இந்த நாட்டில் (இக்காலங்களில்) தொடர்ந்து நடக்கும் எவ்வளவோ நல்ல விஷயங்கள், பெரிதாகத் தம்பட்டம் அடிக்கப்படாமலேயேதான் இருக்கின்றன…
June 25, 2016
ஆகவே.
ஆனால் இன்னொன்று: ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் எதிர்மறையாக நடந்துவிட்டால் அல்லது அப்படிக் கருதப்பட்டுவிட்டால், ஒரேயடியாக அவற்றை ஊதிப்பெருக்கி அட்ச்சுவுடுவதுதான் குய்யோமுறையோ எனக் கூக்குரலிடுவதுதான், பெரும்பாலான ஊடகப்பேடிகளின் தலையாய கடமையாக இருக்கிறது.
உதாரணத்துக்கு ஒரு விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
மகாமகோ படிப்பாளி ஸ்ரீமான் கன்னையா குமார் (அண்மையகாலங்களில் ஜேஎன்யு எழவிலிருந்து மேலெழும்பியுள்ள போக்கத்த போராளி) அவர்களுடைய பேச்சும் பார்வையாளர்களுடைய கூத்தும் அற்பத்தனமாக இருந்த காரணத்தால் அவர்கள்மேல் தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டது.
…ராஜ்யபரிபாலனத்தை என்றால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், அரசு யந்திரம் இதைக்கூடச் செய்திருக்கவேண்டாம் என்பதுதான் என் எண்ணம்; ஏனெனில் அற்பர்களைப் பொதுவாக நிராகரித்துவிடுவதே புத்திசாலித்தனம், அதுவும் பப்பரப்பாக்கள் கோலோச்சும் இக்காலங்களில், பொறுப்பற்ற போராளித்தனம் எக்களிக்கும் தருணங்களில்… மேலும், உலக அனுபவமோ படிப்பறிவோ இல்லாத விடலை இளைஞர்கள், டீவி கேமராக்கள் முன்னோ அல்லது கையில் ஒரு மைக்கினைக் கொடுத்தாலோ கண்டமேனிக்கும் ஆவேஷமாக உளறிவிடுவார்கள், என்றாவது விட்டிருக்கலாம்; இளரத்தக் கொதிப்பு, ஆகவே அபத்தக் களஞ்சிய நிகழ்வு எனப் புறம்தள்ளியிருக்கலாம்!
… சரி – அந்த வழக்குக்கான ஆதாரமாக/ருசுவாக, தில்லி காவல்துறையினரால், டீவிசெய்தி அலைவரிசையொன்றின் எடிட் செய்யப்படாத விடியோக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இவை பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை, இவற்றை ஃபோரென்ஸிக் வகையறா சரிபார்த்தல் செய்யவேண்டும், அழுகுணியாட்டம் நடக்கிறது எனவெல்லாம் பெரிதாகக் கூக்குரல்களும் பிலாக்கணங்களும் எழும்பின. (இந்த நிகழ்ச்சிகளை உங்களுக்குப் பெருமையுடன் அளித்தது: ஊடகப் பேடிகளும் சமூகவலைத்தளப் போராளிக் கோமகன்களும் – அவர்கள் வழமைபோலவே அமைத்த பப்பரப்பா கொள்கைக் கூட்டணி!)
காவல்துறை மறுபடியும் மறுபடியும் சொல்லியது – தாங்கள் நீதிமன்றத்தில் கொடுத்தது வேறு, இணையதளங்களில்/தொலைக்காட்சிச் சேனல்களில் உலாவருவது வேறு என்று.
ஆனால் தில்லியின் துக்ளக் (=அர்விந்த் கெஜ்ரீவால்) அரசு, இணையதளங்களில் ஜாலியாக உலாவந்தவற்றையும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் பப்பரப்பாபரப்பப்பட்டவைகளையும் சேகரம் செய்து, மேஜிஸ்ட்ரேட் ஆய்வு என்றபெயரில் ஒரு குப்பையையும் செய்து – அவற்றை ஹைதராபாத்துக்கு அனுப்பி, அந்த அற்ப ஃபோர்ஜரிகளை ஜோடிக்கப்பட்டவை என முடிவுசெய்தது.
இது எப்படி இருக்கிறது என்னவென்றால் – கருணாநிதிகளை விலாவாரியாக விசாரணை செய்து அவர்கள் அயோக்கியர்கள் என்ற முடிவுக்கு வருவதுபோலத்தான்! இதற்கெல்லாம் விசாரணைதான் கேடு! கருணாநிதிகள் என்றாலே அயோக்கியர்கள் எனத்தானே பொருள் விரியும்?
…ஆனால் துக்ளக் தர்பாரின் ஒரே குறிக்கோள் – மத்திய அரசை எதிர்த்துப் போராளித்தனமாகப் போராடுவதுமட்டும்தான் என்பதைப் புரிந்துகொண்டால்…
ஹ்ம்ம்ம்… எது எப்படியோ – நம் ஊடகப்பேடிகளின் வழக்கம்போலவே – நம் மகாமகோ மஞ்சள்காமாலை ‘த ஹிந்து’ பத்திரிகையும் இப்படி ஒரு செய்தியை உடனுக்குடன், ஒரு எழவு பரிசீலனையும் செய்யாமல், துள்ளிக்குதித்துக் கொண்டு வெளியிட்டது. மோதி அரசு அயோக்கிய அரசு, ஹிந்துத்துவ அரசு, பொய்ச் சாட்சியங்களை வைத்துக்கொண்டு பயமுறுத்துகிறது என, தேவையற்ற கயமையுடன் நிறுவுவதில் இந்தப் பேடிகளுக்கு என்ன பெருமையோ!
Two of seven JNU videos manipulated, finds forensic probe (Updated: March 2, 2016 18:17 IST)
…Forensic probe of a set of video clippings of the Jawaharlal Nehru University (JNU) event, ordered by the Delhi government, has found that two videos were “manipulated” where voices of persons not present in the clips were added.
Out of the seven videos sent by the Delhi government to the Hyderabad-based Truth Labs, two were found to be tampered with while the rest were authentic, sources said.
“In the manipulated clips, videos have been edited and voices were added. The main report, with a supplementary, has been submitted to the Delhi government,” an official said.
On February 13, The Arvind Kejriwal government ordered a magisterial inquiry into the alleged raising of anti-national slogans on the JNU campus on February 9.
ஆக… பப்பரப்பா பெருகியது.
-0-0-0-0-0-0-0-
எனக்குத் தெரிந்தே, சமன நிலையில் இருக்கும் பலர் கூட இந்தக் காமாலை வியாதியில் ஐக்கியமானார்கள். நான் மதிப்பவர்கள்கூட தேவையேயில்லாமல் வெறுப்பு உச்சாடனங்களைச் செய்தார்கள். காரணமேயில்லாமல் மோதி எதிர்பஜனை செய்தார்கள். (தேவையான / சரியான விமர்சனங்களைக் குறிப்பிடவில்லை இங்கு!)
ஹிந்துத்துவா பொந்துத்துவா கருத்துத்துவா என உளறிக்கொட்டினார்கள். அநியாயத்துக்கு, காவல் துறையினரைக் கரித்துக் கொட்டினார்கள். அடக்குமுறைக்கு(!) எதிராகத் திமிர்ந்தெழுந்தார்கள்… (எல்லாம், பாதுகாப்பாக வூட்டில் அல்லது அலுவலகத்தில் சூத்தாமட்டைகளைத் தேய்த்துக் கொண்டுதான்!)
எல்லாம் சரி. கருத்துரிமை, குசுவுரிமை என இந்தக் கூச்சல்களையும் விட்டு விடலாம்.
…ஆனால் அது மட்டுமல்ல – தில்லியின் அர்விந்த் ‘துக்ளக்’ கெஜ்ரீவால் அரசு, சிலபல தொலைக்காட்சி அலைவரிசைகளின்மேல் வழக்கும் தொடர்ந்தது – அதாவது, ஃபோர்ஜரி செய்யப்பட்ட விடியோக்களை அலைபரப்பியதற்காக. அதனால் பொதுஅமைதிக்குக் குந்தகம் விளைந்ததாம். இதே ஊடகங்களின் செல்லக்குழந்தையாக கெஜ்ரீவாலறிவர்கள் உலா வந்தபோது குலைக்கப்படாத பொதுஅமைதி இப்போதா குலையும்? சும்மா குறைசொல்லிக் குரைக்கிறார்கள், அவ்வளவுதான்…
எல்லாம் சரிதான். முடிந்தவரை அரசியல் ஆதாயம் பார்ப்பது என்பது மட்டும்தானே கெஜ்ரீவாலறிவர்களின் அதிக பட்சக் குறிக்கோள்?
ஆனால் பாருங்கள் – இருவாரங்களுக்குமுன் வந்த இச்செய்தியை – அதே தஹிந்துத்துவாவின் செய்தியை:
JNU event footage authentic, says report (Updated: June 11, 2016 00:01 IST)
இந்தச் செய்தியை முழுமையாகவே கொடுக்கிறேன் – முக்கியமான பகுதிகளை போல்ட்ஃபேஸ் செய்துமிருக்கிறேன்…
Forensic examination of the video clip — on the basis of which JNU student leaders including Kanhaiya Kumar and Umar Khalid were charged with sedition last February — has been found to be authentic, a source in Delhi police said on Friday.
The police had sent the footage of the controversial February 9 event organised at Jawaharlal Nehru University — captured by a Hindi news channel — for forensic examination to the Central Forensic Science Laboratory. “We received the report on June 8 which established the authenticity of the footage,” said a source in the Delhi police special cell which had taken over the probe from the South District police.
On February 11, the CD containing the raw footage was received by the Delhi police from the channel concerned. The FIR, too, mentioned the footage and documents the fact that a group led by Khalid, who is currently out on bail, had allegedly raised anti-India slogans.
“When it was played, the video showed that under the leadership of Umar Khalid, the members of the gathering have been raising ‘anti-national’ slogans such as ‘Kitne Afzal maaroge, ghar ghar se Afzal niklenge’ and ‘Pakistan Zindabad’,” said the FIR about the footage which was sent to the CFSL in February.
Several controversies had surrounded the authenticity of the footage as there were allegations of it being doctored. A magisterial inquiry had in fact found that the clips aired on several channels were indeed doctored. A former employee of the channel which submitted the raw footage to the police also alleged that the aired footage was doctored.
The police, however, had from the beginning maintained that their case was based on the unedited footage and not what the channel(s) had aired.
When asked about the implications of the forensic report, the officer said the investigators now had a “firmer stand to proceed further.”
The Delhi police had sent several reminders to the CFSL while the report was awaited. In the interim period, the police had received forensic reports of four more video clips, mainly mobile clips capturing the events, from the CFSL lab in Gandhinagar, and those videos, too, were found to be genuine.
இதெப்படி இருக்கிறது? இதனைப் பற்றி ஒரு ஊடகம்கூட காத்திரமான ஒரு முன்பக்கச் செய்தியையோ அல்லது, முன்னால் புளுகியதற்கோ அவசரக் கருத்துகளுக்கோ வருத்தத்தையோகூடத் தெரிவிக்கவில்லை…
ஆனால் காவல்துறை மறுபடியும் நடவடிக்கை எடுத்தால், மறுபடியும் போராளிக் கேளிக்கைகள் தொடங்கும் – விடியோ ருசு பொய் என மறுபடியும் ஒரு சுற்று வரும், கெஜ்ரீவாலர்களுக்குக் கொறிக்க கொஞ்சம் பொரி; நமக்கென்ன, ஒரே புல்லரிப்புதான்!
ஊடகப்பேடிகளுக்கும் தட்டச்சுப்போர்வீர போராளிக்குளுவான்களுக்கும் ஒரு விஷயத்தைத் தான் சொல்லமுடியும்: ச்சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு.
…நிலைமை இப்படி இருக்கையிலே, சிலபல நல்ல விஷயங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. (இவற்றில் ஒன்றுபற்றி – நான் ஓரளவுக்கு ஈடுபட்ட ஒருவிஷயத்தைப் பற்றி அடுத்த பதிவில் கொடுக்கிறேன், நன்றி)
-0-0-0-0-0-0-
பப்பரப்பா ஊடகங்களின் கண்மணிகளான கண்ணையா குமாரர்கள் போன்றவர்கள் குறித்த முந்தைய பதிவுகள்:
- ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள்: ஜேஎன்யு சிறப்புப் பதிப்பு 20/02/2016
- மும்பய், பல பேராசிரியர்கள், சில மாணவர்கள் – குறிப்புகள் 19/03/2016
- இர்ஃபன் ஹபீப், ரொமிலா தாபர் போன்ற ‘வரலாற்றாய்வாளர்கள்’ + தஹிந்துத்துவா அரைகுறைகள்: இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி 01/04/2016
- ‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…
- roughcut ideas, opinions & notes on education