இஸ்ரோ சந்த்ரயான்3, தமிழ் ஊடகப்பேடிக் குளுவான்கள், திராவிடப் பிரிவினை அயோக்கியர்கள் – குறிப்புகள
August 25, 2023
நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.
அதனைக் குறித்து இந்தப் பதிவையும் எழுதியிருக்கக் கூடாது – ஆனால் விரக்தி யாரை விட்டது, சொல்லுங்கள்.
1
என் அடிப்படைத் தகுதிகள் என்பவை – என் வயது ஏகத்துக்கும் ஆகியிருக்கிறது என்பது போன்ற அற்புதங்கள் என்பதால் – எனக்குப் பலப்பல துறைகளிலும் நிறுவனங்களிலும் தரமும் செயல்திறனும் வாய்ந்த அறிமுகங்கள் இருக்கின்றனர். மேலும், மேலே விழுந்து பிடுங்கி ஆதாயங்களையும், சலுகைகளையும் வெட்கங்கெட்டு எதிர்பார்க்கும் குணமில்லாததால் – ஓரளவுக்கு பரஸ்பர மரியாதையும் இருக்கிறது என நினைக்கிறேன். ஒரு சில வருடங்களுக்கு ஒரு முறையாவது அச்சான்றோர்களுடன் தொடர்பு கொண்டு பேசுவது உண்டு. (இவற்றில் பல கேஸ்களில், முன்பு எப்போதோ விட்ட இடத்திலிருந்து உரையாடலைத் தொடரும் பாக்கியமும், ஆச்சரியகரமாக உண்டு)
இப்படிச் சிலர் இஸ்ரோ அமைப்பிலும் இருக்கிறார்கள்.சென்ற வருடம் அகாலமாக மாரடைப்பில் போய்ச் சேர்ந்த விஞ்ஞானி தெனுவகொண்டா சிவகுமாரும் இதில் அடக்கம். அமைதியே உருவாக ஜொலித்துக் கொண்டிருந்த மாணிக்கம்.
இவர்கள் மூலமாகவும் முன்னொரு காலத்தில் இஸ்ரோ அமைப்பின் ஒரு துணுக்குக்குத் தொழில் நுட்ப ரீதியாக எத்தையோ செய்ய முடிந்ததாலும் எனக்குச் சில விஷயங்கள் பிடிபட்டிருக்கின்றன. ஓரிரு முறை இஸ்ரோ அமைக்குகளுக்குச் சென்று விஸ்தாரமாக வியந்துமிருக்கிறேன்.
ஓரிருமுறை இவை குறித்தெல்லாம் எழுதியுமிருக்கிறேன்.
ஜொலிக்கும் இஸ்ரோ, ஜிஸேட்6 செயற்கைக்கோள், பத்ரி சேஷாத்ரி பதிவு: சில குறிப்புகள் 27/08/2015
மங்களமண்டலத்தியல் கண்டு தெளிவோம்! 07/11/2013
அன்பர் கல்யாண்ராமன் அவர்களும் ட்விட்லாங்கர் ஒன்றை இந்த அக்கப்போர் குறித்துப் பதித்திருக்கிறார்…. ISRO and how to write about it
இந்தப் பின்புலச் சூழலில் இரண்டு நாட்கள் முன்பு ஒரு இளம் ‘யூ ட்யூபர்’ என்னை (என்னையும் போய்!) தொடர்பு கொண்டு இஸ்ரோவில் யாருடனாவது பேச உதவமுடியுமா எனக் கேட்டார். தமிழ் ஆசாமியாக இருந்தால் நலம் என்றார்.
சிடுக்கல்: எனக்கு இந்தப் பையனுடன் பெரிதாக அனுபவமேயில்லை – ஆனால் அவனுக்கு ஆர்வம் இருந்ததுபோல பட்டது; பிரச்சினை – எனக்கு நானே பயிற்சி கொடுத்துக்கொண்ட இயல்புகளில் ஒன்று என்னவென்றால் – யாராவது (அதுவும் இளைஞர்கள் உதவி என கேட்டுக் கொண்டு) வந்தால் – முடிந்தவரை தராதரம் பார்த்து உதவ முயல்வேன், கோர்த்தாவது விடுவேன் – முடியாவிடில் பட்டவர்த்தனமாகச் சொல்லியும் விடுவேன். (இந்தப் பட்ட வர்த்தனத்தால் என்னிடம் கோபித்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள்; உடனடியாக ‘ஜாதி வெறியன்’ என அழைத்தவர்களும் இருக்கிறார்கள் – எப்படியும் ஒரு பிரச்சினையுமில்லை – திராவிடத்தில் இதெல்லாம் சகஜம்)
…ஆகவே, எனக்குத் தெரிந்த ஒரு இஸ்ரோகாரர் (பொறியியல் – மெக்கானிகல் துறை ஆசாமி) ஒருவருடன், அந்தப் பையனுக்குத் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நான் அதனைச் செய்திருக்கக் கூடாது. முட்டாள்தனம்தான்.
:-(
2
ஒரு ஸூம் நேர்காணல் – சுமார் 2 மணி நேரம்போல என ஒப்புக்கொண்டிருக்கிறார் என் இஸ்ரோ நண்பர்; குறைந்த பட்சம் இரண்டுமணி நேரம் முன்னமே கேள்விகளை அனுப்பவும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார் – ஏனெனில் நண்பருக்கு(ம்) ஹோம்வர்க் செய்வது என்பது முக்கியமான விஷயம்.
…நண்பர், சில விசும்புசார் தொழில்நுட்ப உயர்விளக்குகளை (© 2023, எஸ் ஆர் ராமகிருஷ்ணன்) விளக்க ஆவலுடன் தமிழ்ச் சொற்களைத் தேடிப் பிடித்துக் கோர்வையாகப் பேசவும் ஆவலாக இருந்தார். கலைச் சொற்களைக் கற்றுக்கொண்டார் – என் தகுதிக்கேற்ற வகையில் நானும் கொஞ்சம் இந்த ஏடாகூடப் பல்லுடைக்கும் மொழிபெயர்ப்புகளுக்கு உதவி செய்தேன்… மேலும், நண்பரானவர் – அந்தப் பக்கத்திலிருந்து தொழில் நுட்பம் அறிவியல் கொஞ்சம் தெரிந்த ஒருவரையும் வைத்துக்கொள்ளப் பரிந்துரை செய்திருக்கிறார்.
இளைங்கர் (எம்ஏ இங்க்லீஷ்) ஒன்றையும் செய்யவில்லை – கேள்வி ஜாபிதாவையும் அனுப்பவில்லை – வெறுமனே ஸூம் உரையாடல் லிங்க் மட்டும் அனுப்பியிருக்கிறார். ஸூம் நேர்காணலும் குறிப்பிட்ட நேரத்துக்கு ஆரம்பிக்காமல் வழவழா ‘அது வேலை செய்யவில்லை, மைக் சரியில்லை’ கொழகொழாவென்று ஒரு பின்புலச் செக்கும்/வெள்ளோட்டமும் செய்யாமல் அப்படி ஒரு விட்டேற்றித் தனம்… பின்னர் நண்பரே தன் ஸ்கைப் சுட்டியை அனுப்பி ஒருமாதிரி சரிப் படுத்தியிருக்கிறார்.
முதல் கோணல்.
(மன்னிக்கவும், இந்தத் தாமதமே மூன்றாவதோ என்னவோ கோணல்)
3
முதலில் கொஞ்சம் பீடிகை – அறிமுகம் எல்லாம் நடந்தது…
பின்னர்:
ஒரு தமிழனா, சந்திராயன்3 சந்திர வெளியில் தடம் பதிச்சத எப்படிப் பாக்கறீங்க?
தம்பீ, அது சந்திரயான்; சந்திராயன் அல்ல. யான் என்றால் பயணம் வாகனம் என வைத்துக் கொள்ளுங்கள்…
சரீங்க. தமிழனா எப்டி அத பாக்கறீங்க?
ஹ்ம்ம், தமிழனா பாக்கலீங்க. ஆனா எனக்கு எங்க இஸ்ரோ இச்சாதனைய செஞ்சதுக்கு ரொம்ப சந்தோஷம்… ஒரு இந்தியனா, பெருமையா உணர்றேன்.
அப்ப தமிழனா?
தம்பி, நான் தமிழன் தான் – ஆனா தமிழ்ப்பெருமைக்கும் சந்திரயானுக்கும் என்ன தொடர்பு?
தொடர்பு இருக்குன்னுதான் கருத்து இருக்கு. ஏன்னாக்க தமிழகத்துல படிச்சிட்டு ஒரு பெரிய பதவீல இருக்கீங்க… இது நம் மாநிலத்தோட பாடத்திட்ட தரத்த தான காட்டுது…
தமிழகத்துல படிச்சேன், ஆனா எல்லா மாநிலத்துலேர்ந்தும் இஸ்ரோல பணி செய்ய வந்திருக்காங்க்… அப்ப அந்தந்த மாநிலத்து பாடத்திட்டங்களும் அதே தரத்துலதான இருக்குனுதான அர்த்தம்?
ஆனா தமிழகத்துல திராவிடமாடல் கல்வித் திட்டத்துல படிச்சிட்டு நீங்க உயர்பதவிக்கு வந்திருக்கீங்கன்னா அது தமிழனுக்குப் பெருமைதானே!
தம்பீ, நான் ஆங்கில மீடியத்துலதான் படிச்சேன், சிபிஎஸ்இ; ஆனா என் அப்பாம்மா எனக்குத் தமிழும் சொல்லிக் கொடுத்தாங்க. பெருமைப் படறமாரீ நான் ஒண்ணும் சாதிக்கல, எல்லாமே இங்க டீம்வர்க்தான்.
ஆனா நீங்க ஹிந்தி படிக்கலியே, இருந்தாலும் பெரிய பதவில இருக்கீங்களே!
என்னங்க சம்மந்தம்? நான் தக்ஷிணபாரத் ஹிந்தி ப்ரச்சார் சபால ராஷ்ட்ரபாஷா வரைக்கும் படிச்சிருக்கேன் – அது எனக்கு உதவியாகத் தான் இருக்கிறது.
ஹிந்தி தெரியாதவங்களை இஸ்ரோ-ல எப்படி பாக்குறாங்க? பொதுவா அதுல நெறய தென்னிந்தியாவிலேர்ந்துதானே வந்துருக்காங்க?
இல்லைங்க… ஹிந்தி ஆங்கிலம் எல்லாம் ஒரு பிரச்சினையுமில்லை. இஸ்ரோ-ண்றது ஒரு பெரிய கடல், பாரதவிலாஸ் மாதிரின்னு வெச்சிக்குங்க – அந்தப் பழைய சிவாஜி படம் பாத்துருக்கீங்களா?
இல்லை. சந்த்ராயன் லைவ் ரிலே பார்த்தேன் – அதில பலர் தென்னிந்தியர்கள் மாரித்தான் தெரிஞ்சிது – அதனால கேட்டேன்…
தம்பீ நீங்க சரியா பாக்கலன்னு தெரியுது. நிறைய பேர் இந்தியாவோட பல பகுதிமொழி மதம் சார்ந்தவர்கள் இருக்காங்க. நீங்க ஒரு சீக்கியர் இருந்தத கூடப் பாத்துருப்பீங்களே!
பார்த்தேன் சார்; ஆனால் ஒரு முஸ்லீம்கூட அதில் தென்படலியே! ஒருத்தர்கூட குல்லா போட்டுட்டு இருந்தாமாரீ தெரியலியே!
தம்பி, நீங்க அவ்ளோ உன்னிப்பா நிறைய தொழில் நுட்ப விஷயங்கள கவனிச்சிருக்கீங்கன்னு தெரியுது… குல்லா போட்டாதான் முஸ்லீம்னு இல்லை; அவங்களும் இருக்காங்க அந்த டீம்ல…
சரீங்க, ஆனா மணிப்பூர் குக்கீ இனத்தைச் சார்ந்தவர்களும் இருக்காங்களா? அவங்க உரிமைகள் மணிப்பூர்ல பறிக்கப்படுதுன்னு சொல்றாங்களே! நீங்க என்ன நெனக்கறீங்க?
தம்பீ, எனக்குத் தெரியாது – நீங்க அரசியல் பேசணும்னா எனக்கு அதுக்கு நேரமில்லை – ஏதாவது சந்த்ரயான் பற்றிப் பேசணும்னாக்க பேசலாம், இல்லைன்னா முடிச்சிக்கலாம்.
இல்லசார் அரசியல் பேசணும்னு இல்லை – ஆனா பொதுவா என்ன எண்ணம் நிலவுதுன்னாக்க – பாஜக அரசு ஸைய்ண்டிட்ஸ்ட்கள மதிக்கறதில்லை, ஹிந்துத்துவாண்ற லென்ஸ வெச்சிதான் எல்லாத்தையும் பாக்குது….
தம்பி அப்படியெல்லாம் இல்லை – பொதுவாக, எந்தக் கட்சியானாலும், கொஞ்சம் முன்னேபின்னே இருக்கலாம் – எங்களுக்கு ஆதரவைத்தான் கொடுக்கறாங்க. நீங்க நெனக்கற மாரி ஒரு பிரச்சினையும் இல்லை. கேட்ட நிதியை ஓரளவுக்கு கொடுத்திடறாங்க.
சரீங்க. தமிழர்களோட கன்ட்ரிப்யூஷன் சந்திராயன்ல எவ்வளவு இருந்தது?
ஹ்ம்ம்… அப்படி பாக்க முடியாதுங்க. இது இந்திய அளாவிய பெரிய முயற்சி, இதுல எல்லாரும் இருக்கோம், எல்லாரும் பங்களிக்கறோம், இந்த கூட்டுமுயற்சி பற்றி நான் பெருமைப் படறேன்…
தமிழர்களோட கன்ட்ரிப்யூஷன் இல்லேன்னாக்க இது சாத்தியமாகி இருக்குமா?
பொத்தாம் பொதுவா அப்படி சொல்லமுடியாதுங்க… இஸ்ரோல தமிழன் தெலுங்கன் பஞ்சாபியன்னு எல்லாம் வித்தியாசம் பாக்கறதில்லீங்க.
என்னங்க அப்படி சொல்றீங்க… கடந்த பல வருடங்களாக தமிழர்கள்தான ப்ராஜெக்ட் டைரக்டர்களாக இருந்திருக்காங்க?
இல்லைங்க – பலரும் இருந்துருக்காங்க, இருக்காங்க, இருப்பாங்க. தேவைக்கேற்ற மாதிரி இஸ்ரோ நிறுவனம் முடிவு செய்யும். எல்லாரும் அவரவர்களுடைய கடமையைச் சுணக்கம் இல்லாம செய்வோம், அவ்வளவுதான்…
நான் என்ன கேக்கறேன்னா – தமிழ் ஸைண்டிஸ்ட்கள் பிற – எடுத்துக்காட்டா பிஹார் மாநிலத்திலேர்ந்து வந்தவர் – அவங்களை விட பெட்டராதான இருப்பாங்க?
இல்லைங்க, இஸ்ரோல வேலை செய்ய அடிப்படைத் தகுதி வேணும்; குறைவான சம்பளத்துக்கு நிறைவா வேலை செய்யற பக்குவம் வேணும். அவ்வளவுதான்; சமூகரீதியாக யாரும் உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை – அவர்களுடைய தரமான பங்களிப்புகள்தாம் முக்கியமான பேசுபொருள். அவ்வளவுதான்.
அப்ப தகுதி நிரம்பியவர்களாக தமிழ் நாட்லேர்ந்து போனவங்கதான பெரும்பாலும் இருப்பாங்க?
இல்லைங்க – தமிழர்கள் விகுதி அவ்வளவு நீங்க நெனக்கறமாரி இல்லை. மேலும் இஸ்ரோல எல்லாமே டீம்வர்க் தான். வித்தியாசம் பாக்காம வேலை செய்வோம்; எங்கள் குறிக்கோள் ஸ்பேஸ் டெக்னாலஜி, டெலிவரி, ரிஸெர்ச் – அரசியல் அல்ல, அதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இல்லை.
ஒரு பேச்சுக்குச் சொல்றேன் – தமிழர்களே இஸ்ரோல இல்லன்னு வெச்சிக்குங்க, அப்ப இஸ்ரோ இப்படி சந்த்ராயன் விட்டிருக்கமுடியுமா?
ஹ்ம்ம்… அப்படிச் சொல்லமுடியாதுங்க.
நீங்க மடக்கி மடக்கி திரும்பத் திரும்பக் கேக்கறதால சொல்றேன், தமிழங்க இல்லாட்டியும் அது டெஃபனெட்டா நடந்திருக்கும்…
தமிழர் மயில்சாமி அண்ணாதுரைலேர்ந்து சுப்பையா அருணர் வனிதா முத்தையர், வீரமுத்துவேலர்ன்னிட்டு இவங்க அச்சாரம் போட்டுத்தானேங்க இஸ்ரோ முன்னேறியிருக்கு?
ஹ்ம்ம் அப்படி சொல்ல முடியாது – அவங்கள மாதிரி நிறைய ப்ராஜெக்ட் டைரக்டர்கள் இருக்காங்க – அவங்களும் தனிமனுஷங்களா இல்லை, அவங்க பின்னாடி, சரிசமமா நூற்றுக் கணக்குல எல்லா ஸைண்டிஸ்ட்களும் இஞ்சினீயர்களும் இந்தியாவோட எல்லா பகுதிகளிலேர்ந்தும் இருக்காங்க… அதே சமயம் நீங்க சொன்ன அவங்களோட திறமைய நான் கொறச்சலா மதிப்பிடல…
….
…
(இதெல்லாம் நண்பர் ரெக்கார்ட் செய்த உரையாடலில் இருந்து உருவப்பட்ட ட்ரேன்ஸ்க்ரிப்ட்)
இதேபோல தொடர்ந்தது – சுமார் 15 நிமிடங்களுக்கு. நண்பருக்கு வெறுத்துவிட்டது.
நண்பர், அந்த இளைங்கருக்குக் கடைசியாகச் சொன்ன அறிவுரையையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்:
“தம்பீ, இத்தோட போதும். நிறுத்திக்குங்க. இந்த அசிங்க வீடியோவை நீங்க அப்லோட் செஞ்சீங்கன்னா நடக்கறதே வேற… கேள்வி கேக்கறதுல ஒரு மொறை வேண்டாம்? இஷ்டத்துக்கு இதில வொங்க வெட்டி பாலிடிக்ஸ இழுக்கறீங்க? வொங்க திராவிட ஸெபரேடிஸ்ட் வொளறல ஒங்க கும்மிடிப்பூண்டியோட நிறுத்திக்கிங்க! என் நண்பர் ரெக்கமெண்ட் பண்ணாரேன்னு ஒத்துக்கிட்டேன்; இன்னொருத்தனா இருந்தாக்க செருப்பால அடிச்சிருப்பேன்…. செவுட்ல அறெஞ்சிருப்பேன்…”
4
மேற்கண்ட உரையாடல் ஸ்கைப் சுட்டியை எனக்கு அனுப்பிவிட்டு மௌனம் காத்தார், என் நண்பர்.
எனக்கு மறுபடியும் அவரைத் தொடர்பு கொள்ள தைரியம் இல்லை. ‘விடியோ பார்த்தேன்’ என்று மட்டும் பதில் கொடுத்து விட்டு – திருடனுக்குத் தேள் கொட்டியது போல் – கொடூர மௌனம் காத்தேன்.
பின்னர் அவராகவே தொடர்பு கொண்டார் – நான் பயந்தது போலத் திட்டவெல்லாம் இல்லை; வெறும் அங்கலாய்ப்புதான். நல்லவேளை. :-(
தமிழகத்தினைக் கொள்ளையடிப்பதற்கு அப்பாற்பட்டு – மனதளவிலும் அறிவளவிலும் சூறையாடிக் கொண்டிருக்கும் திராவிடம் எனும் அயோக்கிய அலங்கோலம்தான் பேசுபொருள்.
அவரை நான் தேற்றவேண்டி வந்துவிட்டது – இன்னமும் பாரதத்தின் மீது நம்பிக்கையும், செயலூக்கமும் கொண்ட ஜொலிக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள், கவலை வேண்டேல் என்றேன். (என்ன தைரியத்தில் சொன்னேன் என்று தெரியவில்லை; அண்ணாமலை தலைமை கொடுக்கும் போதையாகவும் இருக்கலாம்.)
ஆனால்….
…புற்றீசல் போலக் கிளம்பியிருக்கிறார்கள், இந்தச் சோம்பலாள திராவிடத் தற்குறி யூட்யூபர்கள். ஒரு மசுரும் தெரியவில்லை; எப்படியோ ரெண்டு மைக் கேமரா விடியோ ஸாஃப்ட்வேர் இருந்தால் – மூளையின் அவசியம் கூட இல்லாமல் ஒரு சேன்னல் ஆரம்பித்து விடலாம் போல! (இந்த அழகில் ஒரு நண்பர் சொல்கிறார் – இந்த யூட்யூப் எழவுகளுக்கு என முதலீடு செய்யவும் ஆட்கள் இருக்கிறார்களாம்! கிழிந்தது க்ருஷ்ணகிரி, போங்கள்!)
இம்மாதிரி தளர்ச்சிதரும் தருணங்களில், சில சமயங்களில் நானும் ஒரு எழவைப் படுஸீரியஸ்ஸாக ஆரம்பித்தே விடலாம் என…
(பயப்படாதீர்கள்)



August 25, 2023 at 17:59
இஸ்ரோ இன்னபிற குறித்து, பேசுதமிழாபேசு சேன்னலில் நன்றாகவே வந்திருக்கும் ஒரு நேர்காணல் (அவர்களுக்கு நன்றியுடன்!)
August 25, 2023 at 20:56
இன்னமும் 6 நிமிடம் போல உரையாடல்(!) ட்ரேன்ஸ்க்ரைப் செய்யவேண்டும் – முடிந்தால் அடுத்த சில நாட்களில் ஆவன செய்கிறேன்; ஆனால் அது இன்னமும் நாராசமாக இருக்கிறது, பார்க்கலாம்.
August 27, 2023 at 18:39
ராம் உரையாடலை படித்த எனக்கே ஒரு ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டது. எப்படிதான் உங்கள் நண்பர் 15 நிமிடம் பொறுமையாக பதில் கூறினாரோ. உங்களுக்கு வேண்டி ஆக இருக்கலாம். நல்ல நண்பர்களை பெற்று உள்ளீர்கள். அது நல்ல ஒரு பாக்கியம்
August 27, 2023 at 20:52
நன்றி, நண்பரே!
ஆனால் கண்டகண்ட கழுதைகளுக்கும் தேவைமெனெக்கெட்டுப் பரிந்துரை செய்தால் – நெடுநாள் நண்பர்களாக இருப்பவர்களும் பின்னங்கால் பிடறியில் பட ஓடிவிடுவர் என்பது கண்கூடு.
வாழ்க்கை தொடர்ந்து படிப்பினைகளைச் சங்கூதல்களாகத் தந்து கொண்டிருக்கிறது – ஆனால் நான் செவிடனாக இருக்கிறேன் என்பதும் புரிகிறது; பார்க்கலாம். திருத்திக் கொள்கிறேன்.
August 28, 2023 at 01:24
// இம்மாதிரி தளர்ச்சிதரும் தருணங்களில், சில சமயங்களில் நானும் ஒரு எழவைப் படுஸீரியஸ்ஸாக ஆரம்பித்தே விடலாம் என…//
ஐயா, நீண்ட நாள் கோரிக்கை இது, தயவுசெய்து பரிசீலியுங்கள்🙏. அயோக்கியத் தற்குறிகளின் தீராவிஷப் பிடியிலிருந்து மீள உதவுங்கள்!
⚠️மேற்கொண்டு பதியப்போகும் ‘கருத்துகள்’ திராவிட பாஷையில் இருக்குமென்பதால், அவற்றை அனுமதிக்கும்/நீக்கும் முடிவைத் தங்களிடம் விட்டுவிடுகிறேன். இனிவருபவை மேற்கண்ட யூடூப்பர் வகையறாவுக்கு அர்ப்பணம்.
ஏண்டா திராவிடியா பசங்களா ஊர் உலகத்துல ஒருத்தரும் உருப்படியா எதையும் செய்யாம உங்கள மாதிரியே தற்குறியா பொறுக்கிட்டு திரியனுமாடா? தப்பித்தவறி யாராவது எதையாவது சாதிச்சுட்டா உடனே அவங்களையும் உங்க சாக்கடைக்குள்ள இழுத்து நாறடிக்காம விடமாட்டீங்க இல்ல? உன்னப்போல இப்படி ஓயாம ஒளறிட்டு இருக்கற கும்பல உருவாக்கினதுதாண்டா உங்க திராவிட மாடல் சாதனை, இதுல சிக்காம தப்பிப் பிழைச்சவங்கதான் சாதிச்சிருக்காங்க, அவங்களையாவது நிம்மதியா இருக்கவிடுங்கடா.
இஸ்ரோ சயின்டிஸ்ட் ஒருத்தர் உன்ட்ட பேச ஒத்துகிட்டார்ன்ற ஓரே காரணத்துக்காக நீ எவ்ளோ பெரிய்ய திராவிடியாத் தறுதலைனு அவர்ட்ட ப்ருவ் பன்னிட்டே இருப்பியாடா பன்னாட? அவங்க முன்னாடிலாம் உன்னோட யோக்கியதை என்னனு கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமாடா? அதுசரி, அந்த வக்கிருந்தா நீ ஏன் உங்க ஓனர் போடற எலும்புக்காக போறவர்றவங்களையெல்லாம் இப்பிடி வெறித்தனமா கடிக்கப்போற? ‘சந்திரயான் வெற்றிக்கு தமிழன் மட்டும்தான் காரணம், அந்த தமிழன் வெற்றிக்கு திராவிட மாடலில் இந்தி படிக்காததே காரணம், இதனால் இஸ்ரோ வடக்கர்கள் தமிழனை வஞ்சிக்கிறார்கள்’ னு அவர் வாயால சொல்லிருந்தா சில்லறை கணிசமா பொறுக்கிறுப்ப இல்ல?
அவங்கெல்லாம் உங்க கும்பலப்போல நாட்டை கூறுபோட்டு கொள்ளையடிக்கிறவனுக்கு கூஜாதூக்கி கூலிக்கு மாறடிக்கறவங்க இல்லடா.
நொடிக்கு நூறுதரம் மாத்தி மாத்தி புளுகி மக்களை பைத்தியமாக்கறது இல்ல அவங்க வேலை. மழைக்குகூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்காம தெருப்பொறுக்கிட்டு திரிஞ்சுட்டு ஊரை ஒலையிலபோட்டு சுருட்டுன காசவெச்சு மீடியால மூஞ்சகாட்டின நாலாவது நாளே எம்மெல்லேவாகி இனஸ்டன்ட் மந்திரியாகி டமில் சினிமாவுக்கே டஃப் குடுக்குற பஞ்ச் டயலாக்க மேடையில பாத்துபடிக்கிற பால்டாயில் பவர் ஸ்டார் இல்லடா இஸ்ரோகாரங்க.
சயின்டிஸ்ட் ஆகணும்னா அறிவாற்றல், செயல்திறன், விடாமுயற்சி, அயரா உழைப்பு, அர்ப்பணிப்புனு ஏகப்பட்ட விஷயங்கள் வேணும். அதுலயும் இஸ்ரோ மாதிரியான இடங்கள்ல வேலைபாக்க பணத்தைவிட நாட்டை
பெருசா மதிக்கிற பண்பு வேணும். அதெல்லாம் உங்க அகராதியிலயே கிடையாதே அப்புறம் எந்த தகுதியிலடா அவங்க முன்னாடிபோய் நிக்கிறீங்க?
கேமராவுக்கு அக்கம்பக்கம் நின்னுட்டாலே நம்மள மிஞ்ச எவனும் கிடையாதுனு நினைச்சிட்டு இஷ்டத்துக்கு எல்லாத்தப் பத்தியும் கருத்துக்கூந்தல பறக்கவிடற சைக்கோ கூத்தாடிப் பயலுக தகுதியைப்பத்தி பிஎஸ்என்எல்ல வேலைபாத்து ரிட்டையரான இளங்கோ பிச்சாண்டி பேசியிருக்கார், பாத்து தெரிஞ்சிக்க. மொதல்ல அவரப்போல உள்ளவங்கட்ட பேசக் கத்துக்க, அப்புறம் போலாம் இஸ்ரோ பக்கம். அவர் பேசினதாவது ஒரு சினிமா கூத்தாடி பத்தி, ஆனா நீ டூப்பரா இருக்கறதே மெகா தகுதினு நெனச்சிட்டபோல, உன்னச்சொல்லி குத்தமில்ல, சொரணையே இல்லாம கண்ட கருமத்தையும் பண்ற உயிரினம்தான இப்பெல்லாம் ‘இன்ஃப்ளூயென்ஸா’னு சொல்லிக்கிது.
அரசியலுக்கு பலியான இஸ்ரோ சயின்டிஸ்ட் நம்பி நாராயணன் பத்தி படம் எடுத்த நடிகர் மாதவன் அவரப்பத்தி இப்படி சொன்னார், ‘சினிமால இருக்கற அத்தனை சூப்பர்ஸ்டாரும் ஒன்னா சேர்ந்தாலும் இவருக்கு ஈடாக முடியாது’. இப்படி உண்மையைச் சொல்ற சினிமாகாரங்க ரொம்ப கம்மி, அந்த படத்தைப் (ராக்கெட்ரி) பாத்தாவது கொஞ்சம் திருந்துங்கடா.
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் மீடியா அரிச்சந்திரன் ஒருத்தன்ட்ட சினிமா பாப்பேன்னு சொன்னதவெச்சு இவங்க நம்ம ஆளுங்கனு முடிவு பண்ணிட்டியா? மக்களுக்கு, குறிப்பா மாணவர்களுக்கு அறிவியல், ஆராய்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வாய்ப்புகள் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தற நல்லெண்ணத்துல அவரு அந்த பேட்டிய குடுத்திருப்பாரு. அதுக்காக அவர் சினிமால பாக்கிறத பொறுக்கித்தனத்த அப்படியே நிஜவாழ்கையில கடைபிடிக்க மாட்டாரு, குப்பையை எங்க போடணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும், மனுஷனா இருக்கற ஒவ்வொருத்தருக்கும் தெரியணும்.
August 29, 2023 at 20:36
[…] பதிவில் இப்படி […]