அர்ஸ்யுலா லெக்வின், அரவிந்தன் நீலகண்டன் – குறிப்புகள்

December 24, 2018

இதற்கு முந்தைய பதிவில், அர்ஸ்யுலா அவர்கள் மீதான என்னுடைய ஒருதலைக்காதல் வாழ்க்கையைக் குறித்துக் கொஞ்சம் எழுதியிருந்தேன். பின்னொரு சமயம், விலாவாரியாக, என் உள்ளம்கவர்கள்ளிகளில் ஒருவரான இந்த அம்மணியைப் பற்றி எழுதலாம் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால்…

சரி. இன்றுகாலை இணையத்தைக் கொஞ்ச கொஞ்சம் நேரம் கிடைத்ததால் – நம்மூரில் எவ்வளவு பேர் இந்த அம்மணியைக் குறித்து எழுதியிருக்கிறார்கள், அவை இணையத்தில் கிடைக்கின்றனவா எனக் கொஞ்சம் நோண்டினால், இரண்டு அருமையான சுட்டிகள்…

இரண்டையும் அளித்துள்ளவர் – அரவிந்தன் நீலகண்டன் அவர்கள். :-)

இந்த அரவிந்தன் நீலகண்டன் அவர்களை அப்படியே கட்டிக்கொண்டு, உச்சிமுகர்ந்து முத்தமிடலாம் போல இருக்கிறது. எவ்வளவு அழகாக எழுதியும் பேசியுமிருக்கிறார்!

மேற்கண்டவற்றை அவசியம் படிக்கவும், பார்க்கவும், அசைபோடவும்.

தயவுசெய்து.

ஏனெனில் நம் செல்லத் தமிழகத்தில் – இம்மாதிரி ‘கலைச்செல்வங்களை எட்டுத் திக்குகளிலிருந்தும் கொணர்ந்து நம்மிடையே சேர்ப்பவர்கள்’ அதிகமில்லை; அப்படியே சேர்ப்பவர்களில் முக்காலேமூணுவீசம்பேர் மினுக்கிக்கொண்டு உல்ட்டா செய்பவர்களாகவோ அல்லது காப்பியடிப்பவர்களாகவோ அல்லது கந்தறகோளவாதிகளாகவோதான் இருக்கிறார்கள்; ஆகவே – மிகச் சிலருக்கு மட்டுமே படிப்பறிவும், நேர்மையும்,  பலப்பல அறிவுப் புலங்களினூடே ஊடாடும் பாண்டித்தியமும்,  அறிவியல் பூர்வ முன்னெடுப்புகளும், நம் வரலாறுகளைக் குறித்த இடதுசாரிக்கசண்டுகளற்ற பார்வையும், கடும் உழைப்பைக் கொடுக்கும் மனவலியும், பாரதம் எனும் மகாமகோ பண்பாட்டுப் பெருக்கின் தொடர்ச்சியில் கரிசனமும் இருக்கின்றன.

நம்முடைய குறைந்த பட்ச பங்களிப்பாக, நம்மால் இவற்றைப் படித்து, பார்த்து உரையாடக்கூட முடியாதா என்ன? கரும்புதின்னக் கூலியா வேண்டும்?

ஆகவே.

-0-0-0-0-0-

சுமார் 15 வருடங்கள் முன்னர் என நினைக்கிறேன் – இந்த டெல்லிங் (Telling – சொல்வது / சொல்லப்படுவது என்றெல்லாம் இதனைப் புரிந்துகொள்ளலாம் – ஆனால் இந்த டெல்லிங் என்பது, நாவலில் – கதைசொல்லிகள்/பாடிகள் மூலமாக கலாச்சாரக்கூறுகள் / அறவிழுமியங்கள் பொதுமக்களைச் சென்றடைவது குறித்தது) நாவலைப் படித்துப் பிரமித்துவிட்டேன். அதற்குப் பின் சுமார் ஒரு மாதம் போல என் மனைவி/என்மகளின்தாயார்/துணைவியைப் பிடித்து அந்தப் புத்தகத்தைப் படிபடி எனத் தொணதொணத்துவிட்டேன், பாவம் அவர் – என் வற்புறுத்தல் காரணமாகவே அதனைப் படிக்கவில்லை என நினைக்கிறேன்…

அர்ஸ்யுலா அவர்கள் இந்த வருட ஆரம்பத்தில் போய்ச்சேர்ந்தார் – ஆகவே வருட முடிவிலாவது அவரைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பையாவது (=small symbol bag being) எழுதவேண்டும் என என் கை நமநமத்துக் கொண்டிருந்தது. ஆகவே, கடந்த ஒரு மாதமாக மறுபடியும் டெல்லிங் நினைவு வந்து மறுபடியும் என்மகனின்தாயாரைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறேன் – ஆச்சரியமாக இருக்கிறது, இத்தனை நாட்களுக்குப் பின்னும் விவாகரத்து ஆகாமலிருப்பது…

ஆகவே, அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் டெல்லிங் குறித்த கருத்துகளையும் விளக்கங்களையும் அதிலிருந்து பாரதீயர்கள் பெற்றுக்கொள்ளவேண்டிய படிப்பினைகளையும் – இன்று கேட்க நேர்ந்தபோது, மிக மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது.

சரி.

-0-0-0-0-0-

ஏன் இந்தப் புத்தகத்தை, பாரதீயத்தில் + நம் மேன்மையில் கரிசனமுள்ள அனைவரும் படித்தேயாக வேண்டும்?

ஏனென்றால் – நாவலுடைய ஆரம்பத்தின் முத்தாய்ப்பாக, ஒரு முன்னுரையாக ஒரு மஹாபாரத வசனம் இருக்கிறது. :-)

ஏனென்றால் – இது சுமார் 120 பக்கங்களே கொண்ட குறுபுதினம். அறிவியல்முறைமைகளையும் பார்வைகளையும் கொண்டு ‘எதிர்காலத்தில் நடந்தேறக்கூடிய’ சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய கதையாடலைக் கொண்டது. சிடுக்கல் மொழியில்லை. நேரடித்தன்மையுடன் சொல்லப்பட்டாலும் இதில் பல அடுக்குகள்.

ஏனென்றால், இது ஸனாதன தர்மத்தின் தரிசனங்களையும் வழிமுறைகளையும் உள்வாங்கிக்கொண்ட, படைப்பூக்கம் கொண்ட புத்திசாலி அம்மணியால் – பாரதீயர்களால் உடனடியாக ஒப்புநோக்கக்கூடும் வகையில் எழுதப்பட்டவொன்று.

ஏனெனில் – அப்ரஹாமிய ஒரேகடவுள்-ஒரேதூதன்-ஒரேபுத்தகவாத மத வகையறாக்கள் எப்படி பன்முகத்தன்மைகொண்ட பிற கலாச்சாரங்களை அழித்தொழிக்கும் – அவற்றின் சாரங்களை சின்னாபின்னப்படுத்தும் – அக்கலாச்சாரம் சார்ந்தவர்களை மூளைச் சலவை செய்து, குற்றவுணர்ச்சியையும் கையாலாகாத்தனத்தையும் விதைக்கும்,  பாரம்பரியங்களைப் புரிந்துகொள்ளாமல் வெட்டிப்பரப்புரைகளால் ஆட்கொள்ளப்பட்டு சுயவெறுப்பில், துரோகங்களில் ஆழ்த்தும் என்பவற்றைத் தெளிவுபடுத்துகிறது.

ஏனெனில் – இந்தப் புத்தகத்தில் பக்கத்துக்குப் பக்கம், பாரதீய கலாச்சாரம் எனும் உலகப் பொக்கிஷம், தற்கால கலாச்சார அரசியல் (அதாவது இடதுசாரி, லிபரல்வாதிகளின் கயமைப் பார்வைகள்) தகிடுதத்தங்களால் எப்படிக் காயடிக்கப்படுகிறது என்பதை நமக்கு விளங்கவைக்கிறது.

ஏனெனில் எல்லாவற்றையும் மீறி – இது ஒரு தரம் வாய்ந்த இலக்கியமும் ஆகும். (ஆனால் 2.0 எழவு அளவுக்கு இதில் அறிவியல் உன்னதங்கள் இருக்குமா என்பது சந்தேகமே; மேலும் அன்பர் ஜெயமோகன் பார்வையில் இதுவும் ஒரு ‘பிரச்சார’ தொனி மிகுந்த ஆக்கமாக இருக்கலாம் – ஏனெனில் அவருக்கு பைரப்பாவின் ஆவரணா அப்படிப் பட்டிருக்கிறது)

என்னைப் பொறுத்தவரை – நம் பாரதத்தில், இப்படியே லிபரல்வாதமாக இடதுசாரிக்கயமையுடன் பஜனை செய்யும் ‘சிறுபான்மைகளுடைய மதங்களே போற்றி!’ + ‘பாரதத்தை துண்டாடி எரியூட்டி அதில் குளிர்காய்வோம் போற்றி!’ + ‘ஜாதிப் பிரிவினைகளை ஊக்குவிப்போம் போற்றி!’ +… என நிலைமை தொடர்ந்தால் – இந்த நாவலில் வரும் பன்முகக் கலாச்சாரம் போலவே பாரதீயமும் அழிந்தொழியும் என்கிற முடிவுக்கே நானும் வந்திருக்கிறேன்.

ஏனெனில் – சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் படித்தபோது உடனடியாக பாரதத்தின் அப்போதைய நிலைமையுடன் அதனை நான் பொருத்திப் பார்த்து வேதனைப்பட்டதைவிட பலப்பல மடங்கு, பாரதத்தின் நிலைமை மோசமாகவே ஆகியிருக்கிறது – இடதுசாரிகளுக்கும் திராவிடப்பேடிகளுக்கும் நன்றியுடன்…

–0-0-0-0-0–

என்ன? இன்னுமா படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரையையும் விடியோவையும் பார்த்தீர்களா?

வேகமய்யா வேகம்! உடனடியாக இந்தப் புத்தகத்தையும் வாங்கிப்படியுங்கள், அசை போடுங்கள், சரியா? சக ஏழரைகளில் தப்பித் தவறி யாராவது பதிப்பாளர் இருந்தால், அவர் இப்புத்தகத்தைத் தமிழில் வெளியிடுவதைக் குறித்து யோசிக்கலாம் என்பது என் கோரிக்கை.

சரி. பின்னர் 2019ல் மறுபடியும் மோதி மேலெழும்பி வருவதற்கு நாம் நம்மளவில் என்ன செய்யக்கூடும் என்பதையும் பேசலாம்…

4 Responses to “அர்ஸ்யுலா லெக்வின், அரவிந்தன் நீலகண்டன் – குறிப்புகள்”

  1. K.Muthuramakrishnan Says:

    Thanks for introducing good reading. I shall study and come back. But I am not a critic. Just a lay reader only.

  2. SB Says:

    Thanks aplenty Sir – an evocative note to commemorate a great author!

    E-book (The Telling) unavailable but PDF is there to download .We shall read it .

    quote:

    A recent letter in The Oregonian compares a politician’s claim to tell “alternative facts” to the inventions of science fiction. The comparison won’t work. We fiction writers make up stuff. Some of it clearly impossible, some of it realistic, but none of it real – all invented, imagined — and we call it fiction because it isn’t fact. We may call some of it “alternative history” or “an alternate universe,” but make absolutely no pretense that our fictions are “alternative facts.”

    Facts aren’t all that easy to come by. Honest scientists and journalists, among others, spend a lot of time trying to make sure of them. The test of a fact is that it simply is so – it has no “alternative.” The sun rises in the east. To pretend the sun can rise in the west is a fiction, to claim that it does so as fact (or “alternative fact”) is a lie.

    A lie is a non-fact deliberately told as fact. Lies are told in order to reassure oneself, or to fool, or scare, or manipulate others. Santa Claus is a fiction. He’s harmless. Lies are seldom completely harmless, and often very dangerous. In most times, most places, by most people, liars are considered contemptible.

    Ursula K. Le Guin, Northwest Portland

    Unquote-

    Incidentally, a butterfly effect ..starting with Jeymo ( Aura )and ending with Ursula.

    Going by the same token of ‘Monotheism’ swallowing up ‘Polythesim’, your last para seems not gelling with above (Pinnar- understood) . Not discussing anything of Rama Temple here (?).

    Jeymoh not done any writing on Mam Ursula (searched in his web for morsels of morale ) . Nor Es Ra.

    Was thinking of poem Kali’s child by Swami Vivekananda and it was right there in Mr.Aravindan’s article.

    Madam Ursula may have been referred to as India’s Rishi if SV was there (as he referred to Max Müller as our own Rishi . Past connections never wither off .

    Thanks aplenty for your bringing aboard gems of knowledge to novices like us . Thanks also to Mr.AN for his brainy articles.

    Regards
    SB

  3. அரவிந்தன் நீலகண்டன் Says:

    தங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் இந்நாவல் குறித்த உங்கள் அன்புக்கும் என் சந்தோஷமான வணக்கங்கள்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s