வெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட!)
July 5, 2018
2018க்கான, “வாழ்நாள் வேதனையாளர்” விருது ஒத்திசைவு தள நிரந்தர அதிபதியும் பிரபல விமர்சகருமான திரு. ராமசாமிக்கு வழங்கப் படுகிறது.
திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு “வாழ்நாள் சாதனையாளர்” வழங்கப்பட்ட விவகாரத்தின் காரணமாக, வேதனையில் மூழ்கி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதனால், ஒரு பரிகாரமாக, ஆறுதல் (=Six Hea) பரிசாக (Horse Death Inducing) இவ்விருது வெ.ரா அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் வழக்கு.
இதைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு, கீழ்கண்ட பட்டங்களும் விருதுகளும் பட்டொளி வீசிப் பறக்க, வழங்கப்படப் போகின்றனவாம்.
“வாழ்நாள் ரோதனையாளர்” விருது 2018: இது திரு. சாருநிவேதிதா அவர்களுக்கு. கொடுக்கப் படாவிட்டால் — அவர் தமிழ் அலக்கியத்துக்கும், லத்தீ அமெரிக்க இலக்கியத்துக்கும் தரக்கூடிய ரோதனை அளவுக்கு அதிகமாகி விடும். ஆகவே.
“வாழ்நாள் போதனையாளர்” விருது 2018: இது வாசகர்கடிதமெழுதும் வாசகர்களுக்கு போதனையும் அறிவுரையும் மாளாமல், அள்ள அள்ளக்குறையாமல் வாரிவாரி வழங்கிக் கொண்டிருக்கும் திரு ஜெயமோகன் அவர்களுக்கு.
“வாழ்நாள் சோதனையாளர்” விருது 2018: வேலை வெட்டியற்று, அறிவியல் கிறிவியல் எனப் பித்துப்பிடித்து, கிழக்கு உட்பட சோதனை முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வடக்கிருந்து கொண்டிருக்கும் திரு பத்ரி சேஷாத்ரி அவர்களுக்கு.
“வாழ்நாள் அய்ன்ரேண்டாளர்” விருது 2018 – இது வேறு யாருக்கு? சாட்சாத் திரு அரவிந்தன் கண்ணையன் அவர்களுக்குத்தான். ஏனெனில் அவர், தன்னுடைய உலகப் பார்வையையும் மற்றவருடைய பார்வைகளையும், தொடர்ந்து, கருணையேயில்லாமல் செதுக்கித் தள்ள அவர் உபயோகப்படுத்துவது அய்ன்ரேண்டினி நந்தினி நந்திதமேதினி உறைகளேயே.
“வாழ்நாள் கர்ஜனையாளர்” விருது 2018: சீமாரார்
“வாழ்நாள் பஜனையாளர்” விருது 2018: உதயகுமாரரார்
“வாழ்நாள் நிந்தனையாளர்” விருது 2018: வினவு விடலைகள்
“வாழ்நாள் இளைஞரணித்தலைவராளர்” விருது 2018 : இசுடாலிரார்
“வாழ்நாள் க்ரோதனையாளர்” விருது 2018: விடுதலை வீரமணியார்
“வாழ்நாள் மனப்பிறழ்வாளர்” விருது 2018: வே. மதிமாறனார்
“வாழ்நாள் உளறலாளர்” விருது 2018: இது என் செல்லமும் பெருமிதிப்புக்குரியவருமான யுவகிருஷ்ணா அவர்களுக்கு வழங்கப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைவதே நான்தான்!
-0-0-0-0-0-0-
கவலைப் படாதீர்கள்! இதைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் “வாழ்நாள்” விருது தரப்பட உள்ளது.
வாழ்த்துகள்!
தயவுசெய்து, முட்டிமோதி அலைபாய்ந்து ஆர்பரித்து வராமல், பொறுமையாக வரிசையில் வரவும். உங்கள் அனைவருக்கும் இலவச விருது காத்திருக்கிறது. உங்கள் ஆதார் அட்டை விவரங்களை உடனே அனுப்பவும்.
ஆனால், “வாழ்நாள் வரிசையாளர்” விருது ஸ்டாக் இருக்கும்வரைதான் இது.
July 5, 2018 at 10:16
Sire,
I thought of sharing the link on this subject.. you are much ahead of time..
July 5, 2018 at 10:40
அய்யா, எனக்குமேகூட சற்றுமுன் நரேந்திரமோதி எனக்கு இதுகுறித்து ஒரு ஃபோன் போட்டபோதுதான் தெரியும்.
ஆனால், என் பிரபலத்துவம் பற்றி நான் இதுவரை அறியவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
உங்களுக்கு?
July 5, 2018 at 10:24
What took you so long?, The news broke out 2 hrs back, that is when I woke up.
July 5, 2018 at 10:41
அய்யா, மன்னிக்கவும். சற்றுத் தாமதமாகிவிட்டது.
July 5, 2018 at 10:32
When will be the function held for distribution of awards sir? I am the first person to get the award. – Saravanan
July 5, 2018 at 10:38
சரி சரவணன், நம்முடையது வெர்சுவல் ஃபங்க்ஷன். https://www.geeksforgeeks.org/virtual-function-cpp/
இதோ பிடியுங்கள்!
நீங்கள்தான் ‘வாழ்நாள் முதன்மை வரிசையாளர்!’
மனம்கனிந்த நல்வாழ்த்துகள்!!
July 5, 2018 at 11:48
வாழ்நாள் அட்ச்சுவிடாளர் விருதை யாருக்கு அட்ச்சு விடலாம்?
July 5, 2018 at 13:16
ராமச்சந்திர குஹா? ஸாகரிகா கோஷ்டம்?? கமல்ஹாஸன்???
July 5, 2018 at 13:17
Had a good laugh reading above …Thanking you for same.
July 5, 2018 at 13:50
“இரண்டாம் வரிசையாளர் விருது” எனக்கு கொடுக்கப் பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் அறிந்தேன். ஆதார் விவரம் அவசியம் வேண்டுமா சார்
July 5, 2018 at 13:55
நன்றி! + வாழ்த்துகள்!
ஆதார் எண் கண்டிப்பாக வேண்டும். அதை லிங்க் செய்தால்தான் உங்களுக்கே உங்களுக்கான விருதை ‘ஆடித் தள்ளுபடி’யில் அள்ளிக்கொள்ளமுடியும்.
ஏற்கனவே ஒரு பெரிய வரிசை உருவாகிவிட்டது. பந்திக்கு முந்துங்கள், சரியா?
July 5, 2018 at 18:44
ராமசாமி ஐயா, எஸ்.ரா.அவர்கள் தங்கள் blogஐ படித்து எழுதியதுண்டா?
July 5, 2018 at 18:46
அய்யா, தெரியாது.
July 5, 2018 at 20:54
விடுங்க சார் விருது வாங்கட்டும்.எனக்கு மகிழ்ச்சி தான்.
உங்கள் நக்கலின் உச்சம் என் அண்ணனைச் சொல்லும் போது தான் – /செதுக்கித் தள்ள அவர் உபயோகப்படுத்துவது அய்ன்ரேண்டினி நந்தினி நந்திதமேதினி/ நீங்க எழுதும்போது பின்னாடி பாட்டு ஓடிட்டிருந்ததா என்ன? வெள்ளி செவ்வா கூட இல்லையே சார். :-) சிரிச்சு மாளால
Khuda Hafiz
July 6, 2018 at 08:23
[…] முடியவில்லை. ‘வாழ்நாள் வரிசையாளர்‘ விருது பெறுவதற்கு, எக்காளமிடும் […]
July 9, 2018 at 14:08
[…] வெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்க… 05/07/2018 […]