செவ்வொத்திசைவு ஒத்திசைவு X செம்மொழி தமிழ்மொழி
July 17, 2022
ஓரிரு பதிவுகள் முன்பு நான் எழுதியது:
// உலகளாவிய செம்மொழிகள் எனக் கருதப் படுவைகளில் அருமையாக உள்ள சிலபல கூறுகள் நம் தமிழில் துளிக்கூட இல்லை,
இதேபோலப் பலமுறை நான் எழுதியிருக்கிறேன்.
நம் தமிழ்மொழி போன்று, உள்ளீடோ முகாந்திரமோ இல்லாமல் அரசியல்படுத்தப் பட்ட மொழி என வேறொன்று, வேறெந்த கலாச்சாரத்திலும்’ இல்லை.
மொழி எனும் கற்பிதத்திலிருந்து, தமிழ்தான் ஆதிமொழி-மொழிகளுக்கெல்லாம் மூலம் எனும் பகீர் பயங்கரத்துக்கு வந்து, ‘இனம்’ எனும் முட்டாள் கற்பிதத்தில் மூழ்கி, திராவிடம் எனும் பேடித்தனத்தின் வழியாகத் தமிழ்தேசியம் எனும் அவலத்தை வந்தடைந்து – தமிழக ஆதிவரலாறு குறித்த கட்டுக்கதைகளுக்கும், அயோக்கிய-பைத்தியக் காரத்தனமான பிரிவினைவாதத்துக்கும் முட்டுக் கொடுக்கப்படுவது நமது ப்ளடி அகலாச்சார மூளைச்சலவைச் சூழலில்தான் சாத்தியம்.
உலகத்தின் ஆதிச் சுயமைதுனம் தமிழ் சுயமைதுனமே என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.
…இவை களேபரக் கருத்துகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், குறைந்த பட்சம் 3 மாமாங்களுக்காவது இவை குறித்து யோசித்து, சிலபல நண்பர்கள் (+சான்றோர்கள்) உடன் கலவர உரையாடல்களில் (அடிதடி உட்பட) ஈடுபட்டிருக்கிறேன்.
என் அனுமானம் என்னவென்றால், நாம் தமிழர்கள், கூட்டுக் கஞ்சா அடிப்பதில் வல்லவர்கள், அவ்வளவுதான். பீலா சுயதம்பட்ட சுயகாரியப் புலிகளும் கூட.
என் தற்போதைய பிரச்சினை என்னவென்றால் – இப்போது சிலபல நண்பர்களும் அன்பர்களும் இதைக் குறித்து விளக்கங்களைக் கேட்டிருக்கிறார்கள்: இந்தப் பதிவின் (காட்டுப் பேரீச்சம்பழமும் தமிழனின் தொன்மையும் July 5, 2022 ) பின்னூட்டங்களில் அவை உள்ளன + சிலபல நண்பர்களும் பல்லாண்டு காலமாக, என்னிடம் (போய்!) பிராது வைத்திருக்கிறார்கள், பாவம்.
(ஏண்டா ப்ளடி திருவாயைத் திறந்தோம் என ஆகிவிட்டது… என் அம்மா, என்னுடைய இளம் வயதில் – அல்லது அது போன்ற காலகட்டங்களில், அடிக்கடி ஒரு பழமொழியைச் சொல்லிக் கடுப்பேற்றி என் வாயை அடைப்பார்: “பேசப் போனாயோ சாகப் போனாயோ…”)
வாழ்க்கையே स्वयंकृत अनर्थम, oh what to do.
:-(
-0-0-0-0-0-
ஆம்.
உலகளாவிய/ப்ரபலஸ்த செம்மொழிப் பண்பாடுகளில் (=classical language cultures) உள்ள சிலபல கூறுகள் தமிழ்மொழிக்கு வாய்க்கவில்லை. அந்தப் பிற மொழிகள் என நான் குறிப்பிடுவதன் சில எடுத்துக்காட்டுகள் பாஷா (பிற்கால ஸம்ஸ்க்ருதம்+), சில ப்ராக்ருதங்கள், லத்தீன், க்ரேக்கம், மலையாளம்++.
…சொல்லப் போனால், நானுமொரு (வெறி பிடித்தவனல்லாத) தமிழ் விரும்பியானாலும், முடிந்தவரை தமிழிலேயே சிந்திக்க முயற்சிப்பவனானாலும் – தமிழ் மொழி செம்மொழி என நாமே அதனை அழைத்துக் கொள்வதில், முக்கியமான ஒரு காரணத்தினால், எனக்கு ஒரு கூச்சம் இருக்கிறது. அப்படி அழைப்பது அறமா என்பது கூட எனக்குச் சில சமயங்களில் சந்தேகம்தான். (நம் பிரதமர் மோதி அவர்கள், திரும்பத் திரும்ப தமிழ் மொழியின் தொன்மை பற்றி, நல்ல-பரந்த மனப்பான்மையுடனும் பெருமையுடனும் பேசும்போதெல்லாமும் எனக்கு வெட்கம்தான்!)
சரி. நம் தமிழுக்கு அப்படி மேலதிகப் பெருமைகளைப் பெறாததின் காரணங்கள், நம் தமிழுக்கு இழுக்கல்ல – பாரதப் பேரொழுக்குக்கு, அதாவது அதன் உள்ளடக்கங்களின் ஒன்றான தமிழப் பாரம்பரியத்துக்குப் பெருமை சேர்ப்பவைவையே. இன்னொரு பக்கம் பார்த்தால், அவை, தமிழைப் பற்றிப் பொய்பொய்யாகத் திரிக்கும் மாக்களின் அயோக்கியத்தனத்தையும் உணர்ச்சிபூர்வ மசுக்கூச்செறிதல் கொசுக் கடிகளையும், தமிழ்வரலாற்றுக் கஞ்சாப்புகைத் தொழில்முனைவுகளையும் குறிக்கின்றன.
அதே சமயம், தமிழ் மொழிப் பண்பாடுகளில் சில, உண்மையாகவே பெருமைப் படுத்தத் தக்க விஷயங்களும் இருக்கின்றன. அதாவது, மெட்ராஸ் பாஷை போல, என்பதையும் குறிப்பிடவேண்டும். இதைக் கிண்டலாகச் சொல்வதில்லை – ஏனெனில் தமிழ்சார்ந்த வழக்கு மொழிகளில், இந்த ‘மெட்றாஸ் பாஷை’ தான், தொடர்ந்து வீரியத்துடன் வளர்ந்து வருகிறது, புதிய சிந்தனைகளையும் படிமங்களையும் கொண்டு சேர்க்கிறது என்பது உண்மை. டகால்டி, மெர்ஸல் போன்றவையெல்லாம் இதற்கு எடுத்துக் காட்டுகளே. (இந்த மெட்றாஸ்பாஷை எனும் தொடரும் மஹோன்னதம், எனக்கு ஆச்சரியத்தைத் தரும் விஷயங்களில் ஒன்று)
சரி. ‘செவ்வொத்திசைவு ஒத்திசைவு X செம்மொழி தமிழ்மொழி’ விவகாரத்துக்கு வருகிறேன்.
மேற்குறிப்பிட்ட காரணங்கள் குறித்தும் நம் நகைக்கத்தக்க சங்ககால பிரமைகள் + உளறாறுகள் பற்றியும், என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் விலாவாரியாக எழுதவேண்டும் (+ உங்களைப் போன்ற சக ஏழரைகளிடம் இருந்தும் கற்றுக்கொண்டு என்னைச் செப்பனிட்டுக் கொள்ளவேண்டும்) எனத்தான் ஆசை; ஆனால், இக்காலங்களில் வூட்ல க்ருஹஸ்த வேலைகள் அதிகமாகிவிட்டன, யின்னா ஸெய்றது, ஸொல்லுபா…
…மூத்தோர் காப்புணர்ச்சியும் கூடச் சேர்ந்து நடனமாடுகிறது. அடுத்த தலைமுறைகளுக்குச் சரியான பாதை அமைத்துக்கொடுப்பதில் உள்ள லௌகீகச் சிடுக்கல்கள்வேறு. என்னதான் பூர்வஜன்மப் பலன், விதி என்றெல்லாம் பார்ப்பவனல்லன் நான்; நம் மானுட ‘வாழ்க்கைக்கு/ப்ரபஞ்சத்துக்கு அர்த்தம் என ஏதாவது பொதிந்து இருக்கிறது’ என்பதையும் நான் நம்புபவனல்லன் – என இருந்தாலும், என்னைக் குறித்து நானே பெருமைப் பட்டுக்கொள்ளும் நகைச்சுவை(!) உணர்ச்சிக்கும் அப்பாற்பட்டு, கொஞ்சம் একদিন প্রতিদিন விஷயங்களில் தளர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது…
Rta, you tough bitch… அயர்ச்சி.
இருந்தாலும் – இதிலெருந்தெல்லாம் மீள – புதிதுபுதிதாக எத்தையானும் கற்றுக்கொள்ள, எழுதப் பயிற்சி கொடுத்துக் கொள்ள எனத் தொடர்ந்து செயல்பட நினைக்கிறேன்.
கிண்டலாக எழுதுவது கொஞ்சம் சுளுவான விஷயம். (இதில் நான் சுயமோகனன், சமயங்களில் நான் எழுதியதை நானே படித்துச் சிரிப்பதும் வழமை இன்பம்ஸ்)
அட்ச்சிவுடுவது இன்னமும் சுலபம் – ஆனால், பொதுவாகவே, இதனை நான் மனமறிந்து செய்யமாட்டேன்.
ஆனால்.
…தரவுகளுடன் (+தவறுகளைப் பகிரங்கமாகச் சுட்டுவதற்கும் + அவற்றைத் திருத்திக் கொள்வதற்கும்) எழுதுவதற்கு ஒருமாதிரித் தொடர்ந்த வாய்ப்பும் நேரமும் (unfragmented time) வாய்க்கவேண்டும். + பல விஷயங்கள் தொடர்பாகவும் பல்லாண்டு காலமாக எடுத்துக்கொண்டிருக்கும் அனலாக் கிறுக்கல் குறிப்புகளை இரண்டுமூன்று இடங்களில் இருந்து மீட்கவேண்டும். + மிக முக்கியமாக – அக்கிறுக்கல்கள் எனக்குப் புரியவும் வேண்டும்; ஏனெனில், என் கையெழுத்தின் பராக்கிரமம் அப்படி. :-(
இருந்தாலும்…
புரிந்தவன்…
July 19, 2022 at 01:33
சார், உங்களுக்கு இது தெரியுமா ?,🤣🤣
https://fb.watch/eltuaLzAkb/
July 19, 2022 at 08:22
Been there, dissed that. But that’s not funny, it is the truth.
July 19, 2022 at 16:36
I kinda had a weird deja vu when I saw this tweet.. Have you written something similar (sarcastically, of course) earlier ? I suspect that our crocodile minister is one of the esteemed Yaezharai-s and is bringing all your theories mainstream…
Ennavo ponga.
July 19, 2022 at 12:24
முயல்கிறேன் என்றசொல் கேட்டதனால் நன்றாய்
துயில்கிறேன் ஏழரையேன் செம்மொழியின் பாங்கைப்
பயில்கிறேன் சொல்வீர் இனி
July 19, 2022 at 14:48
ஐயன்மீர்! அது பாங்கல்ல, போங்கு.