சூர்யா எனும் நடிகன், ‘ஆஸ்கர்’ அகடெமி அங்கத்தினனாதல், முதலையமைச்சர் இசுடாலிர் புளகாங்கித வாழ்த்துகள் – குறிப்புகள்
June 30, 2022
உண்மையிலேயே திடுக்கிட்டுவிட்டேன்! ஏனெனில் இது நகைப்புக்கிடமானது; தமிழகத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்போது கவைக்குதவாத ஒரு டகீல் விஷயத்தை இப்படி ஊதியூதிப் பெரிதுபடுத்தி, நடிகக் கோமாளிகளைத் தாஜா செய்ய, திராவிடர்கள் செய்யும் முயற்சியிது.
ஆனால் திராவிடமாடலில் இதெல்லாம் சகஜமப்பா.
1
அரசுபூர்வ நகைச்சுவைகளை முதலில் ஆழ்ந்து ரசிக்கவும்.
நடிப்புத் தகுதி எனப் பெரிதாக அதிகமில்லாமல் சொந்தபந்த சிவகுமார்களின் வழி நடிகரான சூர்யா – இந்த அகடெமியில் அனுமதிக்கப் பட்டிருப்பது, வெறும் ஒரு சாதாரண அங்கத்தினாகத் தான்.
இதைப் போய் ஏதோ ஸ்பெஷல் மஸாலாதோசை போல, ‘தேர்வுக் கமிட்டி’ அதுஇது என ஏடாகூடமாக அட்ச்சிவுட்டுப் புளகாங்கிதமடைவது சோகம்.
இதனையும் ஈவெரா ‘பெரியார்’ யுனெஸ்கொ விருது வாங்கினார் எனும் அராஜக நகைச்சுவை போல ஊதிப்பெருக்கவேண்டாம்.
அப்படியெல்லாம் அசிங்கப் படவேண்டாம் எனச் சொன்னால் கேட்கிறார்களா நம் பிரச்சார பீரங்கிகளும் ஊதுகுழல்களும் இன்னபிற குளுவான்களும், சொல்லுங்கள்?
இனி இந்த ‘உலகப் பெருமை’ எனும் எருமை, ‘மாபெரும் அங்கீகாரம்’ போன்ற புல்லரிப்புகளைப் பார்க்கலாம்.
2.
இந்த தலைமுறைவாத நடிகர் ஏற்கனவே இருக்கும் அங்கத்தினர்கள் இருவரின் ஆதரவைப் ‘பெற்ற’ அல்லது ‘வாங்கிய’ பின் தான் இப்படி ஒரு சாதாரண மெம்பர்/அங்கத்தினராகக்கூட ஆகியிருக்க முடியும்.
அதுவும் இதெல்லாம் ஒரு தேர்வுகமிட்டியேயல்ல. இந்த ஆஸ்கர் கொடுக்கும் அகடெமி எனும் சினிமாத்தொழில் முன்னேற்ற அமைப்பு, 17 பிரிவுகளில் ஒவ்வொரு வருடமும் புதிய அங்கத்தினர்களை உள்ளெடுக்கிறது. இதில் நடிகர்களுக்கான அமைப்பில் சேர்ந்த பலரில் இவரும் ஒருவர், அவ்ளொதான்.
மேலும் வசவசவென நிறைய இந்திய நடிகர்கள் அங்கே இருக்கிறார்கள்வேறு.
இம்மாதிரி அங்கக்தினராகும் பாக்கியத்தைப் பெறுவதற்கு நைச்சியமாக லாப்பி/பரிந்துரை செய்வதற்கென உயர்மட்ட புரோக்கர்கள் இருக்கிறார்கள். (இதெல்லாம் ஒருவர்முதுகை இன்னொருவர் சொறிதல், ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் செய்துகொள்ளல், ஸிஃபாரிஷ் பெற்றுக்கொள்ளத் தயக்கமில்லாமை – கூச்சமேயில்லாமல் செயல்படுவது, இடதுசாரி-லிபரல் குண்ட அமைப்புகளுடன் பரிச்சயம் போன்றவை இருந்தால்போதும்…)
நம் செல்ல பாடகபயில்வான் டிஎம் க்ருஷ்ணா அவர்கள், 2016ல் வேர்ல்ட்-ஃபேமஸ் மக்ஸய்ஸாய் விருது வாங்கியதற்கும் இதேகதைதான், கவலை வேண்டேல்! அவருக்குக் கிடைத்த வகை ‘Emergent Leadership’ category for bringing social inclusiveness in culture – அதாவது பண்பாட்டில் ஏதோ சமூகசேவை ஒருங்கிணைப்பு உட்சேர்க்கை வகையறா ‘சாதனை…’ ஓடும் பஸ்ஸில் பாட்டுப் பாடியும், மக்கள் சேர்ந்துவாழுமிடத்தில் கர்நாடக சங்கீத அலப்பரை-ஆலாபனை செய்தும் மக்களைக் கதிகலங்க அடித்ததற்கு அப்பால், இந்த யூஸ்ஃபுல் இடியட்டார் செய்தது என்ன? (சரி, சமூகசேவையில் – அவர் குறிப்பிடத்தக்க பாடகராக இருந்தார் என்பதை நான் அறிவேன்)
சரி. நம் வாழையடிவாழை நடிகர் பக்கம் மறுபடியும் வருவோம்…
அப்படி ‘பரிந்துரைகள் பெற்று’ அவர் அந்த அகடெமியில் உள்ளிழுக்கப் பட்ட பின்னும், சுமார் பத்தாயிரம் (10,000!) பேரில் ஒருவராகத் தான் அவர் இருப்பார். இதைப்போய் ஹிமாலயச் சாதனை ரேஞ்சுக்கு இழுப்பதற்குக் காரணம், தமிழர்களாகிய நம்மிடையேயும் அந்த நடிகரிடமும் வேறு விதமாகப் பெருமைப் பட்டுக்கொள்ள வேறு ஒரு விஷயமும் இல்லை என்கிற நிதர்சன உண்மையோ?.
எம்ஜி ஆர் ஆயிரத்தில் ஒருவர், சரி – ஆனால் இந்த தலைமுறைவாத நடிகர் சூர்யா, அதிக பட்சம் பத்தாயிரத்தில் ஒரு ஓரமாக ஒருவர், அவ்வளவுதான்.
ஆனால் என்ன, ஒரு பிரச்சினையும் இல்லை – இந்தப் பத்தாயிரம் பேரும் ஓட்டுப் போட முடியும். அவ்வளவுதான். நம் கார்ப்பரேஷன் வார்ட் தேர்தல்களில் ஒட்டுப் போடும் ஒரு சாதாரண பிரஜையை நாம் பெரிதாக நினைக்கிறோமா என்ன? ஆனால் – நம் சூர்யாவுக்கு ஏகத்துக்கும் பில்ட்-அப்…
ஆனாலும் ஐயன்மீர், நம் தமிழகத்தில் திராவிடப் பணத்தைக் கொடுத்து மக்களிடம் ஓட்டு வாங்குவதைப் போலவே, அகடெமியிலும் ‘ஹை லெவல்’ லாப்பி செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளவும். இந்த DIE காலகட்டங்களில் டைவர்ஸிடி-இன்க்லூஷன்-எக்விடி என மாக்கள் அலையும் கால கட்டங்களில் – இம்மாதிரித் தெரிவுகள் சகஜமப்பா.
இன்னொரு விஷயம்.
நடிகர் சூர்யா சேர்ந்ததும் ‘கோட்டா’ / இடஒதுக்கீடு ஸிஸ்டம் காரணமாகத்தான். ‘ஆஸ்கர் கொடுக்கும் த அகெடெமி அமைப்பு அபெர்ச்சர்2025 எனவொரு திட்டம் வைத்திருக்கிறது. இதன்படி ‘டைவர்ஸிடி’ வழியாக விதம்விதமாக அனைவருக்கும் படியளக்கப்பட்டு வருகிறது. தகுதி என்றெல்லாம் பெரிதாக இல்லை – ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வளவு, கருப்பர்களுக்கு இவ்வளவு, லேடினோஸ்களுக்கு இவ்வளவு என்பதெல்லாம் தான் முக்கிய தகுதிகள்.
மேலும், முக்கியமாக – நாம் தமிழகக் காப்பிக்கடை பிலிம்காரர்களைப் பற்றித்தான் பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவும். நமக்கெல்லாம் பொதுவாகத் ‘தகுதி’ எனப் பேசவே அருகதையில்லை.
ஆனால் இந்த அற்ப விஷயத்தைப்போய் ஒரு உலகசாதனை போலப் பீற்றிக் கொள்கிறோம். நம் முதலையமைச்சரும் கூச்சமேயில்லாமல் சூர்யா சார்பாகப் பிலுக்கிக் கொள்கிறார்.
3.
இருந்தாலும்.
தமிழகத்தின் அடிப்படை வாழ்வாதாரங்களில் ஒன்று இந்த திரைப்படத்திணைக் கேளிக்கை என்பது உண்ஂமைதான். ஆக, இதனைக் கர்மசிரத்தையுடன் ஊக்குவிக்கும் படுபிஸி முதலையமைச்சரின் செயல்பாடுகளும் புரிந்துகொள்ளத் தக்கவையே…
இருந்தாலும் – எனக்குக் கமல்ஹாஸன் ஒத்துவரவே மாட்டார் என்றாலும் – சூர்யா போன்ற பொதுவாழ்க்கை தண்டங்களைவிட, உச்சாணிக் கிளையில் நடிப்பு, செயலூக்கம், புதிய விஷயங்களை முயற்சிக்கும் தன்மை, நீண்ட நெடும்கால அர்ப்பணிப்பு போன்ற விஷயங்களில் அவர் இருக்கிறார். ஏன் அவருக்கு இந்த அங்கத்தினனாகும் பாக்கியம் கிட்டவில்லை? (ஏனெனில் அவருக்கு லாப்பி என்பதில்லை, சரியான சமூகப் பின்னணியும் இல்லை)
இந்தக் கமல்ஹாஸ்யத்தையே விடுங்கள்… ஜனரஞ்சகமாகவும் கருத்தியல்கிண்டல் ரீதியாக ஆயிரக்கணக்கான மீம்களின் நாயகனாகவும் இருக்கும், மேலும் முக்கியமாக, நடிக்கும் தகுதி என்பதையும் பார்த்தாலும் ஒப்புக் கொள்ளும் படியாக இருக்கும், நடிகர் வடிவேலு அவர்களுக்குத்தான் இந்த ‘அங்கத்தினர்’ பதவி(!) கிடைத்திருக்க வேண்டும்.
ஆனால் நடிகர் சூர்யா போலச் சுத்தமாகத் தெரியாத விஷயங்களில் (தேசிய கல்விக் கொள்கை போல) மேதாவித்தனமாக வெட்கங்கெட்டு உரத்துக் கருத்துச் சொல்லும் பாங்கோ, திராவிடத் தனமாக உளறியே ஆகவேண்டிய வெறியோ, வடிவேலு அவர்களுக்கு இல்லை. இதுதான் பிரச்சினை.
சரி.
இனிமேலாவது, நம் முதலையமைச்சரும் அவருக்குப் பின்/முன் இருந்து அவரை ஆட்டுவிப்பவர்களும் – உண்மைகளைப் பரிசீலித்து, தீர விசாரித்து, அதாவது கவனத்துடன் உழைத்துச் செய்திகளைப் பரப்புரை செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் நடந்திருப்பது படுகேவலம்.
ஆனால், நடந்துகொண்டிருப்பது ஒரு வெறும் வெற்று #திராவிடமாடல் ஆட்சி என்பதும் புரிகிறது. ஆகவே, அதில் அடிப்படை நேர்மைக்கோ, உண்மைக்கோ இடமில்லை என்பதும் தெரிகிறது.
நன்றி!
—
June 30, 2022 at 18:20
பாடகபயில்வான் 😂
July 2, 2022 at 00:41
Well said Ram.