குற்றத்தை ஒப்புக்கொண்ட பத்ரி சேஷாத்ரியின் வாக்குமூலம்: “நானும் கல்விக்குழுவில் இருக்கிறேன்!”
August 3, 2021
ஆ!
வாழ்த்துகள், பத்ரி!. அதாவது, live particle. உங்கள் சககுழு உறுப்பினர் எஸ்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன்.
இம்மாதிரி சில கமிட்டிகளிலும் குழுக்களிலும் (தமிழகத்தில் அல்ல, மத்தியில், பல்கலைக்கழகத்தில்) ஒருமாதிரி இருந்ததனால் சொல்கிறேன்; உங்களுக்கும் இந்தக் குழுக்கள் பற்றிய முந்தைய அனுபவங்கள் இருக்கின்றன என்பதையும் அறிவேன்.
ஆகவே. இருந்தாலும்.
1. இவை பெரும்பாலும், அதாவது, ~100% – ஜிகினாக்களே; கவைக்குதவாத திருப்திப்படுத்தப் படல்கள், சரியான டிஓஆர் இல்லாமை, இருந்தாலும் கண்டுகொள்ளப்படாமை, முக்கியமாகச் செயல்படுத்தப்படாமை, முதலில் ஓரிரு அமர்வுகளில் இருக்கும் உரையாடல்களின் தன்மை நீர்த்துப்போதல், சக அறிவுரையாளர்கள் டைம்பாஸ் என வருவது, வருடாவருடம் சடங்காக மாறுவது – அதில் ஹலோஹலோ என்பதிலேயே நேரம் போய்விடும் — என பலப்பல சந்தோஷங்கள்.இருக்கும் அதில்… (+ஒரிரு சமயங்களில் தரவுகளற்ற காட்டுக்கூச்சல்கள் – அக்குழுக்களில் இடதுசாரிகள் இருந்தால், நிறைய பட்டிருக்கிறேன்!)
ஆனால் – ஏமாற்றங்களுக்குத் தயாராக இருக்கவேண்டும். கடும் உழைப்பைக் கொடுத்து, தரவுகள் சார்ந்த கறாரான கருத்துகளை, காத்திரமான பரிந்துரைகளை முன்வைத்தாலும், அவை விழலுக்கு இறைத்த நீராக மாறத்தான் வாய்ப்புகள் அதிகம். இருந்தாலும்… உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை…
எது எப்படியோ. வெறும் டீ+பொரைக்கு என்றில்லாமல், ஏதேனும் உருப்படியாக நடந்தால் மகிழ்ச்சியே.
2. இந்தக் குழு கதம்பமாக இருக்கிறது. இதில் சிலர் கல்வி விவகாரங்களில் முனைப்பில்லாமல் கலவி விவகாரங்களில் முழுமூச்சுடன் குவியம் செலுத்தியவர்கள் என்பது நமக்கு மிகவும் சந்தோஷம் கொடுப்பது; அதனால் என்ன -. ல் ல என்பவற்றுக்கிடையே பெரிய வித்தியாசம் இல்லை என்பதும் உண்மைதான்.
3. ஏன் ஒரு திரு நங்கையோ திருமதிநம்பியோ கூட இக்குழுவில் இல்லை? வருத்தமாக இருக்கிறது. இத்தனைக்கும் ஒரு ரஷ்யர் இக்குழுவில் இருக்கிறார்வேறு!
கேஜிபி காரரோ? இங்கே ஒற்றுவேலை பார்த்து ரஷ்யாவின் கல்வி நிலையையும் அதன் பாடப்புத்தகங்களின் தரத்தையும் உயர்த்திவிடுவாரோ?
(கவனமாக இருக்கவும்; நம் தமிழகத்தின் கல்வித் திட்ட ரகசியங்களைக் கடத்த எடுக்கப்படப்போகும் சதித் திட்டங்களை முறியடிக்கவும்!)
மாற்றுத் திறனாளர் என ஒருவர் கூட இக்குழுவில் பிரதிநிதித்துவம் செய்யப் படவில்லை என்பதும் சோகமே! நம் நண்பர் மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு இவ்விதத்திலும் தகுதி இருக்கிறதே! ஏன் அவரைப் புறக்கணிக்கிறார்கள்?
4. பல வருடங்களாக எனக்குச் சந்தேகம்; உங்கள் சககுழுவுறுப்பினரான திரு பாலகுருசாமி அவர்கள் தலையில் செயற்கைத் தலைமுடிக் கொத்தைச் சூடிக் கொண்டிருக்கிறாரா?
அப்படி இல்லையென்றால், அவர் என்ன மூலிகை எண்ணெய் தடவிக்கொள்கிறார் என்பதை விசாரித்து ஒரு பதிவு போடுவீர்களா? என்னைப் போன்ற மாற்றுக்கறுப்புமுடியாளர்களுக்கும், மாற்றுமொட்டையாளர்களுக்கும் உதவிகரமாக இருக்கும்.
நன்றி.
—
August 3, 2021 at 19:01
இந்த மேனாள் என்ற சொல்லை எப்படி எஸ்ரா மொழிபெயர்ப்பு செய்வது? கேட்கதவு மாதிரி இருக்கிறதே?
On Tue, Aug 3, 2021 at 6:38 PM ஒத்திசைவு… प्रत्याह्वय… resonance… wrote:
> வெ. ராமசாமி posted: ” ஆ! வாழ்த்துகள், பத்ரி!. அதாவது, live particle. > உங்கள் சககுழு உறுப்பினர் எஸ்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன். இம்மாதிரி சில > கமிட்டிகளிலும் குழுக்களிலும் (தமிழகத்தில் அல்ல, மத்தியில், > பல்கலைக்கழகத்தில்) ஒருமாதிரி இருந்ததனால் சொல்கிறேன்; உங்களுக்கும் இ” >
August 3, 2021 at 20:11
முன்னாள் = three day
மேனாள் = ஆட்டுக்குரல்தினம், சித்திரைத்தினம் (அ) வைகாசிதினம்
இதையே மேன்+ஆள் என விரித்தால், மனிதமனிதன் அல்லது ஆண்பிள்ளையாண்பிள்ளை.
(வரவர யாருக்கும் உழைக்கவே விருப்பமில்லை! மொழிபெயர்ப்பும் கைப்பழக்கம் என்பதை நீங்கள் அறிவது எப்போது?)
August 3, 2021 at 19:21
என்ன ஒரு நட்சத்திரப் பிரகாசமான குழு!
ஒருவருக்கொருவர் சளைக்காத பற்பல சான்றோர் நிறைந்த அவை.
கூடலின் நிமிடங்கள் (minutes of the meeting) படிக்க படு சுவாரஸ்யமா இருக்கும் போல இருக்கே.
எனக்கு இந்த அலுவல்சாரா’ங்க்ற வார்த்தை mainstream ஆனதே பயங்கர தமாஷா இருக்கு.
இது எப்படி unofficialக்கு மொழிபெயர்ப்பாகும்?
குழு விதி: இங்க அலுவல் சார்ந்த விஷயங்கள் பேசக்கூடாது, அலுவல் சாராத விஷயங்கள் தான் பேசணும்
Half the குழு: அதுக்கென்ன ஜமாய்ச்சுடலாம்
கழகத் தலைவர் லியோனி: நான் ஒருத்தன் இங்க இருக்கேன்
August 3, 2021 at 20:15
பொறாமைப் படாதீர்கள்.
நாமும் நம் ‘பாட்டாளி மக்கள் கட்சி’போல, ஒரு நிழலான நிழல்அலுவல்சாராகல்விக்குழு அமைத்தால் போச்சு! (கண்டிப்பாக, அவரவர் தமக்கான டீ+பொரைகளைப் பார்ஸேல் செய்து கொணரவேண்டும்)
நிழலின் அருமை உதைக்கும்சூரியன் ஆட்டோவில் வந்து அருள்செய்தால் நீங்களெல்லாம் சரியாவீர்கள், துரோகிகளே!
August 3, 2021 at 22:06
//வலதுசாரி பத்ரி//
பத்ரி சேஷாத்ரியின் ஒரே தகுதி அவர் ‘வலதுசாரி’ என்பதுதான் போலும், அதன் அடிப்படையிலேயே அவருக்கு ‘தாராள மனதுடன்’ குழுவில் இடமளிக்கப் பட்டிருப்பதான தொனியை இப்போதே உருவாக்கிவிட்டன பேடிகள். அப்படியெனில் அந்த மேனாள் உதிரியின் தகுதி என்ன?
பூவோடு சேர்ந்து நாரும் மணந்தால் மகிழ்ச்சிதான். ஆனால், சாக்கடை விலங்குகளுக்கு மலரின் மகிமை தெரியுமா என்பதே கேள்வி. உண்மையாகவே கல்விக்குழுவில் இடம்பெறுவதற்கான தகுதிகளைக் கொண்ட பத்ரி சேஷாத்ரி போன்றோருக்கு இக்குழுவில் இடம்கொடுத்ததே அவர்களை பலியாடுகளாக்கத்தானோ என்ற ஐயம் எழுகிறது. அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன.
‘ஒவர் நைட்ல பட்ஜெட்டை போட்ருவேன்’ எனச் சவடால் விடும் உலகமகா பொருளாதார மேதையின் நிபுணத்துவம் போதாமல் பன்னாட்டு பொருளாதார நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆலோசனை கேட்பதாக அறிவித்தது இந்த அரசு, அதனால் விளைந்த பயன்?
ஏதேனும் ஆக்கப்பூர்வமாகச் செய்துவிட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் பத்ரி இக்குழுவில் இணைந்திருப்பார். அவரது ஆலோசனைகள் ஏற்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தால் அது தமிழக மாணவர்களின் அதிர்ஷ்டம்.
தனிப்பட்ட முறையில் கல்வி மேம்பாட்டிற்காகத் தனது பங்களிப்பை வழங்கிவரும் ஒரு மனிதரை ‘கல்வி ஆலோசனைக் குழு’ என்ற பெயரில் கபளீகரம் செய்யாமலிருந்தால் சரி.