மனுஷ்யபுத்திரன்: “கருத்துச் சுதந்திரத்திற்கு வரையரை[sic] வேண்டும்”
August 27, 2018
ஜனவரி2015 சார்லி ஹெப்டோ படுகொலைகளுக்குப் பின் மேதகு மனுஷ்யபுத்திரன், பிபிஸி அரைகுறைகள் வழியாக — உலகத்தை உய்விப்பதற்காகவும் மதச்சார்பின்மைக்காகவும் இன்னபிற புல்லரிப்புகளுக்காகவும், கருத்துரிமை கண்ணாயிரத்தனமாக அளித்த இரட்டைவேட அருள்வாக்கு…
https://www.bbc.com/tamil/multimedia/2015/01/150108_manushyaputhrian
(முடிந்தால், ஆடியோவையும் கேட்கவும். மேன்மேலும் அமர்க்களமாக இருக்கிறது!)
குறிப்பு: இந்த மனுஷ்யபுத்திரரைப் பற்றியோ (இந்த ஆசாமி, முன்பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிய கனடா அம்மணி ஒருவரை நான் நேரடியாக அறிவேன்; ஒருதடவை எழுதியுமிருக்கிறேன்), அவருடைய கவிதைகளின்மீதோ எனக்குத் துளிக்கூட மரியாதையில்லை (இதையும் பலமுறை ஆதாரத்துடன் எழுதியிருக்கிறேன்).
எல்லாம், என் கருத்துரிமை எழவுதான்!
என்ன செய்வது, சொல்லுங்கள்.
:-(
August 28, 2018 at 14:30
மபு போன்ற ஆசாமிகள் கருத்து சுதந்திரம் என்ற கொள்கையை வேடிக்கையாகவும் பம்மாத்தாகவும் ஆக்கி விட்டனர்.