எஸ்.ராமகிருஷ்ணன்: தமிழ் அலக்கியத்தின் தொடர் வெட்கக்கேடு

June 16, 2019

பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. மன்னிக்கவும்.

…இப்படியெல்லாம் தொடர்ந்து ரசக்குறைவாக எழுதுகிறேன் என்றால், அதற்கு என் அலக்கியப் பேராசான்கள்தாம் காரணம். என்ன செய்வது சொல்லுங்கள்! :-(

அடிப்படையில் மிகவும் சாதுவானவனும் மென்மைத்தனமும் சக பசித்தமானுடனின்மீது நம்பிக்கையும் கருணையும் அன்பும் மரியாதையும் வைத்து கலந்து குழைத்து ஏகத்துக்கும் பரிமாறுபவனுமான அடியேனைப் போய், இப்படி அநியாயத்துக்கு மிரளவைத்து, தொடர்ந்து வெறுப்பேற்றி, அலக்கியக் கொலைவெறி ஜிஹாத் படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள், பாவிகள்!

டேய் ஏழர அயோக்கியர்களே, டீ அயோக்கிகளே! சும்மாசும்மா என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பை உதிர்க்காதீர்கள்!  வ்வோத்தா,  பட்டாதாண்டா தெரியும் பார்ப்போன்களுக்கு! :-(

-0-0-0-0-

தமிழலக்கியத்தில் பலப்பல ஜந்துக்கள் சர்வவியாபிகளாகவும் வியாதிகளாகவும் பலசமயங்களில் தீராத் தொற்று நோய்க் கிருமிகளாகவே இருந்தாலும், என் வழுக்கைமண்டைய ஒண்ணரைக்கண்ணுக்கு எட்டியவரை விடிவிளக்கே சுத்தமாகத் தட்டுப்படாமல் (plate not touching) இல்லாமலிருந்தாலும் – அவர்களின் இருபெரும் சாபக்கேடுகள் அலக்கியத் தலைமையில் தனித்துவ சனித்துவத்துடன் இருக்கின்றனர். இந்த எழவெடுத்த உண்மையை சகஏழரைகளாகிய நாம் அறியாமலில்லை…

இருந்தாலும்… அவர்களிலும், முதல்பரிசு பெறக்கூடிய தொடர்தகுதியில் முன்னோடிக் காத்தாடியாக இருப்பவர், நம் பட்டத்துக் கிழவரசர் செல்ல எஸ்ரா அவர்களே என்பதை மனதாற அறிந்து அதனைச் செருப்பில் அடித்துக்கொண்டு பகீரங்கமாகச் செப்புவதில் நான் உள்ளபடியே எருமையடைகிறேன்! (பின்னாலேயே எட்டிப்பிடிக்கும் தூரத்தில்  “மிஸ்! தமிழணங்கு மிஸ்! என்னோட லத்தீனமெரிக்கச் சாக்லேட்டை இவன் டபக்குனு புடுங்கிக்கினு, திர்ப்பித் தராம கபால்னு ஓடிப்பூட்டான் மிஸ்!” எனப் பின்தொடரும் நிழலான நிழலாகச் சாருநிவேதிதாவார் புலம்பிக்கொண்டே தொடர்வதை, இந்தப் பதிவில் சாய்ஸில் விட்டுவிடுகிறேன்; ஏனெனில், நான் எனக்கே கொடுத்துக்கொள்ளும் தொடர்வதைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?)

ஆனாலும் – இந்த இருவர் (ம்ம், சொல்லப்போனால் மூவர்) கவிதைகழுதை என எழுதுவதில்லை எனும் ஸ்ஸ்ஸ் அப்பாடா நிம்மதிக்கு, இவர்களுக்குக் கோவில் கட்டிக் கும்பிடடி பாப்பா.

…அண்மையில், ஆதவன்தீட்சண்யா எனவொரு தீப்பொறி அவல்பொரி பரபரக்கும் டப்பா கவிஞ்ஜருடைய கீழடி பாழடிக் கழுதை உட்பட  சில ‘தற்காலத் தமிழ்க்’ கழுதை செங்கழுதைகளை வாசிக்கும் துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அடியேனுக்குச் சில ஆறுதல்வார்த்தைகளையாவது பின்னூட்ட எனிமாவாக அளிக்கவும்!

ட்டேய்!! எவ்ளோ பேருடா இப்டீ கவிஞ்ஜர்னிட்டு கெள்ம்பிக்கீறீங்கோ! பாவீங்க்ளா! வுர்ப்பட்வீங்க்ளாடா சாவுகெராக்கீங்க்ளா, வொங்க கவிதேல(யும்) கொள்ளிய வெக்ய…

-0-0-0-0-

எது எப்படியோ – இந்த போற்றத்தக்க எஸ்ரா பெருந்தகையாருடைய இடரேயற்ற தொடர் குண்டு தெகிர்யம் என்பது என்னாலுமேகூட, குறைசொல்லப்படவே முடியாத ஒன்று. றொம்ப சோகம்.

இந்த முகாரிக்கு முகாந்திரம்: சிறிய கடிதம்.

இதில் பலப்பல பிரச்சினைகள். நெருங்கவே படுபீதியாக இருக்கிறது. எந்த கிறுக்குக்கூ, இந்த எஸ்ரா இப்படி எழுதவேண்டும் என்றெல்லாம் அழுகிறான்? கோபம்கோபமாக வருகிறது…

சரி. (பல்லை நறநறத்துக்கொண்டே!) இந்த எஸ்ராத்தனமான கட்டுரைப்பதிவின் பிரச்சினைகளுக்கு வருவோம்…

பிரச்சினைகளில் முதன்மையானது – இந்த டால்டாஸ்டாய் பாமாயிலினோவ் குஷ்புஇட்லியோவ்ஸ்கி போன்ற பிரச்சினைகளுக்கு ஏகபோக குத்தகைதாரர்களாகவும் சமூகமனச்சாட்சிகளாகவும் பொழிப்புரையோடல்காரர்களாகவும் தங்களைக் கருதிக்கொள்ளும் தமிழ் அலக்கிய வாதிகள். இவர்கள், சாமானியர்களுக்குச் சொக்குப்பொடி போடும் பேமானியர்கள். மானேதேனே என அட்ச்சிவுடுபவர்கள்.

இரண்டாம் பிரச்சினை: இம்மாதிரிக் கழிசடைத்தனமாக எழுதும் நகைக்கத்தக்க எந்தவொரு  அற்பஜீவனுக்குமேகூட தமிழக அலக்கிய வானில் ஒரு பிரத்தியேக இடம் இருப்பது. நம்பவே முடியாத வகையில் இவர்களுக்கெல்லாம் கூறுகெட்டக் குறுமதியாளப் பதிப்பாளர்கள் இருப்பது. + இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, நம்மையெல்லாம் தொடர் விக்கிப்பில் மூழ்கடிக்கும்படிக்கு, ஆசானிய எள்த்தாலர்கலே சொந்தமாக மரக்கூழ்க் கடைகளை தேசாந்திரி பண்ருட்டிமுந்திரி என ஆரம்பிப்பது!

மூன்றாம் பிரச்சினை: அதற்கு மேற்பட்டு, இம்மாதிரி மேனாமினுக்கிப் பெயருதிர்ப்பாளர்களுக்கெல்லாம் வேறு ஏகோபித்த வாசகர்கள் (அடியேன் உட்பட!) இருப்பது. அதாவது, இந்த ஜந்துக்களைச் சுற்றியும்கூட ரசிகக் குஞ்சாமணிகள் கூடுவது. சுற்றிச் சுற்றித் தட்டாமாலை அடித்து மண்டைகுழம்பி கிறங்கிப் போவது… போன்ற துக்கம்பிழியவைக்கும் நிதர்சன ஆறுதரிசன நிலைமை. தமிழ் அலக்கியம், நீரைப் போலவே தன் படுமட்டத்தை அடையும். ஆமென்.

நான்காம் பிரச்சினை: இம்மாதிரிப் போலி அறிவுஜீவிய தடாலடி நெகிழ்வாலஜிஸ்டுகளைக்  கண்டுகொள்ளாமல், கமுக்கமாக தங்களுடைய சொந்தக் கதாகாலட்சேபத்தையும் ஆட்சேபமில்லாமல் ஊக்கபோனஸாக நடாத்திக்கொண்டு கல்லாவையும் புல்லாவையும் கோமணமுதல்வாதமாகக் கட்டி அமோகமாக அலையும் சக அலக்கிய எழுத்தாளப் பிதாமக அற்பர்கள்.

ஐந்தாம் பிரச்சினை: இந்த மாதிரி அட்ச்சிவுடும் அரைவேக்காட்டு ஆளுமை ஆசாமிகளையெல்லாம் தேவைமெனக்கெட்டுத் தேடிப்பிடித்து ஸாஹித்ய விருதாக்கள் கொடுத்து, தமிழகத்தைத் தொடர்ந்து அசிங்கப்படுத்தும் பார்ப்பனபனிய மதச்சார்ப பாரத சகிப்புத்தன்மையற்ற வடவ வந்தேறி வடுக வட நாடுடைய வம்பே போற்றி காவிகள்! திராவிடர்களாகிய நமக்கெல்லாம் தேவையா இந்தக் கொடுமை, சொல்லுங்கள்? நமக்கென்று வாய்த்திருக்கும் வீரமணி இசுடாலிர் சீமான்கள் போதமாட்டார்களா?

ஆம் பிரச்சினை: இந்தக் கழிசடைகளைப் பற்றியெல்லாம் பிலாக்கணம் வைக்குமளவு எனக்கு நேரம் இருப்பது, சமயம் வாய்த்திருப்பது. எருமையனைத்த பொறுமையும் கூடியிருப்பது. (இது நம் சகஏழரைகளின் பிரத்தியேகப் பிரச்சினை, பாவம்!)

சோகமோசோகம்.

-0-0-0-

சரி. அந்த எழவெடுத்த டால்டா ஸ்டால் எஸ்ராமகிருஷ்ண விஷயத்துக்கு (ஒரு வழியாக) வருவோம். :-(

ஆனால் இந்த எஸ்ராமகிருஷ்ண ஞானசூனியக் கட்டுரையை எங்கிருந்து இடிக்க ஆரம்பித்து சூனியம் வைத்து வெந்து சூப்பாவது என்று தெரியவில்லை. ஆகவே சுலபமாக முதல்வரியிலிருந்து ஆரம்பிக்கிறேன். எல்லாம் உங்கள் தலைவிதி, வேறென்ன சொல்ல!

//லியோ டால்ஸ்டாய் தன் வாழ்நாளில் நிறையக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்.  அவர் எழுதிய கடிதங்கள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

இல்லை. லியோ காப்பி டால்டாஸ்டால் எழுதிய கடிதங்கள் பலமுறை பல நூல்களாகப் பலவாறு தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு ‘தனி நூலாக’ தனியாக எவருடைய கிழிந்த கோமணத்திலிருந்தும் தொங்கிக் கொண்டிருக்கவில்லை; மன்னிக்கவும். எங்கிருந்து எந்தத் தகவலை எப்படிப் பெற்று இப்படியெல்லாம் அட்ச்சிவுடுகிறார், என்னருமை எஸ்ரா?

இவற்றில் முக்கியமானது ஆர் எஃப் க்றிஸ்டியான் அவர்கள் தொகுத்த டால்டாஸ்டால் கடிதங்களும் நாட்குறிப்புகளும். இவை இரண்டு புத்தகப் பகுதிகளாக (வால்யூம் 1 & 2) வந்துள்ளன.

…ஆனால், நான் இவற்றைப் படித்தது, ஆர்கைவ்.ஆர்க் தளத்திலிருந்து; இந்தத் தளத்தைத் தான் பாரதத்தில் சகிப்புத் தன்மையற்று முடக்கிவிட்டார்கள் எனவொரு புரளியைச் சிலகாலமுன்பு கிளப்பினார், என் பெரும்பேராசான்  ஜெயமோகன் அவர்கள். அங்கு, ஒன்றல்ல இரண்டல்ல – ஆனால் வெறும் சுமார் 125 புத்தகங்கள்/தொகுப்புகள் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மை டால்டாஸ்டாலின் கடிதத் தொகுப்புகள். என்ன செய்வது சொல்லுங்கள்! :-(

// டால்ஸ்டாய் எழுதிய மிகச்சிறிய கடிதம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அது Fedorov என்ற மாணவனுக்கு எழுதப்பட்ட கடிதம். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலின் முக்கியக் கதாபாத்திரமான Natasha Rostovaவின் பெயரிலுள்ள Rostovaவை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக்கேட்டு அந்த மாணவன் கடிதம் எழுதியிருக்கிறான்.

டகீல்! அதைக் ‘கண்டுபிடித்து’ கிட்டத்தட்ட 108 வருடங்களாகிவிட்டன. மன்னிக்கவும். ஏனிப்படி படுதெகிர்யமாக உளறுகிறார், நம்மாள், ஹ்ம்ம்??

அல்லது இதுதான் ‘சமீபமா?’ இன்னாங்கடா??

வேலண்டின் புல்ககொவ், டால்டாஸ்டாலின் காரியதரிசியாக இருந்தவர். இவர் 1966லேயே போய்ச் சேர்ந்துவிட்டார் வேறு! இவர் எழுதிய ‘அவருடைய கடைசி வருடத்தில் லேவ் தல்ஸ்தொய்’ எனும் 1911 புத்தகத்தில்தான் இந்தக் கடிதம் குறித்த சிறுகுறிப்பு வருகிறது. இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் முழிபெயர்க்கப்பட்டு 1960லேயே வந்துவிட்டதுவேறு.

இந்தப் புத்தகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் எடுக்கப்பட்ட சிறு தொகை நூலாக (புல்ககொவ் சிறார்களுக்கு எழுதியதாக) – 1970களில் அப்போதைய யுஎஸ்எஸ்ஆரின் ப்ராக்ரெஸ் பதிப்பகம் ஒரு சிறு கையேடு அளவில் தல்ஸ்தொய் அறிமுக நூல் ஒன்றைக் கொணர்ந்தது. அதிலேயே இதே ‘சிறிய கடிதம்’ ஃபேக்ஸிமிலி வடிவில் படமாகப் பதிப்பிக்கப்பட்டிருந்ததை, நான் என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

ஆனால் – நம் டகீலானந்த ராமகிருஷ்ண பரமடம்ப்ஸர்,  இந்த நூற்றாண்டு கண்ட விஷயத்தை என்னவோ ‘அண்மை’ கிண்மை என்கிறார்! தேவையா??

அல்லது பெரும்பேராசானாக லட்சணமாக, ‘எனக்கு இன்றைக்கு இந்த விஷயம் தெரியவந்தது. ஆகவே இந்த விஷயமே இன்றுதான் நடந்திருக்கவேண்டும்’ என ஏதாவது ராஜராஜசோழ விஷயத்தையும் ஊக்கபோனஸாக அட்ச்சிவுடுவாரா?

ஆனால், இந்த குறிப்பை எழுதுவதற்கு பரமடம்ப்ஸர் எங்கிருந்து விஷயத்தை லவட்டியிருக்கிறார் என்றால்… …

இதன் மூலம் இங்கே – அதில் சரியான விவரங்கள் இல்லாமல் போனதற்கு பரமடம்ப்ஸர் என்னதான் செய்யக்கூடும், சொல்லுங்கள்?

//இந்தக் கடிதத்தைக் காணும் போது இரண்டு விஷயங்களைத் தெளிவாக உணர முடிகிறது. ஒன்று புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்த போதும் தன்னிடம் விளக்கம் கேட்கும் மாணவனின் கடிதத்திற்குக் கூட டால்ஸ்டாய் பொறுமையாகப் பதில் எழுதியிருக்கிறார். இரண்டாவது ஒரு நாவலை வாசிக்கும் மாணவன் அதிலுள்ள கதாபாத்திரத்தின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது வரை ஆழ்ந்து படித்திருக்கிறான்.

அப்டீங்க்ளா? ஆனால் பரமடம்ப்ஸரே! உங்களுக்கு லேவ் தல்ஸ்தொய் பெயரையே எப்படி உச்சரிப்பது/எழுதுவது எனத் தெரியாமல் லியோ காப்பி டால்டாஸ்டால் என்ற வகையில் ‘லியோ டால்ஸ்டாய்’ என எழுதுகிறீர்கள்! ஆக – உங்களுடைய ஆதர்ச டால்டாடின்னின் அறிவுரையை நீங்களே கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கொல்கிறீர்கள் அல்லவா? விருது எருது என எப்படியோ வாங்கிவிட்டீர்கள், சரி. நானும் ஒத்திசைவு கொடியை, அஞ்சலி செலுத்தும் விதமாக, அரைக்கம்பத்தில் பறக்கவிட்டேன், இதுவும் சரிதேன்!

ஆனால், ஸாஹித்ய அகாடம்மியாகவேதான் தொடர்ந்து இருப்பேன் ஏன் இப்படி அடம் பிடிக்கிறீர்கள்? ஹ்ம்ம்??? கொஞ்சமாவது வளரவேண்டாமா? கொஞ்சமேகொஞ்சமாவது விட்டேற்றிப் போக்கைத் திருத்திக்கொள்ளவேண்டாமா?

// டால்ஸ்டாய் தனக்கு எழுதப்பட்ட பெரும்பான்மை கடிதங்களுக்குப் பதில் எழுதியிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் அவருக்கு வாசகர்கள் கடிதங்கள் எழுதியிருக்கிறார். மகாத்மா காந்தி கூட டால்ஸ்டாயிற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஐயய்யோ! இப்படியா ‘தமிழ் அலக்கியத் தொழில் ரகசியத்தை’ பகிரங்கமாக போட்டு டமாரென்று உடைப்பது? அப்டீன்னாக்க, டால்டாடின்னும் தனக்குத் தானே பல நாடுகளிலிருந்து வாசகர்கடிதங்களை எழுதிக்கொண்டாரா என்ன?

மேலும் – ‘தனக்கு எழுதப்பட்ட பெரும்பான்மை கடிதங்களுக்குப் பதில் எழுதியிருக்கிறார்’ – இதென்னபா கணக்கு? டால்டா டின்னின் பின்புறம் நின்றுகொண்டு பார்த்ததுபோலல்லவா எழுதியிருக்கிறார் நம் எஸ்ரா!

// ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதுவதற்கென்றே தனி நேரத்தை ஒதுக்கியிருந்தார் டால்ஸ்டாய்.

டால்டா டின்னின் பின்னால் ஒளிந்துகொண்டு எஸ்ரா இதனைப் பார்த்திருப்பார் என அனுமானிக்கிறேன். எனக்குத் தெரிந்து இதற்கு ஒரு ருசுவும் இல்லை. ‘நிறைய கடிதம் எழுதியிருக்கிறார், ஆகவே இப்படித்தான் இருந்திருக்கவேண்டும்’ என, பொத்தாம் பொதுவாக எழுதிவிட்டார் நம்மாள். (மாறாக, இதற்கான அசைக்க முடியாத தரவுகள் இருந்தால், என்னைத் திருத்திக்கொள்கிறேன்)

// கடிதங்களில் அவரது கோபம். இயலாமை. எதிர்ப்புணர்வு என மனதின் கொந்தளிப்புகள் மிகத் துல்லியமாக வெளிப்பட்டுள்ளன.

அப்படியா என்ன? நான் படித்தவரை, அவற்றில் தத்துப்பித்துவம், மேற்கோள்கள், அறிவுரைகள் போன்றவைதான் அதிகம். சும்மனாச்சிக்கும் ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் அட்ச்சிவுடுவதே நம்மாளின் தொழிலாகிவிட்டது, என்ன செய்ய! ஆக தனித்துவம் அதுஇது கலகப்பிரதி, கலக்கல்கேஸ் என எந்த மசுத்தைவேண்டுமானாலும் வாய்க்குவந்தாற்போல அட்ச்சிவுடலாம்தான்!

// 1908ல் தாரக் நாத் தாஸிற்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதம் A Letter to a Hindu எனத் தனிநூலாக வெளிவந்துள்ளது. அது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்கான ஆதரவு கேட்டு தாரக் நாத் எழுதிய இரண்டு கடிதங்களுக்குப் பதிலாக எழுதப்பட்டதாகும்.

ஒரு சிறு தகவலைக் கூடச் சரியாக எழுதும் சிரத்தையற்ற சோம்பேறித்தனம்தான் நம்மாளின் மூலதனம், வேறென்ன சொல்ல!

எவன் அழுதான், இந்த மாதிரி ஒரு குப்பைக் கட்டுரையில் – ‘சிறிய கடிதம்’ என்பதற்குச் சம்பந்தமேயற்ற இன்னொரு விஷயத்தை, அவருடைய வழக்கம்போலவே தப்பும்தவறுமாக நம்மாள் எழுதியே ஆகவேண்டும் என்று!

1908ல் மகாமகோ தாரக்நாத் தாஸ் அவர்கள், போயும் போயும் இந்த தல்ஸ்தொய் அவர்களுக்கு, தனிப்பட்டமுறையில் ஒரு கடிதம் எழுதினார் – பாரத விடுதலைக்காக அல்ல, ஆனால் ப்ரிட்டிஷ் அரசின் அராஜகங்களுக்கு எதிராக, டால்டா டின்னின் பிரச்சார ஆதரவைக் கோரி எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதம் ‘ஸ்வதந்திர ஹிந்துஸ்தான்’ பத்திரிகையின் இரு இதழ்களை இணைப்பாகக் கொண்டிருந்தது.

அந்தக் கடிதத்துக்கான பதிலை தல்ஸ்தொய் நேரடியாக தாரக்நாத்துக்கு அனுப்பாமல், பகிரங்கமாக ஒரு பதிலை எழுதினார் – இதுவே சரியில்லை; எது எப்படியோ, அது பாட்டுக்கு ‘ஹிந்துவுக்கு ஒரு கடிதம்’ என ஆனந்தமாகச் சுற்றிக்கொண்டிருந்தது. பின்னர் ஒருவழியாக இது, தென் ஆஃப்ரிகாவில் இருந்த நம் பாபுஜி கைக்கு வந்து சேர்ந்தது – அவர் அதனை மட்டும், தன்னுடைய ஒரு முன்னுரையுடன்,  நவம்பர் 1909ல் பதிப்பித்தார்.

பிரச்சினை என்னவென்றால், பாபுஜி இந்த நூலைப் பதிப்பித்தசமயத்திற்கு முன்பே – தல்ஸ்தொயின் மேதாவித்தனம் நிரம்பிய அறிவுரைத்தனமான கடிதத்துக்கு சரியான/விரிவான நான்கு-பகுதி பதிலை தாரக்நாத் அவர்கள் அனுப்பியிருந்தார். இவையனைத்தும் அமெரிக்காவின் ‘ட்வென்டியத் ஸென்சுரி மேகஸைன்’ 1909-10ல் பதிப்பித்தது.

ஆனால் பாபுஜி அவர்களுக்கு அவை கிடைக்கவில்லையோ என்னவோ – தாரக்நாத் அவர்களின் இரண்டு கடிதங்களையும் அவர் (ஒரு பின்புல விஷயமாகவே கூட!) சேர்க்கவில்லை – ஆக தல்ஸ்தொயின் கடிதம் மட்டுமே நின்று நிலைத்துவிட்டது. இது ஒரு சோகமாக விஷயம்.  ஏனெனில் – ஒரு உரையாடலின் ஒரு பக்கம் மட்டுமே வீங்கி வெளிப்பட்டு ஹிந்து / ஸனாதன தர்மம் பற்றிய குறைப்பிரசவப் புரிதல்களுக்கு அடிகோலியது இது!

பிரச்சினை என்னவென்றால் – இதில் தல்ஸ்தொய், தன்னுடைய சிலபல அரைவேக்காட்டு புரிதல்(!)களையும் எழுதியிருக்கிறார். நானே, ஃபெப்ருவரி 2019 வாக்கில் இதனைப் பற்றி எழுதியிருக்கிறேன். (semi-literate அல்லது half-boiled அன்பர் ஒருவரின் ‘மேலான பார்வைக்காக’ அதனை ட்விட்டர் சமூகத்தில் வைத்தேன் என நினைவு)

https://twitter.com/othisaivu/status/1098935923805347841

என்ன சொல்ல வருகிறேன் என்றால் – மேதகு எஸ்ரா அவர்களின் அரைவேக்காட்டுப் புரிதல்களுக்கும் அளவற்ற விட்டேற்றிச் சோம்பேறித்தனத்துக்கும், ஈயடிச்சான் காப்பியடித்தல்களுக்கும் அவருடைய இந்தப் பதிவும் ஒரு மேலதிக எடுத்துக்காட்டு.

எல்லாம் சரி. தாரக்நாத் எழுதிய ஒரு கடிதத்துக்குப் பதிலை தல்ஸ்தொய் எழுதினார். அந்தப் பதிலுக்கு ஒரு எதிர்ப்புரையைப் பணிவுடன் தாரக்நாத் எழுதினார். அவ்வளவுதான். ஆனால் எங்கிருந்து/எப்படி  ‘தாரக்நாத் எழுதிய இரண்டு கடிதங்களுக்குப் பதிலாக எழுதப்பட்டதாகும்‘ என தல்ஸ்தொய் ‘ஹிந்துவுக்கு ஒரு கடிதம்’ விஷயத்தை தெகிர்யமாகக் குறிப்பிடுகிறார், நம்மாள்?

இரண்டு விடைகள்:

1. ‘எஸ்ராவின் சராசரி வாசகன் ஒரு கூமுட்டை – ஒரு மசுத்தையும் அறியாதவன், அர்த்தமற்ற நெகிழ்வாலஜிக்கு அலைகின்றவன், அவனுக்கு எஸ்ரா வாக்கு வேதவாக்கு, அவ்ளோதான்’ – என்பதெல்லாம் எஸ்ராவுக்கு மிக நன்றாகவே தெரியும்.

2. விக்கிபீடியாவும் கூக்ள் எழவும் முழிபெயர்ப்பு அனுபவமும் இருக்க பயமேன், நம் எஸ்ராவுக்கு.

…நம் தமிழ் அலக்கியத்தின் நிலை கவலைக்கிடம்தான். உறவினர்களுக்குச் சொல்லியனுப்பிவிடவும். நன்றி.

9 Responses to “எஸ்.ராமகிருஷ்ணன்: தமிழ் அலக்கியத்தின் தொடர் வெட்கக்கேடு”

  1. K.Muthuramakrishnan Says:

    Thanks for introducing the letters of Taraknath.


  2. Sir, you are most welcome. (I like Bapuji for many of his lived-values, but there are pinpricks like this ignoring of taraknathdas – oh what to do!) :-(

  3. soapudappa Says:

    இவங்களைப் படிக்க ரொம்ப எரிச்சலா இருந்தா அநீ,ஜடாயு என்று படியுங்கள் இல்லையெனில் நான் கேட்ட புத்தக பட்டியலை ஆவது போடூங்கள்


    • இன்னாபா? றொம்ப மெரட்ற?

      தோசைமாவோட வர்ட்டா?? ;-)

      • soapudappa Says:

        தோசை மாவோட வந்தா அடி வாங்க போறது நானல்ல

        அப்படியே அடி வாங்கினாலும் ஆசான் மாதிரி திமுக அறிவுத்தளக் கட்சி என்று ஜுட் விட்ருவோம்ல

  4. A. Seshagiri Says:

    எனக்கு ஒரு சந்தேகம்,படதடவைகள் சந்தி சிரித்த பிறகும் இவர்இப்படி தொடர்ந்து எழுதுவதன் காரணம் என்ன?

  5. Em Says:

    Hi,
    After reading a few of his short stories, I always run away whenever I see YesRaw books. Methinks you are secretly a masochist. Why else would you read his books and articles? Anyway, I wasn’t feeling very good today and by the end of this blog post, I had tears in my eyes(from laughing). Thanks to you, now every time I hear/read about Tolstoy, a Dalda Dabba image is going to pop in my head. Damn you and your noodles nadai tamil.


  6. Yo Em! Ho hum.

    Glad that you had tears in your eyes. அதாவது உங்கள் சுயத்தில் கிழிசல்கள் வந்ததற்கு.

    நீங்கள் அப்படி இருக்கும்போதே, தஸ்தயேவ்ஸ்கி ஆக்சூலி பத்துகருணையுடைத்தஏப்பசாவி என உணர்ந்தீர்களானால் பரமபதசோமபானம் நிச்சயம். நன்றி.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s