வீண பஞ்ச பாண்டவர்கள், தமிழகத் தேர்தல்கள் – சில குறிப்புகள்

April 11, 2016

… இவர்கள் கௌரவர்கள் ரேஞ்சுக்கு, நாளொரு மேனியாவும், பொழுதொரு கொண்ணை*யாகவும் – எண்ணிக்கையில் ஏறிக்கொண்டேயிருந்தாலும், இந்த மனகூவான்கள் அலுப்பேயில்லாமல் தொடர்ந்து அள்ளிஅள்ளித் தரும் நகைச்சுவையிருக்கிறதே, என்னால் தாங்கவேமுடியவில்லை. (இத்தனைக்கும் அங்கு, எனக்கு ஓரளவு மரியாதையுள்ள கம்யூனிஸ்ட்களும், தமாகவினரும் ஐக்கியமாகியிருந்தாலும் இப்படியொரு நகைச்சுவை!) :-(

வீணர்கள், வேறென்ன சொல்ல.

எப்பப் பார்த்தாலும் ஒருவருக்கொருவர் மாலையும் சால்வையும் அணிவித்துக்கொண்டு, விட்டால் ஓடிவிடாமல் இருக்க ஒருவர் கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, பகற்கனவுகளில் மிதந்துகொண்டு….

கோமாளிக் கோமகன்கள், வேறென்ன சொல்ல.

தங்களுடைய விடலைத்தனமான நடவடிக்கைகளால். பாமக அன்புமணியை மிக்கமதிக்கத்தக்கவராக ஆக்கிவிட்டார்கள்…  எழும்பி வரும் இளைஞர் சமூகத்துக்கு முன், தங்களை ஒரு காத்திரமான மாற்றுச் சக்தியின் கூறுகளாகக் காண்பித்துக்கொள்ளாமல், தங்களை நகைப்புக்கிடமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்ட்களின் கம்பீரம் எங்கே, திருமாவளவ விஜயகாந்த்களின் அர்த்தமற்ற உச்சாடனங்களும் உளறல்களும் எங்கே?

பஞ்ச மனோபாவத்திலிருந்துகொண்டு காணாததைக் கண்டது போல, ‘அடுத்த அரசை நாங்கள்தாம் அமைப்போம்’ எனத் தீவிரமாகக் கருதும் – ஆனால் கள அளவில் முனையாத அப்படியொரு மனப் பிறழ்வு.

ஆக, இவர்கள் பஞ்ச பாண்டவர்கள்தாம். ராப்பிச்சைக்காரர்கள்தாம்; கோபம்கோபமாக வருகிறது – தயிரைக் கடையக் காணோம், ஆனால் வெண்ணை திரண்டுவந்தால் அதனை நெய்யாக மாற்றுவது எப்படி, அதனை யார் யார் எப்படி நக்கவேண்டும் என அல்லாடல்கள்.

கருமர் (விஜயகாந்த்), கர்ஜ்ஜுனர் (வைகோ), பூமர் (திருமாவளவன்), நகுள்ளர், சோகதேவர் (பாவப்பட்ட கம்யூனிஸ்ட்கள்) என அணிவகுத்து பின் வருபவர்களுக்கு கும்பகர்ணன், கார்த்தவீரியார்ஜ்ஜுனன் என்றெல்லாம் தங்களுக்குக் தாங்களே பெயர் வைத்துக்கொள்ளத்தான் இவர்கள் லாயக்கு.

-0-0-0-0-0-0-0-

ஆனால் இவர்களை மப்பு (=கவிஞ்சர் மானுடப்பையனார்)  போலவோ, அல்லது திமுக தோல்வியைப் பற்றிய பயபீதியில் இருக்கும் உடன்பிறப்புகள் போலவோ – அஇஅதிமுக-வின் டீம்-பி என்றெல்லாம் உளறிக்கொட்டி வர்ணிக்கமாட்டேன்.

ஏனெனில் இந்த மநகூவில் இருக்கும் சிலபல கட்சிகளின் வட்டார நடு மட்டத் தலைவர்களுடன் + அவர்களுடைய ஆதரவாளர்களிடம் பேசியதிலிருந்து எனக்குத் தெரியவருவது என்னவென்றால் – 1) பி-டீம் 2) அஇஅதிமுக -விடம் பொட்டி வாங்கிக்கொண்டார்கள் என்பதெல்லாம் உளறல். தற்போதைய சூழலில், ஜெயலலிதா இவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான், இக்கட்சிகளில் மனம்வெதும்பியிருப்பவர்களின் எண்ணம். மாறாக,  இவர்களைக் காலில் விழுந்து வரவேற்க இப்போதும் திமுக தயாராக இருக்கிறது என்பதும்தான்!

மாறாக  – மனகூவினர் உண்மையாகவே, அவர்கள்தாம் ஆட்சியைப் பிடிக்கப்போவதாக நம்புகிறார்கள். ஆனால் – தேர்தல், வாக்காளர் சேகரித்தல் போன்ற களப்பணிகளில் அவர்கள் ஈடுபடுவதாகவே தெரியவில்லை. அவர்களுடைய கட்சித்தலைவர்களுக்கு தேர்தல் பணிகளுக்காகத் தங்கள் கட்சி அபிமானிகளை/தொண்டர்களை முடுக்கிவிட நேரமேயில்லை.  ஏனெனில் அவர்கள் ஒருவர் கையை ஒருவர் விட்டால்தானே நகரமுடியும்?

மாறாக, தானாகவே மக்கள் திரண்டுவந்து மனகூவினரை ஆதரித்துவிடுவார்கள் என உண்மையாகவே நம்புகிறார்கள் எனத்தான் படுகிறது. இவர்களைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிட்டது. :-(

ஆனால் அஇஅதிமுகவினரோ, திமுகவினரோ, பாமகவினரோ அப்படி இல்லை. குறிப்பாக பாமக, அஇஅதிமுக காரர்கள் சுழன்று சுழன்று வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

திமுக ஆட்களும் வேலை செய்கிறார்கள் என்றாலும் – அவர்கள் ஒருமாதிரித் தங்களை தோல்விக்குத் தயார் செய்துகொள்வது போலப் படுகிறது.

ஆம்! …மநகூவான்கள் அரசுகட்டிலில் ஏறியதும், அவர்களுடைய முதலையமைச்சர் முதலில் கையொப்பமிடும் கோப்பு – ஹ்ம்ம்ம், அது கோப்பாக இருக்காது, அது நாலுவரி நோட்டுப்புத்தகமாக மட்டுமே இருக்கும். கர்ப்பு எம்ஜிஆர், செரியா கையெள்த்து போட  பள்கணுமேடா, ங்கொம்மாள

-0-0-0-0-0-0-

…கடந்த சில நாட்களாக, சிலபல வேலைகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்டக் குடிகாரப் பிரதேசங்களில், என் பழைய மாணவர்களுடனும் பிற தெரிந்தவர்களுடன் / அறிமுகங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்; சில சமயம் சூடுபறக்கும் விவாதங்களும் நடக்கின்றனகூட;  அதாவது – நான் வாய்மூடி மௌனியாக மட்டுமே, ஆனால் –  மற்றவர்கள் வாக்குவிவாதங்களில் ஈடுபட்டு ஒருவரையொருவர், ஒருவர் தலைவரை மற்றொருவர் கண்டமேனிக்கும் திட்டிக்கொள்வதை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இவர்கள் இப்படி நூதனமான மொழியில் திட்டுவதை, கற்பனை வளத்துடன் வசைபாடுவதை புளகாங்கிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆக, தமிழில் எனக்கு இதுவரை தெரியாத கெட்டவார்த்தைகளையும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன். :-) :-)) ;-) 8-) B-)

தேர்தலுக்குச் சுமார் 40 நாட்களிருகின்றனவெனத் தெரிந்தாலும், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நடக்கலாம் எனும் சாத்தியக்கூறுகள் இருந்தாலும் – மேற்கண்டவற்றால் (+ என் சுயானுபவங்களால்) நான் அறிந்துகொள்வது, அனுமானிக்க முடிவது யாவையென்றால்:

1. மநகூவினரின் கட்சிகளுக்கு, அதன் அடிக்கட்டுமானங்களில் பணத்தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. முறையான வழிநடத்தலும் இல்லை. இதற்கான காரணம் என்பதை ‘தேர்தல் சூடு பிடிக்கவில்லை’ என்று புறம் தள்ள முடியாது. கூட்டணி அமைப்பதில் அவர்களுக்கு இருக்கும் உத்வேகம், ஊடகப்பேடிகளின் முன் நடனமாடுவதில் இருக்கும் மும்முரம் – காத்திரமான களப்பணிகளில் இல்லையென்பதுதான் சரியான காரணம்.

2. மநகூவினருக்குக் கண்டிப்பாக, ‘பி-டீம்’ பணம் என ஒரு எழவும் வந்துசேரவில்லை. ஏனெனில் நடுவரிசைக் கட்சித்தலைவர்கள் ஒருவருக்கும் இது பற்றி ஒன்றுமே தெரியவில்லை.  மதிமுக காரர்கள், கம்யூனிஸ்ட்கள் இதனைக் கோபத்துடன் மறுக்கிறார்கள். திருமாவளவன் அவர்களின் கட்சி, பணம் வாங்கிக்கொள்ளும், அடாவடிகளில் ஈடுபடும் கட்சிதான் – ஆனால் இவர்களுக்கும் ஒன்றும் வந்துசேரவில்லை. ஆக – இந்த பி-டீம், ஜெயலலிதாவிடம் பணம் வாங்கிக்கொண்டிருக்கிறது என்பதெல்லாம் பீலாதான்.

3. சொந்த செலவில்  சூனியம் வைத்துக்கொள்பவர்களாகத்தான் எனக்கு இந்த மநகூவான்கள் படுகிறார்கள்.

4. சென்ற தேர்தலைவிட, வரும் தேர்தலுக்காக பாமகவினர் மிகுந்த முனைப்புடன், நம்பிக்கையுடன் வேலை செய்வதைப் பார்க்கிறேன்; ஆனால் எம்எல்ஏக்களாக இது ரசவாதம் அடையுமாவெனத் தெரியவில்லை. அன்புமணி தொடர்ந்து, தன்னையும் தன்கட்சியையும் திருத்திக்கொண்டு, பரிணாம வளர்ச்சியடைந்தால் அது பாமகவுக்கும் தமிழகத்துக்குமேகூட நன்றாக இருக்குமோ? (ஆனால் திராவிட ஐம்பெரும் கொள்கைகளை இக்கட்சி கைவிடவேண்டும்; திராவிடர்களுடைய ஐம்பெரும் கொள்கைகள் என்றாலே நமக்குத் தெரியும், அவை – குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும் மட்டுமேயென்று!)

5. திமுகவினர் கொஞ்சம் தளர்ந்துபோயிருப்பதுபோலத்தான் தோன்றுகிறது.  கருணாநிதி, இசுடாலிருக்கு விட்டுத் தந்திருக்கவேண்டும் எனத்தான் இவர்கள் விரும்புகிறார்கள்… ஆனால் இசுடாலிர் ஒரு வசீகரத் தலைவரல்லர் என்பதும் இவர்களுக்குப் புரிகிறது. (ஆனால் ஒரு விஷயம் –  இப்பகுதிகளில் அஇஅதிமுக ஸ்ட்ராங்; ஆனால் திமுக, பாமக, விசிகே ஆதரவாளர்களூம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். எனக்கு ஓரளவு அறிமுகமாயுள்ள ‘வட்டாரத் தலைவர்கள்’ இந்த நான்கு கட்சிகளிலும், ஓரிருவர் மார்க்ஸிஸ்ட் கட்சியிலும் இருக்கிறார்கள்; இங்கு தேமுதிக வீக்; பாஜக இல்லை; ஒரு லோகல் ‘இந்து வன்னியர் கட்சி’ போர்ட் மட்டும் இருக்கிறது; எனக்குத் தெரிந்து இந்த இவக, திமுகவைத் தொடர்புகொள்ளவில்லை – அப்படியாகியிருந்தால், திமுக அதற்கும் ஐந்து தொகுதிகளை ஒதுக்கியிருக்கும், பாவம்!)

6. விசிகே கட்சியினரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. வழி நடத்துதலேயில்லை. எனக்கு நன்றாகத் தெரிந்த (என் மாணவியின் தகப்பனார்), நான் மிகவும் மதிக்கும் ஒரு மனிதர் அதன் வட்டாரத் தலைவர்களில் ஒருவர்; இவர் அரசியல் வாழ்க்கையை வெறுத்துவிட்டதாகவும், தேர்தல் பணியில் ஈடுபட பணபலமோ, மனோபலமோ இல்லையென்றுக் குறிப்பிட்டார்.

7.  அஇஅதிமுக காரர்களை என்னால் எப்போதுமே புரிந்துகொள்ள முடிந்ததில்லை. இதன் அடிமட்டத் தொண்டர்களை எது முடுக்குகிறது என்றே தெரியவில்லை – ஒரேயொரு காரணத்தைத் தவிர –  இவர்களுக்கு கருணாநிதிமேல் அவ்வளவு எதிர்மறை வெறி. எம்ஜிஆர் ரசிகர்களாக இருக்க முடியாத இளம் அஇஅதிமுக காரர்கள்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். ஆச்சரியம் தான். (நானும் கருணாநிதியை அடிமனத்திலிருந்து வெறுப்பவன் தான் என்றாலும், அவர்களுடைய காரணங்கள் வேறு!)

இதற்காகவே கூட திமுக, கருணாநிதியை முன்னிலைப் படுத்தாமல் இருந்தால், அதற்கு கொஞ்சம் நன்மையாக இருக்குமோ என்றுகூடத் தோன்றுகிறது.

சரி. எனக்குத் தோன்றுவது என்னவென்றால் – வாக்குவங்கி, ஜாதிவெறி, கொள்கை, கூட்டணி, ஓட்டுக்குக்குப்பணம் எண்ணிக்கைகள் போன்றவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, அஇஅதிமுக வெற்றிபெறும்.

ஏனெனில் – அதுவும் ஒரு அயோக்கிய கொள்ளைக்காரக் கட்சியாக இருந்தாலும், திராவிட ஐம்பெரும் கொள்கைவழி நடந்தாலும் – அதற்கு ஒரு கறாரான, வசீகரத் தலைமை இருக்கிறது. அதன் தொண்டர்கள் தொடர்ந்து உற்சாகமாகப் பணிசெய்ய, உத்வேகம் பெற, ஊக்குவிக்கப்பட விஷயங்கள் இருக்கின்றன.

அவர்கள் கடந்த பல வாரங்களாகத் தொடர்ந்து, சுணக்கமில்லாமல் பணிசெய்கிறார்கள். இந்த ஒரு காரணத்தினாலேயே அவர்கள்தாம் வெற்றிபெறப்போகிறார்கள் எனப் படுகிறது…

…ஆனால், எனக்கு இந்த அஇஅதிமுக எழவும் ஒவ்வாது. ஆனால் சோகமென்னவென்றால், இதற்கு காத்திரமான மாற்று என ஒன்றே சுத்தமாக இல்லை. (எப்படியும், திமுக நாசமாகப் போனால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தரும்)

என் நம்பிக்கையென்னவென்றால், அஇஅதிமுக பின் வரும் காலங்களில் உதிர்ந்துபோகும். ஏனெனில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதற்கு இரண்டாம்வரிசைத் தலைமையேயில்லை.

அதுவரை  மநகூவான்களையும், பாஜகவினரையும் பூதக்கண்ணாடியில் பார்த்து ஆதரித்துத் தொலைக்கவேண்டியதுதான்.

தமிழர்களைப் போலப் பாவப்பட்டவர்கள் இத்தரணியில் வேறுயாராவது இருக்கிறார்களா?

-0-0-0-0-0-

* 70-80களின் மெட்றாஸ் பாஷயில் ‘கொண்ணை’ = முட்டாக்கூ. ‘நியூ கொண்ணை’ = அதி முட்டாக்கூ. நன்றி.

லேட்டஸ்ட் கொண்ணையார், பக்கத்தூரான கடலூரின் ‘தமிழர் வாழ்வுரிமைக் கட்சி’  வேல்முருகனாராம்; இவர் பாமக அதிருப்தியாளர். இவரும்  மநகூவானாகிவிட்டார்.

நானும் என் கட்சியை   மநகூவினருடன் மனதாற இணைக்கலாமா எனத் தீவிர ஆலோசனையில் இருக்கிறேன்.

உங்கள் அனாதரவைத் தொடர்ந்து எனக்கு நல்கவும்.

நன்றி.

3 Responses to “நவீண பஞ்ச பாண்டவர்கள், தமிழகத் தேர்தல்கள் – சில குறிப்புகள்”

 1. Srinivasan Sundararajan Says:

  Cho ramasamy was repeatedly telling that
  There would be no AIADMK after MGR.But…….
  Nothing is predictable in politics especially in Tamilnadu.

 2. பொன்.முத்துக்குமார் Says:

  // ஆனால் இசுடாலிர் ஒரு வசீகரத் தலைவரல்லர் என்பதும் இவர்களுக்குப் புரிகிறது //

  யாருக்குத்தெரிகிறதோ இல்லையோ, இது அவர்தம் தந்தையாருக்கு மிக நன்றாகத்தெரியும். தான் இல்லாவிட்டால் அம்மையார் இசுடாலினாரை எளிதாக மென்று துப்பிவிடுவார் என்று. ஒருவேளை அதனால்கூட தலைமையை தனயனிடம் தராமல் இருந்திருக்கலாம்.

 3. ravi Says:

  ரெண்டு கட்சிகளின் குறுநில மன்னர்களின் மூஞ்சியை பார்த்தால் , வோட்டு போட வேண்டும் என்ற எண்ணமே வராது .
  அதிலும் தாய் கழக குறுநில மன்னர்கள் !! ஊஹும் , எனக்கு இப்போதே தூக்கம் போய் விட்டது


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s