10.12.18 + 1 = 11.13.19

December 15, 2018

மனைவி+துணைவி இல்லக்கிழத்தியும், என் மகளின் தாயார் மட்டுமல்லாமல், திடுக்கிடவைக்கும் வகையில் என் மகனின் தாயாராகவும் இருக்கும் ராணித்தீ தொண்டுகிழத்தீ, சிலபல பள்ளிகளில் திருத்தொண்டு புரிந்து வருகிறார்.

ஒருகாலத்தில் குடும்பமருத்துவர் குடும்பநாவிதர் குடும்பதையற்கலைக்காரர் குடும்பப்பொட்டிக்கடைக்கார், குடும்பஹிந்திடீச்சர், குடும்பகுமுதம்கல்கண்டுஇரவல்கொடுப்பவர், குடும்பகிரிக்கெட்மேட்சுக்குடீவிபார்க்கஊர்ஜனங்களைஅனுமதிப்பவர் என்றெல்லாம் இருந்தார்கள் என்பதெல்லாம் இதைப் படிக்கும் சகஏழரைக் கிழங்கட்டைகளுக்கும் நினைவிருக்கலாம்.

அதுபோல, இம்மாதிரி பக்கத்துப் பள்ளிகளில் மூக்கை நுழைப்பது எம் குடும்பவியாதி என்பதையும், இந்தக் கொடுஞ்சாபத்திலிருந்து அந்தப் பாவப்பட்ட பள்ளிகளுக்கு விமோசனமேயில்லை என்பதையும் அறிக.

-0-0-0-0-0-

…கானகத்துச் சுள்ளிகளிடையே புள்ளினங்களோடு துள்ளிக் குதித்துக்கொண்டே துரிதமாக அடுத்த அத்தியாயத்துக்கு முஸ்தீபாகத் தாளித்துக் கடுகிச் சென்றுகொண்டிருந்த தூமகேதுவனைத்த துரியோதனன், சப்பாத்திக் கள்ளிகள் மிகுந்த வறண்டு கனன்ற செந்தரையில் புரோட்டா செய்பவன்போல் அறைந்து, கோபம் கொப்பளிக்க,  சிவந்த இரத்தம் உறைய, நறுதொந்தியில் புடைத்திருக்கும் நனிதொப்புள் அதிர, புருவம் வில்லவன் வில்லாகி வில்லத்தனமாக நெரிக்க, மலர்மீசை ஏகித் துடிக்க மாணடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இலாமல் மடிந்தவிழ்ந்த தன் செம்முடியைச் செவ்வனே சுருக்கிட்டுக் கருகி அள்ளிமுடிந்துகொண்டு அருகிச் சொன்னான்: எனக்கு மிடில.

“என்னை விட்டுவிடும். வெண்முரசுக்கும் உமக்கும் நடுவே மாட்டிக்கொண்டு நான் முழிப்பதைத் தவிர, எமக்கு வேறு வேலையே இல்லையா? மஜாபாரதத்தில் யான் செய்யவேண்டிய பணிகள் குவிந்து கிடக்கின்றன. எனக்கு விடுமுறையோ பணிமூப்போ கிடையவே கிடையாத இழி அடிமை நிலை. வார்த்தைச் சுழல்வெள்ளத்தில் அல்லாடிக்கொண்டிருப்பதற்கும் அப்பாற்பட்டு இடிபாடுகளில் இடைப்பட்டு இடிமுரசாகக் கொட்டப்படுவதிலிருந்து எனக்கு விமோசனமில்லை…

“…மேலும், நான் செல்லவேண்டிய தூரம் அதிகம். நாரோயிலிலிருந்து குருக்ஷேத்திரம் அவ்ளோ தூரமா? பாவி இன்டிகோகாரன் இதுவரை இந்தரூட்டில் புஷ்பகவிமானம் விடவில்லைவேறு. இதுதான் கட்டற்ற தனியார்மயமாக்கத்தின் விபரீதவிளைவு. சரி, இது என் ஊழ்வினை என வேறு தடத்தில் புரண்டு விண்மிசை ஏகலாமென்றால் ஏர்போர்ட் ஸெக்யூரிட்டியின் மனிதவுரிமை மீறல்கள்… என் வாளை கேபின்லக்கேஜாக எடுத்துச்செல்ல முடியாதாம்! ஒரு க்ஷத்திரியனால் எப்படி வாளாவிருக்கமுடியும்?

‘உன்வாளை செக்கின் லக்கேஜில் போடு’ என்று ஆணையிடுகிறார்கள்! அவர்களால் பெண்ணையிடமுடியுமா? பெண்ணியவாதிகளை, அவர்களால் எதிர்கொள்ளமுடியுமா? செக் வங்கி பணமதிப்பிழப்பு மல்லையா ரஃபேல் என்பவை பற்றியெல்லாம் நடக்கும் வலதுசாரிப் பம்மாத்துகளை நான் அறியேனா? செக் கிழித்த செம்மல் வஊசி திவாலான நினைவு எனக்கு இன்னமும் ஊசிப்போகவில்லை.

முதலாளியத்திடம் விலைபோன  மோடியின் அரசில் வேறெதை எதிர்பார்ப்பதாம்! ஒழிக ஹிந்துத்துவா என ஜும்மா மசூதியில் சும்மா துவா சொல்வதைத் தவிர எனக்குப் பிறிதொரு அவா இன்றில்லை.

மேலும், ஈது என் சொந்த கௌரவப் பிரச்சினை. இதனுடன் தொடர்பற்ற பாண்டியாட்டத்தையும் சோழியாட்டத்தையும் அனுமதியேன். சேரன் பரவாயில்லை, பெருஞ்சோற்று உதியன் சேரல் ஆதன் எங்கள் மஜாபாரதப் போரில் கேட்டரிங் ஸர்வீஸ் நடத்தப்போகிறான்… ஆனாலும், ஆ…

நுண்கொம்போன் மாயோன் சதித்திட்ட வலையில் மாட்டிக்கொண்டு, விலங்கானாலும் விலங்கிடப்பட்ட விலாங்கு மீனைப் போல நீளமாகத் தரையில் வீழ்ந்து நெளிந்து களித்து முகம் சுளித்திருக்கும் என்னை, இப்படி – செங்கதிரவனின் தண்வெம்மையைப் புழுதியுடன் கலந்து தமிழ்ப்புலம்பியல் செம்புலம்பியல் நீராகக் கலக்கும் நிலைக்குத் தள்ளிவிட்டீர்களே! ஐயகோ!

உடன் சொல்லும். பதில் பகரும். வார்த்தைகளை வெளிப்படுத்தும்! உணர்ச்சியை உறுத்தும். ஓர்மையை ஓறுத்தும்…. இதைத்தவிர ஆகச்சிறந்த பிறிதொன்று வேண்டாம்.

மேற்கண்ட தலைப்பில் உள்ள எண்கள் 11-19 எனக்கு மேலதிகமாக அனுமதிக்கப்பட்ட அத்தியாயங்களின் அத்யாத்மிகங்களா? அப்படியானால், அவற்றில் ஏன் 14-17 இல்லை? இதில் ஏதோ பன்னாட்டு நிறுவன இல்லுமினேட்டி சதி பொதிந்திருக்கிறதோ? அல்லது, அது, இயற்கை விவசாயத்துக்கு எதிரான மரபணு மாற்ற விதைவகையோ, விதிவகையோ? ஒருகால் கூடங்குள யுரேனியம் அணுக்குண்டாந்தடியோ?

அல்லாஹ்விடில் அதுவன்றி எண்ணித் துணிக கருமரீதியான எண்கணித நுணுக்க ஹலால் நுண்ணுணர்வா? ஈதென்ன தமிழ்க்கொடுமை செங்கொடுமை நுண்கொடுமை? எம் மோனியர்வில்லியம்ஸ் மலையாளம்-தமிழ் செம்பிரதி அகராதியிலும் இது பற்றி ஒரு குறுங்குறிப்பு கூடஇல்லையே, ஐயகோ

…எனப் பிரலாபித்தான்.

துக்கம் தாங்காமல் “என்ன வுட்ருங்கடா… நான் ஏதோ வியாசன் விருந்து வைத்தான் என ஓசிச் சாப்பாடுக்கு அலைந்து நாக்கை நீட்டிக்கொண்டு, பார்ப்பன வில்லன் தீரா விட ராஜகோபாலாச்சாரியின் ஆரிய சதியில் வசமாக, வில்லிபாரதமாக மாட்டிக்கொண்டேன்.  வெளிவரமுடியாமல் பரிதவிக்கும் என்னைக் கொடுஞ்சிறையில் இட்டு அத்தியாயம் அத்தியாயமாக என்னைப் போட்டுக் கஷாயம் காய்ச்சி  வருடக்கணக்காக என்னை ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்களே! எப்போதடா உங்கள் வெண்முரசு கொட்டம் அடங்கும்?” என்றான், பாவம்.

ஈது கொடும்பாவமன்றோ? :-( எனக்கே பரிதாபமாக horse passion like இருக்கிறது.

ஆகவே, கனத்த மனதுடன்,  துரியோதனனுக்கு என் மகாமகோ பேராசான் கொடுக்கும் தண்டனையும் தொடர்சித்திரவதையுமே அவனுக்கு இப்போதைக்குப் போதும், ஆவுற ஜோலியப் பார்க்கலாம் என…

-0-0-0-0-0-

…இந்தவாரம், பக்கத்திலிருக்கும் ஒர் சோட்டா மான்டிஸொரி பள்ளியில் ஆசிரியருக்கான பயிற்சி வகுப்புகளை, என் மடந்தை  (அரிவை?) நடத்திக் கொண்டிருக்கும் போது சுமார் ஐந்து வயதுப் பெண்குழந்தை கூட்டல்கழித்தல்களில் ஆனந்தமாக ஈடுபட்டுக்கொண்டிருந்திருக்கிறது.

திடீரென்று நினைவு வந்துவிட்டது போலும், அதற்கு தன் குறிப்பேட்டின் மூலையில் மேலே அன்றைய தேதியை எழுதவேண்டும் எனத் தோன்றிவிட்டது.

ஆகவே, முன் தினம் என்னதேதி எனப் பார்த்துவிட்டு, அடுத்த தினத்துக்கான எண்குறியீடை தலா ஒன்று ஏற்றிவிட்டது!

10.12.18  + 1 =  11.13.19

இது எவ்வளவு அழகாக இருக்கிறது! குழந்தைகள் குறியீடுகளைப் பலவிதங்களில் அணுகும் முறைகளும், உலகத்திலுள்ள, தாம் அவதானிக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ளச் செய்யும் முயற்சிகளுமே அலாதிதான்!

ஆக, சென்றவாரம் ஒரு இரவு, நடுநிசிவரை  – இம்மாதிரி அன்று நடந்தது, அங்கு அம்மாதிரி நடந்ததே,  எனக் கதைகதையாக ஒருவருக்கொருவர் குழந்தைக்கதைகளைச் சொல்லிக்கொண்டு மகிழ்ந்தோம். (பின்னர் நான், வளர்ந்த படித்த முட்டாட்களைப் பற்றியும்…)

வாத்தியாக இருப்பதுபோன்ற தளர்வடையச் செய்யும் விஷயம் + எதிர்காலத்தைக் கும்மிருட்டாகப் பார்க்கவைக்கும் விஷயமும் இல்லை, மாலைகளில் பிழிந்துபோட்டது போலாகிவிடும்வேறு  – ஆனால்… அதில் சில சமயங்களில் கிடைக்கும் விகசிப்புகளுக்கும் அளவேயில்லை. நாங்கள் கொடுத்து வைத்தவர்கள், வேறென்ன சொல்ல…

எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது: “குழந்தைகளுடைய ஒரே பிரச்சினை என்னவென்றால், அவர்கள் வளர்ந்து, போயும்போயும் பெரியவர்களாகிவிடுகிறார்கள்…” (இந்த மாதிரி தொனிதான்!)

ஹ்ம்ம்ம்…

பிரச்சினை என்னவென்றால், இந்தச் சனியன் பிடித்த தமிழகத்தில், அவர்கள் வெறுமனே வளர்ந்து நல்ல பிரஜைகளாக உருவானால் கவலையில்லை! ஆனால் அவர்களில் சிலபலர் அலக்கியக் கொடூரவாதிகளாகவேறு உருமாறி ஸாஹித்ய அகாடம்மிகளாகி நம் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள்…

என்ன செய்வது… துரியோதனனை விட்டால் நமக்கேது கதி, சொல்லுங்கள்?

15 Responses to “10.12.18 + 1 = 11.13.19”

  1. Vijaya Says:

    The two popular educational methods (for junior school children) followed in India are Montessori and Waldorf. They were founded by an Italian and a German respectively. What was lacking in their culture, they tried to bring in , in their school education. We people just follow or to say precisely copycat them. We need to design our own system suiting to our needs. We have such a diversified, rich culture, we fail to understand and acknowledge. What a pity!

    As you say, children are wonders as long as they are allowed to be in their world. I too had lots of such moments like yours. Worth relishing at any point of time.


    • Dear Lady, I agree with you.

      You may also know the immense feeds that Maria and Rudolph received from India, for their respective approaches. (it is unfortunate that Rudolph Steiner lost out to J Krishnamurti in the power struggles via AnnieBesant/Theosophists, anyway)

      I really like NaiTaleem of Bapuji and apprenticeship models at the elementary+ levels. I also feel that an age appropriate / development stage sensitivity needs to be there at the primary elementary- levels to a significant extent. So, if Montessori works, why not.

      Also, I have reached a painful conclusion that Sultans, Mughals and the Brits had already done incalculable damage to the Indic learning systems – so we have to startoff with some point of departure, no?

      Also the planning of the Nehrus had placed a major accent on higher ed in the initial stages, while not focusing on the primary/sec edu to a significant extent…

      Mistakes and mistakes…

      Anyway, also being an admirer of Dharampal, I agree with ALL statements of yours save the remark that the two tried to bring in what was not in their culture.

      Actually things may not be so b&w, maybe. What do you think?

  2. Vijaya Says:

    It is agreeable that we need a starting point. What ever the system we follow, some amendments need to be made with reference to our beneficiaries (children) considering vital aspects. We need to tailor made the system, for that we need to understand ourselves and the other available systems, arrive at a conclusion….design our own…. try it….make amendments… try it……again do changes….standardize…. implement it throughout. Such a laborious process which needs passion and dedication ( lost virtue).
    Why am I sounding so negative.

    p.s. I want to know more about the system which you have mentioned. i Shall do it tomorrow.

  3. K.Muthuramakrishnan Says:

    We have Montessori system in Sevalaya up to 3rd standard. Your visit, (now your wife’s visit also) is solicited. Request find some time to give valuble suggestions.

  4. Em Says:

    Reminds me of the time when my kid(while 3 years old) put dots on the wall with a marker and when asked about it answered “I think the wall has chicken pox”. As someone who spends time with little ones, the joy that comes from observing little children trying to make sense of things never gets old.


    • :-) Pax Liberica will liberate us. :-))

      yeah, children are so underrated, and adults are ever so overrated…

      and, when it comes to the literary type adults, especially of the tamil type?

      okay, let me not go back to my pet peeves.

      and, thanks for sharing that anecdote, I will steal it and use it elsewhere. ;-)

      __r.
      ps: I think I will revise the number from 7½ to 8½.


      • showed your comment to my kizhatthee (=aged fire ©S.Ra, 2018) and she was thrilled to bits.

        thanks again!

        __r.

      • Em Says:

        Well, 8½ doesn’t have the same ring to it as 7½ (in Tamil). Though I do suspect you are being humble about the number of people who read your blog. Anyhow, I am proud to be a part of an elite group. Oh, do I get any award for being inducted ? You can just throw any name our eminent people haven’t taken so far. I’m not choosy at all. And your Kizhatthee (Aged fire ©S.Ra, 2018) sounds pretty cool. Thanks.

    • RC Says:

      நன்றி தங்கள் பகிர்வுக்கு. தொடக்கப்பள்ளி தமிழ் பாடத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சி- எண்ணுக்கு தமிழ் வார்த்தை அல்லது வார்த்தைக்கு எண்ணோ குறிப்பிடவேண்டும்.
      ஆனால் கேள்வித்தாளில் உள்ள வரிசை எண்ணிட்ட வார்த்தைக்கான எண் குறித்த 5 கேள்விகளுக்கும் குழந்தை எழுதியது, பதிலாக சரியில்லை என்ற x குறி மட்டுமே.என் நேரத்திற்கு வரிசை எண்ணும் கேள்வியும் ஒன்றில் கூட ஒன்றாய் இல்லை :-(
      நீ கரெக்ட்டுடா குட்டின்னு சொல்லிட்டேன் சரிதானே :-)


      • :-) சரியே!

        குழந்தைகள் சதா, வார்த்தைகள்/குறியீடுகள்/படிமங்கள் போன்றவற்றின் அர்த்தங்களைச் சூழல்களைப் பொறுத்து புரிந்துகொண்டு எடைபோட, உலகத்தைப் புரிந்துகொள்ள என விதம்விதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு அழகான விஷயம் இது? (ஏன், நாமுமே இப்படித்தானே!)

        குழந்தைகள் வாழ்க. :-)

  5. Kannan Says:

    என் பையன்  சின்ன வயதில் கார்ட்டூனைப் பார்த்து ஆர்வமாக கதை சொல்லுவான்.

    படத்தில் வில்(லி)லன் ஒரு பெண். சரியான வார்த்தைக்கு கொஞ்சம் தடுமாறிவிட்டு ‘இவ ஒரு கெட்டவி’ என்றான்.

    :)

  6. Kannan Says:

    True, it wasn’t obvious immediately.

    But when Rajini said ‘Technoili’ for ‘Technology’ in college function, he had everyone scratching their head for weeks.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s