அட அரெகொறயே! இசுடாலிரே! ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே!

April 27, 2018

​நீங்களெல்லாம் ஒரு தலைவர், நம் பாவப்பட்ட – தீராவிடத்தால் பீடிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் அடுத்த முதலையமைச்சராக ஆவலுடன் சப்புக்கொட்டிக் கொண்டு, நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கும் நபர்!

ஆச்சரியமாக இருக்கிறது.

நீங்களும் ராஹுல்காந்தியும்தான் முறையே தமிழகத்துக்கும் பாரதத்துக்கும் எதிர்காலக் காவிய நாயகர்கள் என்றால் – நாமெல்லாரும் சாருநிவேதிதா வாலைப் பிடித்துக்கொண்டு குதிரை லத்தீ அமெரிக்கா போய், கும்பலோட பாப்லொ நெருதாவென ஸெட்டில் ஆகி விடுவதை விட்டால் வேறு வழியே இருக்காது.

…பாவிகளே… ஏண்டா இப்படித் திரியாவரம் பிடித்து ஞமலிகள் போல உதிரித்தனமாக அலைகின்றீர்கள், பாவப்பட்ட இந்தியர்களை அலைக்கழிக்கின்றீர்கள்… நம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறீர்கள்? உங்கள் சொந்தக் குடும்பங்களின் எதிர்காலத்தை வேண்டுமளவு, குறைந்தபட்சம் சுமார் 1000 தலைமுறைகளுக்குக் காபந்து செய்துகொண்டுவிட்ட பின்னர் – மற்ற சாதா பிள்ளைகளின் வாயிலும் தமிழ்க்குடும்பங்களின் வயிற்றிலும் கயமையுடன் அடிக்கும் கீழ்ஜன்மங்களான நீங்கள் உருப்படுவீர்களா?

உங்கள் பெருங்குடும்பங்கள் விளங்குமா? உங்களோடு சேர்ந்து உங்கள் தொடர்புள்ள அனைத்தும் நாசமாப் போக. அயோக்கியர்கள்.

-0-0-0-0-0-

மகத்தான வெற்றி பெற்ற உங்கள் தமிழகம் அளாவிய ‘நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்’ – எப்படியாப்பட்ட வெற்றி பெற்றிருக்கிறது என்றால், ​கொஞ்சம் பொறுமை

நிற்க. மத்தியஅரசின் ஸிபிஎஸ்இ அமைப்பு நடத்திய 2017க்கான நீட் தேர்வில் சுமார் 11.40 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். அதன் அங்கமாக, சுமார் 83, 000 பிள்ளைகள் தமிழகத்தைச் சார்ந்தவர்கள், இந்தத் தேர்வை எழுதினார்கள்.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்மாநிலப் பிள்ளைகள் குறித்த புள்ளிவிவரம் இதோ இளைஞரைய்யா, உங்கள் கவனத்துக்கு:

கேரளா — 80%
தெலங்காணா — 77%
ஆந்திரா — 73%
கர் நாடகா — 72%
தமிழ்நாடு — 41%

(இதில் பாஸ்/தேர்வடைய பிள்ளைகள் மொத்தம் 720 மதிப்பெண்களில் 145 எடுத்திருந்தால் போதுமானது; ஆனால் அப்படியும்கூட உங்களுடைய திராவிடர்கள் கோலோச்சும் தமிழகத்தில் அப்படியொரு மதிப்பெண் பிரச்சினை. பஸ் டிக்கெட் விலையிலிருந்து நீட் மதிப்பெண் வரை அனைத்திலும் நாம்தான் குறைவு. நன்றி!)

-0-0-0-0-0-

ஆனால் இந்த வருடம் உங்களைப் போன்ற அதி உன்னதத் தீராவிடர்களையும் தமிழ்த் தோசையத் தலைவர்களையும் கொண்ட அதிபராக்கிரமம் மிக்க தமிழகத்தில், இந்த பாவப்பட்ட நீட் தேர்வுக்கெதிராக வரலாறு காணாத மறப்போராட்டங்கள் நடந்து மகாமகோ வெற்றி வாகை (அதாவது ‘நமக்கு நாமே’ வகை முட்டிமைதுனம்) சூட்டிக் கொள்ளப்பட்டதால் – ஆச்சரியப் படத் தக்கவகையில் தமிழ்ப் பிள்ளைகளும், தம் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் குறித்துக் கரிசனப்படும் பெற்றோர்களும் அலைகடலெனத் திரண்டு மேலதிகமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்!

வாழ்க!

ஏற்கனவே – விண்ணப்பித்திருக்கும் (+அட்மிட் கார்ட் வாங்கியிருக்கும்)தமிழ்ப் பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது. சுமார் 110,000 எண்ணிக்கையில் இது நிற்கலாமென ஒரு அனுமானம். பார்க்கலாம் – எப்படியும் இந்த எண்ணிக்கைகள் துப்புரவாக – அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும்.

இந்த, சென்றவருடத்தைவிட அதிகப்படி தமிழிளைஞ விண்ணப்பதார எண்ணிக்கையின் காரணமாக, ஸிபிஎஸ்இ அமைப்பு திக்குமுக்காடி, அதன் கணிநிசார் நிரல்கள், பக்கத்திலிருக்கும் மாநிலங்களில் இடவசதி இருக்கும் தேர்வுமையங்களில் சிலபல தமிழ்ப் பிள்ளைகளுக்கு(சுமார் பத்தாயிரம் போல) இடம் ஒதுக்கியிருக்கின்றன. இதைப் பற்றி விவாதிக்க சந்தர்ப்பமே இல்லை. ஏனெனில் 1) தமிழகத்தில் இதனை அதிகப்படி எண்ணிக்கையில் நடத்த வாய்ப்பில்லை 2) இது முழுவதும் உங்கள் திவ்ய திராவிடப் பேடிப் பிரச்சாரத்தால் நடந்த விஷயம்.

மேலும், கீழ்கண்ட 18 ஏப்ரல் தேதியிட்ட அறிக்கையின் படி அவ்வமைப்பு, தெள்ளத் தெளிவாக இந்த மாற்றங்கள் மறுபரிசீலனைக்குறியவையல்ல எனச் சொல்லியிருக்கிறது.


ஆனால், திடுதிப்பென்று முழித்துக்கொண்டு (ஏனெனில் நீங்கள் காவேரி குறித்த கவைக்குதவாத கயமைப் போராட்ட வெறியில் படுபிஸியாக இருந்துவிட்டீர்கள்!) இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுகிறீர்கள்!

மேலும் – உங்களுக்கு முன்னேபின்னே ஏதாவது படிப்பு வாசிப்பு என்று கடுகளவாவது இருந்தால்தானே, நம் இளைஞர்களின் மீது துக்குணியூண்டாவது கரிசனம் இருந்தால்தானே – வெறும் இளம் 64 வயதே ஆகியிருக்கும்போதே நிரந்தர இளைஞரணித்தலைவராக ஆனாலும், ஏதாவது உருப்படியாகச் செய்யமுடியும், சொல்லுங்கள்?

https://twitter.com/mkstalin/status/989175523375960065

மாணவர்களை ஊக்குவிக்காமல் உளறிக்கொட்டி “அவர்களது மனநிலையை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடும் மத்திய,மாநில அரசுகளுக்கு கடும் கண்டனத்தை” தெரிவித்துக் கொள்கிறீர்கள். உங்களைப் போன்ற தறுதலைத் திராவிடர்களும் தமிழ்த் தோசையர்களும்தான் நம் தமிழ்க் குழந்தைகளின் மனநிலையைச் சிதைக்கிறீர்கள்! இந்த அடிப்படை எழவைக் கூடவா உங்கள் கயமைப் போராளித்தனம் புரிந்துகொள்ளவில்லை?

ஆனால் எம் தமிழ் மக்கள், பிள்ளைகள் உங்களைப் போன்ற உதிரிகளுடைய நாடகங்களைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் – ஆகவேதான் இந்த மேலதிக எண்ணிக்கை. நன்றி.

“உடனடியாக,வெளிமாநில தேர்வு மையங்களுக்கு தமிழக மாணவர்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்திடவேண்டும்”

அதாவது – ஏறத்தாழ, வெளி மாநிலம் சென்று தேர்வு எழுதமுயலும் பாவப்பட்ட தமிழ்ப் பிள்ளைகளை மிரட்டுகிறீர்கள். அவர்களை மேற்படிப்பு படிக்கவிடாமல் திராவிட உதிரிகளாக மாற்ற நினைக்கிறீர்கள்! அவர்கள் எதிர்காலத்தைக் குலைத்து, தமிழகத்துக்கே துரோகம் செய்கிறீர்கள்!

என்ன பச்சை அயோக்கியத்தனம், மன்னிக்கவும், திராவிடத்தனம் இது!

இதெல்லாம் பேடித் திராவிடத்தில், அதன் ‘எம்மை வஞ்சித்து விட்டார்களே’ குஞ்சித்துவிட்டார்களே கதையாடல்களில் சகஜம் என்றாலும் இது, திராவிடத்தனமாகவே பார்த்தாலுமேகூட, ஒரு அசிங்கம்.

ஆம்! நீங்கள்தாம் அடுத்த முதலையமைச்சர் ஆகிவேறு நம் தமிழகத்தை உய் உய் என்று உய்விக்கப் போகிறீர்களாமே?

உங்களுக்கு அடியேனின் அமோகமான வாழ்த்துகள்.

-0-0-0-0-0-

சரி. வரும் மே ஆறாம்தேதியன்று இந்தப் பரீட்சை நடக்கவிருக்கிறது.

எனக்குத் தெரிந்து மூன்று குழந்தைகள், இந்த நீட் தேர்வில் பங்குபெற தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இங்கு தங்க, கொள்ள கொஞ்சம் உதவி தேவை. (ஏனெனில் உங்களைப் போன்றவர்களின் கைங்கரியங்களினால் ஏற்கனவே அவர்கள் மன நிலையும் தன்னம்பிக்கையும் அமோகமாகச் சிதைக்கப்பட்டு விட்டன, பாவம் அந்தப் பிள்ளைகள்!)

…நான் நேரடியாகவோ அல்லது அறிமுகங்களின் மூலமாகவோ இதனை ஏற்பாடு செய்து தரப் போகிறேன் (இந்த எண்ணிக்கைக்கு மேல் என்னால் முடியாது). அவர்களை இரண்டுமூன்று  நாட்கள் முன்னதாகவே இங்கு வரச் சொல்லியிருக்கிறேன்.

…ஏனெனில் உங்களைப் போன்ற சமுதாயப் பணிகளிலும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளிலும் ஈடுபடுபவர்கள், போராளிக்கூவான்கள் என என்னால் செல்லமாக அழைக்கப் படுபவர்கள் – திடீரென்று கல்லெறிந்து மாநில எல்லைகளில் பதட்ட நிலைகளை உருவாக்கி போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தாலும் வைப்பீர்கள்.

​ஏனெனில் எந்தக் குழப்பக் குட்டையை ஊறிக்கொண்டிருக்கும் திராவிட மட்டையாகக் குழப்பலாம், எம்மாதிரி கவைக்குதவாத போராளித்தனங்களில் ஈடுபட்டு தமிழர்களைக் காவு கொடுத்து அந்தப் பிணங்கள் எரியும் தீயில் ஆனந்தமாகக் குளிர் காயலாம் ​என்பவற்றையெல்லாம் நீங்கள் அமோகமாக அறிவீர்கள் – ஆகவே எம் தமிழர்களும், பிற இந்தியர்களும்தான் உங்களைப் போன்ற பல்லிளிக்கும், கண்ணீர்விடும் முதலைகளிருந்து ஜாக்கிரதையாக இருக்கப் பயிற்சி பெறவேண்டும்.

ஆம் – ஏனெனில் – பச்சோந்திகளை, பேடி உலுத்தர்களை – அவர்களின் உதிரி வழிமுறைகளைப் பலப்பல ஆண்டுகளாக ஆழ்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் நான், நன்றாகவே அறிவேன்.

நன்றி.

பின்குறிப்பு: அயோக்கிய திராவிடத்தையும் மீறி தமிழகம் ஜொலிக்கப் போகும் நாள் வரத்தான் போகிறது. உங்களைப் போன்றவர்களின் அற்பக் கூத்துகள், நம் மக்களால்  துப்புரவாக நிராகரிக்கப் படும் நாள் வெகு தூரத்தில் இல்லை. ஏனெனில் – இந்த மேலதிக நீட் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் அதைத்தானே சுட்டுகிறது?

17 Responses to “அட அரெகொறயே! இசுடாலிரே! ‘நீட்’ தேர்வுடன் இனமான மறப்போர் புரிந்து வெற்றுகொண்டாயே!”

 1. sambukan Says:

  //எனக்குத் தெரிந்து மூன்று குழந்தைகள், இந்த நீட் தேர்வில் பங்குபெற தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இங்கு தங்க, கொள்ள கொஞ்சம் உதவி தேவை.

  பாப்பாரப் பசங்களுக்கு இப்படி உதவி செய்யறத பெரிசா நினெச்சுக்கரியே ராமசாமி, அங்கதாண்ட உன்னோட பூணல் தெரியுது.


  • அய்யா, அது அப்படியில்லை. அப்படியே இருந்திருந்தாலும் அதுவும் தவறில்லை. சரியா?

   நீங்கள் ஏதாவது டொழில்முறை டோழ வினவு கும்பலாளரோ?

   • Ramesh Narayanan, Nanganallur Says:

    This shows truth is always bitter and fellows like him start personal attack whenever they have no counter, simbly, நீங்கள் சொல்வது போல் தீரா விடலைகள்

   • sambukan Says:

    உன்மையை சொன்னால் பொத்துக்கொண்டு வருகிறதா? பார்ப்பனர் உதவி பார்ப்பனருக்கு மட்டும்தான். இனுமா தமிழன் உங்களை நம்புகிறான்?


   • அய்யா சம்புகன்,

    நீங்கள் இப்படித் தொடர்ந்து தொந்திரவு கொடுப்பதால், அந்தப் பிள்ளைகளைப் பற்றி மேலதிகத் தகவல் கொடுக்கவேண்டியிருக்கிறது.

    அந்த மூவரில் இருவர் ‘தலித்’ அல்லது ஹரிஜன/பட்டியல்குழு ஆண்குழந்தைகள். மூன்றாவது ஒரு வன்னியப் பெண்பிள்ளை. அனைவரும் என் முற்கால மாணவர்கள்.

    போதுமா? நீங்கள் மேலதிகமாக ஆதார் எண் விவரங்களையும் கேட்பீர்கள் – ஏனெனில் கல்லடிப்பது லேசு. அடித்துவிட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

    இந்த எழவையெல்லாம் தன்னிலை விளக்கமாக எழுத நான் கொடும் பாவம் செய்திருக்கிறேன். ஏனெனில் திராவிடர்களுடன் வாக்குவாதம் செய்ய முனைந்துகொண்டிருக்கிறேன்.

    இன்னொன்று – பார்ப்பனக் குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது உங்களைப் போன்ற போக்கற்ற உதிரி எச்சங்களான வினவுக்காரர்களின் குழந்தையாலும் சரி – என்னால் முடிந்தவரை உதவி செய்வேன். அவ்வளவுதான்.

    எப்படியும் எதுவும் பெரிய விஷயமில்லை.

    தொடர்ந்து கல் வீசவும். நன்றி.

   • Vignaani Says:

    உங்கள் தன்னிலை விளக்கம் கண்ட பின் சம்புகன் குறைந்த பட்சம் தன் பின்னூட்டத்துக்கு வருத்தம் தெரிவித்தாரா , பின்னூட்டம் ஏதாவது மட்டுறுத்தப்பட்டதா என்று அறிய ஆவல்.


   • அய்யா, இல்லை.

 2. A.Seshagiri Says:

  எந்தவொரு நல்ல காரியத்திலும் ஈடுபட வக்கில்லாவிட்டாலும் இந்தமாதிரி நொள்ளை சொல்வதற்கென்றே சில திராவிட தறுதலைகள் துள்ளிக்குதித்துக்கொண்டு வந்துவிடுவார்கள்

 3. Anonymous Says:

  “உடனடியாக,வெளிமாநில தேர்வு மையங்களுக்கு தமிழக மாணவர்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்திடவேண்டும்”ஐயா எனக்கு தெரிந்தவரையில் கன்யாகுமரி மாணவர்களுக்கு சென்னையை காட்டிலும் திருவனந்தபுரமே தூரம் குறைவு


  • இந்த சட்டாம்பிள்ளை நீதிமன்றங்கள் வரவர, தேவையேயில்லாத போராளித்தனத்தில் ஈடுபடுகின்றன என்பது சோகம்தான். ஒரே அலுப்பாக இருக்கிறது.


 4. […] சம்பூகன் என்றொரு வினவுதர விடலை ஒன்றும் […]

 5. S bmniac Says:

  In the last half a century TN has produced unscrupulous leaders who are half educated and would continue to dumb-down the people so that they remain in the delusion created by the chauvinistic “Dravidian” mythology. The refusal to accept even reasonable standards in education is part of this. Any one who disagrees is either a Brahmin or his agent. As there is no reasoning what is left is abuse! Sambukan after hurling unfounded accusations has conveniently disappeared!

 6. elango Says:

  sir iaccept yor views but why rajasthan centre?please clarify


  • I do not have the numbers of such TN cases for Rajasthan, but that would be insignificant, I think. I always believe that Dravidians exaggerate everything and thudichchufy for Inamaanam based on some imagined slights to their egos.

   This is because, each and EVERY time I dug up the background and references – I figured out that, all the earlier slights (to Dravidian pride) and conspiracy theories were indeed figments of pure/fertile imagination and rumour/propaganda.

   I do NOT have reason to believe that this NEET matter is any different.

   …Also, there were venues/acco available there in exam centres – and the allocations were actually done by a computer program.

   Now, it is possible that some Aryan programmer along with fellow Illuminati did that crafty programming logic because of which TN is being vanjikkafied now.

   Thanks and happy to be of service.
   __r.

 7. Bharath Says:

  https://timesofindia.indiatimes.com/city/jaipur/tn-boy-travels-3100-km-to-appear-for-neet/articleshow/64035642.cms

  மேலே உள்ள செய்தி உண்மையாக இருப்பின், CBSE கண்டிப்பாக பொறுப்பேற்க வேண்டும் இல்லையா? நான் “தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் பார்ப்பன இந்தியாவே” என்று கதறும் ட்ராவிடர்களுள் ஒருவன் அல்ல. ஒரு நுழைவுத் தேர்விற்காக மாணவர்களை இவ்வளவு அலைக்கழித்தல் கூடாது என நிச்சயமாக எண்ணுகிறேன். இது கணிணி நிரலினால் ஏற்பட்ட குழப்பம் போல தெரிகிறது. இதற்கு CBSE ஒரு appealing mechanism வைத்திருந்திருக்க வேண்டும்.


  • அய்யா பரத் (அல்லது பாரத்),

   இது கணிநி நிரல் விஷயம். சதித்திட்ட விளைவு இல்லை, ஸிபிஎஸ்இ அமைப்புக்கு இதனால் என்ன லாபம், சொல்லுங்கள்?

   மேலும் – தமிழகத்தில் அதிகப்படி தேர்வுமையங்களை முன்னமே அமைக்க முயன்றாலும், திராவிடர்கள் அதற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் (=போராளித்தனம்) முட்டுக்கட்டை போட்டனர்.

   செய்யாதே செய்யாதே என ஆர்ப்பரித்தால், மிரட்டினால் எப்படியும் எவன் தான் எதையுமே செய்வான், சொல்லுங்கள்?

   ஸன் டீவி விவகாரத்தில் அழகிரிகள் கொன்றது போல ஏதாவது பெட்ரோல் குண்டை திராவிடர்கள் தேர்வுமையத்தில் வீசினால் என்னவாகும்?

   (ஒரு விஷயம்: இப்படியெல்லாம் அதிகப்படியாக எண்ணிக்கைக்காகத் திட்டமிடுவது மற்ற மாநிலங்களில் எல்லாம் நடந்திருக்கிறது – அவற்றில் ஒரு பிரச்சினையும் இல்லை; மேலும், தமிழகத்திலிருந்து அளவுக்கதிகமான அதிகப்படி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன!)

   …அதாவது அவர்கள் போராளிக்கூவான் தனத்தால் – மிகக்குறைவாகவேதான் தமிழ்க் குழந்தை விண்ணப்பதாரர்கள் இருப்பார்கள் என, நம் திராவிடர்கள் நம்பி விட்டனர். ஆனால் திகைக்கவைக்கும் வகையில் – சாதா தமிழர்கள், திராவிடர்கள் உளறல்வாதத்தைப் புறக்கணித்தனர்.

   ஆனால் திராவிடர்கள் – அதற்கும் ஒரு புரட்சிகரமான போராளித்தன வாய்ப்பை உருவாக்கிக்கொண்டனர். ‘ராஜஸ்தானுக்கு அனுப்பி தமிழகத்தை வஞ்சிக்காதே’

   அதிகப்படி தேர்வுமையங்களை உருவாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. துட்டு கொடுத்து ஓட்டு வாங்குவது போன்ற சுளுவான வர்த்தகத் திராவிடத்தனமல்ல.

   மேலும் அமைப்பு திட்டவட்டமாக – மாற்றங்களுக்கு வாய்ப்பே இல்லை என 18ஆம் தேதி தெளிவுபடுத்தி விட்டது.

   அப்பீலுக்கு இடமில்லை என்று சொல்லிவிட்டது.

   திராவிடப் பொறுக்கிகள் பிள்ளைகளையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுகின்றனர்.

   நாமும் கொதிக்கிறோம். ஏனெனில் அறச்சீற்றம் என்பது தமிழகத்தில் ஒரு ஃபேஷன். இலக்கியக்காரன்களில் இருந்து பிற தொழில்முறை அயோக்கியர்கள் வரை இது செல்லுபடியாகிறது.

   கேளிக்கை.

   நன்றி.

 8. elango Says:

  sir
  I agree in toto that because of dravida kumbal politics aii are suffering in tamilnadu
  however i pity the children gone to Jaipur
  i hope next year cbse will setle the issue
  thanks for your reply


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s