1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்கள், மதுபூர்ணிமா கிஷ்வர், மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி – குறிப்புகள்

August 5, 2021

பலப்பல ஆண்டுகளாக நிறைய யோசித்து, அதனாலும் பித்துப் பிடித்து இக்குறிப்புகளை எழுதுகிறேன்.

1

நம் இடதுசாரி-அதிலிபரல் வர்ணனைகள் படி,  மாப்பிள்ளைமார்களால் 1921ல் அரங்கேற்றப்பட்ட ஹிந்து படுகொலைகள், ‘பொருளாதாரக் காரணங்களால்’ விளைந்தன. இன்றுவரை இதுதான் ‘ஒப்புக்கொள்ளப்பட்ட’ கதையாடல். நம் இர்ஃபன்ஹபீப் பிபன்சந்திரா ரொமிளாதாபர்களால் உருவாக்கப்பட்ட, சுவாரசியமிக்க தொன்மம்.

உண்மையைச் சொல்லவேண்டும்; ஏறத்தாழ 22 வயதுவரை நானும் இந்தத் தொன்மத்தைத்தான் நம்பிக்கொண்டிருந்தேன். பின்னர் அனுபவங்களும் ஓரளவு ஆழ்ந்த படிப்புகளும் வாய்த்த பின்னர் – அவை அப்படியில்லை என்பதை உணர்ந்தேன், அறிந்தும் கொண்டேன்.

ஏனெனில் நேர்க்கோட்டு வர்ணனைகள் வரலாற்றுக்கு ஒத்துவரா; ஆகவே மார்க்ஸிய நோக்கு என்பது கடாசப் படவேண்டியது என்பதை தெரிந்துதெளிவதற்கு நான் பிரயத்தனப் படவேண்டியிருந்தது; பலதிசைகளிலிருந்தும், பல பார்வைகள் கொண்ட அணுகுமுறைகள் வழியாகவும் எழுதப் பட்ட வரலாறுகளை, அதுவும் அவை காத்திரமான தரவுகள் சார்ந்து இருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்வதற்கு பயிற்சி தேவைப் பட்டது; வரலாற்றுக் காரணிகளை இனம் கண்டுகொள்வதற்கு பல சான்றோர்களைப் படிக்கவேண்டியிருந்தது. ஆகவே ஓரளவு தேறிவிட்டேன் என்கிற பிரமையில் இருக்கிறேன். (ஓரளவுதான்!)

ஆகவேதான் – அதாவது இருந்தாலும், மாப்பிள்ளைமார் கலகம் என்பது இஸ்லாமிய ஜிஹாதி அட்டூழியம் என்பது தான் உண்மை என்கிறேன் – அதாவது அது, கிலாஃபத் இயக்கத்தின் ஒரு பகுதி என்றாலும்.

1921ஆம் வருடத்தில் சுமார் இரண்டரை மாதங்களுக்குக் குவியத்துடன் நடத்தப்பட்ட (அதற்கு முன்னரும் இம்மாதிரி ஹிந்துக்களுக்கு எதிரான விஷயங்கள் அங்கே நடந்திருக்கின்றன என்றாலும், சிலசமயம் க்றிஸ்தவர்களுக்கு எதிராகவும் கூட என்றாலும்…)  இஸ்லாமிய அட்டூழியங்கள் – படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், கத்திமுனை மதமாற்றங்கள், ரத்தக்களறிகள் இன்னபிற – பிற்காலத்தில் எப்படி அறிவியல் பூர்வமாக ஜிஹாத் அணுகப் படும் என்பதை ஒரு கோரமுன்னூட்டமாகச் சொல்வதாக நினைக்கிறேன்.

அதற்கு முன்னேயும் பலப்பல இடங்களில் இதே ஜிஹாத் அசிங்கங்கள் சிறிய அளவில் நடந்திருந்தாலும், பரப்புரைகள் (எடுத்துக்காட்டாக: கான்பூர் மஸூதி களேபரம்) நடந்திருந்தாலும்  – இதுதான் ஒரு முக்கியமான, நடைமுறை படுத்தப்பட்ட டெம்ப்ளேட் எனக் குறிப்பிடுகிறேன்.

2

இந்த 2021  வருடம், கூறுகெட்ட கிலாஃபத் போராட்டம்  – ஆகவே மாப்பிள்ளைமார் ஜிஹாத் கொடூரத்தின் முதல் நூற்றாண்டு கொண்டாடப் படுகிறது. (மன்னிக்கவும்!)

இது தொடர்பாக, என் அன்புக்கும் மரியாதைக்கும் (சில சமயங்களில் அங்கலாய்ப்புக்கும்) உரிய மதுபூர்ணிமா கிஷ்வர் அவர்கள் இணைய உரையாடல் ஒன்றை ஒருங்கிணைக்கிறார்.

இதன் முதற்பகுதி நேற்று மாலை; இன்னமும் நான்கு நாட்களுக்கு இது நடைபெறுகிறது.

முடிந்தவர்கள், நம் வரலாறுகளில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த வரிசையைத் தொடர்ந்து பார்த்து உய்யலாம்.

இதுகுறித்த, முடிந்துபோன+இனிவரவிருக்கும் லைவ்ஸ்ட்ரீம் யுட்யூப் விடியோக்களின் தொகுப்பு:

https://www.youtube.com/channel/UCQJoGB7Dzi7vzoltiVJkUKQ

ஃபேஸ்புக்கிலும் இது லைவ்ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது என நினைக்கிறேன்:

https://www.facebook.com/manushi.india/

என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய அஜய் ச்ருங்கூ அவர்கள், கேள்விபதில்களை ஒருங்கிணைக்கிறார்.

கரும்பைத் தின்னக் கூலியும் வேண்டுமோ? (ஆனால் இந்தக் கரும்பு கசப்பு – ஏனெனில் உண்மைகளைப் பேசுவது இவ்வரிசை; என்ன செய்ய…)

3

மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு காம்ப்ளெக்ஸ் பிறவி.  தூரத்தில் இருந்து ஆராதனை, அருகில் சென்றால் சிடுக்கல்கள். என்ன செய்வது, சொல்லுங்கள்… :-(

கடைசியில் பஹுரூபி, காரியங்களைச் செய்பவர் என்கிற ரீதிகளில் அவரை  வெகுவாக மதிக்கிறேன் என எனக்குச் சொல்லிக் கொள்வதற்குள் முழிபிதுங்கிவிட்டது.

அதேசமயம். அவரை ஏகோபித்து ஆராதிக்கும்-வழிபடும் இடத்திலிருந்து பின்னர் பலப்பல அனுபவங்களுக்கும் அறிதல்களுக்கும் பின்னால் – சிறிது விலக நேர்ந்தது குறித்து எனக்கு ஆச்சரியமில்லை. வருத்தமும் இல்லை. ஏனெனில் அவரவருக்கு அவரவர் பயணம் – ராஜபாட்டைகள், முடிவிலா ஒற்றையடிப் பாதைகள், முட்டுச் சந்துகள். அவ்வளவுதான்.

இருந்தாலும்.

ஒருவருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, நம் பாரதவரலாற்றின் முக்கியமான அங்கமாக அவர் கடந்த நூறு ஆண்டுகள் போலாக இருக்கிறார் என்பது பிரத்யட்ச உண்மை. இதனை ஒப்புக் கொள்ளாமல், நம் பாரதத்தைப் புரிந்துகொள்வது சரியாக இருக்காது. அதேசமயம், அவர் ஒருவரால் தான் ‘கத்தியின்றி ரத்தமின்றி’ என்னவோ வந்தது என்பதும் உளறல்தான். ஏனெனில் பாபுஜி செய்ததில் சில மிக அருமையான விஷயங்களும் இருந்திருக்கின்றன, படுமோசமான விஷயங்களும்தான். அவரும் திரித்தார், பிறரும் அவர்களுடைய பங்குகளுக்குத் திரித்தார்கள். பாபுஜி பல விஷயங்களை வெகுளியான அணுகினாரா அல்லது புத்திசாலித்தனத்துடன் எதிர்கொண்டாரா என்பதெல்லாம் கேள்விக்குரிய விஷயங்கள். இவற்றையெல்லாம் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வளவுதான்.

அதே சமயம், பாரதம் குறித்த நியாயமான உணர்வுகள் திரண்டுவரும்போது – பலவகைகளிலும் அதன் ஆதாரசுருதிகளை மறுதலித்த பாபுஜியை வெறுப்பதும் ஒரு தொழிலாக ஆகிக்கொண்டு வருகிறது. இது தேவையற்ற விஷயம். (எந்தவொரு சிடுக்கல் நிறைந்த தலைவரிடமும் (முக்கியமாகச் சுயம்புக்களிடம்) ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயங்களும் இடக்கையால் புறம் ஒதுக்கக் கூடிய விஷயங்களும் இருக்கின்றன – நம் ராஜாஜி ஆம்பேட்கர் உட்பட; ஜவாஹர்லால் நேரு சுயம்புத் தலைவரல்ல, மன்னிக்கவும்!)

அதேசமயம்- பாபுஜி இறக்கும் வரையிலும் ஏன், அதற்குப் பல மாமாங்கங்கள் பின்னரும் அவரை வெறுத்துக்கொண்டிருந்த, இழிவாகப் பேசிக்கொண்டிருந்த இடதுசாரி-லிபரல்கள், திடீரென்று அவர் பெருமைகளைப் பாடுகிறார்கள் – காந்தியின் பாரதம் ஹிந்துத்துவாவால் நெறிக்கப்படுகிறது என்கிறார்கள். இப்படி இந்த தண்டக்கருமாந்திரங்களால், பாபுஜியின் பிம்பம் அறுவடை செய்யப்படுவதை நாம் நிராகரிக்கவேண்டும்.

எது எப்படியோ… பலப்பல வரலாற்று ரீதியான காரணங்களால் – பாபுஜி இன்னமும் ஒரு உள்ளிடை சக்தியாக பாரதத்தில் இருக்கிறார் என்பதை உணர்வதும் +  அவர் குறித்த விமர்சனங்கள், அவை நேர்மையானவை-கறாரானவை என இருந்தாலுமே கூட, அவருடைய பிம்பத்தைச் சிதைக்கவேண்டிய அவசியம் கொண்டிருக்கவில்லை என்பதும் – பாரதீயர்களான நமக்கு முக்கியம் என நினைக்கிறேன்.

என் நிலைமை இப்படி இருக்கையிலே. :-(

1915 வாக்கில், பாரதத்தில் தாக்கத்து ஏற்படுத்தியிருக்காத பாபுஜி இங்கு வந்து அடுத்த 6-7 ஆண்டுகளில் எப்படி ஒருமாதிரி தன்னிகரற்ற தலைவராக உருமாறினார் என்பது சுவாரசியமும் + ஓரளவுக்கு வருத்தம் கலந்த ஆச்சரியமும் தரும் விஷயம்.

(இதன் பின்புலங்களைச் சிறிது அறிந்துகொள்ள ஒரு அறிமுகப் புத்தகம் இது; மற்றபடி பாபுஜியின் தொகுக்கப்பட்ட ஆக்கங்களில் பலவிஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன)

இதனைப் பற்றி விலாவாரியாக எழுதவேண்டும். ஏனெனில் இதுவும் சிடுக்கல் நிறைந்தது.

ஏனெனில், பாபுஜி அவர்கள் – முஸ்லீம்களுக்கு மிகவும் செல்லம் கொடுத்தது (அது அவருடைய வெகுளித்தனமான நல்லெண்ணம் காரணமாகவே இருந்திருந்தாலும் கூட), அதன்மீதான காங்கிரஸ்தலைமை சார்ந்த பிரதிபலன்கள், கவைக்குதவாத கிலாஃபத் இயக்கம், அதன் இஸ்லாமிய அட்டூழியங்களை பாபுஜி கண்டுகொள்ளாமை, தொடர்ந்து ஹிந்துக்கள் கொலைவெறி பாதிப்பில் இருந்தமையை அவர் லூஸ்லவுட்டமை என பலப்பல பிரச்சினைகள்…

முடிவாக – இந்த மாப்பிள்ளைமார்களின் இஸ்லாமிய அட்டூழியங்களுக்கும் (அதாவது அதன் ஊற்றுக்கண்ணான ஜிஹாத்-கலீஃபா முனைவுகளுக்கும்), ஏறத்தாழ 1922ல் பாபுஜி ஒருமாதிரி – பாரதத்தின்-காங்க்ரெஸின் தன்னிகரற்ற தலைவராக நிறுவப் பட்டதற்கும் சிலபல தொடர்புகள் இருக்கின்றன.

பாபுஜி தான் அவற்றுக்குக் காரணம் எனச் சொல்லவில்லை – ஏனெனில் இஸ்லாமின் அங்கம் ஜிஹாத். பாபுஜி இஸ்லாமைத் தொடங்கவில்லை. ஆனால், அவருக்கு அரசியல் தேவைகள் இருந்தன என்பதோடு விட்டுவிடுகிறேன்.

ஆனால், கறாரான வரலாறுகள் எழுதப் படும்போது நமக்கு சோகங்கள் ஏற்படலாம். (இப்படியாப்பட்ட வரலாறுகள் தேவையா என்பது வேறு விஷயம்)

History (based on facts and soild evidence) is an unforgiving bitch, oh what to do.

4

அவசியம் – மதுஜி ஒருங்கிணைக்கும் உரையாடல்களை நுகரவும்.

ஏனெனில், மாப்பிள்ளைமார்கள் பாரதமெங்கும் நிறைந்திருக்கிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. ஆகவே, பாதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள்தாம் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

நம்முடைய சொந்த வரலாறுகளிடமிருந்தாவது சரியான படிப்பினைகளைப் பெற்றுக் கொள்வது நம் கடமைதானே?

நன்றி.

14 Responses to “1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் கொலைவெறி அட்டூழியங்கள், மதுபூர்ணிமா கிஷ்வர், மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி – குறிப்புகள்”

  1. KSC Says:

    Interesting.

    Ram, it would be a great idea if you can discuss these unknown aspects of Gandhiji with Aravindan Kannaiyan.

    • Muthukumar Says:

      ஐயோ , ஐஃயோ


    • ஆ! ஐயா, ஐயோ!!

      (ஆனால், நல்ல எண்ணத்துடன்தான் இதனைச் சொல்லியிருக்கிறீர்கள் என எடுத்துக்கொள்கிறேன்)

      1. Interesting – வரவர இந்த வார்த்தையே எனக்கு ஒத்துவரமாட்டேனென்கிறது. உங்கள் அமெரிக்கர்கள், ஒரு எழவையும் சொல்லவிருப்பமில்லாமல் அல்லது தெரியாமல் இருக்கும்போது பொத்தாம்பொதுவாகச் சொல்வது இந்த Interesting எனும் அர்த்தமற்ற வார்த்தை – ‘நீயி எத்தையோ ஸொல்லிக்கினே இரு, நானும் அத்தைக் கேக்றமாரீ பாவ்லா ஸெய்றேன்!’ வகை.

      நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இது உங்களுக்கு Interesting, இல்லையா?

      2. அரவிந்தனார் கண்ணையனார் – இதேபோலச் சிலமுறை முன்பே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன், இருந்தாலும்.

      2.1 எனக்கு உரையாடல்களில் பிரச்சினை ஒன்றும் இல்லை – மரியாதையுடன் நடந்துகொள்வேன்கூட.

      2.2 அவர், இரக்கமேயில்லாமல் சலிப்புமில்லாமல் தொடர்ந்து அட்ச்சிவுட்டுக்கொண்டே இருக்கிறார் – ஒரு விதமான தரவும் இல்லாமல் செயல்படுகிறார். (எடுத்துக்காட்டு: https://othisaivu.wordpress.com/2020/04/09/post-1127/ – இதில் பல சுட்டிகள் இருக்கின்றன) – தன்னை திருத்திக்கொள்வதே இல்லை.

      இருந்தாலும் – அவர் தன்னுடைய உளறல்களில் ஒன்றையாவது (கும்பமேளா குறித்தவை) சரிசெய்துகொண்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

      2.3 அவர் காந்தி விஷயங்களில் விற்பன்னர் எனச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை. உங்களுக்கு அப்படிப் பட்டால், நான் உங்களைக் கொஞ்சமேனும் அறிந்தவன் என்கிற முறையில் உங்களது அனுமானத்தை ஒப்புக் கொள்வேன்.

      (ஏனெனில் – எனக்கு அவருடைய நேரத்தையோ என்னுடையதையோ விரயம் செய்வதில் ஆசையில்லை.)

      3. அப்படி அவர் உரையாடலுக்கு ஒப்புக்கொண்டால், ஒரு தாழ்மையான விண்ணப்பம்: தயை செய்து அவரைக் கலர்கலரான படம்படமான சட்டையணியாமல் வெறுக் கோட்டுசூட்டோடு வர, தாங்கள் பரிந்துரைத்தால் மகிழ்வேன்; முடியாவிட்டாலும் பரவாயில்லைதான்.

      நான் எவ்வளவு கொடுமைகளைப் பார்த்திருப்பேன்… ஆகவே: https://video.twimg.com/tweet_video/E2m2FZ2VkAozVOH.mp4

    • dagalti Says:

      Propah steel cage match!
      Youtube livestream. We can monetize this event and proceeds can go to ஏழரையோர் மறுவாழ்வு நிதி


      • Yov! Steel cage not needed. At all.

        If the erudite gent wears one of his colourful and (pablopickaxo+salavadordali)/2 kinda shirts that would be an enough deterrent and more. (His all-knowing smile & condescension would be addl armour)

        As for me, I have my shining bald pate which I can use as an effective reflector to ward of evil beams of light/darkness that emanates from the other side.

        As for the bleddy greedy 7.5cabal, bleddy go get a life.

        Thanks!


  2. […] என்னை மன்னித்து விடுங்கள்… நான், உங்களுடைய கலர்கலர்சட்டைக்காரருடன் கோதாவில் இறங்க முடியாது – அதற்கான திராணி என்னிடம் இல்லை. இது என் பிரச்சினைதான். […]

  3. Vel Says:

    //ஏனெனில் பாபுஜி செய்ததில் சில மிக அருமையான விஷயங்களும் இருந்திருக்கின்றன, படுமோசமான விஷயங்களும்தான்.//

    உண்மையான கூற்று. காந்தியை இந்து வலதுசாரிகள் எப்படி உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும் என்று opindiaவின் நிறுவனர் ராகுல் ரோஷன் ஒரு அருமையான பத்தி ஒன்றை எழுதி இருக்கிறார்.

    https://www.opindia.com/2020/10/right-wing-hindus-godse-mahatma-gandhi-debate/


    • அருமையான கட்டுரை, சுட்டிக்கு நன்றி.

      கீழ்கண்ட வரிகளுக்கு(ம்) – அட்சரத்துக்கு லட்சம்பொன், வேறென்ன சொல்ல. பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார், அன்பர்.

      // On a serious note, I do earnestly believe that that the right-wing, or rather the Hindus, don’t have much to gain by attacking Mahatma Gandhi.

      // I’m a paranoid Hindu. I believe that if Hindus don’t realise the threats to their religious and cultural identity and if they don’t pushback in whatever capacity they can, their identity will be sullied beyond redemption in a matter of a couple of decades. Each and every Hindu will be forced to disown that identity, and the last surviving ‘pagan’ religion will vanish. Yes, what the Mughals or the British couldn’t do, can indeed become a reality in modern times with modern psyops.

      // Mahatma Gandhi, due to his really really weird and extremist pacifist ideas, ended up weakening the Hindus – there is no doubt about that. Hindus have been warriors and that’s how they survived thousands of years of invaders destroying their temples and massacring their people. Mahatma Gandhi hugely erred by trying to paint Hinduism as some inherent pacifist religion or Hindus as inherently meek and weak people. One can criticise this aspect of Gandhi without totally destroying his persona or brand.

      // Gandhi failed to see some threats. Maybe had he lived long enough, he would have realised. Or maybe he wouldn’t have. That’s immaterial. Someone who fails to see an enemy doesn’t become an enemy. All criticism of Gandhi or his ideas should have this point in mind.

      முழுக்கட்டுரையும் மொழிபெயர்க்கப் பட்டு, நம் தமிழில் வெளிவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், எனத் தோன்றுகிறது. (ஆனால் அது சுமார் ரெண்டுபேர் (அதாவது நீங்களும் நானும்) படிக்கும் தளத்தில் இல்லாமல் – கொஞ்சம் ரீச் உள்ள தளத்தில் வந்தால் மிக நன்றாக இருக்கும் எனப் படுகிறது.

      (இதேபோலப் பலப்பலவருடங்களாக, எனக்குத் தெரிந்த ‘வலதுசாரிகளுட்ன்’ – குறிப்பாக ஹிந்துக்கள்மீது கரிசனம் கொண்டவர்களுடன் சொல்லி வந்திருக்கிறேன்; பாபுஜி ஒரு ஹிந்துவாகத் தன்னை உணர்ந்தவர், அவர் பார்வைகளில் குறைபாடுகள் இருக்கலாம், அவருடைய அரசியல், வருத்தம் தரலாம் – ஆனால் தேவையேயற்று அவரைக் கரித்துக்கொட்ட வேண்டிய தார்மீக அவசியம் இல்லை; முக்கியமாக, அவரைக் கரித்துக் கொட்டுவது என்பது சரியான அரசியல் திட்டமோ செயல்பாடோ கூட அல்ல – மாறாக, அது நேரடியாக ஹிந்து எதிர்ப்புச் சக்திகளுக்குத் துணைபோகவே செய்யும் – அவர்கள் இடதுசாரி லிபரல்களானாலும் சரி, நடிக விபச்சார விபச்சாரிகளாக இருந்தாலும் சரி, ஜிஹாதிகளாக இருந்தாலும் சரி, தண்டக்கருமாந்திர பெரியாரியர்களோ திராவிடர்களோ இவாஞ்செலிக்கல் ஜெய்பீம்படையினரோ தறுதலைச் சிறுத்தைகளாக இருந்தாலோ சரி…
      அரசியலில் முதற்பாடம் – எதிரி யார். இதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

      மேலும், இதெல்லாம் வெறும் அரசியல் மட்டுமே அல்ல. இது நம் வாழ்வாதாரம், எதிர்காலம், நம் கலாச்சாரம், நம் சந்ததியினர் குறித்தது என்பதை நாம் அறியவேண்டும்…)

      • Vel Says:

        குறிப்பாக வலம் போன்ற இணைய இதழ்களில் வெளியிடலாம். அரவிந்தன் நீலகண்டன், ஜாடாயு மற்றும் ‘கிழக்கு’ ஹரன் பிரசன்னா சேர்ந்து நடத்துகிறார்கள்.

        குறிப்பாக பாபுஜியை இந்துக்கள் பழிப்பது மிகவும் தவறு, அவர் மேல் பல தவறுகள் இருக்கலாம் ஆனால் அவர் இந்துவாகவே வாழ்ந்தவர். அவரை தூற்றுவதால் நமக்கு ஒரு பயனும் இல்லை. அவரை மிகவும் வெறுப்பவர்கள் மார்சிஸ்ட்டுகள், ஆப்ரகாமிய மதத்தை சேர்ந்தவர்கள், லுட்யன்ஸ் பொறுக்கிகள். மேற்கண்ட நபர்கள் காந்தியை தூக்கி பிடிப்பது பாபுஜியின் கொள்கைகளுக்காக அல்ல, அவரின் கொலையை வைத்து இந்து வலதுசாரிகளை corner செய்வதற்குதான். இதை நாம் புரிந்து கொண்டால் போதும் இந்த leftist பொறுக்கிகளே காந்தியை தூற்ற ஆரம்பித்து விடுவார்கள்.

  4. dagalti Says:

    நன்றி.
    வழக்கறிஞர் ஷங்கு தாஸ், பேரா. ஷங்கர் ஷரன் உரைகளைக் கேட்டேன். நீரஜ் அத்ரி’யின் உரையின் சில பகுதிகளை.ச.பா, ஆ.ர – இருவரையும் முன்பு சேம்பிள் செய்த அளவு எனக்கு ஈர்ப்பில்லை, என்பதால் கேட்கவில்லை.

    ஓரளவு தேசலாக மோப்ளா கலவரங்கள் பற்றித் தெரியும் என்றாலும் நிகழ்ந்தவற்றின் கொடூரங்களும், அவற்றை யார் யார் எந்த அளவு அறிந்தே இருந்தார்கள் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியது ஷங்கு தாஸின் உரை.

    அதாவது, அது ஸர்வ நிஸ்சயமாக ‘முதலாளிகளுக்கு எதிரான தூய வர்க்கம்சார் புரட்சி’ மட்டுமே என்பதெல்லாம் உடான்ஸ் என்று தெரியும். மதம்சார் அழித்தொழிப்பே தான் என்பதில் ஐயம் இருந்ததில்லை. ஆனால் ஹைதர் காலத்திலிருந்து அதை வரிசைக்கிரமமாக தாஸ் எடுத்தவைத்த பாங்கு, சிலபல விஷயங்களை துலங்கச்செய்தது (அதாவது, அது எவ்வாறு வர்க்கப்புரட்சியாக திரித்துக்காட்ட தளங்கள் அமைந்தன என்பதை).

    நிகழ்காலத்திலேயே அதன் கொடூரத்தன்மை ஆவணமாக்கப்பட்டமை, கடந்துசெல்ல முயலப்பட்டமை – சிறப்பாக எடுத்துரைத்தார் தாஸ்.

    ஷங்கர் ஷரனின் உரை மிகச்சிறப்பாக அமைந்தது. It was uneasy to listen to certain conceptions being so substantively challenged. 
    காந்தி பல விஷயங்களை (எ.கா. இஸ்லாமிய வரலாறு) அறியவில்லை என்பது மட்டுமல்ல, அறிய முனையவில்லை என்பது மட்டுமல்ல, அது பற்றி தான் கொண்டிருந்த முன்முடிவுகளை *எக்காரணம்* கொண்டும் மாற்றிக்கொள்ள முனையவில்லை, என்பதற்கு ‘மோப்ளா பெருங்கொலைகள்/ கிலாஃபத்’ சம்மந்தமான சார்ந்து அவர் அடுக்கிய சான்றுகள் very sobering. 

    ஆர்மீனியன் அழித்தொழிப்பை சற்றுமுன்னர் நடத்திய ஓட்டோமான் சாம்ராஜ்ய /காலிஃபா’வுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் (எதுவும் தனக்குத் தெரியாது என்று தொடர்ந்து அறிவுத்தும்கொண்டு!), காந்தி நன்னடத்தை சான்றிதழ் வழங்குவதை எல்லாம் என்னவென்பது! 

    ஸ்வாமி ஷ்ரத்தானந்துடனான காந்தியின் உரையாடல், எந்த ஒரு காந்தி மதிப்பாளரையும் வருந்தச்செய்யும். 

    அஃப்கான் அரசருக்கு அழைப்பை காந்தியே கைப்பட எழுதினார் என்ற வாய்மொழித்தகவலை நான் நம்புவதாக இல்லை. காத்திரமான ஆதாரங்கள் (காந்தியின் எழுத்துக்களில் இருந்தே!) எடுத்துச் சொன்ன இந்த உரையில் அப்படி ஒரு நிரூபிக்கவியலா தகவலை எடுத்து வைக்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை.

    அவ்வுரையின் முடிவில் நீங்கள் மதிக்கும் தொகுப்பாள அம்மையாரின் வார்த்தைகள் அதீத காட்டமாக unfairஆக இருந்தன. 
     அவருக்கு காந்தி குறித்த ஏமாற்றங்கள் இருப்பதை புரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால் ஒரேடியாக கன்னாபின்னாவென திட்டித் தீர்த்தார்.

    வழக்கமாக ஹிந்துத்வாக்காரர்கள் காந்தி பற்றி சொல்லும் மலினமான பழிகளுக்கெல்லாம் சென்றுவிட்டார்: பகத்சிங் தூக்கை காந்தி எதிர்க்கவில்லை வகேரா வகேரா. பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட சகாக்கள் பெயர்கள் கூட அவருக்கு நினைவுதவறிவிட்டது நல்ல தமாஷ் தருணம். அந்த அளவு கோபாவேசம்!

    I mean it’s a genuine mistake, it could happen to anyone. But I found it hilarious that she was so animated that Gandhi was allegedly unsympathetic to Bhagat Singh and his comrades (a bogus charge of Left and Right), when she herself managed to forget the name of Rajguru in that very instance. 

    அதன்பிறகு ஒருவர் வழமையான சாவர்க்கரிய insinuationகளை அடுக்கினார், காந்தி ப்ரிடிஷ் ஏஜண்ட் என்று சொல்லாத குறை. ஷங்கர் ஷரனின் நல்லுரைக்கு பிறகு இவரை மாற்றுக்குறைவான முத்தாய்ப்புகளாக இருந்தன. 

    அடுத்த நாள் உரையில்  நீரஜ் அத்ரி கோட்ஸே புஸ்தகத்தை முன்வைத்துத் தொடங்கியது எரிச்சலைக் கிளப்பியது. வலதில் பலர் மோஹன் பக்வத்தின் DNA கூற்றால் கடுப்பாகியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ‘ஐயகோ தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா’ வகை கோபப் புலம்பல். எனக்கு இதெல்லாம் கொஞ்சம் புதிது என்பதால் வேடிக்கையாக இருந்தது. 

    ஆனால் ஒருவழியாக தலைப்புக்கு வந்தபோது நன்றாகப் பேசினார் அத்ரி: எப்படி இன்றும் பொது ஊடகங்களில் மிக மிக நேர்த்தியாக சொல் சிலம்பாட்டம் ஆடி, நூறு வருட வரலாறு கூட மாற்றப்படுகிறது என்று பேசினார். The unpacking of the suggestive wordings and twists was very well done. ஒவ்வொரு சொல்லும், எவ்வகையான மனப்பிம்பத்தை ஏற்படுத்தும் வகை மிகக் கவனமாக எடுத்து அடுக்கி பொதுவெளியில் இறக்கிவிடப் படுகின்றன என்று நுட்பமாகப் பேசினார். Insofar as it is applicable to so many writings in media in general, this had a lot of value. உரையைக் கேட்டவர்கள் அவர் குறிப்பிட்ட வழிகளை வைத்து பொதுவாகவே ஊடக செய்து படையல்களை கட்டுடைத்து மகிழலாம்.

    முந்தைய தினமே கடிபட்டதால் இருமுறை நாணிய நான், கேள்விபதிலுக்கு தங்கவில்லை.
    ———————————————

    கேட்டவற்றில் மிகச்செறிவான உரை: ஷங்கர் ஷரனின் உரை தான்.நேற்றிலிருந்து அவரது பிற உரைகளைத் தேடிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.(அடடே, அதிகமாக லஃப்ஸ் இஸ்தமால் செய்யாமல்  ஷூத் ஹிந்தி பேசினால் எனக்கும்கூட அனேகமாக புரிந்துவிடுகிறதே!)

    செறிவான உச்சம் ஒன்றை ஷரனின் உரை நெருங்கியது, ஆனால் நேரக்குறைவினால் அப்புள்ளியை வளர்த்தெடுக்கவில்லை: காந்தியின் உளவியல்.

    மேலோட்டமான ஃப்ராய்டிய எழவுகூட்டல் போல் அல்லாமல்,  ஷங்கர் ஷரன் நெருங்கிய புள்ளி செழுமையான ஒன்று, வேரொறு சந்தர்ப்பத்தில் அவர் இதை விரித்துப் பேசினால் நன்றாக இருக்கும்: 

    காந்தி தன் பட்டறிவின் மீதான நம்பிக்கையுடன், தான் சந்தித்த மனிதர்களை வைத்து, படிக்கநேர்ந்த  (மிகச்) சிலநூல்களை வைத்து தனக்கென புரிதல்களை ஏற்படுத்திக்கொண்டு முன்சென்றவர். அனேகமாக எவற்றின் பின்புலத்தையும் academicஆக முற்றாராயாமல், பழகி/பார்த்த மனிதர்கள் மூலம் மனபிம்பம் ஏற்படுத்திக்கொண்டு கருத்துதிர்த்து, பின்பு சிலவற்றை மாற்றிக்கொண்டு, பலவற்றை பிடிவாதமாக மாற்றிக்கொள்ளாமல் (நம் எல்லாரையும் போலவே) முன் நகர்ந்தார். 

    அவரது பால்யத்திலும், இளமையிலும் அவரது vantage, professional உறவுகள்,  வழியே ஏற்பட்ட சாய்வுகளை ஒட்டியே, பிற்கால உண்மைகளை பெருக்கியும், குறைத்தும் மதிப்பிட்டுக்கொண்டிருப்பார் (நம் எல்லாரையும் போலவே!) 

    தான் சத்ய அன்வேஷியாக இருப்பதைப் பற்றி அவருக்கு இருந்தது நிச்சயமாக பம்மாத்து வேடமல்ல. அவர் ஆதமார்த்தமாக நம்பியது. ஆனால் அபத்தகருத்துகள் பலவற்றைத் தொடர்ந்து சொன்னவர், முன்சொன்னவற்றுக்கு பின் செய்த செயல்களுக்கும் புதிது புதிதாக காரணங்கள் கற்பித்தவர். சத்ய அன்வேஷியால் கசப்பான உண்மைகளை ஏற்க முடிந்ததா. இல்லை தன் மிக ஆழமாக நம்பியவற்றையே சத்தியம் என்று கொண்டாரா? இதெல்லாம் எவ்வாறு நிகழ்ந்தது? பொதுவாக மனிதர்களுக்கு இது எவ்வாறு நிகழ்கிறது? காந்தி மாதிரி ஒரு sway கைகூடியவர்க்கு இப்படிப்பட்ட மனநிலை நிகழுமாயின், அது ஏற்படுத்தும் பாரதூரமான விளைவுகள் என்ன.
    இப்படி பல கேள்விகள் எழுப்பி நின்றது அவ்வுரை.

    நான் அவரை by default நேருவின் நோக்கிலிருந்தே  பார்க்கிறேன் (அடேங்கப்பா!).

    மரியாதையும், அதிசயமும், ‘இவ்விவ்விஷயங்களில் கிழவர் சரிப்படமாட்டார்’ என்கிற ஜாக்கிரதை உணர்வும், அவர் திரட்டிய இந்த coreஐச் சுற்றி நாம் நவயுகம் புகுந்தாகவேண்டும் – பல வகையில் அது அவர் நெஞ்சை அறுக்கும் என்றாலும்….என்றவாறு.

    இதில் அகங்காரமும், ஒரு வித delivererஇன் கீழ்நோக்கு மக்கட் பிரேமையும், எல்லாத்தை விட முக்கியமாக ஒரு புறவயத்தன்மையும் (சுய பாவனையாகவேனும்) மேலோங்கி இருக்கிறது.

    இவை எதுவும் காந்தியிடம் வெளிப்படையாக இல்லாதவை. உள்ளூர இருந்தவையாக அவர்களது விமர்சகர்களால் குற்றஞ்சாட்டப்பட்டவை. ஆனால் அவர் தன்னளவில் இவ்வித கணக்குப்போடும் மனநிலைகளை கடந்தவராக தன்னை உணர்ந்தார் என்கிற தோற்றமே அவர் எழுத்துகளில் தெரிகிறது.

    அதனாலேயெ இவ்வகை ஆய்வு சுவாரஸ்யமானதாக இருக்கும்.

    P.S: நீங்கள் லிங்க் கொடுத்த ஜூடித் ப்ரௌன் புஸ்தகம் $44. அதுவும் பேப்பர்பேக். எங்களைப் பார்த்தால் எப்படித் தெரிகிறது உங்களுக்கு? பேசாமல் ஒன்று செய்யுங்கள், நீங்கள் அதை படித்தபோது எடுத்த குறிப்புகளை எடுத்துப்போடுங்கள் நாங்கள் நோகாமல் நுங்கு சாப்பிடுகிறோம்.


  5. […] பதிவொன்றின் (1921 மாப்ளா/மாப்பிள்ளைமார் இஸ்லாமியக் க… 05/08/2021) மீதான ‘டகால்டி’ […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s