என்னது?  ஐயய்யோ! கருணாநிதியும் பெரியாரும் எம்ஜிஆரும்கூட உயிர்த்தெழுந்து விட்டார்களே! (ஊக்கபோனஸ்ஸாக, காந்தியும்!)

February 14, 2023

(கடந்த இரண்டு நாட்களின் பகீர் செய்திகளை  குபீரென முந்தித் தொகுத்துக் கொடுப்பதே, ஒத்திசைவு-டீவிதான்!)

முன்னதாக,  சொந்த நாட்டுச் சகோதரர்களை அழுத்தொழித்தவரும், பல தம் நாட்டு அரசியல்வாதிகளைத் தீர்த்துக் கட்டியவரும், பக்கத்து நாட்டு அரசியல்வாதியையும், அப்பாவித் தமிழர்களையும் கூண்டோடு ஒழித்தவரும், முக்கியமாக  இலங்கைத்  தமிழ்க்குழந்தைகளின் ஈவிரக்கமற்ற படுகொலைஞரும் ஆன – பராக்கிரமம் மிக்க மேதகு தமிழ்த்தோசைய வேலுப்பிள்ளை ‘எல்டிடிஇ விடுதலைக் கழுதைப்புலி’ பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், எனப் பரிசுத்தக்கேடுகெட்ட ஆவிக்கு எழுப்புதல் கூட்டங்கள் நடாத்திவரும் மற்றபடி வேலைவெட்டியற்ற (சக கிழக்கோட்டான்) தமிழக அரசியல் வாதிகளின் பகீர் அறிக்கை வெளிவந்ததை அடுத்து…

போர்க்கால ரீதியில்…

எல்லா திராவிடப்பிண செம்பிணங்களும் அலைகடலென ஆர்பரித்து எழுச்சியுடன் ஒன்றன் பின் ஒன்றாக எழ ஆரம்பித்திருக்கின்றன….

-0-0-0-0-

கருணாநிதி உயிர்த்தெழுந்தார்…

ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்டு!

(இந்தப் புத்துயிர்ப்பின் சாட்சியாக, அனுதினமும் அவருக்குப் படைக்கப் படும் தயிர்வடை இரவில் காலியாவதைப் பகுத்தறிவுடன் சுட்டினார், கழகக் கோமார் ‘தமிழகத்தின் ஒசோ‘ கியார் வீரமணியார்!)

உடனடியாக, இந்தத் திடீர் சோக இடிக்கு அடுத்து, விதிர்விதிர்த்துப்போன தமிழக முதலையமைச்சர் முக இசுடாலிர், தன் டோபாவைக் காணோம் உடற்பயிற்சி இயந்திரத்தைக் காணோம், மந்திரக்கோலையும் காணோமென… துரிதகதியில் புறமுதுகு காட்டிப் பின்வாங்கி…

…தன் கட்சியின் நாணயஸ்த எம்எல்ஏக்களைக் கூட்டிக் கொண்டு அவர்களைக் குடகு மலைப் பிராந்தியத்தில் பத்திரமாக ஒரு ரெஸார்ட்டில் வைத்திருக்கிறார். ஏனெனில், திராவிடத்தில் கழுதைப் பேரம் சகஜமப்பா…

எதிரணியில், கலைங்கர் கருணாநிதிக்குக் கீழ், கனிமொளியும் அளகிரியும் அணி திரண்டிருக்கிறார்கள்…

ஆனால், இசுடாலிருக்குப் பக்கபலமாக இருக்கும் செந்தில்பாலாஜியிடம் கலைங்கரின் பருப்பு வேகுமா?

ஆக. திமுகவிடம் நெஞ்சுக்குநீதி கேட்டு கருணாநிதி தமிழ்நாடெங்கும் உருள்-பயணம் செய்யப் போவதாய் செய்திகள் கசிகின்றன…

ஆனால், ஆ.ராசா – அவருக்கு எதிர்த் திசையில் உருண்டு சென்று  அவருடன் பெருஞ்சக்தியுடன் மோதச் சூளுரைத்திருக்கிறார் என்பதுதான் நிஜம்.

“மனுநீதிக்கு ஆதரவாகச் செயல்பட்டு தன் சொந்த மகனுக்கெதிராகச் சதிசெய்யும் கயமை வாய்ந்த மஞ்சள்துண்டுக் கிழானுக்கு, அதாவது பதவிவெறிக் கருணாநிதிக்குப் பாடம் புகட்டுவேன்!”

-0-0-0-0-

தொடந்து…எம்ஜிஆர் உயிர்த்தெழுந்தார்…

என்ன ஆச்சரியம்! அவருடைய வாட்ச் இன்னமும் டிக்டிக்டிக் எனத் தொடர்ந்து வேலை செய்கிறது!

ஆகவே, அஇஅதிமுகவினருக்கு திக்திக்திக்

உடனடியாக அண்ணன் ஈபிஎஸ்ஸும் ஓபிஎஸ்ஸும் நிபந்தனையற்று ஒன்றிணைந்து சசிகலா+தினகரனின் கீழ் அணிதிரண்டு, தங்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஹைதராபாத் ரெஸார்ட் ஒன்றுக்குக் கூட்டிச் சென்று பத்திரப் படுத்தியுள்ளனர். கட்சியின் இரண்டாம்புரட்சித் தலைவியாக ஏகமனதாக சசிகலா அக்காள் தேர்ந்தெடுக்கப் பட்டார்… ஆகவே இரட்டை இலைச் சின்னம் இபுத-விடம் தான்! மகிழ்ந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள்!!

இதைத் தொடர்ந்து… அஇஅதிமுக விடம் ரத்தத்துக்குரத்தம் பலி கேட்டு, எம்ஜிஆர் தம் திரைப்பட சொந்த பங்கங்களிடம் நீதி கேட்கச் சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறார்…

இதனை எதிர்த்து, ஜெயக்குமார் விட்ட அறிக்கை:

“அஇஅதிமுக-வில் எம்ஜிஆர் 1972ல் இணைந்தார் என்பதே ஒரு பெரும் வரலாற்றுத் தவறு, அது ஒரு சிறு டைபோக்ராஃபிகல் மிஸ்டேக்… தட்டச்சுப் பிழை…

இது வருங்காலங்களில் சரி செய்யப் படும்…”

-0-0-0-0-

ஈவெரா பெரியாரும் அவர் பங்கிற்கு பெரியார்திடலில் இருந்து உயிர்த்தெழுந்து,

“பாப்பான் ஒழிஞ்சானா? காங்கிரஸ் ஒழிஞ்சுதா? பதவிவெறி கருணாநிதி ஒழிஞ்சானா?”

எனக் கேட்டார்…

உடனடியாக ஈவெரா வாயில் பொளேறென்று அடித்த  ஈனமானக் காவலர் திராவிடர் கழக வீரமணியார் அதனை மூடி…

“ஐயய்யோ! தற்போது எனக்கு ஓசிச்சோறு போடுபவர்களை, நீ எப்படி விமர்சிக்கலாம்…”

இதனைத் தொடர்ந்து, ஈவெரா யுனெஸ்கோ சென்று திராவிடர்கழகத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக அறித்ததைத் தொடர்ந்து, வீரமணி,

“அவாளின் ஆரிய நச்சு மூடாமந்திரத்துக்கு மயங்கி உயிர்த்தெழுந்த பெரியாரிய நடைப் பிணங்களெல்லாம் இன்று ஒடுக்கப்பட்ட, நசுக்கப் பட்ட திராவிடர்களுக்கு எதிராகச் செயல்படுவதைக் காண்பீர்”

எனப் பிரலாபித்தார்…

ஈவெரா அவர் பாணியில்,

“தம் பொண்டாட்டிய கூட்டிக் கொடுத்தவன் தான் திராவிடன்!” என்று விமர்சித்தார்…

இதற்குப் பதிலாக, வீரமணி,

“அதனால் தான் உன்னை ‘திராவிடர் தலைவர்’ என்கிறோம்!”

என நக்கலாகச் சொன்னதை அடுத்து…

ஈவெரா… … (பகுத்தறிவு, ஒரு தொடரும் கதையாடல்)

-0-0-0-0-0-

புதிதாக வந்துள்ள உடையும் செய்தி.

முறையாக, கீழ்கண்ட உயிர்த்தெழுந்த (தலைவர்களாம்) தலைவர்கள், அவர்களுடைய கட்சிகளின் அனைத்துப் பதவிகளிலிருந்தும், பொறுப்புகளிலிருந்தும், ஏன் அடிப்படை உறுப்பினர்கப்பலில் இருந்தும் விடுவிக்கப் படுகிறார்கள்:

முத்துவேல் கருணாநிதி (திமுக)

எம்ஜிஆர் (அஇஅதிமுக)

ஈவெரா (திராவிடர் கழகம்)

-0-0-0-0-

கடைசியாக வந்துள்ள செய்தி…

“காந்தி உயிருடன் இருக்கிறார்!”

கதிகலங்கிப் போன காங்கிரஸ், கோட்சே மீது, ‘நம்பிக்கைத் துரோகத்துக்காக’ வழக்குப் போட இருப்பதாகச் செய்திகள், முன்னதாகக் கசிந்தன.

ஆனால் கோட்சே உயிர்த்தெழாததால், ஒன்றும் செய்ய முடியாத நிலையில், பிரதமர் மோதிதான் இந்தப் படுமோசமான பேரிடருக்குக் காரணம் என்றார், ராஹுல் காந்தி….

கபில் சிபல்:

“அரையணா உறுப்பினர் கட்டணம் கூடக் கட்டமுடியாத அரைகுறையெல்லாம், பெரிதாக ஊழல் பற்றிப் பேசுகிறது… அதே கிழத்தின் ஸெக்ஸ் விகாரங்கள் பற்றிப் பேசினால் உலகே சிரிக்கும்!”

முன்னதாக, காந்தி கொடுத்த ப்ரெஸ்ஸரில் –

“தமிழகத்தின் உலகப் பிரபலமான எழுத்தாளர் சுயமுன்னேற்றச் சிகாமணி ஜெயமோகன் தொடர்ந்து என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பாக எழுதி பஜனை செய்துவரும் ஹிம்ஸாவாதம்தான், நான் பொறுக்கமுடியாமல் உயிர்த்தெழுந்ததற்கு ஒரு காரணம் என்றாலும் – அயோக்கியச் சாத்தானின் மறுவடிவமான கமல்ஹாஸனும், யோகேந்திரயாதவ்வும் என்னைப் புகழ்வதுதான் எனக்குப் பொறுக்க முடியவில்லை; அவர்களுடைய சுயமுன்னேற்ற காந்திபஜனைதான், என்னைச் சமாதியில் இருந்து உசுப்பி விட்டது!”

…என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகன் பதிலுக்கு:

“நான் திரைப்படக் கதை வசனம் எழுதி கோடிக்கணக்கில் சம்பாதிப்பது வறட்டுவாதக் கிழங்களுக்குப் பொறுக்கவில்லை; வருடக்கணக்கில் தலையணை ஸைஸில் எழுதிவந்தாலும், தான் எழுதிய குப்பைகள் ஒருபோதும் இலக்கியமாக மாட்டா எனும் புரிதல் – அரைவேக்காட்டு அப்ரெஸெண்டிகளுக்குப் புரிவதில்லை…

காழ்ப்புணர்ச்சிக்குக் காந்தியும் விதிவிலக்கல்ல ஆனால் இது எனக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை.

… என் சீடரான நாராயணகுருவுக்கு நான் எப்போதோ போதித்தது போல, காந்தியம் என்றால் இந்தியம் இல்லை, இந்தியம் என்றால் அதில் தமிழம் இல்லை, கனிமொழிதான் திராவிடச் சிசு”

என்றார்.

கமலஹாஸன்:

“காந்தியார் ஒரு மஹாத்மாவாக இருந்திருக்கவில்லை, நான் ‘ஹேராம்’ பிலிம் செய்தவரை, அவரை யாரும் அறிந்திருக்கவில்லை; மாறாக, காந்தி யார் எனத்தான் கேட்டார்கள்! என்னைப் போல, முகவரி அளித்த முற்போக்கு முகவர்களை முகச்சுளிப்பு அடைய வைப்பது மூத்தோர் பண்பல்ல. கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் அகிம்சா பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் காந்தியத்தில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை என்பதே உண்மை.

பிணப் புழக்கம் அதிகரித்து விட்டது. பிணங்கள் பணங்களாக மாறமுடியாது. பணங்கள், சிறு எழுத்துப் பிழையினூடே போதை அளிக்கலாம். ஆனால் காந்தியம் என்பது காந்தீயமே! தீயவர்களின் தீய்ந்த உணர்ச்சிக்குத் தீனி போடவேண்டாம் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் மகாக் குவியம். ஒன்று சேர்ந்து காந்தீயத்தைத் தீய்ப்போம்! தமிழர்களாக, இனமானர்களாக… அடுத்த போராட்டத்தை, காந்தியாருக்கு எதிராக அறிவிப்போம்!

வாழ்க ராஹுல் காந்தி! ஒழிக காந்தீயம்! – எனச் சூளுரைப்போம்!!

:-(

3 Responses to “என்னது?  ஐயய்யோ! கருணாநிதியும் பெரியாரும் எம்ஜிஆரும்கூட உயிர்த்தெழுந்து விட்டார்களே! (ஊக்கபோனஸ்ஸாக, காந்தியும்!)”

  1. Sundaramani Says:

    ஐயா
    உங்கள் கட்டுரை நன்றாக உள்ளது.

    தொடர்ந்து பல வருடங்களாக உங்கள் வலைப்பக்கத்தை படித்து வரும் எழரைகளில் நானும் ஒருத்தி.

    உங்கள் கட்டுரைகளில் இருக்கும் கோபம், இயலாமை, கேலி, நகைச்சுவை, அறிவுசார் கேள்விகள் ஆகியவை என்னை மீண்டும் ஒத்திசைவு தளத்தை நோக்கி அதிகம் வரவைக்கும் கூறுகள்.
    ஆனால், உங்களுடைய கட்டுரைகளில் ஒருபக்க சார்பு நிலை உள்ளதோ என சிலசமயம் எண்ணத்தோன்றுகிறது.
    உதா:: ஏனெனில், திராவிடத்தில் கழுதைப் பேரம் சகஜமப்பா…

    நான் எந்த கட்சியையும் சார்ந்தவளல்ல, அதே போல யார் தவறு செய்தாலும் அது நானேயானாலும், தவறு தவறே, என்ற நிலைப்பாடு கொண்டவள்.

    கழுதைப் பேரம், முன்பு காங்கிரசிலும், திராவிட கட்சிகளிலும், ஏன் நேற்று வந்த துடைப்பக் கட்சியிலும் நடந்துள்ளது.
    தாமரைக் கட்சியும் இதில் விதிவிலக்கல்ல.
    உதா:: தூரக்கிழக்கு மாநிலங்கள், கோவா, கர்நாடகா (இரு முறை), ம.பி., மகாராஷ்டிரா.
    https://www.news9live.com/knowledge/what-is-horse-trading-incidents-that-rocked-indian-politics-in-recent-times-153815

    ஆனால், நீங்களோ நேரு, அனைத்து காந்திகள், காங்கிரஸ், திராவிடம் தவிர வேறு எதைப்பற்றியும் எழுதுவதில்லை.
    கோட்சே, சாவர்க்கர், நேதாஜி அவர்களின் உண்மை வரலாறையும் சேர்த்து. உங்களுக்கு வரலாறு வேப்பங்காய் என தெரியும். வரலாறுக்கும், அரசியலுக்கும் உள்ள அக்காள், தம்பி தொடர்பு நீங்கள் அறியாததல்ல.

    நிற்க::
    நீங்கள் அரசியல் வலைப்பதிவு( என் வரிகளில்: பா. ஜ.க. அல்லாத கட்சிகளையும், திராவிடக் கட்சிகளையும் துவேஷித்தல்) என்றெண்ணி ஒருச்சார்புப் பதிவுகளை இடுவதாக நான் நினைக்கிறேன்.

    தவறிருந்தால் வழக்கம் போல திருத்திக்கொள்வென்.


    • அம்மணி,

      உங்கள் நியாயமான கருத்துகளுக்கு நன்றி.

      0) நான் நடுநிலை கிடையாது. பலமுறை இது குறித்து எழுதியிருக்கிறேன் என நினைவு. எனக்கும் அஜெண்டா என்பது சர்வ நிச்சயமாக இருக்கிறது. (எல்லாருக்கும் இப்படித்தான், இல்லையென்பவர்கள் பொய் சொல்கிறார்கள்)

      எனக்குச் சரி என்று பட்டதைச் சொல்கிறேன், முடிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள், இல்லையேல் ‘இதுவும் ஒரு பக்கம்’ எனக் கருதுங்கள்; இதுவும் முடியாதென்றால் தாராளமாக எதிர் கருத்து தெரிவிக்கலாம், நானும் முடிந்தபோது பதில் கொடுக்கிறேன். திட்டவும் திட்டலாம், ஒரு பிரச்சினையுமில்லை.

      1) தாங்கள் சொல்வது சரி – ஆனால் பாஜக இன்னபிற பற்றி நேர்மையாகவும் அபாண்டமாகவும் விமர்சனம் செய்யப் பலர் இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்கிறேன்.

      2) எனக்கு, பாரதீயம் என்பது உவப்பானது. முடிந்தவரை அதனைச் சமரசமில்லாமல் போற்றும் எந்தவொரு கட்சியும் எனக்கு முடிந்த அளவுக்கு உவப்பானதே; ஆகவே பாஜக.

      3) குதிரைப் பேரம் என்பது கழுதைப் பேரத்துடன் பொருத்திப் பார்க்கும்போது கொஞ்சம் ஒப்புக் கொள்ளக் கூடியது என எண்ணுகிறேன்.

      4) //ஆனால், நீங்களோ நேரு, அனைத்து காந்திகள், காங்கிரஸ், திராவிடம் தவிர வேறு எதைப்பற்றியும் எழுதுவதில்லை.
      கோட்சே, சாவர்க்கர், நேதாஜி அவர்களின் உண்மை வரலாறையும் சேர்த்து.

      நான் ஜெயமோகன், எஸ்ராமகிருஷ்ணன் இத்தியாதிகள் பற்றியெல்லாம் நிறையவே எழுதியிருக்கிறேன். சிலசமயங்களில் கல்வி பற்றியெல்லாம் கூட. என்னை மன்னித்துவிடுங்கள்.

      கோட்ஸே, ஸாவர்க்கர் இன்னபிறர் பற்றி எழுதலாம் – நேரமும் குவியமும் வேண்டும். பொதுவாகவே நான் சாம்பல் நிறத்தின் உபாசகன். நான் ஸாவர்க்கரின் ஆகிருதியைப் போற்றுபவன்.

      5) //உங்களுக்கு வரலாறு வேப்பங்காய் என தெரியும்.

      இந்த முடிவுக்குத் தாங்கள் எப்படி வந்தீர்கள் எனப் புலப் படவில்லை. வரலாறு என்பது எனக்குப் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. ஆனால் உங்கள் கருத்தினைப் பதிவிட உங்களுக்கு உரிமை இருக்கிறது.

      6) // ஒருச்சார்புப் பதிவுகளை இடுவதாக நான் நினைக்கிறேன்.

      உங்கள் கருத்து, உங்கள் விருப்பம். என் கருத்தும் அதே போலவேதான். சரியா?

      7) //தவறிருந்தால் வழக்கம் போல திருத்திக்கொள்வென்.

      ஒரு தவறுமில்லை. தொடர்ந்து சாடவும். ஒரு பிரச்சினையுமில்லை.
      மறுபடியும், நன்றி. :-)


      • ‘ஒண்ணரைப் பக்க நாளேடு ‘ தினுசில் இருப்பதால் குருமூர்த்தி வழக்கு போடப்போகிறாராமே!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s