ஸ்டாலின்: “அண்ணாநகர் ரமேஷ் குடும்பத் ‘தற்’கொலைகள் மர்மமாக இருக்கும் காரணத்தால் …”
April 2, 2019
“…நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உண்மையைக் கண்டுபிடித்து, யார் இந்தத் ‘தற்’கொலைகளின் பின்னால் இருந்தார்கள் என நாட்டு மக்களுக்கு… … டட்டடா டட்டடா டட்டடா…“
பயப்படாதீர்கள்! சும்மனாச்சிக்கும் சொன்னேன். ஸ்டாலினாவது திருந்துவதாவது. தன் தந்தையாரைப்போலவே – அவருக்கும் அவருடைய மூன்றாம்நான்காம் தலைமுறைகளுக்கும் சேர்த்து சொத்துசேர்க்க, மேற்படிக்குக் கொள்ளையடிக்கவேண்டாமா, பாவம்?
பின்னர் அவர், தமிழ்நாட்டின் பலபாகங்களை ஏற்கனவே எழுதிக்கொடுத்துவிட்ட குறுநிலமன்னர்களுக்கெல்லாம் (இவ்னுங்கோ வேற யார்மில்லீங்கோ! மாவட்டச் செயலாளர்ங்க தாங்கோ!) வேறு படியளக்கவேண்டும், கொள்ளைகளை ஒருங்கிணைக்கவேண்டும், ஏகோபித்த தகுதிபெற்ற தம் சந்ததியினரை கட்சி ட்ரஸ்ட்களில் நுழைக்கவேண்டும், வாழையடிவாழையாக மாவட்டச்செயலாளரடி மாவட்டச் செயலாளத் தறுதலைமுறைகளை வளர்க்கவேண்டும், திமுக கட்சிச் செயல்வீரர்களைக்கொண்டு தமிழகத்தில் இருக்கும் பிரியாணி இட்லிவடை கடைகளையெல்லாம் அடித்து நொறுக்கி அவற்றின் சிறுவியாபாரிகளை அதிரடி ஜேப்படி செய்து அவர்களைக் கதிகலங்கி ஓடவைக்கவேண்டும்!
விட்டுவைத்திருக்கும் திரைப்பட ஊடகத் தொழில்களையெல்லாம் ‘டேக் ஓவர்’ செய்யவேண்டும். ஜெகத்தையே ரட்சகம் செய்ய அவதரித்திருக்கும் அடிப்பொடிகளை வைத்து வெளி நாடுகளில், பில்லியன்டாலர்கள் கணக்கில் முதலீடு செய்யவேண்டும்… ஐயகோ! எவ்ளோ வேலைகள், எம் தலீவரின் தலைக்குமேல் இருக்கின்றன? வேகமய்யா வேகம்!
ஊக்கபோனஸாக குணசித்திரவேடங்களணிந்து குல்லாமாட்டிக் கஞ்சி குடித்துக்கொண்டும் உதிரிகளுடன் கேக்வெட்டிச் சாப்பிட்டுக்கொண்டும் – ஹிந்துக்களையும் அவர்கள் நம்பிக்கைகளையும் கரித்துக்கொட்டவேண்டும் – சமயம் இருக்கும்போதெல்லாம் ஏகோபித்து உளறவேண்டும்!
அதேசமயம் தேவர்ஜெயந்தி என்றால், பகுத்தறிவுடன் பம்மிக்கொண்டே பசும்பொன்னுக்குப் படையெடுத்து வருடாவருடம் சுத்திகரித்துக்கொள்ளவேண்டும்.
ஸ்ஸ்ஸ்…. …பாவம், நம் செல்ல இசுடாலினுக்குத்தான் எவ்வளவு சுமக்கவேண்டிய பாரங்கள், பொறுப்புகள், கடமைகள்! நினைத்தாலே எனக்கு மலைப்பாகவும், இசுடாலின் மீது ஏகத்துக்கும் மரியாதைமரியாதையாகவும் வருகிறது. உங்களுக்கு?
ஐயா இசுடாலிரே! வொன்க்கு ஸலாம் வெச்சிக்றேன்பா! நீயி எம்மாம் பெரீய்ய்ய்ய தலீவருபா!!
மசுர்க்கூச்செறிதுபா! வொன்ன வுட்டா, நம்ப் டம்ள்னாட்கு நாதியே இல்லபா!! நீயி இல்லாக்காட்டீ டமிள்னாடே நாஸ்தீயாய்டும்பா!
…அப்டீயே வா! தலீவா வா!!
வொண்மைகள கண்ட்புட்க்கலாம் வா!!!
வொணக்கம்.
-0-0-0-0-0-
சரி.
இந்த இசுடாலிர், மறுபடியும் மறுபடியும், தப்பும்தவறுமான தமிழில், ஜெயலலிதா மரணத்தின் ‘மர்மத்தைப்’ பற்றி முழ நீளத்துக்குப் பேசும் அளவுக்கு, தன் சகவாசத்தால் இறந்த அண்ணா நகர் ரமேஷ் அல்லது கனிமொழி சகவாசத்தால் இறந்த சாதிக் பாட்சா பற்றியெல்லாமா பேசுவார், சொல்லுங்கள்?
… ஆகவே, அந்த மர்மத் ‘தற்’கொலைகள் பற்றி எளிய குறிப்புகளை வழங்குவதில் உள்ளபடியே பெருமையடைகிறேன். நன்றி.
16 ஜுலை, 2001 அண்ணாநகர் ரமேஷ் – தம் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட தினம். ஏன் எதற்கு எப்படி? ரமேஷ் சரி – ஆனால் அவர் ஏன் தன் மனைவியையும் தன்னுடைய குழந்தைகளையும் கொலை செய்துவிட்டுத் தானும் சாகவேண்டும்? அப்படி என்ன நெருக்கடி?
ஆனால் இத்தினம்தான் – திமுக தலைவர்கள், இசுடாலிர்கள் உட்பட, நிம்மதிப் பெருமூச்சுவிட்ட தினம். ஆசுவாசம் பெற்ற தினம்.
…ஹ்ம்ம்… … இந்த அமோகத் ‘தற்கொலை’கள் நடந்தபின் கிட்டத்தட்ட 18 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இன்னமும் ‘குற்றவாளிகள்’ தண்டிக்கப்படவில்லை. கேவலம்.
நேர்மையாளர்களும் மனுநீதிச் சோழர்களுமான இசுடாலிர்களும், கூட ஓடிக்கொள்ளையடிக்கும் உடன்பிறப்புகளும் இந்த மர்மத்தைப் பற்றி ஒரு அறிக்கை கூட விடவில்லை.
ஒருவரும் – ஒரு திமுக பேடியும், இக்கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மைகளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும், சிபிஐ விசாரணை வேண்டும் என ஆர்பாட்டம் செய்யவில்லை. ஈழத் தமிழர்களுக்காக குணசித்திர வேடங்களிட்ட கருணாநிதி போலக்கூட, கேவலம் ரெண்டுமூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை.
ஜெயலலிதா மட்டும்தான் இது தற்கொலையல்ல என மறுபடியும் மறுபடியும் சொல்லிவந்தார். ஆனால், திமுக அடிப்பொடிகள் – ‘புரட்சிக்கார’ கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரெஸ்… அனைவரும் மயான அமைதியைக் கட்டுக்கோப்புடன் கடைப்பிடித்தனர். விசிக கூட விசித்திரமான வகையில் விசித்து விசித்து விக்கி விக்கி ஒப்பாரி வைக்கவில்லை, ஓலமிடவில்லை!
காலத்தின் வழுவமைதி, வேறென்ன சொல்ல.
கமுக்கம். திமுகம்.
ஆகவே!
-0-0-0-0-0-
திமுக நேர்மையாளர் ஸ்டாலின் ‘காப்பாற்றப்படுவது’ காரணமாக/தொடர்பாக, குடும்பத்தோடு சுயஅர்ப்பணிப்புடன் ‘தற்கொலை’ செய்துகொண்ட பெருமைபெற்ற, திராவிட மறப்போர் வீரன் ‘அண்ணா நகர் ரமேஷ்‘ – சில குறிப்புகள்
சரி, ஆனால் யார் இந்த ‘அண்ணா நகர் ரமேஷ்?’
இவருக்கு ஒரு சிறிய அறிமுகம் தேவை என நினைக்கிறேன் – ஏனெனில் இவருடைய ‘கீர்த்தி’ ஒருகாலத்தில் மிகப்பெரிதாகவும் மோசமானதாகவும் (திமுகவின் நகைக்கத்தக்க நேர்மைத் தகுதிகளின்படியே கூட!) பூதாகாரமான வளர்ச்சி பெற்று இருந்தாலும், இவர் இப்போது மிக வசதியாக திமுகவினரால் ‘மறக்கப்பட்டு’ விட்டார்.
ரமேஷ் நாராயணன் – ஒரு சிறு ஸிவில் கான்ட்ரேக்டராகத்தான் – சிறுசிறு கட்டுமானங்களை நிறைவேற்றும் ஒப்பந்ததாரராகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தார். 1980களின் கடைசியியில்தான் இந்தத் தொழிலை ஆரம்பித்தார். 1991-96 ஜெயலலிதா ஆட்சியின்போது புரட்சித்தலைவியின் ‘வண்டியிலிருந்து தொங்கிய புகழ்‘ எஸ்டி சோமசுந்தரம் அவர்களின் உதவியாளராகவும் அவர் மூலமாக மேற்படி சென்னை மாநகராட்சிக் காண்ட்ரேக்ட்களைப் பெற்றும் வளர்ந்தார். ஆக இம்மாதிரி ஒப்பந்தகளை எப்படிப் ‘பெறுவது,’ கமிஷன் வியாபாரம், ஆவணங்களை எப்படி ஜோடிப்பது, அறிவியல் முறையில் எப்படி ஊழல்செய்வது என்பவற்றையெல்லாம் ஐயம்திரிபறக் கற்றார். பக்கா திராவிடர்.
1996ல் ஜெயலலிதா ஆட்சி கவிழும் எனத் தெரிந்த நிலையில் 1994-5ல் திமுக அனுதாபி(!)யாக மாறி, தன்னுடைய தன்னிகரற்ற தகுதிகளால் கட்சித் தலைமையில் சிலபலருக்கு, அவர்களின் உதவியாளர்களுக்கு அன்னியோன்னியமானார். அஇஅதிமுக ஆட்சியின் ஊழல்கள் சிலவற்றைக் குறித்த தகவல்களை அவர்களுக்கு அளித்து இன்னமும் நெருக்கம். ஒரே நெருக்கம்.
ஆக – அதேசமயம், அதே வகையறரா தன்னிகரற்ற தகுதிகளை, தம் பெற்றோர்வழி மரபணு மூலமாகவும் அமோகமாகப் பெற்ற இசுடாலிர் அவர்களால் கவனிக்கப்பட்டு அவருடன் ஒர்ரே ஜிகிரி தோஸ்த் ஆனார். தீராவிட ஈனமானம் இன்னொரு தீராவிட ஈனமானத்துடன் சேர்ந்ததால் – ஒர்ரே அன்னியோன்னியம், போங்கள். Mutual Benefit Fund, பரஸ்பர சஹாய நிதி, கருணா’நிதி’கள், வேறென்ன சொல்ல! 1996லிருந்து 2002 வரை இசுடாலிர் தான் சென்னை மாநகராட்சியின் மேயர். நன்றாகவே மேய்ந்தார். புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்றில்லாமல் கொஞ்சம் லஞ்சம்/கமிஷன் என மட்டும் புறங்கையை நக்க என எடுத்துக்கொள்ளாமல் – புல்லுக்கு மட்டுமே பொசிந்துகொண்ட புல்லராகவும் பரிணமித்தார். இருந்தார்.
ஆக, இங்கு இயற்கையான ஒரு கொள்கைகொள்ளைக் கூட்டணி அமைந்தது. நம் ரமேஷ் பெருந்தகை, இசுடாலிரின் பிரத்யேகச் செயல்பாட்டாளராகவும், நண்பராகவும், சதியாலோசனை அறிவுரையாளராகவும், ‘நிதி’ போக்குவரத்துகளை மேலாண்மை செய்தவராகவும், அவருடைய முதலீடுகளைப் பார்த்துக்கொள்பவராகவும் – ஆகவே, அவரது வலதுகரமாகவும் பினாமியாகவும் பரிணாம வளர்ச்சியுற்று மிகமிக நெருக்கமாக இருந்தார் – மேலும் ஒரு அதிகார மையமாகவும் உருவானார். ‘அண்ணா நகர் ரமேஷ்’ என்றாலே உடன்பிறப்புகள் வெலவெலத்தார்கள், உருகினார்கள். அவரை, இசுடாலிர் அருகே செல்ல ஒரு இணப்புப் பாலமாகக் கருதினார்கள். தன்னுடைய பங்குக்கு – இசுடாலிர் தன்னுடைய அபாரமான ‘தொழில்முறை வளர்ச்சி’க்கு – ரமேஷுக்குக் கடன்பட்டதாக உணர்ந்து, ரமேஷை ஒரு அதிர்ஷ்டச் சின்னமாகவே பாவித்தார்!
ஏறத்தாழ அனுதினமும், கோட்டை போன்ற சுற்றுமதிற்சுவர் எழுப்பப்பட்ட அவர் வீட்டுக்கு இசுடாலிர் எழுந்தருளினார். ஒருவருக்கொருவர் ஞானபோதிப்பும் நடந்தது. (அந்தச் சமயத்தில் அயனாவரம் பக்கத்தில் பாண்டியன் என்றவொரு பொறுக்கித் தாதா ஒரு பெரிய மயானத்தையே வளைத்துப்போட்டு நட்ட நடுவே பெரிய மாளிகை கட்டிக்கொண்டு – அந்தப் பகுதியில் மாமூல், அடிதடி, கட்சிசார்பற்ற கட்டப்பஞ்சாயத்துக் குறுராஜ்யம் ஒன்றை நடத்திக்கொண்டிருந்தார் – உண்மையான மயானக் கொள்ளை இது! இந்த ஆசாமி வீட்டுக்கு(!) இருமுறை போயிருக்கிறேன. நாயகன், காட்ஃபாதர் படங்களையெல்லாம் தூக்கிப்போட்டுச் சாப்பிட்டுவிடும் கண்கள் மினுமினுக்கும் பட்டன்மென், செயல்வீர ரௌடிகள் புடைசூழ அவர் வளையவந்தார்; ஆனால் அதெல்லாம் வேறு கதை; அந்த நிலத்தில் அடுக்குமாடி வீட்டுத்தொகுதிகளைக் கட்டவும் என்றெல்லாம் திட்டம் வைத்திருந்தார் – இந்த விவகாரத்தில் நம் செல்ல அண்ணாநகர் ரமேஷுக்கும் இவருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம்(!) – சுமார் 1996 வாக்கில் தான் இது பற்றியெல்லாம் நான் அறிந்தேன், ரமேஷ் பற்றியும் கொஞ்சம் விஷய அறிமுகம் பெற்றேன், என் பாக்கியம்!)
சரி. இசுடாலிருடனான ரமேஷின் நெருக்கம் எவ்வளவு வீரியமிக்கதாக இருந்தது என்றால், ரமேஷுடைய ப்ரத்யேக அண்ணா நகர் ‘ஹெச் ப்ளாக்’ வில்லா வாசலில் 2001 தமிழகச் சட்டசபைத் தேர்தலில் திமுக டிக்கெட் வாங்க – திமுக உடன்பிறப்புகள் தள்ளுமுள்ளு, ராப்பிச்சைபோல வாயிற்காத்தல்கள்! ஏனெனில், இசுடாலிரின் சசிகலாவாக, இந்த ரமேஷ் இருந்தார். இசுடாலிரின் நம்பிக்கை நட்சத்திரமாகவும்.
இசுடாலிர், ஆயிரம் விளக்குகள் தொகுதியில் தனது 2001 பிரச்சாரத்தை ஆரம்பித்தபோது, பெரிய ஊர்கோலம் ஒன்று தாரைதப்பட்டைகளுடன் நடந்தது. ஏதேச்சையாக அங்குள்ள தேவநேயப்பாவாணர் நூலகத்துக்கு என் நண்பர் ஒருவருடன் சென்றிருந்த போது இதனைப் பார்த்தேன். அந்த ஊர்கோலத்தில் என்ன விசேஷம் என்றால் – மேற்பாகம் திறந்த ஜீப்பின் பின்புறம் இசுடாலிர் நின்றுகொண்டு நம் இசுடாலிர், கார்க்கண்ணாடிவைப்பர் போல கையை விலுக்விலுக்கென ஆட்டிக்கொண்டு வந்தபோது அந்த ஜீப்பைக் கனகம்பீரமாக ஓட்டிச் சென்றது, நம் ரமேஷ்!
…ஆனால் – 1990களில் அச்சமயம், திமுகவின் ‘ஆயிரம்விளக்கு ஹுசேன்’ எனவொருவர் (என நினைவு – இது சரியில்லை என்றால் திருத்திக்கொள்கிறேன்) கோபாலபுரம்-ஆயிரம்விளக்கு-தேனாம்பேட்டை பகுதிகளில் கன்னக்கோலோச்சிக் கொண்டிருந்தார். அவர்தான் இசுடாலிருக்கு எல்லாமுமாக அப்பகுதியில் இருந்தார்; ஆக – ஏன் ஹுசேன் அந்த ஜீப்பை ஓட்டாமல், இன்னொருவர் ஓட்டுகிறார் என என் நண்பரிடம் கேட்டபோது அவர் கிசுகிசுத்தார் – அந்தாள் தாண்டா அண்ணா நகர் ரமேஷ், இசுடாலிரின் அதிர்ஷ்டக் கழுதைச் சின்னம். எது எப்படியோ, அப்போதுதான் முதலும்கடைசியுமாக அந்தச் சான்றோர் ரமேஷை நான் பார்த்தது!
-0-0-0-0-0-
2001 மேமாதம் – தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன. திமுகவுக்குக் கிலி கொடுக்கும் வகையில் ஜெயலலிதா கெலித்துவிட்டார். பாவம் இசுடாலிரும் அவருடைய அதிர்ஷ்டச் சின்னமும்! என்ன கித்தாப்புடன் வளையவந்துகொண்டிருந்தார் அவர்!
போர்க்கால ரீதியில் – சென்னையில் நெடுஞ்சாலைகளை / மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் நடந்த மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, அப்போதைய சென்னை மாநகராட்சி மேயராக மேய்ந்துகொண்டிருந்த இசுடாலிருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இசுடாலிர்கள் ‘அறிவியல் பூர்வமான’ ஊழலை அரங்கேற்றியிருந்தாலும் – அவர்கள் கொள்ளையடித்தது அளவுக்கு மீறிய அளவில் இருந்ததால் – பிசாத்துப்பணமான 12கோடி அளவுக்கு, மேம்பாலங்கள் கட்டுவதில் கார்ப்பரேஷனுக்கு நேரடி இழப்பு நேரிட்டது என்பதற்கு, காத்திரமான ருசுக்கள் சிக்கின. ஆக இசுடாலிரும் கூட்டாளிகளும் (அவரது மனச்சாட்சியான ரமேஷ் உட்பட) கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை முற்றியது.
இதற்கிடையில்…
-0-0-0-0-
2001 ஜூன் முதல்வார வாக்கில் – டிஜி தெய்வசிகாமணி எனும் ஒரு ஸிவில் காண்ட்ரேக்டர், சென்னையில் சாலைகள் போடும் ஒப்பந்தங்கள் குறித்து ஏழுகோடி ரூபாய் லஞ்சத்தை ஸ்டாலினுக்கும் தா.கிருட்டிணனுக்கும் (பிற்பாடு, ஏதோ சகோதரத் தகராறு காரணமாக, இவரை அழகிரி டெஸ்பாட்ச் செய்தவிஷயம் நினைவிலிருக்கலாம்!) – ரமேஷ் வழியாகக் கொடுக்க நேர்ந்ததாக ஒரு புகாரை, காவல்துறை ஆணையரிடம் நேரிடையாகச் சென்று பதிவு செய்தார்.
அந்த லஞ்சப் பணத்தைக் கொடுப்பதற்கு முன்னால் – தன்னை திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. பரசுராமன் (2015ல் போய்ச் சேர்ந்தார்), அண்ணா நகர் ரமேஷ், ரெளடி ‘பங்க்’ குமார் (இந்த உதிரி, அப்போது திமுக செயல்வீரன், இப்போது பாமக கட்சி என நினைக்கிறேன்) கும்பல் கடத்திக் கொண்டு போய் அடைத்து வைத்து ரூ. 7 கோடி கொடுத்தால்தான் விடுவிப்போம் என மிரட்டியதாகவும் கூறியிருந்தார்.
…ஆக – ரமேஷ் தலைமறைவானார். ‘பிரச்சினைகள்,’ பாவம்… அவ்வப்போது குடும்பத்தினரைச் சந்திக்க ரகசியமாக வந்துபோய்க்கொண்டிருந்தார். காவல்துறையும் இவரை விரட்டிக்கொண்டிருந்தது. தன்னுடைய செல்ல அதிர்ஷ்டக் கழுதையைக் கைகழுவி விட்டார் இசுடாலிரும். அதே சமயம், கொள்ளைகளைப் பற்றிய ரகசியங்கள் வெளியே வந்துவிடவும் கூடாதல்லவா?
அச்சமயங்களில் உலாவிய வதந்தி என்னவென்றால் (இதற்கு முகாந்திரங்கள் இல்லாமலில்லை) – காவல்துறையினரிடம் ரமேஷ் சரணடைந்து, அப்ரூவராகி முக்கியமான பல விஷயங்களைத் தன்னிலைவாக்குமூலமாக வெளிப்படுத்தப் போவதாகவும். ஐயோ! அப்போது, மொத்த திமுக தலைமையும் கூண்டோடு சிறைக்கூண்டிலா? அவர்களுடைய பதற்றமும் புரிந்துகொல்லப்படவேண்டியதுதானே? (பின்னர் இன்னொரு முறை இதேமாதிரி பதற்றம் கனிமொழி-ராசா-2ஜி தொடர்பாக ஏற்பட்ட போதும் இதே போலத்தானே அந்த இன்னொரு உதிரி சாதிக் பாட்சா புரிந்துகொல்லப்பட்டார். அதாவது ‘தற்கொலை’ செய்துகொண்டார்?)
ஆக.
2001 ஜூலை 16 ஆம் தேதியன்று காலை 7:45 மணிக்கு அண்ணாநகர் ரமேஷும் அவரது குடும்பத்தாரும் தங்கள் வீட்டில் இறந்துகிடப்பதாக – சென்னை-திருமங்கலம் காவல் நிலையத்துக்குச் செய்தி கிடைத்தது – தெரிவித்தவர்: ரமேஷின் உறவினரான சி.கேவி. ரமணன்.
படுக்கையில் இறந்துகிடந்தவர்கள்: ரமேஷ்(34), அவருடைய மனைவி காஞ்சனா(30). அவர்களுடைய மூன்று பெண்குழந்தைகள் – மோனிஷா (10), ஷர்மிளா (9) மற்றும் டிங்கூ (11 மாதங்கள்); பக்கத்தில் ரமேஷால் எழுதப்பட்டதாகக் கருதப்பட்ட ஒரு தற்கொலைக் குறிப்பு + குளிர்பான, பூச்சிக்கொல்லி மருந்து கன்டெய்னர்கள், கண்ணாடிக் கோப்பைகள். கேல் கதம்.
அந்த இரண்டுபக்கத் தற்கொலைக்(!) குறிப்பில்(!!) இருந்த சிலவரிகள்: “நான் ஒரு பைசா கூட எடுக்கவில்லை. போதைமருந்து தொடர்பான வழக்கை என்மீது போட்டுவிடுவார்கள் என அஞ்சுகிறேன்!” “என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் மீது தவறான வழக்குகளை சுமத்தக்கூடாது.” “என் மனைவியும் நானும் பத்து நாட்களுக்கு முன்னர் இந்த முடிவை எடுத்தோம், இப்போது அதை செயல்படுத்துகிறோம். வழக்குகளை எதிர்கொள்வதை விட எங்கள் உயிர்களை முடிவுக்கு கொண்டுவருவது நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம்.”
…இதன் பிறகு பலவிஷயங்கள் நடந்தன. ஒரு சுக்குக்கும் பிரயோஜனமில்லை. விசாரணை மேலே நகரவில்லை. (இன்றுவரை! ஆனால் இசுடாலிர் வந்து முதலையமைச்சராகத் தப்பித் தவறியானால், இவ்வழக்கைத் தூசிதட்டி எடுத்துத் தன்னைத்தானே தண்டித்துக்கொண்டு இன்புறலாம்!)
இசுடாலிர் வந்து மாலை போட்டு ‘காவல்துறையின் துன்புறுத்தல்தாம் இதற்குக் காரணம்’ என்று ஒரே போடாகப் போட்டார். அஇஅதிமுக இது தற்கொலையே அல்ல என்றது.
ஆனால், இசுடாலினின் புகாரை ஒட்டி – மாநில மனிதவுரிமைக் கமிஷன் (SHPC) மேலதிகமாகக் குழப்பியது. காவல்துறை அத்துமீறல்கள் விசாரிக்கப்படவேண்டும் என்றது. கீழ்பாக்க மருத்துவக் கல்லூரியில் நடந்த பிரேத பரிசோதனை விவரங்களையும் வீடியோ ஆதாரங்களையும் அனுப்பவேண்டும் என்றது. (இதுவரை இவையெல்லாம் காவல்துறைவசமே இருக்கின்றன – பிரச்சினை என்னவென்றால் அரசதிகாரிகளில் பலரும் காவல் துறையில் சிலரும் திமுகவின் ஒற்றர்கள் – ஆகவே பல சிடுக்கல்கள், சொதப்பல்கள், மூடிமறைத்தல்கள், மழுப்பல்கள் – ஆக முடிவே இல்லாமல் போய்விட்டது)
பின்னர் வழக்கு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு காவல்நிலையம் மாற்றப்பட்டு என ஏகோபித்து முடங்கியிருக்கிறது. இதற்கு இப்போது விடிவே இல்லை. திராவிடர்கள் இம்மாதிரி அறிவியல்பூர்வமான மழுங்கடிப்புகளில் விற்பன்னர்கள்.
-0-0-0-0-
‘தற்கொலை’ செய்வதற்குச் சிறிது நேரம் முன்புகூட – இந்த ரமேஷ் – சைதை கா கிட்டு (இவர் ஒரு பேர்பெற்ற சைதை தி நகர் பகுதி திமுக உதிரி, போய்ச் சேர்ந்துவிட்டார்), ரௌடி ‘தாதா’ அப்பு போன்றவர்களுடன் பேசியிருக்கிறார். அப்படி என்ன பேசியிருப்பார்? அதுவும், கிட்டுவுடன் மணிக்கணக்காகப் பலமுறை இந்தத் ‘தற்கொலைக்கு’ முன்னால் பேசியிருக்கிறார், அப்படி என்ன ‘நிரபராதித்தனமாக’ இவர் பேசியிருப்பார்?
காட்ஃபாதர் படத்தில் இருந்து சிலகாட்சிகள். பென்டாஞ்சலி எனும் மாஃபியா உதிரி காவல்துறையிடம் மாட்டிக்கொண்டு அப்ரூவராக மாறுகிறார். காட்ஃபாதரின் சட்டவிரோத விஷயங்களைக் கக்கும் தருவாயில் – காட்ஃபாதரிடம் இருந்து ஒரு செய்தி: ‘நீ அப்படிச் செய்தால் உன் குடும்பத்தின் நிலை என்னவாகும் என நினைத்துப்பார்’ எனச் சொல்லாமல் சொல்கிறார் காட்ஃபாதரின் ஆள். பிறகு செயல்படு. நாங்கள் உன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறோம்.
பென்டாஞ்சலி, காவல்துறையின் ‘பாதுகாப்பு வீட்டில்’ தற்கொலை செய்துகொள்கிறார்.
சுபம்.
நம் ரமேஷ் இறந்தார், சரி. அவர் தற்கொலை செய்துகொண்டாரா?
அவர் ‘தற்கொலை’ செய்துகொண்டதால் யாருக்கு நன்மை? அவரைத் ‘தற்கொலை’ செய்வதில் யாருக்கு லாபம்?
சரி. அவர் ‘தற்கொலை’ செய்துகொண்டார் – ஆனால் அவருடைய ஒன்றுமறியா சிறுபிள்ளைகள் என்ன குற்றம் செய்தன? தான் இறந்த பின் தம் குழந்தைகளையும் சகதிராவிடர்கள் நாஸ்தியாக்கிவிடுவார்கள் என எண்ணினாரா?
எது எப்படியோ, இந்தக் குழந்தைப் படுகொலைகளின் கறையானது ஒரு பெரிய எதிர்மறைக் கர்மா என நினைக்கிறேன்.
திராவிடர்களை அது சுட்டுப் பொசுக்கியே ஆகவேண்டும் என விழைகிறேன்.
ஆமென்.
விஷயங்களைச் சரிபார்த்துக்கொள்ள எனக்கு உதவிகரமாக இருந்த சில சுட்டிகள்: https://tamil.oneindia.com/news/2004/12/24/ramesh.html; http://kpsthirdeye.blogspot.in/2015/01/who-killed-this-man-2-annanagar-ramesh.html; (இது மிக உதவிகரமாக – என் நினைவுகள் பெரும்பாலும் சரிதான் என உறுதிப்படுத்த ஏதுவாக இருந்தது; மேலும் ஒன்றிரண்டு விஷயங்களும் கிடைத்தன) http://media2.intoday.in/indiatoday/images/stories/2001July/heroine2_061612083810.jpg; https://tamil.oneindia.com/img/2017/05/08-1494230918-ramesh-suicide4.jpg; https://tamil.oneindia.com/news/2004/12/24/ramesh.html
April 2, 2019 at 11:11
//இந்தக் குழந்தைப் படுகொலைகளின் கறையானது ஒரு பெரிய எதிர்மறைக் கர்மா என நினைக்கிறேன்.
திராவிடர்களை அது சுட்டுப் பொசுக்கியே ஆகவேண்டும் என விழைகிறேன்.//
AMEN
April 5, 2019 at 18:41
[…] எடுத்துக்காட்டுகளில் தா. கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்சா போன்றவர் […]
October 15, 2019 at 15:32
[…] லீலாவதி, தாகிருஷ்ணன், ஆலடிஅருணா, அண்ணாநகர் ரமேஷ், சாதிக்பாட்சா போன்றவர்களின் […]
July 8, 2020 at 12:24
[…] திமுகவும், சந்தனக் கட்டை, ‘அண்ணாநகர் ரமேஷ் தற்கொலைப்புகழ்’ ஸ்டாலினும் மறுபடியும் […]