பெருவெடிப்புக் கோட்பாடு (‘The Big Bang Theory’) எனும் அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்மூலம், கமுக்கமாகத் தமிழைப் புகட்டுவது எப்படி?

April 19, 2016

எப்போதோ 2007ல் இத்தொடர் ஆரம்பித்து விட்டாலும், என் குடும்பத்தில் ஊடாடும் ஊடகஎதிர்வாத வெறியின் காரணமாகவும், டீவி இல்லாமல் வாடிவதங்கும் தன்மையினாலும் – 2015 ஜனவரி வாக்கில் எங்களுடைய செல்லங்களான சில அமெரிக்க என்ஆர்ஐ எழவெடுத்தவர்கள் மூலமாகத்தான், வழக்கம்போலவே மிகத்தாமதமாக இதனைப் பற்றித் தெரிந்துகொண்டோம்.  பின்னர் எங்கள் மகளின் நண்பர்களின்மூலமாகவும் பரிந்துரைகள் வந்தன.

ஆக, எங்கள் வீட்டில் கடந்த ஓரு வருடம்போல, நேரம் கிடைக்கும்போது (அமெரிக்க டிவிடிகள் மூலமாக) இந்தத் தொடரைப் பார்த்துகொண்டிருக்கிறோம் – அதாவது நான் + மனைவி + 15 வயது மகள். ஒரு அமெரிக்க சோப்ளாங்கி ஸோப்ஆபெரா / ஸிட்காம் வகைத் தொடருக்கு, இது மிகுந்த புத்திசாலித்தனத்துடன், கொப்பளிக்கும் நகைச்சுவையுடனும்  எடுக்கப்பட்டுள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்னொரு விஷயத்தையும் ஒப்புக்கொள்ளவேண்டும்: இந்தத் தொடரை – அதன் பின்புலத்தில், இளஞ்சமூகத் தேவைகளினூடே ஒப்புக்கொள்வதற்கு,  வெட்டியாகப் புலம்பாமல் சாய்ந்து உட்கார்ந்து ரசிப்பதற்கு –  குரஸாவா-தார்க்கொவ்ஸ்கிகளின் மகோன்னதங்களில் ஊறிய எனக்கு, வின்ஸென்ட் கேன்பி அவர்களின் கருத்தினைக் கொண்டாடும் எனக்கு – மிக மிகச் சிரமமாக இருந்தது.
The mediocre movie explains everything twice and always means exactly what it says. It waves its sincerity aloft like a truce flag. It leaves no questions unanswered. It tells you exactly where you should stand in relation to its characters and its subject matter. It is frequently soothing because it tells you that you are right. Then, too, it can be like an unrelenting host who holds you captive until you finish every last morsel on the plate. But it tends not to stick in the memory because there’s nothing there to wonder about.
– – Vincent Canby (1924 – 2000)
…ஆனால்,  இக்காலங்களில் ஒரு சமனத்துக்கு வந்து இதனையும் பார்த்து மகிழ்கிறேன். ஹ்ம்ம்… சில சமயங்களின் என்னை என்னால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, அதனால் என்னையே நான் லூஸ்ல வுட்டுக்கறேன், சரியா?

…சரி. இதனைப் பார்த்துப் புளகாங்கிதமுற்ற என் மகள், அத்தொடரின் தயாரிப்பாளரான ‘சக் லோரி’ அவர்களுக்கு ஒரு ‘விசிறிதரக் கடிதம்’ எழுதவேண்டும் என விரும்பினாள். இது அவளுடைய பள்ளியில் ‘க்ரியேட்டிவ் ரைட்டிங்’ எழவுக்காக என்றும் பரிணாம வளர்ச்சியடைந்து, பின்னர் அவளே  ‘இதனைத் தமிழில் எழுதப்போகிறேன், எப்படி என் ஐடியா?’ என்றாள் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியபடி… பரிணாமத்தின் உச்சம்தான். (இதற்கு நான் வூட்டுக்குள்ளார தமிழ்தமிழ் எனப் பொழுதன்னிக்கும் பைத்தியக்காரத்தனமாக அரற்றிக்கொண்டிருப்பதும் ஒரு காரணம் என நம்பிக்கொள்ள ஆசை!)

ஆக, கீழே உள்ளது அவள் எழுதியது.  இதில் வெகுசில திருத்தங்களை மட்டுமே செய்தேன். அவ்வளவுதான்; இது எப்படியும் –  என் செல்ல நூட்ல்ஸ்நடை (©அடியேன்) / தவளைநடை (©ஜெயமோகன்) /  head-scratching இஷ்டைல் (©அரவிந்தன் கண்ணையன்) / ஹீரோக்ளிஃபிக்ஸ் இஷ்டைல் (©என்மனைவி) கலந்துகட்டிய நடையைவிட பெட்டராகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன்.

அவளிடம் இந்தவேலையை ஒழுங்காக முடிப்பதற்கென ஊக்கபோனஸாக – நீ ஒழுங்காக இக்காரியத்தைச் செய்தால், வசதிப்படும்போது என் தளத்தில் அதைப் பதிப்பிக்கிறேன் என்றும் உறுதியளித்தேன். ஆனால், அதனையும் ஒத்திசைவு வழக்கம்போலவே அதிகபட்சம் 50 பேர் படித்தாலே அதுஅதிகம் என்ற உண்மையையும் சொன்னேன்.

ஆனால், அவள் எழுதியதை எனக்கு அனுப்பியும் சுமார் 4 மாதங்களாகிவிட்டன – என் தாமஸகுணம் காரணமாக (இஸ்லாம் குறித்து சில நண்பர்கள் மொழிமாற்றிக் கொடுத்தவை இன்னமும் பதிக்கப்படாமல் இருக்கின்றன…)  இன்றுதான் இதற்குக் கதிமோட்சம் கிடைத்திருக்கிறது.

சரி, பீடிகை (Cigarette Hand ©எஸ்.ராமகிருஷ்ணன்) போதும்.  இத்தனை மிரட்டல்களையும் மீறி அவள் இதனைச் செய்திருப்பதால் + இதுகுறித்து இன்று,  என்னை மிக்க அன்புடன் நினைவு படுத்தியதால் (“நீ ஒரு சோம்பேறிக்கூ” = “You are such a lazy bum!”)…

…பாவம், நீங்கள். இப்பதிவைத் தொடர்ந்து மேலே படிக்காமல் ஓடிப்போய்விடுவதே உங்கள் ஆரோக்கியத்துக்கும் ஆயுளுக்கும் நல்லது.

-0-0-0-0-0-0-

[திரு. சார்லஸ் மைக்கெல் லீவைன் ‘சக் லோரி’ அவர்கள், பிரபலமான ‘பிக் பேங்க் தியரி’ (The Big Bang Theory 2007 – இன்றுவரை) அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரின் தயாரிப்பாளர். இத்தொடரின் மைய நிகழ்வு – ஒரு சூட்டிகையான, அழகான, ஆனால் படிப்பறிவு அதிகமற்ற இளம்பெண் ஒருத்தி – இரு படிப்பாளி-புத்திசாலி இளம் ஆராய்ச்சியாளர்கள் வசிக்கும் வீட்டுக்கு எதிர் வீட்டில் குடிபுகுகிறாள்; இதனால் பலவிதமான நிகழ்வுகள்  – சில நகைச்சுவை, சில அட்டகாசமானவை, சில மனதைப் பிழியும் வகை – ஏற்படுகின்றன. இவர்களின், இவர்களுடைய நண்பர்களின் கதைகளாக எபிஸோடுகள் விரிகின்றன.]

அன்புள்ள சக் லோரி அவர்களுக்கு,

என் பெயர் <பெயர் அகற்றப்பட்டது>. நான் தென்னிந்தியாவில் உள்ள நகரமான பெங்களூரில் வசிக்கிறேன். நீங்கள் தயாரிக்கும் ‘பிக் பேங்க் தியரி’ எனும் தொலைக்காட்சித் தொடர் எனக்கு மிகவும் பிடித்தமானது. நான், 2014 கோடை விடுமுறையில்தான் இந்தத் தொடரைப் பார்க்க ஆரம்பித்தேன். என் சினேகிதி ஒருத்தி இந்தத் தொடரை பார்க்கும்படி என்னிடம் பரிந்துரைத்தாள். இந்த ‘பிக் பேங்க் தியரி’ என்ற பெயரைக் கேட்டபோது, நான் எதிர்பார்த்தது ஒரு அறிவியல் ஆவணப் படத்தை.

இந்தத் தொடரின் மையக்கருத்து, மிகவும் சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்றாகும்.  கதையில் முக்கியமான ‘ஸெட்’களின் எண்ணிக்கையும் மிகக் குறைவே. ஆனாலும், இவ்விரண்டு அடிப்படைகளும், இத்தொடரின் எளிமையையும் எழிலையும் அதிகரிக்கவே செய்கின்றன. முக்கியமான கதாபாத்திரங்களின் சித்திரிப்புகள் நன்றாக விரித்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய மனோபாவங்களின் பல்வேறு பரிமாணங்கள், தொடரில் விதம்விதமாகக் காண்பிக்கப் படுகின்றன.

இத்தொடரில், எனக்குப் பிடித்தமான கதாபாத்திரம் ஷெல்டன் தான் – அது ஒரு நகைச்சுவை மிக்க ஒரு பாத்திரம். ஷெல்டன் ஒரு மேதாவி, ஆனால், சமூகத் தொடர்புகளில் நுண்ணுணர்வு அற்றவன். லென்னர்ட்-ன் இனிமையான மனிதத்தன்மையும், ஹொவர்ட்-ன் நகைச்சுவையும் அருமை. ராஜ்-க்கும் எனக்கும் உள்ள பொதுவான பின்புலத்தினால் எனக்கு அவனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிவது போல் தோன்றுகிறது. பென்னி-யின் லௌகீக ஞானமும், குதூகலமும் இந்தத் தொடரின் குணக்கலவைகளில், சுவாரசியமான ஒன்றாகும்.

இந்தத் தொடர் வெளிவந்துள்ள கடந்த 8+ வருடங்களில், அதன் கதாபாத்திரங்கள், நிச்சயமாகப் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளனர். ஷெல்டனின் எந்திரகதி நிலைமை குறைந்திருக்கிறது; லென்னர்டின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது; ராஜுக்கு, பெண்கள் குறித்த சங்கோஜம் குறைந்திருக்கிறது; ஹொவர்ட்-ன் விடலைத்தனம் குறைந்திருக்கிறது. இப்படிக் கதாபாத்திரங்கள் மாற்றமடைந்திருந்தாலும், இத்தொடரின் மையக் கதையமைப்புகள் மாறவில்லை.

இத்தொடரின் வளர்ச்சியில், சில மேலதிக முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகமாயிருக்கின்றன – இப்பாத்திரங்களின் மூலம், முதன்மைக் கதாபாத்திரங்களின் பிற பல்வேறு கூறுகள், வெளிப்படுகின்றன. மேலோட்டமான பார்வையில், முதன்மைக் கதாபாத்திரங்கள் கிறுக்குகள் போலத் தோன்றினாலும், அவர்கள் எதிர்மறையாகச் சித்திரிக்கப்படாமல் –  கருணையோடு, நகைச்சுவையோடு, மென்மையோடு அணுகப்பட்டிருக்கிறார்கள்.

இத்தொடரில் கூறப்படும் அறிவியல் செய்திகளும் கருத்துகளும், எனக்கு மிகவும் பிடித்தமானவை – ஷெல்டன் கூறுவதுபோல ‘இது கேளிக்கைக்கு மட்டுமல்ல, அறிவதற்கும் கூட!’ ஏனக்கு, மையக் கதாபாத்திரங்களின் அறிவியல் தொடர்பான தொழில்கள் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளன (குறிப்பாக, ஹொவர்டின் விண்வெளிப் பயணம்)  – நான் என் மேற்படிப்புக்காக அறிவியலைத் தேர்ந்தெடுத்ததற்கு, இதுவும் ஒரு காரனம்.

என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன; எந்த விதமான அறிவியல் செய்திகளைக் கொடுக்கவேண்டும் என்று எப்படி முடிவு செய்கிறீர்கள்? முக்கிய கதாபாத்திரங்களின் தொழிற் துறைகளை எப்படித் தேர்வு செய்தீர்கள்? எனக்கு உங்கள் தொடரின் அடிப்படை அணுகுமுறை மிகவும் பிடித்து இருக்கிறது – அதாவது  பார்வையாளர்களை புத்திசாலிகளாகக் கருதுவது. இருந்தாலும்,  இத்தொடர் மேட்டிமைத்தனத்துடன் எனக்கு உயர்தரமான விஷயங்களைச் சொல்லவருவதாக நான் ஒருபோதும் உணரவே இல்லை.

இத்தொடரைப் பார்க்கும் போதெல்லாம் நான் யோசிப்பேன் – எபிஸோடுகளின் காட்சிஅமைப்புகள், கதை அமைப்பு தயாரிப்பு போன்ற்வைகள் எப்படித்தான் செய்யபடுகின்றனவோ என்று. எபிஸோடுகளுக்கான  கருக்களை எப்படி உருவாக்குகிறீர்கள்? திரைக்கதையை எழுதுவது எவ்வளவு பேர்? ஆரம்பத்திலிருந்து முடிவுவரை ஒரு எபிஸோடைத் தயாரிக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? கதாபாத்திரங்களுக்குக் கடைசியில் என்ன ஆகப் போகிறது என்பதற்கு ஏதாவது திட்டம் இருக்கிரதா? இல்லாவிட்டால் எபிஸோடுக்கு எபிஸோட், அல்லது வருடத்துக்கு வருடம் இவற்றுக்காகத் திட்டமிடுவீர்களா? இந்தத் தொடருக்கு முடிவு என ஒன்று இருக்குமா? ஒரு அசட்டுக் கேள்வி: எப்போதாவது எங்களுக்கு பென்னியின் அப்பாவின்  முழுப்பெயர் தெரியவருமா? :-)

இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு எனக்கு உங்களுடைய தொடரில் மிகவும் பிடித்தமானது என்னவென்றால், அது என்னை வாய் விட்டுச் சிரிக்க வைக்கிறது. அதன் மென்மையான நகைச்சுவை, சில சமயங்களில் சில ஆழமான விஷயங்களையும்,  அபத்தமில்லாமல் எதிர்பாராத விதங்களில் வெளிப்படுத்துகிறது. எபிஸோடுக்கு ஒரு மணி நேரம் எடுக்கும் மற்ற பல தொடர்கள் போலல்லாமல் உங்கள் தொடர்,  இருபது நிமிடங்கள் மட்டுமே ஓடுவது எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் ஒரு விஷயம்: ஒவ்வொரு நகைச்சுவை நிகழ்வு நடக்கும்போதும் ஸ்டூடியோ சிரிப்பலை அதனைத் தொடர்வது இல்லாமல் இருந்தால், அது நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் என் கவனம் சிதறி விடுகிறது.

இப்போதெல்லாம் நான் ஒன்பதாம் வருட தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வரப்போகும் எபிஸோடுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவற்றில், முக்கிய கதாபாத்திரங்களின் குடும்பங்களைப் பற்றி (குறிப்பாக, ஷெல்டனின் சகோதரசகோதரிகளைப் பற்றி) மேலும் தெரிந்துகொள்வோம் என நினைக்கிறேன்.

அபாரமான இத்தொடரை உருவாக்கி  எனக்குப் பல மணி நேர மகிழ்ச்சியை அளித்ததற்கு மிக்க நன்றி.

உங்கள் உண்மையுள்ள,

<பெயர் அகற்றப்பட்டது>

-0-0-0-0-0-0-

13 Responses to “பெருவெடிப்புக் கோட்பாடு (‘The Big Bang Theory’) எனும் அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்மூலம், கமுக்கமாகத் தமிழைப் புகட்டுவது எப்படி?”

  1. Sridhar Tiruchendurai Says:

    Dear Ram,

    The girl is able to put together her thoughts very well. If she had
    written the Tamil version, that’s wonderful. When she answered when I
    call you (last Wednesday) it seemed she thinks in English and translates.
    I don’t remember what exactly she said, but it sounded a bit like India
    Today.

    I think it needs a certain level of geekiness to like Bing Bang Theory,
    which we do have. Krishna doesn’t mind and even accepts when I say, he has
    got the social skills of Sheldon and shyness of Raj. Just as Sheldon and
    Raj have evolved in 8 years, I hope Krishna would too.

    Love
    S


    • You got it; she does the quick translation – just as I did the reverse in my adolescence: from Tamil -> English – with all its hilariousness and put-on accent.

      But writing down something is not the same as responding on the fly. Her spoken tamil is very awkward, yes… if only I stopped this asinine blogging and spent more time with her… (um, on the contrary, she will go completely mad!)

      She went thru’ very many rounds with highs and lows – so, it is not that it was all done in one clean attempt. But she persisted and that’s what I am happy about.

      Oh well, all’s well that ends in a well, what else!

  2. theebu29 Says:

    Written pretty well.Time to save her from Tamil publishers:) ! I never knew 15 year kids see Big bang theory in India. I have thought that the science facts in the series are quite good for kids with a flavour of Humour.

    I think this is the first time someone has written about Bigbang in Tamil. For NRI ‘s like myself this serial has given some horrific experience while every foreigner who watches this serial thinks thats me :) Fuels the stereotypes.

    beautifully written. Way to go Girl..!


    • Thanks, young man!

      Actually, she started viewing it from her 14th year, I think.

      As a family we like puns, as both parents are pundits – and BBT has loads of them along with intelligent conversations. It is also MASSIVELY politically incorrect and takes-off on each and everything and makes use of stereotypes. We like it, siree!

      …Have you read the ‘Inscrutable Americans’ by Anurag Mathur? Very humorously written…

  3. castingreflections Says:

    நல்ல தொடர்தான். ஆரம்பத்தில் விரும்பிப் பார்த்தேன். மூன்று சீசன்களுக்குத்தான் என்னால் ஆர்வத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஷெல்டனில் தடாலடி நேர்மை/வெளிப்படைத்தன்மை உருவாக்கும் நகைச்சுவைத்தருணங்கள் சிறப்பானவை.

    இந்தக் கடிதம் ஆங்கிலத்தில் சிந்தனை செய்து தமிழில் எழுதப்பட்டதாகவே தெரிந்தாலும், தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வமே பாராட்டத்தக்கது. என் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்.

  4. nparamasivam1951 Says:

    நேர்த்தியான கடிதம். எண்ணங்களை தெரியப் படுத்துவது தான், கடித த்தின் நோக்கம். அது நிறைவேறியது, மிகவும் நன்றாகவே! மற்றபடி, தமிழிலேயே எண்ணி எழுதியதா அல்லது ஆங்கில சிந்தனை தமிழாக்கப் பட்டதா என்பது தேவையற்றது என எண்ணுகிறேன். என் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள். (அடுத்த தலைமுறையின் தமிழார்வம், “தமிழ் இனி மெல்ல சாகும்” என்பதை பொய்யாக்குகிறது)

  5. A.Seshagiri. Says:

    நீங்கள் தமிழில் (தவளை நடை !) எழுதுவதைக்காட்டிலும் நன்றாக இருக்கிறது:-).வாழ்த்துக்கள்.

  6. Rajmohan Says:

    Its nice writing. Convey my congrats

  7. Venkatachalam Says:

    தங்கள் மகளுக்கு என்னுடைய வாழ்த்துகள். எனக்கும் இதைப்போன்றவற்றை பார்க்கவேண்டும் அறிவு பூர்வமான உரையாடல்களில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம். ஆனால் திருக்குறலிலிருந்து மீளமுடியவில்லை. தற்போது திருக்குறள் – ஓர் ஆன்மிக உளவியல் உரை என்ற நூலை எழுதி முடித்து வெளியிடுவதற்கு யாரேனும் கிடைப்பார்களா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
    இடையில் மனதின் சாதி என்ற பெயரில் ஒரு ஆங்கில நூலை(Castes of Mind by Nicholas B.Dirks) மொழியாக்கம் செய்து கொண்டு உள்ளேன். தாங்கள் இந்த முறை பெங்களூருக்கு வரும்போது கூறுங்கள். நான் தங்களைச் சந்திக்கிறேன்.
    தங்களுண்மை உள்ள
    அர.வெங்கடாசலம்


    • அய்யா,

      நிக்கலஸ் டிர்க் ஸ் அவர்களின் இப்புத்தகம் மிகமுக்கியமானதொன்று. இதனை மொழிமாற்றம் செய்வதற்கு நன்றி!

      கூடியவிரைவில் இப்புத்தகம் வெளிவந்தால் அது மிக நல்லவிஷயமே! வாழ்த்துகள்! :-))

  8. giridharlal Says:

    Anbu magalhey, pinni vittaaiy! Thodarattum ippanhi…(lh & nh denote the heavier la and na (moonru suzhi), a borrowed methodology/ practice from Dhivehi, Maldives’ national language)….


  9. […] there is a sample tamil writing by my daughter about ‘the big bang theory’ sitcom here. the other kid of course, has a looong way to go. let us see. considering the fact that his father […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s