காட்டுப் பேரீச்சம்பழமும் தமிழனின் தொன்மையும்
July 5, 2022
பதிலளித்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
ஆனால், ஏண்டா பிலாக்கணம் வைத்தோம் என்றாகி விட்டது.
(=தமிழனின் தொன்மைக்கும், சங்ககாலத்துக்கும், காட்டுப் பேரீச்சம்பழத்துக்கும் உள்ள காத்திரமான நேரடித் தொடர்பு என்ன? July 2, 2022)
…ஏனெனில், இப்படி அலைகடலென ஆர்பரித்துக் கொள்கைக் கூட்டணியில் ஐக்கியாவாகி, எனக்கே பன்னாட்டுப் பன்னாடை டப்பாஃபர்ர்னிச்சர் விற்குமளவுக்கு உங்களுக்குத் திமிர் அதிகமாகி விட்டது என்பதை நினைத்தால்…
சரி.
ஏழரைகளில் குறைந்தபட்சம் ஐவருக்கு, கற்பனை வளம் அநியாயத்துக்கு + எனக்குப் பொறாமை அளிக்குமளவுக்கு அதிகம் எனப் பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. ஏனெனில், அடியேன் சத்தியமாக – பேரீச்சம்பழ இரும்பு, பழைய தட்டுமுட்டுச் சாமான்கள் (தமிழ்ச்சாமான் செஞ்சீமான்கள் வகை) பண்டமாற்று முறை, இரும்புக் கனிமப் பிரித்தெடுப்பு வார்ப்பு அகழ்வாராய்ச்சி ஆதிகால ஏற்றுமதி என்றெல்லாம் அதிதீவிரமாக நினைக்கவில்லை.
என்னுடையது வெர்ரி ஸிம்பிள் விவகாரம்தான்.
இருந்தாலும், அதற்கும் ஒரு எழவெடுத்த விளக்கத்தை வெட்கமேயில்லாமல் கொடுப்பவனே…
-0-0-0-0-0-
நான் ஒருமாதிரி பிராசம்/பன்/pun/சிலேடை என நினைத்தது wild dates, காட்டுப் பேரீச்சை.
அதாவது.
சங்ககாலம் அப்படியிப்படி என எது இருந்தாலும், நம் தமிழர்கள்/திராவிடர்கள் – நம் ‘வரலாற்றுக் காலகட்டங்களை’ ஒரு முகாந்திரமுமே இல்லாமல் ற்றொம்பவே பின்னுக்குத் தள்ளிக் கொண்டு போகிறார்கள் – எனும் நகைக்கத்தக்க உண்மை.
அதாவது.
மிகவும் wild ஆக, ஒரு தரவும் பெரிதாக இல்லாமல் dates தேதிகளை விரட்டிக்கொண்டு பின்னே சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.
கீழடியில் பெருச்சாளி போல நோண்டி நோண்டிப் பானைச் சில்லுகளில் தப்பும்தவறுமான ப்ராஹ்மிக் கிறுக்கல்கள் கிடைத்தவுடன்- அதற்கும் ஒரு wild dates, காட்டுப் பேரீச்சை- எனத் தொழில்முறையில் ‘தயாரித்த’ தேதிகள் அல்லாட் செய்தபின்னர் – உடனடியாகக் குறுந்தொகை போன்ற நல்ல தமிழில் யாக்கப்பட்ட ‘சங்ககால’ நூல்களும் அக்காலத்தில் எழுதப் பட்டவைதான் என்று, துளிக்கூடக் கூச்சமேயில்லாமல் கோர்த்துவிடுவதுதான்….
ஏனெனில், கொஞ்சம் நீண்ட நெடுங்காலமாகவே இந்த ‘சங்க காலம்’ + மொழிகளின் வளர்ச்சி இன்னபிற பற்றி விழுந்து விழுந்து படித்துப் புரிந்துகொள்ளவும் சிலபல சான்றோர்களுடனும் உரையாடி அறியவும் முயற்சி செய்துகொண்டிருப்பதால், எனக்குத் தோன்றுவது, முக்கியமாக – தமிழர்களுக்குக் கற்பனை மிகவும் (=மிக மிக மிக மிக ++++++) அதிகம்.
அதனால்:
-0-0-0-0-
அ. சங்ககாலம் என ஒன்று இருந்திருக்கவே இல்லை. அதற்கு வாய்ப்பே இல்லை. அதுவும் ஒரு இலக்கியதரப் புனைவுதான். அல்லது ஜுரவேகப் பிரமைதான் – பிதற்றல் எனச் சொல்லக் கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.
ஆ. சங்க இலக்கியம் எனவொரு இலக்கியச்சேகரம்/தொகுப்பு இருந்திருக்கிறது. அதில் பலப்பல, ப்ராக்ருத + ஸம்ஸ்க்ருத ஆக்கங்களுக்கு நன்றியுடன் உருவாக்கப் பட்டுள்ளன. அவை தம் ஊற்றுக்கண்களைக் குறித்துப் பொய் சொல்லவில்லை. மாறாக, அவை தங்களுடைய பாத்தியதைப் பட்ட தன்மையை உணர்ந்தே இருக்கின்றன.
சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாரம் உள்ளிட்ட காப்பியங்களில் சித்திரிக்கப் பட்டவை நடைமுறை உண்மைகளல்ல. அவை அடிப்படையில் அரங்கேற்றப்பட, நாடகத்தனமாக வடிக்கப் பட்டவை.
அவை சமகால உண்மைகளோ சமகால வாழ்க்கையைப் பிரதிபலிப்பவையோ அல்ல.
(யோசித்துப் பாருங்கள் – நம் எழவெடுத்த தமிழ்ப் படங்கள், நம் சமகால தமிழ் வாழ்வியல்(!) என்பதைப் பிரதிபலிக்கின்றனவா? நாம் பேசப் பேச பின்னணி இசை வருகிறதா? ஏமாந்தால் காதல் செய்து ஏகோபித்து வாழ்கிறோமா? இதேபோலத்தான் ‘சங்க இலக்கியங்கள்++’ம்…
ஏமாந்தால் ஐந்தே வினாடிகளில் பாட்டு யாத்து, இசையமைத்து நடனமாடிப் பாடிக்கொண்டே ஸ்விட்ஸர்லேண்ட் போகிறோமா? உடல் கை தோள் பாற்சுரப்பிகள் வீங்க வயிறு சிறுக்க உடற்பயிற்சி/போடாக்ஸ் விவகாரம் செய்கிறோமா? ஏன் இந்தத் தற்கால எழவுகளுக்கு ஒருமாதிரி புரிதல், ‘அக்கால’ சங்கஎலக்கியங்களுக்கு இன்னொரு சப்பைக் கட்டு?)
இ. சங்க இலக்கியங்கள் சுமார் 2-4 நூற்றாண்டுகளில் இருந்து மிகக் குறைவான அளவில் ஆரம்பித்திருக்கலாம் – இதுவுமே சந்தேகம்தான்.
ஈ. சங்க இலக்கியம் சுமார் 8-9ஆம் நூற்றாண்டுகளில்தான் பெருவாரியாக எழுதப் பட்டிருக்கவேண்டும். அதுவும் சிலபல அலைகளில்தாம்.
தொல்காப்பியம் கொஞ்சம் முன்னே ஆரம்பித்திருக்கக் கூடுமென்றாலும் அது காத்திரமாக முடிக்கப் பட்டது பொதுயுகம் 1100களுக்குப் பின்னர்தாம் என இருந்திருக்கவேண்டும்.
தொல்காப்பியம் என்பது – அதன் சாராம்சத்தில் – அரங்கேற்ற/நாடக அடிப்படை + பாணிகளுக்கான இலக்கணம் அல்லது ஒருமாதிரி வழிகாட்டி – கோனார் நோட்ஸ். அதிலுள்ள திணைகள் வகை முதற்கொண்டு வடமொழி/ஸம்ஸ்க்ருத நாட்டிய-நாடக அடிப்படைகளைக் கொண்டுதாம் இருக்கின்றன. வெகுசில கூறுகளுக்கு அப்பாற்பட்டு, தொல்காப்பியம் என்பது பாரதப் பேரொழுக்குப் பாரம்பரியங்களுக்கு, மிகப் பெருமளவில் பாத்தியதைப் பட்டிருக்கிறது.
தொல்காப்பியம் என்பது ‘அந்தக் கால தமிழர் வாழ்வியலைப் பிரதிபலிக்கிறது’ என்பது ஒரு அப்பட்டமான புளுகு. சங்க ஆக்கங்களையும் அப்படிப் பார்ப்பது அசிங்கமே.
சிலப்பதிகாரம் ஒரு நாட்டிய நாடகம். அக்மார்க் புனைவு. அதனை வைத்து ‘சங்க காலம்’ எனும் இன்னொரு புனைவை நிறுவ முடியாது. அதில் சொற்பமாக ‘வரலாற்றுக் குறிப்புகள்’ இருக்கலாம் (எடுத்துக்காட்டு: பூம்புகார் ஒரு துறைமுகம்). ஆனால், அதன் அடிப்படை வரலாறு/தொன்மமுமே கூட, தமிழ் மூலத்தைக் கொண்டதில்லை. ஏனெனில் அது இன்னொரு துளு++ தொன்மத்துக்குப் பாத்தியதைப் பட்டிருக்கிறது.
ஆகவே அதனை வைத்து ‘மதுரையை இன்னிய தேதியில் எரித்த கண்ணகி’ என்றெல்லாம் ஜுரவேகத்தில் ஆர்வக் கோளாறுடன் படுதெகிரியமாக அட்ச்சிவுடக் கூடாது. சங்க இலக்கியப் புனைவுகளுக்கும் காப்பியக் கதைகளுக்கும் – வரலாற்றுக்கும் உள்ள தொடர்பு என்பது, முக்காலேமூணுவீசம் ஒரு சுவையான கற்பனையே.
உ. தமிழ் ஒரு மகத்தான, எனக்குப் பிடித்தமான, என்னுடைய மொழிதான். ஆனால் அது மிகத் தொன்மை வாய்ந்தது எல்லாம் இல்லை. என் தாய்மொழி என்பதாலேயே அதைக் குறித்து நான் பொய் சொல்லமாட்டேன்.
ஊ. தமிழ் மொழி என்பது, உலக அளவையே விடுங்கள்… பாரத நிலப் பரப்பிலேயே கூட மிகப் பழமையானதாக இருந்திருக்கத் துளிக்கூட வாய்ப்பில்லை. ‘திராவிட’ மொழிகள் என எடுத்துக்கொண்டாலே கூட ஒடிஷா-தண்டகாரண்யப் பகுதிகளில் இருந்த (இப்போதும் ஓரளவு இருக்கும்) கோலமி/குயி/கோண்டி++ மொழிகளுக்குத்தான் அந்தப் ‘பழமை’ என்பது பொருந்தும்.
எ. நம் தமிழ் மொழியைச் செம்மொழி எனச் சொல்லி நாம் பீற்றிக் கொள்ளலாம், பிலுக்கலாம் – ஆனால் உண்மை நிலை அப்படியில்லை ஏனெனில், உலகளாவிய செம்மொழிகள் எனக் கருதப் படுவைகளில் அருமையாக உள்ள சிலபல கூறுகள் நம் தமிழில் துளிக்கூட இல்லை, இருந்திருக்கவும் இல்லை. (…இவற்றையெல்லாம்- தமிழின் தற்காலப் பெருங்காயடப்பா (அல்லது பெண்ணிய டப்பி) நிலையை முன்வைத்துச் சொல்லவரவில்லை – அது வேறு ஒரு சோகக்கதை)
ஏ. தமிழ் மொழியை ‘தொன்மையானது’ என்று இப்படி ‘நிரூபித்த’ உடன், அதனுடன் தமிழ் ‘இனம்’ அல்லது திராவிட ‘இனம்’ எனும் திடுக்கிட வைக்கும் அற்ப அரசியல் நகைச்சுவை கோர்த்து விடப் படுகிறது எனும் அழிச்சாட்டியம், படு கேவலமானது. நம்மையே நாம் அசிங்கம் செய்துகொள்வது. (இந்த ‘இனம்’ எனும் விஷயத்திற்கும் அறிவியலுக்குமே ஒரு தொடர்புமில்லை, வெறும் பீலாதான் – அதனால் என்ன, அடுக்கடுக்காக அட்ச்சிவுடுவதில் நம் தமிழனுக்கு இவ்வுலகில் நிகரெவர், சொல்லுங்கள்?)
ஐ. காரக் குறுக்கம்; இருந்தாலும் எனக்கு என் தமிழ்மொழி, கொஞ்சம் செல்லம்தான்.
-0-0-0-0-
நம் பழம்பெருங்காயப் பெருமை (அப்போது அம்மாதிரிப் பெருங்காயம் எனவொன்று இருந்ததா என்பதே சந்தேகம்வேறு – இந்தப் பெருங்காயமும் இந்தியாவின் வடக்குப் பகுதிகள்+ஆஃப்கனிஸ்தான் வழி வந்ததுதான்) இந்த அழகில் இருந்தாலும் தமிழர்களுக்கு – தேதி நிர்ணயம் என வந்தால் வெறி அதிகமாகி விடுகிறது.
அதுதான், ஆகவேதான் – wild dates, காட்டுப் பேரீச்சை.
கண்டமேனிக்கும் அட்ச்சிவுடப்படும் சங்ககாலங்கள், அதாவது மாய்மாலங்கள்.
ஆதித் தமிழனின் தொன்மை. உலகின் முதல் ஈனம், தமிழீனம்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே… தமிழம்… டாஸ்மாக் உபயத்தில் குடித்தழிந்த மூத்தகுடி… ப்ளடி.
சப்பென்று முடித்ததற்கு மன்னிக்கவும்.
நன்றி.
—
—
July 5, 2022 at 12:41
July 6, 2022 at 09:10
அருமை தமிழ் ராம்,
தமிழ் மொழியின் வயது, வரலாறு குறித்து உங்களின் தரவு சார்ந்த தகவல்களை பகிருங்கள்.
தமிழினம் குறித்தும் எழுதுங்கள்.(அப்படி ஒன்று இருந்திருக்கிறதா?)
தமிழ் மொழி அழகானது தான்+என் தாய் மொழி என்பதிலும் ஒரு பெருமிதம் தான்.
போதாமைகள் இருப்பதும் உண்மை தான்.
கொஞ்சம் விளக்கமாகவே விளக்கிவிடுங்கள் 😀
அன்புடன்,
முஹம்மது
July 6, 2022 at 13:56
ஐயா முஹம்மது,
எங்கே நடுவே ஆளையே காணோம் என நினைத்துக்கொண்டிருந்தேன். :-)
மற்றபடி, ஆணித்தரமான தரவுகள் எனப் பலவற்றை அடுக்கலாம். என்ன, அதெல்லாம் புத்தக நீளத்துக்குப் போய்விடும், அவ்வளவுதான்.
தமிழ் மொழி, பிராந்திய வரலாறு என்றால் – பிரத்யட்சமாக இருக்கும் உண்மைகளைப் புறந்தள்ள (+ கூச்சமேயில்லாமல் அட்ச்சிவுட) என ஒரு குடிசைத் தொழிற்சாலை இயக்கம், பரவலாக இருக்கிறது. அதன் தொழில்முனைவோர் (=தொ. பரமசிவம்,, அயோத்திதாசர், தேவநேயப்பாவாணர், ஜார்ஜ்ஹார்ட், கமீல் ஸ்வெலபில் என நூற்றுக் கணக்கில் இருப்பவர்கள், இருந்தவர்கள்) சொல்லும் சால்ஜாப்புகளே, மூலத் தரவுகளாக மாறிவிடுகின்றன. அவைகளின்மேல் கட்டமைக்கப்பட்டவைதான் பெரும்பாலான, நாம் தமிழக வரலாறு எனப் புரிந்துகொள்ளும் விஷயங்கள்.
கரிகாலன் கல்லணையிலிருந்து கண்ணகி கட்டுக்கதை – ‘திராவிட மொழிக் குடும்பம்’ எனச் சகல விதங்களிலும் கதையாடல்களும் புரளிகளும் மட்டுமே, வரலாற்றில் வியாபித்திருக்கின்றன.
இவர்களைக் கேள்விகேட்க ஒரு இயக்கம் வந்தால்தான் முடியும். அதுவரை நாம் மூளைச்சலவை செய்யப் படுவது தொடரும்.
அதனால்.
என் சிற்றறிவுக்கு எட்டிய முயற்சியாக, முதலில் அந்த சால்ஜாப்புகளில் இருந்து ஆரம்பிக்கிறேன். பார்க்கலாம், அதனை எப்படி விரிக்கலாம் என்று…
நன்றி.
July 8, 2022 at 02:39
>>wild dates, காட்டுப் பேரீச்சை.
உங்கள் அபிமான எஸ்.ரா ஸ்டைலில் languagetranslate(அதாவது மொழிபெயர்ப்பு Copyright: எஸ்ரா ) செய்து எங்களை பழி சொன்னால் என்ன நியாயம்?!
July 8, 2022 at 08:03
ராம்,
உங்களை தொடர்ந்து படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.மேற்குறிப்பிட்ட படி உங்களின் கருத்துக்களை, பதிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன்.
உங்களின் அறிவார்ந்த, தரவு சார்ந்த பதிவுகள் பிரமிப்பானது.எப்படி இவரால் முடிகிறது என யோசித்திருக்கிறேன். நான் ஒரு முழுமையான அரைகுறையாய் இருப்பதால் உங்களின் சில கருத்துக்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறது. தங்களின் சில சாய்வுகள், சார்புகள் பீதியை கிளப்பினாலும், புரிந்து கொள்ள முடிகிறது. யாருக்குத்தான் சார்புகள் இல்லை சொல்லுங்கள்.
கடவுளின் அருள் என்றேன்றும் தங்களுக்கு கிடைக்கட்டுமாக..
அன்புடன்,
முஹம்மது.
July 8, 2022 at 20:01
யோவ்! இப்படி சப்புன்னு முடிக்கறத ஒத்துக்க முடியாது!!
காட்டு காட்டுனு காட்டுப்பேரிச்சம்பழம் பற்றிய பல ஆராய்ச்சி முடிவுகளை உலகத்துக்கு எப்படி அறிவிப்பது?
மற்றும் தமிழ் குடியே ஆதி குடி என்றும் அதன் மூலம் டாஸ்மாக்கின் பத்தாயிர வருட வரலாற்று சிறப்பு என்ன என்பதும் விளக்க படும்
July 10, 2022 at 20:39
/அருமையாக உள்ள சிலபல கூறுகள் நம் தமிழில் துளிக்கூட இல்லை, /
Crore Show Hair And Cow
கோடிக்காட்ட முடியுமா
July 13, 2022 at 13:22
July 14, 2022 at 09:48
July 16, 2022 at 17:29
ஆனைச்சாத்தனாய் தேவரீர் கீசு கீசெனக் கீச்சியவற்றை படித்தின்புற்றேன்.
ஆனால் இவை அடியேன் தொடுத்த சிறுவினவிற்கான விளக்கங்கெளனக் கொள்வதற்கில்லை.
/உலகளாவிய செம்மொழிகள் எனக் கருதப் படுவைகளில் அருமையாக உள்ள சிலபல கூறுகள் நம் தமிழில் துளிக்கூட இல்லை, /
என்ற வாய்கத்துக்கு வ்யாக்யானஞ் சாதித்தருளவேண்டினோம்.
தெக்கார் தொன்மொழி இல்லையெனில்
எக்கூர் உள்ளது செம்மொழியோ?
அக்கூர் இன்மையை சாற்றிடுமின்
தக்கார் சொல்வதை கேட்டமர்வேன்
July 17, 2022 at 22:40
[…] இந்தப் பதிவின் (காட்டுப் பேரீச்சம்பழமும் தமிழனின் த… July 5, 2022 ) பின்னூட்டங்களில் அவை உள்ளன + […]