மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் + ஜெயமோகனின் கற்காலத்துக் கதையாடல்

July 31, 2019

ஆ!

மாளா ஆச்சரியத்தில் ஈடுபடுவதற்காகவே, மனித விசித்திரங்களையும் மனோவிகாரங்களையும் (என்னுடையது உட்பட) கண்டு கொள்வதற்காகவுமே, ஜெயமோகன் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கலாம் எனத் தோன்றுகிறது. ஊக்க போனஸ்ஸாக அது தரமான கேளிக்கை தரும், மற்றபடி உபத்திரவமற்ற (=Assistant Liquid Not) விஷயம் வேறு!

சரி. அவர் வழக்கம்போலவே, இந்தக் கட்டுரையிலும் எக்கச்சக்கமான தகவல் பிழைகள், சிறுகுறுபெரும்தாவல்கள் இன்னபிற. ஆனால்  கர்நாடக விஷய அகழ்வாராய்ச்சிகள் குறித்த அனைத்து அபத்தங்களையும் சாய்ஸில் விட்டுவிட்டு, தமிழறியும் பலருக்கும் அறிமுகமாகியுள்ள ஒரு விஷயத்துக்கு மட்டும் செல்கிறேன்.

…ஏனெனில், அவருடைய இந்தக் கட்டுரையிலுமுள்ள பல விக்கிபீடியத்தர ஞானச் சொதப்பல்களையும் கருத்துலக மோசடிகளையும் கோடிகாட்டவேண்டுமென்றால், அவற்றுக்கு காத்திரமான, தரவுகளின் பாற்பட்ட ஒரு பின்புலச் சித்திரத்தை, நான் பலமுறை செய்திருப்பதைப் போலவே விரிக்கவேண்டும்; குறிப்புகளை அளிக்கவேண்டும். ஆனால், என்னிடம் அவை இருந்தாலும் — உங்களுக்கும் சரி, எனக்கும் சரி, இதற்கு இனிமேலும் பொறுமையில்லை, அதற்கு அவசியமுமில்லை; நம் எழுத்தாளர்களின் தரம் நமக்குத் தெரியாதா என்ன? இன்னமுமா இவை குறித்துக் கேள்விகள் இருக்கின்றன, சொல்லுங்கள்??

ஆகவே, ‘ஜெயமோகன் எழுதுவது அனைத்தும் வெறும் வசீகரமான புனைவுகள் மட்டுமே ​+ அதிகபட்சம், அவை அனைத்தும் ஒரு சுக்குக்கும் உண்மையோ ஆழமானவையோ அல்லாமல், மேம்போக்கானவை’ எனும் நியாயமான நிறுவப்பட்ட முடிவுக் கருத்துக்கு வந்துவிட்டால், நாமும் தவளைகள் போல, அவருடனும் கடலூராருடனும் கனகம்பீரமாகத் தாவிக்கொண்டே இருக்கலாம். நன்றி.

-0-0–0-0-

சரி. நான் பொன்னியின் செல்வனை அறியாப்பருவத்தில் இரண்டுமுறையாவது படித்திருப்பேன். அதற்குப் பின் 45 ஆண்டுகளாவது ஆகிவிட்ட நிலையில், கொஞ்சம் மங்கல் நினைவுகள்தாம். இருந்தாலும், அருள்மொழி வர்மன் ராஜராஜனாவதற்கு முன்னமேயே பொன்னியின்செல்வன் கதையாடல் முடிந்துவிடுகிறது என்பதுதான் என் திடமான நினைவு. (பொன்னியின் செல்வனைத் தங்கள் சிறுவயதில் மாய்ந்துமாய்ந்து படித்திருக்கக்கூடும் சககிழங்கட்டைகள், இதைத் தவறு எனச் சுட்டினால், ஒப்புக்கொள்கிறேன், ஒரு பிரச்சினையுமில்லை!)

ஐயா பெரும்பேராசான் இப்படி எழுதுகிறார்:

“மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தின் நுழைவுப்பகுதியில் வலப்பக்கம் இருக்கும் வசந்தமண்டபமும் அதன் ஆயிரங்கால் கொண்ட அரங்கும்தான் தமிழக ஆலய அரங்குகளிலேயே பெரியது என நினைக்கிறேன். இருபக்கமும் அது பிரிகிறது. சாதாரணமாக மூவாயிரம்பேர் நிற்க முடியும். பொன்னியின் செல்வனை மணிரத்னம் முதலில் முயன்றபோது ராஜராஜனின் அவைமண்டபமாக அது அமையலாமென்றுதான் முடிவெடுத்தார். ஆனால் ஆலயங்களில் படப்பிடிப்பு நடத்த ஒப்புதல் இல்லை என்பதனால் அது இயல்வதல்ல”

…ஆச்சரியமாக இருக்கிறது. பொன்னியின் செல்வனில் ஏற்கனவே நிறைய்ய்ய்ய்ய்ய மானேதேனே இருக்கிறது. கநாசு அவர்கள் (என நினைவு!) கல்கி கிருஷ்ணமூர்த்தி எப்படி சிவகாமியின்சபதத்தையும் பொன்னியின்செல்வனையும் எழுதியிருக்கிறார் எனப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. “இன்று எம்எஸ் சுப்புலட்சுமி கச்சேரிக்குச் செல்வார்; அடுத்தபகுதியில் ஒரு வாய்ப்பாட்டுக் கச்சேரி ஸீன் வந்துவிடும்!”

இந்த அழகில், இப்படியா திரிப்பார்கள்?  ஆனால் எழுதியிருப்பது நம் பெரும்பேராசான். அவர் எழுதியிருப்பதோ காப்பிக்கடை அதிபர் பற்றி. ஆக, இதற்கு வியாக்கியானமும் பொழிப்புரைகளும் எதிர்வினைகளும் இப்படி விரியலாம்.

1. பெரும்பேராசான்: “பொன்னியின்செல்வனில் முகத்திலறையும் இடைச்செருகல்கள் மட்டுமில்லாமல்,  பெருவிசைகொண்ட இடைஉருவல்களும் நடந்திருக்கின்றன என்பது நம்மில் எவ்ளோ பேருக்குத் தெரியும்? அருள்மொழி ராஜராஜனாவது பற்றியெல்லாம் மூல பொன்னியின் செல்வனில் இருந்தன. பிற்காலக் கல்கி அவதாரங்களில் அவை இல்லை!”

2. மணிரத்னம்:  “இல்ல! அப்டி இல்ல! சொல்லல! நான் அப்படி சொல்லல! எழுதிட்டார்! நான் சொல்றாமாரி ஜெயமோகனே திரைக்கதை வஜனம் எழுதிட்டார்!”

3. (எந்தப் பொந்திலாவது இருக்கக்கூடும்) ‘செந்தில்‘: “ஒத்திசைவு ராமசாமி, பொறாமை பிடித்த ஒரு கிறுக்கன். என்ன இருந்தாலும் பேராசான் போல வருமா? உங்கள் குறிப்புகளில் ஒரு தவறும் இல்லை. அவை ஆகச்சிறந்தவையன்றிப் பிறிதொன்றுமில்லை. நான் வேண்டுமென்றால் உங்கள் குறிப்புகளிலுள்ள தவறுகளை, அவை புத்தகமாக வருவதற்குள் சரிசெய்து தருகிறேன்.”

4. (மறுபடியும்) பெரும்பேராசான்: “நான் எழுதியதில் பிழை ஒன்றுமில்லை. என்னைக் குறை சொல்வதற்குத் தகுதி பெற்றவர்கள் இப்பூவுலகில் இல்லை. இருந்தாலும், பலமுறை நான் என்னைப் பிறர்சொற்படித் திருத்திக்கொண்டிருக்கிறேன்.”

5. ராஜராஜன்: “டேய், என்ன வுட்ருங்கடா! புண்ணியமாப் போவும்!”

…இப்படியாகத்தானே பின்நவீனத்துவ பொன்னியின் செல்வன் தொடர் நாவலை, ஆகச்சிறந்த ஜெயமோகன் மறுவாசிப்பன்றிப் பிறிதொன்றைச் செய்யாமல் “தண்டோராஅரசு” என மீளுருவாக்கம் செய்து எழுதத் தொடங்கப்போகிறார்!

ஓடுங்கடா, டேய்!

8 Responses to “மணிரத்னத்தின் பொன்னியின்செல்வன் + ஜெயமோகனின் கற்காலத்துக் கதையாடல்”

  1. K.Muthuramakrishnan's avatar K.Muthuramakrishnan Says:

    செந்தில் கட்டுரைக்குப் பதில் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.ஒரு சிறிய தீண்டலோடு விலகிக் கொண்டீர்கள்.

    பேராசானைப் பின் தொடர்பவர்கள் கவனம் முற்றிலுமாக உங்கள் மேல் இருக்கிறது என்று தோன்றுகிறது.என்னதான் உங்களைத் தவிர்ப்பது போல பாவனை செய்தாலும் அது முடியவில்லை அவர்களுக்கு..

    பேராசன் சொன்னது போல உங்கள் “தவளை’ நடையை விடுத்து, காத்திரமான தரவுகளுடன் எழுதுங்கள். தன் அகங்காரத்தால் ஊதிப் பெருக்கிக்கொண்ட பலூன்கள் உடைக்கப்படவேண்டும்.


    • அப்போ கடலூர் சீனுவும் பெரும்பேராசானும் மட்டும் சிறுதாவல் பெருந்தாவல் செய்யலாமா?

      நான் தவளையல்லன். தேரை. தேரைவாதம் அறிந்தவன்.

      பார்த்தால், நான் பெருந்தேரை மட்டுறுத்தும் அச்சாணி.

      றொம்ப வாலாட்டி என்னாண்ட அறிவுரே கொட்த்தீங்கன்னு வெச்சிக்குங்க….

      …அள்துடுவேன். :-(

      • Ramesh Narayanan's avatar Ramesh Narayanan Says:

        பொய் பிம்பத்த புடிக்க முடியாது, பிஸிக்ஸ் ஸொல்லுது. எவ்ளோ பேருக்கு தெர்யும். அந்த பிம்பம் விரிஸல் வுடுதுனா சொம்மாவா, பத்த கட்ட வேணாவா? நீரு ஸொம்மா தட்டறதுக்கே ஆடுதே! அடிக்கப்பட்ட காயி ஆபரேஸன் இல்லாம திர்ம்புமா?


      • Sir, virtual image, virtual reality have nothing on the idea called ‘literary tamil virtual surreality.’ Now, go figure that out! 😭🤣

  2. Ganesh Periyasamy - கணேஷ் பெரியசாமி's avatar ganeshperiasamy Says:

    “அருண்மொழிவர்மன் ராஜராஜன் ஆகும் முன்னரே பொ.செ முடிந்துவிட்டது. ஆகவே ஆசான், ராஜராஜனின் அவை என்று சொன்னது தவறு” என்பதற்கு இவ்வளவு மானே தேனே பொன்மானேவா எனக் கேட்க நல்லவேளையாக இன்று அவர் இல்லை 👎


    • ஐயா! அக்கட்டுரையில் நிறைய நிறைய பிழைகள். ஆனால் பொன்னியின்செல்வன் நாவல் நமக்கெல்லாம் பொதுவாகவே அறிமுகம் உள்ளதென்பதால் அதைப்பற்றி மட்டும் விளையாடினேன். மானேதேனேயில்லை. நியாயமான கிண்டல் ‘கலாய்த்தல்’தான்.

      எல்லாவற்றையும் பட்டிபார்த்து துப்புரவாக டிங்கரிங் செய்யவேண்டுமானால், ஜெயமோகன் எழுதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ஐந்து அதே நீளக் கட்டுரைகள் எழுதவேண்டியிருக்கும். அவர் வலி கொடிது, எனக்கு அதனால் ஏற்படும் வலியும்.

      ஆகவே. YMMV based on what your level of understanding is, obviously.

      But, what happened to him today, poor thing??

  3. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    நான் ஓடிட்டேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Your email address will not be published. Required fields are marked *