ஜெயமோகன ஆதங்கங்கள், குறிப்புகள் (க்றீச்சிடுதல் (3/n))
September 10, 2018
இவ்வரிசையில், மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கவேண்டிய முதற்பகுதி –ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி? (க்றீச்சிடுதல் (2/n)) 08/09/2018.
கீழ்கண்டவை, சிலபல அன்பர்களின் கடிதப் பகுதிகள்… (அனைத்தும் ஜெயமோகப் பதிவுகள் பற்றியவை – சில தனிப்பட்டமுறை விவரங்கள் தணிக்கை செய்யப்பட்டவை) + என் மேலான கருத்துகள்:
…நான் நமது நாட்டு அரசியலையும் சமூக நிகழ்வுகளையும் அவதானித்து முடிந்த வரை நேர்மையான இந்தியக்குடிமகனாக இருக்க முயல்பவன்.உங்களை போன்ற – எடுத்துகாட்டாக ஜெயமோகன்,பி.ஏ .கிருஷ்ணன்,துக்ளக் குருமூர்த்தி(முன்பு சோ அவர்கள்)சமீபத்தில் முக நூல் அறிமுகம் மூலம் மாரிதாஸ்போன்றவர்கள் -நாட்டின் நலனில் அக்கறையுடையவர்களின் கருத்துப்பதிவுகளை இயன்றவரை படித்து என்னை செம்மை படுத்திக்கொள்பவன்,என்னை சேர்ந்தவர்களிடமும் இது பற்றி அவ்வப்போது எடுத்து கூறுபவன்..
இப்போது என்னுடைய சந்தேகம் என்னவெனில் இயல்பாகவே உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் மூலம்(இந்த விஷயத்தில் மட்டும் பி.ஏ. கிருஷ்ணன் சேர்த்தியில்லை) இந்த மோதி அரசின் மீது நம்பிக்கை வைத்தும்,தனிப்பட்ட முறையில் தேசநலனுக்காக அவர் உண்மையாகவே உழைக்கிறார் என்று இன்றுவரை உண்மையாகவும் உறுதியாகவும் கருதி வருகின்ற எனக்கு இன்று ஜெயமோகன் அவர்கள் தளத்தில் வந்துள்ள இந்த கட்டுரை மோடி அரசு, என் நிலைபாடு நிலைகுலைய வைத்துள்ளது.அந்த அளவிற்கு மோசமானதா இவரின் நிர்வாகம்?. எனக்கும் தெரியும் (உங்களைப் போன்றவர்களை படித்ததனால்)நடைமுறையில் எதுவுமே முழு கருப்பாகவோ அல்லது வெள்ளையாகவோ இருக்க சாத்தியப்படாது என்று.எனவே தங்களிடம் இருந்து இதற்கான விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன் (தங்களின் தளத்தில் வெளியிட்டால் கூட நன்றுதான்)
பி.கு. :- அதிக பிரசங்கித்தனமாக இது சம்பந்தமாக உங்களை சிரமபடுத்தி நான் ஏன் விளக்கம் கேட்கவேண்டும் என்று நீங்கள் கருதினால் என்னை மன்னிக்கவும்.(இது தொடர்பாக எவரும் என்னிடம் எதுவும் கேட்கவேண்டாம் என்று அவர் எழுதிவிட்டதாலும் மேலும் அவரை பல வகையில் ஆசிரியராகவும் கருதுவதால் அவருக்கு இதை எழுதவில்லை.)’
—
…உன் நண்பர் ஜெயமோகன் ஏன் உன்னைப் போலவே உளறுகிறார்? சுந்தரராமசாமி தருமுசிவராம் புதுமைப்பித்தன் மௌனி திஜா குபரா பாரம்பரியங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் இப்போது யாருமேயில்லை என்பது உனக்குத் துக்கத்தைத் தரவில்லையா? [ஆங்கிலம்]
—
…இது தவிர உண்மையிலேயே மோதி அவர்களின் இந்த ஆட்சியில் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையா என்பது பற்றியும்,மோதி அவர்களும் மற்ற அரசியல் வியாதிகள் போல செயல்படுபவர்தானா என்பது பற்றியும்,மேலும் இந்த ஆட்சி வரும் தேர்தலில் அகற்றப்படவேண்டியதுதானா என்பது பற்றியும் சற்று விளக்கமாக பதிவிட்டால் நன்றாக இருக்கும். ஏனென்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு நீங்கள் எழுதிய பல கட்டுரைகளை படித்தும்(குறிப்பாக மதுகேஷ்வர் போன்றவர்களை அறிமுகப்படுத்தியும்) மற்றவரிகளிடம் இது பற்றி விவாதித்தும் இந்த ஆட்சி வரவேண்டும் என மானசீகமாக வேண்டிக்கொண்டும் இருந்தேன்.இப்போதும் இந்த ஆட்சியில் பெரிய குறைகள் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை,இந்த ஆட்சி பல ஆண்டுகாலம் தொடரவேண்டும் என தினமும் ஆண்டவனை வேண்டுகிறேன்.இருந்தாலும் தற்பொழுதுள்ள தமிழகச் சூழல் உங்களுக்கு நன்றாகவே தெரியும் என நினைக்கிறேன்.
எந்தவொரு குறைபாடுகளுக்கும் மோதி மட்டுமே காரணம் என்று வெறி பிடித்து கூச்சலிடுகிறார்கள்,ஊடகங்களைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.அகிலஇந்திய அளவிலும் தினசரி உயரும் பெட்ரோலிய பொருட்களின் விலையை பற்றி ஊதி, ஊதி பெருக்குகிறார்கள் மற்ற பொருள்களின் விலைகள் கட்டுக்குள் இருப்பது பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை.போதாக்குறைக்கு இந்த கருத்துச் சுதந்திர பேய் வேறு எல்லோரையும் (உச்ச நீதிமன்றம் உள்பட)பிடித்து ஆட்டுகிறது.அரசுத்தரப்பிலும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெற்று வரும் பலன்களை பற்றியும் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்து வரும் நடவடிக்கைகளைப்பற்றியும் உருப்படியான எந்தவொரு விளக்கமும் பரவலாக காண கிடைக்கவில்லை.இந்நிலையில் இந்த ஆட்சி தொடர வாய்ப்பில்லையா என்ற கவலையும் ஏற்படுகிறது.இது பற்றியெல்லாம் நீங்கள் விளக்கமாக-ஒரு தொடராக – பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
பரந்த படிப்பறிவு இல்லாமல் மடத்தலைவர் போலச் செயல்படும் வெறும் புனைவு இலக்கியக் காரர்களைக் கொம்புசீவி விட்டது உங்களைப் போன்ற ஆராதிப்பவர்கள் தாம். அவர் உங்கள் கட்டுரைகளைச் சிலாகித்துக் குறிப்பிடுகிறார். நீங்களும் அப்படியே. ஒருவருக்கொருவர் சொறிந்து கொடுக்கும் ஸொஸைட்டி. [ஆங்கிலம்]
…பத்ரி சேஷாத்ரி, ஜடாயு, அரவிந்தன் கண்ணையன், அரவிந்தன் நீலகண்டன், பிஏ கிருஷ்ணன், நீ – நீங்களில்லாவிட்டால் தமிழுலகில் அறிவுஜீவியத்தின் சொற்கள் மேலெழும்புவதைப் பார்க்கமுடியாது. [ஆங்கிலம்]
ஜெயமோகனுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லக்கூடாதா, அவர் நிலை கவலைக்கிடமாக இருக்கிறதே. அளவுக்கு மீறி எழுதவேண்டி அவரை நிலை நிறுத்திக்கொள்ளும்போது – நடக்கும் அசம்பாவிதங்கள் தடுக்கப்படலாமே? செய்வீர்களா? ஏதோ பேர் சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் ஒரேயொரு தமிழ் எழுத்தாளருக்கும் இப்படி கருத்துரிமைவெறி வந்துவிட்டதே! [ஆங்கிலம்]
ஜெயமோகனுடைய எழுத்துகளுக்கு ஒரு நல்ல எடிட்டர் அமைவது என்பது அவருடைய தற்காலத் தேவை. [ஆங்கிலம்]
ஐயாமார்களே, அம்மணியே – என்னால் இவற்றுக்கு விளக்கமான பதிலளிக்க முடியும். ஆனால் ஜெயமோகனுக்காக என மாட்டேன். அது வியர்த்தம்.
ஏனெனில்அவருடைய பார்வைகள் இறுகியவை.
…மேலும் அவருக்குப் பிடிபடாத விஷயங்களே உலகத்தில் இல்லை என்பதை நீங்களும் நானும் அறிவோம் என்பதை அவரும் அறிந்துள்ளார் என்பதை நாம் அனைவரும் மறுபடியும், மறுபடியும் நினைவில் நிறுத்திக்கொள்வதும் முக்கியமான விஷயம் என்பதை நான் எனக்குச் சொல்லிக்கொள்வதையும் அவர் தெரிந்துகொண்டு மோனாலிஸா புன்னகை பூப்பார் என்பதையும் நான் அறியாதவனல்லன். (ஸ்ஸ்ஸ், அப்பாடா!)
+ அவர், ஒரு மதிக்கத்தக்க புனைவு எழுத்தாளர். ஓரினச் சேர்க்கை தன்மை படற்கை செய்வினை எல்லாவற்றையும் பற்றிப் புனைந்துகொண்டே, அறிவுரை தெளிவுரை பொழிப்புரை பழிப்புரை என அள்ளித்தெளித்தவண்ணம் இருப்பார். அது அவர் கர்மா.
இப்புனைவுகளைப் பெரும்பாலும் கேளிக்கை என்ற வகையில் சாத்வீகமாக எடுத்துக்கொண்டு அகன்றுகொண்டே இருக்கவேண்டும். மாறாக, வாசகர்களாகிய நமக்குப் புகைந்தால் நாம் தான் அதனை அரவணைத்து அணைக்கவேண்டும். (=snake huggingly damming wanting, I mean. EsRaa, what will I do without you?)
அதே சமயம், நாமெல்லாரும் ஜெயமோகன்கள் என்கிற பார்வையையும் வளர்த்துக்கொண்டால், அது வயிற்றெரிச்சலுக்கு ஆருயிர் மருந்தாகவும் இருக்கும்.
je suis jeyamohan.
மேலும்.
0. வாழ்க்கை என்பதில் சாம்பல் நிறம் மட்டுமே சாத்தியம். ஆகவே ஜெயமோகன் முழுவதும் மதிக்கத்தக்க மாமனிதரல்லர்; முழுவதும் மிதிக்கத்தக்க அற்பரும் அல்லர். ஆனால், பெரும்பாலும் வறண்ட தமிழ் அலக்கியப் புனைவுச் சூழலில், ஏதோ பேர் சொல்லக்கூடியவராக இருக்கும் சொற்ப மானுடர்களில் அவரும் இருக்கிறார் என்பதை, ஒரு சராசரி வாசகனாகிய நான் ஒப்புக்கொள்கிறேன்.
1. ஜெயமோகன் என் நண்பரல்லர். அவருடன் ஓரிருமுறை சிறிய அளவில் உரையாடி இருக்கிறேன். அவ்வளவுதான். எனக்குப் பட்டவகையில் இனிமையானவராகத்தான் இருந்தார். ஆனால் அதுவேறு விஷயம். (அவருக்கு, என்னைப் பற்றிப் பெரிய அபிப்ராயமில்லை என்பதும் தெரியும், அதுவும் பிரச்சினையில்லை)
2. நானெல்லாம் அவருக்கு அறிவுரை கொடுக்கிற அளவில் அவர் இல்லை. நானும் என்னுடைய வீங்கிய சுயபிம்பத்தைப் போற்றுவனல்லன். எப்படியும் அவருக்கு ‘எடுத்துச் சொல்ல’ என்றெல்லாம் முடியாது. அவரவருக்கு அவரவர் முட்டுச்சந்து.
3. மோதி ஆட்சி இவர்கள் சித்திரிப்பது போல இல்லை. இவர்கள் அறியாமையின் பாற்பட்டும், பரப்புரைகளுக்குப் பலியாகியும், புள்ளிவிவரங்களையும் பின்புலங்களையும் அறியமுடியாமல் செய்துவிடும் சோம்பேறித்தனத்தாலும், ‘நான் இப்படிப் பொங்கவில்லையானால், பிறர் என்னைத் தாராளவாதியாக / மதச்சார்பின்மைக்காரனாக / நட்டநடுநிலைக்காரனாக / அறிவுஜீவியாக / எல்லாம்தெரிந்தஏகாம்பர மேதாவியாக – கருதமாட்டார்களோ‘ எனும் பயத்தாலும், சிலசமயம் அயோக்கிய-அராஜக மனப்பான்மையால் உந்தப்பட்டும் செயல்படுகிறார்கள்.
இவ்வாசாமிகளின் இம்மாதிரிச் செயல்கள், இடக்கையால் புறம்தள்ளப்பட வேண்டியவை. அவ்வளவுதான். (அவர்களையே தள்ளுங்கள் எனச் சொல்லவரவில்லை – ஆனால், அது உங்கள் புஜபலபராக்கிரமத்தைக் குறித்த விஷயம்; தமிழ் அலக்கியக்காரர்களைக் குறைத்து எடை போடாதீர்!)
4. ஜெயமோகன் என்னைப் போலவே உளறுகிறார் என்பது சரியல்ல. (ஆனால் உங்கள் கருத்துக்கு நன்றி)
5. மடத் தலைவர்கள் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
+ஜெயமோகன் எழுத்துகளை முற்றும் புறம்தள்ள மாட்டேன். அதேசமயம் நான் கொம்புசீவிவிடும் அரைகுறையல்லன். என் சிற்றறிவுக்கு ஒரு விஷயம் நல்லது என்று பட்டால், அதைப் பற்றிய என்னுடைய மேலான கருத்துகளைத் தெரிவித்தே தீரவேண்டும் எனப்பட்டால், அவசியம் அதைச் சொல்வேன். இல்லையேல் ‘அப்படி இல்லை’ எனவும் சொல்வேன்.
மேலும் நான் சொல்லித்தான் அவர் கொம்புகள் சீவப்பட்டன என்பது, அவருக்கு இருக்கக்கூடும் பல்லாயிரக்கணக்கான வாசக கொம்புச் சீவக சிந்தாமணி அடிப்பொடிகளின் மாண்புக்கு இழுக்கு எனக் கருதுகிறேன்.
இன்னொரு விஷயத்துக்கு நன்றி: சில மாதங்களாகவே எனக்கு முதுகில் ரணகளம், என்னவோ தெரியவில்லையே என்று பயந்துகொண்டிருந்தேன். இப்போது உங்கள் தயவால், இதற்குக் காரணம் ஜெயமோகனின் சொறிந்துவிடல் எனத் தெரிந்தது. ஆகவே உடனடியாக, அவருக்கு நன்றி நவின்று – தயவுசெய்து சொறிதலை நிறுத்தும்படிக்கும், பதிலுக்கு நானும் இதுபோன்ற பதிவுகளை எழுதி அவருக்குச் சொறிந்துவிடாமல் இருக்கப்போவதாகவும் – ஒரு மின்னஞ்சல் போடப் போகிறேன், மறுபடியும் நன்றி.
6. எனக்குத் துக்கமில்லை. நிச்சயம் நீங்கள் சொல்வதுபோன்ற புபி, குபரா வகை இளைஞர்கள் (பரவலாக எழுதாதவர்கள்) இப்போதும் இருக்கிறார்கள் (பெயர்கள் சட்டென நினைவுக்கு வரவில்லை – அண்மையில் ஒரு பையன், ஒரு அழகான, குறிப்பிடத்தக்க கவிதையை அனுப்பியிருந்தான் – கொஞ்சம் யோசித்ததில் அது ப்ரெய்டென் ப்ரேய்டென்பாக் கவிதை ஒன்றின் அட்டைக் காப்பி எனத் தெரிந்தது) – ஆகவே, மெல்லத் தமிழிலக்கியம் இனிச் சாகும் எனக் கருதவேண்டியதில்லை எனத்தான் நம்ப ஆசை. (ஏனெனில் மிக அழகான கவிதைகள் கதைகள் கட்டுரைகள் இன்னபிற – பிற மொழிகளில் வந்திருக்கின்றன; இலவச இணைய தளங்களும், கூக்ள் மொழிமாற்றியும் உதவிசெய்கின்றன வேறு!)
பார்க்கலாம், நம் வாழ்க்கை எப்படி விரிகிறதென்று…
7. பத்ரியை நான் நன்றாக அறிவேன்; தாங்கொணா சராசரித்தனங்களுக்கிடையே மும்முரமாகச் செயலூக்கத்துடன் இயங்கி வருபவர்; இவர் போன்றவர்களுடைய தேவை நாட்டுக்குத் தேவை என்றாலும், இவர்களுக்கெல்லாம் இம்மாதிரி இருக்க, கொஞ்சம் பித்துதான் பிடித்திருக்கிறது என்பது என் மேலான கருத்து. இலக்கிய எழவுகளில் ஈடுபடுவதை விடுத்து, இவர்களால் காத்திரமாகச் செய்யக்கூடியவை எனப் பலப்பல இருக்கின்றன அல்லவா? பாண்டித்யம் மிக்க ‘ஜடாயு’ என்பவரையும் அறிவேன், அவருடைய கட்டுரைகள் சிலவற்றை வாசித்திருக்கிறேன் – ஒரிருமுறை சுருக்கமாக அளவளாவியிருக்கிறேன் வேறு, பாவம் அவர்.
அரவிந்தன் கண்ணையன் அவர்கள் கட்டுரைகளையும் முடிந்தபோதெல்லாம் படிக்கிறேன். அவருடைய ‘அண்மையில் மதம் மாறியவகை’ அமெரிக்கமோகம் (ஆகவே, மிச்சம்மீதி ஒரமாக இருக்கும் அனைத்தும் கீழ்) என்கிற பார்வையை எடுத்துவிட்டால் (+ தேவையேயற்ற நேருமோகத்தையும் + பாரதத்தைப் பற்றிய மிகக்குறைந்த அளவு புரிதலையும் + அய்ன் ரேன்ட் பக்தி அலக்கியத்தையும் ) அவரும் குறிப்பிடத்தக்க நபரே. எப்படியும் படிக்கப்படவேண்டியவரே.
இவர் ஏதோ புத்தகம் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள் – ஆனால் எனக்குத் தெரிந்தவரை அப்படி ஒன்றும் வெளிவரவில்லை (தேசமாறி அமெரிக்க அன்பர் ஒருவரைக் கேட்டேன் – அவரும் இதுவரை இல்லை எனத்தான் சொல்கிறார்). ஆனால் எந்தப் புற்றில் எந்தப் புற்றகம் ஓளிந்துகொண்டிருக்கிறதோ – பயமாகவும் நடுக்கமாகவும் இருக்கிறது.
அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் ஸ்வராஜ்யா கட்டுரைகளையும் சில முக்கியமான புத்தகங்களையும் படித்திருக்கிறேன். பிரகாசிக்கும் ஆசாமி அவர். இவர்மீது எனக்குப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பிஏ க்ருஷ்ணன் அவர்களின் எழுத்துகளிலும் சிலவற்றை (+புலிநகக் கொன்றை) படித்திருக்கிறேன் – இவர்மீதும் மதிப்பிருக்கிறது; இடதுசாரிப் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்டாக இருந்தாலும், ஆச்சரியப் படத்தக்க வகையில் (நான் படித்தவரை) படிப்பறிவும் வரலாற்றறிவும் சமனமும் மிக்கவர் என்பது என் அபிப்ராயம்.
…எனக்கு அறிமுகம் இருக்கும் வகையில் – இவர்கள் அனைவரும் தாம் தேர்ந்தெடுத்த தளங்களில் முழு தீவிரத்துடன் ஈடுபடுவதாகப் படுகிறது. இன்னும் பலர் இப்படி இருக்கிறார்கள், இருக்கலாம்.
ஆனால், நான் அப்படியல்லன். அவ்வப்போது, அமிழவைக்கும் வாழ்க்கையிலிருந்து முழித்துக்கொண்டு, எத்தையாவது எழுதி மேலதிக விரோதிகளைச் சம்பாதித்துக் கொள்வதில் குறியாக இருப்பவன். அவ்வளவுதான்.
+ நான் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு எழவையும் தமிழில் எழுதவில்லை. ஆக, அவர்களுடன் என்னை நிறுத்துவது, நீங்கள் அவர்களுக்குச் செய்யும் துரோகம் ஆகும். + என்னைக் கிண்டல் செய்வதுபோல ஆகும் – ஆனால் பின்னது பரவாயில்லை. நன்றி. :-)
+ தயவுசெய்து என்னை அறிவுஜீவி எனக் குறிப்பிடாதீர்கள். அதை ஒரு அசிங்கமான சொல்லாக (தற்காலத்தில் அதன் பொருள் குறித்து) உணர்கிறேன். :-(
8. ஜெயமோகனுக்கு எடிட்டர் தேவையா என்பது தெரியவில்லை. ஆனால், கண்டமேனிக்கும் எழுதித் தள்ளாமல், நடக்கும் (அல்லது நடக்காத) ஒவ்வொரு விஷயத்துக்கும் கருத்துதிர்த்தே தீரவேண்டும் எனும் மாளாவியாதிக்கு, ப்ரேக் போட அவருக்கு மனம்வரவேண்டும். இது என் அவா. (ஆனால் வாசக அடிப்பொடி கும்பலியம் என்பதற்கேற்ப ஆடுவது எனும் தொடர் பாரம்பரியம் இதற்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை)
எது எப்படியோ… நான் மத்தியஸ்தம் செய்யும் தொழிலில் இல்லை. இருந்தாலும், ஜெயமோகன் எழுதியுள்ளது படுநகைச்சுவையாக இருக்கிறது என்பதினால் எனக்கும் கொஞ்ச நமைச்சல் இருக்கிறது.
ஆகவே, சில முக்கியமான விஷயங்களைச் சொல்லவேண்டும். (அடுத்த பதிவில்…)
ஆகவே. je suis jeyamohan.
தல தெறிக்க ஓட்றா அல்லது ஓடுங்கடீ…
நன்றி.
September 10, 2018 at 11:07
Great Sir for the reposte and whether or not you like it, you are much ahead of writers mentioned in your message as you are simply effortless in conveying the core of your discussion to some of naive readers.We love that fact of your being spot-on.
Nonetheless, ironically, your detailing on why you deemed demonetization as less damaging (1 USD = INR 72.44 as of now) and from where thisextra-ordinary confidence of this Govt ( you already conveyed that you do not belong to the party)stemmed from not seen anywhere.
Your effortless rejoinder on same will be appreciated.
Jmo’s relentless pursuit in finding his true self (through his writings and travels) cannot be brushed aside and he has his guts to say what he can where others fear to tread .
Regards
September 10, 2018 at 15:03
Hi Sir,
you wrote about the below sometimes ago. Is there any connection between this to indian money value drop and oil price hike now?
https://www.sundayguardianlive.com/news/12638-cabal-plans-october-meltdown-share-prices-rout-bjp
September 10, 2018 at 16:18
Please read – this is no conspiracy theory… http://www.sunday-guardian.com/investigation/inside-information-behind-the-collapse-of-rupee
September 10, 2018 at 15:06
Hi Sir
do you remember below which you mentioned sometimes ago?
any connection between this and INR drop and petrol price increase?
September 10, 2018 at 17:13
இலக்கியத்தில் இரு வகையினர் உள்ளனர்.[எல்லாத்துறையினரையும் போலவே]ஒன்று ,தெய்வத்தால் ஆகும் ‘வித்தையை’ஜென்ம புண்ணியமாய் பெற்றவர்கள் ,அவர்களுக்கு தெய்வங்களே தொண்டு இயற்றும் சொகுசாளிகள்.அடுத்து ,மெய் வருத்த கூலி வாங்கும் தொழிலாளர்கள்.இவர்கள் சொற்களை கூட்டிக்கொடுக்கும் தொழிலாளர்கள்,அதற்கு மேல் எந்த மரியாதைக்கும் தகுதியில்லாத தற்குறிகள்
September 10, 2018 at 22:29
சொற்களை கூட்டிக்கொடுக்கும் தொழிலாளர்கள்,அதற்கு மேல் எந்த மரியாதைக்கும் தகுதியில்லாத தற்குறிகள் – அருமை.. அருமை , நீங்கள் நினைப்பது போல எழுதினால் புண்ணியம் பெற்றவர்கள் , இல்லையேல் சொற்களை கூட்டிக்கொடுக்கும் தொழிலாளர்கள்.
September 11, 2018 at 15:04
எவ்வளவோ செலவழித்து ,அவ்வப்போது குளுகுளு பிரதேசங்களுக்கு கூட்டிப்போய் ,மந்தரித்தலும்,தன் சீடக்குஞ்சுகள்,அவை கும்பிடும் கோணங்களை வைத்தே ,ஒழுங்காய் குலைந்து போய்யுள்ளனவா?என்ற சந்தேகம் அவ்வப்போது ஆசான் அரிசிக்கஞ்சிக்கு வருவதுண்டு!அவை அச்சமயங்களில் ,அஸ்தினாபுர அகில்,சந்தன புகை சலித்து போய் ‘சகிலா படத்தின் அடுத்த காட்சி எப்போது?’ என்று தத்துவ விசாரணையில் முழ்கியுள்ளதை ,தன் ஞான திருஷ்டியால் கண்டு இது போல,”ஆல் இன் ஆல் அழகுராஜா ,அத்தனைக்கும் கட்டுரை எழுத்து ராசா”என்ற போதனையில் கள்ள சாராயம் காச்சியுற்றி,கிளுகிளுப்பூட்டுவதுண்டு!
இது பொக்கைகளின்,போலிகளின் பொற்காலமல்லவா?
September 11, 2018 at 15:37
ஐயா சேலத்து மாம்பழம், தித்திக்கும் மாம்பழம்,
உங்களுக்கு வெண்முரசைக் கிண்டல் செய்ய உரிமை உண்டு.
ஆனால், பொதுவாகவே இந்த விஷ்ணுபுரம் ஊட்டி இலக்கிய முகாம் பொறுத்த வரையில் – அங்கு குடி, கூத்து, கும்மாளம் போன்றவை நடப்பதில்லை என்பதை அறிவேன். இந்த விஷயங்களில், மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் நடத்தப்படும் விஷயமது.
ஆகவே தாங்கள் சாராயம் இன்னபிற பற்றிக் கூறுவது சரியல்ல – அதையும் தாங்கள் கிண்டலாகக் குறிக்கவில்லை என்றால். அல்லது, தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்ளமுடியவில்லை.
ரா.
September 11, 2018 at 16:09
it is an attempted satire,all in lighter veins :disclaimer:nothing serious.
September 11, 2018 at 16:10
Sir, it is fine. Absolutely fine. I just wanted to make your/my position clear.
Thanks!
__r.
September 10, 2018 at 22:24
அன்புள்ள ராம்,
நீங்கள் கடந்த நான்கரை வருடங்களில் மோதி அவர்கள் சாதித்தது என்ன என்று எழுதினால் நன்றாக இருக்கும்.
கடந்த முறையும் ஜெயமோகன் இதே போல ஒரு கட்டுரை எழுதி – அதற்கு உங்கள் கட்டுரை தொடர் ஒன்று வந்தது :)
அதற்கு பதில் , உண்மையில் இந்த அரசு சாதித்தது என்ன என்று தாங்கள் எழுதலாம்.
September 11, 2018 at 04:05
அன்புள்ள மேகவிராஜ், அனாமதேயம்,
உங்கள் கருத்துகளுக்கு நன்றி.
1. ஜெயமோகன் செய்தது, படுமோசமான அவதூறு. ஒரு பின்புல விஷயத்தையும் தெரிந்துகொள்ளாமல், மாளா உதாசீனத்துடன் ஆனால் வீறிட்டெழும் அறச்சீற்றத்துடன் அடித்துவிடப்பட்டது அவர் கட்டுரை. யுவகிருஷ்ணா தரம். (இன்னும் அவர் எழுதும் பலப்பல விஷயங்களை அப்படிச் சொல்லலாம்)
சொல்லப்போனால் – அம்மாதிரிப் பப்பரப்பா கட்டுரைகள் உதாசீனம் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஆனால் என் சிலபல நண்பர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி தாஸ்தீ – என்ன செய்வது சொல்லுங்கள். அவர்கள் சுட்டியதால் அக்கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. :-(
2. ஆனால் – அவரைப் போலல்லாமல், இந்த விவகாரங்களைக் குறித்து நீங்கள் காத்திரமாக எழுதமுடியுமானால் – மேலும் மோதி என்னவிஷயங்களிலெல்லாம் சொதப்பினார் (அல்லது அயோக்கியத்தனம் செய்தார்) என விலாவாரியாக, ஒப்புக்கொள்ளக்கூடிய ஆதாரங்களுடன் எழுதமுடியுமானால் (எனக்கும் சில விஷயங்களில் ஆதங்கங்கள் இருக்கின்றன) – அவற்றுக்கு எதிர்வினையாக (ஆதரித்தோ, எதிர்த்தோ) நான் சர்வ நிச்சயமாக எழுதுவேன். (நான் என்ன பெரிய்ய மசுரா என்பது வேறுவிஷயம்)
3. செய்வீர்களா?
நன்றி.
__ரா.
September 11, 2018 at 04:09
Again.
My point is that – Sri Jeyamohan is mostly nothing special. He is JUST like the rest of us.
And he has a great sense of humour, honest!
But the issue is that, many readers (such as yours truly) lack the cognition to differentiate between his ‘serious’ stuff and the absurd in him.
What to do.
__r.
September 11, 2018 at 04:13
Again+.
All of us, including our dear Jeyamohan – perhaps have a right to be heard, read and all that, and even celebrated – by normal/average folks like us.
But honestly, nobody, including my dear Jeyamohan – has a right to be taken seriously.
They have to EARN the second right, sorry.
__r.