புர்ராமகிருஷ்ணம்
September 24, 2015
(அல்லது) புர்ராவும் டர்புர்ராவும்
நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.
இப்போது, இதே கதை ஒரு நாடகமாக்கப்பட்டு, அப்பொல்லோ ஹாஸ்பிடலுக்கு அளவுக்கதிமாக திடீரெக்ஸ் வியாதியஸ்தர்களை அருளிச் செய்திருக்கிறது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவிப்பின் மூலமாக அறிந்தேன்.
… நல்லவேளை, நான் அதற்குப் போகவில்லை. இருப்பதோ ஒரு இதயம், அதுவோ மணியன் மாதிரி பேத்திக்கொண்டேயிருக்கிறது… மேலதிகமாக, இது தேவையா எனக்கு?
டிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு ஒன்றிரண்டுமுறை போயிருக்கிறேன்; ஆனால் இனிமேல் நிச்சயம் போகமாட்டேன். எந்த புத்தக அலமாரிக்குப் பின்னால் எந்த புர்ரா ஒளிந்துகொண்டிருக்குமோ. கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.
புர்ரா : இப்படி ஒரு அற்ப நுனிப்புல் மேயும் கதை! இதற்கு ஒரு நாடமாக்கம்! சலிப்பாக இருக்கிறது. :-(
அடிப்படை உளவியல் புரிதல்களற்ற, அதற்குமேலாக கிச்சடி தன்னிலை விளக்கங்கள் கொடுக்கும் பாங்கிலிருந்து ஆரம்பித்து – முன்னோபின்னோ ஏதுமில்லாமல், ஒற்றெழுத்துப் பற்றாக்குறையுடன், அர்த்தமற்ற நெகிழ்வுடன் – மேம்போக்கான அரைகுறை வாசகனின் அரைவேக்காட்டு உணர்ச்சிகளை ஜேப்படி செய்யும் கதை!
அது மட்டுமல்ல – வெறும் அற்ப விவரணைகளைக் கூடச் சரியாகக் கொடுக்காத சோம்பேறித்தனம் நிரம்பிய தப்பும் தவறுமான குறைகுடத்தன்மை!
துளிக்கூடச் சிரத்தேயேயில்லாமல், முட்டாக்கூ வாசகனுக்காக இப்படியொரு விட்டேற்றிப் பரிமாறல். ‘ங்கோத்தா, இந்த நெகிழ்வப் புட்ச்சிக்கினு ஓட்றா, கஸ்மாலம், பெருஸ்ஸா கதெ பட்க்க, கோமணம் நளுவ வந்த்டான், ஸோமாறீ’‘ எனும் ரீதியில்; இது தேவையா?

புர்ர கதா, ஒரு தெலெகு நாட்டார் நாடகமுறை; என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் தான்… ஆனால், புர்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன், அதில் பொதிந்திருக்கும் புர்ராவைத்தான் இனிமேல் கொஞ்சம் மனக்கிலேசத்துடன் பார்க்கவேண்டியிருக்குமோ? (படம் இங்கிருந்து)
ஆ!
அவசியம் படித்து இன்புறவேண்டிய விஷயம் இது. எனக்கு இதில் மிகவும் திருப்திதான்.
குறிப்பு: ஆகவே, நான் புர்ராவைப் பற்றி ஒரு எழவையும் எழுதப் போவதில்லை. மகிழ்ச்சிதானே? ;-)
September 24, 2015 at 21:42
உங்களுக்காவே எஸ்ரா ஸ்பெஷல்: “…ஸ்காட்டியாவில் பயிலும்போது அமெரிக்க கருப்பின மக்களின் வரலாறு சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார் மேரி. குறிப்பாக, ‘டாம் மாமா’ எழுதிய ‘குடிசை’ ”
– டாம் மாமா எப்ப குடிசை புத்தகம் எழுதினார்? அது Harriet Beecher Stowe எழுதிய Uncle Tom’s Cabin இல்லையோ?!
ராமகிருஷ்ணாவே சரணம். :)
http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-51-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article7684636.ece