பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது

April 25, 2018

ஹ்ம்ம்…

நம் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து, மெத்தப் படித்த மேதாவிகளிலிருந்து பிற அறிவுஜீவிய ஜந்துக்களூடாக, அற்பப் போராளி மாணவக் கூவான்கள் வரை இருக்கும் ஒரு ஆச்சரியகரமான கருத்து இது. இது பற்றி நீளமாக எழவெடுத்த ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். (we expect way too much from teachers… 19/08/2014)

இன்னொன்று தமிழில்: … அல்லா டீச்சருங்ளயும் நிக்கவச்சி சுட்ணும் சார்! 20/04/2013

…பிரச்சினை என்னவென்றால் – பதிலுக்கு ‘நீ பெரிய்ய மசுரா? உத்தமமா?’ என ஆசிரியர்கள் கேட்டுவிடமுடியாது. உங்களிடம் இருக்கும் அயோக்கியத்தனமும் அரைகுறைத்தனமும் தானேடா எங்களிடமும் ஏறத்தாழ அதே விகிதாச்சாரத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியாது.

ஏனெனில் – உடனடியாக அவர்கள் ‘உங்கள் போக்கற்ற தொழிற்சங்க விவகாரங்கள்,’ ‘ரியல் எஸ்டேட் ஸைட் பிஸினெஸ்,’ ‘ட்யூஷன்,’ ‘கை நிறையச் சம்பளம் ஒரு கேடா?’ எனக் காலை வாருவார்கள். யோசித்துப் பார்த்தால் இது உண்மைதான் என்றாலும்கூட – எனக்குத் தெரிந்த களரீதியான உண்மைகளின் படி – பலப்பல ஆசிரியர்கள், பல மாநிலங்களைச் சார்ந்தவர்கள் – அப்படியல்லர்.  மாறாக, எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையில் சுய அர்ப்பணிப்புடன் பணியாற்ற முயன்று வருகிறார்கள்.

-0-0-0-0-0-0-

இரண்டு நாட்களுக்கு முன் ரயில்வண்டியில் அமைதியான (அப்படித்தான் ஆரம்பித்தது) பயணம் – ஹைதராபாதுக்கு.

அடுத்த இருக்கையில் ஒரு தமிழ் இளைஞ,  சினிமா நடிக (விஜய்குஜய் என நினைவு) டீஷர்ட் + குறைந்த பட்சம் இருநிறத் தலைமசுர் (கீழே குஞ்சாமணி மசுருக்கு என்ன நிறத்தை அடித்திருப்பான்?) + அப்பளாக்குடுமியில்லா ரவுண்ட் கட்டி அடித்த சிகையலங்கார மாணவன்*.

ஆகவே கண் சொருகிக்கொண்டு இலக்கில்லாத பார்வையுடன், காதில் செவிட்டு மெஷினில் டும்மாடக்கா சிங்சங்க சிங்சங் என மிக உரக்கப் பாட்டுகள் வந்த மணியம். அதாவது, தமிழ் போன்ற ஒரு மொழியில். பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனக்கே அதன் உச்சஸ்தாயி க்றீச்சிடல்கள் தாங்க முடியவில்லை. அவனால் எப்படி அதைப் போய் காதுக்குள் காற்றுபுகமுடியாமல் மாட்டிக்கொண்டு பொறுத்துக்கொள்ளமுடிகிறது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இரண்டு முறை ‘ஒலியளவைக் கொஞ்சம் குறைத்துக் கொள்கிறீர்களா’ என அப்பையனைக் கேட்டு அவன் ஒருவழியாக ஒரு காதில் வைத்திருப்பதைக் கழட்டி ‘என்ன சார்’ எனக்கேட்டு பின் நான் சொல்வதைப் புரிந்துகொண்டபின் கொஞ்ச நேரத்தில் ஒலியளவு மறுபடியும் உயர்ந்து  சிங்சங்க சிங்சிங்; விதம்விதமாக ஒலியோசை அளவுகளில் அப்பாட்டுக் கோப்புகள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும், வேறேன்ன சொல்ல.

பின்னர் எனக்கும் அலுத்துவிட்டது; ஆக கைவசம் எப்போதுமே இருக்கும் பருத்தித் துண்டினால் காதுகளை இறுக்கமூடி முண்டாசு கட்டிக்கொண்டேன், கொஞ்சம் சப்தம் அடைக்கப்பட்டது. பக்கத்தில் இருப்பவர்கள் ஒருமாதிரியாகப் பார்த்தாலும் (அவர்கள் காதிலும் செவிட்டு மெஷின்கள், நன்றி!), நான் பாரதிடா! ;-)

போங்கடா.

-0-0-0-0-0-0-

ஒருவழியாக அனந்தபூர் ரயில்நிலையம் வந்தவுடன் – விட்டுவிடுதலையாகி வெளியில் ஓடிப்போய் ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டேன். அனந்தபூர் என் தகப்பனார் பிறந்து வளர்ந்த இடம். என் தாத்தா அந்தக் காலத்தில் அங்கிருந்த ‘மெட்றாஸ் ப்ரெஸிடென்ஸி’ அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்தவர். ஏதேதோ அலையலையாக நினைவுகள். வெப்பம். தகிப்பு. புட்டபர்த்தி சாயிபாபா பக்தர்கள்.

அவனும் கீழே இறங்கி வடை பலவற்றை அமுக்கியபின் பேச ஆரம்பித்தான். டொமுக்குடப்பா ஒரு காதில் இருந்து பிடுங்கப் பட்டது.

பொதுவாகவே, பிறருக்கு அறிவுரை கொடுப்பதைவிட, நான் மற்றவர்கள் பேசுவதைக் கேட்பதில் ஆவலுள்ளவன். அதனால்தானோ என்னவோ, எனக்குப் பலர் அறிவுரை கொடுப்பார்கள். ஆஹா, கேட்டுக்கொண்டால் என்ன பிரச்சினை.

ஆனால் அறிவுரை அளவுக்கதிகமாக ஆனால், விஷயம் கொஞ்சம் சிடுக்கலாகி விடுகிறது, என்ன செய்ய!

-0-0-0-0-

நோட்ஸ் எடுத்திட்றீந்தீங்களே, ப்ரொஃபெஸ்ஸரா? (நான் ஏதோ யோசித்துக்கொண்டே  என் கையேட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கவேண்டும்)

இல்லையப்பா இல்லை, சிலசமயங்களில் நான் ஒரு பள்ளிப்பிள்ளை வாத்தி. அவ்வளவுதான்.

எலெக்ட்ரானிக்ஸ் எல்லாம் இருந்ததே!

ஆம் தம்பி ஆம். 7-9 வகுப்புப் பையன்களுக்கு  இரண்டுவாரம் மின்னணுவியல் பற்றி பாலபாடம் எடுக்கப்போகிறேன். பார்க்கலாம்.

தமிழ் மீடியமா?

இல்லை. ஆங்கில மூலம்தான்.

பின் ஏன் தமிழில் மின்னணுவியல் என்று சொல்கிறீர்கள்? எலக்ட்ரானிக்ஸ் என்று சொல்லாமே!

உண்மைதான். முடிந்தவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் பேச முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் தம்பி, உங்களுக்கு என் தமிழ் புரியவில்லையா? இதே புரியவில்லை என்றால் என் எழுத்து(!)களைப் படித்தால் என்ன சொல்வீர்களோ பயமாகவே இருக்கிறது!

சிரித்தான்.

உங்கள் பயிற்சி ஏன் தமிழில் இல்லை? தாய்மொழிக்கல்வி முக்கியமில்லையா?

தம்பீ, நீங்களே சிறிதுமுன்னால்தானே தலைகீழாகப் பேசினீர்கள்?

அவன் என்  குறிப்புப் புத்தகத்தை பிரித்துப் பார்த்துவிட்டுச் சொன்னான் – உங்கள் மின்னணுச் சுற்று (எலக்ட்ரானிக்ஸ் ஸர்க்யூட்) விளக்கம் சரியில்லை.

ஙே. ஹ்ம்ம் புரியவில்லையப்பா எனக்கு.

எலக்ட்ரான்கள் சுற்றி வருவதைக் காண்பிக்காமல் இப்படி வேறேதோ எழுதியிருக்கிறீர்களே! ஸ்விட்ச் போட்டவுடன் லைட் எரிகிறது – அதற்கு ஒளியின் வேகத்தில் எலக்ட்ரான்கள் சுற்றி ஓடி லைட் பக்கம் போனால்தானே நடக்கும்?

அப்படி இல்லையப்பா. என்ன ஆகிறது என்றால்…

சார், நான் எலக்ட்ரானிக்ஸ் க்ரேஜுவேட் ட்ரிப்பிள் ஈ (எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்)- எனக்கு இந்த விஷயங்கள் நன்றாகவே தெரியும். மேலும் நான் பன்னெருகட்டா ரோடில் ஒரு ஈடிஎம் கம்பெனியில் வேலை செய்யப் போகிறேன்.

தம்பீ, நல்ல படிப்புதான் படித்திருக்கிறீர்கள். ஆனால் விஷயம் அப்படியில்லை. நீங்கள் உங்கள் புத்தகத்தில், மின்னோட்டத்தைப் பற்றி வரும்போது – நீர் பிரித்துக்கொடுத்தல், அழுத்தம், குழாய் என வரும் உவமான விவரணையைப் படித்திருப்பீர்கள். அது சரியில்லை, நீரின் ஓட்டத்தையும் மின்சாரத்தின் ஓட்டத்தையும் இணைத்துப் பார்ப்பதன் மூலம் விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியாது எனத்தான் சொல்லவ…

சார், நீங்க எலக்ட்ரானிக்ஸ் படிச்சிருக்கீங்களா? நான் சொல்றேன், உங்களோட படமும் விளக்கமும் தவறு. அது ஆக்சூலா எப்படி நடக்குதுன்னு நான் சொல்லட்டா?

சர்வ நிச்சயமாக. இளைஞர்களிடமிருந்து கற்றுக்கொள்வது பிடிக்கும். நீங்கள் புதிதுபுதிதாக நிறைய கற்றுக்கொண்டிருப்பீர்கள் அல்லவா?

ஆமாம் சார். நீங்களும் பசங்களுக்கு புதிய முறைகளில் கற்றுக் கொடுக்கணும் – ஆனா நீங்க பிஎட் தானே படிச்சிருப்பீங்க?

எனக்குத் தமாஷாக இருந்தது. சரி இது எங்கே போகிறது எனப் பார்க்கலாம் என, வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன்.

தம்பீ நான் பிஎட் கூடப் படிக்கவில்லை. பிள்ளைகளுடன் இருப்பது பிடிக்கும், அவ்வளவுதான்.

ஆனா சார், நீங்க இப்படித் தப்புத்தப்பா சொல்லிக்கொடுக்கிறதனால பிற்காலத்துல அந்தப் பசங்களுக்குப் பெரிய பிரச்சினையாயிடும் சார்! அடிப்படைகளே தப்புன்னாக்க…

தம்பீ, உண்மைதான். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் நீங்கள் எப்படி இதனை அணுகவேண்டும் என்று சொல்கிறீர்கள்?

அவன் விளக்கினான்(!).  வரைந்த படம் – வழக்கமான நீர்க் குழாய் கதையாடல்தான். பாவிகள், இப்படியே புத்தகங்களை எழுதி நம் பிள்ளைகளைக் காயடித்துவிட்டார்கள், சுயசிந்தனையற்றவர்களாக்கி விட்டார்கள்.

ஆனால் அந்தப் பையன் தன் கருத்துதான் சரி என்று வாதிட்டான். உள்ளீடற்ற பையன். மேலும் கற்றுக்கொள்வதில், மறுபரிசீலனைகளில் அவனுக்கு ஈடுபாடில்லை.

சரி தம்பீ – இப்படி எலக்ட்ரான்கள் எல்லாம் ஓடிஓடி லைட் – அந்த விளக்கின் பக்கம் போய் விழுந்தால் அது என்னத்துக்காகும்?

அது ஒரு சுற்றுச் சுற்றி, பின்னால் ஆரம்பித்த இடத்துக்கே அதே வேகத்தில் வந்துவிடும்!

சரி. அது ஒரே வேகத்தில், ஓளியின் வேகத்தில் போவதாகச் சொன்னீர்கள்; அப்படியென்றால் என்னத்தைதான் அது விளக்குக்குக் கொடுத்தது? ஏனெனில் அதன் வேகத்தில் மாற்றமே இல்லை என்கிறீர்களே!

சார், அதைத் தான் ஐன்ஸ்டீன் ரிலேடிவிட்டி தியரியில் விளக்குகிறார்! நான் மூன்றாம் ஸெமெஸ்டரில் படித்தது, விவரங்கள் நினைவில்லை.

(அய்யோ) ஆஹா.

தம்பீ, அப்படியா என்ன? ஆனால் நீங்கள் ட்ரிஃப்ட் வேகம், எலக்ட்ரான் சுற்றலின் வேகம், மின்விசை/வயல் அழுத்தம், மின்காந்த அலையின் வேகம் பற்றியெல்லாம் படித்திருக்கிறீர்களா? இவையெல்லாம் வெவ்வேறு அல்லவா?

கொஞ்சம் விவரித்து – ஆக அழுத்த அலைதானே சக்தியை, அந்த விளக்குக்கு அளிக்கிறது? எலக்ட்ரான் சுற்றுவதால் அல்லவே என்றேன். எலக்ட்ரான்கள் ஸ்விட்ச்சிலிருந்து விளக்கு வரை போவதற்கு மாமாங்கமாகிவிடுமே என்றேன்.

சார், அதெல்லாம் ஹையர் ஸெகண்டரியிலேயே படித்துவிட்டோம். அதெல்லாம் கீழ் நிலை விவரணைகள். இதற்கு முக்கியமான காரணம் ரிலேட்டிவிட்டிதான்.

சரி. தம்பீ, எனக்கு இந்த விஷயம் தெரியாது, புதிதாக இருக்கிறது – கொஞ்சம் விளக்கமுடியுமா?

சார், உங்களுக்கு விளக்கணும்னா கால்குலஸ் ந்யூமெரிக்கல் அனலிஸிஸ் எல்லாம் தெரியணும். ஆனால் அதெல்லாம் உங்களுக்கு வருமா?

தாராளமாக வரும்னு நினைக்கிறேன். விளக்குவீர்களா?

நீங்க என்ன சார், மேதமேடிக்ஸ் வாத்யாரா?

இல்லையே! அறிவியலும் வரலாறும்தான் இப்போதைக்கு.

பின்ன  நான் விளக்கப்போவது உங்களுக்கு எப்படிப் புரியும், சார்? என் நேரம் வேஸ்ட் ஆகுமில்ல?

இல்லையப்பா நீங்கள் எவ்வளவு கணிதம் வேண்டுமோ அவ்வளவு உபயோகித்து விளக்குங்கள், புரியவில்லையென்றால் கேட்கிறேன்.

சார், இதென்ன வம்பு. எனக்கு நேரமேயில்லை.

சரி, ஆனால் நீங்கள்தானே நான் சொல்வது தவறு என்றீர்கள்?  என்னைத் திருத்திக்கொள்ள நான் தயார்,  நீங்கள் தானே எனக்கு விளக்குகிறேன் என ஆரம்பித்தீர்கள்?

அவன் முகத்தில் ஈயாடவில்லை.

உரையாடல் முடிந்தது.

-0-0-0-0-0-0-

சிறிது நேரத்துக்குப் பின் நான் என்னுடைய மேற்பலகைக்குப் போய் அனந்தசயனம்.

சிறிது நேரம் கழித்து –  அவன் யாரோ அவன் நண்பனிடம் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தான் (அல்லது பேசுவது போல பாவனை செய்தான்) – அதன் சாராம்சம்:

கெழம் ஒன்று பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு தொந்திரவு.  ஆசிரியனாம். பள்ளியில் 7ஆம் வகுப்புப் பிள்ளைகளுக்கெல்லாம் தப்புத் தப்பாக எலக்ட்ரானிக்ஸ் சொல்லிக் கொடுக்கப் போகிறதாம். ஒன்றும் தெரியவில்லை அதற்கு. திமிர் வேறு. இந்தமாதிரி ஆசிரியர்களைச் செருப்பால் அடிக்கவேண்டும். இவர்கள்தாம் பாலுறவுக்காகக் குழந்தைகளை நாசமாக்குபவர்கள். தமிழ் மொழிக் கல்விக்கு எதிரானவர்கள். சொதப்புபவர்கள். டட்டடா டட்டடா

ஆம்.

பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது.

நன்றி.

*பின்குறிப்பு: சிகையலங்காரக் கோமக இளைஞர்களில் சிலரும் பலவிதங்களில் போற்றத்தக்கதாகவே இருக்கிறார்கள் எனவும் உணர்ந்திருக்கிறேன். (ஆனால் இந்தப் பையன் வெறும் அலங்கார ஜோடிப்புதான் – உள்ளீடற்றவன்)

16 Responses to “பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது”

  1. Vettri Says:

    பதிவில் ஒரு சாரு டச் உளது


    • ஆ! அவதூறு! என்ன சொல்லிவிட்டீர்கள், வெற்றீ! :-(

      சர்வ நிச்சயமாக நான் லத்தி அமெரிக்காவில் ஸெட்டில் ஆகப் போவதில்லை. ஏனெனில், திராவிடர்கள் ஃபிலிஸ்டைன்களானாலும் தமிழர்கள் மேன்மக்களே!

  2. ஆனந்தம் Says:

    சாரு இவ்வளவு நேரமெல்லாம் பொறுமையா பேசவே மாட்டார். எடுத்ததுமே புலம்பல்தான்.


    • ​நன்றி ஆனந்தம். ஒரு கணம் அவதூறினால் ஆடிப்போய்விட்டேன். என்ன செய்வது, வேறு வழியே இல்லாமல்தான் நான் இங்கு குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்களாவது அறிவீர்கள் என நினைக்கிறேன்.

      எது எப்படியோ, எனக்குப் பொறுமை இருக்கிறதோ இல்லையோ, என் செல்ல ஸொற்றோ நாய்க்குப் பொரையுடமை இருக்கிறது, நன்றி.

  3. Mbala Says:

    Sir, I did not get the kids claim. Can you please put it in English.
    Your Tamil kalai chol confused me. Thanks.


    • Sir, our Dravidian Heir said: ‘electrons go around creating an electric current – that is, for example, when you switch on, the electrons race towards the load (say a fan or a lightsource) and then come running back all the way to switch/neutral’ etc. This is a grossly incorrect view, but most text books also mention stories like this; even then, our kids do not question ANYTHING! Sad! They do not know how to think, even!

      But ask them to wield a placard and shout slogans ‘thamizhagam kunjikkap padukirathu’ they gladly will – incompetent, impotent and inconsequential scum that they are.

  4. Mbala Says:

    “then come running back all the way to switch/neutral’ ” So electrons can be reused. Qed. No more electricity bills. How did our Dravidian genius relate this to relativity?General or Special.
    Roumba kashtam sar ungalluku.


    • Sir, luckily he did not specify whether it was general or special or a special-sada or masaala.

      On the contrary, in the dravidian phantasmagoria, everything – all murky deals go thru relatives and ‘big’ families. So. There are always connections, yeah?

      Stellar examples of that Dunning Kruger effect, what to say.

  5. RC Says:

    நன்றி சார்.
    நீங்கள் ட்விட்டரில் முன்னர் குறிப்பிட்ட திரு.எட்வர்ட் பர்ஷெல் புத்தகத்தை எடுத்து வைத்தததோடு இருக்கிறது.படிக்க வேண்டும்.அடிப்படைகளை அறிந்து கொள்ள புத்தகங்கள் வழி அல்லாமல் (அல்லது கற்பிக்க இயலாதவர்கள்) Veritasium, Bruce Yeany போன்ற யூடுப் தளங்கள் வழி கற்றல்+கற்பித்தல் பற்றி நேரம் இருப்பின் தங்கள் கருத்து அறிய விருப்பம். நன்றி.


    • ஆர்ஸி, நீங்கள் குறிப்பிட்டுள்ள யுட்யூப் விஷயங்கள் பற்றி எனக்கு அறிமுகம் இல்லை. நன்றி.

      ஆனால், மின்னணுவியல் அடிப்படைகளை ஒவ்வொரு ஆசாமியும் (எப்படியாவது) மிகச் சரியாக அறிந்திருக்கவேண்டும் என்கிற அடிப்படைவாத எண்ணமுடையவன் நான். (அலக்கியம், லிபரல் ஆர்ட்ஸ் வகையறா போலல்லாமல் இம்மாதிரி அறிவியல் பூர்வமான விஷயங்களில் எது சரி எது தவறு என மட்டையடி அடிக்காமல், நம்மால் தீர்க்கமாக அறிய முடியும்)

      ஆக, நான் கோரிக்கை வைப்பதல்லாம் – கற்க கசடற. கற்றபின்,ஒரு திடத்துக்கு வந்தபின் கற்பிக்க அதற்குத் தக.

      நன்றி.

      • RC Says:

        நன்றி அய்யா.
        கல்லூரி வகையில் முறையான அறிவியல் கல்வி பெற்ற பின்புலம் இல்லாத, அல்லது கல்வி தொடர்பான வேலையில் இல்லாத பெற்றோர்,அறிவியல் அடிப்படைகளை கற்க தாங்கள் குறிப்பிட்ட புத்தக வகை தொடர்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை என்ற என் முன்முடிவில் கேட்கப்பட்டதே அக்கேள்வி.
        என் அனுபவத்தில் தன்னைச் சுற்றியுள்ள+ குடும்பத்து குழந்தைகளுக்காகவது தொடர் கற்றலுக்கும் + கற்பித்தலுக்கும், இணையம், யுட்யூப் வழி எளிதானதாக இருக்கிறது.(அது முழுமையாக இருக்கிறதா என்ற சந்தேகமும் கூட உள்ளதாலேயே அக்கேள்வி). நன்றி.


      • அய்யன்மீர், உங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறேன். நன்றி.

  6. Vignaani Says:

    ஒரு சின்ன வேண்டுகோள் : அந்த பையனிடம் உங்கள் வலைப் பக்கத்தின் பெயர் அல்லது உங்கள் தொலைபேசி எண் கொடுத்திருக்கலாம். அல்லது கொஞ்சம் கோபத்தை அடக்கிக் கொண்டு அவனிடம் அவன் அடிப்படை புரிதலில் உள்ள வெற்றிடங்களை அவன் அறிய செய்திருக்கலாம். Often, maturity is not going out of the way to prove that you are right, I agree. ஆனால், இங்கு அவனுடைய நிலையை உணர்த்த கொஞ்சம் சிரம பட்டிருக்கலாம். இன்னொரு பதிவில் சம்பூகன் பின்னூட்டத்திற்கு தன்னிலை அளித்தது போல: இது போன்ற அரை வேக்காடுகள் கொஞ்சம் அட்ச்சு விடறதைக் குறைக்க ஏதுவாகும். இடம் பொருள் ஏவல் எப்படி இருந்ததோ, தெரியவில்லை.


    • அய்யா, நான் முதலில் கொஞ்சம் முயன்றேன். ஆனால் முடியாது – எதிர்ப்புணர்ச்சி (antiSexualIntercourse)அதிகமாக இருக்கிறது என அறிந்தபோது விட்டுவிட்டேன்.

      புறமுதுகிட்டு அப்பர்-பர்த் எழவில் சரணாகதியடைந்தேன். (இது மேல்சாதி பிறப்பு வெறிஆரியம் போன்றதாகவும் இருக்கலாமோ?)

      Sometimes, I give up and tell myself — “NEVER teach pigs to sing, because they CAN’T sing; besides it makes them very ANGRY!”

      Thanks! :-(

      • Vignaani Says:

        Vivekanada’s saying (something like this): “…..Those, who don’t know and don’t know that they don’t know are fools, shun them.”

        That is vivekam.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s