சென்னை, திருநெல்வேலி+ பல்கலைக்கழக மாஜி பேராசிரியர் எஸ். கதிர்வேல், வரலாற்றாளர், பக்காத் திருடர் – குறிப்புகள்
November 10, 2021
…என ஆரம்பித்து, ஒரு சிந்தனையுமில்லாமல் கமுக்கமாகவும் பக்கம்பக்கமாகவும் இரக்கமேயில்லாமல் காப்பியடித்து மினுக்கிய பெருந்தகை பற்றி எழுதவேண்டுமா எனப் பலப்பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
(இம்மாதிரி லும்பன்கள் நிறைந்த உலகம்தாண்டே தம் தமிழ், திராவிட அறிவுசார்புலம்! இம்மாதிரி இருக்கும் ஆயிரக்கணக்கானவர்களில் ஓரிரு உருப்படியானவர்கள் இருந்தால் அது அவர்களுடைய துர்பாக்கியம், பாவம்!)
சுமார் இரண்டுவருடங்கள் முன் ‘முதுகுளத்தூரில் ஒரு கொலை’ (Murder in Mudukulathur – Caste & Electoral politics in Tamilnadu) எனும் ஒருமாதிரி, இம்மானுயல் சேகரன் விவகாரம் குறித்த புத்தகம் வாங்கினேன்.
இதற்குப் புகழ்ச்சியாக, என்னருமை அதிசராசரியான ஆஇரா வேங்கடாசலபதி ஒரு ப்ளர்ப் எழுதியிருந்தாலும், அதேஆள் இந்தப் புத்தகத்துக்கு முத்தாய்ப்பு வைத்தவராக, அதன் ஆசிரியரான பேராசிரியர் கேஏ மணிகுமார் அவர்கள் சொல்லியிருந்தாலும் அந்தத் தண்டச்செலவைச் செய்தேன். என் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை.
(பின்னொரு சமயம், முடிந்தால் இப்புத்தகச் சோகத்தைக் குறித்து எழுதவேண்டும்)
ஆனால் கேஏ மணிகுமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் மாஜி பேராசிரியர். இடதுசாரிப் பரப்புரையாளர்களின் டார்லிங். ஆகவே நேரடியாகவே குப்பையாளர் எனக் கருதி ஒதுக்கியிருக்கலாம்.
(இருந்தாலும், என் கர்மா என்னைவிடவில்லை)
-0-0-0-0-0-
நேற்று. ஏதோ விஷயத்தைத் தேடிக்கொண்டு (எல்லாம் அந்த எழவெடுத்த காப்பிக் காப்பியமான சிலப்பதிகாரம் விஷயமாகத்தான்!) என் நூலகத்தில் நோண்டிக்கொண்டிருந்தபோது – + தேவையேயில்லாமல் இந்த ‘முதுகுளத்தூரில் ஒரு கொலை’ புத்தகத்தைப் புரட்டிச் சிரித்துக்கொண்டிருந்தபோது…
…சட்டென்று என் செல்ல கதிர்வேலனார் நினைவுக்கு வந்து, பரபரக்கப் புத்தக அலமாரிகளில் தேடினால் (அந்த எழவையும்* தானமாகக் கொடுத்துவிட்டேனோ?)… கிடைக்கவில்லை.
இரண்டு பெரும்பேராசிரியக் கோமகன்களுக்கும் என்ன தொடர்பு?
ப்ளடி.
-0-0-0-0-
கதிர்வேல் – ஒரு படுஃபேமஸ் படுகேவல பிஹெச்டி ஆராய்ச்சி செய்து, பின்னர் அதனை ஒரு புத்தகமாகவும் வெளியிட்டார். அது A History of the Maravas, 1700-1802 (1977) – ஒரு பெருங்காப்பியம். பச்சை அயோக்கியத்தனம் + திராவிடர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கேவலமாக்கப்பட்ட சென்னை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இருந்தாலும் அது பெரிய அளவில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டது. பல வெளிநாட்டுப் பல்கலைக்கழக வரலாற்றுக் கல்வித்திட்டங்களில் ‘required reading’ ஆக வைக்கப் பட்டது. ‘மானுடவியல்-வரலாற்றியல் ஆராய்ச்சிகளை எப்படி செவ்வனே செய்வது’ என்பதற்கு ஒரு மகத்தான எடுத்துக்காட்டாகச் சுட்டப்பட்டது!
எனக்குத் தெரிந்தே (நான் என் கண்ணால் பார்த்தே) அமெரிக்காவின் பெரும்புகழ்பெற்ற சிலபல பல்கலைக்கழக நூலகங்களில் இந்தக் காப்பியம் இருந்தது.
அண்மைய தமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ளசெய்ய படிக்கவேண்டிய முதன்மைப்பத்து ‘டாப் டென்’ ஆய்வேடு/புத்தகங்களில் இந்த எழவும் ஒன்றாக நெடுநாள் இருந்தது, இன்னமும் இருக்கிறது!
என் நினைவில், நிக்கலஸ் டிர்க்ஸ் மேற்கொண்டு பலப்பல (உண்மையான) வரலாற்றாளர்கள் இந்த எழவைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார்கள்.
இது பெரும் பிரச்சினைதான்.
நான் பொதுவாகவே மதிக்கும் நிக்கலஸ் டிர்க்ஸ், சஞ்சய்சுப்ரமணியம், சுமதிராமசாமி போன்றவர்களெல்லாம் இந்த தண்டக்கருமாந்திரக் கதிர்வேலர்களுடைய ஆராய்ச்சிகளைச் சுட்டி தங்களுடைய சில வாதங்களை முன்வைக்கும்போது மிகவும் சங்கடமாகிவிடுகிறது, என்ன செய்ய
-0-0-0-0-0-
(*இதுதான் தானமாக வெளியே சென்றுவிட்ட தொகுப்பு)
இப்படிப்பட்ட கதிர்வேல அயோக்கியரை உதாரணபுருஷராகக் கருதிப் புளகாங்கிதம் அடைந்து புகழும் மகத்தான அரைகுறையான மணிகுமாரர் புத்தகத்தையே கைக்காசைப் போட்டு வாங்கி கரியாக்கியிருக்கிறேன்! ஐயகோ!!
ச்சை.
பின்குறிப்பு:
இந்தச் சோகக்காட்டுரையை முடித்திருக்கும்(!) இச்சமயத்தில் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் -இந்த அயோக்கியத் திருடர்கள் – அதாவது கூட்டுக் கொள்ளையர்கள் பற்றி மறுபடியும் எழுதப் போவதில்லை. ஆகவே:
1. கதிர்வேல் அசிங்கமாகவும் பக்கம்பக்கமாகவும் காப்பியடித்தது, பேராசிரியர் கே ராஜய்யன் அவர்களின் ஆக்கங்களிலிருந்து. சிறுஅளவில் பிற சத்தியநாதைய்யர் போன்ற சான்றோர்களின் புத்தகங்களிலிருந்தும்.
இம்மாதிரி காப்பிய ஆராய்ச்சி எழவுக்கு, பாரத அரசிடம் இருந்து உதவித்தொகையும் பயணப்படியும்… ப்ளடி. எல்லாம் நம் வரிப்பணம்.
(அதே சமயம், இதே ராஜய்யன் பிறர் காப்பியடிப்பதை பெருந்தன்மையுடன் ஆமோதித்து, வழிகாட்டியாகவும் இருந்து தன்னையும் அசிங்கப்படுத்திக்கொண்டு பிறரையும் கல்விப் புலத்தையும் அசிங்கம் செய்தார் என்பதும் வரலாறு!)
(தமிழகப் பல்கலைக்கழகங்கள் – அவற்றிலும் குறிப்பாக – சமூகவியல், மானுடவியல், வரலாறு, தொல்லியல், நாட்டாரியல், இலக்கியத் திறனாய்வு போன்ற துறைகள் போன்றவை படுகேவலங்களும் அயோக்கியர்களும் நிரம்பிய இடங்கள் என்பதில் நமக்குச் சந்தேகமே இருக்கக் கூடாது)
2. காப்பியடித்தது மட்டுமல்ல – அதனைப் புத்தகமாக வெளியிட்டு உலகமெலாம் சென்றடையச் செய்வதற்கு, மறுபடியும் அதே பாரத அரசிடம் இருந்து முழு மானியம் வாங்கியிருக்கிறார் கதிர்வேல்.
காப்பியடிக்காத சில வரிகளும் வடிகட்டப்பட்ட தூய குப்பைகள் எனச் சொல்லத் தேவையில்லை. இதைத் தவிர, ‘வரலாற்று ஆவணங்களைச் சேகரித்தேன்’ என ஒரு பெரும்புளுகு. ஆனால் அப்படி ஒன்றையும் செய்யாமல் கற்பனைகற்பனையாக மறவர்வரலாறுகளை மனம்போனபோக்கில் எழுதித் தள்ளியும் விட்டார்!
பின்னர் – தொடர்காப்பி பஜனை, குழுவாதம், வியாதியஸ்த அரசியல் செய்தே இந்தியவரலாற்றியல்காங்க்ரெஸில் முக்கியமான பதவிகளையும் ஆதாயங்களையும் அடைந்த பெருமகனார் இவர். (இப்படிப் பலர் இருக்கிறார்கள்)
3. படுகேவலம்.
4. இப்படிப்பட்ட ஒருவருக்கொருவர் கமுக்கமாகச் சொறிந்துகொடுக்கும் கேவலஸ்தர்கள் (ஆஇரா வேங்கடாசலபதி, மணிகுமார் உட்பட) தொடர்ந்து இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டுகளாகவும், வழிகாட்டிகளாகவும் மினுக்கிக்கொண்டு இருந்து நம் தமிழக அறிவுச்சூழலையே சாக்கடையாக மாற்றிவிட்டார்கள், பாவிகள்.
:-(
5. இச்சமயம் எனக்கு, என்னுடைய இன்னொரு செல்லமான தொ.பரமசிவன் அவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அவருடைய கள ஆராய்ச்சி ‘ஃபீல்ட்வர்க்’ எழவும் வெகுவாகப் புகழப்பட்டதுதான் – அடியேன் உட்பட என நினைவு, ஆனால் இந்த ப்ளடி ஒத்திசைவில் அதை எழுதினேனா என்பது சந்தேகமாக இருக்கிறது.ஆகவே அதனையும் மறுபரிசீலனை செய்யவேண்டும்போல; ஏனெனில் அவரும் திராவிடச் சாய்வுகள் கொண்டவர்தாமே? எப்படியும் அவர் பொதுவாகவே மானேதேனே அட்ச்சிவுடல் செய்பவர்தாம்.
சரி.
எப்படியும், என்னைப் பொறுத்தவரை அது நீலகண்ட ஸாஸ்திரியாக இருந்தாலும் சரி, ஆர்நாகஸ்வாமியாக இருந்தாலும்சரி, டிடி கோஸம்பியாக இருந்தாலும் சரி, ஏன் எஸ்என் பாலகங்காதராவாக இருந்தாலும் சரியே – அவர்கள் சொல்வது பற்றியும் அவர்கள் சுட்டும் வரலாற்றுமூலங்கள்/தரவுகள் குறித்தும் தீர ஆராய்ந்து ஒரளவுக்காவது புரிந்துகொள்ளாமல் ஒப்புக் கொள்வதில்லை.
ஆனால், இப்படிக் கறாராகப் பார்த்தால், நம் தமிழ் வரலாற்றாளர்கள், ‘சங்க கால/இலக்கிய’ ஆராய்ச்சியாளர்கள், பொழுதுபோக்கு வரலாறு எழுத்தாளக் கோமக்கள், பேராசான்கள், களப்பிரர்கம்பு சுற்றுபவர்கள், ஜெகஜ்ஜால கஜபாஹுக்கள் எவருமே தேறமாட்டார்கள் என்பதும் ஏறக்குறைய உண்மை.
என்ன செய்வது சொல்லுங்கள்… :-(
November 10, 2021 at 13:52
சமீபமாக திருமா ஒரு வரலாற்று ஆய்வாளராக வடிவம் எடுத்துள்ளார். கபாலீஸ்வரர் எப்படி கிறிஸ்துவத்தில் இருந்து வந்தார் என்பது போலெல்லாம் பேசத்துவங்கியுள்ளர். தெய்வநாயகத்திற்கு மற்றொரு வாரிசு.
November 10, 2021 at 16:22
ஐயன்மீர்! அதற்கென்ன?
புரோட்டா குருமா உண்டு கழிந்ததிலிருந்துதான் சிறுத்தை திருமா பிறந்தது என அதேபோல நம்மால் ‘நிறுவ’ முடியாதா என்ன?
கவலை வேண்டேல்…
November 10, 2021 at 15:51
//எல்லாம் அந்த எழவெடுத்த காப்பிக் காப்பியமான சிலப்பதிகாரம் விஷயமாகத்தான்//
ரொம்ப நாளாக இது pending-நு நினைக்கறேன் சார்!
November 10, 2021 at 16:18
Sir, I know – I think we chatted about it a bit.
Anyway – am working on a rejoinder to Sri TS Krishnan’s recent essays on Silappadikaram on ‘date fixing’ which are more or less like ‘match fixing’ in kirikkett.
Will at least briefly touch upon this touchy thing.
Bear with me in the interim.