இன்று வரலாறு படைக்கப் பட்டது! (நேற்றல்ல!)

May 3, 2021

பொதுவாகவே நான், யாராவது கேள்வி-உதவி எனக் கேட்டுவந்தால் அல்லது, உரையாடல்களில் விருப்பப் பட்டால் (எனக்கும் சக்தியும் சமயமும் இருந்தால் + முக்கியமாகப் பொறுமையும்) முடிந்த வரை உதவுவதையே விரும்புவேன்.

எனக்குத் தெரியாது அல்லது என்னால் முடியாது அல்லது எனக்கு ஒத்துவராது எனத் திட்டவட்டமாகச் சொல்லாமல் மென்றுமுழுங்கி முடியாத விஷயத்தைத் தலைமேல் போட்டுக்கொண்டு வழவழா கொழகொழாவென்று அனைவரின் நேரத்தையும் வீணடிப்பதும் ஒத்துவராது.

… அதேசமயம் – தெரியாத விஷயங்களைத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதிலும் அவ்வளவு ஆர்வமில்லை – ஏனெனில், நான் தமிழ் அலக்கியவாதியோ/அறிவுஜீவியோ அல்லது நேரூவிய-ஸோஷலிஸ்டோ அல்லன். வயதும் ஆகிவிட்டதால், ஆட்டொமெடிக்காக விவேகம் வந்துவிட்டது எனும் தற்பெருமைப் பிரமைவேறு.

இருந்தாலும் சில சமயங்களில் வாயடைத்து விடுகிறது.

-0-0-0-0-0-

இந்த இளைஞர் மதுரை காமராஜ் பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில் எம்ஏ (வரலாறு) படிக்கிறார். மேற்படி  எம்ஃபில்/பிஹெச்டியும் செய்வார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

மூன்று நாட்களாக அப்படியும் இப்படியும் ஒருமாதிரி உரையாடல். அதுவும் தேர்தல்ஜூரம் உச்சகட்டத்தை எட்டிய நேரத்தில்வேறு!

இந்த அன்பருக்கு – பண்டைய கால சீன-இந்திய உறவுகள், அதன் பின்புலத்தில் முக்கியமாக சீன-தமிழக உறவுகள் குறித்து ‘ஆழமாக’ அறிய ஆவல் – எனச் சொன்னார்.

“சென்ற இரண்டு வருடங்களாக ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே பல விஷயங்கள் தெரியும், சில விஷயங்களைக் குறித்துச் சந்தேகம் – புத்தகங்கள் பரிந்துரை/ஜாபிதா கொடுக்க முடியுமா” என்றெல்லாம் கேட்டார்.

(இந்த புத்தக-ஜாபிதா என்று கேட்டு வருகிறவர்களைக் கண்டாலே கடுப்பாகிவிடுவதற்கு இந்த ஆசாமிகளைப் போன்றவர்கள் தாம் காரணம்; அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ளாமல், முறையாகப் படிப்பதில்/பயில்வதில் பயிற்சியில்லாமல், ஒரு மசுத்துக்கும் குவியம் என்பதே இல்லாமல் வெறும் ஜாபிதாவை மட்டும் வாங்கிப் புளகாங்கித முஷ்டிமைதுனம் செய்பவர்களைக் கண்டால்…)

‘பல்லவர்கள் காலம், அதற்கும் முன்பு பாரத வடக்கில், ஒடிஷா/வங்கப் பகுதிகளில் சீனர்கள் குறித்த உறவுகள் பற்றியிருக்கிறதே, அர்த்தசாஸ்திரம் முதல், மௌரிய காலத்திலிருந்தே போக்குவரத்துகள் இருந்திருக்கிறதே (ஏன் அதற்கு முன்பேயும் கூட)’ என்றால், அவருக்குச் சோழர்கள் காலத்தில் ‘ராஜேந்திர சோழன் சீனாவை வென்றது’ குறித்து மட்டுமே தெரிந்திருந்தது – அதுவும் அவருக்கு அது குறித்துப் படுதெகிர்யம்.

(நமது வாட்ஸ்அப், ட்விட்டர் புகழ் வரலாற்றாளர்களின் பராக்கிரமத்தை அறிந்த எனக்கே  கொஞ்சம் வியர்த்து விறுவிறுத்துவிட்டது; இப்படியே போய் ராஜேந்திரன் கல்கி பொன்னியின்செல்வன் என ஓட்டிக்கொண்டு, நக்கீரன்கோபால் தான் பெரியபுராணத்தை இயற்றினான் எனச் சொன்னாலும் சொல்வார்கள், பாவிகள்!)

“ஏன், ஜப்பானையும் குலோத்துங்கன் வென்றதையும், மங்கோலியாவை வென்ற மரகதபாண்டியனையும் அறியீரா நீவிர்” என்றால் (கிண்டலாகச் சொன்னேன்) அதையும் ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு, அவர் ‘எனக்குத் தெரியும், ஆனால் நான் சீனா பற்றித்தான் ஆய்ந்துகொண்டிருக்கிறேன்’ என்றார். சரி நான் விட்டுவிட்டேன்; அந்த மட்டில், சீனாவும் ஜப்பானும் வேறுவேறு என்று அறிந்திருக்கிறாரே அவர். மற்றபடி சலிப்பு.

அடுத்த நாள், அவரே மறுபடியும் தொடர்ந்தார்.

(ஒரு சமயம், ஆர்நாகஸ்வாமி, எஸ்ராமச்சந்திரன் போன்ற தொழில்முறை, தேர்ந்த வரலாற்றாளர்களையோ அல்லது ரங்கரத்தினம் கோபு போன்ற ஆர்வலர்களையோ அணுகுங்களேன் எனச் சொல்லலாம் எனப் பட்டது; ஆனால்  அப்படிச் செய்தால், மேலதிகமாகப் படுபாவமும் பழியும் என்னைச் சேரும் எனவும் தோன்றியமையால் அதனை விட்டுவிட்டேன்)

‘ஐயா, நான் ஒரிரு வரலாற்றுக் கட்டுரைகளை மட்டும் எழுதியிருக்கிறேன் (இளைஞர் இதனைப் படித்துவிட்டுத்தான் என்னைத் தொடர்புகொண்டேன் என்றார் – ஆனால், இப்போது யோசித்தால், அதன் மூலமாக என்ன பெரிதாக அவருக்குப் புரிந்திருக்கும் எனத் தெரியவில்லை, அது சீனா குறித்தும் இல்லை) – ஆனால் பிறர் தொடர்ந்து, வரலாறுகளில் ஈடுபாடு கொண்டு எழுதுகிறார்களே…

…பலப்பலர் இருக்கிறார்களே, உங்கள் பல்கலைக்கழகத்திலேயே இருக்கிறார்களே, இல்லாவிட்டால் ஜெயமோகன், டிஎஸ்க்ருஷ்ணன் போன்றவர்களைத் தொடர்புகொள்ளலாமே, வழி நடத்துவார்களே’ எனக் கூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவருக்கு இவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆக அவருக்குச் சுணக்கம். ஏற்கனவே என்னைத் தொடர்புகொண்டுவிட்டார் வேறு! :-( டோட்டல் அவுட்ஸோர்ஸிங். பாவி.

“உதவுங்கள், ப்ளீஸ்!”

எனக்கு என்னவோ போலாகி விட்டது – ஏதோ ஆர்வக் கோளாறு; தமிழகக் கல்வி இருக்கும் அழகில், இந்த அளவு முனைப்பு ஆச்சரியகரமானது, எப்படியோ இங்கு வந்து சேர்ந்திருக்கிறான், பாவம்; இதுவே பெரிய ஆச்சரியம், அவனுக்கு முடிந்தவரை உதவவேண்டும் என மனச்சாட்சி சொல்லியது.

(இன்றிரவு, அதற்கு இருக்கிறது வேட்டு)

ஆகவே, என் தட்டச்சுவிசைப் பலகையில் சனி.

‘சரி. என்ன காலகட்டம், எந்தமாதிரி பார்வை, உங்கள் ‘ஆராய்ச்சிக்கான கேள்விகள்’ –  ‘research questions’ யாவை’ –  அல்லது ஆராய்ச்சிப் புள்ளிகள் யாவை – என்றெல்லாம் கேட்டேன். அவருக்கு நான் என்ன கேட்கிறேன் என்று புரியவில்லை. பின்னர் ஒருவழியாக நேற்று, பாம்புக்குப் பல் பிடுங்குவதுபோல, கீழுள்ள விஷயங்களை அவரிடம் இருந்து பெற்றேன்.

  • பொதுயுகம் 500-1000 வரை தமிழகத்துக்கு வந்த சீன யாத்ரீகர்கள் மூலமாக வணிகத் தொடர்புகள்
  • தமிழகத்தின் பௌத்தத்தால்தாம் பாரத-சீனத் தொடர்புகள் ஏற்பட்டன

“ஐயா, நீங்கள் இந்த யாத்ரீகர்களை அளவுக்கு அதிகமாக மதிக்கிறீர்கள்” என்று ஈனஸ்வரத்தில் முனகினேன். பதிலுக்கு அவர், இவ்விஷயங்களைக் கரைத்துக் குடித்திருப்பதாகவும் அதனால் தான் நம்பிக்கையோடு இருப்பதாகவும் சொன்னார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை – ஆனால், “தம்பீ, நீங்கள் கேட்கும் ஆராய்ச்சிக் கேள்விகள்/ஹேஷ்யங்கள் தவறு என்று நீங்களே நிரூபித்தாலும் அது ஒரு முறையான ஆராய்ச்சி ஆவணமாகத் தான் இருக்கும், ஏனெனில் பௌத்தம் சீனாவைச் சென்றடையும் முன்பே பாரத-சீனத் தொடர்புகள் இருந்திருக்கின்றன” என்றேன்.

ஆனால் அவர், “இல்லை, சீனப் பயணிகள் தமிழகம் வந்ததால் தாம் வணிகம் ஏற்பட்டது” என்றார்.

யார் யார் அந்தப் பயணிகள் என்று கேட்டதற்கு…

-0-0-0-0-0-

இன்றுகாலை வரை அவரிடமிருந்து பதில் வரவில்லை; ஆகவே, ‘நன்றி’ எனச் சொல்லி உரையாடல்-நரையாடலை ஏரக்கட்டி விடலாம் எனப் பார்த்தால்…

“நீங்களே சொல்லுங்களேன்!”

சரி. கடைசியாக பதில் கொடுத்து முடித்துவிடலாம் என்று.

“To start with, Hiuen Tsang” என வாட்ஸ்அப் செய்தி அனுப்பினேன்.

உடனடியாக அவர் கேட்டாரே பார்க்கலாம், “யாரது?” (Who was Hiuen Tsang?)

எனக்கு விக்கித்து விட்டது. உடனே, பலவாறாகவும் அவர் பெயர் எழுதப் படுவது குறித்துச் சொன்னேன்: நீங்கள் தமிழ்வழிக்கல்வியில் (நான் படித்ததுபோல) படித்திருப்பீர்களானால் ‘யுவான் சுவாங்’  என்றிருக்குமே, நம் எட்டாங்கிளாஸ் வரலாறுப் புத்தகத்தில் என்றேன்… அவர் கேள்விப்பட்டிருக்கவில்லை. மாறாக, அவர் ‘இங்க்லீஷ் மீடியம்’ எனச் சொன்னார்.

Hsien T’sang, Xuan Zang, Hsuan Tsang, Hsien Zang, Tang Zeng, Yuan Suwang, Yuan Tsang என விதம் விதமாக அவரிடம் கேட்டேன். அவர் ஒரு திருமுடியையும் கேள்விப் பட்டிருக்கவில்லை.

சீனப் பயணிகளைக் குறித்துப் படித்திருக்கிறேன் என்றீர்களே, இவர் வந்த பலப்பலரில் முக்கியமானவராயிற்றே, அதுவும் நம் காஞ்சிபுரத்துக்குக் கூட வந்திருக்கிறாரே என்றால்… வேறு யாராவது சீன யாத்ரீகர் பெயராவது??

வந்தேவிட்டது இறந்தகாலத்தின் எதிர்காலம். காலவழுவமைதி.

(என் கூறுகெட்ட மனச்சாட்சியைச் செருப்பால் அடிக்கவேண்டும்)

ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளவேண்டும்: இந்த ஒரு விஷயத்தில், அவர், தெரியாததைத் தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் – சிலநாட்கள் முன் அவர் தெரிவித்த கீழடிச் செய்திகள் என்னை மேலதிகமாகப் பைத்தியம் பிடிக்க வைத்துவிட்டன.

-0-0-0-0-0-

இக்கதையின் வழியாக நமக்கு பலப்பல நீதிகள் கிடைக்கின்றன:

1. கீழடியில்தான் மனிதகுலமே உதித்தது எனச் சுமார் 1 கிலோமீட்டர் நோண்டி, நம் அகழ்வாராய்ச்சிக் காரர்கள் நிறுவித் தம்பட்டம் அடித்து விருதுகள் கொடுத்துக்கொள்ளும் நாள் வெகு தூரமில்லை.

ஊக்கபோனஸ்ஸக, சீன சாம்ராஜ்யமே இங்கிருந்து போனவர்களால் ஸ்தாபனம் செய்யப்பட்டது என நிறுவப்படுவதும்…

2. திமுக திராவிட ஸ்டாலின் கட்சிகள் வெற்றி பெற்றதற்குக் காரணம், அல்லது கேஅண்ணாமலை போன்ற ஜொலிக்கும் குடிமக்களும் வேட்பாளர்களும் தோற்றதற்குக் காரணம், நம் கல்வியின் நிலையும்தான்.

3. டன்னிங்-க்ரூகர் விளைவு என்பது குரூரமான ஒன்று என என் அன்புத்தம்பீ எஸ்ரா கூறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

4. அநேகமாக இந்த இளைஞர் திமுக அல்லது சீமார் கட்சிக்குத் தான் வோட்டுப் போட்டிருக்கவேண்டும். (நல்லவேளை நான் அரசியல் பேசவில்லை)

5. அடுத்த ஐந்தாறு  (அல்லது பத்து) ஆண்டுகளில் இந்த இளைஞர் கீழும் அமோகமாக, எதிர்காலக் குஞ்சப்ப  இளைஞ வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சப்பிக்கொண்டு கிடப்பார்கள்.

இந்தச் சங்கிலியானது தொடரும்வேறு!

கலக்கமாக இருக்கிறது

:-(

பின்குறிப்பு: இன்றிரவு, என் மனச்சாட்சிக்குப் பேயோட்டப்படும். நன்றி.

21 Responses to “இன்று வரலாறு படைக்கப் பட்டது! (நேற்றல்ல!)”

  1. dagalti Says:

    /கல்வியின் நிலை/

    சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ தமிழ் படிக்கும் கண்மணிகள் கட்டாயமாகத் தேர்ச்சி பெற வேண்டிய ஒரு தாள்: பெரியாரியல்.

    (ஏதோ சுமாராகவாகவேனும்) நன்னூல், யாப்பு, சமகால இலக்கியம் (புதுமைப்பித்தன் தான் சமகாலம்), அகபுற, பக்தி சிற்றிலக்கியம், கல்வெட்டுகள் எல்லாம் படித்து பி.ஏ தேர்ச்சி பெறும் மாணவன், உயர்நிலையில் தொல்காப்பியத்தோடு சேர்த்து இதையும் படிக்கவேண்டுமாம்.

    Not M.A. Political science, mind you. For what it is worth, it is understandable for a student there to inform oneself of the dominant ideology(!). But for M.A. Tamil??

    Imagine a kid being ‘institutionally’ informed thus.

    I once happened to attend a lecture where a roomful of undergraduates was told by the HoD of Tamil Lit, Madras Univ that Indus language was Tamil. He didn’t even mention it as a talking point. Just in passing, he made it sound like it was ‘common knowledge’. He went on to say his research proved(!) Andaman tribes’ language was also close to Tamil. Teenagers hearing this from the highest institutional authority.


    • What is HoD? அகபுற??

      See, you are not very clear. I want your phone number, so that I can redirect all science, tamil, பெரியாரியல் related PhD wannabes/candidates to you.

      Main reason is: You seem to be very interested in Education. But there is no other vaccine for this pandemic.

      I have already innoculated myself thusly. Thanks!

  2. Sridhar Says:

    மீனாக்ஷி ஜெயினின் The India they Saw தொடர் ஒரு நல்ல அறிமுகம். அவற்றை மொழி பெயர்க்கலாம் என்ற ஒரு ஆசை இருந்தது. பார்க்கலாம். ஹரன் பிரசன்னா மனது வைத்தால் நடக்கலாம்.


    • Good. But, who is Meenakshi Jain? Prof at AM Jain or DB Jain college? Strange name. Is she Aryan or Dravidian.

      If it is the former, we are not interested. Sorry.


      • Also, I don;t much like your attitude. You are eulogizing a book that tries to saw India.

        I strongly object to this unpatriotic direction which seeks to splinter the nation live!.

        Apologize, or else…. ^%$#@!*

      • seethayv Says:

        Have not read Mrs.Jain.But I know her son Srinivasan jain is a lazy journalist who asks questions without doing much home work.Atleast the one I saw ,his interview with our dear Kani on 2g was was a waste of time


      • …erm, this Meenakshi Jain is a great scholar-historian who (apart from the compendium that Sridharaa quoted) has written fine, passionate works of scholarship about Sati, Ayodhya and much else. She has even written a very balanced NCERT textbook on medieval India, which was promptly junked by the LeLi cabals. I have a lot of respect for her.

        Perhaps I should not have randomly joked(!) about Sridharaa’s earnest comment.

        She is not related to that Scum journalist, Srinivasan Jain (of NDTV, I think). In fact, she is the daughter of the legendary Sri Girilal Jain, a fine journalist/ed of ToI.

        The scum you are referring to, is the son of another scum LC Jain. (I think this expands to Lakshmichand or soemthing)

        LC Jain was in IFS, and did everything possible to belittle India, though he was supposed to be an Ambassador of India to other countries. IIRC, he denounced India when he was the Ambassador of India, under India’s pay – because India tested its first nuclear bomb. He conducted a press conference to express his displeasure.

        Apple did not fall away from the tree, of course.

      • seethayv Says:

        Thank you for yet another educative reply.

  3. seethayv Says:

    ‘Hiuen Tsang‘ After Ashoka’s afforestation along ‘National Highways’ this guy’s name is what one remembers from history book easily I thought.May be they dont have them names anymore.


    • Yo. The books do have them, when I checked last. Same picture was carried by NCERT, ICSE, Matric, TN Stateboard books. The originally socialistic Mr Hsien Tsang.

      Our friend Sri Xuan Zang is always pictured with a basket on his back. He is never shown to be having any body part below the waist.

      So I may have even thought that Chinese were different species of humans, who discarded their legs in their evolutionary paths.

  4. Raj Chandra Says:

    >> ஜப்பானையும் குலோத்துங்கன் வென்றதையும், மங்கோலியாவை வென்ற மரகதபாண்டியனையும் அறியீரா நீவிர்
    – மேற்கே அமெரிசேரன் அரபிக்கடல் வழியே சென்று அமெரிக்காவை வென்று இந்தியர்களை நிறுவினான் என்ற வரலாற்றை நீங்கள் மறைப்பதை கவனித்தேன்.  செவ்விந்தியர் என்ற பெயர் வந்தது அதனால்தான்.
    >> ஆர்நாகஸ்வாமி, எஸ்ராமச்சந்திரன் போன்ற தொழில்முறை, தேர்ந்த வரலாற்றாளர்களையோ அல்லது ரங்கரத்தினம் கோபு போன்ற ஆர்வலர்களையோ அணுகுங்களேன் எனச் சொல்லலாம் எனப் பட்டது
    – பாவம் சார்…ரொம்ப நல்லவங்க இவங்க :) …நம்ம எஸ்ரா ஐயா கிட்ட சேர்த்து விடலாமே (எப்படி என் ஐடியா?!%&^ )

    • Raj Chandra Says:

      But seriously…I am not surprised. Even in 90s things were like this…the project I did was copied by the juniors for two batches and all they did was just changed the title and passed in flying colors. At least this person is trying something with all the misinformation he possess.


      • Agreed. But I murdered my conscience yesternight, as promised.

        Now, I merely want to survive. No more pretensions of trying to ‘help’ nondescript youngsters.

        And you are talking about projects; in Bangalore, there are proper office-setups which give the students their project report (with spiral binding, colour print, jingbang stuff) of their choice in 1.5 hours flat.

        Please do not get me started on all these. Puhleeeease…


    • ஆ!  யெவ்ளோ பேர்டா என்க்கு போட்டீயா கெள்ம்பீகீறீங்கோ? பாவீங்க்ளா!!

      ஆனால், எப்படி நான், துளிக்கூட நன்றியேயில்லாமல் என் பெரும்பக்திக்குரிய என் எஸ்ராவை மறந்திட்டேன் என்பதை நினைத்திட்டால்…

      உருகம், உள்ளுதய்யா முர்கா.

  5. Muthukumar Says:

    Also Yesterday,

    I am seeing four beautiful loti ….

  6. nparamasivam1951 Says:

    ஒருவேளை “ஏழாம் அறிவு” திரைப்படம் பற்றி இந்தப் பதிவோ என எண்ணியிருந்தேன். நல்ல வேளை அப்படியில்லை.

  7. nparamasivam1951 Says:

    Today I was lucky to read this blog. With the “சுட்டி” given, I was able to go back and know the history of Tirupathi Temple and the looting by Arcot Nawabs and British enjoying pilgrims’ offerings.
    Now I understand as to how Lord Balaji money is looted by British, Nawabs and in modern days Andhra Government.

  8. ராஜன் Says:

    உண்மையில் நீங்கள் செய்வது மகத்தான பணி.உங்களது கிருஷ்ணகிரி பற்றிய பதிவாகட்டும்,சூஃபிக்கள் பற்றிய உண்மையை அம்பலப்படுத்தும்(அது எனக்கு கடும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது) பதிவாகட்டும் ….இதுபோல ஒரு கடினமான பணியை எடுத்து செய்வதற்கு ஆளில்லை.இருந்தாலும் அவர்களுக்கு ஆர்வமில்லை.ஃபேஸ்புக்கில் இருவரி கிருக்கல்களிலேயே சாந்தியடைந்து விடுகிறார்கள்.ஆழ்ந்த வாசிப்பை ஊக்குவிக்கும் உங்களுக்கு நமஸ்காரங்கள்.

    • ராஜன் Says:

      கிறுக்கல்*


    • 🙏🏿💪🏿 ஐயா, நன்றி. ஆனால் நேர மேலாண்மை ஒரு பிரச்சினை – பலவிஷயங்களிலும் காலைவிட்டால்…

      ஆனால் உங்களைப் போன்றவர்களின் தொடர்ந்த நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கவேண்டும் + சும்மா அட்ச்சிவுடக்கூடாது என்பவற்றிலும் நான் ஒருமாதிரி எச்சரிக்கை மிகுந்த குவியத்துடன்தான் இருக்க விருப்பம். பார்க்கலாம்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s