உதிரிச்சாமி ஸ்டேனிஸ்லாஸ் ‘ஸ்டேன் சாமி’ லூர்துசாமி பொய்ச் சேர்ந்தார், நன்றி!

July 5, 2021

ஏனெனில், அவர் என்றுதான் மெய்யாகச் செயல்பட்டார், சொல்லுங்கள்?

-0-0-0-0-

சில இரங்கல்கள், நம் செல்ல எஸ்ராமகிருஷ்ணன் வழக்கமாகவே பத்திக்கும் ஒருதடவையாக எழுதுவதுபோல –  ‘தனித்துவ’மான கவித்துவம் கொண்டவையாக மிளிர்கின்றன. அவற்றில் ஒன்று:

அதன் ஒருமாதிரியான தமிழாக்கம்:

ஸ்டேன் சாமியின் இயற்கை மரணம் குறித்து மிகவும் வருத்தமாக இருக்கிறது.

மானுடத்துக்கும் தேசத்திற்கும் எதிராக அவர் செய்த கொடூரமான குற்றங்களுக்கு அவர் சட்டத்தால் முறையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

எவ்வளவு அழகாக, துக்கிரித்தனமான ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டார், இந்த கபில் மிஷ்ரா அவர்கள்…

வாழ்க நீ எம்மான்!

-0-0-0-0-

இந்த ஸ்டேன் சாமி பாதிரியின் செயல்பாடுகளை எனக்குப் பலப்பல மாமாங்கங்களாகத் தெரியும் என்றாலும்,  நேரடியாகவும் களச் செயல்பாடுகளில் இருந்தும் இவரைப் போன்றவர்கள் செய்யும் அட்டூழியங்களை அறிவேன் என்றாலும் – சுமார் 2011 வரை இவரைப் போன்ற விஷக்க்கிருமிகள் பற்றி அதிகம் யோசிக்காமல் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தேன்.

ஆனால் 2011-12 வாக்கில் இரண்டு விஷயங்கள் நடந்தன.

…அதற்கு முன்னமே இவருடைய சொற்பொழிவுகள் இரண்டுக்குச் சென்று அவருடைய, உரத்தகுரலற்ற, மென்மையான ஆனால் 200% நஞ்சினை உள்ளடக்கியிருக்கும் கருத்தாக்கங்களினைக் கேட்டிருக்கிறேன்; ஆனால் இம்முறை அவை இன்னமும் கூர்மையடைந்திருந்தன; இன்னமும் பாரதத்தில் ஹிந்துக்கள் தாம் பெரும்பான்மையாக இருக்கிறார்களே எனும் அவருடைய இவாஞ்ஜெலிக்கல் ஆதங்கம் மிகத் தெளிவாகவும், எப்படி அந்தப் பெரும்பான்மையை உடைக்கலாம் எனும் பார்வை, மிகக் கோர்வையாகவும் வெளிப்பட்டது.

விஷயம் #1:

ஜெஸூய்ட் பாதிரிகளால்தாம் இந்த ‘ஆதி வாசி’ அல்லது ‘மூல நிவாசி’ போன்ற பதங்கள் 1930களில் உருவாக்கப்பட்டன. இதன் பின்னணி என்னவென்றால் – பாரத நிலப் பரப்புகளில் ஆதிகாலத்தில் வாழ்ந்த இந்த ‘ஆதி வாசி’களை வந்தேறி(!) ஆரியர்கள்(!!) துன்புறுத்தி ஒடுக்கினார்கள் எனும் பொய்ப்பிரச்சாரம் – இம்மாதிரி விரிசல்களைத் திருட்டுத்தனமாக உருவாக்கிய பின்னர் அவற்றின் ஊடாக, பாரதத்தில் மேலும் பெரும் பிளவுகளை உருவாக்குவது எனும் க்றிஸ்தவ-கம்யூனிஸ பிரச்சாரம் + பின்னர் சாவகாசமாக, மக்களை தத்தம் மதங்களுக்கு இழுத்துக்கொள்வது எனும் நோக்கம்.

இத்தனைக்கும் இதற்கு ஒருவிதமான காத்திரமான, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட ஆதாரம் (வரலாறு, அகழ்வாராய்ச்சி, இலக்கியம், தொன்மங்கள், மரபணு, மொழியியல், கல்வெட்டு, பட்டயம் என ஒன்றுகூட) என்பதே இல்லை.

நம் தமிழகத்தில் திராவிடம் எனவொரு திடீரெக்ஸ் திகில்கதை சென்ற 2-3 நூற்றாண்டுகளில் உருவாகி வந்ததைப் போல, அதற்குப் பின்னர் ‘ஆதி திராவிடர்’ எனவொரு பீலா கருத்தாக்கமும் உபரியாக உருவாக்கப் பட்டதற்கும் பாதிரிகளின் பொய்ப் பிரச்சாரமே காரணம். (அதாவது திராவிடர்(!)களுக்கும் முன்னமே ஆதிதிராவிடர்(!!)கள் இங்கே இருந்தனர் எனும் மாய்மாலம்!)

எனக்குச் சிலபல ஜெஸுய்ட் பாதிரிகளை ஓரளவுக்குத் தெரியும். அவர்கள் அழைத்தார்களே என்று ஒரு ‘கல்வி’ கூட்டத்துக்குச் சென்றால் அங்கு இதேஇதே ஸ்டேன் சாமி. சன்னமான குரலில் சாமியாட்டம். தொடர்பொய்கள். இந்த அயோக்கிய ஆளும் வருவார் என முன்னமே தெரிந்திருந்தால், நான் அங்கு போயே இருக்கமாட்டேன். :-(

“பாரதத்தில் ஹிந்து மதம் என்றாலே ஒடுக்குமுறை அடக்குமுறைதான். குஜராத்தின் ஃபாஸிஸ்ம். இன அழித்தொழிப்புகள். ஆரிய வெறி. ஆதிவாசிகள் ஒடுக்கப் படுகிறார்கள். ஹிந்துத்துவா வெறி. ஜாதிவெறி. ப்ராம்மணியம் நாசம் செய்யப்படவேண்டும், அப்போதுதான் பரந்துபட்ட மக்களுக்கு விமோசனம். டட்டடா டட்டடா…”

பின்னர் கேள்விபதில் உரையாடல் எனும் எழவுகள் நடந்தேறின; கூட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள், “இன்னமும் 15 நிமிடங்கள் இருக்கின்றன, மேலதிகக் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.”

சில வினாடிகள் வேறெவராவது கேள்விகளை எழுப்புவார்களோ எனச் சுற்றிப் பார்த்துவிட்டு (அவர்கள் பேடிகள், சொந்தக் கருத்தோ, அறிவியல் பூர்வமான அணுகுமுறையோ இல்லாதவர்கள், சொல்லப் போனால் தேசத் துரோகிகள்) கையை உயர்த்தினேன்.

அவரைக் கேட்டேன்:

“ஐயா! நீங்கள் பலப்பல சர்ச்சைக்குரிய, சொல்லப்போனால் அபாண்டமான விஷயங்களைப் பேசியிருக்கிறீர்கள் – ஆனால் அவற்றைப் பற்றியெல்லாம் கேட்கப் போவதில்லை. மேலும், ஆரியர்கள் என்பதையே விடுங்கள்.

நீங்கள் அழைக்கும் ‘ஆரியக் கறை ஏற்றப் படாத ஜார்கண்ட் சத்தீஸ்கட் பிரதேசங்களில்’  ஆதிவாசிகள் என்று நீங்கள் அழைக்கும் மக்கட் திரட்களில் எப்படிப் பலப்பல தொன்மங்கள் ஹிந்து நம்பிக்கைகள் சார்ந்து இருக்கின்றன? ஆதிவாசிகள்தாம் இந்தியாவின் பூர்வகுடியினர் என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? தயை செய்து விளக்கமுடியுமா? நீங்கள் அந்தமான் தீவுகளில் இருக்கும் சிறு மக்கட் திரட்களைக் குறிப்பிட்டால், அதிலும் அவர்கள் ஆதி ஆஃப்ரிகர்கள் என்றாலும், அதில் கொஞ்சமாவது நியாயம் இருக்கும்; ஆனால் நீங்கள் குறிப்பிடும் பிரதேசங்களில்?

தாங்கள் ஒரு ஆதாரம், ஒரேயொரு சரிபார்க்கத் தக்க ஆதாரம் கொடுத்தால்கூடப் போதும், நன்றி!”

பதில்: ஸ்டேன் சாமி அவர்கள் ஒருங்கிணைப்பாளர்களிடம், கூட்டத்தை முடிக்கும்படிக்கும் தனக்கு சில பிற ‘ப்ரையர் கமிட்மெண்ட்கள்’ இருப்பதால் உடனடியாக வளாகத்திலிருந்து புறப்படவேண்டும் எனவும் சொன்னார்.

முடிந்தது.

இல்லை, முடியவில்லை.

நான், அடுத்த இரண்டு மணி நேரங்கள் போல,  என் நண்பர்(!)களுடன் அவர்களுடைய பேடித்தனத்தையும் பொய்களை எதிர்கொள்ள முடியாமை குறித்தும் பொருமிக் கொண்டிருந்தேன். க்றிஸ்தவர் என்றவொரு காரணத்தினாலேயே சகக்றிஸ்தவர் வாய்கூசாமல் புளுகினாலும் ஆதரித்துக் கொண்டிருப்பீர்களா? அவர்கள், “அப்படியில்ல ப்ரதர்.”

நான் கிளம்பும் வரை ஸ்டேன் சாமியும் அதே வளாகத்தில் தான், தம் அடிமைகளுடன் பேசிக்கொண்டிருந்தார்.

நபும்ஸகர்கள்.

விஷயம் #2:

கூடங்குளம் அணுவுலைத் திட்டத்திற்கெதிரான போராட்டத்தில் பலப்பல க்றிஸ்தவ இவாஞ்செலிக்கல் அமைப்புகள் ஈடுபட்டபோது, அவர்களுக்கான முட்டுக்கொடுத்தலில் இதே ஸ்டேன் சாமி சாமியாடினார். ஒர்ரே கையெழுத்துப் போராட்டம், லாப்பியிங், வெளி நாட்டுப் பத்திரிகைகளில் காராச்சாரமான விமர்சனங்கள்… தன்னுடைய க்றிஸ்தவ வலைப்பின்னல்களை வைத்துக்கொண்டு – ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல் (அல்லது புரிந்துகொண்டு), பாரத அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் ஒரு நல்லதும் நடந்துவிடக் கூடாதே என்றவொரு பதைபதைப்புடனும் பணி செய்தார்.

இதற்காக, பேடிப் பரப்புரைக்காக உருவாக்கப்பட்ட டையாந்யூக் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு இன்றளவும் அது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த அமைப்பு (கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக என்னென்ன போராட்ட திட்டங்களை வகுக்கலாம் என) ஒரு கான்ஃப்ரன்ஸ் தொலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது என நினைவு – இல்லை அது வேறேதாவது அமைப்பின் வழியாக ஒருங்கிணைக்கப் பட்டதோ என்ன எழவோ…

…நான் கொஞ்சம் அறிவியல் + தன்னார்வ ரீதியில் கல்வி கலவி என்று அலைந்து கொண்டிருந்ததால், என்னை ஒரு சாதாரணத் தெருப்பொறுக்கி மனிதவுரிமைப் போராளி என நினைத்துவிட்டிருக்கிறார்கள், பாவம்.

ஆகவே எனக்கும் மின்னஞ்சல் அழைப்பு வந்தது.

எது எப்படியோ அதே உரையாடலில் – இதே ஸ்டேன் சாமி பாதிரியும் உளறினார். யேஸுவின் ஆன்ம பலத்தை வைத்து அஹிம்ஸாரீதியில் அணுசக்திக்கெதிராக, ஆதிவாசிகளுக்கு – மீனவர்களுக்கு எதிரான இந்திய அரசின் மேட்டிமைத் தனத்துக்கெதிராக, மேலாதிக்க வன்முறைக்கு எதிராகப் போராடுவோம் என்றார்.

அதுவரை பொறுமையாக இருந்து ம்யூட் செய்து சிரித்துக் கொண்டிருந்த நான், இரண்டு கேள்விகளைக் கேட்டேன்.

1) யேஸு குடும்பங்களைப் பிளக்க வாளோடு வருவேன் என்றார், இது ஆன்மிகமா? அவர் பிரிவினையை ஊக்குவித்ததைப் போலத்தானே நீங்களும் இந்த ‘அணுக்கருசக்திக்கு எதிர்’ விஷயத்தை வைத்து பாரதத்தில் பிரிவினையை உருவாக்குகிறீர்கள்?

2) சூரியனிடம் இருந்து கிடைக்கும் சக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம், அணுசக்தி வேண்டாம் என்கிறீர்கள்; ஆனால் சூரிய சக்தியே 100% அணுக்கருசக்தியால் உருவாக்கப் படுவதுதானே? ஆகவே நாமெல்லாம் சூரியன் கிட்டவே போகக்கூடாது, இரவில் மட்டும்தான் வெளியே வரவேண்டும் இல்லையா?  எதையும் சாப்பிடவும் கூடாது – ஏனெனில் சூரியசக்தியில்லையெனில் தாவர வளர்ச்சி இல்லை, மழை இல்லை, காற்று இல்லை… இதென்ன அறிவியலற்ற ஆன்மிக உளறல்?

(“யார் இவன், அரசு ஏஜென்ட், ம்யூட் பண்ணுங்க…”)

வெட்டி விட்டார்கள்.

எனக்கும் காமெடி போச்சே என்று இருந்தது, என்ன செய்ய… :-)

-0-0-0-0-

சாகிற வரையில், கொஞ்சம்கூடக் கூச்சமே இல்லாமல் தொடர்ந்து விதம்விதமாகப் புளுகிக் கொண்டே இருந்தவர் (“ஐயகோ, இக்கொடுமையைப் பாரீர்! என்னுடைய செல்லங்களான ஸ்ட்ராவையும்  (‘உறிஞ்சி’) ஸிப்பரையும் எனக்குச் சிறையில் கொடுக்கவில்லை, ஓவ் ஓவ்!“) இந்த ஸ்டேன் சாமி.

இவருடைய பிற கல்யாண குணங்கள்: பிரிவினைவாதம், நக்ஸலைட் வன்முறையாளர்களுடன் உறவாடல் – பரஸ்பர ‘உதவிகள்’ இன்னபிற, (பெரும்பாலும் ஜார்கண்ட்) பஸ்தார் பகுதிகளில் மாவோயிஸ, இவாஞ்ஜெலிக்கல் அட்டூழியங்களுக்கு முட்டுக் கொடுத்தல், சதியாளர்களுக்கு அறிவுரை தருதல் +++

இவர் ஒரு யேஸுசபை ‘ஜெஸூய்ட்’ பாதிரி என்பதால் மட்டுமே இப்படிச் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

…ஏனெனில், மேலதிகமாக இவர் ஒரு அயோக்கியர் – தமிழகத்திலிருந்தும் கேரளத்திலிருந்தும் மேற்கு வங்காளத்திலிருந்தும் மதம்மாறி வெறிபிடித்து இவாஞ்ஜெலிக்கல்களாக அலைபவர்களின் ஒருமாதிரியான எடுத்துக்காட்டு.

அவ்வளவுதான்.

இவருக்குப் போய், படுஸீரியஸ்ஸாக இரங்கி உருகி அஞ்சலி தெரிவிக்கிறார்கள், கூறுகெட்டவர்கள்.

-0-0-0-0-

நம் தமிழகத்திலிருந்தும் என்னென்ன வடிவேலுவிய ஸ்டேன் சாமி இரங்கல்கள் எந்தெந்தப் புற்றுகளிலிருந்து வரப் போகின்றனவோ என்பதை நினைத்தால்… ஈசலா!

30 Responses to “உதிரிச்சாமி ஸ்டேனிஸ்லாஸ் ‘ஸ்டேன் சாமி’ லூர்துசாமி பொய்ச் சேர்ந்தார், நன்றி!”

  1. anon4 Says:

    Did not expect this from you, he is a revered figure.


    • huh? Really, ‘anon4?’

      Do you even know what you are saying? Please do not make a virtue of splendid ignorance.

      Do you know the kind of ‘work’ he has done in Jharkand?

      Do you even know that he participated in the central committee meetings of Maoists, giving them ‘advice’ – thereby legitimizing violence?

      Do you know that he mobilized the well-oiled propaganda machinery of the Catholics so that Maoists could be helped and ‘adi’vasis are shown to be harassed by the State?

      Do you know how he used himself as ‘respectable tool’ to goad ‘adi’vasis into supporting Maoists and into opposing Govt efforts?

      Do you even know his source of funds to operationalize unrest & foment trouble?

      Do you know, he NEVER uttered a word when ‘adi’vasis were killed by Maoists, Schools were destroyed by them?

      Do you know how he almost effectively put a full stop to uranium, nuclear raw materials mining in Jharkand? (but luckily they were foiled)

      Do you know how he helped in creating conclaves of tribal villages (of course all christianized) to enter which, the law enforcement agencies had to take some ‘permits?’

      Do you know how he collaborated with mining mafia and naxals so that there is steady source of funds for his conversion efforts and naxal violence?

      Do you know how to identify criminals, especially going beyond their soft veneer and impeccable english, overflowing with kindness for humanity?

      You don’t FUCKING know anything. You sit in the stockmarket daytrader’s chair and pontificate on human rights.

      Ya know, am okay dealing with normal bastards.

      But not with those bastards (like YOU) with the additional qualifications of ignorance, imbecility and virtue signaling capabilities.

      Please do yourself a favour. NEVER, EVER contact me again, you despicable scumbag.

  2. NRam Says:

    Instead of STAN, the adjectives stain, taint suited him well

  3. dagalti Says:

    The crimes against humanity and nation, he allegedly committed, are precisely what remain legally unproven.

    That is what is problematic about this whole episode. Congress too voted for UAPA – and now is making noises about this. How long is it going to take for this kind of ‘prolonged incarceration without trial’ to be used against

    DMK is already attempting to jail people invoking Section 153 for writing stuff online! அதாவது someone reading online will ‘riot, it seems’! Who? Those who agree with the content of the guy who posted online or the DMK fellows who are offended, on behalf of the bigwigs who were ‘tarnished’. Now imagine this tendency with potential access to UAPA.

    The Kapil Mishras of the world are the mirror images of those who now say things like: an ‘innocent’ man was has been killed by the State (innocent-ஆ உனக்கு எப்படிப்பா அவ்வளவு உறுதியா தெரியும்!), அவருக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க வேண்டும் (எதேய்!).

    Personal anecdotes, like the ones you shared above, are valuable insofar as they flesh out a picture undershown in lazy hagiographies which are flying fast and thick now.

    But we can have these pictures AND concern for due-process. They are not mutually exclusive.

    Else, the wheels come off and the citizen is expected to swallow the State narrative of ‘there was a plot, just take our word for it’.
    Isn’t this descent problematic?

    Regarding Mathew 10:34, I think it is a quoted too reductively by Hindutvavadis. I find it quite metaphoric and honest about the pain/cost of change.

    Perhaps another day. It seems unseemly to discuss that today.


    • Sir, there seems to be 50% reservation for LeLis, naducentres and assorted Cryptos here. So be it.

      1. //The crimes against humanity and nation, he allegedly committed, are precisely what remain legally unproven.

      Are you sure about it? Do you understand the circumstances of the case? Have you followed the courtcases and investigations closely? (or are your sources TheHindu, TheWire, TheQuint and the like?)

      2. // concern for due-process

      Can you show me a single instance in which, this ‘due process’ was not followed in the case of Stan Scumswamy? Am seriously asking. I know that many guys have come to know of this Scammy only recently; but I have followed him (more or less) from 1985.

      In fact, because of this due-process and ‘gaming the legal system’ by the luminaries, justice has not been delivered to India, in this case. (It is actually an open&shut case, with strong, direct evidence marshaled)

      3. // Personal anecdotes, like the ones you shared above, are valuable insofar as they flesh out a picture undershown in lazy hagiographies which are flying fast and thick now.

      I do have personal anecdotes. I clearly mention them as they are after double checking them so that I do not ’embellish’ them.

      They have value for me as they mark my progress (or regress as the case may be) – am sharing them as counterpoises to the dominant humanrights narratives. As always ymmv.

      //Else, the wheels come off and the citizen is expected to swallow the State narrative of ‘there was a plot, just take our word for it’.
      Isn’t this descent problematic?

      ‘State narrative?’ bah.

      A bunch of cases against scum, for example, like our Stan Scammy – are being lodged and followed-up by NIA, not your CBI or the Qbranch of TN.

      Sir, NIA is not a normal organization. It is an ELITE organization and records, access to tech, brilliance and SOP wise, it is comparable to that famous merkezi lemodiin ule tafkidim meyuhadi meven. (a quiz question from the 1980s that I answered successfully & still remember the mugged answer!)

      In fact, NIA was started precisely because there was a lack of meticulousness in the Indian law enforcement agencies; even when requests for red-corner notices and extraditions were made, our agencies had botched up so much by of procedures and documentation – leave alone argumentation. Our high level sleuths had even compared such docs as akin to wikipedia, honestly.

      So NIA was originally formed to make the processes and procedures really pukka – so that there is no embarassment. They have indeed pukkafied them. It is indeed impossible now, to escape from the dragnet of NIA, primarily because of its attention to details and procedures. (all within the scope of the constitution of course)

      I am glad to say that I known a few really fantastic people (who shall remain anonymous) who have perhaps moved on deputation to NIA, though they will never admit to that. (of course this is anecdotal)

      All I am saying is, how do you know that there was no explanation from the govt about the ‘plot?’ Do you think our woke and vocal judges are so dumb? OTOH, I know that many of them are waiting for an opportunity to trip the govt and NIA.

      Of course many proceedings are under wraps, but the due process is being followed.

      Let us not merely trust only the content on our browsers that we eagerly consume from the comforts of our lazy easychairs – let us also treat our premier, elite agencies with a little bit of respect.

      // The Kapil Mishras of the world are the mirror images of those who now say things like:

      It is easy for you and I (who are both using nom-de-plumes and random pseudonyms for various reasons) to take potshots at field workers and feel thrilled about it.

      But, he is a man on the street – and has stood his ground (in AAP and in BJP); he has even made controversial statements, but has stood by them. I have respect for such people, who take ownership for what they say, loudly and clearly.

      For speaking out his mind (and based on evidence) he has been under constant threat by Jihadis. He has skin-in-the-game of life.

      He is not a mirror image of whoever.

      // Regarding Mathew 10:34, I think it is a quoted too reductively by Hindutvavadis. I find it quite metaphoric and honest about the pain/cost of change.

      Hmm, depending on how one approaches it by way of immanentizing the eschaton and associated theologically teleological hair-splitting, one can even say that Jesus wanted to help-out households with slicing/cutting veggies. Tho thweeth.

      We are all our allowed our woozy, warm feelings.

      Interestingly, I have heard it quoted by a Cardinal, a CARDINAL, on a audio/podcast – in the context of ISIS beheading a christian, who converted though he was from a muslim family. The cardinal was quite clear about the sword/driving-wedge if not killing association, when he spoke about retaliation and the family of the beheaded. However one can say that, the aforesaid cardinal did not know the bible or its context.

      // Perhaps another day. It seems unseemly to discuss that today.

      Not really, anyday and everyday it would be like this only; we like our fav blinkers and LOVE our virtue-signalling capabilities. Only thing is that, in some of us, meta-cognition is at a higher level.

      May all in the world get a higher meta-cognition. (but then, there wont be much fun and frolic in the world)

      Amen.

      END

      • dagalti Says:

        Touché
        I should have worded my comments as questions rather than as a series of assertions. விரிவான பதில் பின்னர் முயல்கிறேன்


      • Sir, it is fine. Let us please catch up on household chores and sundry duties, first.

        Then, after discharging our responsibilities, let us park our posteriors rather comfortably in our swivel chairs, and leisurely talk about chors, and give social commentary as is our wont.

        Ah, the human condition.

      • dagalti Says:

        காலை எழுந்தவுடன் துடிப்பு – பின்பு
        பணிவு கொடுக்கும் பல பணிகள்
        மாலை முழுதும் (ஆசை தோசை.. என்கிறது வாழ்க்கை)…
        வரேன்

  4. Swami Says:

    Karma hopefully now turns its attention on the next one (Nanavati hospital inmate)

  5. Vijay Vanbakkam Says:

    /நம் தமிழகத்தில் திராவிடம் எனவொரு திடீரெக்ஸ் திகில்கதை சென்ற 2-3 நூற்றாண்டுகளில் உருவாகி வந்ததைப் /
    திராவிடத்தை பொருத்தவரை அதன் ஆயுள் 100 ஆண்டுகளுக்கு கொஞ்சம் அதிகமாகத்தான். 1856ல் கால்ட்வெல் திராவிட மொழிகள் ஒப்பிலக்கணத்தை எழுதி முதல் வெளியீடு வந்தது. ஆனால் அப்புத்தகத்தில் அவர் மொழி ஆராய்ச்சியை தாண்டி `இன` ஆராய்ச்சி, அதாவது ஒரு மொழிக்குடும்பம் பேசும் மக்கள் ஒரு இனத்தவர் என்ற கருத்தை கருதினார். அப்படிப்பட்ட சமன்பாடுக்கு அவரை மன்னித்துவிடலாம், ஏனெனில் அது பொதுவாக 19ம் நூற்றாண்டு மொழி ஆய்வாளர்கள் செய்த தவறு. ஆனால் நாடர்கள் எப்படி நாடர்களை ஆரியர் இல்லை என சொல்லலாம் என கொதித்தெழுந்தனர். 19ம் நூ முடிவதற்கு முன்பே மொழியியலாளர்கள் மொழிக்குடும்பம்=இனம் என்ற சமன்பாட்டை கைவிட்டனர். மாக்ஸ் முல்லரும்
    “an ethnologist who speaks of Aryan race, Aryan blood, Aryan eyes and hair, is as great a sinner as a linguist who speaks of a dolichocephalic dictionary or a brachycephalic grammar” என இந்த சமன்பாட்டை மறுத்தார்

    கால்ட்வெல் பிறகு 19ம்நூற்றாண்டில் தமிழர் யாரும் இனக்கருத்தை நம்பியதாகவோ கிளப்பியதாகவோ தெரியவில்லை- மாண்ட்ஸ்டூவர்ட் எலிஃபின்ஸ்டன் போன்ற சில பிரித்தானிய கலோனிய துரைகள்தான் அதைப் பிரசாரம் செய்து வந்தனர். 1910 பிறகு சென்னை மாகாண பிராமணர் அல்லாதோர் சங்கம் தான் மெதுவாக `திராவிட` என உருமாறியது. திராவிடம் என்பது அரசியல் கருத்தாக்கம் , அரசியல் நம்பிக்கை.

    காலநீய நாட்கள் முன்பு திராவிடர் என்பது பஞ்ச திராவிடர் அதாவது பிராமணர்களைத்தான் குறிக்கும். இனவியல் படி அதுதான் சரி. தமிழின் மரபு நூல்களஞ்சியமான அபிதான சிந்தாமணி அதைத்தான் சொல்கிறது

    தமிழ் வைணவத்தில் திராவிட என்பது தமிழைக் குறிக்கும், திருவாழ்மொழி திராவிட வேதம் என பல நூற்றாண்டுகளாக கருதப்பபடுகிறது.ஆனால் அது இனத்தை குறிக்கவில்லை.

    திராவிட இயக்கத்தின் பிராமணர்கள்=ஆரியர்கள்; அதன் எதிரி பிராமணர் அல்லாதோர் =திராவிடர்கள் என்பது இனவியல் படியோ, சரித்திர ரீதியாகவோ அப்பட்டமான பொய்

    darvidian stock is a laughing stock


    • Sir, I agree with what you say.

      By: /நம் தமிழகத்தில் திராவிடம் எனவொரு திடீரெக்ஸ் திகில்கதை சென்ற 2-3 நூற்றாண்டுகளில் உருவாகி வந்ததைப் /

      I meant: We are now in 21st Century. The basic roots of ‘dravidian’ lemon-spoon race were laid in 19th Century. That’s all.

      I agree with you intoto that the ‘dravidian stock’ is indeed laughable. With no evidence whatsoever.

      Thanks!

  6. Vijay Vanbakkam Says:

    I don’t like the martyrology surrounding Sawmy’s death. For a man in 80s, best way to prolong life was to stay at home, put on mask, make sure social interactions are bare minimum to escape COVID which has caused thousands of deaths in India. Instead he was challenging fate by provoking the govt of India and mixing with dubious characters.

    However, his death should be used to highlight and set right thousands of undertrials so that judicial process is fair, quick and humane. Judicial and law and order system in India is abysmal in their implementation. Apart from the innate red tape, inefficiency , being loaded against the poor , it is also abused for political vendetta by rulers at the states and centre

    Whatever Swamy may or may not have done, each one deserves a due process, which is fair and just . That is why I have signed the petition

    https://www.change.org/p/the-chief-justice-of-india-justice-for-father-stan-swamy


    • OMG!

      //custodial death of Father Stan Swamy

      I generally support good natured humor, but this is too humorous.

      :-)

      • Vijay Vanbakkam Says:

        Stan has not been a given a bail and he was admitted to the hospital by the police. A policeman or woman would be sitting next to you to make sure you don’t pull out oxygen and other stuff and escape and/or nobody else meets you.
        The govt could have released him on bail with conditions and conecntrated on other things instead of trying to look after him. Now apart from looking mean , GoI has a PR blowback . Govt erred in giving martyr status to SS which he craved so much.


      • I understand this issue.

        But there are STANdard Operating Procedures, no?

        I respect your right to your signature, but, by signing in that petition, don’t you think you helped in the craving of Satan Scammy? And, especially those entitled scum from JNU?

        Anyway, this too shall pass.

        🙏🏿

      • Vijay Vanbakkam Says:

        The main thrust of the petition is not Swamy , but bring the judicial and criminal system to speed to serve the country better.


  7. https://pbs.twimg.com/media/E5nS96UUUAEmC7V?format=jpg&name=large

    :-)

    I am thinking of starting a petition in change.org – for bringing in more and more humor, of the ROFLMAO kind, in change.org.

    (‘toon off: https://twitter.com/vikasopikaso/status/1412391922782511104)

  8. Sesha a.seshagiri Says:

    சுவாமி இல்லை நம்மை பிடிக்க முயன்ற பேய் தான் என்று தெரிந்து கொண்டதற்கு நன்றி!

  9. dagalti Says:

    /assorted Cryptos here/
    இதுக்கு கெட்டவார்த்தைலயே திட்டியிருக்கலாம் :-)

    /Are you sure about it? Do you understand the circumstances of the case? Have you followed the courtcases and investigations closely? (or are your sources TheHindu, TheWire, TheQuint and the like?)/

    My impression is drawn from the above sources plus other mainstream papers.

    I do not share your regard for Swarajya (essays by AN apart, I mean their news/analysis is meh)

    But இதுக்காக மெனெக்கெட்டு நேத்திக்கு தேடினேன். அங்கயும் (அங்கயே!) ஒண்ணும் பெருசா அகப்படலை. I have sufficient bad-faith to believe that if this government had something substantive reportably strong it would have been suitably amplified by the likes of ANI etc.
     
    That is a longwinded way of saying ‘I am shooting from the hip’ based on general impression.

    /Can you show me a single instance in which, this ‘due process’ was not followed in the case of Stan Scumswamy? Am seriously asking. I know that many guys have come to know of this Scammy only recently; but I have followed him (more or less) from 1985./

    To be clear, I am NOT saying the departed Fr. was a sweet bloke whom we should have over for high-tea on balmy afternoons.

    I am making the general point about the process under this act.
    Let us say, the due-process was followed as per UAPA – that is itself problematic if this is what due process is! I am problematizing from the comfort of my couch of course. (Jack Nicholson: you need me on that wall! எல்லாம் சரி)

     
    Are the bases for denying medical bail initially (I read some of the court exchanges)  convincing to you? Since the FIR was filed he was not  arrested for a good year or so. Even if we accept the argument that he is likely to ferment trouble outside, given his history, what is the bases for denying a behavioural conditional bail or medical bail? That is what I am not convinced about.  

    /(It is actually an open&shut case, with strong, direct evidence marshaled)/

    Anything in the public domain?
    In your opinion, are proceeding at the pace that can be expected of a case where ‘strong evidence’ exists?

    /I do have personal anecdotes. I clearly mention them as they are after double checking them so that I do not ’embellish’ them…am sharing them as counterpoises to the dominant humanrights narratives. As always ymmv./

    I am not sure why you said this.
    I am not insinuating that there was something unreliable in personal anecdotes. Not at all.I genuinely mean they are quite valuable in getting a full picture of a man, when everyone is singing emotional paens. So I am in full agreement here.

    /NIA is comparable to that famous merkezi lemodiin ule tafkidim meyuhadi meven. (a quiz question from the 1980s that I answered successfully & still remember the mugged answer!)/

    யூதப் பார்ப்பனீய கூட்டுச்சதி கன்ஃபர்ம்ட்’ங்க. இருங்க விடுதலை’க்கு கோள் மூட்டறேன்.

    Aside: I also have a Quiz-secret org based blogpost to plug: http://dagalti.blogspot.com/2013/03/black-pearl.html

    /It is indeed impossible now, to escape from the dragnet of NIA, primarily because of its attention to details and procedures. (all within the scope of the constitution of course)…Of course many proceedings are under wraps, but the due process is being followed.

    let us also treat our premier, elite agencies with a little bit of respect.
    /

    Hmm. Noted.

    /Do you think our woke and vocal judges are so dumb?/

    No sir.
    But this whole line of argument veers towards automatically trusting the establishment when we should be curious to know how they make their case (of course, with caveats on how much can actually be publicized).

    Based on what we (அதாவது I) gather in the public domain, there is a little too much faith – pardon the pun – being demanded by the establishment in issues of this sort.

    /For speaking out his mind (and based on evidence) he has been under constant threat by Jihadis. He has skin-in-the-game of life.

    He is not a mirror image of whoever./

    Let me restate my analogy, you may still disagree. But let me clarify anyway.

    The DMK is invoking ‘goondas’ act for those who write offensive stuff online slurring their fair name of their leaders (ஜாக்கிரதை!). Now imagine if they were to have the heft in the future to be able to apply an even harsher law. That is the question.

    I am an urging a decontextualization to assess the formal structure of the act/process which can come back to bite those who are cheering today. I am not even finding fault with the cheering – as it is imbued with a sense of righteousness. Just pointing that if the shoe is on the other foot, those cheering now are unlikely to feel as cheerful. 

    What would it take to throw Mishra in prison under the same act for  ‘Fomenting riots and violence and causing loss of lives and property’ ?
    #நட்டநடுசெண்டர்அலெர்ட்  

    Regarding Jesus, later.

  10. dagalti Says:

    One update: தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமனம் :-)


    • 🙏🏿😳😩

      1. வடிவேலுவியம்: https://video.twimg.com/tweet_video/E2m2FZ2VkAozVOH.mp4

      2. “தமிழக பாடநூல் நிறுவனம், கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரான திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!”

      Seems to be a logical extension, eh?

  11. dagalti Says:

    /one can even say that Jesus wanted to help-out households with slicing/cutting veggies./

    :-)

    /we like our fav blinkers and LOVE our virtue-signalling capabilities./

    எப்படி திட்டினாலும் சரி, நான் சொல்ல வந்ததைச் சொல்லியே தீருவேன்.

    The line (and many in that area) are just resplendent IMO.
    Both Bible literalists and critics reduce it.

    This line is especially instructive when thinking about how personally painful change is.

    The fathers and sons are not just corporeal fathers and sons, right?
    If we assume that with any messiah there is going to be easy continuity, unexamined perpetuation and only gentle pivots one is sorely mistaken.

    We change our opinions, sometimes gradually after accretion of introspection. Sometimes when the dissonance between earlier views and new evidence piles up, that the break is sudden. What once enamored us, fired our idealism, what we felt strongly about changes right before our eyes.

    How does one reconcile tradition and juvenile zeal for individualism – grand old question, isn’t it?

    It is thrilling to read Bharathi’s lines:

    முன்பிருந்தது எண்ணிலாது புவிமேல்
    மொய்த்த மக்கள் எலாம் முனிவோரோ?

    நீர் பிறக்குமுன் பார்மிசை மூடர்
    நேர்ந்ததில்லை என நினைந்தீரோ

    But then we are not spat out into the world without context. We struggle with what we inherit, with all its warts, and weigh our appetite for change. It is anything but objective – much as we suffer the pressure to posture. It is deeply personal.

    It is in such contexts that I read the Biblical line.
    It informs how we think of Peace. Not a peace of compromise with extant problems but a fundamental reordering. “How can that be without pain?”, is what the line urges.
    மறத்திற்கும் அஃதே துணை*

    The social parallels are kinda unmissable.
    Take Gandhi’s entry into the scene for instance. Sometimes when we read about the first decades of the 1900s it is SO difficult to actually keep reminding ourselves (myself) that Gandhi is yet to make an appearance! The whole colour of things change after he arrives on the scene. The ruffle he caused with his deviation from ‘status quo’ , is sometimes difficult to apprehend. And his ‘fathers’ – so to speak – were towering men themselves.

    That line from Christ, can understood be as the core of how we change: by active choice and/or gradualism. It informs the whole Burke vs. Thomas Paine arguments we try to wrap our minds around. And so on.

    This is why, when such a rich line, is reduced to a literalism, I wince.

    * of course the old uRaiyAsiyargaL have a different take on that kuRaL which is completely missed in it current understanding. I like both readings.


    • ஐயா,  தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

      தன்முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்ரமராகிய தாங்கள், வேதாளங்களை மறுபடி எழுப்பும் பணியில் ஈடுபட்டிருக்கும் பராக்கிரமத்தை – நான் திட்டவில்லை, புகழ்ந்தேன்.  யேஸ்ஸுவே. பாவிகளை மன்னியும்.

      …கெழட்டுப் புட்டன் யேஸ்ஸூ காந்தீ பிறந்தது இப்பூமியில் எதற்காக, தோழா ஏழை நமக்காக என எம் புர்ச்சித்தலைவர்  கார்ல் மார்க்ஸ் கேட்டதற்கு, வாளாவிராமல் வாள் என்று சொல்லிவிட்டீர்கள் டகால்டிவாள்! புல்லரிக்கிறது.

      +நீங்கள் சொல்லவருவதைப் புரிந்துகொள்ள முயன்று, கொஞ்சம் லேசான விழுப்புண்களுக்குப் பின் ஓரளவு புரிந்துகொண்டேன். ‘ஜீஸஸும் விசிஷ்டாத்வைதமும்: ஒரு  படிமப் பின்னிப்பெடலெடுத்தியல்சார் குறியீட்டியல்’ என பிஹெச்டி பண்ணுவதாக இருக்கிறீரோ?

      ஆனால், வாள் கூராக இருந்திருக்கலாம், ஒரேயடியாக என் பிரச்சினையையும் ஒழித்திருப்பீர்கள். பிரச்சினை என்னவென்றால், கொஞ்சம் ஓவராக நெகிழ்ந்துவிட்டீர்கள், ஆன்மிகக் கோமணத்துக்கு பெல்ட் போட்டுக் கொள்ளவும்.

      மற்றபடி, பின்னர் இதற்கு, காலாகாலத்தில் ஒருமாதிரி எதிரிவினை (வடிவேலுவியம்) புரிகிறேன்.

      “வாளுண்டு என் கையில்
      வானமற்ற வெளியில் நின்று
      மின்னலை விழுங்கிச் சூலுறும்
      மனவலியுண்டு.”

      மிகவும் வலிக்கிறது.

      இவண்:

      சூலுறும்பேட்டை சுப்பாராவ்.

  12. Muthukumar Says:

    ஏலே ! ஏலே ! !
    ஏன்லே , அவனைக் கைவிட்டீர்

  13. Vel Says:

    இந்த சாமியார் ஏசுவை போல மற்றவர்களுக்காக உயிரை விட்டு விட்டாராம். பாதிரியார் கிறிஸ்தவத்தை பரப்ப சத்தீஸ்கர் போகவில்லையாம். Liberation theologyன்னு ஒன்னு இருக்காம், அதன் வழியாக சத்தீஸ்கர் மக்களை மீட்க ரொம்ப போராடத்தான் அங்கு சென்றாராம். Facebook மற்றும் Twitter முழுக்க ஒரே அழுகாச்சி காவியம். அது என்ன சார் ‘Liberation theology’ அதை பற்றி கொஞ்சம் எழுதுங்களேன். மார்க்சியமும் கிறிஸ்தவமும் சேர்ந்த கலவையா அது. ரொம்ப பயங்கரமா இருக்கும் போல இருக்கிறதே.


  14. https://sanjigai108.com/?p=11285
    பொது நல போராளியாக்கப்பட்ட மாவோயிஸ்ட் ஸ்டேன் சுவாமியின் மறு முகம்
    FYI


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s