6-7 வயதுக் குழந்தைகள், ‘கல்வி’ – சில கேள்விகள், சிந்தனைகள், குறிப்புகள்

October 19, 2021

~ கடந்த 2-3 மாதங்களில் மூன்று அன்பர்களிடம் இருந்து சிறுகுழந்தைகள்/வளர்ப்பு குறித்த சில கேள்விகள், கருத்துகள் வந்திருக்கின்றன. அவற்றுக்குச் சாவகாசமாக (அன்பர்களிடம், (இந்தத் தாமதத்திற்காக) மன்னிப்புக் கோருகிறேன்) முடிந்தவரையில் என் சுளுக்குத் தமிழில், பதில்கொடுக்க முடியாவிட்டாலும் ஒருமாதிரி குறிப்புகளை அளிக்க முயன்றிருக்கிறேன்; எப்படி இருந்தாலும் – பாவம், நீங்கள். (எச்சரிக்கை: இது 2000+ வார்த்தைகள் கொண்ட பதிவு!)

-0-0-0-0-0-

பிரச்சினைகள் யாவையென்றால் –

அ) நான் வளர்ந்திருக்கிறேனோ இல்லையோ, என் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள் (மகன் வயது 16+, மகள் 21+) – ஆகவே, ‘குழந்தை வளர்ப்பு’  (ஸ்ஸ்ஸ்… ஸப்பாடா… வ்வொருவழ்ழியா யிந்த அத்தியாயம் முடிஞ்சுதுடாப்பா! ஆனால் இதன் நீட்சியாக ‘இளைஞர் வளர்ப்பு’ தொடர்கிறதே! ஐயகோ!!) பற்றியெல்லாம் நான் கொஞ்சம் ‘பழைய பஞ்சாங்கம்’ + நவீன குழந்தைவளர்ப்புச் சிந்தாந்தங்களுடன் பெரிய அளவுக்கு அறிமுகம் இல்லை

ஆ) நான் முழு/பகுதி நேர  ‘அறிவுரை’ தொழிலில் இருப்பவனோ, மண்டைவீங்கி அறிவுஜீவியோ அல்லன்

இ) நான் தற்போது முழுநேர வாத்தியுமல்லன் (ஸ்ஸ்ஸ்… அப்பாடா!)

ஈ) என்று இளிப்பதில் கண்டபடி வாய்க்கு வந்ததை கருத்துக்குண்டுகளாக அட்ச்சிவுடுவதில், இன்னமும் கொஞ்சம் சங்கோஜம்/கூச்சம் இருக்கிறது; ஏனெனில், என் அறிவு(!) +அனுபவங்கள்(!!) + பங்களிப்புகள்(!!!) + எதிர்பார்ப்புகள் குறித்த குறுகிய எல்லைகளை ஓரளவு அறிந்திருப்பவன் மட்டுமே! (ஆனாலும் இப்படியே இருப்பேன் எனவும், 100% உத்தரவாதம் கொடுக்கமுடியாது)

உ) கண்டகண்ட விஷயங்களில் காலை விட்டிருப்பதால் (இது மாலை + இரவு எனவும் தொடர்கிறது என்பது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும்) – ஒத்திசைவில் நீளக்காட்டுரைகள் எழுதுவதற்கு என, கடந்த சிலவாரங்களில் துளிக்கூட நேரம் ஒதுக்கமுடியவில்லை. (ஆனால் இது என் சொதப்பல் – பட்டிபார்த்து டிங்கரிங் செய்துகொள்கிறேன்)

ஊ) மிக முக்கியமாக – நான் எழுதப் போகிறவை ஞானப் பொழிவுகள் அல்ல; மேலும் பலபத்தாண்டு வருட அனுபவங்களால் – என் கருத்துகள் உணர்ச்சிபூர்வமாக இருக்க வாய்ப்பில்லை. ஆகவே உங்களுக்கு உதவக்கூடியவைகளை எடுத்துக் கொள்ளுங்கள், பிறவற்றைக் கடாசுங்கள்; அவற்றுக்காக வருத்தப் படாதீர்கள் – மாறாக, பதில் கேள்வி கேளுங்கள், இல்லை ஓடுங்கள்…

-0-0-0-0-0-0-

சரி.

அதிசயிக்கத்தக்க விதத்தில் இந்த மின்னஞ்சல் எழுதிய மூவரும் தமிழர்கள்,  தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள் – ஒருமாதிரி இளைஞர்கள்கூட என நினைக்கிறேன்.

… இருந்தாலும் ஆங்கிலத்தில் மின்னஞ்சல் எழுதியிருக்கின்றனர் – இது எனக்குப் பெரிய பிரச்சினை, மொழிவெறி என இல்லையென்றாலும் மொழி என்பது எண்ணப் பரிமாற்றத்துக்கான பலகருவிகளில் ஒன்று மட்டுமே என்றாலும், என் எண்ணங்களை, என் செல்லச் சுளுக்குத் தமிழில் கொடுக்கிறேன்.

(ஏனெனில் எனக்குத் தமிழ்ப் பயிற்சி தேவை! அஷ்டே!)

-0-0-0-0-0-0-

முதல் அன்பர்:

> Our son has completed 5 years and is very interested in science. What books on Astrophysics (basics) would you recommend to him? I will be grateful for any help.
>

ஐயன்மீர்! எங்கேயோ சென்றுவிட்டீர்கள்!  குழந்தையைச் சாதாரணமாக வளர விடுங்களேன்!

நாம் வளர்ந்தபோது (ஆனால், நீங்கள் என்னைவிட 20 வயது போல இளையவராக இருக்கவேண்டும்) இருந்த துறைகள், புலங்கள் விஸ்தரிப்பு செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன – சில துறைகள் அம்பேல், பலப்பல புதிய துறைகள் எழும்பியிருக்கின்றன.  உங்களுக்கும் இதே அனுபவம் இருந்திருக்கும். ஆகவே – உங்கள் குழந்தை வளரும்போது, அவனுக்குப் பலப்பல புதிய புலங்கள் மலையுச்சிகளில் வசீகரமாக மினுங்கிக் கொண்டு இருக்கும்.

உங்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருப்பதால் சொல்கிறேன்; நீங்கள் ஒரு சார்ட்டர்ட் அக்கௌன்டண்ட் – பட்டயக் கணக்காயர். பொதுவாகவே எனக்கு இந்த பஜனை ஆசாமிகள் ஒத்தே வரமாட்டார்கள் என்றாலும், என்னுடைய இந்த முகச்சுளிப்பு உங்களுக்குத் தெரிந்துமிருந்தாலும் – நீங்கள் முதலுக்கே மோசமில்லைதான் – ஏனெனில் உங்கள் தொழில்(!) குறித்த பிரமைகள் உங்களுக்கு இல்லை.  ஆகவே. (மேலும் கவனிக்கவும்: உங்களைப் போன்றவர்களின் தொழில்களுக்கு எதிர்காலங்களில் பெரிய மவுஸ் இருக்காது – ஏனெனில் கௌரவ குமாஸ்தாத் தொழில்கள் ஒவ்வொன்றாக கணிநி+வலைப் பின்னல்களால் தடுத்தாட்கொள்ளப்படும்)

என்னைப் பொறுத்தவரை, நீங்கள் முதலில் அடிப்படை வானியல், இயற்பியல் பற்றியெல்லாம் கற்றுக் கொண்டு (ஏகத்துக்கும் புத்தகங்களும் விடியொக்களும் இருக்கின்றன) குழந்தைக்குக் கதைகள் சொல்லலாம். வீட்டில் ஒரு பைனாகுலர் இருந்தால் அதனை உபயோகித்து இரவுவானைப் பார்க்கலாம். சிறுசிறு பரிசோதனைகள் செய்யலாம் – மைக்ரோமீடியரைட் விஷயம் ஒர் எடுத்துக்காட்டு.

நட்சத்திர ‘இரவு வானின் வழிகாட்டி’ என்பது தமிழில் வந்திருக்கும் அருமையான மொழிபெயர்ப்புப் புத்தகம். முடிந்தால் அதிலிருந்தும் ஆரம்பிக்கலாம்.

வீட்டில் நீங்களே ஒரு வான் தொலைநோக்கியை உருவாக்கலாம்.

குழந்தைகள் பலவிதங்களில் ஸ்பாஞ்ஜ் போன்றவர்கள் – சுற்றுச்சூழலில் + பெற்றோர்களிடமிருந்து அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கற்றுக் கொள்வது அநியாயத்துக்கு அதிகம்.

> He spends too much time on Media. So what can be done to divert his attention?

இது பல பெற்றோர்களிடம் இருக்கும் சாதாரணமான கவலை. ஆனால்.

1. ‘நிறைய நேரம் கணிநி/ஸ்மார்ட்ஃபோனுடன் கழிக்கும் குழந்தைகளின் வளர்ச்சி குன்றும் ‘ என்பதெல்லாம் உண்மையில்லை; இம்மாதிரி அபாண்டங்களுக்கு ஒரு காத்திரமான தரவும் இல்லை. எல்லாம் நம் ‘சங்ககாலம்’ எனும் ஜந்துவுக்கு தேதி குறிப்பதுபோலத்தான் – வாய்க்கு வந்தபடி கருத்துகளை அட்ச்சிவிடுவதுதான் இந்த விஷயத்திலும் நடக்கிறது. ஆகவே, கவலை வேண்டேல்.

2. எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்குவதுபோல இதற்கும் நேரம் ஒதுக்கினால் போதுமானது. தேவையேயற்று குழந்தைகளை அமுக்கி அவர்களுக்குப் பெற்றோர்களை டபாய்ப்பதையும் குற்றவுணர்ச்சியையும் (+உங்களுக்கு படபடப்பையும்) வரவைத்துக் கொள்ள வேண்டிய அவசியமேயில்லை.

3. சிலபல முக்கியமான ஆராய்ச்சிகள், குழந்தைகள் விடியோ விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களுடைய எதிர்கொள்ளல் அளவைகள், மூளை வளர்ச்சி – விரற்திறன் போன்றவை அதிகமாக ஆகியிருப்பதைக் சுட்டுகின்றன.

4. விடியோ விளையாட்டுகள் சில படுகோரமாக இருக்கின்றன – இது உண்மைதான்; எனக்கும் முகச்சுளிப்பு கொடுப்பவைதான். ஆனால், இதனால்தான் குழந்தைகள் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள், ‘உலகில் குற்றம் அதிகமாகிறது’ என்பதற்கெல்லாம் ஒரு முகாந்திரமும் இல்லை, ஆதாரமும் இல்லை – வெறும்வெட்டித்  திண்ணைப்பேச்சு – “அந்தக் காலத்துல நெலிமி இப்டியா இர்ந்திச்சி? எல்லாங் கலிகாலம்…” வகையறா புலம்பல்கள் அவை.

சொல்லப்போனால் கொர்-ஆன் படித்துவிட்டு அமைதிமார்க்க வழியாக அல்லாஹ்வுக்காகவும் மொஹெம்மத் நபிக்காகவும் படுகொலை செய்பவர்களுடன் பொருத்திப் பார்த்தால் உங்களுக்குக் கள நிலவரம் புரியும் – இவற்றுக்குக் காத்திரமான, தொடர், நிறைய்ய்ய்ய்ய்ய்ய ஆதாரங்கள் உள்ளன. ஆகவே, எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளவேண்டா. கொர்-ஆன்வேறு, விடியொகேமிங் வேறு.

5. குழந்தைகளின் கண்பார்வைக்காக, உடலசைவுகளின்மைக்காக நீங்கள் கவலைப் படுகிறீர்கள் என்றால் அதற்கு முகாந்திரம் இருக்கிறது. ஆனால் – அவை போன்ற பிரச்சினைகள் நாற்காலிதேய்க்கும் குமாஸ்தாக்களுக்கு (‘தகவல் தொழில்நுட்பம்(!)’ உட்பட) என்றுமே இருந்திருக்கின்றன – இவற்றைச் சிலபல கண்/உடற்பயிற்சிகளாலும் உட்காரும் அழகைச் சரிசெய்வதாலும் அறிவியல்ரீதியாக மராமத்து செய்துவிடமுடியும்.

6. நீங்கள் உங்களுடைய விழித்திருக்கும்(!) வேளைகளில்  ஒருகையில் நிரந்தரமான ஸ்மார்ட்ஃபோனுடன் அலைந்துகொண்டு அதனைப் பொழுதன்னிக்கும் தேய்த்துத் தடவிக்கொண்டு  வெட்கங்கெட்டு அலையும்போது – உங்களுக்குக் குழந்தைகளைக் குற்றம் சொல்ல உரிமை இல்லை.

7. ஆனால் – நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பலவிதங்களில் மட்டுறுத்த உரிமை உண்டு – அதாவது உங்கள் வீட்டில்  நீங்கள் பொழுதன்னிக்கும் டீவி பார்க்காமல் இருந்தால், நெட்ஃப்லிக்ஸ் அமேஸான்ப்ரைம் எழவுகளே கதி என நிரந்தரச் சரணாகதியனாக இல்லையானால்… பாபுஜி சொல்லியிருப்பதுபோல, ~~ ‘நீங்கள் விழையும் மாற்றங்களை உங்களுக்குள்ளும் உருவாக்க முயற்சி’ செய்யலாமே!

என்ன சொல்லவருகிறேன் என்றால் – எல்லாவற்றுக்கும் ஒரு சமனம் வேண்டும்.

+ படுதீவிரமாகவும் தரவுகளுமற்றும் கருத்துகளை வடித்துக் கொள்ளவேண்டாமே! மற்றபடி உங்கள் இஷ்டம்.

-0-0-0-0-0-

இரண்டாம் அன்பர்:

>
> I am a regular reader of your blog and believe I have a rightful place in the (6¾ + ½ + ¼) world!
>

பின்னம்பின்னமாகப் போட்டு, சக ஏழரைகளைச் சின்னாபின்னம் செய்துவிட்டீர்களே என்பதை நினைத்தால்… :-)


>
> I want (and hope) to raise my 6-year-old son the right way, which I have come to realize starts with educating myself. I have borrowed the following books from the local library and started reading Haim. Very practical advice that I am trying to follow in everyday situations!
>
> (Original list: https://othisaivu.wordpress.com/2013/06/27/post-210/)

ஐயா, நன்றி.

>
> William Kilpatrick – Why Johnny can’t tell Right from Wrong
> Haim Ginott – Between parent and child
> Maria Montessori – From Childhood to Adolescence
> Joseph Chilton Pearce – Magical child, Magical Child Matures
>

இன்னமும் நிறைய இப்படிப் புத்தகங்கள் வந்திருக்கின்றன. அவை குறித்துப் பின்னொரு சமயம் பார்க்கலாம்.

> Could you please answer these questions when possible?
>

இன்றுதான் சாவகாசமாக பதில் கொடுக்கிறேன், மன்னிக்கவும்.

>
> 1.       How to create an interest in math? (I read the recent math stories post + books, but thought they are more for middle – high school kids). Right now, we are following the school curriculum, some extra practice from Khan Academy and a school provided Prodigy app. He does not seem to like the activity as such.
>

நான் ஆறுவயது குழந்தைகளுடன் கல்வியில் ஈடுபட்டதில்லை – என் சொந்தக் குழந்தைகளைத் தவிர. பெரும்பாலும் 9-22/23 வயதுப் பிள்ளைகளுடன் மட்டுமே அனுபவம்; அதிலும் பெரும்பங்கு 12-19 வரைதான். சரியா?

ஆனால் நிறைய பார்த்திருக்கிறேன்; என்னைப் பொறுத்தவரை சிறுசிறு புதிர்கள் மூலம், அல்லது மாண்டிஸொரி எடுத்துக்காட்டுகள்/உபகரணங்கள் வழியே குழந்தையை அணுகவைக்கலாம் எனத்தான் சொல்வேன்; ஏனெனில் நான் கண்கூடாக அந்தந்த வயதில் நிகழவேண்டிய வளர்ச்சியை, மாண்டிஸொரி குழந்தைகள் சென்றடைவதைப் பார்த்திருக்கிறேன்.

புதிர்களை நீங்களே உருவாக்கலாம். அல்லது இணையத் தேடல்களில் பெற்றுக் கொள்ளலாம். சில எடுத்துக்காட்டுகளைக் கீழே கொடுக்கிறேன்.

1. விதம் விதமான முடிச்சுகளை உருவாக்குவதும் அவற்றை அவிழ்ப்பதும் சுவையானவை – அவற்றிலிருக்கும் கணிதப் பராக்கிரமங்கள் அளவிலா.

2. குழந்தைகளுக்குப் பீட்ஸா (அல்லது ‘பிஜ்ஜா’) பிடிக்கும் என்பதால், ஒரு பீட்ஸாவை (அதன் மண்டையில் வைக்கும் சீஸ், தக்காளிச்சட்டினி டாப்பிங் உட்பட) மூன்றே நேர்க்கோட்டு வெட்டுகளின் வழியாக எட்டு சரிசமத் துண்டுகளாகப் பிரிப்பது.

3. தீப்பெட்டிக் குச்சி, பல்குத்திகள் வழியாகப் புதிர்கள் – ஆறு தீக்குச்சிகளை வைத்து, அவற்றை உடைக்காமல் நான்கு சமபக்க முக்கோணங்களை.உருவாக்குவது.

இன்னொன்று:

||| – || = |\/

இவை எல்லாம் ஒரேஅளவுள்ள குச்சிகள்; இவற்றில் ஒன்றை மட்டும் நகர்த்தி இச்சமன்பாட்டைச் சரி செய்யவேண்டும்.

4.   அ அ
    +ஆ ஆ
—————
   இ ஆ இ

ஒவ்வொரு உயிரெழுத்தும் ஒரு ஒற்றை இலக்க எண்ணைக் குறிக்கிறது. மற்றபடி இது ஒரு வெறும் கூட்டல் கணக்கு. இப்போது அ ஆ இ என்பவை எந்த/என்ன எண்கள்?

5. மூன்று யாத்ரீகர்கள் ராமேஸ்வரத்திலிருந்து வாராணஸீக்கு நடைப்பயணமாகச் சென்று கொண்டிருக்கின்றனர். தமிழகத்தின் கொடுங்குளிர்க்காலமான மார்கழி; ஒரே பனிமழை. பத்து அடி ஸ்னோ. வெடவெடப்பு, கடும்பசி. பயங்கரக் களைப்பு. கால்விரல்கள் உணர்ச்சியிழந்து ஸ்னொ-பைட் பக்கம் சென்றுகொண்டிருந்தன…

ஒரு வழியாக.

சுங்குவார் சத்திரத்துக்கு இரவு எட்டுமணிக்கு வந்துசேர்ந்தனர். ஆனால் சாப்பாடு தீர்ந்துவிட்டிருந்தது. சத்திராதிகாரிக்கும் வருத்தம். “ஆனால், பாதகமில்லை, கொல்லைப்புறத்தில் வாழைக்குலை ஒன்று பழுத்துவிட்டது, அதன் பழங்களை உணவுக் கூடத்தில் வைக்கிறேன் – நீங்கள் ஆசுவாசம் செய்துகொண்டு வாருங்கள், பின்னர் அப்பழங்களைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்…”

யாத்ரீகர்கள் அறைக்குச் சென்று சுடச்சுட வென்னீரில் குளித்தவுடன் அலுப்ப அகன்று அவர்களுக்குத் தூக்கமே வந்துவிட்டது – இத்தனைக்கும் அவ்வறையில் ரூம்-ஹீட்டரோ, கம்பளியோ கம்ஃபர்ட்டரோ டன்லப் மெத்தையோ இல்லை…

பின்னர் அவர்களில் ஒருவர் எழுந்தார். பிறரைத் தொந்திரவு செய்யாமல் உணவுக்கூடத்துக்குச் சென்று, அங்கிருந்த பழங்களில் அவருடைய பாகத்தை உண்டார். பழத்தோலிகளைக் குப்பைமேட்டில் போட்டார். மறுபடியும் அவர்களுடைய அறைக்குச் சென்று, கொர்கொர்.

சிறிது நேரம் கழித்து இரண்டாமவரும் அப்படியே செய்தார். முன்னமே ஒருவர் எழுந்தது அவருக்குத் தெரியாது. ஆகவே இவர் கூடத்திலிருந்த மீதமிருக்கும் பழங்கள் மூன்று பேருக்கானவை என நினைத்து, தன் பங்கை உண்டு… ….

இன்னமும் சிறிது நேரம் கழித்து மூன்றாமவரும் அப்படியே செய்தார்.

மறுநாள் காலை பார்த்தால், கூடத்தில் எட்டு பழங்கள் மிச்சமிருந்தன. அப்படியானால், சத்திராதிபதி முதலில் வைத்த பழங்களின் எண்ணிக்கை என்ன…

(இதேமாதிரி, நான்கு பயணிகள் என்றெல்லாம் விரிக்கலாம்)

இப்படியே மேன்மேலும் சிடுக்குகள் (ஆகவே அழகான புதிரவிழ்ப்புகள்) கொண்ட பலவித கணிததுறைகள் சார்ந்த விஷயங்களை – குழந்தைகளின் விருப்பத்துக்கும் உங்கள் திறமைகளுக்கும் ஏற்ற அளவில் அணுகலாம்.

… இணையத்திலும் உங்கள் ஊர் நூலகங்களிலும் அற்புதமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சுவைக்கவும்.

(கான் அகடெமி எனக்கு ஒத்துவராது; பலப்பல வருடங்கள்முன் அவர் கணிதம்+இயற்பியல் தொடர்பாகச் செய்த தொடர்சொதப்பல்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியவுடன் அவருக்கும் எனக்கும் முட்டிக் கொண்டுவிட்டது. ஆகவே விட்டுவிட்டேன். இருந்தாலும் சிலர் அவருடைய விடியொக்களைப் புகழ்வதை அறிவேன். அவரவர்க்கு அவரவர் வழி. அவ்வளவுதான்)

> 2.       He likes building. (Whether it is coming up with his own creations from a standard Lego set, or just being curious to know how stuff works, always happy to disassemble toys for whatever reason). I have to learn more about your other recommendation Arvind Gupta toys and creations. Any other ideas or pointers for DIY experiments for this age group?
>

அர்விந்த் குப்தா அவர்களுடைய சொந்தப் புத்தகங்களும் தொகுப்புகளும் பலவிதங்களிலும் உதவலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு கால அட்டவணை – டைம்டேபிள் போட்டுக்கொண்டு தொடர்ந்து செய்யவேண்டும்.

ஓ’ரீல்லி பதிப்பகத்தின் புத்தகங்களிலிருந்தும் ஐடியாக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

குழந்தைகள் ஸ்பஞ்ஜ்கள், உறிஞ்சிகள் போல – சுற்றுச் சூழலில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்துக்கொண்டு தொடர்ந்து கற்றுக்கொள்ள இயல்பாகவே முயற்சிப்பவர்கள் – ஆகவே நம் கடமை என்பது அதற்கான சூழலை உருவாக்குவதுதான், என்பதென் எண்ணம்.

> 3.       I want to teach him Tamil but not sure how about the method. I started playing a game of translation – he was good with words and even some sentences, but I was not consistent. I read Jeyamohan (Sorry, I pay a visit occasionally!) recommending learning Tamil via English alphabets which somehow was not fully convincing (at least for me).
>

நம் தமிழுக்கு இருக்கும் பெரும்பிரச்சினைகளில் ஒன்று இந்த டைக்ளொஸ்ஸியா. பேச்சுவழக்குக்கும் எழுதும்வழக்குக்கும் அதலபாதாள வேறுபாடுகள். உச்சரிப்புக்கும்-வரிவடிவத்துக்கும் சரியான பிணைப்புகள் இல்லைவேறு. மேலும் எக்கச்சக்க சூத்திரங்கள். ஆகவே, நம்மால் முடிந்தது நம் குழந்தைகளுக்கு, நல்ல பேச்சுமொழி (அது நம் குடும்ப, வட்டார வழக்கு கொச்சை என எப்படி இருந்தாலும் பரவாயில்லை) தருவது – அதாவது வீடுகளில் முடிந்தவரை தமிழிலேயே பேசுவது என்பது.

தமிழ் இலக்கணம் என ஆரம்பித்தால், பெயர்ச்சொல் உரிச்சொல் உயிரளபெடை கூறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனத் தொடர்ந்தால் அது போர்க்களம் ஆகிவிடும். அது வேண்டாம். தேவையேயில்லாமல் பிள்ளைகள் தமிழை வெறுக்க ஆரம்பிப்பார்கள். இலக்கணப் புத்தகத்தைத் திறக்கவே திறக்காதீர்கள்! (அனுபவத்தில் சொல்கிறேன்)

குழந்தைகள் படிப்பதற்காக, அவர்களுக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்கள் பற்றி ஒரிரு பக்கங்களில், சாதா தமிழில் நாமே எழுதிக் கொடுக்கலாம், கதை போலவும்கூட – இவை, பாடப்புத்தக ஆபாசங்களை விட எவ்வளவோ உதவும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன். மேலும் குழந்தைகளை வீட்டு விஷயங்கள் பற்றிக் கார்ட்டூன் வகை கேலிச்சித்திரங்கள் வரைந்து பேச்சுவழக்கில் – அதன் ‘ஸ்பீச் பலூன்’ பப்பிள்களில் குறைந்த அளவு தமிழில் எழுதச் சொன்னால் அதுவும் ஒத்துவரும். என் குழந்தைகள் செய்திருக்கிறார்கள்.

(நான் ஆங்கிலம் கற்றுக்கொண்ட(!) முறை: என் இலக்கண அறிவு ற்றொம்ப சாதாரணம். ரன்&மார்டின் எழவெல்லாம் தலையணைக்கடியில் வைத்துத் தூங்கியதுதான் வழக்கம். குப்பைத்தனமான தமிழ்வழிக் கல்விவேறு! ப்ரொனௌவ்ன், அட்வெர்ப் எனவெல்லாம் ஆரம்பித்தால் எனக்கு ஒரு எழவும் (இன்றுவரை) தெரியாது. ஆனால் வழக்கத்தால், பேச்சு+படிப்பு+எழுதும் பயிற்சியால், முக்கியமாக என் ஆங்கிலத்தைச் சகித்துக் கொண்டவர்களால் — அவை என்ன, எவ்வகை, இலக்கணரீதியாக எதுசரி தவறு என்பதெல்லாம் ஏறத்தாழத் துளிக்கூடத் தெரியாமலேயே ஓரளவு ஆங்கிலம் வந்துவிட்டது. ஆகவே, உங்கள் குழந்தையும் இலக்கணத்தை முறையாகப் படிக்காமலேயே தமிழில் நன்றாகப் பேசவும் எழுதவும் முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது…)

நான் தமிழைப் புனிதமாகக் கருதுபவன் அல்லன். எனக்கு அது ஒரு கருவி மட்டுமே. அது தாய்மொழிகளின் ஒன்றாகப் போய்விட்டதால் இன்னும் கொஞ்சம் கரிசனம், கொஞ்சம் பெருமிதம். அவ்வளவுதான்.

இதனால், நான் தமிழ்மொழியின் வரலாற்றையும் இப்போதைய நிலைமையையும் கணக்கில் கொண்டு, அதற்கு வளமான எதிர்காலம் இருக்கவேண்டும் எனவும் கருதுவதால் – அது தேவநாகரி அல்லது ஆங்கில/ரோம வரிவடிவங்களை உபயோகித்தால் நலம் என நினைப்பவன். இவ்விஷயம் குறித்து நானும் ஓரிரு பதிவுகளை எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.

ஜெயமோகன் இவ்விஷயத்தில் ஒரு சரியான நிலைபாடை எடுத்திருக்கிறார்.

தமிழ்ச் சூழலில், ஜெயமோகன் பொருட்படுத்தத் தக்கவர். நானும் அவருடைய கருத்துகளை இதுவரை அவ்வப்போது படித்து வருகிறேன். ஆனால் – அந்தச் சிறிய அளவு மேயலிலும் கூட, பலசமயங்களில் வாயடைத்துப் போயுமிருக்கிறேன். அண்மையில் நான் படித்த அவருடைய மகத்தான் அட்ச்சிவுடல் உட்பட – அதில் அவர் உக்ரைன், அதன் வரலாறு, கம்யூனிஸ்ம் என விக்கிபீடியா படித்துவிட்டுக் கோர நடனம் ஆடியிருந்தார்… என்ன செய்ய.

ஆகவே, நானே அவரைப் படித்து இன்னமும் கதிகலங்கிக் கொண்டிருக்கும்போது – அவரை நீங்கள் படித்தால் எனக்கென்ன – நான் ஒரு பெரிய மயிராண்டியல்லன். உங்கள் விருப்பம். உங்கள் பாக்கியம்.


-0-0-0-0-0-

மூன்றாம் அன்பர்:

>
>  I am getting married in August and please bless me and my fiancee, <name deleted>.

வாழ்த்து. பிள்ளைகுட்டி பெற்றுக்கொண்டு சௌக்கியமாக வாழ ஆசிகள். உங்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.

…உங்கள் நல்வாழ்க்கைக்காகச் சொல்கிறேன். இந்த எழவெடுத்த அலக்கியம், தமிழ்க் குப்பை எல்லாவற்றையும் அடுத்த பத்தாண்டுகளுக்காவது லூஸ்லவுடவும். (உங்கள் காதலங்கிளியிடம் உங்கள் ஒத்திசைவுக் கெட்ட பழக்கத்தைப் பற்றி உண்மையைச் சொல்லிவிட்டீர்களா? பிற்காலத்தில் உங்களுக்குப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க இது முக்கியம்!)

> I am in a dilemma about whether to go for children or not. In both cases what is your advice.Am thinking why I should add to the burden of the world, my wouldbe does not agree with me. What do you think?

நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். + நான் உங்கள் மனைவியுடன் ஒத்துப் போகிறேன்.

ஒரு உயிரியல் பிறவியாக நாம் இருப்பதன் முக்கிய காரணம் – நம் ஜீன்களை முன்செலுத்திப் பிள்ளைகுட்டிகளை உருவாக்கி வாழையடி வாழையாக வாழ்வதுதான். இப்படியே தொடர்ந்தால்தான் அடுத்த சில ஆயிரம்+++ ஆண்டுகளில் நம்முடைய வழித்தோன்றிகள், தொழில் நுட்பங்களின் சாத்தியக்கூறுகளை உபயோகித்து நம் சூரியனின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு ப்ரபஞ்சத்தில் உலாவ முடியும், பிற தோதுப்பட்ட கிரகங்களில் மானுடர்களைக் குடியேற்ற முடியும்…

+உங்களைக் கொஞ்சம் அறிவேன். உங்கள் கருத்து+முனைப்புடையவர்களின் ஜீன் பாய்ச்சல்கள் தொடரவேண்டும்வேறு.

+ நீங்கள் ஒரு ஹிந்து. உங்கள் மனைவியும் அப்படியே. ஆகவே நம் தர்மம், வாழ்க்கைமுறை, பாரம்பரியங்கள் தொடர்ந்து தழைக்க நாம் கொடுக்கக்கூடும், மிகக் குறைந்தபட்ச ஆனால் மகத்தான பங்களிப்புகளில் ஒன்று – குழந்தைகளைப் பெற்றெடுத்து அவர்களை நல்ல குடிமக்களாக, ஹிந்துக்களாக வளர்ப்பதுதான்.

பிகு: வேறெந்த முக்கியமான விஷயமும் போல, குழந்தை வளர்ப்பும் கடினமான விஷயம்தான். But, ‘Nothing of consequence is easy, my dear!’

> I also like to know about the factors that would determine how a child will develop and be happy – and what can we do, in case we want to start a family.

சரி. ஒரு முக்கியத்துவ வரிசையில் கொடுக்கிறேன்.

1. பெற்றோர்களின் ஜீன்கள் – அவை பிள்ளைகளை வந்தடைந்த பகுப்பின் சாத்தியக்கூறுகள்.

2. பெற்றோர்களின் கலாச்சார-பௌதிகச் சூழல், அவர்கள் வாழ்க்கையை அணுகும் முறைகள், குழந்தை வளர்க்கப்படும் விதம், அதற்கான நல்ல உணவும் அன்பும்  ஆரோக்கியமும் கிடைப்பது.

மேற்கண்டவை தாம் அடிப்படைகள். அவற்றின்மேலே கீழுள்ளவை கட்டமைக்கப் படுகின்றன.

3. வெளியுலகம் அதன் மீது செலுத்தும் தாக்கம். (இவற்றில் பிற உறவினர்கள், நண்பர்கள், பள்ளி, விளையாட்டுகள், ஊடகங்கள், வசதிவாய்ப்புகள்… இன்னபிற… அடக்கம்)

4. பிள்ளையின் தன்னூக்கம், செயலூக்கம், விடாமுயற்சி, அதற்குக் கிடைக்கும் உன்னத மாதிரிகள்…

மேற்கண்டவற்றுக்குப் பலப்பல காத்திரமான ஆதாரங்கள் இருக்கின்றன.


+ ஒரு குடும்பத்தைத் தொடங்க என்ன செய்யவேண்டும் எனக் கேட்கிறீர்கள் – சொல்லப்போனால் நிறையச் செய்யலாம் – ஒருமாதிரி முன்னோட்டம்போல, என் அன்புக்குரிய விக்கொ மார்டென்ஸன் அவர்கள் தம் பிள்ளைக்குச் சொல்வதை எடுத்துக்கொள்ளுங்கள், சரியா?

சரி. மறுபடியும் சொல்கிறேன்: குழந்தைகளைப் பெற்று வளர்ப்பது ஒரு மானுடனின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. 

வாழ்த்துகள், மறுபடியும்… :-)

>

-0-0-0-0-

இன்னொருவர் கல்லூரி-படிப்பு எனக் கேட்டிருந்தார், அதுகுறித்து இன்னொரு சமயம்….

5 Responses to “6-7 வயதுக் குழந்தைகள், ‘கல்வி’ – சில கேள்விகள், சிந்தனைகள், குறிப்புகள்”

 1. Sridhar Says:

  இந்த டைக்ளொஸ்ஸியா எவ்வளவு பெரிய பிரச்சினை என்று இப்போதுதான் புரிகிறது. எங்களிடம் சூப்பர்வைசராக பணி புரிய வந்த ஒரு இளைஞனுக்கு அவன் தமிழ் மட்டும் தெரிந்த துப்புரவு பணியாளர்களையும் காவலாளிகளை மட்டும் மேய்க்க வேண்டியிருப்பதால் ஆங்கிலம் தேவை இல்லை. ஆனால் குறைந்தபட்ச ஏசிங்க்ரனஸ் வாட்ஸப் உரையாடலை தமிழில் நடத்த முடிவதில்லை. பேச்சுத் தமிழா அல்லது எழுத்துத் தமிழா என்று யோசித்து மண்டை காய்ந்து பேசாமல் ஆங்கிலத்திலேயே டைப் செய்து விடுகிறேன்.

  On Tue, 19 Oct, 2021, 18:11 ஒத்திசைவு… प्रत्याह्वय… resonance…, wrote:

  > வெ. ராமசாமி posted: ” ~ கடந்த 2-3 மாதங்களில் மூன்று அன்பர்களிடம் இருந்து > சிறுகுழந்தைகள்/வளர்ப்பு குறித்த சில கேள்விகள், கருத்துகள் வந்திருக்கின்றன. > அவற்றுக்குச் சாவகாசமாக (அன்பர்களிடம், (இந்தத் தாமதத்திற்காக) மன்னிப்புக் > கோருகிறேன்) முடிந்தவரையில் என் சுளுக்குத் தமிழில், பதில” >


  • நீங்கள் தமிழினத்தின் எதிரி என்பதை நான் ஏற்கனவே அறிவேன்!  😡

   இப்போது யாதவர்களுக்கும் எதிராக அணிதிரள்கிறீர்களே! தேவையா?

   அகிலேஷிடம் போட்டுக் கொடுக்கவா?

   யாதவறாயினும் நாகாக்க காவாக்கால் சோகமுற நுங்கெடுக்கப் படுவீர்.


 2. To the Guy#3:

  About happiness, Since I forgot to handle that.

  This bleddy ‘happiness’ is terribly over-rated. In fact, IMO, we CAN’T aim for happiness as it is merely a bye-product of many thinges/factors.

  In fact, when folks say ‘I want my child to be ALWAYS happy’ I immediately reach for my waterpistol.

  Our kids (and of course us) need to internalize the fact that in order to do a great/interesting thing, we have to plod thru a WHOLE lot of uninteresting stuff, which are essentially ‘unhappy’ things.

  One HAS to get out of a comforting/cozy bed and happy slumber to go out and bleddy work to get a bleddy life.

  My suggestion: Please do not think about ‘happiness’ while bringing up kids – as washing diapers at 2AM or keeping awake the whole night because the kid is running high fever kinda things, are NOT happy happy stuff. For the child, learning basic habits and hygiene are not happy processes.

  Both have to be done, and done properly though.

  YMMV.

 3. TKA Says:

  Sir, உங்கள் முதல் அன்பரின் இரண்டாவது சந்தேத்திறத்கு அளித்திருக்கும் ஏழு விளக்கங்களில், முதல் நான்கும் ஒரு பக்கத்திற்கு எடையை கூட்டும்போது அடுத்த மூன்றும் இன்னொரு பக்கத்தில் இழுக்கின்றன. உங்கள் ஏழரைகள், உங்களைப்போலவே முரண் எடைகளை இணைத்து ஒத்திசைவை உருவாக்குவதில் வல்லவர்கள்தான் என நீங்கள் வெளிப்படையாக எழுதாவிட்டாலும், அதையே அடித்தளமாக வைத்திருக்கிறீர்களோ?
  இந்த ஏழிலிருந்து ஏழரைகள் ஒத்திசைவை உருவாக்க முடியாத பட்சத்தில், இது அபஸ்வரமாக மாறவும் வாய்ப்பு உள்ளது போல தோன்றுகிறது……


  • ஐயன்மீர், கிண்டலுக்கு நன்றி. (அகிலம் எல்லாம் மதுரம்?)

   மறுபடியும் அந்த ஏழு உபகுறிப்புகளைப் படித்தேன், எனக்கு அம்மாதிரி படவில்லை. Of course, YMMV.

   மற்றபடி, ஒத்திசைவுடன் ஒத்திசைந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் யாருக்குமில்லை – எனக்கு உட்பட; எல்லாவற்றுக்கும் கால தேச வர்த்தமானம் இருக்கிறது.

   I send out a bunch of whimsical notes, the harmonization of them happens, if at all, in the brains of those who read them and who can resonate with them.

   Don’t teasing out meanings from a given set of ideas/symbols, happen EXCLUSIVELY in the brains of readers?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s