சுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது! அப்டியே அள்ளிக்குங்க!!

July 6, 2018

நம்பவே முடியவில்லை. ‘வாழ்நாள் வரிசையாளர்‘ விருது பெறுவதற்கு, எக்காளமிடும் தமிழர் கூட்டம், அப்படி அலைமோதிவிட்டது. ஆகவேதான்…

மேலும், நான் ஒத்திசைவு தள ஏகபோக அதிபதியாக இருப்பதால் என் படிப்பாளர் ( 7½கள்) கூட்டத்தைத் திருப்திப்படுத்தும் கடமையுணர்ச்சியில் வாடும் சுயகட்டாயத்தில் இருக்கிறேன் என்பதாலும் …

-0-0-0-0-0-0-

வாழ்க்கை வாழப்படவேண்டும். சாவு சாவப்படவேண்டும். ஒவ்வொரு வாழ்நாளின்போதும் மறவாமல் வாழ்நாள் கொண்டாடப்படவேண்டும். மானுடனுக்கு இதுவன்றி அமையாது உளறு, ஏனெனில், வேறொரு விதத்திலும் அவனுக்குச் செயலூக்கம் இல்லை என்று விதந்தோதுகிறேன் என்பது, தமிழிலக்கியத்துக்கு என் ஆகச் சிறந்த கொடை. அன்றி வேறில்லை. நன்றி.

வாழ்க்கை என்பது வாழ் நாள் கொண்டாட்டங்களின் சேர்க்கை என்பது ஒரு ரெமி மார்ட்டின் அடித்தவுடன், விளிம்பு நிலையில் தள்ளாடும் உங்களுக்குத் தெரியாதா? அட்டகாசம். மோடி என்னை ஏமாற்றிவிட்டார். ஹிந்துத்துவா ஒழிக. எனக்குக் கொடுக்கப்படாத நொபெல் பரிசு வேறு எந்தக் கழுதைக்குப் போய்ச் சேர்ந்தாலும் கவலையில்லை. தென்னமெரிக்கா சுற்றுப்பயணம் செய்து சிலே போகவேண்டும். ஸால்வதோர் அய்யன்டேயின் பேத்தியை ஸலாத் ஸாப்பிட்டுக்கொண்டே கொஞ்சவேண்டும். தமிழகம் உருப்படாது. ஃபிலிஸ்டைன்கள்.

அதாவது, ஒவ்வொரு ஜீவனும் அதன் அதகள வாழ்நாளில்  அதிசயிக்கத்தக்க வகையில் வாழ்ந்துகொண்டேயிருக்கிறது. வாழ்ந்துமுடிந்தவுடன் ஆச்சரியம் தரும் விதத்தில் செத்து விடுகிறது. இதை ஸூஃபி ஞானிகள் பாடுவதை ஜப்பான் தோக்கியோவில் கேத்திருக்கிறேன்.

இதனை, நிகழ்வின் அன்றாட அற்புதத்தை, நம் வாழ் நாளில் கொண்டாட முடியாதா? நாமே நம் வாழ் நாளைக் கொண்டாடாவிட்டால், நம் வாழ் நாளா நம்மைக் கொண்டாடும், சொல்லுங்கள்?

நாமெல்லாம் வாழ்கிறோம். இன்று நம் வாழ்வில் (=Live Bow) ஒரு வாழ் நாள் என்றாலும், அதிசயிக்கத்தக்க விதத்தில் அவை வாழ் நாள் வாழ் நாளாக, அடுத்தடுத்து ஒன்று சேர்ந்து ஒரு வாழ்நாளாவது என்பது நமக்கு ஆச்சரியம் தருவதுதானே? அதாவது ஒரு வாழ்நாளென்பதின் உள்ளேயே அவ்வளவு வாழ் நாட்கள்! இதன் நுண்கணிதத் தர்க்கரீதியான ஞானத்தை நுண்ணுணர்வுடன் நுனிநுனியாக  நுணுக்கத்துடன் நோக்கினால், அதன் அற்புதம் காணப்படுவது அன்றி வேறொன்றுமில்லை.  நான் கண்டடைந்த குரு அப்படித்தான் சொல்வார்.

அதாவது ஒரு வாழ் நாள், தன்னைத்தானே தனிமையில் பார்த்துக்கொண்டு, எவ்வளவு வாழ் நாள் இப்படியே ஓடும், கால வெள்ளத்தில் தடுக்கி விழும் என நெகிழ்வுடன் அவதானித்து அதனை ஒரு 1000 வார்த்தை கட்டுரை ரேஞ்சுக்கு நீட்டித்தால், அது தான் ஒரு ஜென் கவிதை.

…உடனடியாக ஆனந்த விடலையில் பதிப்பித்து சன்மானம் கொடுப்பார்கள். தன்மானம் என்பதுடன் இதனைக் குழப்பிக்கொள்ளாமல், இதனை இரண்டுவிதமாகப் புரிந்துகொண்டு மூன்று திசைகளில் அணுக்கமாக அணுகினால்… (ரொம்ப அயர்வாக இருக்கிறது, மன்னிக்கவும்)

வாழ்நாளை வாழ் பார்க்கிறது

அதை நாள் பார்க்கிறது
அதை நான் பார்க்கிறேன்
அதை நீ பார்க்கிறாய்
அதை இறந்தகாலம் பார்த்தது
நிகழ்காலம் பார்க்கிறது
எதிர்காலம் பார்க்கும்

என

அதை மனுஷ்யம் பார்க்கிறது
அதை பௌத்திரம் பார்க்கிறது

கனி மொழிமொழியென மொழிக்கிறது

வாழ்நாளை வாழ் பார்க்கிறது
கொண்டாட்டத்தை நோக்கி

இவற்றைப் படிக்கும் எந்தவொரு தேர்ந்த வாசகனுக்கும்(!) இனம் புரியாத ஒரு மனோவசிய புளகாங்கிதமேயன்றி வேறொன்றும் இல்லை.

அம்மணக்குண்டியாக சென்னை அண்ணா சாலையில் டிங்டாங்கென்று ஓடுவது போல ஒரு விடுதலை உணர்ச்சி.

விட்டுவிடுதலையாகி நிற்பாய்‘ எனச் சும்மாவா சொன்னார் கணியன் பூங்குன்றனார்?

-0-0-0-0-0-

சரி. இப்போது, ஒரு புதிய விருது. ‘வாழ்நாள் வாழ்நாளாளர்!’ இதனை நீங்கள் ஃபார்வேர்ட் செய்து (முடிந்தால், ரிவர்ஸ் கியரில் பேக்வேர்ட் செய்துமேகூட) உங்களுக்குத் தெரிந்த ஏகோபித்த வாட்ஸ்அப் கும்பல்கள், சகவிடலைகள், உறவினர்கள், நண்பர்கள், ஏன், உங்கள் வீட்டு வாசலில் குப்பையை நோண்டும் பரிதாபகரமான (Horse Passion Handed) பன்றிக்குட்டிகள் – போன்ற அனைவருக்கும் அனுப்பலாம்.

வாட்ஸ்அப் விருது கொடுப்பதில் உள்ள ஒரு அனுகூலம் என்னவென்றால் – நீங்கள் முதல் விருதை அனுப்பிய இரண்டாவது நிமிடத்தில், உலகமயமாக்கல் காரணமாக அது நொடிக்கு ஒரு லட்சம் வீதம் ஃபார்வேர்ட் செய்யப்பட்டு, உலகத்தை மூன்று சுற்று சுற்றி, அலாஸ்காவில் ஐடி குமாஸ்தாவாக இருக்கும் உங்கள் உறவின சிம்பன்ஸியாளர் அல்லது மாற்றுகொரில்லாவாளர், அதனைப் படிக்கவே படிக்காமல் எங்கிருந்து வந்தது என்று புரிந்தும் கொள்ளாமல் உங்களுக்கு ஃபார்வேர்ட் செய்து உங்களுக்கு பதில்விருது கொடுத்து இன்புறுவார்.

என் கடன் ஃபார்வேர்ட் செய்து கிடப்பதே’ என்று சும்மாவா சொன்னார் இளங்கோ அடிகள்?

-0-0-0-0-

யோவ்! இன்னுமா வெய்ட் பண்ணிக்கினுகீறீங்கோ? இத்த வொடனடியா வொங்க வாட்சப் குரூப்புக்கு ஃபார்வேர்ட் பண்ணாம இன்னாடா வோத்தா ஓள்பஜன?

வோடுங்கடா, கஸ்மாலங்களா. காலங்கார்த்தால இப்டீயாடா டைம வேஸ்ட் பண்ணுவீங்க?

போக்கத்த பொறம்போக்குகளா! எப்டீயோ நாசமாப் போங்கடா…

5 Responses to “சுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது! அப்டியே அள்ளிக்குங்க!!”

  1. Sridhar Tiruchendurai's avatar Sridhar Tiruchendurai Says:

    பரிதாபகரமான (Horse Passion Handed) is incorrect. It should be Horse Passion Hand Shame


    • கண்டகண்ட இணைய வக்கிரக் கிழங்களின் சகவாசம் உங்களுக்கு நற்போதனைகளை அளிக்கவில்லை என்பது வெள்ளிடைமலை.

      ஆக, உங்களுக்குத் திமிர் அதிகமாகிவிட்ட காரணத்தாலும், என்னருமை #எஸ்ரா மீதான உங்கள் காழ்ப்புணர்ச்சி எனக்கு ஒத்துவராமையினாலும், உங்களுக்கு விருது கிடையவே கிடையாது.

      ஆகவே, விருது நகர் செல்வதற்கான உங்கள் பயணச்சீட்டைக் கேன்ஸல் செய்துகொள்ளவும்.

      இனிமேலாவது அடக்கமாக, அடக்கி வாசிக்க, சான்றோர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள, வயதில் பெரியவர்களிடமிருந்து நல்விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்.

  2. Sivaa's avatar Sivaa Says:

    71/2 களில் நான் புதியவன். எஸ்ரா மீதான உங்கள் வஞ்சத்தின் அல்லது உங்கள் மீதான அவரது வஞ்சத்தின் பிண்ணனி என்ன


    • அய்யா சிவா, வருக, வருக.

      1. சர்வ நிச்சயமாக, இதற்கு ஒரு பின்னணியோ முன்னணியோ கிடையாது. ஒரு வஞ்சமும் இல்லை. (அவருக்கு, நான் இப்படியெல்லாம் எழுதுவதைப் படிக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டிருக்குமானால், பாவம் அவர் வருத்தப் பட்டிருக்க/ படக்கூடும்)

      2. ​அவர், அடிப்படைத் தகுதிகளற்று அலக்கியப் படையல் வைக்கிறார். தேவையேயில்லாமல் பொறுப்புமில்லாமல் உளறிக்கொட்டுகிறார். இவை போன்ற செயல்பாடுகள், எனக்கு, ஒரு வாசகனாக ஒத்துவரவில்லை. அவரை ஒரு விபத்தாக நினைக்கிறேன்.

      3. இதை யாரும் சுட்டிக் காட்டமாட்டார்கள். எனக்கு அப்படிச் செய்வதில் லௌகீக பிரச்சினை இல்லை. அவ்வளவுதான்.

      நன்றி.


Leave a Reply to Sridhar Tiruchendurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *