‘ராக்கெட் ப்ரொப்பல்ஷன் குரு’ அப்ரஹாம் முத்துநாயகம், பாரதத்தின் போற்றுதற்குரிய இஸ்ரோ பொறியியலாளர் – சில குறிப்புகள்
July 24, 2019
சந்த்ரயான்2 அனுப்பப்பட்ட ரெண்டு நாட்களுக்குப் பின் சாவகாசமாக, ரெண்டு குட்டிவீடியோக்கள் மட்டும் அதுகுறித்து என் மகனுடன் உட்கார்ந்து பார்த்தாலும் எனக்குப் பெருமிதம்தான். அழகான கனவு நனவாகும்போது திகட்டுகிறது. ஒரு உண்மையான மறுமலர்ச்சியை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டோம் எனப் படுகிறது.
ஆனால், இன்னொரு பக்கம் இஸ்ரோ குறித்துச் சாடுகிறார்கள், நாட்டில் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திமுக போன்ற கட்சிகள் வாடி இருக்கும் சமயத்தில் பெருஞ்செலவில் இந்த தீபாவளி ராக்கெட் தேவையா என்று வினவுகிறார்கள். நானுமே இப்படியெல்லாம் எழுதியிருக்கிறேன்.
ஆனால், இதெல்லாம் பரவாயில்லை. சோகம் என்னவென்றால்… மிக அநியாயமாக, அவருடைய குற்றத்துக்குச் ஒரு சாட்சியம்கூட இல்லாமல், ஜவஹர்லால் நேருதான் இஸ்ரோவின் தந்தை என ஒரு கொடும்பழியை, க்ரிமினல் குற்றத்தை வேறு அவர்பேர் சுமத்துகிறார்கள், தேவையா?
…அதே சமயம், பாரதக்குழந்தைகளின் மாமாவும் இவர்தான் என்பது ஒரு நடைமுறைத் தொன்மம்; நானே நவம்பர்14கள் அன்று, என் சிறுவயதில் பள்ளிமேடைகளில் ஏறி சாச்சாநேரு பற்றி ஏகத்துக்கும் நீட்டிமுழக்கிப் பேசியிருக்கிறேன், அதுவும் கிழிந்த சட்டைபாக்கெட்டில் ஒரு முள்குத்தும் ரோஜாப்பூவையும் குத்திக்கொண்டு. ‘நேரு சுதந்திரப் போராட்டவீரர் – தந்தை மோதிலால் நேரு – தாய் ஸ்வரூபராணி’ என ஆரம்பித்து ‘ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி’ பேச்சின் முதல் பத்தி உருப்போட்டு மேடையில் அமோகமாக உளறிக்கொட்டல். கீழே பிறமாணவர்கள் கைதட்டும்போது கிடைத்த புளகாங்கிதம் என்பதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, போங்கள்.
எனக்கு நேரு இவ்ளோ க்ளோஸ் ஆனபடியால், ஆகவே எனக்குப் பெரிய பிரச்சினை – திகைப்பளிக்கும் விதத்தில், இந்த இஸ்ரோ எழவானது, இப்போது நம் பாரதக் குழந்தைகளின் மாமாபையனா/மருமகனா என்ன? :-( என்னவோ போங்க! இந்த உறவுமுறைகள் எப்போதுமே என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. சலிப்பாக இருக்கிறது)
-0-0-0-0-
சரி, அப்ரஹாம் முத்துநாயகம்.
https://www.thehindu.com/lf/2005/01/23/images/2005012302270201.jpg (2005 புகைப்படம்)
1939ல் பிறந்த இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை 1960ல் முடித்தபின் + 1962ல் பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் மேற்படிப்பை படித்தபின், அமெரிக்க பர்ட்யூ பல்கலைக்கழகத்தில் 1965ல் ஒரு பிஹெச்டியையும் முடித்தபின்… பின்னர், விக்ரம் ஸாராபாய் அவர்கள் கூப்பிட்டாரென்று பாரதம் திரும்பினார்.
ராக்கெட் ப்ரொபல்ஷன் நிபுணராக மிளிர்ந்தார். தமிழக மஹேந்த்ரகிரியில் உள்ள லிக்விட் ப்ரொபல்ஷன் ரீஸெர்ச் ஸிஸ்டம் ஸென்டர் (எல்பிஎஸ்ஸி – திரவநிலைஎரிபொருள் உந்துவிசை ஆராய்ச்சி அமைப்பு மையம், ஸ்ஸ்ஸ், அப்பாடா!) நிறுவனத்தை நிறுவி, பலவகைகளிலும் இஸ்ரோவின் வளர்ச்சியில் காத்திரமாகப் பொறுப்பேற்றுப் பணிபுரிந்தார். இதையெல்லாம் கதைகதையாக எழுதலாம். ஆனால் இந்த எல்பிஎஸ்ஸி தளத்தில், ஏன் விக்கீபீடியாவில் கூட சிலபல மேலதிக விஷயங்கள் இருக்கின்றன.
தற்போது, இவர், கன்யாகுமாரி தக்கலைபக்க குமரன்கோவிலில் உள்ள நூருல்இஸ்லாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏதோ செய்துகொண்டிருக்கிறார் எனக் கேள்விப்படுகிறேன். அந்தப் பல்கலைக்கழகம் பற்றி ஒன்றும் பெரிதாக அறிந்திலேன் என்றாலும், அதற்கு ஏதோ இஸ்ரோ தொடர்பெல்லாம் கிடைத்திருக்கிறது போல. நம்மவர் புண்ணியமாகத்தான் இருக்கவேண்டும். அவருடைய மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள், வேறென்ன சொல்ல.
-0-0-0-0-0-
அஹமதாமாத்தின் ஃபிஸிக்கல் ரீஸெர்ச் லெபாரட் டரி (பிஆர் எல் – இதுதான் இஸ்ரோவின் முன்னோடி) குறித்த ஆங்கிலக் கட்டுரையைச் சிலகாலம் முன் எழுதினேன். அதில் முத்துநாயகம் அவர்கள் குறித்த ஒரு சிறு குறிப்பு இருந்தது. (‘History’ of ISRO, @TrueIndology, Liberal liars, ‘Of course, Nehru did everything!’ – notes 29/03/2019)
7. The youngest among all, at the time of PRL reconstitution during 1963, was Abraham Muthunayagam; he was a rocket propulsion expert and went on to occupy key positions in ISRO later – in fact, I have personally met with this remarkable engineer in the early1990s at Mahendragiri – I was then a ‘budding’ (and then wilted) entrepreneur trying to supply some data acquisition system to ISRO. (May be, APJ Abdul Kalam was also part of PRL initially, and then joined TERLS team, but am not sure and I do not have that data in my notes)
விக்ரம்சாராபாய் அவர்கள் தொகுத்து ஒருங்கிணைத்த தரம்வாய்ந்த பொறியியலாளர்கள் / சான்றோர்கள் குழுவில் 1963வாக்கில், நம் முத்து நாயகம் அவர்கள்தாம் வயதில் இளையவர்!
பின்னர் மஹேந்த்ரகிரியில் அவர் இஸ்ரோவின் எல்பிஎஸ்ஸி-யை ஆரம்பித்து நிர்வகித்தபோது, கண்டதிலும் கை வைத்து, கணிநித் தொழில்நுட்ப எழவிலும் நான் ஒரு கை பார்த்துக்கொண்டிருந்த போது, அவரை நேரடியாகச் சந்தித்து, நான் வடிவமைத்துத் தயாரித்த ஒரு டேட்டாலாக்கர் எழவை ‘மார்க்கெட்டிங்’ செய்ய முயன்று கொண்டிருந்தேன். அப்போது அவருடன் சுமார் 30 நிமிடம்போல அளவளாவியிருப்பேன் என ஒரு மங்கல் நினைவு. பெரியவர். அவரிடம் கற்றுக்கொள்ள நிறையவே இருந்தன.
சரி.
கொசுறுச் செய்தி: முத்துநாயகம் அவர்கள், கேரளஅரசின் (+ஐபி) 1994 சதித்திட்டத்தில் மாட்டிக்கொண்டு (பின்னர் விடுவிக்கப்பட்ட) பாவப்பட்ட ஆராய்ச்சியாளர் மகாமகோ நம்பிநாராயணன் அவர்களின் மேலதிகாரி/மேனேஜர்.
நம்பிநாராயணன், சோரம்போன கேரளக் காவல்துறையால் அநியாயமாகத் துன்புறுத்தப்பட்டபோது, முத்துநாயகத்தையும் சதிவலையில் இறக்கிவிட வற்புறுத்தப்பட்டார் – ஆனால் நம்பி இந்த அநியாயத்துக்கு மறுத்தவுடன் இன்னும் படுமோசமாக, நாற்பத்தெட்டு நாட்களுக்கு அவரைச் சித்திரவதை செய்தார்கள். இவருக்கு அண்மையில் பத்ம விருது கொடுக்கப்பட்டாலும், அவருக்கும் நம்தொழில்நுட்பத்துக்கும் இழைக்கப்பட்ட அநீதி என்பது ஒரு பெருஞ்சோகம்.
https://indiankanoon.org/doc/140150087/
இம்மாதிரி மேல் நாட்டு பணத்தைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு, பாரதத்தின் தொழில் நுட்ப வல்லுநர்களை, முயற்சிகளை ஒழிக்கமுயன்ற அதிகாரிகளின் தலைமையில் ஸிபி மேத்யூஸ் என்பவர் இருந்தார். பின்னர் இவர், அப்போதைய வெட்கங்கெட்ட கேரள காங்க்ரஸ் அரசால், அவருடைய நற்காரியங்களுக்காக விதம்விதமாகப் பதவிகள் கொடுத்து அழகு பார்க்கப்பட்டார். (அவரும் நிர்பயம் என ஒரு திரித்தல்புத்தகத்தை எழுதினார் என நினைவு. அதில், தான் நிரபராதியென்று சப்பைக்கட்டு கட்டினார் என நினைக்கிறேன்)
ஆ! பிடித்துவிட்டேன் – இந்த நிர்பயத்தையும் ஸிபி மேத்யூஸையும்… கீழே. கூக்ள் எழவுக்கு நன்றியுடன்.
யோசிக்கிறேன், மகாமகோ நம்பிநாராயணன் மட்டும், மாளா சித்திரவதைக்குப் பின், முத்துநாயகம் அவர்களையும் உள்ளிழுத்திருந்தால், என்ன ஆகியிருக்கும்?
ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. இம்மாதிரி எவ்வளவோ ரத்தமும் கண்ணீரும் சிந்தப்பட்டு மாளா உழைப்பும் அறிவார்ந்த செயல்பாடுகளும் இருந்ததாலும்தான் பாரதம் முன்னேறிக்கொண்டேயிருக்கிறது அல்லவா?
-0-0-0-0-
சரி.
பெரியவருக்கு இப்போது 80; பழுத்த வயது. எப்போதாவது நாகர்கோவில் பக்கம் செல்லக்கூடுமானால், அவசியம் இன்னொருமுறை அவரைப் பார்த்து விஸ்தாரமாகப் பேசவேண்டும், என நினைத்துக் கொண்டிருக்கிறேன். கூடியவிரைவில் செய்யவேண்டும் இதை. ஏனெனில், இந்த ஆர்வமானது – பெரியவர் ஸானந்த்ஜி (1, 2, 3), சித்பவன்காரர் (1, 2), ரவீந்த்ரஷர்மா ‘குருஜி‘ போல முடியக்கூடாது எனவும் தோன்றுகிறது…
ஒரு கோரிக்கை: ஒத்திசைவைப் படிப்போர் அதிகமில்லை. வழக்கம்போல அதே ஏழரைகள் தாம். ஆனால் அவர்களோ, அவர்களுக்குத் தெரிந்தவர்களோ, நாம் தலைமேல்* தூக்கிவைத்துக் கொண்டாடப்படவேண்டிய இப்படியாப்பட்டவர்களை கௌரவித்து பாண்டிவித்து என எதையாவது செய்யலாமே!
ஆர்வமுள்ள இளைஞர்கள் யாராவது, பின்புலத்துக்காக ஆழமாக ஹோம்வர்க் செய்தபின் இவரை ஒரு காத்திரமான நேர்காணல் செய்து, தரவேற்றலாமே… குறைந்த பட்சம், நாரோயில் சுற்றுவட்டாரப் பள்ளிகளுக்கு இவரைக் கூப்பிட்டு மரியாதை செலுத்தி, ஒரு மகாமகோ ரோல்மாடெல் ஆன அவருடைய ஆசீர்வாதத்தையும், பரிந்துரைகளையும் வாங்கிக்கொள்ளலாமே!
ஹ்ம்ம்… அல்லது அரைத்த தோசைமாவையே அரைத்து அதையே புளிக்கவைத்துப் புளுகி மனோதத்துவ சமூகமானுடப் பண்பாட்டியல்தனமாக அலசிக்கொண்டேதான் தொடர்வோமோ என்ன எழவோ!
* சகவழுக்கைத் தலையர்கள் அகலவும், முத்துநாயகம் அவர்களுக்கு ஏற்கனவே 80+ வயது, பாவம்; ஆனால் அவர்கள், தாராளமாக, தோளில் சுமக்கலாம். நன்றி.
July 24, 2019 at 17:19
https://othisaivu.wordpress.com/2012/05/05/post-114/
you have praised in this link not only our Perasan but also Cuddalorar .Times have changed. The wheel has come a full circle.
July 24, 2019 at 18:04
I standby it. But remember I did not talk much to any Tamil litt guy there. Chatted only with the students. I wrote that Cuddaloorar was an enthu youngster. Now he has become over enthusiastic. A problem. Jeyamohan, still is good to go, he is the best among prolific writers. But has always been the flower of Mahua longifolia. Also my aavarana has fallen. Tamils deserve much much better, anyway.
July 24, 2019 at 19:41
Muthu, adding on to whatever I wrote earlier, you perhaps may not be surprised to learn that I have blasphemed many times. But to the extent my aavarana permits it, I have always tried to reformat myself.
Right from calling Gandhi, Gandhiar to (in my late teens to early twenties) worshipping the likes of Shibdas, Varavararao, Kanu Sanyal, Nehru, Stalin(original), Marx, Lenin, Mao to… Admiring EVR to … …Dalailama to… fighting pitched battles with venerable Dharampal to many others I dare not name… …
But I think, I have grown up and since then have become a perennial adolescent…
Again, I went out of circulation (intentionally) for 20 years between 1991-2011 wrt this (more or less) stupid & permanently mediocre tamil litt scene. When I wrote that offending post, I must have felt euphoric since someone (Jeyamohan talking about Bapuji) talking in tamil made good sense. I think it was in 2012 or thereabouts. I think we all have moved on since then.
But then, we bloody live and learn, don’t we?
I think one of these days, we shall meet and you will get ample chance to berate me in person, point out the inconsistencies, even as I would try my best to bore you with my weird ideas…
Hugs.
July 24, 2019 at 17:27
Most willing to invite Dr.Muthunayagam to the school to which I am attached. Happy your article gives a glimpse of the contribution of the good old man to our rocket research.
July 24, 2019 at 17:53
But hey, at our age we shouldn’t be attached to anything. Including our brains. Learn from THE aasaan please. Anyway, am glad that you are thinking along these lines and am happy to be of service.
July 24, 2019 at 21:05
Two minor points:
LPSC is Liquid Propulsion System Centre, not Research Centre.
Muthunayagam was also Secretary, Department of Oceanography, (Now part of Ministry of Earth Sciences) after he left ISRO. Post retirement, he was the Chairman of Karunya Group of Institutions in CBE,
That’s all.
July 24, 2019 at 21:57
Thanks for the clarification/correction. My bad, will correct it in the main post too.
Am surprised that you are still reading my drivel!
A request: If you have the contacts of this gent could you please DM on twitter or SMS me? Were you working with these folks are what? Great to reconnect. :-)
July 25, 2019 at 10:57
முத்துநாயகம் அவர்கள் ஏன்தான் இப்படி நூருல்ஹஸ்ஸன், காருண்யா போன்ற கழிசடைக் கல்லூரி / பல்கலைக்கழகங்களுடன் பணிபுரிகிறாரோ என வருத்தமாக இருக்கிறது. மேட்டிமைத்தனத்துடன் மட்டுமே இதனைச் சொல்லவில்லை. ஏனெனில் நன்றாக வளர்ந்திருக்கக்கூடிய இளைஞர்கள் இம்மாதிரிக் கல்விக்கசாப்புக் கடைகளால் காயடிக்கப்பட்டதைப் பலதடவை பார்த்துச் சலித்தாகிவிட்டது.
ஆனால் பெரியவரின் திறமை பற்றி எனக்குச் சந்தேகமேயில்லை – ஆக, சிலபல மாணவர்களாவது இவர் மூலமாக மீண்டெழுந்தால் பரவாயில்லை.
(நேற்று, இம்மாதிரி விஷயங்களில் அனுபவம் இருக்கும் என் நண்பர்கள்/அறிமுகங்கள் மூவருடன் தொடர்புகொண்டு விசாரித்தேன். இந்த நிறுவனங்களின் தரமோ, தன்மையோ சார்புகளோ, சரியே இல்லை, வருத்தம்!)
July 25, 2019 at 11:31
Nice to know that real scientist is teaching in our area :)
Before visiting him, make sure he don’t read 2 blogs in particular,…mmm, make it three.
July 25, 2019 at 12:48
Hey Kannan, I know of only one serious, serial-killer blogger from your area. I don’t want to Drum-matize it further. But, who are the others?
Anxiously yours:
__r.
July 25, 2019 at 16:34
hahahaha…. you missed it completely.
I just thought APJ was Vairamuthu’s fan, likewise Aasan, sRa may have few readers in NASA,ISRO etc and they read Othisaivu too :( you got the point ?
July 25, 2019 at 19:30
sir, it is fine, even now, I did not get it. ;-)