37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா!

April 5, 2017

…நமது இந்தியாவில், 2017 ம் ஆண்டிற்கான சிறந்த செயல்திறம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் + கல்லூரிகளின்  பட்டியலை (2017 ranking of institutions based on performance) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் 3ஏப்ரல், 2017  வெளியிட்டுள்ளது. சரி.

இந்தப் பட்டியலில் ‘சிறந்த’ என இருந்தேயாகவேண்டிய சில நேர்மையான கல்விசாலைகள் இருந்தாலும் – பலப்பல கல்வி நிறுவனங்கள் டம்மிபீஸ்கள். மேலும், பட்டியலில் இருந்தேயாகவேண்டிய பல கல்லூரிகள் இந்த ஆட்டத்துக்கு வரவேயில்லை.

ஆக – உண்மையில் எனக்கு இது ஆச்சரியமாகவே இல்லை!

ஏனெனில் — இந்த செயல்பாடு/செயல்திறம் (‘performance’) என்பது பல வகைகளில் பல கயமைநிதிக் கல்லூரிகளால் துப்புரவாகக் காயடிக்கப்பட்டுவிட்டது.

ஏனெனில் — இது தொடர்பான பலப்பல பின்புல விஷயங்களை அறிவேன். இதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப் பட்டபோதே, சிலபல தமிழகக் கல்லூரிகளில் நடந்த அயோக்கியத்தனங்களைப் பற்றி அறிவேன் எப்படியாவது இப்படியாப்பட்ட பட்டியலில் நுழைந்து விடவேண்டும் என அலைந்ததை அறிவேன். இந்தப் பட்டியலை எப்படி நாம் ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதையும் அறிவேன்! (அவற்றுக்குப் பின்னொரு சமயம் வருகிறேன் – மிக விரிவாக, ஆகவே உங்களுக்கு இது ஒரு முன்னெச்சரிக்கை!)

ஏனெனில் — இந்த 37 கல்லூரிகளில் – 23ன் கல்லூரி மாணவர்களுடனும், 9ன் கல்லூரி ஆசிரியர்களுடனும் ஓரளவுக்கு  (=நேர்காணல்கோணல்கள்) உரையாடி மண்டையில் அடித்துக்கொண்டுள்ளேன்.

-0-0–0-0-

ஆனால் – மத்திய அரசின் அமைச்சகம் இதற்கு மெனக்கெட்டாலும், அதன் நல்லெண்ணங்களை நான் கேள்விகேட்கமாட்டேன் என்றாலும் இம்மாதிரிப் பட்டியல்களில் பலப்பல சிடுக்கல் பிரச்சினைகள் இருக்கின்றன.  ஏனெனில், இந்தப் பட்டியல்,  கல்வி நிறுவனங்கள் அளித்த விவரங்களைக் கோர்த்து வடிக்கப்பட்டது; பலப்பல தரமான கல்விசாலைகள் இதில் கலந்துகொள்ளவேயில்லை.

ஆனால் இந்த வடிகட்டலில் அமைச்சகம் சார்ந்த ஊழலில்லை — இப்பட்டியல் ஒரு ‘மெஷின் தயாரித்த’ ஒன்று; அதற்கு எப்படி என்ன எண்களைக் கொடுத்தால் (அவை உண்மையோ பொய்யோ) என்ன எதிர்பார்ப்பு அருள்பாலிக்கப்படும் என்ன பிச்சை கிடைக்கும் என்றெல்லாம் சரிக்கட்டுவதில் நம் அரசியல்வாதத் தமிழர்கள் வல்லவர்கள். எந்தப் பிசாசுக்கு எப்படி வேப்பிலை அடிக்கவேண்டும் என்பதை அறிவான் திராவிடக் கல்வித்தந்தை! பாம்பின் கால் பாம்பறியும்.

எந்த ஜாதிக்கு எவ்வளவு படையல் வைத்தால் வாயை மூடிக்கொண்டு ஓட்டு போடுவான் என்பதை அறிவியல் பூர்வமாக அறிவான் நம் தமிழன். #டமிளண்டா!

-0-0-0-0-

ஆனால், இது தொடர்பாக நேற்று ஒரு துணுக்குற்ற இளைஞர் அனுப்பிய கீச்சலினை உங்களுடன் பகீர்ந்துகொள்வதில் இறும்பூதடைகிறேன்,

திராவிடத்துக்கும் கல்விக்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்குப் புரியவில்லை. ஓருவேளை இந்தக் குளுவானார் அதனைக் கலவி எனப் புரிந்துகொண்டுவிட்டாரோ?

மேலும் சென்னை ஐஐடி போன்றவைகளுக்கும் திராவிடக் கலாச்சாரத்துக்கும்(!) என்ன தொடர்பு இருக்கமுடியும் என்பதும் புரியவில்லை.

ஆனால், மேற்கண்ட கீச்சலைப் படித்தபின் எனக்குப் புளகாங்கிதம் அதிகமாகி – நேற்றிரவு எனக்குப் படுக்கையில் படுத்தால் ஒர்ரே மஹாபாரத அனுஷாஸன பர்வ பீஷ்மர் போன்றதொரு உணர்ச்சி.

அவர் அம்புப் படுக்கையில் படுத்தார். என் உடலிலுள்ள மசுர்கள் எல்லாம் கூச்செறிந்துகொண்டு

மானாவாரியாக மணிக்கணக்கில்நின்றதால் நான் சுய மசுர்ப் படுக்கை, அவ்ளோதாம்பா!

என் கேள்வி என்னவென்றால் – நம் தமிழகக் கல்வித்தந்தை மாமாக்கள் சார்ந்த கல்லூரிகள் எல்லாவற்றையும் ‘ஆவன செய்து’ சேர்த்தால் அந்த டாப்100 கல்லூரிப் பட்டியலில் வேறெந்த மாநிலத்துக்கும் இடமேயில்லாமல் போயிருக்குமே!

#டமிளண்டா!

ஹ்ம்ம்ம்… பார்க்கலாம், அடுத்தமுறை…

6 Responses to “37/100 மட்டும்தானாடா? வோத்தாடாய், எவ்ளோ வொளச்சிர்க்கோம் – மிச்சம் கீர 63ஐயும் எங்க்ளுக்கே கொடுங்கடா!”

  1. Deeban Says:

    Ofcourse Ofcourse .. IT clearly proves the Dravidian Cognition theory. Studying in TN Engineering Colleges is inversely proportional to intelligence..

  2. ravi Says:

    39 likes for that tweet.. oh my god..BTW the keezhadi issue. Sruthisagar is another one nakkilite comrade from the stables of N.Ram. He also writes for another ragsheet Troll ..oops Scroll.in

  3. Aathma Says:

    I dont know what to say…my mind preoccupied with poor Tamil farmers striving in Delhi for their lives…


  4. tht fellow – Saravanan A seems to be a DMK spokesperson. I saw him on some TV debates.. So no wonder such intelligent tweets comes from him :)


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s