்ரூனோவின் மனைவி டாக்டர் அமலி அவர்களுக்கு நெருக்கமாக இருந்த சிலரையும் நேரடியாக அறிவேன். (இவ்விஷயத்தைப் பற்றி விலாவாரியாக எழுதியும் இருக்கிறேன்)

கேஆர் அதியமான் அவர்கள், தினத்தந்தி தொலைக்காட்சிக்கு முதுகெலும்பு என ஒன்று இருந்த காலகட்டங்களில், அதில் வந்த சிலபல நேர்காணல் வகையறாக்களுக்குப் பின்புலத்தில் ஆராய்ச்சிகளையும் தகவல்களையும் சேகரித்துத் தொகுத்துத் தரும் முக்கியமான பணியைச் செய்தவராக  இருந்தார் என்பது ஒருமாதிரி தெரியும். இந்த முக்கியமான விஷயத்தைத் திறம்படச் செய்தார் என்றும்.  (ஆனால் இவரைப் பற்றியும் இவருடைய சிலபல ஒப்புக்கொள்ள முடியாத செய்கைகளையும் அறிவேன், ஆச்சரியமும் பட்டிருக்கிறேன்; ஆனால், இப்போது அவை முக்கியமல்ல; ஏனெனில் அதியமான், அரசியல் பின்புலம் பெற்ற ஆசாமியல்லர் பாவம், மேலும் படித்தவர் – முக்கியமாக அரசியல் சுத்தமாகக் கொஞ்சமேனும் மெனெக்கெட்டிருப்பவர்; ஆகவே சிலபல விஷயங்கள் லூஸ்ல வுடப்படுகின்றன)

-0-0-0-0-0-

அதியமான் அவர்கள் தன் ஃபேஸ்புக் பக்கத்தில், தன்னுடைய கருத்துரிமையை  உபயோகித்துக் கொஞ்சம் பூடகமாக மட்டுமே – நேற்று ஒரு பதிவை எழுதியிருக்கிறார். நேற்று முன்தினம்தான் தேர்தல் முடிவுகள் வந்து திமுக கெலித்தது நடந்திருக்கிறது என்பதுதான் அதற்குப் பின்புலம். கீழே அந்தப் பதிவின் ஸ்க்ரீன்ஷாட்.

திமுக என ஒன்றையும் குறிப்பிடாமல்தான் எழுதியிருக்கிறார்; ஒருவேளை கேரளாவில் புதிய அரசு அமைவது குறித்தும்கூடப் பயங்காட்டுவது போல எழுதியிருக்கலாம்.

மாறாக – அப்படியில்லாமல் வரவிருக்கும் திமுக ஆட்சி பற்றியே ஏதாவது கருத்துத் தெரிவித்திருந்தாலும், ஏதாவது முன்னமே நடக்காததையா அல்லது நடக்காமல் இருக்கப் போவதையா அவர் எழுதியிருக்கிறார், பாவம்? திராவிடர்களின் ஆட்சியில் – குறிப்பாக நம் செல்ல திமுக ஆட்சியில் இதெல்லாம் சகஜம்தானே? இந்த மாதிரியும் இதற்குமேலும் அறிவியல் பூர்வமாகவும் தொழில் நுட்பங்கள் பல சார்ந்தும், மதச்சார்பற்ற அபகரிப்பு விஷயங்கள் நடப்பதற்குத் தானே நாம் திமுக கும்பலைத் தேவை மெனெக்கெட்டுத் தேர்ந்தெடுத்திருக்கிறோம், சொல்லுங்கள்?.

ஆனால்… இதற்குப் போய், சில உடன்இறப்புகள் குடுகுடுவென்று மூச்சிறைக்க ஓடி, காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்கள்… அதிக பட்சம் பத்துபேர் அல்லது நூறுபேர் (என அனுமானம், ஒருவேளை சில ஆயிரங்களாகக் கூட இருந்திருக்கலாம் – ஸோஷியல்மீடியா எழவுகளில் இதெல்லாம் பெரிய விஷயமில்லை; அடுத்த அலை வரும்போது இதெல்லாம் மறக்கப் படும் என்பதுதான் ஸாஸ்வதம்) படித்திருக்கக்கூடும் அப்பதிவுக்கு பெரும் விளம்பரம் அளித்திருக்கிறார்கள்.

இருந்தாலும், அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இடப்படும் இந்த, அலுப்பு-அறச்சீற்றப் பதிவினை இன்னமும் ஒன்றரைபேர் படிக்கப் போகிறார்கள் என்பதை நினைத்தாலேயே புல்லரிக்கிறது.

இதுவும் சரிதான்.

-0-0-0-0-0-

நிற்க. இதற்கு ஏற்பட்ட எதிர்வினைகளில் சுவாரசியமானது, திமுக திராவிட எம்எம் அப்துல்லாவின் எதிர்வினை. கீழே.

அதாவது, ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை!’ வாழ்க.

அவர் நேர்மையை மெச்சத்தான் வேண்டுமன்றோ?

மனதிற்குப் பட்டதைப் பளிச்சென்று, தன் கருத்துரிமையை நிலை நாட்டி சில அடிப்படை விஷயங்களைத் தெளிவுபடுத்திச் சொல்லியிருக்கிறார்.

மிக முக்கியமாக, அவர் சொல்லியிருக்கிறார்:

“…விமர்சனம் செய்யுங்கள், உண்மை இருந்தால் மட்டும்…”

நன்றி.

போதாக்குறைக்கு இவர் பாரதத்தைத் துண்டுதுண்டாகக் கூறுபோட்டு விற்கலாம் என்ற மேலான கருத்தும் உள்ளவர்.

(இந்த ட்வீட்டின் முகாந்திரம் வேறு – ஒரு வாதத்திற்காக அப்படிச் சொல்லியிருக்கிறார் எனச் சப்பைக் கட்டுக் கட்டலாம்… ஆனால் அவருடைய உள்ளார்ந்த பிரிவினை உட்கிடக்கையை இது காண்பிக்கிறது என்பது நிச்சயம் – இதனைப் பொதுவாகச் சொல்லப்படும் ‘இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், இந்தியாவை உடைத்து மேலதிகமாக நான்கு பாகிஸ்தான்களை உருவாக்கலாம்’ எனச் சொல்லும் தீவிர இஸ்லாம் வாதிகளின் கருத்தோடு பொருத்திப் பார்க்கவேண்டும்

எடுத்துக் காட்டாக, மேற்கு வங்காளத்தின் த்ரிணமூல் தலைவனான ஷேக் ஆலம் சொல்வது: We Can Form 4 Pakistans If 30% Muslims In India Come Together )

ஆக, இதுவும் சரிதான்.

-0-0-0-0-0-

எல்லாம் சரி. இந்த மேற்படி எழவுகளுக்கும், ‘மனைவி தற்கொலை புகழ்’ டாக்டர் ப்ரூனோவுக்கும் என்ன சம்பந்தம்?

கீழ்கண்ட பதிவுகளில் தகவல்கள் இருக்கின்றன.

இவற்றில், எம்எம் அப்துல்லா குறிப்பிட்ட ‘உண்மை’ இருக்கிறது.

2014ல் டாக்டர் ப்ரூனோவின் மனைவி சந்தேகாஸ்பதமான முறையில் இறந்தபோது, முதல்முறை அந்த விஷயம், அவசரம் அவசரமாக, அது காவல்துறை கேஸானாலும், ஐயனாவரம் காவல் நிலையத்தில் கமுக்கமாக  டபக்கென்று ஒருமாதத்துக்குள்ளாகவே மூடப் பட்டது அல்லவா?

அந்த அநியாய அறமேயற்ற அயோக்கிய ‘ஊத்தி மூடல்’ விஷயத்திற்கு திமுகவினர் உதவினார்கள் என அறிவோம் அல்லவா? (இத்தனைக்கும், அவர்கள் அப்போது ஆட்சியில் இல்லை!)

அந்த ஊத்திமூடல் விஷயத்திற்கு மிகவும் ‘உதவியவர்’ இந்த புதுக்கோட்டை எம்எம் அப்துல்லா தாம். (இன்னமும் இரு சற்றுகீழ்நிலை திமுக பிரமுகர்களும் ‘உதவினர்’ – அவர்கள் பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால் தற்கொலை செய்யப்பட்ட டாக்டர் அமலி அவர்களின் நண்பர்கள், அப்போது நடந்த அனைத்தையும், சில புகைப்படங்களுடன் ஆவணப் படுத்தியிருக்கின்றனர் என நினைவு; மேலும், அமலி அவர்களின் சகோதரியிடமும் இந்த விவரங்கள் இருக்கக்கூடும்…)

என்ன சொல்லவருகிறேன் என்றால்…

நண்பன் என்றால், அவன் தற்கொலையேகூடச் செய்திருந்தாலும், பாவம், உதவிக் கரம் நீட்டுபவர்கள் திமுக உடன்பிறப்புகள். நட்புக்கு இலக்கணமானவர்கள். நாணயமானவர்கள். ரூபா நோட்டானவர்களுமாகவும் இருக்கலாம்.

அதனால்தான் அவர்களை நம்பி, நம்மைப்போன்ற உடன்பருப்புகள், தமிழகத்தை அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம்.

இந்தவொரு ‘உடுக்கை இழந்தவன்கைபோல்’ ஆங்கே இடுக்கண் களையவரும் நட்பின் காரணத்துக்காகவே ஒன்றிரண்டு மூத்த திமுக காரர்களுடன் இன்றும் தொடர்பில் (அவ்வப்போது) இருக்கிறேன் – அதாவது, இதுவரை, அவர்கள் தொடர்புகொண்டால் அப்படி.

…நானாகத் தன்னிச்சையாக அவர்களை  எதற்கும், இதுவரை அணுகியதில்லை. (ஆனாலும், நாள் கிடக்கிற கிடப்பில், எதிர்காலத்தில் ஒருவேளை, நான் யாரையாவது தற்கொலை செய்ய நேர்ந்தால்…? எதற்கும் இருக்கட்டும்!)

அதுவும் சரிதான்.

-0-0-0-0-0-

என்னைப் பொறுத்தவரை, திமுகவினர் ஆட்சிக்கு அமரும் முன்னமே இப்படி டாய்டூய் என உருட்ட ஆரம்பிப்பது, சரியான முன்னுதாரணமில்லை.

தேவையுமில்லை.

மேலும், கேஆர் அதியமான் போன்ற படிப்பாளி-அறிவுஜீவி ஊடகக்காரரை – அவருக்குப் பாரிவள்ளல் போல ஆவன செய்து அரவணைத்துச் சென்றால், திமுக-வுக்கு நெடு நாள் நோக்கில் நன்மையே! ஏனெனில் – இருக்கும் திமுக சார்பு ஊடகக்காரர்களில் பலப்பலர் தண்டக்கருமாந்திரங்கள் மட்டுமே! அல்லது மாபெரும் வழவழா கொழகொழாக்கள். அவர்களுக்குக் கழுதைபோலக் கத்தத் தெரியும், கருத்துகள் என ஒரு குசுவும் இருக்கா என்பது என் நேரடி அனுபவம்.

(ஆனால் தனிப்பட்ட முறையில், நெடுமான் அதியமான் அஞ்சி வளைந்து கொடுப்பாரா அல்லது முரண்டுபிடித்து வாளேந்துவாரா என்பதை நான் அறியேன்! ஔவை மை டு நோ? நான் சங்கி, சங்ககாலன் அல்லனன்றோ?)

ஹ்ம்ம்… எது எப்படியோ!

திமுக உடன்பிறப்புகளுக்கு எதிரான விளம்பரத்தை, உடன்பிறப்புகளேவா செய்வது?

ஏற்கனவே அடிவயிற்றுக் கலக்கத்தில் இருக்கும் திமுக-வோட்டளிக்காத தமிழர்களுக்கு, இப்படியா ஊக்கம் கொடுப்பது?

ஆகவே, உடன்பிறப்புகளுக்கு என் விண்ணப்பம்:

கலைஞர் கருணாநிதி காட்டிக்கொடுத்த பாதையில் பயணம் செய்யுங்கள்.  

வேகமய்யா வேகம்!

இன்னமும் ஐந்தே ஆண்டுகள்தாம் இருக்கின்றன. ஆகவே. போக்கற்றவர்கள் ஏதோ சொல்கிறார்கள் எனக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, ‘தொழிலைத் தொடர்ந்து செம்மையாக’ நடத்திக்கொண்டு போகாமல், என்ன இது தேவையற்ற விஷயம், சொல்லுங்கள்?

-0-0-0-0-0-

ஸ்டாலின் தான் வந்த்ட்டாரு…

ஆட்சியமைக்கற்த்துக்குப் முன்னயே, நல்லாட்சிய கொட்க்கறாரு…

ணந்ரீ.

14 Responses to “பத்திரிகையாளர் கேஆர் அதியமான், திமுக திராவிடத் தலைவர் எம்எம் அப்துல்லா, ‘மனைவி தற்கொலை புகழ்’ டாக்டர் ப்ரூனோ – தொடர்புகள், குறிப்புகள்”


 1. இந்த அதியமான் அஞ்சி, சிலபல வெறி உச்சாடனங்களைச் செய்திருக்கிறார் என்பதை இன்று அறிந்தேன். இவற்றைச் சொதப்பல்கள் எனச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை.

  https://m.facebook.com/story.php?story_fbid=10157993773356451&id=639226450

  இப்படி, ஒரு முகாந்திரமும் இல்லாமல் மக்கள்திரள் ஒழிப்பு அளவுக்கு இம்மாதிரி ஒருவர் எப்படிப் போகிறார்?  இருந்தாலும், ஆச்சரியம்தான்! மரை கழன்றுவிட்டதோ?

  இன்னொருவர், இந்த அதியமான், பிராம்மணர்களைப் புற்று நோய் என வர்ணித்தார் எனச் சொல்கிறார். (என்னிடம் ஸ்க்ரீன்ஷாட் இல்லை)

  —-

  எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – திமுக ஜினொஸைட் அப்படியிப்படி எனச் செல்லாது; அதற்கு ஒருமாதிரிக் குருட்டு தைரியமும் குவியம் செய்யப்பட்ட வெறுப்பும் வேண்டும். அது இல்லாமலேயே கல்லா கட்டமுடியும் என்பதால், பலப்பல இடர்களைக் கொடுக்கும் + தொடர்ந்து அசிங்கப் படுத்தும் என்பதைத் தவிர கொலைகளுக்குச் செல்லாது. (இதெல்லாம் பரவாயில்லை எனச் சொல்லவரவில்லை; ஆனால் திராவிடத்தை நான் அறிவேன்.)

  ஆனால், நாம்தமிழர்கள் பெரிய அளவில் உருவானால், அவர்கள் செய்யக் கூடும் – அல்லது அவர்களுக்குப் போட்டியாக திமுக, முஸ்லீம்லீக் போன்ற பிற தீவிர இஸ்லாம்வாதக் கட்சிகள் செய்யமுயலலாம்.
  ஏற்கனவே – தமிழகத்தில் பணி செய்துகொண்டிருக்கும் மார்வாடிகளைக் குறிவைத்து – கணிசமான உதிரிகள் கொண்ட வெறுப்பிய இயக்கம்  ஒன்று – திமுகவில் முனைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இது அவர்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கும் என நம்பலாம்.
  பார்க்கலாம்…

  என்ன இருந்தாலும் நடந்தாலும் – நம் ஊடகப்பேடிகள் ஒருபோதும் டாக்டர் ப்ரூனோ போன்ற திராவிட அயோக்கியர்களைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.

  தெருப் பொறுக்கிகள்.

 2. Rajmohan Says:

  இதில் பெரிய நகைச்சுவை எனில் அதியமான் திமுகவை சார்ந்தவர்

 3. Ramesh Says:

  நாள் 1 :அம்மா உணவகம் மீது தாக்குதல்
  நாள் 2:அம்மா மினி கிளினிக் மீது தாக்குதல்
  நாள் 3 :துப்புரவு பணியாளர் மீது தாக்குதல்


  • ஐயா, ஜாபிதாவுக்கு நன்றி. ஆனால், இதெல்லாம் சிறிய விஷயங்கள்; டெம்பவரவரி.

   இதில் பாதிக்கப் பட்டவர்களுக்கே தேர்தல் நேரத்தில் தேவைக்குரிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும்; பாவப்பட்ட ஏழை எளியமக்களைச் சொல்லியும் குற்றமில்லை.

   ஆனால், கலாச்சாரச் சுரண்டலும் அதனைக் கிண்டிக் கூறுபோட்டு விற்பதும் அமோகமாகத் தொடங்கும். இம்மாதிரி விஷயங்கள் பெரிய அளவில் தெரியவரமாட்டா.

   எடுத்துக்காட்டாக, ஒரு படித்த(!) திராவிட மூதியின் பிரச்சாரம்:

   • dagalti Says:

    By dismissively calling this crafty man an imbecile, I think you miss the point.

    That Dravidian is only a linguistic term is academically correct but that’s about it. It’s like saying Arabic is also a Semitic language so anti-Semitism – in the modern functional meaning of the word – is ‘uninformed’

    Dravideology has always meant only one thing; ‘anti Brahmisnim of the landed gentry’. The gentleman is exactly that. It sells.

    Gradually power and corruption had rendered this ideological (!) core unnecessary and one imagined things were post ideological.

    Br with the ascendancy or BJP has made all the latent animus come to the surface. The gloves are off.

    And this gent has – by all evidence – a keen nose for the resurgence of bigotry in Tamil land..


 4. Sir, I appreciate your PoV. But there are a couple of things to be clarified – about the twistory of ‘appropriation’ of the word – beyond the obvious/fake linguistic category. But we shall deal with that some other time. Thanks.

  • dagalti Says:

   ஓர் இனிய உபதகவல்: ‘கீழடியில் முழு சித்திரமும் கிடைத்துவிட்டது’ புகழ் உதயசந்திரர், திராவிடஸ்டாக் முக்யமந்திரிஜியின் கார்யதரிசிகளில் ஒருவராக நியமனஞ்செய்யப்பட்டுள்ளார்.


   • good grief. fool pictures will now be already available for yet to dug places too, yeah? (he is not only ignorant about archaeology, but also about IT and everything in between, the imbecile IAS scum)

 5. Vel Says:

  இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு இரண்டு நாட்கள் முன்பு வரை கூட இந்த அதியமானே மாரிதாஸ் மற்றும் சிலரை சிறையில் தள்ள வேண்டும் என்று மிகவும் ஆவேசத்துடன் எழுதி கொண்டு இருந்தார். ஒரு முறை neo-liberal என்று அவரை குறிப்பிட்டு ஒரு கமெண்ட் செய்தேன் அதற்கு அவர் மிகுந்த கோபத்துடன் இன்பாக்ஸ்ஸில் வந்து மிக கீழ்தரமாக வசைபாடினார். தனக்கு பிடிக்காதவர்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்று அதியமான் நினைத்தாரோ அதுவே அவருக்கு நடந்து விட்டது. அதுவும் அவர் ஆதரித்த திமுகவே அவருக்கு செய்தது poetic justice மாதிரிதான் எனக்குப்படுகிறது.


  • ஐயா, சரி. மனிதர்களின் பரிமாண வீழ்ச்சி என்பது, அச்சமும் விசனமும் தருவது என்ன செய்ய…

   எனக்கு இவருடன் அறிமுகம் என ஒன்றுமில்லை; ஆனால் அகஸ்மாத்தாக, இந்த நபரை – எம் எம் அப்துல்லா எனும் திமுக நபர் மிரட்டிய ஸ்க்ரீன்ஷாட் கிடைத்தது.

   எனக்கு உடனடியாக இதே அறச்சீற்ற அப்துல்லா, தற்கொலைகாரர்களுக்கும் மனைவியைத் துன்புறுத்தியவர்களுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு, தடயங்களை அழித்து, போலீஸ்கேஸை ஊத்தி மூடியது நினைவுக்கு வந்தது.

   என் பதிவுக்கு முகாந்திரம் அதுதான்.

   இந்த டாக்டர் ப்ரூனோவின் அயோக்கியத்தனங்கள் இன்னமும் தொடர்ந்து அமுக்கப் படுவது ஆச்சரியம் தருவது… (சொல்லப் போனால் இல்லை)

   அது ஒருபுறமிருக்க, சர்வ நிச்சயமாக: ‘கெடுவான் கேடு நினைப்பான்.’ அதியமான் உட்பட.

   • Vel Says:

    அவரை தீயவர் என்று நினைக்கவில்லை. கருத்துரிமை என்பது நமக்கு பிடிக்காதவற்றை பேசுபவரை வெறுப்பது அல்ல, ஒருவருடைய கருத்து பிடிக்கவில்லை என்றால் ‘just move on’ என்ற attitudeடை வளர்த்து கொள்வதுதான் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதியமான் நிச்சயம் ஒரு தீராவிட ஒட்டுண்ணி அல்ல. ஆனால் அவர் மாரிதாஸ் போன்றவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி சில நாட்களிலேயே அவருக்கே அந்த நிலை வந்தது (கேவலமான மனநிலைதான்) சந்தோசமாக இருந்தது.

    கருத்துரிமை என்பது நம் தரப்பு மாரிதாஸ்களுக்கு மட்டும் அல்ல எதிர்தரப்பில் இருக்கும் மாரிதாஸ்களுக்கும் (Saket Gokhale, Rana Ayyub போன்ற கழிசடைகளுக்கும்) இது பொருந்தும் என்றே நம்புகிறேன். ஒரு பக்கம் கேவலமான ஒரு சந்தோஷம் இருந்தாலும், அதியமானை வழக்கு போட்டு அலைய விடுவது மிகவும் தவறு. அவருக்கு நடந்தது நமக்கும் நடக்கலாம் என்பதே மிகவும் கவலை தரும் விஷயம்.

    //ஏனெனில் அதியமான், அரசியல் பின்புலம் பெற்ற ஆசாமியல்லர்//

    அதியமானின் தாய் வழி தாத்தா திமுகவில் MLA’வாக இருந்தவர். Frontline editor Vijayasankar அதியமானின் குடும்ப நண்பர் (அதியமானுக்கு அல்ல), அதனால் அதியமான் பெரிய பாதிப்பு இல்லாமல் இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்து விடுவார் என்று நினைக்கிறேன்.

    Frontline editor Vijayasankarரின் அதியமானை பற்றிய முகநூல் பதிவு:


   • ஐயா நன்றி.

    எனக்கு அதியமான் தாத்தா பற்றியெல்லாம் ஒருசுக்கும் தெரியாது – ஏன் அதியமான் பற்றியே கூடத் தெரியாது’; ஆனால், அவர் ஊடகக்காரர்களுக்குப் பின்புல உதவி செய்தபோது அவர் பெயர் பெரிதாக வெளிவராமல் பார்த்துக்கொண்டார் – ஆகவே நான் அவருக்குப் பின்புலம் இல்லை என நினைத்தேன். தன் பின்புலத்தை இந்தச் சச்சரவு விஷயத்திலும் உபயோகித்ததாகத் தெரியவில்லை.

    இந்த விஜயசங்கர் போன்றவர்களிடம் நான் மதிப்பு வைக்கமுடியவில்லை.

    அவர் அந்தப் பதிவிலேயே வுடான்ஸ் வுடுகிறார்: “குறிப்பாக பிஜேபி ஆட்சியாளர்கள் சமூக வலைத் தளங்களில் எதிர்க் கருத்து சொல்பவர்கள் மீது நடத்தி வரும் அதிகாரத் தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில். ” – இதற்கு எவ்வளவு தரவுகள் தரமுடியும்? பேடி.

    “முதல்வராகப் பதவியேற்கப் போகும் திரு ஸ்டாலினிடம் எனக்கு மிகவும் பிடித்த குணம் அதீத நிதானம்தான்.” – ஆமாண்டே! அண்ணா நகர் ரமேஷ் விஷயத்தில் ற்றொம்பவே சூதானந்தாண்டே!

    இடதுசாரி ஜால்ரா.

    கருத்துச் சுதந்திரம்: உங்கள் கருத்துகளை ஆமோதிக்கிறேன்; ஆனால் பரஸ்பரம் அந்தப் பார்வையே இருக்குமானால் சரிதான். ஆனால் ஸாகேத், ரனா போன்றவர்களிடம் அது இல்லை. கொடும் அவதூறு செய்துகொண்டே போவார்கள். கேட்டால்

    ஆனாலும், அயோக்கியர்களுக்குக் கர்மா பாடம் புகட்டும்போது – அந்தப் புகட்டலில் என்னுடைய சின்னஞ்சிறுபங்கை நான் வகிக்கத் தயார்.

    அதற்காக கர்மா எனக்குக் கொடுக்கும் படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளவும்தான்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s