(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

51-70 காரணங்கள்

… … ஏனெனில்:

71, மோதி ஒரு ஆரிய வெறியர். ஏனெனில் அவர் தமிழர் அல்லர். ஊக்க போனஸாக, அவர் திராவிடர்  அல்லர் வேறு.

ஆகவே, அவர் பகுத்தறிவு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக் கூடியவர். ஏனெனில்:

  • செத்த திராவிடத் தலைவர்களின் கல்லறைகளுக்கு பகுத்தறிவு சார் மூடத் தனத்துடன் மாலை போடுவதையோ,
  • கஷ்டப் பட்டு படிக்கட்டுகள் பல ஏறி, திருப்பதீ வேங்கடேசா கோயிந்தா கோஓஓஓயிந்தா எனச் சொல்லாமல் சொல்லி, புறாக்களும் காக்கைகளும் சந்தோஷமாகப் பகுத்தறிவில்லாமல் எச்சமிடும் கருஞ் சிலைகளைக் கண்டடைந்து, மூச்சிரைக்க,  பகுத்தறிவுப் பயபக்தியுடன், அந்தக் கற்களின் மேல் வெகு பவ்வியமாக மலர் தூவுவதையோ,
  • அல்லது சட்டமிடப் பட்ட வெறும் காகிதப் படங்கள் முன் சுயமரியாதை – பகுத்தறிவுப் பகலவம் இன்னபிற நிமித்தம்,  கைகூப்பி, கண்ணீர் மல்கி நிற்பதையோ, பின்னர் கண்களைத் துடைத்துக் கொண்டு தன் குண்டியைப் படம் பக்கம் திருப்பி, டீவீகாரர்களுக்கு சரியான கோணத்தில் தன் பகுத்தறிவுப் பேராசான்களின் பரிசுத்த ஆவியினால் தாம் ஆசிர்வதிக்கப்படுவதைக் காண்பிப்பதையோ…

— செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கவெல்லாம் — பயிற்சி கியிற்சி என்று ஒரு இழவும்  இல்லாதவர் இந்த ஆரியக் கொழுப்பு மோதி. Read the rest of this entry »

(அல்லது)   ஏன், நான் ஒரு தாங்கவொண்ணா வெறுப்புணர்ச்சியுடன் மட்டுமே,  இவரை அணுகுகிறேன்?

ஒரு சுய பரிசோதனை…

1- 21 காரணங்கள்

22-50 காரணங்கள்

… … ஏனெனில்:

51. மோதி, இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி. பாருங்கள், குஜராத் பிரச்சினைகள் அனைத்தையும் சரி செய்து விட்டாரா என்ன? பின்னர், அதைக்கூட முடிக்காமல் இந்திய அளவில் என்ன செய்ய வர வேண்டும்? அப்படி வெளியே வந்து இந்தியாவைக் கொஞ்சம் ஆண்டு விட்டு, இந்தியப் பிரச்சினகள் அனைத்தையும் தீர்க்காமல், ஐநா சபை கை நாசபையென்று என்று போகாவிட்டாலும் – சொல்ல முடியாது, விசா கொடுத்தால், அமெரிக்கா சென்று அங்கிருந்து திரும்பாமல் அங்கேயே தங்கி, ஆகாத்தியம் செய்து ஒரு சில ஆண்டுகளில், அமெரிக்காவின் ஜனாதிபதியாகக் கூட ஆகி விடுவார் இந்த மனிதர்… ஆக, நம் இந்தியாவுக்கு ஒன்றும் செய்ய முடியாத இவர் – இந்தியா எனும் கருத்தாக்கத்துக்கே எதிரி – புரிந்ததா ??

சும்மா குஜராத்தில் குறு நில மன்னராக இருக்காமல், என்ன திடீரென்று தினவு – இந்தியாவைக் கட்டியாள வேண்டுமென்று? குண்டு குஜராத் சட்டியில் ஒட்டகம் ஓட்டிக் கொண்டிருக்காமல், ஏதோ பித்துப் பிடித்து — அவர் சும்மனாச்சிக்கும் உத்தராகண்ட்வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது போல பாவ்லா காட்டி, நிவாரணம் கொடுக்கிறேன் பேர்வழியென்று அற்பக் கோடிகள் கொடுத்து – அந்த மாநிலத்தை அவமானம்  எல்லாம் வேறு செய்திருக்கிறார். இவர், உத்தராகண்ட் மாநிலத்துக்கு எதிரி நம்பர் 1.

52, மோதி, மலைவாழ் ஜனங்களுக்கு எதிரி – பாருங்கள் – அவர் மாநிலத்தில் பொதுவாக மலைகளே இல்லை – இப்போது குஜராத் வரைபடத்தைப் பார்த்துவிட்டுத்தான் சொல்கிறேன். இப்படி மலைகளையே ஒழித்து, அதன்மூலம் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்த இந்த மனிதரை நான் எப்படி உயர்த்திப் பிடிக்கமுடியும்? Read the rest of this entry »

பாகம் ஒன்று: ‘இவன் நானில்லை’

இரண்டாம் ராமசாமி எழுதுகிறார்: ஜாதி என்பது என்ன, சமூகத் தட்டுவாரிக் கட்டமைப்பு என்பது எப்படிப்பட்ட ஒரு சமூகக்கருவி என்றெல்லாம் புரிந்து கொண்டுதான் பேசுகிறோமா? அதில் ஒரு விஷயம் கூட உதவிகரமாக இல்லையா? காலங்காலமாக மனிதக் கூட்டங்கள், தங்கள் ஒருங்கிணைப்புத் தேவைகளுக்காகவும், சுய சார்புக்காகவும், சுயங்களைப் பண்பாட்டுப் பின்னணிகளில் பொருத்தி முன்னெடுத்துச் செல்வதற்குமான கருவிகள் இல்லையா அவை? உயிர்களின் பரிணாம வளர்ச்சியில், முக்கியமாக, மானுடப் பரிணாமத்தில் தட்டுவாரிக் கட்டமைப்புக்கள் அளிக்கும் சமூகவியல் பங்களிப்புகள் எப்படியானவை?

ஜாதி அபிமானம் என்றால் என்ன? ஜாதி வெறி என்றால் என்ன? ‘ஜாதி ஒழிப்பு’ என்பது சாத்தியமா? மேலும் முக்கியமாக, அது தேவையா? ஜாதிக்கு மாற்றாக  எதனை முன்வைக்கிறோம்? திராவிட(!) இயக்கக்(!!) கருத்தாங்களையா(!!!)? கொம்மிஸார்களையா? மதகுரு-முல்லாக்களின் கட்டமைப்பையா? அல்லது நம்முடைய செல்லமான புறநானூற்று வஞ்சித்திணைகளுக்குள் புகுந்துகொண்டு ரத்தத்தில் நீந்தப் போகிறோமா? அல்லது வேறொரு கிரகத்திலிருந்து வேறு எதையாவது இறக்குமதி செய்யப் போகிறோமா?

இது எனக்கு மிகவும் பிடித்த மேட் டிஃப்ஃபீ அவர்களின் கேலிச் சித்திரம் - நியூயார்க்கர் பத்திரிக்கையில் வந்தது

இது எனக்கு மிகவும் பிடித்த மேட் டிஃப்ஃபீ அவர்களின் கேலிச் சித்திரம் – ஃபெப்ரவர் 2, 2004 அன்று  ந்யூயார்க்கர் பத்திரிக்கையில் வந்தது

அல்லது மாற்று என்பதையே பார்க்காமல், வன்முறையே அற்ற சுத்த சன்மார்க்க சத்திய சமூக உலகம் (utopia) ஒன்றை நிறுவப் போகிறோமா?

இவ்விரண்டில் ஒன்றைத் தெரிவு செய்வோமானால், எப்படி அதனைச் சாதிக்கப் போகிறோம்? அந்த அதி உன்னத உலகத்தில் சமூகக் கட்டமைப்பு என்பது எப்படி எதை நோக்கியதாக இருக்கும்?

அல்லது, இவ்விரண்டும் இல்லாமல் பரிணாமப் பாதையில் பின்னோக்கி நகர்ந்து கல்லாய் பாம்பாகிப் பறவையாய்ப் பல் விருகமாகி மரமாகிப் புழுவாய் பூடாய்ப் புல்லாகிப் போய்ச்சேரப்போகிறோமா?

சரி, மேற்கண்ட அனைத்துக் கேள்விகளையும் விட முக்கியமானதொன்று: நாம், நம்முடைய தனிப்பட்ட முறையில், ஜாதி வெறி சார் பிரச்சினைகளை எப்படி அணுகப் போகிறோம்? Read the rest of this entry »

நேற்றைய முன்தினம் காலை உள்ளூர் மளிகைக் கடை ஒன்றுக்கு இரண்டு கோழிமுட்டைகள் வாங்கப் போயிருந்தேன். என் பிள்ளைகளுக்கு மதிப்பெண் போடுவதற்காகவோ, சாப்பிடுவதற்காகவோ அல்ல – சில பரிசோதனைகளைச் செய்து காட்டுவதற்காக. முட்டைகளை உபயோகப் படுத்தி பல கணித, இயற்பியல், வேதியியல், உயிரியல் தொடர்பான விஷயங்களைத் தொட முடியும். இதைத் தவிர முட்டை ஏன் உருண்டையாக இல்லை என்பதிலிருந்து பல பொதுப்புத்தி சார்ந்த அற்புதமான வடிவாக்கப் புரிதல்கள் பற்றியும் பேச முடியும். ஏன், கணினியியல் அடிப்படைகள் பற்றிக் கூடப் பேச முடியும்.  கடந்த இரண்டு வாரங்களாக, என் குழந்தைகளை இந்தப் பரிசோதனைகளுக்குத் தயார்ப் படுத்தியிருக்கிறேன்.

ஆனால், இந்தப் பதிவு இந்த முட்டைகளைப் பற்றி மட்டும் அல்ல. Read the rest of this entry »

(அல்லது) மாணவர்களும் அரசியலும்

என்னுடைய, தற்போதைய புத்தம்புதிய  புதிய ஆத்திச்சூடியில்,

அ: அரசியல் பழகு.
ஆ: ஆற்றாமை தவிர்.
இ: இலத்தல் இகழ்ச்சியல்ல
ஈ: ஈடுபாடு கொள்.


(ரொம்ப அறிவொர மாரி இருக்குல்ல, மன்ச்சுக்குங்க; எனக்குந்தாங்க இந்த அறிவொர, சொறிவொரல்லாம், சரீங்க்ளா?)

என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது வாழ்க்கையில், சமூகத்தில், நம் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியமான, இன்றியமையாத அங்கம்.

மிகு பொது நலம் (’greater common good’) – மீதாகக் குவிந்த வளர்ச்சியும், அந்த வளர்ச்சியில் விட்டுப் போனவற்றை / போனவர்களை / பாதிக்கப் பட்டவர்களை, தொடர்ந்து அரவணைத்து மேலெழுப்பிச் செல்வதும் அரசியல் நடவடிக்கைகளின் மூலமாகவே சாத்தியங்களாகவும் என்பதாகவே நான் அறிகிறேன்.

… பொதுவாக, நான் ஏற்றுக் கொண்ட தொழில், எனக்குக் கொடுக்கப்பட்ட வேலை அல்லது நான் எடுத்துக்கொண்ட வேலையைச் செய்யும்போது எனக்கு அவ்வேலைகளைச் சரியாகச் செய்வதுதான் முக்கியம். அவற்றுடைய இலக்குகளை அடைவது தான் முக்கியம். இந்த முனைவுகளில் இல்லாத அரசியலா! இதில் இல்லாத நடைமுறை தந்திரோபாயங்களா? இந்த முயற்சிகளில், தனிமனிதர்களின் தன்னல இச்சைகளையும் பொச்சரிப்புகளையும், மனமாச்சரியங்களையும் – அவை இலக்குகளை அடைவதற்கு உபயோகமாக இல்லாமலிருந்தால், அவற்றை மறித்தால், அந்த மனிதர்களையே கூட கடாசியே வந்திருக்கிறேன். நல்லிணக்கமா? க்கூட்டுறவா?? இன்னாங்கடா, இன்னாடா ஸொல்றீங்க?? இதெல்லாம் கிலோ என்ன விலை? Read the rest of this entry »

தமிழர்களின் பிரச்சினைகளில் எது தலையாய பிரச்சினை – என்பதை நான் பல வருடங்களாக ஆய்ந்து ஆய்ந்து, மாய்ந்து மாய்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்திருக்கிறேன் – இந்தச் சீரிய ஆராய்ச்சியின் முடிவில் எனக்குத் தெள்ளெனத் தெரியவந்தது என்னவென்றால்… … …

பொறுத்திரு, தவித்திரு, நமைத்திரு – அவசரமே வேண்டாம். பொறுமையாக மேலேகீழே படிக்கவும்.

-0-0-0-0-0-

நம் தமிழகத்தின், தமிழர்களின் முக்கியமான பிரச்சினைகள் யாவை என்றால் அவை பல இருக்கின்றன.

1.    ????

2.   தொலைக்காட்சி மெகாசீரியல்கள்

3.   இலக்கியவாதிகள்

4.   பட்டி மன்றங்கள்

5.   பேருரைகள்

6.   சட்டை போடாமல், ஏன், ப்ராவும் கூடப் போடாமல் தங்கள் மார்பகங்களை முறுக்கிக் கொண்டு, மயக்கம் வரும் வரை மூச்சைப் பிடித்துக் கொண்டு வளைய வரும் சூர்யா, விக்ரம், விஜய் போன்ற இத்யாதி பிலிம் ஆணழகர்கள் (மூச்ச விட்டுத் தொலைங்கடா பாவிங்களா, செத்துக் கித்துப் போய்டப் போறீங்க!  புள்ளகுட்டிகாரங்கதானடா நீங்க?)

Read the rest of this entry »

ஆக, நான், படிக்காதுப் படிக்காது நம் தலைவர் கருணாநிதி அவர்களுக்கு சொன்ன அறிவுரை(!) போலக் கடைசியில் உண்மையாகவே, நடக்கவே ஆரம்பித்து விட்டதோ?

ஊழிற் பெருவலி யாவுள !:-(

திமுகவின் இடியாப்பச் சிக்கல்களுக்கு ஒரே தீர்வு,  நான் ஏற்கனவே சொன்னது போல, அதனை (அதாவது, பின்னதை) சாம்பாருடன் சேர்த்து, சாம்பாரகத்தை, நமது சாம்பார்நாட்டை, மூன்று பாத்திரங்களில் ஊத்திமூடி. ஒரு முடிவுக்குக் கொணடு வருவதுதான்.

சாம்பார் நாடு 2021 - எல்லைகள் - உள் நாட்டுப் பிரிவுகள் - முக்கிய,  முக்காத சுற்றுலா தளங்கள் - இன்ன பிற...அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி.

சாம்பார் நாடு 2021 – எல்லைகள் – உள் நாட்டுப் பிரிவுகள் – முக்கிய, முக்காத சுற்றுலா தளங்கள் – இன்ன பிற…
அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி.

Read the rest of this entry »

இதனை நான் ஒரு வருடத்துக்கு முன் செய்திருக்க வேண்டும்.

D V Karunn Says: 22/12/2012 at 16:50 e

we need the copy of Justice Sarkaria commn for print.Hoping you may fufill our wish.

’டி வி கருண்,’

என்னிடம் பிற்சேர்க்கைகளுடன் இருந்த முழு அறிக்கை இப்போது இல்லை. இருப்பினும் சில விவரங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சர்க்காரியா கமிஷன் – 1976 இறுதி அறிக்கை – தலைப்பு

Read the rest of this entry »