தமிழகத்தின் இடதுசாரி பேடிப் பயல்கள் – இந்த அயோக்கியர்களை முன்வைத்து சமகாலத் தமிழகம் பற்றிய குறிப்புகள்

March 5, 2023

பேடி என்பதற்குப் பதிலாக, மோசமான ஒரு வார்த்தையை எழுதலாம் என நினைத்தேன்; ஆனால் அந்த அற்ப அயோக்கியர்களைப் பெற்றெடுத்த தாயார்கள் என்ன பாவம் செய்தார்கள், சொல்லுங்கள்?

ஆகவே.

நானும் ஒருகாலத்தில் (அதாவது என் முதிரா இளமையில்)  இடதுசாரி சிந்தாந்தங்களில் ஈர்க்கப்பட்டு வீழ்ந்து, ஆனால் பலரைப் போல வெட்டி சித்தாந்தம் பற்றிப் பேசாமல், களத்தில் இறங்கி உழைத்து (ஆனால் ஒருசில வருடங்களுக்குள்ளாகவே, இடதுசாரித்தனத்தின் மலட்டுத்தன்மையையும் அதன் தலைவர்களின் பேடித்தனத்தையும் உணர்ந்து) மீண்டு, சக-சாதா மானுடர்கள் பக்கம் வந்து சேர்ந்தவன் என்கிற முறையில் எழுதுகிறேன்.

சரி.

இடதுசாரி எனத் தன்னை இலக்கண சுத்தமாகக் கருதிக் கொள்பவனின் அடிப்படை எண்ணம் என்னவாக இருக்கக் கூடும்?  இருக்கவேண்டும்?

அது ‘உழைப்பாளிகளின் அகிலம்’ –  உழைக்கும் வர்க்கத்தினரின் உலகளாவிய ஒற்றுமை என்பதுதானே? சக தொழிலாளிக்கும் உழைப்புச் சுரண்டலுக்கெதிராகவும் சமரசமே இல்லாமல் போராட வேண்டும் என்பதுதானே? உழைப்பின் மேன்மையைப் பற்றித்தானே?

ஆனால்.

1

தனிப்பட்ட தகுதி/திறமை எனப் பெரிதாக இல்லாத அக்காலத் தமிழகத்தில் (1950-67) – சிலபல வாய்ப்புகள் அரசியல் / தேசப் பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாகக் கிடைத்தன. இதற்கு நாம், தமிழகத்தின் காங்கிரஸ் அரசுகளுக்கும், சிலபல அமைச்சர்களுக்கும் மட்டுமே நன்றி சொல்லவேண்டும் – திராவிடத்துக்கும் தமிழக வளர்ச்சிக்கும் ஒரு பெரிய தொடர்புமில்லை.

திராவிடமாடல் என்பதே ஒரு பெரும் பம்மாத்து.

இவையெல்லாம் ஒரு புறமிருக்க.

பிஹார், வங்காளம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற அக்கால மாநிலங்கள் வளரவைக்கப் படாமல் – தமிழகம் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா+ போன்றவை தொழில்வளர்ச்சியைப் பொறுத்தவரை செல்லம் கொடுத்து வளர்க்கப் பட்டதால் – இம்மாநிலங்களில் தொழிற்சாலைகள், கட்டமைப்புகள் எனப் பெருகின. அதனால் கிடைத்த பல பலன்களில் ஒன்று வேலைவாய்ப்பு வளர்ச்சியும். (இப்படி வாய்ப்பு மறுக்கப் பட்ட பிரதேசங்களில் – அவைகள்தாம் கனிமங்களைப் பிறபகுதிகளுக்கு அடிமாட்டு விலைக்குக் கொடுத்தாலும் – தொழில்வளர்ச்சியோ வேலைவாய்ப்புகளோ பெரிதாகப் பெருகவில்லை – இதனால்தாம் இப்பிரதேசங்களின் இளைஞர்கள் தமிழகம் போன்ற மொழிவெறிப் பிரதேசங்களுக்கு வேலை தேடி வரவேண்டி இருக்கிறது – ஆனால் இதுவும் மாறும், சர்வ நிச்சயமாக!)

…ஆனால் தமிழகம் போன்ற சோம்பேறிப் பிரதேசங்களில் அதன் பெரும்பாலான இளைஞர்களுக்கு (இவர்கள் ‘படித்தவர்கள்’ எனத் தம்மைக் கருதிக் கொள்பவர்கள், தமிழ் உயிர் என்பவர்கள், ஆனால் ‘வாழைப்பழத்தில் வழுக்கி விழுந்த தமிழ்க்கிழவன்’ எனச் சொல்லச் சொல்லுங்கள் – அழகாகச் சொதப்புவார்கள், படுதண்டங்கள்) உடலுழைப்பு என்றாலே கேவலம் எனவொரு எண்ணம், அதேசமயம் வாய்ப்பேச்சைத் தவிர வேறொரு திறமையும் இல்லை.

ஆனால். அவர்கள் அரசு கொடுக்கும் ஓசிச்சாப்பாட்டுக்கு  அப்பாற்பட்டு டைம்பாஸ் செய்யகொள்ள, அரசுக் கள்ளுக்கடைகளும் திரைப்பட கிளுகிளுப்புகளும் இருக்கின்றனவே ஐயன்மீர்!  (அவர்களுடைய சொந்த விஜய்ஜகுஜய் உதய்புதய் அஜித்குஜித்  டைப் நடிகக்கோமாளிகள் என எவர் பின்னாலாவது பிஹாரிகள் சுற்றுகிறார்களா, பாருங்கள்? ஏனெனில் வட இந்தியர்கள் உழைத்துச் சம்பாதிப்பவர்கள், அவர்கள் திராவிடத்  திருட்டுத் தெருப் பொறுக்கிகள் அல்லர்!)

…மேலும், பெரும்பாலான தமிழிளைஞர்களைத் திராவிடம் துப்புறவாகக் காயடித்து, அவர்களை ஒன்றுக்கும் உபயோகமற்ற உதவாக்கரைகளாக ஆக்கி விட்டிருக்கிறது.

ஆனால், இதனாலும் தமிழ்-திராவிட ரவுடி-கொள்ளைக் கும்பலுக்கு அனுகூலம்தான்!

ஏனெனில்.

இந்த அறிவிலி-சோம்பேறித் தண்டங்களில் கணிசமான பலரை உணர்ச்சிபூர்வமான உச்சாடனங்களால் நாம்தமிழர்கட்சி, விடுதலைச்சிறுத்தைகள் போன்ற பொறுக்கிவாத அமைப்புகள் ஈர்த்திருக்கின்றன… இவர்களுடைய மந்திரம்: “தம்பீ! நீதான் பெஸ்ட், ஆகச் சிறந்தவன; உன்னைப் ‘பிறர்’ நசுக்குகிறார்கள்! ஆகவே உன்னுடைய லாயக்கற்ற தன்மைக்கு நீ பொறுப்பல்ல! அந்தப் ‘பிற’ மக்களுக்கு அடங்கமறு அத்துமீறு திருப்பிஅடி…”

“உன் திரள் சாராத எவனும் உன் எதிரி, உன்னைச் சுரண்டுபவன், உன்மீது ஆதிக்கம் செலுத்துபவன் – ஆகவே அவனை அவமரியாதை செய், ஒழித்துக் கட்டு, நாடே சுபிட்சமாகிவிடும்; தமிழகமெங்கும் பாலும் தேனும் டாஸ்மக் சாராயமும் பிரபாகரனும் பன்றிகளும் புலிகளும் கழுதைகளும் சிறுத்தைகளும் ஆனந்தமாக குறுக்காநெடுக்கா ஓடிக்கொண்டிருக்கும்.”

(தகுதிக்கேற்ப உழைத்துப் பிழைக்க நினைக்கும் பல தமிழ் இளைஞர்கள் பிற பிரதேசங்கள் போனது, போவது தனிக்கதை; இன்னமும் நம்பிக்கையோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தமிழகத்தில் பணி செய்யும், ஜொலிக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள்  – ஆனால் இவர்கள் சதவீதம் மிகக் குறைவு. They are in a microscopic minority)

2

தமிழகத் திராவிட/தமிழ்தேசியப் பொறுக்கிகளின் தாரக மந்திரம்: “உன் குறைகளுக்கு, பிறத்தியாரைப் பொறுப்பாக்கு.”

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். விஞ்ஞானம் வளரவேண்டும். ஆனால்:

. இயந்திரமயமாக்கத்தை எதிர்ப்போம். ஜேஸிபி கூடாது. நவீன ரசாயன உரம் கூடாது; வெறும் பசுஞ்சாணி போதும். ஆர்கனிக். இயற்கை வேளாண்மை எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். நம்மாழ்வார், பேயாழ்வார், பிசாசாழ்வார், பிணமாவாழ்வார் தாம் தீர்வு.

. தொழிற்சாலை கூடாது. மாசு கட்டுப்பாடு முக்கியம். ஆனால் திராவிடம் இருக்கலாம்.

. அறிவியல் தொழில் நுட்பமெல்லாம் தேவையே இல்லை. எல்லாம் நம் பதினெண் சித்தர்கள் சொல்லிவிட்டார்கள்.

. மாடர்ன் மருத்துவம் ஒரு பம்மாத்து – நம் சித்தர் வாக்கியங்கள் சிலவற்றைச் சொன்னாலே புற்றுநோய் முற்றுப்பெறும்.

. நாங்கள் வேலை செய்யமாட்டோம். ஏனெனில் நாளை விஜய்குஜய் விட்ட படக்குசு இருக்கிறது. அது ‘மாஸ்’ என நிரூபிக்க வேண்டும்.

. மாலையில் தண்ணியடிக்கவேண்டும், க்வார்ட்டர் கட் பண்ணவேண்டும்; நாங்கள் படுபிஸி.

. முடிந்தால் – செவ்வாய்புதன்வியாழன் மட்டும்தான் வேலை செய்வோம். மப்பும் மந்தாரமாகவும் இருக்கும்போது எங்களால் என்ன செய்யமுடியும்.

. அஇஅதிமுக ஆட்சியின் போது நிறைய போராட்டம் செய்யமுடிந்தது, காசு பாத்தோம் – இப்ப திமுக ஆட்சில அப்படியில்லை; ஆகவே துக்கத்தைத் தீர்க்க இன்னும் க்வார்ட்டர் போடணும்…

…இந்த அழகில் நம் திராவிட குல திலகங்கள் இருக்கும்போது, தொழில் முனைவோர் (உணவகங்களிலிருந்து தொழிற்சாலை ஊடாக… அனைத்துத் துறைகளிலும்) தம் முனைவுகளை எப்படிச் செயல் படுத்துவர்?

வெளி மாநிலங்களிலிருந்து (அதாவது நம்மால் ஓட்டாண்டிகளாக்கப்பட்ட இந்தியப் பகுதிகளிலிருந்து) – வேலை தேடும் பெரும் திரள் வருகிறது.

அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆத்மார்த்தமாக வேலை செய்கிறார்கள். மேலெழும்புகிறார்கள்.

இது நம் திராவிட-தமிழ்தேசியப் பொறுக்கிகளுக்குப் பொறுக்கவில்லை. துடிக்கிறார்கள். கதறுகிறார்கள்… வெறுப்பைக் கக்குகிறார்கள்.

பான்பராக் வாயன், பானிபூரிகாரன்,  ‘புளிச்’ என்று அவர்களை இழிவு செய்கிறார்கள்.

தற்போதைய முதலையமைச்சர் முக இசுடாலிரிலிருந்து ஆரம்பித்து கடைக்கோடிப் பொறுக்கி யுவகிருஷ்ணா வரை இந்த ‘வடவ’ வெறுப்புத் தீயில் தமிழகத்தை எரித்தார்கள், எரிக்கிறார்கள், பாவிகள்….

அதேசமயம், சில தண்டங்கள் ‘இன்னர் லைன் பர்மிட்’ என உளறிக் கொட்டுகிறார்கள் – இதே பர்மிட் விஷயத்தை கர்நாடகாவோ, மஹாராஷ்ட்ராவோ செய்தால் – வேலை வேண்டி அங்கு பெயர்ந்திருக்கும், அங்கிருக்கும் தமிழர்களின் மீது கவிழ்த்தால்? (குய்யோமுறையோ தான்! பேடிகள்)

பிரச்சினை என்றால் இவர்களுடைய செயல்பாடுகளால் ஏற்படும் சர்வநாசங்களுக்கு இவர்கள் பொறுப்பே ஏற்க மாட்டார்கள்.

3

சரி.

இப்படி உழைத்துச் சம்பாதித்தும், தமிழகத்துக்கும் பெரும் உதவி செய்தும் அவப்பெயர் கொடுக்கப் படும் பெரும் ‘வடவ’ உழைப்பாளி மக்கள் திரளை, தமிழகக் கம்யூனிஸ்ட்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?

சக உழைப்பாளிகள், தங்கள் தோழமைக் கட்சிகளால் இழிவு செய்யப் படுவதை எதிர்த்தார்களா?

சக உழைப்பாளிகள் பக்கம் நின்று பேசினார்களா? ஊடகங்களில் இந்த அயோக்கியத் தனத்தைக் கண்டித்து அறிக்கை விட்டார்களா?

உண்ணாவிரதங்கள்? போராட்டங்கள்? மேடைப்பேச்சுகள்? துண்டுப் பிரசூரங்கள்? கேவலம், ட்விட்டர்/ஃபேஸ்புக் பதிவுகள்???

ஒரு எழவுமில்லை.

வாய் கிழிய ‘உழைப்பாளிகளின் அகிலம்’ + ‘புரட்சிகரத் தோழமை’ என்பதெல்லாம் வெறும் வுடான்ஸ் தானே!

மேலும் கை நீட்டி, திராவிட முதலாளிகளிடம் கோடிகோடியாகப் பிச்சை எடுத்த கை, வாய்மேலேயே பொளேரென்று போட்டுவிடுமோ?

தமிழக இடதுசாரிகள் (ளும்) பேடிகள், வீரமோ, நேர்மையோ, ஏன் மானமோ இலா நாய்கள்.

அவ்வளவுதான்.

(இந்த வெறுப்புப் பதிவு முடிந்தது)

—-

2 Responses to “தமிழகத்தின் இடதுசாரி பேடிப் பயல்கள் – இந்த அயோக்கியர்களை முன்வைத்து சமகாலத் தமிழகம் பற்றிய குறிப்புகள்”

  1. Malathy.v Says:

    I agree with your reasoning.inspite of mineral rich regions the hindhi belt refused to embrace english and adamant about hindhi alone.while maharashtra w.bengal punjab around them moved ahead their backward education and negligence by congress for 40 years are the causes of this effect.even now cbse board toppers itself board toppers are from UP,MP,RJASTHAN ONLY.Competitive exams too.but the benefit of education comes with english as medium.cannot deny it.hough unfortunate


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s