ங்கொம்மாள, இன்னா மாரீ பேஸ்ராங்கடா, நம்ம தலைவனுங்கோ! தாங்க முடிய்லயேடா!! :-(

May 11, 2016

பாளாப்போற எலிக்ஸன் முடிய்ற வரிக்கும் இவ்னுங்களோட வாந்திகள பொற்த்துக்கணுமேடா! கெதி கலங்குதேடா என்க்கு! :-(

ஹ்ம்ம்… மன்னிக்கவும், இவை ஒவ்வொன்றையும் கிண்டல் செய்து பத்து பக்கம் எழுதலாம், ஆனால்

-0-0-0-0-0-0-0-0-

கருணாநிதி மகாத்மா காந்தி போல வாழ்கிறார்!

— கஸ்தூர்பா  கனிமொழி

தேமுதிக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை!

— காலிடும் இசுடாலிர்

நான் கருணாநிதி மகன், பொய் சொல்ல மாட்டேன்!

— அரிச்சந்திரர் மகர், மெய்மறந்த இசுடாலிர்

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் வீடுதேடி வருவார்கள்!

— மிரட்டும் இசுடாலிர்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்!

—  ஆரூடக்காரர் இசுடாலிர்

துரோகியையும் விரோதியையும் மன்னிக்ககூடியவர் கருணாநிதி!

— ‘ஆனால் அவர் அழகிரியை மன்னிக்கவேகூடாது’ பாவமன்னிப்பர் இசுடாலிர்

நதிகளை இணைத்து தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்வோம்!

— நதியிணைப்புப் பொறியியலாளர் இசுடாலிர்

திமுக பேச்சாளர்கள் நாகரிகத்துடன் பேசுக!

—  இந்திராகாந்தி மதுரை வந்தபோது திமுக குண்டர்களால் தாக்கப்பட்டு கல்லடிபட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்த நிலையில்  ‘பெண் என்றால் மாதவிடாய் ரத்தம் வரும்’ தர ஆபாசப் பேச்சுகளில் ஈடுபட்ட,  காமராஜரை பலவிதங்களிலும் திட்டித் தீர்த்த (= அண்டங்காக்கா, எருமைத் தோலன், ரஷ்யாவுக்குப் போன எருமை, தீவட்டிக் கொள்ளைக்காரன், கோமாளிக் கோமகன்,   ‘கருவாட்டுக்காரி சிவகாமியின் சீமந்த புத்திரன் காமராஜன்,’  கட்டைபீடிக்கார காமராஜன், கரிக்கட்டை, முதுகுத் தோலை உரித்தால் டமாரம் செய்யலாம், அறிவிலி,  படிக்காத பன்னாடை, நனச்ச பனை, எரிஞ்ச பனை, மொட்டைப் பனை, மரமேறி சாணான், கிராமத்து நாட்டான், பனையேறி, காண்டாமிருகம், ஆண்மையற்றவன், ஒம்போது, அலி, பல கோடிரூபா ஸ்விஸ் பேங்குல, ஹைதராபாத்தில மாளிகை … … என்றெல்லாம், ஒருமுறையல்ல, பலமுறை  அர்ச்சனை செய்த) நாகரிகக் கருணாநிதி

அம்பேத்கர் வடிவில் விஜயகாந்தைப் பார்க்கிறேன்!

— ‘நான் அம்பேட்கரை வெறுக்கிறேன், நடிகக் கோமாளியாக ரசிக்கிறேன்!’  வுடுதல சிற்த்த திருமாளவன்

கேப்டன் விஜயகாந்த் வடிவில் என் தந்தை மூப்பனாரைப் பார்க்கிறேன்!

— ‘எனக்குப் பித்தம் தலைக்கேறிவிட்டது’  மூளையக் கழற்றிவைத்துவிட்ட ஜெனரல் நாலெட்ஜ் புகழ் ‘ஜிகே’ வாசன்

அன்னை தெரசா வடிவில் பிரேமலதாவைப் பார்க்கிறேன்!

— ‘கிறிஸ்டொஃபர் ஹிட்சென்ஸ்’ வைகோ  (Christopher Hitchens – Mother Teresa: Hell’s Angel)

கலைஞர் ஏசு போன்றவர்!

— ராதாபுரம் எம்எல்ஏ அப்பாவு (இப்போதல்ல, சிலவருடம் முன்னர் சொன்னது)

ஹ்ம்ம்… அடித்துக்கொள்ள ஒரு மண்டைதான் இருப்பது, எனக்கு மிகுந்த விசனத்தை அளிப்பது…

-0-0-0-0-0-

இந்த மனிதர்களுக்கு ஏதோ மனோவியாதிதான்! இம்மாதிரியா விதம்விதமாகவும் அற்பத்தனமாகவும், கயமையுடனுன் பிறரைப் பார்ப்பார்கள்? இவர்கள் நிச்சயம் உளறிக்கொட்டவில்லை, மனதாறப் பொய்களைத் தான் சொல்கிறார்கள்.

இவர்கள் அனைவரும் உதிர்க்கப்படவேண்டியவர்களே, எனக்கு இதில் சந்தேகமேயில்லை.

(பின்குறிப்பு: மேற்கோள் காட்ட உதவிய, சொல்லின் செல்வர்களின் சொற்களை அனுப்பிய மாக்களுக்கு… நன்றி! நன்றி!! நன்றி!!! மேலதிகமாக, இப்பெருந்தகைகள் வாய்கூசாமல் இப்படிப் பேசித்தான் இருக்கிறார்கள் என்பதை சரிபார்த்துவிட்டுத்தான் இவற்றைப் பதித்திருக்கிறேன்.)

4 Responses to “ங்கொம்மாள, இன்னா மாரீ பேஸ்ராங்கடா, நம்ம தலைவனுங்கோ! தாங்க முடிய்லயேடா!! :-(”

  1. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    அண்மை செய்தி:
    கருணாநிதி தவ வாழ்வு வாழ்கிறார்.
    முனிவர் இசுடாலிர் (எச்சரிக்கை: இது பிற்சேர்க்கை1. தேர்தல் முடியும் வரையும் அதற்குப்பின்னும் இன்னும் நீளக்கூடும்.)

  2. ஆனந்தம்'s avatar ஆனந்தம் Says:

    இந்தா புடி லிங்க் நைனா
    http://www.4tamilmedia.com/newses/india/36591-2016-05-09-07-52-30
    இனிமே இது மாதிரி வாந்தியெல்லாம் மோந்து பாப்பியா?

  3. ravi's avatar ravi Says:

    http://tinyurl.com/hlvbnza

    குடும்பத்தில் கவலையா .. இந்தாருங்கள் அரு மருந்து ..


Leave a Reply to ravi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *