காவிரிப் பிரச்சினை: தீராவிட அரசியல்வாதிகள் + முட்டாள்/அயோக்கியப் போராளிகள் = பேடிகள்
April 10, 2018
ஆமென்.
ஆனால் – சிலபல உண்மைகளைச் சொல்லியே ஆகவேண்டும்.
இந்த ‘தமிழகம் வஞ்சிக்கப் படுகிறது,’ ‘மத்திய அரசு தமிழகத்தைக் குறிவைக்கிறது,’ ‘பாஜக குள்ள நரித்தனம்’ – வகையறா தொடர் பொய்மைப் பிரச்சாரங்கள் ஆச்சரியகரமானவை.
ஏனெனில் – தமிழகம் வஞ்சிக்கப்படுவதன் அடிப்படைக் காரணம், இந்தத் திராவிடர்கள் தமிழகத்தைக் குஞ்சிப்பதுதான். அதாவது அவர்களுடைய தொடர்கொள்ளைகளால், கலாச்சாரச் சீரழிவுகளால் தமிழணங்கையும் தமிழகத்தையும் அவர்களுடைய அருவருக்கத்தக்க தடித்தனமிக்க ஆண்குறிகளால் கதறக்கதறக் கற்பழிப்பதுதான்.
-0-0-0-0-
ஆனால் அயோக்கியத் திராவிடர்களும், கூறுகெட்ட போராட்டக் கூவான்களும் ஸ்டூடெண்ட் ப்ரொட்டெஸ்ட் அரைகுறைக் குளுவான்களும் நிரம்பித் ததும்பி வழியும் தமிழகத்தில் இதெல்லாம் சகஜமப்பா – என்று மேல்துண்டை உதறிப்போட்டுக்கொண்டு போவதே நமக்கெல்லாம் வழக்கம்.
இருந்தாலும் – நம் திராவிடர்கள் அயோக்கியப் பேடிகள். இவர்களை இனம்கண்டுகொண்டு துப்புரவாக அகற்றவேண்டியது – அல்லது குறைந்த பட்சம், விஷயங்களை – சோக வரலாறுகளை முடிந்தவரை நம் மக்களிடம் கொண்டு செல்லவேண்டியது முக்கியம்.
குறிப்பாக – படிப்பறிவற்ற சினிமா மோகிகளான நம் விசிலடிச்சான் குஞ்சப்ப இளைஞர்களிடம் சிலபல பின்புல விஷயங்கள் போய்ச்சேர வேண்டும்.
ஆகவே.
-0-0-0-0-
சில உண்மைகள்:
1. கருணாநிதி, 1968வாக்கில் அவர் ‘பொதுப்பணித்துறை’ அமைச்சராக இருந்து ‘பணி’யாற்றிய காலத்தில் (இம்மாதிரி அமோகப் பணிகளால்தான் பிற்காலத்தில் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு, கருணாநிதிகளின் நிதியாதாரங்களின் அற்புத வளர்ச்சி கொண்டாடப்பட்டது!) – ‘நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், எங்களுக்குப் பிரச்சினையில்லை’ என்கிற ரீதியில் நடந்துகொண்டார்.
அதாவது – முந்தைய ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு அப்பாற்பட்டு மேலதிக அணை ஒன்றை ஹேமாவதி ஆற்றுக்குக் குறுக்கே கர்நாடகம் கட்டியபோது – கருணாநிதி மற்றபிற நிதியாதார முன்னேற்றங்களில் ஈடுபட்டு மும்முரமாக இருந்ததால், பாவம் – ஆகவே இந்த அணைகட்டலைக் கண்டுகொள்ளாமல் (இது அவர்கள் பார்வைக்கு வந்தபின்னரும்!) இருந்ததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றது. (கர்நாடகத்தின் அப்போதைய நேர்மையான தேவையாக இந்த அணை இருந்தது என்பது வேறு விஷயம்) – ஆக, இப்படி அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசாமல், திருட்டுகளில் மும்முரமாக இருந்துவிட்டு பின்பு ‘வஞ்சிக்கிறார்கள்’ என்றால் என்ன நியாயம்?
2. அணை கட்ட ஆரம்பித்தவுடனோ அல்லது அதன் உயரம் அதிகமாகிக் கொண்டிருந்தபோதோ – கருணாநிதி அரசு ஒன்றும் செய்யவில்லை. ஏனெனில் பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஊழல் போன்றவற்றில் திமுக அரசு படுபிஸியாக இருந்தது. வேகமய்யா வேகம், அள்ளுங்கய்யா அள்ளுங்க!
இந்தப் பதிவைப் படிக்கும் 50+ வயதானவர்களுக்கு இந்த வீராணம் திட்டத்திற்காக வாங்கப்பட்ட தரமில்லா ராட்சஸக் குழாய்கள் இப்போதிருக்கும் தரமணி, சிறுசேரி, திருமழிசை, அடையார் OMR பகுதிகளில் பலப்பல இடங்களில் ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை நினைவுகூற முடியும். இப்போதைய தென்னாற்காடு, வட ஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் இவை இன்னமும் சிதிலமாக இருக்கின்றன. இதுவும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்: பின்னர் இவற்றில், திராவிடர்களால் கொள்ளையடிக்கப்பட்ட பாமரக் குடும்பங்கள், ஆயிரக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருந்ததையும்!
3. 1972-3 வாக்கில் (வருடம் சரியாக நினைவிலில்லை) கர்நாடகா தன் பாசனப் பரப்பை முதலில் இருந்த வெறும் 1 லட்சம் ஏக்கரா விஸ்தீரணத்திலிருந்து ஏழு லட்சத்துக்கு, ஒப்பந்தத்துக்கு மாறாக ஏற்றி
விட்டிருந்தது (600% ஏற்றம்!).
நம் கருணாநிதி இதைப் பற்றித் தொடர்ந்து கண்டுகொள்ளவேயில்லை – அவர் வழமையே போல கமுக்கமாக மேஜைக்கடியில் இதற்கும் ஏதாவது துட்டு வாங்கிக்கொண்டிருந்திருக்கலாம்.
பின்னர் ஒரு சட்டசபை விவாதத்தில் சொல்கிறார் – ‘எப்படியும் 1974ஆம் ஆண்டில் காலாவதியாகப்போகும் உடன்படிக்கைதானே’ – ஆக, எதற்கு அலட்டிக் கொள்ளவேண்டும்? ஒரு பொறுப்புள்ள, தமிழ்நாட்டின் தலைமைப் பதவியில் உள்ள ஒருவர் பேசும் பேச்சா இது? உண்ட தமிழகத்துக்கு இரண்டகம்/துரோகம் இழைத்த/இழைக்கும் பதர்கள்.
விலாவாரியாகச் சொல்லவேண்டுமானால் – தமிழக வேளாண்மைக்குக் காவிரி நீர் முக்கியம், அது குறித்து கரிசனப் படவேண்டும், இடர்கள் வருமுன் காக்கவேண்டும் என்ற ஒரு எழவு முனைப்பும் இல்லை. வெறும் மெத்தனம். ஆக்கபூர்வமான வேலைகளில் அடிப்படைச் சோம்பேறித்தனம். ஆனால் ஊழல்களில் படு மும்முரம். இன்னொருவிஷயம் – பாவம், இந்த சமயத்தில் அவருக்கு எம்ஜிஆர் புரட்சியை எதிர்கொள்ளவேண்டிய நிர்பந்தம் இருந்தது ஆகவே அவர் நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்வதில் படுபிஸி என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்.
4. கர்நாடகத்தில் காவேரியில் வந்து சேரும் நீரின் அளவையும், அதன் நான்கு பெரிய அணைக்கட்டுகளின் நீர் பிடிமான அளவு, இருக்கும் அளவு, சேரும் அளவு, ஆவியாதல் நஷ்டங்கள், விடுவிக்கப்பட்ட நீரின் விவரங்கள் இவற்றைத் துல்லியமாகவும் ஒவ்வொரு நாளும் சேகரம் செய்ய (+அணைக்கட்டு நீர், புரிந்துணர்வுகளின் ஷரத்துகள் படி திறந்துவிடப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க) தமிழகப் பொதுப்பணித்துறை நான்கு அலுவகங்களை (அந்தந்த அணைக்கட்டுப் பிராந்தியங்களில்) காத்திரமாக வைத்திருந்தது – இது ஆரம்பித்தது எம்ஜிஆர் காலத்தில். சுமார் 15 எஞ்சினீயர்கள் + பலப்பல வாகனங்கள் + ரோந்து சுற்ற, கணிக்கை செய்ய குமாஸ்தாக்கள் + அலுமினியப் படகுகள் + கருவிகள் என விரிந்த அந்தக் குழுக்களில் சுமார் 40 பேர் இருந்தனர்.
கருணாநிதிகளின் ஆட்சிகளின்போது (மட்டுமே) இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்பட்டு (இந்தக் கண்காணிப்பு வேலை ஒரு தண்டனை/punishment போஸ்டிங் ஆகக் கருதப்பட்டு) இப்போது வெறும் மூன்று பேருடன் மைஸூர் நகரத்தில் இயங்குகிறது. கர்நாடக அரசு தமிழகத்துக்குக் கொடுத்த (க்ருஷ்ணராஜ்ஸாகர்) அணைக்கட்டு அலுவலகத்தை நிர்வகிக்க நாதியில்லாமல் நகரத்தில் ஒரு ஒண்டுவாடகை வீட்டில் அலுவலகம்! முனைப்பான எஞ்சினீயர்கள் முடக்கம். தூரத்தில் உட்கார்ந்து டெலஸ்கோப் வழியாகவா இவர்கள் கண்காணிக்க முடியும்?
சரி. இவர்களால் எந்த ஒரு விவரத்தையும் காத்திரமாகச் சேகரம் செய்யமுடியாது. ஆக, இந்த முக்கியமான புள்ளிவிவரங்களுக்காக, தமிழகம் ஸிடபிள்யுஸி (மத்திய நீர் ஆணையம்) அமைப்பை நம்பி இருக்கிறது. அந்த ஆணையத்துக்குப் புள்ளி விவரங்களைக் கொடுப்பது கர்நாடக பொதுப்பணித்துறை.
ஆக – கர்நாடகா தான் மேற்கொள்ளவேண்டிய விதிமுறைகளை மீறினால் தெரியாது. இவை தொடர்பாக கமுக்கமாக இருக்க, நம் திராவிடர்கள் நிதி பெறுகிறார்களோ என்னவோ…
5. இம்மாதிரி – மத்திய அரசு அனுமதித்த வழிமுறைகளைப் பின்பற்றாமல் உதாசீனம் செய்து, கேவலச் சோம்பேறிகளாக இருந்து, ஊழல் பணத்தைப் பெருக்கிக்கொண்டு பின்னர் குய்யோமுறையோ எனப் பிலாக்கணம் வைத்தால் – அதுதாண்டா பேடி திராவிடம்!
6. திராவிட அயோக்கியர்கள் மக்கள் வரிப்பணத்தை வைத்துக்கொண்டு செய்யமுடியாத (ஏனெனில் கொள்ளையில்தானே அவர்கள் குவியம்?) விஷயத்தை – ஒரு சாய்பாபா அவர்கள் அற்புதமாக நடத்திக் காட்டியதை நினைவுகூர்வோம்.
2002. சாய்பாபா அவர்கள் சென்னைக்குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க, ஒரு முன்னெடுப்பைச் செய்கிறார்கள். திராவிடர்கள் இதனைக் கண்டுகொள்ளவில்லை – அவர்கள் வழமையே போல ஊழலில் படுபிஸி.
க்ருஷ்ணா நதி நீரைக் கொணர கந்தலேறு-பூண்டி கால்வாய். 2002ல் ஆரம்பித்து 2003 இறுதியில் முடிக்கப்பட்டது. 200 கோடி ரூபாய் செலவு (அனைத்தும் அவர்/அமைப்பு திரட்டியது; ஆந்திர அரசாவது கொஞ்சம் உதவி, மேற்பார்வை, திட்டத்தை ஆதரிப்பது போன்றவற்றைச் செய்தது. தமிழக அரசோ, பெற்றுக் கொண்டதோடு சரி. பிச்சை பெற்றுக்கொண்ட கருணாநிதி, பொறுக்கித் தனமாக – அந்த பாவப்பட்ட சாய்பாபாவைக் கிண்டல் வேறு செய்தார்!)
இதில் ஒரு 1% அளவாவது நமது திராவிடப் பேடிகள் செய்யத் திராணி உண்டா? அறச் சீற்றம் உண்டா?
சரி சாய்பாபா ஓசியில் கொடுத்தார் – அந்தக் கால்வாயை பராமரிப்பாவது, அடிப்படை மராமத்துகளையாவது செய்கிறார்களா இந்தத் திராவிடப் பேடிகள் என்றால், ஒரு எழவையும் செய்வதில்லை. பலப்பல விரிசல்கள், ஆக்கிரமிப்புகள், நீரை வளைத்துப் போட்டுக்கொள்ளல்கள் நடந்த மணியம்.
ஆனால் – பேருக்குக்கூட ஒரு மசுத்தையும் பிடுங்காமல் – கொடி பிடித்துப் போராட வந்துவிடுகிறார்கள். அற்பப் பதர்கள்.
7. ஜெயலலிதா அவர்களைப் பற்றி எனக்கு ஆயிரம் படுமோசமான விமர்சனங்கள், ஆதங்கங்கள். அவர் ஒரு திராவிட ஊழல் பெருச்சாளிதான். ஆனால் அவர் காலத்தில்தான் வீராணத் திட்டம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் போராடியதால்தான், திமுகவின் எதிர்ப்பையும் மீறித்தான் – காவிரி நீர்ப் பங்கீட்டு விவகாரங்களில் இந்த அளவு முன்னேற்றங்களாவது ஏற்பட்டிருக்கின்றன. (ஆனால் — திமுக குப்பைகள் மறுபடியும், மறுபடியும் மத்திய அரசில் பச்சோந்தித்தனமாகப் பங்கு வகித்தபோதெல்லாம் – தமிழகத்தின் தேவைகளைக் கண்டுகொள்ளாமல், தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக்கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள் என்பதையும் – தமிழகத்தின் அடிப்படை நலன்களை தாரைவார்த்துக் கொடுத்து, அதே சமயத்தில் போராளிவுச்சாடனம் செய்தே காலட்சேபம் செய்தார்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.)
8 . இந்த காவேரி ஆணைய வியாஜ்ஜிய விவகாரத்தையே எடுத்துக்கொள்வோம். ‘மத்திய அரசே, இத்தைப் பிடுங்கு, அத்தைப் பிடுங்கு’ எனப் பேடித்தனமாகப் போராடும் உதிரிகள் (இசுடாலிர் உட்பட) மத்திய அரசில் என்ன நடந்துகொண்டிருக்கிறது, யார் என்ன செய்யவேண்டும், ஒருங்கிணைப்புக்காக என்ன முஸ்தீபுகள் செய்யவேண்டும் என விரியும் பலபல விஷயங்களில் ஒரு 0.01% அளவுக்காகவது அறிந்திருக்கிறார்களா?
- மத்திய அரசு கக்கத்தில் மிட்டாயை மறைத்துக்கொண்டு, அதனை அழும் தமிழ்த்திராவிட அற்பர்களுக்குக் கொடுக்கமாட்டேன் என்கிறதா?
- காவேரி ஆணையம் குறித்து என்னதான் சொல்லியிருக்கிறது – இந்த நீதிமன்றம்? அதைப் படித்தோமா?
- அதன் சாராம்சம் என்ன? அவற்றில் எவற்றையாவது மத்திய அரசு மறுக்கிறதா? மறைக்கிறதா? என்ன நடந்துகொண்டிருக்கிறது. (ஆனால் – இவற்றையெல்லாம் அறியாமல் பொத்தாம்பொதுவாகக் கூவுவதில் குப்பைத் தமிழனுக்கு இணையே இல்லை!)
- வெட்டிப் போராட்டத்தினாலும் கண்டனத்தினாலும் என்ன நன்மை?
- மாறாக – என்ன செய்யலாம் என யோசித்து தர்க்கரீதியாகவும் ஆவணபூர்வமாகவும் இந்த அரைகுறைப் போராளிகள், தங்கள் மேலான கருத்துகளை வைக்கலாமே?
- இந்த வாரியம் விரைவாகவும் காத்திரமாகவும் அமைய என்ன செய்யலாம்?
- கர்நாடகம் நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்லிக்கொண்டே அதனிடம் போவது தர்க்கரீதியாகக் கூடச் சரியா? அம்மக்கள், நாம் சொல்வதை ஏன் கேட்டுக்கொள்ளவேண்டும்?
- திமுக கருணா நிதி 1968-74களில், தமிழக நலன்களைத் தாரை வார்த்துக்கொடுத்த பின் இப்போது குய்யோமுறையோ என திராவிடர் சார்பாக நாம் ஓலமிடுவது எந்தவகையில் சரி?
- அரசமைப்பும் நீதிமன்றங்களும் அமைத்துக்கொடுத்த வசதிகளை நாம் எவ்வளவு உபயோகித்திருக்கிறோம்? உதாசீனம்தானே செய்திருக்கிறோம்? ஒரு வசதி-வாய்ப்பையும் உபயோகித்துக் கொள்ளாமல் பேடித்தனமாக ஊளையிட்டால் என்ன நன்மை?
- இந்த வழக்கு-வியாஜ்யத்தில் ஈடுபட்டிருக்கும் பிற மாநிலங்களில் நம் தரப்பு கருத்துகளையும் நியாயங்களையும் தெளிவு படுத்த என்ன செய்திருக்கிறோம், செய்யவேண்டும்?
- இந்த ஆணையம் அமைக்க – பிற மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் காத்திரமான உதவி செய்ய, ஏதாவது துளியாவது முயன்றிருக்கிறோமா? செயல்பாடுகளை துரிதப்படுத்த எந்த மசுத்தையாவது பிடுங்கியிருக்கிறோமா?
- தமிழக நடிகப் பேடிகளும் இந்தக் கோலாகலத்தில் கறுப்புச்சட்டை போட்டுக்கொண்டு போராட்டம் – இந்த அற்பக் கோமாளிகளின் அலப்பரைகளால் தமிழகத்துக்கு ஏதாவது சுக்களவு பயனாவது உண்டா? பொறுப்புணர்ச்சியற்ற பொறுக்கிகள்.
-0-0-0-0-
கூடி வாழ்வதில், பரஸ்பர நம்பிக்கையும் செயலூக்கமும் கொண்டு காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் திராவிடர்களுக்கு நம்பிக்கை இல்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவர்களுக்கு ஒரு ஆதாயமும் இல்லை.
ஏனெனில் இவர்களுக்கு இம்மாதிரி அணுகுமுறைகளால் பாக்கெட் ரொம்பாது.
ஆகவே – உசுப்பேற்றி, உணர்ச்சிவசப்படுத்தி நம் சக-முட்டாக்கூ தமிழர்களைத் திரண்டு போராடச் செய்கிறார்கள்.
இதில் சோகம் என்னவென்றால் – நம் போக்கற்ற அரைகுறை இளைஞர்களும் இப்பேடிகளுக்குக் கீழே உபபேடிகளாக இருப்பதில் ஆனந்தமடைகிறார்கள். ஏனெனில் – சுயமூளையை உபயோகிப்பதே திராவிடக் கல்வியறிவுக்கு எதிரானது.
இந்தத் திராவிடப் பொய்மைகளில் இருந்து, வடிகட்டிய பேடித்தனங்களிலிருந்து நம் தமிழகத்துக்கு விடுதலை எப்போது?
—
April 10, 2018 at 10:40
லிஸ்டில் தமிழ் தேசியவாதிகளையும் தமிழ் திரைப்பட இயக்குனர்களையும் விட்டு விட்டீர்கள்
April 10, 2018 at 10:48
சுட்டியமைக்கு நன்றி. பெரும் பொறுக்கிகளை பார்த்துப் பொருமிக் கொண்டிருக்கையில் சிறுபொறுக்கிகளை விட்டுவிட்டேன்.
மன்னிக்கவும்.
April 10, 2018 at 18:28
இதைத்தான் உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.
April 10, 2018 at 21:38
very good
April 10, 2018 at 22:13
The issue has been so much politicised and people on both sides have been made to become emotional, whatever solutions emerge it will still continue to simmer.
Some out of the box thinking can bring about a change in the delta. But it will not benefit the agitating parties.
April 10, 2018 at 23:00
அன்புள்ள ராம்,
உண்மையில் மத்திய அரசிடம் எந்த தவறும் உங்களுக்கு தெரியவில்லையா ? கடைசி நாள் அன்று scheme என்றால் என்ன என்று petition போடுகிறார்கள் – Supreme Court மீண்டும் ஒரு மாதம் time கொடுக்கிறது – இதில் எதிலுமே எந்த தவறும் உங்களுக்கு தெரியவில்லையா ??
April 11, 2018 at 05:25
இல்லை.
நீங்கள் பலப்பல பின்புல விஷயங்களை அறிந்துகொள்ளவேண்டும். வெறும் டீவி + தஹிந்து + சமூக(!)வலைத்தளங்களை நம்பினால் ஒத்துவராது.
மாறாக – தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது + மத்திய அரசு அமுக்குகிறது என்ற இரட்டைமாயையில் திளைக்க விரும்பினால் வாழ்த்துகள்.
நன்றி.
April 11, 2018 at 05:29
எடுத்துக்காட்டாக: http://164.100.94.70/intra-mowr/core/Circulars/2018/Pen.%20River_21-03-2018_3.pdf
April 10, 2018 at 23:03
1968வாக்கில் – வீராணம் திட்டத்திற்காக – 1972-3 வாக்கில் – எம்ஜிஆர் காலத்தில் – :( :(
சாய்பாபா சென்னைக்குடி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க!!!!
இவனை பற்றிதானே சொல்கிறீர்கள் ?
April 11, 2018 at 05:15
1. சரியாகப் படிந்து, பின்புலத்தைப் புரிந்துகொள்ளுங்கள். மேலும் சரியான விவரங்கள் வேண்டும் என்றால் ஆராய்ச்சி செய்யுங்கள்.
2. நான் அவரைப் பற்றித்தான் சொல்கிறேன்.
அவ்ர் தன் மனமுவந்து தம் நிதியாதாரங்களை (+வந்த நன்கொடைகளை) வைத்துச் செய்த விஷயங்களில் ஒரு .000001% அளவைக் கூட – இந்த திராவிடக் குஞ்சாமணிகள் (மக்கள் வரிப்பணத்தை வைத்துக்கூட) செய்யவில்லை.
சமனம் தேவை. நன்றி.
April 11, 2018 at 06:03
[…] என விரியும் பலபல விஷயங்களில் ஒரு 0.000001% அளவுக்காகவது […]
April 11, 2018 at 16:17
அன்பு அய்யா,
நல்ல பதிவு.நன்றி.
நான் காவிரி தொடர்பாக நான் படித்த செப்-16 தீர்ப்பு வந்த சமயத்தில் எழுதப்பட்ட ஒரு பதிவும் தங்கள் பார்வைக்கு. http://kiranasis.blogspot.qa/2016/09/background-it-is-second-week-of.html
கர்நாடகத்தின் அதிகாரப்பூர்வ அணை இருப்பு அளவுகள் மட்டுமே கொண்டு எழுதப்பட்ட பதிவு. மேலும் joint readings இல்லை, தமிழகப் பொதுப்பணித்துறையின் கர்நாடக அணைக்கட்டுகளின் இருப்பு அளவுகளும் இல்லாத பட்சத்தில் நமக்கு பேச ஒன்றுமில்லை. வருத்தமே எஞ்சுகிறது.
தாங்கள் அச்சமய ஊழல்கள் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.பூச்சி மருந்து திட்டம் பற்றி என் தந்தை கூறக் கேட்டதுண்டு .தென் தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் அவர் சொல்லித் தெரியும்.(நானெல்லாம் பொறக்கவே இல்லை சார்).சர்க்காரியா கமிஷனின் முதல் அறிக்கை மற்றும் இறுதி அறிக்கையின் (சில பகுதிகள்) இரண்டும் வாசிக்க கிடைக்கிறது இணையத்தில்.தங்கள் தளத்தில் கிடைப்பது இறுதி அறிக்கையின் 38 பக்க சுருக்கம்.
குற்றச்சாட்டு எண் 11 (b)-தான் பூச்சி மருந்து ஊழல்.(AERIAL SPRAYING) வானூர்தி மூலம் பூச்சி மருந்து தெளித்தலுக்கு (1970-71, 1971-72 ஆண்டுகளில் ) வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள்(!) சார்பாக முதல்வரும், திருச்சி மாவட்டசெயலாளராய் இருந்து விவசாய துறை மந்திரியாய் ஆன ஒருவரும் கமிஷன் (லஞ்சம்) பெற்ற புனைவும் தோற்கும் வகையில் திருப்பங்கள் நிறைந்த உண்மைக் கதை.கடந்த இரண்டு நாட்களாக படித்து தலைசுற்றி நிற்கிறேன்.விலாவாரியாக சர்க்காரியா கமிஷனின் முதல் அறிக்கையில் உள்ளது.(SCRIBD தளத்தில் உள்ளது வேண்டுவோர் படித்துக்கொள்ளலாம்).
1971 வாக்கில் ரூபாய் 5,30,019 கமிஷன் பணமாக கொடுக்கப்பட்டது.பத்து லட்சம் ஏக்கருக்கு மருந்தடிக்க திட்டமிடப்பட்டு சுமார் 6.6 லட்சம் ஏக்கர் மருந்தடிக்கப்பட்ட மொத்த செலவு வகையில்.(ஒரு ஏக்கர் 11 ரூபாய் வீதம்.இதில் ஏழு ரூபாய் மத்திய அரசு வழங்கிவிடும். 10 ரூபாய்க்குமேல் செலவழிக்க கூடாது என்ற வழிமுறையோடு :-(.
1970-71 ஆண்டு ஏக்கருக்கு 40 பைசா வாக இருந்த கமிஷன் தொகை அடுத்த ஆண்டே 1 ரூபாய் கேட்கப்பட்டு பேரத்தில்,பயமுறுத்தலில் 90 பைசாவாகிறது.விலையும் ஏக்கருக்கு 9 ரூபாயில் இருந்து 11 ரூபாய் ஆகிறது.
விசாரணையின் போது சாட்சி ஒருவர் (வானூர்தி ஒப்பந்தக்காரர்களில் ஒருவர்) ஈசாப் நீதிக்கதைகள் பற்றி சொல்லியதையும் நீதிபதி இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.(பக்கம் 168 சர்க்காரியா கமிஷன் முதல் அறிக்கை)
//Aesop’s fables were reenacted here over the last weekend. In the place of King Log the operators got King Stork like the frogs.//
தவளைகள்,மரத்தடி மற்றும் நாரை யார் யார்? என்று தெரிந்து கொள்ள அவசியம் பின்னூட்டமிடுவோர் படிக்க வேண்டியது சர்க்காரியா கமிஷனின் முதல் அறிக்கையை.
April 12, 2018 at 13:56
அப்போது சாய்பாபாவைக் கிண்டலடித்த இனமானத்தலைவரின் மறுபக்கத்தைக் கூறாமல் விட்டுவிட்டாயே உடன்பிறப்பே? அன்னார் கடைசியாக முதல்வராக இருந்தபோது அவர் வீட்டுக்கு பாபா வந்தபோது அவர்தம் மனைவி (அல்லது துணைவியோ) பாபாவின் அடிபணிந்ததையும் அவர் வரவழைத்துத் தந்த மோதிரத்தை (தலைவரோ மனைவியோ துணைவியோ நினைவில்லை) அணிந்ததையும் நாடறியுமே தம்பி! நாட்டுக்குத் தண்ணீர் தரும்போது கிண்டலடிக்கலாம், வீட்டுக்கு மோதிரம் தரும்போது அங்ஙனம் செய்திடலாகுமா என்று தெளிந்து அடலேறென எழுந்து ஆன்மீகப் பெரியார் பாதம் பணிந்து அதைப் பறித்து அங்கையில் அணிந்திட்டாலன்றோ அந்த ராசியால் மென்மேலும் (சற்றொப்ப ஐந்தாறு முறையேனும்) மீண்டும் மீண்டும் முதலையமைச்சராகிக் கொள்ளையடிக்கலாமே என்றெண்ணிய பகுத்தறிவு எழுச்சியை நீ அறிய மாட்டாயா கழகக்கண்மணி? பகுத்தறிவு நாட்டுக்கு, பச்சோந்தியறிவு வீட்டுக்கு என்ற திராவிடர் திறம் அறிய திராவிட உளறாற்றை நீ இன்னும் கரைத்துக்குடிக்க வேண்டும் உடன்பிறப்பே!
April 12, 2018 at 17:30
“பகுத்தறிவு நாட்டுக்கு, பச்சோந்தியறிவு வீட்டுக்கு” நன்றாகச் சொன்னீர்கள்! :-))
April 12, 2018 at 15:48
https://www.facebook.com/kishore.kswamy/posts/10211742033414698 ஒரு முப்பது நாற்பது வருஷம் முன்பிருந்த தலைமுறைத் தாய்மார்கள் அன்றே செய்திருந்தால் போராளிகளற்ற தூய்மையான தமிழகம் உருவாகியிருக்கும். இவர் போல 10 தாய்மார்கள் இருந்தால் வருங்காலம் போராளிகள் எண்ணிக்கை குறைந்து தமிழகம் உருப்பட வாய்ப்புள்ளது. இளையதாக முள்மரம் கொல்க
April 14, 2018 at 10:51
[…] காவிரிப் பிரச்சினை: தீராவிட அரசியல்வ… 10/04/2018 […]