ஈவெரா ‘பெரியார்’ – ஒரு ஆந்திரத் தரவும் அதிரவைக்கும் பகீர் உண்மைகளும்….
July 15, 2022
ஈவெரா குறித்து வெகுகாலமாக எனக்கிருந்த அனுமானங்கள் சிலபலவற்றுக்கு இன்று காத்திரமாக விடை/தரவு கிடைத்தது.
அவ்வனுமானங்களாவன:
- ஈவெரா கன்னடர் அல்லர், தெலுங்கர்.
- அவருக்குக் கொடுக்கப் பட்ட மரியாதைக்குரிய பட்டப்பெயர் ‘பெரியார்‘ என்பதல்ல – மாறாக, அது ‘பொரியார்.’
சரி.
கீழே, ஈவிஆர்/EVR அல்லது ஈவெரா ப்ரேண்ட் பொரிப் பொட்டல ருசிசு – ஆவணபூர்வமாகச் சமர்ப்பிக்கப் படுகிறது.
ஈ வெ ராமசாமி, ஆந்திரத்துக் கர்நூல் நகரில் பொரிகடலைக் கடை நடத்திப் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்த தெலுங்கர்.
பின்னர் தமிழகத்துத் திராவிடர்களுக்குத் தலைமைப் பஞ்சம் ஏற்பட்டதால் – இறக்குமதி செய்யப்பட்டு, பொரி பொரித்துத் தமிழகத்தின் பொன்னேடுகளில் பொரிக்கப்பட்டவர். ஆனால் அவர் குடும்பத்தினர், இன்றுவரை பொரியாரின் திராவிடப் பொரித் தொழிற்சாலையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
ஆகவே:
அவர், நியாயமாக ஈவெரா பொரியார் எனத்தான் அழைக்கப் படவேண்டும்.
ஆனால்.
தமிழர்கள், அண்ணாதுரை தலைமையில் பங்காளிச் சண்டையில் ஈடுபட்டு அவருடைய ஒருகாலை உடைத்துவிட்ட காரணத்தால், இப்படி ஈவெரா பெரியார் ஆகிவிட்டார், பாவம்.