வெண்முரசுடிஸ்
October 7, 2018
வெண்முரசு பற்றிய என்னுடைய பரிதாபத்துக்குரிய முயல்மூளை முரணியக்கக் கருத்துகளை ‘வன்மம்‘ என்று சொல்லிவிட்டார் ஒரு நெடுநாள் அன்பர். என்னை ஆழமாகப் புண்படுத்திவிட்டார். எனக்கு மனதே ஆறவில்லை. :-(
அது மட்டுமல்ல – என் பேராசனை மிகவும் மோசமாக மதிப்பிட்டு விட்டார்! “உமது பாண்டித்தியத்திற்கு இவர் இலக்கல்ல.”
ஆனால் அதற்காக, நான் கோபித்துக்கொண்டு சேருமிடமறிந்து சேரத்தியத்திற்கோ, சோழியத்துக்கோ கட்சி மாறிவிடப்போவதில்லை.
ஏன், எனக்குப் பல்வலி அநியாயத்துக்கு அதிகமானாலும் பல்லவர் குலதிலக டென்டிஸ்டுகளுக்கு கிட்டேகூடப் போகமாட்டேன். நான் எப்போதுமே பாண்டித்தியத்தின் பக்கம்தான்.
ஆனால் – இதற்கும் மேலாக அன்பர் சொல்வதுதான் எனக்கு மிகவும் மிகமிக வலிக்கிறது: “விட்டொழியும் இந்த பிலாக்கணத்தை.”
-0-0-0-0-
வன்மமா? :-(
ஐயோ! தன்னலம் பாராமல் அலக்கியத்தின் மேன்மைக்காக அப்படியொரு உழைப்பை இலவசமாக உழைத்துத்தள்ளும் அடியேன் மேலா இப்படியொரு பஞ்சமாபாதகப் பழி?
எனக்கு உள்ளம் உடைந்துவிட்டது! மனம் மடங்கிவிட்டது. தொய்ந்து விட்டேன், அசக்தனாகிவிட்டேன்.
என் கையிலிருந்து ஸெல்ஃபோன் நழுவுகிறது. இடுப்பின் அரைஞாணிலிருந்து கோமணமும் கொள்கைக்கூட்டணி வைத்துக்கொண்டு அவிழ்கிறது.
எதிரில் ரவுண்ட் கட்டிக்கொண்டு அடிக்கப் பேராசானின் வாசக அடிப்பொடிகள்! க்ருஷ்ணா, நான் இப்போது என்ன செய்யவேண்டும் சொல்?
…வாளெடுத்து என்னைக் கூர் பார்த்திருந்தாலும் சரி, ஆனால் அப்பாவியான என்மேலா இவ்வளவு வன்மம்? இதுதானா என்னுடைய இன்றைய அப்பம்?
என் வாழ்க்கையின் விளிம்புக்கே போகத் துணிந்துவிட்டேன். இனியொரு தலைவிதி செய்வேன். இதற்குப் பின் மட்டுமே சீவிக் குழல் முடிவேன் யான், அதுசெயுமுன்னே முடியேன்.
ஓம் ஓம் என உருமி மேளத்துடன் உறுமிற்று வானம்.
லொக் லொக் என இருமுகிறது இக்கிழம். என் செய்வது!
-0-0-0-0-0-
“விட்டொழியும் இந்த பிலாக்கணத்தை!”
ஆஹா! அலக்கியத்தின் இயல்பான எதிர்கொள்ளலே, அதன் இலக்கணமே – பிலாக்கணத்தில்தானே இருக்கிறது? குமாஸ்தாவிய பிலாக்கணங்களையும் இயலாமைகளையும் கச்சாப்பொருட்களாக வைத்தே – மாஜிகுமாஸ்தாக்களும், (தற்போது சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும்) பஜனைகுமாஸ்தாக்களும் கட்டி யெழுப்பியதுதானே தமிழலக்கியம்?
சொல்லப்போனால் – தமிழெழவுச் சிறுபத்திரிகைகள் இலக்கியம் மசுர் மண்ணாங்கட்டி இதெல்லாம் — குமாஸ்தாக்களால், குமாஸ்தாக்களுக்காக, குமாஸ்தாக்களுடைய – இருப்பின் அவஸ்தை, அமைப்பியல் அவரைக்காய், முருங்கைக்காய் கட்டுடைத்தல், கழிப்பறைகளில் இருத்தலியல், மாய யதார்த்தவாதப் பதார்த்தம், எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அப்படியொரு மசுத்துக்கு ங்ஙொம்மாள ‘தேடல்’ தெருப்புழுதி, உள்நோக்கிய பயணம், … … — இவையெல்லாம் பிலாக்கணங்கள்தாமே.
இப்போது வேலைவெட்டியில்லாத ஐடி தகவல் தொழில் நுட்ப குமாஸ்தாக்கள்வேறு நிறைய எழுதித்தள்ள வந்துவிட்டதால் விஷயம் மாறிவிட்டதா என்ன? அதே மசுத்துக்கு ஒப்பாரியும் பிலாக்கணமும்தான் அலக்கியமாகத் தொடரிளிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தேவையா?
தமிழ் அலக்கியத்தின் அலக்கணமே பிசாத்துப் பெறாத குமாஸ்தாவிய பிலாக்கணம்தான். அதுதவிரப் பிறிதன்றி வேறில்லை.
ஐயா, நான் ஒரு அலக்கிய விரும்பி. ஆகவே நான் பிலாக்கணமுதல்வாதியாக அன்றிப் பிறவொருவனாக பிறிதொருவனாக எந்த முடிக்கு இருக்கமுடியும், சொல்லுங்கள்?
-0-0-0-0-0-0-
ஆனாலும் என் நண்பு அன்பர் இப்படிச் சொல்லிவிட்டதால், அவர் மனதுக்கு ஆதுரமாகவாவது வெண்முரசைப் புகழ்ந்து கொஞ்சம் எழுதலாம் என நினைக்கையிலே… ….
பின்தொடரும் நிழலின் குரலும் திசைதேர் வெள்ளமும் என இரு நிகர் பாதைகளில் பயணித்துச் செல்ல எல்லைகள் அழிந்து இரு நூலும் பெரும்பாலும் ஒற்றைப் புள்ளியில் சந்தித்துக்கொண்டது. பெருங்கனவுகளின் வீழ்ச்சி தரும் வியர்த்தமும் ஆயாசமும் , ஆற்றாது அழுத கண்ணீரின் தகிப்பும், எது நிகழினும், ‘போர் புரிக,செயலாற்றுக’ என விதிக்கப்பட்ட மானுடனின் வாழ்வும் என வாசிக்க இன்னும் மனதின் கொந்தளிப்பு அடங்கவில்லை.இந்த பத்தொன்பதாவது நாவலின் பெயர் திசைதேர் வெள்ளம் என்றும் பீஷ்மரின் வீழ்ச்சிவரை இருக்கும் என்ற பதிவைப் பார்த்ததுமே மனது வெள்ளம் குறித்த, பேரழிவு குறித்த சித்திரங்களைப் பற்றிக் கொண்டுவிட்டது. கேரள வெள்ளம் குறித்த செய்திகளும் காட்சிகளும் வேறு. அத்தனை வேலைகளுக்கும் அடியில் அச்சொல் அடிநாதமாக ஓடிக் கொண்டுமிருந்தது.
நதி தனக்கான செல்திசையைத் தானே வகுத்துக்கொள்வது, அதன்படி தானே வகுத்த கரைகளுள் பெரும்பான்மையும் ஒழுகுவது. பெருவெள்ளமோ வகுத்த கரைகளை உடைத்து மீறுவது, தன்விசையாலேயே மேலும் மேலுமென விசைகூட்டி தடைகளைத் தகர்த்து பாதை இதுவென நதியைத் தடம்புரட்டி புது திசை கண்டடைவது. இப்போர் வரை தான் வகுத்த நெறிகளுள் வாழ்ந்த பீஷ்மர் தேரும் திசையும் அவர் நிகழ்த்தும் ஊழியொத்த அழிவுகளும் என எண்ணிக் கொண்டேன்.
இன்றைய வெம்போரின் ஊற்றுக்கண் முதற்கனல் தொடங்கி, அல்லது தேவயானி சர்மிஷ்டை தொடங்கி, அல்லது கத்ரு வினதை தொடங்கி, எங்கிருந்தோ துளிர்த்த முதலிரு முரண் விசைகள் இன்று பேருருக் கொண்டு களம் காண்கின்றன. ஒவ்வொரு இரவும் பொருதும் எண்ணிறந்த தெய்வங்களின் கனவுகளுள் பாண்டவரும் கௌரவரும் மோதும் களம் ஒரு கனவென நிகழ்கிறது போலும்.
தழலை அன்னையெனத் தஞ்சம் புகுந்த உசகன் சந்தனுவெனப் பிறந்து நீரை விழைந்து கங்கையை மணக்கிறான். அவள் நீர் உருக்கொண்ட எரி. நீரின் மைந்தனை நெருப்பின் மகளன்றி யார் அணையக் கூடும். தாட்சாயணியென இருபுறமும் துறக்கப்பட்டவளின் தழலுக்கு அடியில் அவனைக் குளிர்விக்கும் ஈரமென அம்பை தன் கண்ணீரோடு காத்திருக்கிறாள்.
இளமையில் வில்லின் வல்லமையால் கங்கையை அணையிட முயன்றவன் இன்று அதே வில் கொண்டு நெருப்பைத் தணிக்க முயல்கிறான்.தன்விசையே செல்திசையெனக் கொண்டு கட்டுடைத்து செருகளத்தில் பெருக்கெடுத்தோடும் நதி தான் வகுப்பதே பாதையென மயங்கும் கரைகாணா தருணங்கள் இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஊழிப்பெருவெள்ளமும் சென்றடைந்தாக வேண்டிய பெருநீலத்தில், தன்கால் சுவைக்கும் குழந்தை காத்திருக்கிறது; எத்திசை தேர்ந்தாலும் கடலணையும் வழியை எந்நதியும் தவறவிடுவதில்லை எனப் பொங்கி வரும் நீரைக்கண்டு சிரிக்கிறது.
மேலும் படிக்க: http://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_45.html
-0-0-0-0-0-0-
ஆ! ஐயய்யோ!! :-(
அடேய்களா! எவ்ளோ பேர்டா இப்டீ க்ளோன் வைரஸ் மாறீ கெள்ம்பிக்கீறீங்கோ?
வொங்க்ளாலதாண்டா நாட்ல ஒர்ரேயட்யா அவ்னவ்னுக்கு வெண்முரசுடிஸ் வெக்கை வியாதி வந்த்ர்ச்சி!
தட்ப்பூசி கூட இதுக்கு இல்லியாமேடா! விஞ்ஜானீ பேமானீங்கோ இன்னும் இத்தக் கண்ட்பிடிக்யாம இன்னாடா மூனுக்கு ராக்கெட் வுட்றானுவோ! நாம இப்ப இன்னாடா ஸெய்றது! படா பேஜாரா பூட்ச்சே!
றொம்ப இர்ப்பின் அவ்ஸ்த்தயா கீதேடா, மூதிகளா!
எப்டீரா அப்டியே வெண்முரச உள்வாங்கிக்கினு கபால்னு திர்ப்பியடிக்கிறீங்கோ!
ஊரெல்லாம் அவனவன் வெண்முரசுக் குஞ்சப்பனா மாற்னாக்க, நம்ப்ளுக்கு பீதில பேதி கெள்ம்புதேடா! இன்னாதாண்டா ஸெய்றது….
இப்டீ பொள்காங்க்த்தத்ல அட்ச்சிவுட்டு டகல்பாஜி வேல பண்ணாக்க, அப்டீயே ஆசானமாறி எள்தினாக்க – மொர்ணியக்கத்ல நாம்ப மாட்டிக்னு படா நாஸ்தீ ஆய்டுவோமேடா! கெதி கெல்ங்குதேடா!
டேய்ங்க்ளா! வுட்ருங்கடா, என்னய… :-(
பொள்ச்சி போறேண்டா! ஆனாக்க, என்க்கு ‘வன்மம்’ன்னு மட்டுஞ் சொல்டாதீங்கடா! நானு புள்ளகுட்டீகாரண்டா! ஜெயமோவன் எப்டீ வேண்ணாக்க எள்தட்டும்டா!
ஆனாக்க, இந்த வெண்முரசுடிஸ்ஸுக்கு ஏதாச்சும் மர்ந்து கண்ட்பிட்ங்கடா! றொம்ப அவ்சரம்டா!
மன்ச்சிர்ங்கடா. :-(
.
October 7, 2018 at 22:00
ராம்,
நெதம் அந்தாள காலாய்கறத விடு. உன் ரெவல் வேற. செந்தமிழில பன்ச் அடிக்கலாமின்னு பாத்தா ஸ்பெல்லிங் செதப்பிகிச்சி.
பேஜாராவாத நைனா.
October 8, 2018 at 09:47
பேஜாராவல, அல்ப்பா இர்க்குபா.
இன்னமும் – அந்தப் பெண்ணை என் தோளிலிருந்து இறக்கிவிடவில்லை. என்ன செய்வது.
போயி… ஆவ்ற வேலயப் பாக்கலாமா, இன்னாத்த நாஞ் சொல்றது, சொல்லு?
October 7, 2018 at 23:23
விடாது கருப்பு என்பது போல உங்களை வெண்முரசு பித்து பேயாய் பிடித்து ஆட்டுகிறது. உங்கள் நிலையை பார்க்க சகிக்கவில்லை. இதிலிருந்து விரைவில் மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
October 8, 2018 at 08:20
மேலும் படிக்க: http://venmurasudiscussions.blogspot.com/2018/10/blog-post_45.html
டாடி! எனக்கொரு doubtu?!
இதெல்லாம் குருவே சிஷ்யன் பெயரில் எழுதற மாதிரி தோணுது!
இல்லையென்றால் எத்தனை பேர் டா கெளம்பியிருக்கிங்க :(
October 8, 2018 at 09:34
Or is it the case that in the name of SUBA , our respected …R did the posting there just to generate more fun ?? A point to ponder .
‘Chandramukiave matthitingale’ !
October 8, 2018 at 09:36
ஏனய்யா, அடிமடியில் கை வைக்கிறீர்?
அந்த ‘சுபா’ உங்கள் ‘எஸ்பி’யாகக்கூட இருக்கலாமே?
அதுகிடக்கட்டும். எனக்கு அந்த சுபா போல அவ்ளோ நீளமாகவெல்லாம் படுஸீரியஸ்ஸாக எழுதவே முடியாது. சிரித்துச் சிரித்து மாரடைப்பே வந்துவிடும்!
October 8, 2018 at 09:47
LOL …Got it Sir !
Same blood when it comes to ‘sophistcated’ lingo.
Could have been the handiwork of Kadalur Seenu’s or Rajagopalan’s , I suspect.
Thanks a lot.
Regards
SB
October 8, 2018 at 09:43
ஐயா, அப்படியும் இருக்கலாம். அவருக்கு அந்த அனுபவம் நிறையவே இருக்கிறது என அறிவேன்.
ஆனால் வெண்முரசுடிஸ் வெக்கை வந்தவர்கள் மளிகைக்கடை லிஸ்ட் எழவைக்கூட இப்படித்தான் எழுதுவார்கள்.
நித்தமொரு வட்டதோசை சமைக்க செம்மையாக அரைத்த மாவு
காப்பிய அடவு வடை சுட உளுந்து
இனிப்புக்கோன் கரும்புச்சாற்றிலிருந்து வடித்தெடுத்த வெள்ளை ஸ்வேத வஸ்து
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க நெற்புல்லின் பீஜவிதைகள்
நித்தியக் காப்பியடிக்க நரசுஸ் காப்பி
…
…அலங்காரப் பொருட்கள்
முகத்தில் அறைந்து பூசிக்கொள்ள வாசனைத் திரவியப் பொடி
அதரங்களில் மதுரமாக அப்பிக்கொள்ள உதட்டுக்குச்சி
பேரருள் பெண்மைக்குக் காரிருள் கண்மை
…
October 8, 2018 at 09:07
Quote –
Mr.Mamallan’s –
https://twitter.com/maamallan?lang=en
ஜெயமோகன் ‘கேட்டது’ பத்மபூஷன். ஒன்னாப்புக்கு அப்பறம்தான் ரெண்டாப்பு. இப்ப ஏண்டது இதுதான்னு அரசாங்கம் குடுக்கறோம்னு சொன்னதே பத்மஶ்ரீதானே.
ஆசானின் அடிமைகள் சூத்தாங்கையை வைக்கக்கூடத் தகுதியற்றதாக ஆக்கிவிட்டனர் தமிழ் விக்கிப்பீடியாவை🤪
இந்த லவடா லட்சணத்துல ஆதாரம் வேற😂😂😂
Unquote-
Sir,
A piece of panacea for you from Mr.Mamallan who you respect a lot.
We understand your pangs of regret and penchant for meticulousness (being on the side of meritorious readers by calling spade a spade) but we have to live with the fact that the coin has both obverse and the reverse .
Your imparting of knowledge on varied areas with the corollary as sure-shot laughter we always look forward to.
Expecting one very shortly.
Thanks aplenty.
Regards
SB
October 8, 2018 at 09:33
நன்றி. போய்ப் பார்த்தேன் – https://twitter.com/maamallan/status/1049154000061255680
ஆனால் இரண்டுவிஷயங்கள் –
1. பொதுவாகவே மாமல்லன் அவர்களின் புனைவுகளைப் பிடிக்கும் என்றாலும் அவர் ட்வீட்களைப் படிக்குமளவுக்கு நேரவசதியில்லை.
2. இந்த, ‘அறம்’ குறித்த விக்கீபீடியத் திரித்தல்கள் பற்றிப் பொதுவாக அறிவேன் – ஆனால் இந்த பத்மஸ்ரீ விஷய விக்கீபீடியத் திரித்தல் பற்றித் தெரியாது. ஆனால் மாமல்லன் சொல்வது சரியென எனக்கும் தெரியும். (ஏனெனில், நானும் அலக்கியத்துடன் நான்கு மாமாங்கங்களுக்கும் மேலாகப் பரிச்சயமும், சிலபல முக்கியமான அறிமுகங்களையும் பெற்றுள்ளவன்)
என்னைப் பொறுத்தவரை அறம் கிறம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி பற்றியெல்லாம் எழுதுவது லேசு. அவ்வளவுதான்.
அவரவருக்கு அவரவர் பாபங்கள், புண்ணியங்கள்.
இம்மாதிரி விஷயங்கள் புதிதல்ல. தமிழின் ப்ரத்தியேகமான சாபக்கேடுகள் அவை!
ரா.
October 25, 2018 at 10:27
NAMSKARA Sir I am from b’lore. I am really happy you are writing about venmurasu is 100% correct.thanks a lot.9449771041 is my mobil number when you are in b’lore give me a missed call I just want to hear your voice and really i want to thankyou personally. your’s RAVI SASTRY
January 19, 2020 at 05:36
[…] வெண்முரசுடிஸ் 07/10/2018 […]