மோஹன்தாஸ் கரம்சந்த் ‘பாபுஜி’ காந்தி, ஆக்கிரமிப்பு அடாவடி மஸூதிகள் & மீட்சி/திருப்பி எடுத்துக்கொள்ளப்படல் – சில குறிப்புகள்

June 23, 2022

இது சிலபல வருடங்களாக (என்  மதிப்புக்கும் அன்புக்கும் உரிய, இன்னமும் நம்பிக்கையுடன் களப்பணி செய்துகொண்டிருக்கும் காந்தியவாதி நண்பர் ஒருவருடன் வாய்க்கா தகராறு) அப்படியும்இப்படியும் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் – இதைப் பற்றி, அதிலும் ஒரு குறிப்பிட்ட விடயம் 🤥குறித்து எழுத சமயம் இன்றுதான் வாய்த்தது.

1

முதலில், இன்றைய தேதிக்கு, என் அனுபவமும் புரிதல்களும் எனக்குப் போதிக்கும் வகையில், பாபுஜி குறித்த என் சாராம்சக் கருத்துகளைக் குறிப்பிட வேண்டும்.

. பாபுஜி அவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை (நேரிடையாக, மறைமுகமாக, எதிர்மறையாக) என, பல இருக்கின்றன. இவற்றில் பலவற்றை நான் இன்றுவரை ஆச்சரியத்துடன் தான் பார்க்கிறேன். சர்வ நிச்சயமாக, அவர் பஹுரூபி காந்திதான். (ஆனால், நான் காந்தியனாக என்றுமே இருந்தது இல்லை, இனிமேலும் இருக்கப் போவதுமில்லை; அதே சமயம், பாபுஜி பாரம்பரியத்திற்கான ஏகபோகக் குத்தகைதாரர்களாகப் பிரிவினைவாத அயோக்கிய வெறிச்சக்திகள் (இஸ்லாம்/ஜிஹாதியம், இடதுசாரியம், இவாஞ்ஜெலிக்கல் க்றிஸ்தவம், மனிதவுரிமையம், நபும்ஸக ‘லிபரல்’கள்++) தங்களை வரித்துக் கொள்வதையும் விரும்புபவனல்லன், நன்றி!)

. பொதுவாகவே அவருடைய பார்வைகளின் அடிப்படைகளில் பல, அவருடைய சிறுவயது அனுபவங்களினாலும், குற்ற உணர்ச்சியினாலும், பிறழ் வரலாறுகளை அப்படியே நம்பியதாலும் உருவானவை. பாரதம்/ஹிந்து மதங்கள் குறித்த அவருடைய பார்வைகளில் பல அவரளவுக்கேகூட, முழுமையானவையாக இல்லை. க்றிஸ்தவ-இஸ்லாமிய மதவாதத்தின் ஊற்றுக் கண்களை உணர்ந்து கொள்ளாமல், அச் சமூகங்களை பாரத அடிப்படை, ஆதாரஸ்ருதியுடன் பிணைக்க அவர் செய்த முயற்சிகளுக்காக, பாரத-ஹிந்து சமூகம் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம்.

. அவர் நிறைய விஷயங்களில் மஹோன்னதர். அதே சமயம் பிற வகைகளில், தத்தளிக்கும் ஒரு மானுடர். பல சமயங்களில் வழவழா கொழகொழா.

. பாரத சமூக ஒருங்கிணைப்புக்காக, அவரைப் போலத் தொடர்ந்து பாடுபட்டவர்கள் அதிகமில்லை. அவர் தனக்கு, தனிப்பட்ட முறையில் ஒத்துவந்த விஷயங்களை – ஹிந்து சமூகத்தினர் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்ளவேண்டும் என விரும்பியவர்.

. அவருடைய பெரும் ஆளுமையால் வசீகரிக்கப்பட்டு, பலப்பல நிபுணர்கள் அறிவாளிகள், பலப்பல தளங்களில் மகத்தான பாரத சேவை புரிந்திருக்கின்றனர்; அதே சமயம், அவர் ஆளுமையை (அவர் அறியவே, ஒருவேளை அவர் ஆசியுடனேகூட) உபயோகித்து மேன்மேலே தங்களைச் செலுத்திக்கொண்ட சுயகாரியப் புலிகளும் பலர் – சாச்சா நேரு, மௌலானா அபுல்கலாம் ஆஸாத் என ஆரம்பித்து, இப்படிப் பலர்.

. …

மேற்கண்டவற்றின் பின்னணியில் தான் – ஆக்கிரமிப்பு அடாவடி மஸூதிகள், அவற்றைத் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் போன்றவை குறித்த அவருடைய கருத்துகளைப் பார்க்கவேண்டும்.

2

என் நண்பர் தீவிர அஹிம்ஸா மார்க்கத்தினர், ஒருமாதிரி காந்திய வன்முறையாளர்; அதாவது –  

‘ஒருவன் உன் கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு. அதற்குப் பிறகு வரிசையாக  உன் அன்னை, தகப்பனார், மனைவி, பிள்ளைகள் என அனைவர் கன்னங்களையும், ஒரு சமரச சன்மார்க்கியாக அவனுக்குக் காட்டு… அவன் அறைந்து அறைந்து களைத்துப் போகட்டும், கடோசியில் வெற்றி உனக்கே! ‘

…வகை ஜந்து.

ஒவ்வொரு முறை, ஏதாவது ஒரு பின்புலத்தில் அவர்  காந்திய மேற்கோள் ஒன்றை அறச்சீற்றத்துடன் காட்டினாலும் அதற்குப் பிரதியாக  பாபுஜியின் எதிர்மறைச் செயல்பாடு அல்லது எழுத்தைச் சுட்டிக் காட்டி விடலைத்தனத்துடன் இன்புறுவது என்பது என் சில்லரை மகிழ்ச்சிகளின் ஒன்று. (இந்த மாதிரி வேட்டையாடு-விளையாடு தர உரையாடல் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது, பாவம் அவர்)

எது எப்படியோ… என் பிரம்மாஸ்திரங்களில் ஒன்று பாபுஜி 1925 வாக்கில் யங்கிந்தியா/இளையபாரதத்தில் ஆசான்பக்கங்களில் அளித்த ஒருமாதிரி பதில் ஒன்று.

அயோத்தி ராமர்/க்ருஷ்ண-ஹரி கோவிலை அநியாயத்துக்குத் தரைமட்டமாக்கி அதன்மேல் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட ‘பாபரி மஸ்ஜித்’ கும்மட்டங்கள் இடித்தகற்றப்பட்ட 1992க்குப் பிறகு, ஏறத்தாழ 15-20 வருடங்களாக அவருடன்  தொடரும் வியாஜ்ஜியம் இது. முடிவிலா உரையாடல், மகத்தான நரையாடல்.  (2001க்குப் பிறகுதான் அவருடன் தொடர்பே ஏற்பட்டது என நினைவு…)

“பார், உங்கள் சங்கிகள் பாப்ரி கும்மட்டத்தை இடித்துவிட்டு இளிக்கிறார்கள் பார்! ஹிந்துக்களுக்கே இது வெட்கக்கேடான விஷயம்” + ஆர்எஸ்எஸ் குண்டர் அதுஇது என அவர் ஆனந்தமாகத் தேரோட்டிக்கொண்டு போகும்போது அவருக்கு, பாபுஜி சொன்னதை அனுப்புவேன்.

பொதுவாகவே, இதற்குப் பின்னர் அவர் சிலபல மாதங்களுக்கு மௌனவிரதத்தில் ஈடுபடுவார், பாவம். பின்னர் மெதுவாக மறுபடியும் காந்தி பஜனையை ஆரம்பிப்பார். நானும் முடிந்தவரை பொறுத்துக்கொள்வேன் – அதாவது மறுபடியும் வேதாளம் முருங்கமரம் ஏறும்வரை… (ஒரு பெரிய பிரச்சினையுமில்லை, அவர் பெரியவர், என்னுடைய அறியாமை+குயுக்தி குறித்துக் கோபித்துக்கொள்ள அவருக்குச் சகல உரிமைகளும் இருக்கின்றனதாம்!)

3

பாபுஜியிடம் ஒருவர், இளையபாரதம் பத்திரிகையின் ‘ஆசிரியர் பதில்’ பகுதியின் வழியாக 1925ல் ஒரு பிராது வைக்கிறார்:

அதன், ஒரு பகுதியின் சாராம்சம் கீழே. (இது முழுமையற்றது – ஆனால் முக்கியமானது – இளையபாரதத்தின் இப்பகுதியை முழுமையாகப் பின்னர் கொடுக்கிறேன்)

‘… ஒவ்வொரு முறையும் நாங்கள் முஸ்லீம்களுக்குப் பணிந்துபோக வேண்டும் எனச் சொல்கிறீர்கள்… நீங்கள் பின்புலம் முழுவதையும் உணர்ந்துதான் எங்களுக்கு அறிவுரை தருகிறீர்களா எனத் தெரியவில்லை… … ஒவ்வொரு முறையும் எங்களுக்குச் சொந்தமான நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து அவற்றில் மஸூதிகளைக் கட்டினால் நாங்கள் என்னதான் செய்ய?  இவற்றுக்காக நீதிபரிபாலனம், நீதிமன்றம் பக்கம் போகக் கூடாது என்றும் சொல்கிறீர்கள்… வரவர உங்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை… …”

இதற்குப் பதிலாக, பாபுஜி சொல்கிறார்…

“… The question of mosques built on another’s land without his permission is incredibly simple. If A is in possession of his land and some one comes to build something on it, be it even a mosque, A has the right at the first opportunity of pulling doWn the structure. Any building of the shapEt of a mosque is not a mosque. A building to be a mosque must be duly consecrated. A building put up on another’s land without his permission is a pure robbery .. Robbery cannot be consecrated. If A has not the will or the capacity to destroy the building miscalled mosque. he has the right of going to a Jaw cout·t to have the building pulled-down”

மேற்கண்டதன் ஒருமாதிரியான தமிழாக்கம்:

“…மற்றொருவரின் நிலத்தில் அவரது அனுமதியின்றி கட்டப்பட்ட மஸூதிகள் குறித்து என்ன செய்வது என்ற கேள்வியானது, நாம் நம்பவே முடியாத அளவுக்கு எளிமையானது.

அ எனும் ஒருவர் ஒரு நிலப்பகுதியை தனது உடைமையாக வைத்திருக்கிறார் எனவும், அதற்குத் தொடர்பற்ற இன்னொருவர் அந்தக் குறிப்பிட்ட நிலப்பரப்பில் ஏதாவது ஒரு கட்டிடம் கட்ட முற்படுகிறார் – அது ஒரு மஸூதியாகவே கூட இருக்கட்டும் – என வைத்துக்கொள்வோம்.

அப்போது அ-வுக்கு, அவருக்குக் கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தில், அந்தக் கட்டுமானத்தை இடித்துத் தள்ளுவதற்கு உரிமை இருக்கிறது.

மஸுதி போன்ற அடையாளங்களுடன் இருக்கும் கட்டிடங்கள் எல்லாம் மஸுதியாகிவிடமுடியாது. ஒரு கட்டிடம் மஸுதியாகவேண்டுமென்றால், அது சரியான முறையில் பிரதிஷ்டை செய்யப் படவேண்டும்.

மற்றவருக்குச் சொந்தமான நிலத்தில், அவர் அனுமதியில்லாமல் கட்டிடத்தைக் கட்டுவது வடிகட்டிய திருட்டுத்தனம்.  திருட்டுத்தனத்தைப் புனிதப் படுத்தமுடியாது.

இச்சமயம், அ-வுக்கு, மஸுதி எனத் தவறாகக் கருதப்படும் அந்தக் கட்டிடத்தை இடித்துத் தள்ளும் திறனோ செயலூக்கமோ இல்லையென்றால், அவருக்கு நீதிமன்றம் செல்லும் உரிமையும், அதன் மூலமாக அக்கட்டிடத்தை இடித்துத் தள்ளும் சாத்தியக்கூறும் இருக்கிறது…”

4

சரி.

பாபுஜியின் பார்வை படி – ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மஸூதிகள் இடித்துத் தள்ளப் படவேண்டியவையே! அவர் வாழ்க!

எட்றா அந்த 60,000+ ஜாபிதாவ…

பிரச்சினை என்னவென்றால் – பாபுஜிக்கு மஸுதி பற்றிய தெளிவு இல்லை.

ஏனெனில்.

ஒரு முஸ்லீமுக்கு, அவன்/அவள் மஸுதியானது, ‘புனிதம்’ என்றெல்லாம் இல்லை. ‘ப்ரதிஷ்டை’ எனவெல்லாம் ஒன்றுமே இல்லை.

மஸுதி என்பது எங்குவேண்டுமானாலும் இருக்கலாம் – மெக்கா நோக்கிப் பகுத்தறிவுடன், அறிவியல்பூர்வமாகத் தொழ, அந்த திசையை நோக்கி ஏதோ ஒரு கட்டுமானம்  (க்விப்ளா/qibla போல) இருந்தால் அதுவே அதிகம். மஸுதி என்பது புனிதமான விஷயம் அல்லவே அல்ல.  அதைப் புனிதம் என்று சொல்கிறவர்கள், தயை செய்து கொர்-ஆன் + ஹடித்கள் + ஸிராக்கள் படிக்கவேண்டும்.

வெட்ட வெளியில் ‘மெக்கா’வை நோக்கித் தொழமுடியும், ஒரு பிரச்சினையுமில்லை. (செவ்வாய் கிரகத்திற்கு மானுடர்கள் செல்லும்போது அவர்களுக்கு சில சிறு பிரச்சினைகள் வரலாம், ஆனால் கணிதபூர்வமான, ரொபாடிக்ஸ் இத்தியாதிகள் வழியான சிடுக்கவிழ்த்தல்கள் சாத்தியமே)

பிற மதங்களின் சிலைகளை உடைப்பது, வழிபாட்டிடங்களை அழித்தொழிப்பது போன்ற செய்கைகள் – முஸ்லீம்களுக்குப் புனிதமானவை. அவர்கள் பார்வையில் அவை போற்றத்தக்க விஷயங்களே! அந்த மார்க்கத்தைக் கண்டுபிடித்த மொஹம்மத் நபி தானே, பலமுறை செய்த இஸ்லாமிய வழி அறச்செயல்களே! இம்மாதிரி அவர்கள் கடவுளாகிய ‘அல்லாஹ்’வுக்காக அவர்கள் செய்யும் விஷயங்கள் – அவர்களுக்கு ‘ஜன்னத்’ சொர்க்கத்தைக் கொடுப்பவை இன்னபிற.

மேலும் – பிற மதங்களுடைய வழிபாட்டிட இடிமானங்களை வைத்து மஸுதிகளைக் கட்டிக்கொள்வது – முக்கியமாக படிக்கட்டுகள், கழிப்பறைகளை அமைத்துக்கொள்வது போன்றவை, ஆவணபூர்வமாகவே அவர்களுக்குப் பெருமிதம் தந்த/தரும் செய்கைகள். (ஆனால், இவற்றை இழிசெயல்களாகவும் காட்டுமிராண்டித்தனங்கள் எனவும் கருதும் அ-முஸ்லீம்கள், அதாவது நம்மைப் போன்ற குஃபர்கள்/காஃபிர்கள், அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை)

இந்தியாவில் உள்ள 1700 வாக்கிற்கு முன்பான மஸுதிகள் அனைத்தும், ஏறத்தாழ, ஆக்கிரமித்து, ஹிந்து/பௌத்த/ஜைன கோவில்களை மதவெறியுடன் இடித்துக் கட்டப்பட்டவையே.

ஆகவே, அவை, பாபுஜியின் பார்வையில், மஸூதிகளே அல்ல. இடித்துத் தள்ளப் படவேண்டியவைதான்.

5

சரி.

கீழே, ஒரு முழுமைக்காக, இளையபாரதத்தில் பதிப்பிக்கப் பட்ட பக்கங்களைக் கொடுக்கிறேன்.

இப்போதைக்கு, ஏதோ என்னால் முடிந்தது.

நன்றி.

END

6 Responses to “மோஹன்தாஸ் கரம்சந்த் ‘பாபுஜி’ காந்தி, ஆக்கிரமிப்பு அடாவடி மஸூதிகள் & மீட்சி/திருப்பி எடுத்துக்கொள்ளப்படல் – சில குறிப்புகள்”


 1. Source for the snippets:

  Young India collection, 1924-1926 (S. GANESAN, PUBLISHER, TRIPLICANE, MADRAS. S. E. 1927) by Mahatma Gandhi, pp 195-7

  https://dspace.gipe.ac.in/xmlui/bitstream/handle/10973/33432/GIPE-007564.pdf?sequence=2&isAllowed=y


 2. This article/tweet-thread by Balbir Punj (quoting the same exact text extract) made me dust this years old draft, finish it somewhat and post FWIW.


 3. Statute of limitations by செல்ல பாபுஜி என்ன சொல்லியிருக்கிறார் அல்லது சொல்லியிருப்பார், என்கிறீர்கள்?


  • AFAIK, Bapuji has never talked about specifics of ‘Statutes of Limitations.’ or about ‘Prescriptive Periods.’

   He has talked in general about the cliched, ‘An eye for an eye…’ as also about ‘Ahimsa’ when convenient – which are all lofty ideals, not meant for mere mortals like us or even for a huge civilization with a long history like ours. In any case, they royally fly against evidence based evolutionary biology/psychology.

   Apart from the rigour of daily/life practiced as a karmayogin and in general being ‘truthful’ – in which he mostly lead by setting a personal, stellar example – he did not look seriously at the dharmic aspects of kshatrata, if I may say so. Instead he merely extrapolated his ‘ideas’ from his personal example to the society-at-large – unmindful of the differences in scale, contexts, emergent knowledge etc.

   So.

   Our dear Bapuji can never be accused of coherence or consistency in his ideas vis-a-vis rajdharma though he dabbled in that (sometimes shamefully), but then, a foolish consistency is the hobgoblin of little minds – and of course, I would readily agree that he was a great man.

   So, he could have said anything to justify supplication to the marauding Islam as he repeatedly & stellarly did – may be stemming from his childhood traumas of getting bullied or from his misplaced notions of ‘non-violence’ or by a genuine love for humanity that transcends our individual bodies etc etc.

   One solid example that I could quote, for his negation of your SoL is: He was for Gram Swaraj (harking back to the days of yore) and for the resurrection of it in-toto; about the rejuvenation of the entire Bharatiya Samudhay as it existed earlier. (He was not a modernist, thank God, unlike a high modernist detritus like say Chacha, for example)

   So, one can say that he was for resurrection, reclamation, recovery in terms of dharma as he saw fit. And that he rejected your SoL.

   QED?

   • Sridhar Says:

    Like the example you quoted. But he let the ChaCha to be the PM and then have his way!

    If Gandhi were alive, do you think he’d have opposed the urbanization. Neither Nehru not Ambedkar agreed with Gandhi’s vision. Gandhi might have yielded. No?

    Won’t the same apply to the reclamation of temples if Nehru was against it?


   • Thanks for the pertinent pointers; would say, apt questions to ask and ponder over. Yes, the gedanken experiment of what Bapuji’s take would have been on Statutes-of-Limitation, is a moot point also because he was for (g)ramrajya.

    The fact is that, Bharat’s Gandhian heritage is a heavily mixed bag, though wouldn’t call it a ‘baggage,’ as of now at least.

    …and life goes on.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s