#எஸ்ரா: ‘என் அதிஅற்புத காவேரிப் போராளித்தன உளறல்கள்’
April 11, 2018
என்னருமை இலக்கியச் செம்மல் #எஸ்ரா – உண்மையில் ஒரு மாயாவி!
— தமிழக் கலாச்சாரத்தின் தற்காலத் தற்குறி முன்னோடிகளில் பிரதானமானவர், ஏன், தமிழகத்தின் மனச்சாட்சிகளில் ஒருவராகவே கருதப்படுபவர் என் செல்ல #எஸ்ரா என்றால், அது மிகையேயாகாது.
என்னுடைய செல்ல #எஸ்ரா, எந்தவிதத்திலும் குறிப்பிடத்தக்க தகுதி பெற்றவரல்லர் என்றாலும் எப்படியோ புகுந்து புறப்பட்டு எத்தையாவது சொல்லி / எழுதி / பேசி இவையெல்லாம் முடியாவிட்டால் கண்டனம் அஞ்சலி அணுசக்தி எதிர்ப்பு என எந்த எழவையாவது போராளித்தனமாகவும் செய்து ஒட்டமாக ஓடி, அகடவிகட ஆனந்தவிகடனில் எல்லாம் தொடரெழுத்து எழுதும் பேறு பெற்று, மனுஷ்யபுத்திரனால் ஏமாற்றப்பட்டு, இப்போது தன்கையே தனக்குதவி என்று தம்புத்தகங்களைத் தாமே பதிப்பித்துக்கொண்டு, முடிந்தபோதெல்லாம் காம்ரேடுகளுடன் அலைந்து ரஷ்ய கலாச்சார மையத்தில் ‘புத்தம் புதிய காப்பி’ புத்தக ரீலிஸ் செய்துகொண்டு,
தேசதேசமாய் தேசாந்திரியாகத் திரிந்து செய்திகளைத் திரித்து விக்கிபீடியாவை ஒற்றியெடுத்து நைல் நதியைத் திருப்பி காங்கோ நாட்டு வழியாக ஓட்டி, வைகோ போன்றவர்களிடமிருந்து பரிசில் வாங்கிக்கொண்டு அமோகமாக அறிவுஜீவிய முன்னணியில் இருப்பவர்.
இம்மாதிரி அதி அற்புத அனுபூதியளிக்கும் அஞ்சலி அறச்சீற்றம் அறிவுரை கண்டனம் போன்ற முக்கியமான விஷயங்களில் அதீத ஈடுபாடானது – ஏறக்குறைய அனைத்துத் தொளில்முறை எலக்கியக்காரர்களிடமும் நகைக்கத்தக்க அளவில் இருந்தாலும் – பெரும்பாலோரிடம் மீட்சி தரும் ஒருசில விஷயங்களாவது இருக்கின்றன.
ஆனால் என் செல்ல #எஸ்ரா-விடம், மசுத்துக்கும்கூட சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு எழவும் இல்லை. ஏன் மசுறுகூட இல்லை என்பதும் வெள்ளிடை மலைப்பு.
இருந்தாலும் – அவர் மகாமகோ இலக்கியச் செம்மல். வைகோவால்சாமியே அவார்ட் (அந்தக் குளுவான்கள் சொன்னது போல!) கொடுத்துட்டார்! வஸிஷ்டர் வாயால் ப்ரம்மஹத்தி! ஆஹா!!
எது எப்படியோ, மேற்கண்டபடி இந்த #எஸ்ரா அவர்களைப் பார்க்கும் எனக்கு – இந்த ஆள், பில்லிசூனியப் பராக்கிரமம் மிக்கவர் என்பதில் ஐயமேயில்லை.
ஆகவே அவர் ஒரு மாயாவி! தட்டச்சுக்கை மாயாவி! அதாவது – அவர் வெறும் நெகிழ்வாலஜி விற்பன்னரும் அதன் மொத்த விற்பனையாளரும் மட்டும் அல்லர். தமிழர்களின் நாடித் துடிப்பு மட்டுமில்லாமல் பேடித்துடிப்பும் கூட. நன்றி.
இந்த மாயாவித் தனத்தை மூலதனமாகக் கொண்டு உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல் போராளித்தனம் மிக்க பராக்கிரமங்களை அவிழ்த்து விடுகிறார். என் புல்லரிப்புக்கு அளவேயில்லை!
…ஏனய்யா என் செல்ல அரைகுறை #எஸ்ரா, மத்திய அரசில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, யார் என்ன செய்யவேண்டும், ஒருங்கிணைப்புக்காக என்ன முஸ்தீபுகள் செய்யவேண்டும் என விரியும் பலபல விஷயங்களில் ஒரு 0.000001% அளவுக்காகவது அறிந்திருக்கிறீர்களா?
பெருஸ்ஸா கண்டனம் குண்டனம் என உங்கள் போராளித்தனத்தை ஒப்பேற்றி இருக்கிறீர்கள்! கண்டித்தல் என உப்புமா கிண்டித்திருக்கிறீர்கள்! தேவையா?
உங்கள் ‘கண்டிக்கிறேன்’ கண்டனம், உங்களை நடிகர் இசுடாலிர் வகை உதிரிகள் அளவு அதலபாதாளத்தில் இறக்கிவிடுவதை நீங்கள் அறிவீரா?
-0-0-0-0-0-0-
பொதுவாக, வாசகர்களாகிய நாம் என்ன நினைக்கிறோம் என்றால் – இந்த எலக்கியக்காரர்கள்…
…ஆகவே மதிக்கப்படவேண்டியவர்கள். ;-)
ஆனால் அய்யன்மீர் – இவர்களில் சுமார் 90% அப்படியில்லை (சும்மா 10% இடஒதுக்கீடு செய்திருக்கிறேன், கவலை வேண்டேல்! அனைவரும் ஒரே ஜாதிதான், சொட்டையில் ஊறிய கொட்டைகள்தாம்!வீரியம் மட்டும்தான் மாறுபடும்!).
அவர்கள் அதிமனிதர்களல்லர், சாதாரணர்கள்தாம்.
நாம்தான் போக்கத்துப்போய் இவர்களின்கீழ் அணி திரண்டு, பிற அணிகளுடன் சண்டை போட்டு நம் வீரத்தை நிலை நாட்டிக்கொள்கிறோம்…
ஹ்ம்ம்ம், சொல்லப்போனால் அவர்களில் பெரும்பாலோர், நடிப்புச் சுதேசிகளானதால், மனமறிந்து மறுபடியும், மறுபடியும் – தங்களைத் திருத்தியேகொள்ளாமல், பொய் சொல்பவர்களாதலால் – தடாலடியாக அட்ச்சுவுடுபவர்களாதலால் – அவர்கள் வெறும் கீழோர் மட்டுமே.
-0-0-0-0-0-
#எஸ்ரா கண்டனத்துக்குக் கண்டனம் முற்றிற்று. எனக்கும்.
நன்றி.
April 11, 2018 at 08:49
இனிய ஜெயமும் தன் ஆதரவைத் தெரிவித்து விட்டார். To paraphrase him – நாம்
தண்ணீரை எவ்வளவு அவமதித்தாலும், மொண்ணைத்தனமான நீர் மேலாண்மை செய்தாலும், அதை
எல்லாம் மறந்துவிட்டு “போர் போர்” என்று கூவ வேண்டும். போரில் நாம் வெற்றி
பெற்றாலும், அதிக தண்ணீர் கிடைத்தாலும், அதையும் வீணாக்கும் உரிமை நமக்கு
உண்டு.
2018-04-11 7:03 GMT+05:30 ஒத்திசைவு… :
> வெ. ராமசாமி posted: “என்னருமை இலக்கியச் செம்மல் #எஸ்ரா – உண்மையில் ஒரு
> மாயாவி! 0) எழில் கொஞ்சும் அடிப்படை உளறல்களாலும் 1) மானாவாரியாகத் தட்டச்சு
> செய்யும் பாங்கினாலும் 2) தமிழ் உரைநடைக்கும் இலக்கணத்துக்கும் துளிக்கூட
> மதிப்பு கொடுக்கமுடியாத புரட்சிகர வீரியத் தன்மையினாலும் 3”
>
April 11, 2018 at 20:39
:-(
Was half-expecting something like this. But he has written some good short stories.
April 12, 2018 at 08:04
That doesn’t absolve of his occasional hypocrisies on matter such as SC’s judgement on altrering some provisios of SC/ST, I feel, though am a great fan of his writings. Idiosyncrasies are bound to be present, which we ignore.
April 12, 2018 at 09:27
Sir, I dont know anything about this. But I agree with your general drift.
There are no clearcut black/white things in the universe.
__r.
April 12, 2018 at 15:26
நான் பல சமயங்களில் உணர்ச்சிவசப்படுபவன். சமநிலை உள்ளவன் அல்ல என்று ஜெ ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார். அந்த நேர்மை மற்ற பலரிடம் கிடையாது
April 12, 2018 at 09:25
[…] இணைந்து கொண்டிருப்பது, நான் ஓரளவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் விசனம் கொடுப்பது. […]
April 14, 2018 at 10:51
[…] […]
April 23, 2018 at 13:39
மனுஷ்யபுத்திரன் எஸ்ராவை ஏமாற்றிய கதை என்ன?
April 23, 2018 at 17:42
அவர்களிடம் கேட்கவும். நன்றி.