ராஜனி திராணகம – ஸெப்டெம்பர் 21, நினைவுகூறல், அசைபோடல்
September 21, 2021
என் நினைவுகளில் – வருடத்தில் 10-15 நாட்கள் போலத் தவிர, பிற நாட்களில் – பல பெருமைப் படத்தக்க, விகசிக்கும் விஷயங்கள் நடந்திருக்கின்றன; அதேபோல மகத்தான சோகங்களும். பின்னவற்றில் ராஜனி திராணகம அவர்களின் வாழ்க்கை கோரமுடிவுக்கு வந்ததும்…
ராஜனி திராணகம: சில நினைவுகள், குறிப்புகள் – 21/09/2014
-0-0-0-0-
ஆனால்.
சில சமயங்களில், நினைவுகளை முழுமையாகவே மறக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.
-0-0-0-0-0-
ராஜனி அவர்கள் சார்ந்திருந்த ‘பல்கலைக்கழக ஆசிரியர்கள்’ குழு பதிப்பித்த 1988 அறிக்கையான ‘முறிந்த பனை’ புத்தகத்தின் முதற்பக்கங்கள்…
எவ்வித அர்த்தமுமின்றி வாழ்வைப் பறிகொடுத்த…
ராஜனி ஒரு தீர்க்கதரிசி:
ஸெம்ப்டெம்பர் 21, 1989 அன்று – ராஜனி அவர்கள், அடையாளம் தெரியாத கொலைகாரர்களால் (=எல்டிடிஇ கும்பல்) சுட்டுத்தள்ளப் பட்டார்…
முறிந்த பனை – 1996 தமிழாக்கம் – அதிலிருந்துதான் மேற்கண்ட சிறுபகுதிகள்/ஸ்னிப்பெட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன. (கடைசி படம், அதன் ஆங்கில வடிவத்திலிருந்து)
முறிந்த பனை ‘ Broken Palmyrah’அறிக்கையின் மூல ஆங்கில வடிவம் (1988/1990): https://www.uthr.org/BP/Content.htm
முறிந்த பனை – தமிழ் (1996): http://noolaham.net/project/11/1001/1001.pdf
முடிந்தபோது – ஸ்ரீலங்காவின் தமிழர் பிரச்சினைகள் குறித்து சிலபல மிக முக்கியமான பார்வைகளை வைக்கும் இந்தப் புத்தகத்தை, உங்களுக்கு அதுகுறித்த விஷயங்களின் பின்புலங்களை அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தால், படிக்கவும். ஏனெனில் – எல்டிடிஇ கும்பலின் வீழ்ச்சிக்கான காரணங்களை தெள்ளத் தெளிவாக வைக்கும் புத்தகமிது.
ஆனால், இப்புத்தகத்தில் அந்தக் காலகட்டங்களில் நடந்த விஷயங்களை ஓரளவு என்னைப்போல நேரடியாகவே (=காத்திரமான தரவுகளின் மீது கட்டமைக்கப்பட்ட) அறிந்துகொண்ட பாக்கியம்(!) மிக்கவர்களுக்கு சில ஒப்புக்கொள்ள முடியாத பகுதிகளும் இருக்கின்றன – ஆனால், விடுதலைப்புளிகளின் கயமைப் பரப்புரைகளின் சில அங்கங்களுக்கு, அந்த ஃபாஸ்ஷிஸ்ட் அமைப்பின் காத்திரமான விமர்சகர்களும் வீழ்ந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன.
எது எப்படியோ.
புளிகளை இன்னமும் தூக்கிப் பிடிக்கும் தமிழ்க்கொட்டை செங்கொட்டைகளான திராவிடர்களுக்கும், நாம்தமிழர் போன்ற பரந்துபட்ட லும்பன் அமைப்புகளுக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.
+ மேற்கண்டவர்களை விட…
பிரிவினைவாத நுரைதள்ளலில் தமிழகத்தை ஈடுபடவைக்க முனையும் திமுக-திராவிட + தமிழ்த்தீவிரவாத கும்பல்களைக் காத்திரமாக எதிர்கொள்ளப்போகும் பாரதத் தமிழ்ச் சமூகத்துக்கும்.
September 21, 2021 at 16:11
i shall read the book Sir. Seems to throw many truths on Sri Lankan problems. j