17 வகைகளில் ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி?(1-10) (je suis jeyamohan)(க்றீச்சிடுதல் (4/n))
September 11, 2018
இந்தப் பதிவெழவைப் படிப்பதற்குமுன் – முந்தைய இரு முத்தாய்ப்பு எழவுகளைப் படித்தால் – உங்கள் மண்டை 100% காய்வதற்கு நான் கியாரண்டி வாரண்டி, ஏமண்டி? தெலுஸ்கொண்டி.
- ஜெயமோகன ஆதங்கங்கள், குறிப்புகள் (க்றீச்சிடுதல் (3/n)) 10/09/2018
- ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n)) 08/09/2018
எனக்குமே, இத்தனைக் கிழவயது ஆகியும், பலபத்தாண்டுகளாக நம் அலக்கியக் கோமாளிகளின் குத்தாட்டத்தைப் நேரில் பார்த்து ரசித்த மகாமகோ அனுபவங்கள் இருந்தாலும், ஓரளவு பணிசெய்யும் குயுக்திமூளை இருந்தாலும் – சிலபல விஷயங்களை, நடப்புகளைப் புரிந்துகொள்ள முடிந்திருக்கவில்லை.
பின், ஒருவழியாக, நான் என் குரு*வைச் சந்திக்கும் பேறு பெற்றவுடன் தான் எனக்கு இந்தப் புரிதல் வாய்த்தது. என் இன்னொரு மானசீக குரு** எனக்குச் சொல்லிக் கொடுத்திருப்பதும் இதுதான்: “மாட்டுக்குச் சொறிந்துகொடு, மனிதனுக்குச் சொறிந்து கொடுக்காதே!”
கீழே என் புரிதல்கள். இதுவும் கொஞ்சம் அதீத நீளம்தான் – ~1000 வார்த்தைகள்! பொறுமையாகப் படிக்கவும். அடுத்த பதிவோடு, இந்த நாமாவளிப் படலம் முடிந்துவிடும். கவலை வேண்டேல். ஆகவே.
கட்டுமரசாமியே துணை. ஆமென்.
* என் குரு எங்கே, யார் அந்த அபாக்கியவான், வேர் வாட் வென் ஹூ வை எனப் பீதிவாய்ப்பட்டுக் கேட்பவர்களுக்கு தினமலர் நாளிதழில் அவரைப் பற்றி வந்துள்ள ஒரு கட்டுரையைச் சுட்டுவேன். நன்றி.
** ஜோஸஃப் ஜேம்ஸ்.
முதற்கண் நாம் அறியவேண்டியது என்னவென்றால்: நான் ஜெயமோகன். நாம் ஜெயமோகன்கள். je suis jeyamohan. நன்றி.
நம்மைப் போலத்தான் அவர். ஜெயமோஹன் அஹமாஸ்மி. நம்மில் இல்லாதது எதுவும் அவரிடம் இல்லை; அவருடைய வார்த்தைகளைக் கடன்வாங்கினால் – இதைத் தவிரப் பிறிதொன்றை அறிய வேண்டியதும் இல்லை. மிக்க நன்றி.
இருந்தாலும், ஜெயமோகனின் எழுத்துகளையும் அவரையும் சுற்றி ஒரு ஓளிவட்டமும் பனியும் இருப்பதால் பல விஷயங்களானவை – வெறும், அற்ப சாதா வாசகர்களாகிய நமக்குப் பிடிபடுவதில்லை. ஆகவே ஒரு தன்னை-அறியும் முயற்சியில், விதம்விதமாக ஜெயமோகனைப் பார்க்க விழைந்தால்…
1. ஜெயமோகனுக்கு எழுதும் திறமை இருக்கிறது. நல்ல விஷயம்தான், எனக்கும் அவருடைய எழுத்து ஆளுமை பிடித்தமே. ஆனால் அந்த முதலீட்டை வைத்துக்கொண்டு கண்டமேனிக்கும் எழுதித் தள்ளுகிறார். எல்லாவற்றின் மேலும், அவருக்கு அஆ தெரியாத விஷயங்களின் பேரிலெல்லாம் மேலான கருத்து தெரிவிக்கிறார்.
எதிர்பார்ப்பின் படியே – திகைத்துப்போன வாசகர்கள் நெகிழ்ந்து (ஆ! எங்கேடா என் கோமணம்?), பிரமித்துப்போவதால் அவற்றுக்கு எதிர்வினைகள் வராத போது (அல்லது மாற்றுக்கருத்துகள் கண்டுகொள்ளாமல் இருக்கப்படும்போது) இன்னும் கொஞ்சம் தெகிர்யமாக அட்ச்சிவுடுகிறார். (எல்லாம், நம்மைப் போலத்தான் – நாமெல்லாம் விடாத பீலாக்களா?)
ஏனெனில் அவருக்குள் இருக்கும் அடுக்குப் பிரிவு உணர்ச்சி/வெறி அப்படியானது. ஆனால் தமிழகத்தில் உள்ள பராக்கிரமம் மிக்க ஜாதிகளைப் பற்றிப் பேசமாட்டார், ஏனெனில் அது ஹராம். அவர் சொன்னதை அப்படியே ‘ஆனந்தவிகடன்’ குசும்புத்தனமாக தொப்பிதிலகம் என வெளியிட்டால் புறமுதுகிட்டோடவும் தயார்! (நாமெல்லாரும் அப்படித்தான். ஏமாந்தால் அடுத்த குழுவின்மீது பழியைப் போட (அவர்கள் நம்மீது பதிலுக்கு விழுந்து பிடுங்காத வரையில்) நாமெல்லாரும் எப்போதுமே தயார்! ‘அடிக்கறாங்க, அடிக்கறாங்க’ கதைகளை அரங்கேற்றுவது எவ்வளவு எளிது என்பதைக் கருணாநிதி முதல் ஜெயமோகன் வரை பல சான்றோர்கள் விலாவாரியாக விலாநோகக் கற்றுக்கொடுத்திருக்கும்போது – அவற்றின்படி ஒழுகாமல், சாமானியர்களாகிய நாம் என்னதான் செய்யக்கூடும்?)
3. ஜெயமோகனுக்கு பல விஷயங்களில் அடிப்படை நேர்மையில்லை. மனமறிந்து பொய் சொல்லக்ககூடியவர்தாம் அவர். பலமுறை காரியார்த்தமாகவும், சில சமயங்களில் தேவையேயில்லாமலும் கூடச் சொல்லியிருக்கிறார். அறம் கிறம் என்றெல்லாம் சொல்வதற்கு, உரையாற்றுவதற்கு, நீட்டி முழக்கி எழுதுவதற்கு எளிது. (இதிலும் அவர், நம் எல்லாரையும் போலத்தான், அவசரத்துக்கு நாம் சொல்லாத பொய்களா?) (“டேய் ராம், வெந்நீர் வெச்சிருக்கேன், அதை அஞ்சு நிமிஷத்துல அணைச்சுடு!” “ஸாரி டார்லிங் அன்புத்தேனே, [இந்தப் பதிவை எழுதிக்கொண்டே] பள்ளி தொடர்பாக ஒரு முக்கியமான வேலைல மும்முரமா இருக்கேன்! என்னை டிஸ்டர்ப் பண்ணாத… ப்ளீஸ்!”)
4. தனக்குத் தொடர்பற்ற விஷயங்களில் (துளிக்கூட விஷய ஞானம் இல்லாத துறைகளில்) உள்ள சீர்கேடுகளைப் பற்றி விலாவாரியாக எழுதுவது என்பது ஒருமாதிரி வக்கிர அறிவுஜீவியம். அவர் ஒரு செழிப்பாக வளர்ந்த, கொம்புசீவப்பட்ட அறிவுஜீவி. ஆகவே இது மேலும் உக்கிரம்.
நாமெல்லாம் அட்ச்சிவுடுவதில்லையா?அதைப்போலத்தான் அவரும் இந்தப் பதிவில் ஒரு பிரம்மாண்டமான பொருளாதார வல்லுநர் ஆகிறார் – கடைசியில், திடுதிப்பென்று சுயபாதுகாப்புடன் சாமானியனாக ஆகிறார், அவ்ளோதான்! (நானும் அலாஸ்காவில் இருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் – க்ளோபல் வார்மிங், நியூட்ரினொ, எஸ்ராமகிருஷ்ணன், சீமைக்கருவேலம் போன்ற படுபீதியளிக்கும் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது குறித்து, இத்துறைகளிலும் வல்லுநராக இருக்கும் சாருநிவேதிதா அவர்களிடம் கலந்து ஆலோசித்து ஆராய்ச்சி செய்து, அதற்காக ஒரு ஃபீல்ட்ஸ் பதக்கமும் சல்லீஸாக வாங்கலாம் என்றிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?)
5. அவருடைய நிலைபாடுகளுக்கு எதிராகக் கேள்விகள் கேட்கப்படுவதை அவர் பொதுவாகவே விரும்புவதில்லை. அப்படி எக்குதப்பாக ஏற்பட்டால் – அவற்றை, வேறு வழியே இல்லாமல் எதிர்கொள்ளவேண்டி நேர்ந்தால், அவற்றையும் சுளுக்கெடுத்துத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வதில் அவருக்கு மிகுந்த அனுபவம் இருக்கிறது. (இதிலும் அவர் நம்மைப் போலத்தான்; வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். பல்லவனுக்குப் பல்லும் பிடுங்கப்படும். வள்ளுவனை வள்ளும் விழுந்துபிடுங்கும்.)
6. தன்னுடைய அனுபவங்களைக் கற்பனை செய்துகொண்டு, தம்மை உயர்மட்டத்தில் வைத்துக்கொண்டு தாம் செய்யாததையெல்லாம் செய்ததாகத் தன்னைத் தானே நம்பவைத்துக் கொண்டு – பின்னர் கற்பனைகளைப் பொதுமைப் படுத்தி – அவை உண்மையாக நடந்ததாகவே விரிப்பது ஒரு கலைதான்.
மேலும் நடக்காத விஷயத்தை நடந்ததுபோலத் திருப்பித் திருப்பி நம்மிடமும் பிறரிடமும் – அலகிலா அளவிலாமல் அளந்தபெருமாள் போலச் அட்ச்சிவுட்டுக்கொண்டிருந்தால் – ஒருசமயத்தில் அவ்விஷயம் நமக்கு உண்மையிலேயே நடந்தது போலத் தோன்றிவிடுமல்லவா? (நம்மில், இப்படிப்பட்ட சொகுசுக் கற்பனாவாதிகள் அல்லாதவர்கள் யார்? இப்படித்தான் நான், நரேந்திரமோதி அவர்களைப் பார்த்து, எனக்கு பாரதரத்னா விருதே வேண்டாம் என இரண்டுமாமாங்கங்களுக்கு முன்னே அளவுக்கு மீறிய பெருந்தன்மையுடன் சொன்னதைப் பற்றிப் பலமுறை பிறரிடம் சரமாரியாகத் தெரிவித்தது நினைவுக்கு வந்து தொலைக்கிறது, என்ன செய்ய…)
7. சர்ச்சைக்குரியதாக ஒன்றைத் தேவைமெனக்கெட்டு விளம்பரத்துக்குச் சொல்லிவிட்டு – அதற்குஎதிர்க்கருத்துகள் வந்தால், ஏன், அவை வரக்கூடிய சாத்தியங்கள் இருந்தாலும் கூட பாதுகாப்பாக ஜகா வாங்குவது, சர்வஜாக்கிரதையுடன் முன்ஜாமீன் வாங்கிக்கொள்வது என்பது மானுட மாண்பு – அதுவும் இது கருத்துதிர்ப்பு அறிவாளிகளின் மகாமகோ அடிப்படை உரிமை. இதனை shoot and scoot தந்திரோபாயம் எனச் சொல்லலாம்.
மேலும், பெருந்தன்மை யுத்தப் பிரகடனமாக, “…தகவல்திரிபுகள், சதிவேலைக்கண்டுபிடிப்புகள், சாதிமதக்காழ்ப்புகள், போலிப்புள்ளிவிவரங்கள் என கூச்சலிடும் எவருடனும் இதைப்பற்றி விவாதிக்கவும் தயாராக இல்லை” எனவும் ஓங்கி ஒரு போடுபோடலாம்.
மயக்க லாகிரியில் கட்டுண்டு கிடக்கும் அடிப்பொடி எழவாளர்களுக்கு எப்படியும் இந்த ‘நுண்ணரசியல்’ எழவும், நுங்கெடுக்கும் பாங்கும் புரியப்போவதில்லை. ஆகவே அய்யன்மீர், நிகரலாபம் மட்டுமே நிற்கும். நன்றி! (புறமுதுகிட்டோடும் பண்பு நமக்கெல்லாம் இல்லையா என்ன? இதோ பாருங்கள், நீங்கள் என்னை எதிர்த்துக் கருத்துத் தெரிவித்தால், கொலை செய்வேன் என மிரட்டினால், வீரப்போராளிச் சுயஜாக்கிரதையுடன் இந்தப் பதிவை நீக்கிக்கொள்ளத் தயார்!)
8. தான் அப்பழுக்கற்ற நேர்மையாளர் என நம்பிக்கொள்ள, படிப்பாளி எனக் கருதிக்கொள்ள, சகலகலாவல்லவனாக வரித்துக்கொள்ள அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. (நமக்கும் அப்படித்தானே? என்னைவிடப் பெரிய படிப்பாளி எவரிருக்கிறார்கள், சொல்லுங்கள்? ஊக்கபோனஸாக ஆமாம்சாமி போட நாலுபேர் வாய்த்தால், நான்தாண்டா காந்தீ! (ஆனால் எனக்கு இப்படிப்பட்ட அடிப்பொடிகள் வாய்க்கமாட்டேனென்கிறார்கள், கெரகங்கள்…))
9. தனிமனித ஒழுக்கம் என்பது ஓயாமல் சொல்வதற்கு / அறிவுரை தருவதற்கு எளிது. ஒரேயொரு எடுத்துக்காட்டு: அவர் பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தில் ஒருகாலத்தில் பணி(!) செய்து கொண்டிருந்தபோது, அரசுசெலவில் மணிக்கணக்கில் பலப்பல வருடங்களுக்காவது – தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்லது
வம்புப் பேச்சாக, மணிக்கணக்கில் பேசித் தள்ளியதை நான் நேரடியாக அறிவேன். இரண்டு விஷயங்கள்: 1) அவர் பணி நேரத்தில், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளுக்குப் பதிலாக இப்படிச் செய்தார் 2) அரசு செலவில் இப்படி நடந்தது – ஆக இரண்டுவகைகளில் அரசுக்கு இவரால் நஷ்டம். இதற்கெல்லாம் மக்கள் வரிப்பணம்தானே செலவிடப்பட்டது? இது அசிங்கமான ஊழலன்றி வேறேன்ன? தயாநிதி மாறன் போன்ற திராவிடப்பேடிகள் செய்ததன் (=பல்லாயிரம் கோடிகள்) சிறு வடிவம்தானே (=சிலபல பத்துலட்சங்கள், குறைந்த பட்சம்!) இது?
இவரிடம் இருந்து வரும் ஓஸி தொ(ல்)லைதூர தொடர்அழைப்புகளையும் படுவிஸ்தாரமான பேச்சையும் எதிர்கொள்ள, ‘ஐயய்யோ! மதியம் ரெண்டு மணியாயிற்றே, ஃபோன் வருமே, கீழ வெக்கவேமாட்டானே‘ எனப் படுபீதிக்குள்ளாகி பயந்தவர்களும் இருந்தார்கள். (நான் கூட இருக்கும்போதே இரண்டு இலக்கியக்காரர்களுக்கு இது ஏற்பட்டதை அறிவேன் – இதில் ஒருவர் போய்ச் சேர்ந்துவிட்டார்! இன்னொருவர் இன்னமும் இருக்கிறார், பாவம் – எழுதுவதை நிறுத்திவிட்டார், சுபம்)
நாமெல்லாரும் அப்படித்தானே? ஆற்றோடு போகும் நீரை அவர் குடித்தால் என்ன, நான் குடித்தால் என்ன? ஆனால், அதே சமயத்தில் நாமெல்லாரும் – அய்யோ, பொதுச்சொத்தை, பிறர் இப்படி நிர்மூலம் செய்கிறார்களே எனப் பிலாக்கணமிடுவதில் விற்பன்னர்கள்தாமே? அதனால்தான், பாவம் – அவருக்குத் திடீரென்று மக்கள் வரிப்பணம் பற்றி, அது வீணாவது பற்றி நினைவு வந்துவிட்டது. பயப்படாதீர்கள், சரியா? (ஆகவே, இதிலும் ஜெயமோகன் ஒரு விதிவிலக்கல்லர், எல்லாம் நம்மைப்போலத்தான்!)
…இதிலிருந்து அவருக்கு ‘வரி விதிப்பு’ எனும் பொருளாதார அடிப்படை விஷயத்தைக் குறித்த அறிவு மிக அதிகம் என்பது சட்டெனத் தெரிகிறதா இல்லையா? (நமக்கெல்லாம் இல்லாத பொருளாதார அறிவா? ரிஸர்வ் பேங்க் டிமானடைஸைஷன் அறிக்கையைப் படிக்காமலேயே அதிலுள்ள வரிகள் ஒன்றிரண்டை எடுத்துவிட்டு நீட்டி முழுக்குவதும், டிமானடைஸைஷன் பற்றிய பின்புலத்தை அறியாமல் உளறிக்கொட்டுவதும் நமக்குக் கைவந்த கலை அல்லவா? நாமெல்லாரும் ஜெயமோகன்கள் என்பது இதிலிருந்தே தெரியவில்லையா?)
-0-0-0-0-0-
சரி. கண்டிப்பாக அடுத்த பகுதிதான் கடைசி – அதில் 11-17 + முடிவுரை! (போதுண்டாப்பா!)
:-(
September 11, 2018 at 21:57
தமிழகத்தில் உள்ள பராக்கிரமம் மிக்க ஜாதிகளைப் பற்றிப் பேசமாட்டார், ஏனெனில் அது ஹராம். //மிக மிகத் தவறு பசும்பொன் தேவர் ஜெயந்திக்கு சென்றவர் அது குறித்து கடுமையாக விமர்சித்தே எழுதினார். தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதாரின் சாதி வெறியை பற்றி எழுதியதற்கெல்லாம் போலி முற்போக்காளர்களால் கடுமையாக வசைபாடப்பட்டிருக்கிறார்.
September 12, 2018 at 05:35
ஐயா, எனக்கு இதைப் பற்றி நினைவு இருக்கிறது. (ஆனால் முற்போக்குகள் திட்டித் தீர்த்தது தெரியாது).
நான் குறிப்பிட வந்தது – மார்வாரித் தொழில்முனைவோரை ஒட்டுமொத்தமாக ‘ஒரு பெரிய திரளைப் பொதுமைப்படுத்தி’ அவர் மிக அநியாயமாக வசை பாடியதைப் பற்றி. (ஏனெனில் அவர்கள் ஜெயமோகனைப் படித்து மிரண்டுபோகப்போவதோ மிரட்டப்போவதோ இல்லை).
ஆனால் அவர், தேவர்கள் திரள் மொத்ததையும் அப்படிப் படுமோசமாகச் சித்திரிக்கவில்லை. அதுவும் சரிதான் – ஏனெனில் – எந்த ஒரு திரளையும் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது, குற்றம் சாட்டுவது என்பது சரியான வழியல்ல.
ஏறக்குறைய மார்வாரிகளின் தமிழகச் சமங்களான நாட்டுக்கோட்டைச் செட்டியார்களை எடுத்துக்கொள்வோம். பசிதம்பரம் போன்ற கதர்ப்பதர்கள் செய்தததையும், செய்வதையும், செட்டியார் சமூகத்தினர் சிலர் கீழை நாடுகளில் கடந்தகாலங்களில் செய்தவற்றையும் வைத்துக்கொண்டு – ஒட்டுமொத்த செட்டியார் சமூகத்தினரையும் வசை பாடுவது ஒத்துவருமா? அப்படிச் செய்தால் அது அயோக்கியத்தனமல்லவா? அசிங்கமல்லவா? ஆனால் – அப்படித்தானே செய்திருக்கிறார், ஜெயமோகன் – மார்வாரிகளைப் பொறுத்தவரை?
மார்வாடிகளின் பணத்தால் ஒருசுக்குப் பலனும் பெறவில்லை என ஜெயமோகனால் கூறமுடியுமா? (ஏனெனில், தமிழ்த் திரைநரகத்தில் குறிப்பிடத்தக்க அளவு அச்சமூகத்தினர் திரட்டும் அவர்கள் மூலமாக வந்துசேரும் மூலதனமும் இருக்கிறது; இப்படி இருப்பதால் – அவர் ஆழ்மனதிலிருந்து வெறுக்கும் மார்வாடிகளின் தொடர்பே வேண்டாம் என அவர் மிகச் சரியாகவே அறச்சீற்றத்துடன் முடிவெடுத்து தமிழ்த் திரைப்படவுலகத்தை விட்டு வெளியேற முடியுமா?)
சரி.
எந்த ஒரு திரளிலும் – சிலபல அயோக்கியர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்தச் சிலரை வைத்துக்கொண்டு ஜாம்ஜாமென்று பொதுமைப்படுத்தி பிறரையும் சாடுவது – நுண்ணரசியல் எழவுகளுக்கும் இன்னபிற கமுக்கங்களுக்கும் உதவலாம். ஆனால் அது வெட்டிப்போலி அறச்சீற்றத்தோடு நின்றுவிடும்.
மேலும் – அவர் பிராமணர் அல்லாதாரின் ஜாதிவெறியைப் பற்றியும் எழுதியுள்ளார் என நான் அறிவேன். இதனை மலினப்படுத்தி நுண்ணரசியல் எனப் பேசலாம்; அவரவருக்கு அவரவர் அரசியல்தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தங்கள் + மேலும், உயிரிகளுடைய அடிப்படைச் சுபாவமான சுயபாதுகாப்பு + அறச்சீற்றமுதல்வாதத்தை நிலைநாட்டிக்கொள்வதன் அவசியம் + மனச்சாட்சி எழவுகள் +++ பற்றியும் பேசலாம். (இப்போது அல்ல)
வசை பாடப்படுவது என்பது ஒரு தகுதியல்ல. என்னையும் தான் இப்படிப் பாடியிருக்கிறார்கள், பாடுகிறார்கள். இந்த எழவையெல்லாம் ஒரு தகுதி என்று நினைத்தால் – என்னால் சாரு நிவேதிதா எஸ்ராமகிருஷ்ணன்கள் திட்டப்படுவது அவர்களுக்கு ஒரு தகுதியா?
எதையாவது செய்யவில்லை என்றால் ஏன் செய்யவில்லை என்பார்கள். அதேயே செய்துவிட்டால், அய்யய்யோ செய்துவிட்டாயே என்பார்கள் – ஒரே கும்பலே இப்படி இருபக்கங்களிருந்தும் செய்யும்போது நகைச்சுவைக்கு கேரண்டி.
ஆனால் ஐயா, எல்லாம் சாம்பல் நிறம்.
…இப்படியே காலையில் நான் எழுதிக்கொண்டிருந்தால் – பெண்சாதி வெறிவந்து என்னைச் சாடும். பிற பின்.
அன்புடன்.
ரா.
பின்குறிப்பு: அடுத்த பகுதியையும் படிக்கமுடிந்தால் படிக்கவும்.
September 12, 2018 at 13:45
மார்வாடிகள் (சுப.வீ. பிறந்த) நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எல்லாம் பெரும்பாலும் அயோக்கியர்கள் தான். ஒரு சில நல்லவர்களும் உண்டு ஆனால் விதிவிலக்கு.
September 12, 2018 at 15:08
ஹ்ம்ம். நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன். ஒப்புக்கொள்ள அல்ல. :-)
September 12, 2018 at 11:47
சட்டென்று முடித்துவிட்டீர்களே? நாளைவரை காத்திருக்கவேண்டுமே. அருமையான முன்னெடுப்பு. அபாரம்.வாழ்த்துக்கள் ராம்
September 12, 2018 at 13:27
உங்களை எப்படி திட்டுவது என்று தெரியவில்லை இருந்தாலும் இப்போதைக்கு யுவ கிருஷ்ணா என்று கிட்டி வைக்கிறேன்
September 12, 2018 at 15:13
ஏன், ‘ஜெயமோகன்’ என என்னை அன்புடன் அழைக்கக்கூடாதா?
September 12, 2018 at 16:02
Sir
Regarding your last post wanting to have detailing on demerits of the Govt, the problem is a white elephant which you do not want to look into . You seek substantiation despite seeing all that’s there in the open forum , even validated by likes of Mr.Raghuram Rajan and several other disinterested parties .You can’t see the wood for the trees for the obvious reason . Your very asking for explanations makes it vogue (attacking all that’s stating the obvious!). Please be reasonable in your assessment of the situation . We are not for previous raiders of GOI but floating too much positives about the present runners of govt does not befit the logicality of your great mind. Tks.
Ananthakrishnan Pakshirajan
8 hrs ·
This is from one of my friends.
What exactly happened with oil prices in India?
1. For eight years (until 2014) GOI kept oil prices below cost to provide an illusion of stability. GOI gave “oil bonds” to oil companies to cover the shortfall. Oil companies were able to sell these bonds in the market and get the cash to meet their costs. GOI had an oil bond liability of $ 19 b when the new government came to power in 2014.
2. In the last four years, GOI paid $ 5.5 b interest on these bonds (about 1/2% of total expenditure by GOI during this period). The bonds mature for payment in about five years time.
3. In 2015 crude prices fell. The new government maintained oil prices at earlier levels and pocketed the difference into its coffers. GOI’s windfall income from oil in the last four years: $ 140 b. This was used to fund a massive and hidden increase in public expenditure and yet post a reduction in fiscal deficit.
4. In the recent past, crude prices started going up. This would erode the windfall income. GOI would have a sudden drying up of this secret source of income of $ 36 b a year. What can it do? Three choices:
(a) Cut the post 2015 increase in GOI expenditure
(b) Increase oil prices in India
(c) Borrow and increase fiscal deficit
5. GOI is screaming that the earlier administration left a debt burden. The new administration had to keep oil prices at earlier levels and serviced the oil bonds. in truth:
(a) Windfall gain in last four years $ 140 b
(b) Cash used to service debt…… $ 5.5 b
Net impact:
1. The oil bond issue by Congress administration was a wealth shift game moving $ 19 b from tax payer to the poor (through lower oil prices)
2. The pocketing of windfall income from oil prices by BJP administration is a wealth shift game moving $ 135 b from the poor (through higher oil prices) to the politicians (through higher public expenditure).
September 12, 2018 at 16:10
Sir, thanks for the info.
I do not consider Raghuram Rajan, to be an expert on Economics. He specialized only in Finance. And, it is to the misfortune of India that he held a pivotal position in the economic governance.
With due respects to PA Krishnan – the data is somewhat of a taurus excreta as it does not take into account all factors – for example the states’ extortion in terms of taxes.
Those few points are an exercise in extrapolating from a sample size of one.
Anyway, this would be a long prolonged conversation.
What we need is good data, ideas – backed up knowledge and ability to think thru.
Provide me some and we shall act upon them, okay?
__r.
September 14, 2018 at 16:08
அலுவலக வேலை செய்யும்பொழுது கூடவே பத்திரிக்கை, புத்தகம், ப்ளாக் படிக்கிறது, FB, Youtube பார்கிறதை தவர்க்க முடிவதில்லையே. இதெல்லாமும் கம்பெனி காசு/நேரம் தான். 9.30 மணி நேரம் வேலை செய்வேன்னும் கையெழுத்து போட்டுதான் சேர்ந்தாலும் அப்படி இருப்பது கஷ்டமாயிருக்கே. இதற்கு என்ன செய்யணும்?
September 14, 2018 at 17:36
எனக்குப் புரிகிறது.
ஆனால் – என்னைப் பொறுத்தவரை அது முடியும். பொதுவாக நான் காலை 4-30 மணி வாக்கில் வேலை செய்ய ஆரம்பித்து (ஏனெனில் காலையில் நம் மூளை செய்யும் வேலை மூறைமையே அலாதி.), என் வேலையை மதியம் 12 மணிக்கு ஏறக்கட்டிவிடுவேன். பின் சுமார் 1.30 மணி வரை கொஞ்சம் மின்னஞ்சல் வேலை. நடுவில் மூன்றுமுறை கறுப்புக் காஃபி. உணவு = மொத்தம் 20 நிமிடங்கள். வீட்டுக்கு மதியம் 2 மணிக்கு வந்துவிடுவேன். அதற்குப் பிறகு தான் மிச்ச/பிற வேலைகளெல்லாம்.
வெள்ளைக்காரர்களுடன் தொலைபேச வேண்டுமென்றால் காலை. 2 மணிக்குப் பிறகு அலுவலக வேலை செய்யமாட்டேன். என் சொந்தக் கம்பெனியிலும் அப்படித்தான்.
மின்னஞ்சலுக்கு யூடொரா மெய்ல் க்ளையண்ட், அல்லது ஈமேக்ஸ். மற்றபடி இணையத் தொடர்பு – வேலை நேரத்தில் இருக்காது, துண்டித்து விடுவேன். வெட்டி, கவைக்குதவாத மீட்டிங்குகளை (என் மேலாளரே கூப்பிட்டாலும்) தவிர்த்து விடுவேன். தினம் அலுவலக நேரத்தில் சுமார் 1-2 மணி நேரம் தொழில் நுட்ப பரிசோதனைகளில், புத்தகங்களில். (இதெல்லாம் 2004 வாக்கில் முடிவுபெற்றது என நினைக்கிறேன்; அந்த வருடம்போல என் கணிநி தொடர்பான வேலையை விட்டுவிட்டுப் பள்ளியில் வேலை ஆரம்பித்தேன்; வேலையை விடும்போது ஓரளவு உயர்பதவியில் இருந்தேன்)
ஐயா – என்ன சொல்லவருகிறேன் என்றால், முறையாகப் பயிற்சி செய்தால், எல்லாம் முடியும். ஆனால் இதெல்லாம் சொல்லித் தெரியக்கூடிய விஷயமில்லை.
நன்றி.
November 30, 2020 at 13:54
[…] […]