போங்கடா/போங்கடீ அரெகொறெங்களா, நீங்களும் ஒங்களோட ந்யூட்ரினோ எதிர்ப்பும்…
March 2, 2015
… வரவர, ஜன்னியில் உளறிக் கொண்டேயிருக்கிறார்கள், இந்த மேதா பட்கர் அம்மணியும், மதிமுக ‘வைகோ’ கோபால்சாமியும். கோபத்தில் எனக்கே ஜுரம் வந்துவிட்டது போலிருக்கிறது.
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும், எத்தை எதிர்த்தால் ஊடக மாமாக்கள் ஓடி வந்து ‘கவர்’ செய்வார்கள் என்பதையெல்லாம் யோசித்து, ‘செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது’ என்கிற எழவையெல்லாம் – இந்த பொழுதன்னிக்கும் பப்பரப்பா யுகத்தில், நம்மால் மண்டையில் அடித்துக்கொண்டு புரிந்துகொள்ள முடியும்தான்… இருந்தாலும், பீலா விடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? :-(
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் சுமார் 20-25 வருடம் முன்புவரை கூட, இந்த மேதா விலாச அம்மணியின்மீது ஓரளவுக்கு மதிப்பு வைத்திருந்தேன், ஒரிருமுறை உரையாடியும் இருக்கிறேன், பாவம் – அவர், நம் அனைவராலும் மதிக்கப்படவேண்டிய ஆளுமையான பாபா ஆம்டே அவர்களுடன் சேர்ந்து இயங்கிய காலகட்டம் அது.
ஆனால், அவருடைய தொடர்ந்த சரிவும், ஒரு எழவையும் புரிந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் குருட்டாம்போக்கான தொழில்நுட்ப எதிர்ப்பு என நம்மூர் ‘பரீக்ஷா’ ஞாநி அவர்கள் போன்ற செயல்பாடுகளும் சலிப்பை உருவாக்குகின்றன. இம்மாதிரி வதந்திமுதல்வாத வெறுப்புவாத/எதிர்மறை நபர்கள் பின்னால் அணிதிரள இன்னமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது, முட்டாள்தனத்தின் ஸாஸ்வத நிலையின் மீதான என்னுடைய ஆழ்ந்த, அடிவயிற்றைப் பிசையும் நம்பிக்கையை மீண்டும் உறுதி படுத்துகிறது.
கூடவே, இந்த எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள், அவருக்கும் சுத்தமாகப் புரியாத இந்த ந்யூட்ரினோ பற்றி, வழக்கம்போல என்னவெல்லாம் சொல்லப் போகிறாரோ, அட்ச்சுவுடப் போகிறாரோ என்பதை நினைத்தால், கதி கலங்குகிறது…
… நம் புலிவால் பிடித்த வைகோ நாயர் கதை வேறு. தமிழகத்தின் வெறுக்கத்தக்க உதிரி கலாச்சாரத்தின் பிரதிநிதிகளான ‘திராவிட’ அரசியல்வாதிகளில், ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளவேண்டிய அளவில் இருக்கும் வசீகரத் தலைவராக அவர் ஒருவர் மட்டுமே இருந்தாலும் – வரவர, இவர் தன்னால் கடுகு அளவு கூடப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களில் அவரது மூக்கையும் ஆட்காட்டி விரலையும் அதிஆவேசமாக ஆட்டியாட்டி நுழைத்த படி இருக்கிறார். கூட பக்கவாத்தியமாக, இந்த ஆட்காட்டி விரலாட்டி அம்மையார் வேறு!

… ஆனால், ஏதாவது கிண்டல் செய்தால், அவர் பிரச்சார மேடைகளிலேயே ஓவென்று உரக்க கைகால்களை உதைத்தபடி, அவருடைய வழக்கம்போல உணர்ச்சி வசப்பட்டு, குலுங்கிக்குலுங்கி, விசும்பிவிசும்பி அழ ஆரம்பித்துவிடுவாரோ என்றும் பயமாக இருக்கிறது.
… இலவச இணைப்பாக, இஷ்டத்துக்கு, துளிக்கூட வாய் கூசாமல் பொய்களைச் சொல்கிறார் – கருணாநிதி அவர்களுடன் நெடு நாள் பழக்கமிருந்ததால், வந்திருக்கும் தொற்றுவியாதியோ இது? (இந்த எழவெடுத்த கொலைகாரத் தறுதலைப்புலிப் பிரபாகரனை – ஸ்ரீலங்கா அரசு ஒழித்துக் கட்டிவிட்டதால், நம் தமிழகத்துக்கு எவ்வளவு பிரச்சினை பாருங்கள்! ஏதோதானுண்டு, தான் பிடித்த புலிவால் உண்டு என்றிருந்த வைகோ, தன் கடையை விஸ்தரிக்கவேண்டி வந்து, ந்யூட்ரினோ கீட்ரினோ என்றெல்லாம் பேசவைத்துவிட்டார்கள், பாவிகள்!)
… எது எப்படியோ…
பிரபஞ்சத்தின், நம் மகாமகோ பேரண்டப் பெருவெளியின் கட்டைமைப்பின், ஒரு அடிப்படைத் துகளுக்கு எதிராகவே ஒரு பிரமிக்கவைக்கும் போராட்டத்தை (‘Movement Against Neutrino!‘) ஆரம்பித்து நடத்தும் கோமாளிப்போராளித்தனம் என்பது – அதி நவீன பகுத்தறிவுப் பகலவ பின்நவீனத்துவ அறிவியல் மகாமகோ பின்புலம் கொண்ட – ஒரு அசல் அக்மார்க் நயம் திராவிடப் போராளிக்கு மட்டுமே சாத்தியப் படும் என்பதும், மரமண்டைப் புல்லரிப்புத் தமிழனாகிய எனக்குப் புரிகிறது.
இருந்தாலும்… (இவர்களுடைய கடைந்தெடுத்த கயமைப் பீலாக்களைப் பின்னர் பார்க்கலாம்!)
- மேதகு வைகோ அவர்களின் — அதிநவீன உயிரியல், நோய்த்தடுப்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு எதிரான கிளர்ச்சியைப் பற்றிய பதிவு. (ஆம். விடாது சிவப்பு-கறுப்பு-சிவப்பு!) 08/11/2013
- | அசோகமித்திரனை வாசித்தல் | ஷிவ் விஸ்வனாதனின் கட்டுரை மொழிபெயர்ப்பு | பிந்த்ரான்வாலே | வினவு: கஜினியும் கலிலியோவும் | பாரதிதம்பி: ந்யூட்ரினோ! | 06/06/2014
March 3, 2015 at 07:37
//எதற்கெடுத்தாலும் குருட்டாம்போக்கான தொழில்நுட்ப எதிர்ப்பு என நம்மூர் ‘பரீக்ஷா’ ஞாநி அவர்கள் போன்ற செயல்பாடுகளும் // என்று நீங்கள் எழுதியிருப்பதுதான் குருட்டாம்போக்கான விமர்சனம். எந்தெந்த தொழில்நுட்பங்களை நான் எதிர்த்தேன் என்று பட்டியலிடமுடியுமா? அணு உலை எதிர்ப்பு தவிர வேறு எந்த தொழில்நுட்ப எதிர்ப்பிலும் நான் ஈடுபட்டதும் இல்லை. குரல் எழுப்பியதும் இல்லை.
March 3, 2015 at 08:17
அய்யா ஞாநி, ஒப்புக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்து, நான் படித்த அளவில், நீங்கள் அணுசக்தி தவிர தொழில் நுட்பம் பற்றி வேறெதுவும் எதிர்மறை விமர்சனம் வைக்கவில்லை. நானும் குருட்டாம்போக்கான எதிர்ப்போராளிதான்.
நீங்கள் ‘தீம்தரிகிட’-வில், பலப்பல வருடங்கள்முன் மாய்ந்துமாய்ந்து எழுதிய கல்பாக்கக் கற்பனை பயங்கரங்களின் கோர நினைவுகள் என்னை இன்னமும் வியர்வைசொட்டச் சொட்ட நள்ளிரவில் எழ வைக்கின்றன. ஒரு கோபத்தில் எழுதிவிட்டேன்.
அய்யா – தங்கள் நேர்மையை நான் என்றுமே சந்தேகிக்கவில்லை. தங்கள் தைரியத்தையும் குறைத்து மதிப்பிடவில்லை. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு நடுவில், மரமண்டைத் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்ப தங்களால் எடுக்கப்படும் முனைவுகளோடு ஒத்துப் போகிறேன்.
நான் எழுதிக் கிழிப்பதைப் படிக்கும் சொற்ப 50 பேர்களில் நீங்களும் ஒருவர் என்பது எனக்கு ஆச்சரியம் தருகிறது. தமிழின் நிலை அவ்வளவு மோசமாகவா இருக்கிறது?
பின்குறிப்பு: தங்களுடைய அணுவுலை எதிர்ப்பு என்பது இறந்தகாலத்தில் நடந்தது – ஆகவே இனிமேல் இல்லை போன்ற தொனி எனக்கு உவப்பாக இருக்கிறது. நன்றி.
March 5, 2015 at 16:39
😄 adhae aachariyam dhan enakum.
March 3, 2015 at 09:40
நியூட்ரினோவைக் காட்டி நம்மை பயமுறுத்துபவர்கள் தமிழக மக்கள் அனைவரையும் முட்டாள் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதை அம்பலப்படுத்தத் தாங்கள் முன் வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்
March 3, 2015 at 14:46
வர வர தமிழ் நாட்டின் “DON QUIXOTE ” ஆகி வருகிறார் ‘புலி வால் நாயர்’ வைகோ அவர்கள்!
March 3, 2015 at 18:03
வைகோ – மேதா இருவரையும் இணைக்கும் பொதுப்புள்ளி ஒன்றுதான்….. இந்தியாவுக்கு எந்த நல்லது நடந்தாலும் அதை எதிர்ப்பது…..
March 5, 2015 at 10:42
பாத்து சார்,
கருத்தே சொல்லாத எஸ் ரா வை இழுத்தது போல் அணு உலைகளை பற்றி அதிகம் அறிந்த (கூடங்கிளத்திற்கே சென்று போராடிய) ஜெயமோகனை தப்பிதத்தவறி குறிப்பிட்டுவிட்டு குருமஹா சந்நிதானத்தின் கோபத்திற்கு உள்ளாகாதீர்கள்