11-17 வகைகளில் ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி?(க்றீச்சிடுதல் (5/n))

September 13, 2018

…இது இந்த எழவெடுத்த வரிசையில்  இதுதான் கடைசிப் பகுதி. நீங்கள் தப்பித்தீர்கள். கவலை வேண்டேல்!

இதன் முதல் மூன்று பதிவுகள்: ஒன்றாவது; இரண்டாவது; மூன்றாவது.
(இந்த நான்காம் பதிவில் சுமார் 1750 வார்த்தைகள், ஜாக்கிரதை! தாராளமாக, விட்டுவிட்டு, தப்பித்தேன் பிழைத்தேன் (=errorized honey) எனத் தலைதெறிக்க ஓடலாம், நன்றி!)

-0-0-0-0-0-0-

11. ஜெயமோகன் பொதுவாகவே வரி அதிகரிப்புக்கு ஜே போடுபவர். அவருடைய வெண்முரசின் வரிகள் அதற்கு ஒரு சாட்சி – சீன வால் போல நீண்டு நெடிந்து உயர்ந்து தாழ்ந்து குழைந்து வளைந்து போய்க்கொண்டே … …ஏஏஏஏஏ இருக்கிறது அந்த, அவ்வப்போது மஹாபாரதம் போலச் சாயல் கொண்டிருக்கும் தலையணைரயில்வண்டி அதிபுனைவு. இப்படியாப்பட்ட இடத்தில் இருந்துகொண்டு, அவர், நரேந்திரமோதி வரிவிதிப்பு அதிகரிப்பு ரொம்பக்காரம் இனிப்பேயில்லை என்றெல்லாம் கலந்தடித்துப் பினாத்துவது கொஞ்சம் நகைச்சுவையாகவே இருக்கிறது. வரி அதிகமானால் அவர் இறும்பூதடைவதுதானே வழக்கம்? (எனக்கும் அப்படித்தான், ஒரு வார்த்தையில் சொல்லக்கூடுவதை ஒன்பதாயிரம் வார்த்தைகளுக்கு நீட்டிப்பதில் அப்படியொரு அலாதி மகிழ்ச்சி, போங்கள்!)

வெண்முரசு MMMMMCCCXXVI-ஆம் பாகம் ‘கருமுகில் வரிகருடன்‘ எனும் தலைப்பேகூட, படுபீதிக்குள்ளாகியிருக்கும் வாசகர் பொறுமையைக் கடுமையாக Tax செய்வதுதானே?

ஆனாலுமேகூட, நம் திடீரெக்ஸ் பொருளாதார விற்பன்னருக்குத் தெரியாததல்ல – இந்த மோதி ஆட்சியில் சராசரியாக நேர்முக, மறைமுக வரிகள் விகிதம் குறைந்திருக்கின்றன. ஆனால், வரி ஏய்ப்பு குறைந்திருப்பதினால், வரிசேகரம் அதிகமாகி இருக்கிறது. பாவம்,  அவர் இந்த இசகுபிசகான உண்மையைக் கண்டுகொள்ளவில்லை. அதனால் என்ன, ஒரு மகாமகோ புனைவு எழுத்தாளர் புகைச்சலுடன் புனைந்துகொண்டே இருப்பதில் என்ன ஆச்சரியம், சொல்லுங்கள்? (இதிலும் அவர் நம்மைப்போலத்தான், ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல் ஏனோதானோ என உளறிக்கொட்டுபவர்)

12. தற்கால படுதீவிர தமிழ் இலக்கியவாதிகளின் சாபக்கேடு என்னவென்றால் நேற்று இல்லாவிட்டால், நேற்று முன்தினம் – அவர்கள் காப்பி அடித்திருப்பார்கள். இதற்கு (எனக்குத் தெரிந்தவரையில்) விதிவிலக்கே இல்லை. எனக்கு மிகவும் சலிப்புதரும் விஷயம் இது. :-( இன்றுவரை இதுகுறித்த (நான் இதுவரை விலாவாரியாக எழுதாத) சிலபல விஷயங்களை என்னால் (ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தாலும்) ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. ஆனால் இதுபற்றி மேலதிகமாகவும் விலாவாரியாகவும் நான் எழுதாமலிருக்கவே ஆசை. ஹ்ம்ம்ம்.

…சிலசமயம் காப்பியடிக்கப்பட்டது முழு ஹல்வாவாக இருக்கும். சில சமயம், மையக்கரு. சில சமயம் ஒரு பத்தி. சில சமயம் சொற்றொடர். சில சமயம், சிந்தனைச் சரடு. இந்த ஒற்றியெடுத்தல் வகையறாக்களை கொஞ்சம் நோண்டிப் பொருத்திப் பார்த்தால் அது கொடுக்கும் ஆயாசம் இருக்கிறதே! சோகம்.

அதாவது – முதலில் – படைப்பு(!) குறித்த பின்புல விஷயங்களை ஆராய்வது… பாவப்பட்ட மூலம் எப்போது பதிப்பிக்கப் பட்டது, இந்தியாவுக்கு எப்போது வந்திருக்கலாம், அது இணையத்துக்கு எப்போது வந்தது, காப்பியடிக்கப்பட்ட நிர்மூலம் எப்போது, எங்கு எப்படிக் கட்டமைக்கப்பட்டது; காப்பியடிப்பவரின் சௌகரியங்கள் என்னென்ன? அவருடைய யுக்திகள், பாடுபொருட்கள், குவியங்கள் யாவை? காப்பியடித்தவரின் உலக அனுபவங்களும் கற்பனைத் திறனும் சூழல்களும் எப்படிப்பட்டவை?

பின்னர் – மேற்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு, குடென்பர்க். விக்கிபீடியா போன்ற தளங்களிலும், யுவக்ருஷ்ணா போன்றவர்கள் சஞ்சாரம் செய்யும் பிரதேசங்களிலும் உள்ள வாக்கியங்களோடு – காப்பியடிப்பவர்களின் நகல் எழுத்துகளை(!) பேபல்ஃபிஷ்  போன்றவைகளின் வழிமுறை அல்காரித்ம்களை உபயோகித்து மொழிமாற்றி – பொருத்திப் பார்த்து…

இதற்கான நிரூபணமாக – என் எட்டாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு ப்ரொக்ராம்மிங் (ஹ்ம்ம், டெக்ஸ்ட் ப்ராஸெஸ்ஸிங் விஷயத்துக்கு மேற்பட்டு கொஞ்சம் மசாலா) கற்றுக்கொடுக்கிறேன் பேர்வழியென 2009-10 வாக்கில் தேவைமெனெக்கெட்டு ஒரு கணிநி நிரல் ஒன்றை (லிஸ்ப் மொழியில்) எழுதி பல எழுத்தாளர்களின் ‘ஆகிருதி’யை உணர்ந்து இன்னமும் துயரம் அடைந்தேன் என்பது வேறு விஷயம். (யோசித்துப் பார்த்தால், டிஎன்ஏ முதல், காப்பியடிக்கவே படாமல் உயிரினங்கள் (நாம் உட்பட)  படைக்கப்படவோ, படைக்கவோ முடியாதென்பது உலக நியதி அல்லவா? ஸர்வம் காப்பிமயம் ஜகத்.)

இன்னொரு விஷயம் என்னவென்றால் – நமக்குப் பிடித்தமான எழுத்தாளர்களின் அல்லது இசையமைப்பாளர்களின் அல்லது திரைப்படக்காரர்களின் படைப்புகளை கேட்டு, பார்த்து, படித்து, வியந்து, நினைத்து, அவற்றின் அற்புதக் துணுக்குகளிக்கிடையே நுழைந்து அவற்றின் ப்ரபஞ்சத்தில் நீந்துவதில், பின் அவற்றை அசைபோடுவதில் உள்ள ஒரு அழகு — ஒருசமயத்தில் அப்படைப்புகளின் சிலபல நிகழ்வுகளை, வரிகளை நம்மை அறியாமலேயே உபயோகிக்க ஆரம்பித்து விடுவோம். இதன் இன்பலாகிரியே தனி. இன்னொருவர் நமக்கு இதனைச் சுட்டிக்காட்டும்வரை நமக்கு இதனைக் குறித்த ப்ரக்ஞையே இருக்காது.

எனக்கு இந்தப் பித்து நிறையவே இருக்கிறது. மகிழ்ச்சிக்குரிய வகையில் தொடர்கிறது. (‘அகுய்ற்றே, கடவுளின் சீற்றம்‘ படத்து க்ளாஸ் கின்ஸ்கி போலப் பல நாள் நொண்டி நடையுடன் திரிந்துகொண்டிருந்திருக்கிறேன். குரஸாவா அகிராவுடைய ஏழு ஸாமுராய்கள் படத்து காம்பெய் போல மண்டையைத் தடவிக்கொண்டே யோசித்திருக்கிறேன், யோசிக்கிறேன்; சமகாலங்களில்  பாரதி போல, நிகொலைய் வேவிலொவ் போல, ஷங்கர்குஹா நியோகி போல, யோனதன் ‘யோநி’ நெடன்யாஹு போல ஸ்ரீ அரவிந்தர் போலவெல்லாம்; பின்னர் எப்போதுமேபோல மஹாபாரதத்து பீமன், க்ருஷ்ணன் + ராமாயண ஜடாயு​, ஹனுமன் + நரசிம்மன் (இவர்களெல்லாம் என்னுடைய ஹீரோக்களில் சிலர்)  போல நடமாடலும் நடனமாடலும் செய்கிறேன்)

…என் குடும்பத்தினரின், ஆப்த நண்பர்களின் நிலையை நினைத்தால்தான் கொஞ்சம் சோகம், ஆனால் அவரவர்களுக்கு அவரவர் தலைவிதி, என்ன செய்வது, சொல்லுங்கள். ஏதோ தனிப்பட்ட காரணங்களால், என்னை அவர்கள் பொறுத்துக்கொண்டு போகிறார்கள் என நினைக்கிறேன்…

ஹம்பே ‘விஜய நகர’ நரசிம்மம் – இவன் என் ஆதர்சங்களில் ஒருவன்- உங்களுக்கு முடிந்தால்,  இதுகுறித்த சிலபல செய்திகளைப் படிக்க: https://twitter.com/othisaivu/statuses/927579352895692800

…ஆக, என்ன நினைக்கிறேன் அல்லது சொல்ல வருகிறேன் என்றால்,  ‘இவர்கள் காப்பியடித்திருக்கிறார்கள்‘ என என்னால் (காத்திரமாகவே, ஒப்புக்கொள்ளத்தக்க ருசுக்களின்மீதாக மட்டுமே) கருதப்படக்கூடியவர்களும், இப்படிப்பட்ட போதை கொண்ட எண்ணப்பரப்புகளில் நீந்திக் கொண்டிருக்கலாம் – அதனால், தன்னையறியாமல் தன்னை இழந்து தன்னிலை மறந்து, இப்படியே – பிறருடைய கருத்துகளையும் சொற்றொடர்களையையும் தமக்குரியதாக வரித்துகொண்டிருக்கலாம். இது ஒரு சாத்தியக்கூறுதான். ஆனால் உண்மை ஆடும் நடனங்களைப் புரிந்துகொள்ள ஒரு ஆயுள் போதாது. அல்லது இதெல்லாம் என்ன எழவோ தெரியவில்லை.

ஆனால் – சர்வ நிச்சயமாக, திட்டமிடப்பட்ட ‘அட்டைக்காப்பி முதல்வாதம்’ என்பது துக்கிரித்தனத்துடனும் ஒரு திராவிடக்கொள்ளைக்காரன் போலவும் செய்யப்படுவதொன்று. இது அவமிதிக்கத் தக்கது.

ஆனால், எக்காரணம் கொண்டும், எனக்குத் தெரிந்த இம்மாதிரி விஷயங்களைப் பற்றி, நம்மால் பொதுவாகவே மதிக்கப்படவேண்டியவர்களைப் பற்றி – விலாவாரியாக எழுதாமல் இருக்கவே ஆசை.

என் ஆசானும், தம் நீள்நகங்களால் — சராசரித்தனத்தையும் அயோக்கியத்தையும் ஆக்ரோஷமாகக் கிழிப்பதுமான என் செல்ல நரசிம்மம்தான் என்னையும் சராசரித்தனத்தில் அமிழவிடாமல், இந்த விஷயத்தில் மிகவும் நோண்டவிடாமல் தடுத்தாட்கொள்ளவேண்டும். இதில் எனக்குத் துணையாக இருக்கவேண்டும்.

ஆமென்.

13. மேற்படி ஆசாமிகளின் இன்னொரு சாபக்கேடு என்னவென்றால், பொதுவாகவே நிறைய, பிறமொழிகளில் விதம்விதமாகப் படிக்காமல் இருப்பது. ஆனாலும் படுபயங்கரமாகப் படித்து விட்டாற்போல் பாவனை செய்துகொள்வது. அல்லது, பெயர்களை வைத்துக்கொண்டு பயமுறுத்துவது. டவுன்லோட் செய்துவிட்டு படித்தாற்போலவே கற்பனை செய்துகொள்வது மட்டுமல்லாமல், நிஜமாகவே அப்படியே எழுதிவிடுவதும்கூட.

இதெப்படியென்றால் – யாராவது எந்த எழுத்தாளரையாவது குறிப்பிட்டால், உடனடியாக ஓடிப்போய் விக்கீபீடியா பார்த்தோ, அல்லது அமேஸான் கிண்டில் எடிஷனை டவுன்லோட் செய்தோ – மேலோட்டமாகப் பார்த்துவிட்டு அதன்மேற்பட்ட மேலான கருத்துகளை, ஏதோ பல மாமாங்க அறிமுகம் இருப்பதுபோல அள்ளித் தெளித்த வண்ணம் இருப்பது. அல்லது அனுபவங்களை ‘தொழில் முறையில்’ புத்தம்புதிதாக உருவாக்குவது.

என் செல்லத் தமிழ் (தமிழிலும்) எழுத்தாளரான அரவிந்தன் கண்ணையன் கூட – அவர் குறிப்பிட்ட புத்தகங்களை அவரே சரியாகப் படிக்காமல் – இப்படிச் செய்திருக்கிறார், அதுகுறித்தும் நான் தேவை மெனெக்கெட்டு எழுதியிருக்கிறேன் என்பதும் நினைவுக்கு வருகிறது.

இதன் இன்னொரு வகை ‘தமிழில் உன்னதமாக எழுதுவது ஃபார் டம்மீஸ்‘ – கண்டமேனிக்கும் இணையத்தை மேய்ந்து (ஆனால் அவற்றை புத்திசாலித்தனத்துடன் தொகுத்து) வாசகர்களுக்கு அர்ப்பணிக்கும் வகை. இதன் தேவையை நான் உணர்ந்திருக்கிறேன். ஏனெனில் – சாதா தமிழ் வாசகனுக்கு, பரந்துபட்ட உலகை ஓரளவுக்குக்கூட புரிந்துகொள்ள முடியாமல் இருப்பவனுக்கு – இவை முக்கியம்.

மேலும் டமால்டுமீலென்று மேற்கத்திய எழுத்தாளர்கள் / சிந்தனையாளர்கள் பற்றிய சீரிய கூரான செய்திகளை பாவப்பட்ட தமிழ் வாசகன் மேல் விட்டெறிவது என்பது ஒரு கலை.

(அது சரி, அடால்ஃபொ பியொய் கஸாரெஸ் எழுதிய ‘இன்வென்ஷன் ஆஃப் மொரெல்‘ எனும் அற்புதமாக நாவலைப் படித்திருக்கிறீர்களா? இல்லாவிட்டால் படிக்காதீர்கள். நான் அதனை உல்ட்டா செய்து ஒரு நாவல் எழுதி பரிசில் வாங்கலாமென எண்ணிக்கொண்டிருக்கிறேன், சரியா?)

14. ஜெயமோகன் செய்தது (பலமுறை செய்திருப்பதும்), படுமோசமான அவதூறு. ஒரு பின்புல விஷயத்தையும் தெரிந்துகொள்ளாமல் உதாசீனத்துடன் ஆனால் வீறிட்டெழும் அறச்சீற்றத்துடன் அடித்துவிடப்பட்டது அவர் கட்டுரை –மோடி அரசு, என் நிலைபாடு. யுவகிருஷ்ணா தரம். (இன்னும் அவர் எழுதும் பலப்பல விஷயங்களை அப்படிச் சொல்லலாம்); மறுபடியும் மறுபடியும் அரைத்த பொய்மாவையே அரைப்பதன் மூலம், பொய்யை மெய்யாக நிறுவிவிடலாம் அல்லவா?

அப்பதிவில் அவர் பிரத்யட்சமாகக் காட்டியுள்ள பொருளாதார அறிவு(!) என்பது வெறுமனே சோற்றுக்குச் சம்பாதிப்பது என்பதற்கு அப்பாற்பட்டு – அதிகபட்சம் வெறுமனே டீவி (அல்லது அதில் வரும் ‘உரையாடல்களை’ யூட்யூப் வகையறாக்களில்) பார்த்து, சொற்ப அரைகுறைப் புத்தகங்களைப் புரட்டிவிட்டு, இரண்டொரு தவயர்.இன் போன்ற தளங்களின் அரைகுறைத்தனத்தை உள்வாங்கிக்கொண்டு, தஹிந்து+டைம்ஸ் போன்ற மஞ்சள் தினசரிகளைப் படித்துவிட்டு, மத்திய ரிஸர்வ் பேங்க் அறிக்கைகளைக் கூட முழுவதும் படிக்காமல் செய்யப்பட்டது. அதிகபட்சம் வீட்டில் பணி செய்பவர்களுடன், சக அரைகுறைகளுடன், ‘தேர்ந்தெடுத்த’ வாசகர்களுடன், பேருந்தில் போகும்போது கூடவே பேசிக்கொண்டு சென்றவர்களை ‘துறை வல்லுநர்களாகக்’ கருதி உளறிக்கொட்டிப் படைக்கப்பட்ட விஷயம். வண்டியில் இருந்து ஏதோ தெருவில் நடக்கும் விஷயத்தை எட்டிப்பார்த்துவிட்டுப் பின் மானேதேனே அல்லது பேயேபன்றியே என வடித்தவொன்று.

அவருடைய இம்மாதிரிச் சகலகலாவல்லவ படைப்புச்சக்தி வெளிப்பாட்டை, ‘இலக்கியக்காரன் தான் சமூகத்தின் மனச்சாட்சி‘ எனும் நம்பவே முடியாத திரிசம மடமைப் பார்வையை – வெறும் புனைவு என்பதற்கு மேலாக அளவுக்கு மீறி ஆராதிப்பதில் பிரச்சினைகள். (என்ன செய்வது சொல்லுங்கள், நம் வாழ்க்கையே புனைவாய், பொய்யாய், பழங்கனவாய்ப் போய்க்கொண்டிருக்கிறது அல்லவா?)

15. ஒரு அதிமனிதனாக, அவதார புருஷனாக தன்னை அவர் வரித்துக்கொள்ள அவருக்குச் சர்வ நிச்சயமாக உரிமை இருக்கிறது. அதேபோல நாம் அவரை அப்படிக் கருதாமல் இருக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது.

நம்மை ஹீரோ என நம்மை நாமே வலிந்து கருதிக்கொண்டால், நாம் உண்மையாகவே ஹீரோவேதான் எனக் கூடியவிரைவில் நம்ப ஆரம்பித்து விடுகிறோம் அல்லவா? இதற்கு மேற்பட்டு – நமக்கென்று ஒரு வாசகர் வட்டம் படுமட்டம் முட்டை சதுரம் செவ்வகம் குழுமம் குழுடாட்டி என ஒரு எழவு ஆட்டோமேடிக்காக உருவாகும், கவலை வேண்டேல்! (நம்மைப்போலத்தான் அவர்; அவரும் ஒரு ஹீரோ எனத் தன்னைப் போற்றிக்கொள்பவர்தாம்! அதனால்தானோ என்ன எழவோ, ஒரு கும்பல் அவரைச் சுற்றி உருவாகி விட்டது ஒர்ரே echo chamber தொடர்பான பிரச்சினைகள். என்ன செய்வது சொல்லுங்கள்? சொல்லவேண்டியவைகளைச் சொல்லி, கேட்கவேண்டியவைகளைக் கேட்டுக்கொண்டு, மேன்மேலும் இம்மாதிரிச் சுழற்சிகளில் டொர்னடோ-சுழற்காற்று போல ஈடுபட்டுக்கொண்டு, ஒரே எதிரொலிமுதல்வாதம்…)

16. ஜெயமோகன் சர்வ நிச்சயமாகப் படிக்கப்படவேண்டியவரே. சர்வ நிச்சயமாக, அவர் சிரமப்பட்டு குவியத்துடன் தொடர்ந்து எழுதுவதில், என்னைப் பொறுத்தவரை, ஏறத்தாழ, குறைந்த பட்சம், 5-10% கட்டுரைகளில் காத்திரம் இருக்கிறது. இந்த அளவுக்காவது, அவரிடமிருந்து நான் கற்றுக்கொள்ள (நேராகவும், எதிர்மறையாகவும்) என சர்வ நிச்சயமாக இருக்கின்றன; என்னால், அவற்றை ஒப்புக்கொள்ளமுடியுமா என்பது வேறுவிஷயம், ஆனால், அவை விவாதிக்கப்படவேண்டியவையே.

இந்தச் சதவீதம் பிறருக்கு வேறு எண்ணிக்கைகளில் இருக்கலாம். 100%, 50%, 0% அல்லது ()100% என்றுமேகூட என…

ஏனெனில் இந்தக் காத்திரம் என்பது அனுபவிக்கப்படும் ஒன்று; ஆகவே ஒரு வாசகனின் படிப்பறிவு, அவனது வாழ்க்கை அனுபவங்கள், அவனுடைய கற்றுக்கொள்ளும் தன்மை, அவனது மூளை செயல்படும் விதம், அவன் பார்வை/நம்பிக்கைகள், அவனுடைய உழைப்பு/செயலூக்கம், அவனுடைய அளவுகோல்கள் இன்னபிறவற்றைக் குறித்த விஷயம்… (இங்கு அவன் என்றால் அவள், திருநங்கை, திருமதிநம்பி, நம்பியாண்டார் நம்பி, நங்கையாண்டார் நங்கை, பொன்னியின் செல்வன், செல்வனின் பொன்னி, சோனா மஸூரி, பாஸ்மதி, அடியாள்மதன்… … என அனைவரையும் குறிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, தயவுசெய்து என்னைக் கோபிக்காமல், அருள் புரியவும், நன்றி!)

சரி. விஷயத்துக்குத் திரும்பி வருகிறேன். :-(

அதே சமயம், பாருங்கள் – தமிழ் கலாச்சார/இலக்கிய(!)த்தைப் பொறுத்தவரையில், அதுவும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் ஜெயமோகனல்லாத பிறரைப் பார்த்தால்  (இவர்களில், எனக்குத் தெரிந்து, தொடர்ந்து நிறைய ‘புனைவு இலக்கியம்’ எழுதித் தள்ளாத ஆசாமிகளான, ஆகவேயும் என் மதிப்புக்குரிய விமலாதித்த மாமல்லன், அருண் நரசிம்மன் போன்ற சிலபல விதிவிலக்குகளைச் சேர்க்கவில்லை; பிற விதிவிலக்குகளும் இருக்கலாம், எனக்குத் தெரியவில்லை, அறிமுகமிருக்கும் பேறு இல்லை)…

  • கலாச்சாரக் கழிசடைகளான வினவாளர்கள், யுவகிருஷ்ணா, அதிஷா, விடுதலையாளர்கள் ஒரு பக்கம்.
  • அதிசராசரி அற்பர்களான எஸ்ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா போன்றவர்கள் இன்னொரு பக்கம்.
  • போதாக்குறைக்கு – ஒரு பெரிய்ய இளைஞ அரைகுறைப் பட்டாளம் குசுவிடுவதையெல்லாம் பதிவுகளாக, ரசவாத மாற்றம் செய்துகொண்டிருக்கிறது. (ஆனால், இவர்களுக்கும் ஒரு லும்பன் வெட்டிப்போராளி அல்லது அலக்கிய லாகிரி பெற்றதாக நம்பிக்கொள்ளும் குஞ்சாமணி வாசக கும்பல் – எல்லாமே வாசக அனுபவ காத்திர விஷயம்தாண்டா!).

இந்த பிரமிக்கவைக்கும் நுரைக்கலாச்சாரச் சூழலில், ஜெயமோகன் நிச்சயம் போற்றப்படவேண்டியவரே! என்ன செய்வது சொல்லுங்கள். அவர் பத்தரை மாற்றில்லாத தங்கம்தான்.

ஆக  – அவரிடமிருந்து ஒத்துவருவதை (இக்காலங்களில் அது கொஞ்சம் கஷ்டம்தான், இருந்தாலும்) எடுத்துக்கொள்ளலாம். வராதவற்றைக் கடாசலாம். அவ்வளவுதான். (ஊசிப் போனவற்றை உணவில் இருந்து விலக்கிவிட்டெறிவதும், தரமான உணவை உண்பதும் நம் கையில்தானே இருக்கிறது? பிறர்  நமக்கு (இலவசமாகவேகூட) பரிமாறுகிறார்கள் என்றாலும், நமக்கு என ஒரு தரக் கட்டுப்பாடு இருக்கிறதல்லவா? நாமெல்லாம் அப்படித்தானே?)

17. மேற்கண்ட அனைத்து வழிகளிலும்/திசைகளிலும் அவருக்கு அபரிமிதமான பயிற்சியும் வாழ்வனுபங்களும் (கற்பனையாக + உண்மையாகவேகூட) இருக்கின்றன. என்ன செய்வதுசொல்லுங்கள். அவர் காட்டில் மழை. பொத்துக்கிட்டு ஊத்துதுடா வானம்…(நமக்கும்தான், வெட்டி அக்கப்போரில் கிடைக்கும் அடைமழை இன்பம்ஸ் என்பதுஇருக்கிறதே… அதன் இன்பலாகிரியே தனி!)

ஆக, நான் எனக்கே தனித்துவமான எஸ்ராத்தனமாகச் சொல்லிக் கொள்வதென்னவென்றால் – அவரை ஒரு ஆசிரியராக, ஆசானாகக் கருதாமல் – ஒரு (நம்மைப்போல) சாதாரணராகப் பார்க்க முயல வேண்டும் (அதாவது, rabbitized wanting) அப்படிப் பார்த்தால் பனி விலகிவிடும். அவரும் நம்மைப்போல தர்ம விஷயங்களில் ஏகோபித்துத் தடுமாறும் நபர்தாம் – சில அறியாமலும்/அறியாமையாலும், பலப்பல அறிந்தும் – ஏகப்பட்ட பிழைகள் செய்பவர்தாம்.

மேலதிகமாக – அவருக்குத் துளிக்கூடத் தொடர்பில்லாத, விஷயஞானம் இல்லாத துறைகளில் மூக்கையும் இன்னபிற துருத்திக்கொண்டிருக்கும் பாகங்களையும் நுழைத்துக் குட்டையை ஏகோபித்துக் குழப்புபவர்தாம். (ஆமாம், கலிங்க தேசத்து அரசனுக்குக் கழுதைக் காதுகளாமே? இதற்குமே டீமானடைஸேஷன் தான் காரணம் என, மோதியின் ஹிந்துத்துவா வெறியால் எனக்கு மொட்டைத்தலையில் நெறி கட்டிக்கொள்கிறது எனும் நிதர்சன உண்மைமூலம் தெரிகிறது என்பது என் சொந்த ஞானமரபு… என் குருவுக்கு அப்படித்தான் நான் சொல்லிக்கொடுத்திருக்கிறேன், நன்றி!)

சரி. 17வகைகள் முடிந்தன. மேலே எழுத (+உங்களுக்கும் படிக்க) அயர்வாக இருக்கிறது.

ஆனால் – தற்காலத்தில் நிறைய எழுதும் தொழில்முறை தமிழ் எழுத்தாளர்களில் – ஜெயமோகனுக்கு இருக்கும் அபரிமிதமான நகைச்சுவை உணர்ச்சியும், வாக்குச் சாதுர்யமும், ஓரளவுக்காவது தேடல்(!) இருக்கும் இளைஞர் பட்டாளத்தை (த்ருதராஷ்டிரத்தனமாகவே கூட!)  அரவணைக்கும் தன்மையும்  – வேறு எவருக்கும் இல்லை என நான் சொல்லாவிட்டால் பேதியில்தான் போவேன். ஆகவே.

-0-0-0-0-0-

இப்போது, கடிதம் எழுதிய அன்பர்களுக்கும் + ‘ஜெயமோகனையே(!) திருத்தும் அளவுக்கு உனக்குத் திமிர் ஏறிவிட்டதா, நீ என்ன கிழித்திருக்கிறாய்‘ எனக் கோபத்துடன் எதிர்வினை புரிந்த நண்பர்களுக்கும் (ஹ்ம்ம்… உண்மையில் ஒரேஒருவர்தான் இப்படிச் சொன்னார் – ஆனால்  எண்ணிக்கை >> 7.5 எனக் காண்பித்துக்கொள்ளவேண்டுமே, ஐயன்மீர்!) + ‘அப்பாடா, நீயாவது போட்டுடைத்து எழுதினாயே‘ என்று சொன்ன ஆப்தர்களுக்கும் ;-) சில முக்கியமான கோரிக்கைகள்: (அறிவுரைகள் அல்ல! முக்கியமாக – இவை எனக்கும் பொருந்தும். பொதுவாகவே நான் எனக்கும்,  இவற்றைச் சொல்லிக்கொள்வேன்)

. நீங்கள் யார், எந்தக் கழுதை (அடியேன் உட்பட) சொல்வதையும் படுஸீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில் எல்லோரும் நம்மைப் போலத்தான். நாமெல்லாரும் கோமாளிகள்தாம். வாய்விட்டுச் சிரியுங்கள், சரியா? கோ வேறு கழுதை, நான் வேறு – வெள்ளிமூக்குக் குதிரை என்றெல்லாம் சால்ஜாப்பு வேண்டாம்.

ஆ. மானுட அடிப்படை உரிமைகளில் ஒன்று கருத்துரிமை. இது சரிதான். ஊக்கபோனஸாக, தன் கருத்தை இன்னொருவர் கேட்டுக்கொள்வதற்குக் கூட கருத்தாளருக்குக் கொஞ்சம்போல எதிர்பார்ப்பு கலந்த உரிமை (ஏனெனில் கருத்துருவாக்கத்துக்காக அவர் உழைத்திருக்கலாம் அல்லவா?) இருக்கலாம்கூட. ஆனால், சர்வ நிச்சயமாக – கருத்தாளர் கருத்தை இன்னொருவர் பொருட்படுத்தவேண்டும் என்ற ஒரு ஆகாத்திய உரிமை எவருக்கும் கிடையாது. (இது ஜெயமோகனானாலும் சரி, அற்ப வாசகனாகிய நானாக இருந்தாலும் சரி. கருத்துகள் எவ்வகையாகவையாக இருந்தாலும்  – அவற்றுக்கு ஆழமும், வீச்சும், பின்புலப் புரிதலும்,  உழைப்பும், அடிப்படை நேர்மையும் இருந்தால் மட்டுமே அவை பொருட்படுத்தப்பட வேண்டும்.)

இ. பொதுவாக மதிப்பது நல்லது. சான்றுகளுடன் மிதிப்பது இன்னமும் நன்று. கலி காலத்தில், இதைத் தவிர வேறுவழி (அனைத்தையும், இணையத்தையும் மூட்டை கட்டிவிட்டு வனாந்திரம் போனால் ஒழிய) இல்லை. ரொம்ப அலட்டிக்கொள்ளாதீர்கள்; தேவையேயில்லாமல் கண்ட விஷயங்களில் நம்பிக்கை வைக்காதீர்கள். சரியா?

ஈ. ஆக, நம் அனைவருக்கும்:

க) நம்மைச் சூழ்ந்திருக்கும் மாயைப்பனி விலக,
ங) பிறர் மண்டைகளைச் சுற்றிய ஓளிவட்டங்களை மீறி, அவர்களையும் நம்மைப் போன்ற சாதாரண, பொதுவாகவே நல்லெண்ணம் கொண்ட ஆனால் ஏகத்தும் பிழை புரியும் சகஜனங்களாக – ஓரளவாவது, முடிந்தவரை கரிசனத்துடன், திரைவிலக்கிப் பனிமறையப் பார்க்க
ச) நம்முடைய ‘நுண்மான் நுழைபுலம் அறியும்’ திறனை வளர்த்திக்கொள்ள
ஞ) இடிக்கவேண்டிய இடத்தில் இடக்காக இடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள
ட) பிறருடைய இரட்டைவேடங்களை நம்முடைய சொந்த குணசித்திர நாடகத்தன்மையுடன் பொருத்திப் பார்த்துக்கொள்ள
ண) ஒருசில சமயங்களில் ஒரு சிலர் ஒரு விதத்தில் தப்பித்தவறியேகூட உயரப்பறக்க முடிந்தால், அவர்கள் எல்லா சமயங்களிலும் அப்படியேதான் பறக்கவேண்டும் போன்ற அநியாய எதிர்பார்ப்புகள் இல்லாமலிருக்க
த) ஒவ்வொருவருக்கும் (அவர்கள் ஒன்றுமே செய்யாமலிருந்தால்கூட) மினுக்கிக்கொள்ள உரிமை உள்ளது என்பதை உணர்ந்து நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே அகல அல்லது பொளேரென்று அவர்கள் மரமண்டையில் போட
ந) நம் வாழ்நாட்களில், நமக்கு முன்னால் நடந்துகொண்டிருக்கும் உன்னதங்களையும் அழகுகளையும் அறிய முடிவதை அடையாமல் செய்துவிடும் நம் தாமஸ குணத்தையும், எதையுமே பொழுதுபோக்காக நுனிப்புல் மேய்ந்து வழி நெடுக சாணி போட்டுக்கொண்டு அலையும் மாண்பையும் விரட்ட
ப) முடிந்தவரை எல்லா உச்சங்களையும் மிச்சம் வைக்காமல், உச்சுக்கொட்டிக் கொண்டிருக்காமல் அடையத் தொடர்ந்து முனைய  …
… நம்மைச் சுற்றியுள்ள மாயாவாத மூடுபனி விலக, ஆவரணம் செய்யப்பட்டது ப்ரத்யட்சமாகத் தெரிய வாழ்த்துகள்.

-0-0-0-0-0-

இந்தப் பதிவை, இந்த பவமான அப்யாரோஹத் துணுக்குடன், அதன் ஒருமாதிரியான அர்த்தத்துடன் முடிக்கிறேன்.

तमसोमा ज्योतिर् गमया।
தமஸோமா ஜ்யோதிர்கமய.

இருளிலிருந்து ஒளியை நோக்கி (…)

நன்றி.

-0-0-0-0-0-

 

17 Responses to “11-17 வகைகளில் ஜெயமோகனைப் புரிந்துகொள்வது எப்படி?(க்றீச்சிடுதல் (5/n))”

  1. கோபால் Says:

    நன்றி.


    • ?

      ஐயா, எதற்கு? ஒருவழியாக இப்பதிவுவரிசையை முடித்துக்கொண்டதற்கா, அல்லது இவற்றில் இருக்கும்(!) அவல நகைச்சுவைக்கா? ;-)

  2. vijay Says:

    4//. ஜெயமோகன் செய்தது (பலமுறை செய்திருப்பதும்), படுமோசமான அவதூறு. ஒரு பின்புல விஷயத்தையும் தெரிந்துகொள்ளாமல் உதாசீனத்துடன் ஆனால் வீறிட்டெழும் அறச்சீற்றத்துடன் அடித்துவிடப்பட்டது அவர் கட்டுரை –மோடி அரசு, என் நிலைபாடு. யுவகிருஷ்ணா தரம். (இன்னும் அவர் எழுதும் பலப்பல விஷயங்களை அப்படிச் சொல்லலாம்); மறுபடியும் மறுபடியும் அரைத்த பொய்மாவையே அரைப்பதன் மூலம், பொய்யை மெய்யாக நிறுவிவிடலாம் அல்லவா?//

    உண்மை நக்கீரரே நன்றி. உலோகம் சாட்சி.


    • உலோகம் நாவலைச் சொல்கிறீர்களா ? @விஜய்


      • ஐயா, அவர் ஜெயமோகனின் உலகத்தைக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன்.

        அவர் உலகமே வேறென்றிப் பிறிதொன்றும் இல்லை அல்லவா – அவருடைய பார்வையும் சொல்லும் செயலும் புதிது – ஒன்றுக்கொன்று தொடர்பிருக்கவேண்டிய அவசியமில்லை.

        ஆகவே உலகம் = உலோகம்.

        புதுமைப்பையனின் பதிவும் கருத்தும்
        பொய்மை கொண்ட ஈயத்துக்குத்தான் புதிதேயன்றி
        உலோகத்துக்குப் புதிதில்லை

        அன்புடன்,

        பித்தளை (எனும்) பிங்களன் த்விஜ மங்களன்
        c/o பெண் அரசு – பாகம் 2812
        “ஐஸோடோப்பின் ஐயம்’


  3. உண்மை நக்கீரரே நனறி…vijay.. நக்கீரர் என்றதுமே பெரிய மீச வச்சிருக்குற கோபால் மூஞ்சி ஞாபகம் வருது அய்யய்யோ..


    • ஐயா, அந்த கோபால், சும்மா பணத்துக்காக நக்கியவர்தாம், நக்கீரர் அல்லர்.

      நானும் நக்கீரன் அல்லன். ஜெயமோகனோடு ராசியாகிவிட்டேன். இதயங்கள் இனித்தன. கண்கள் பனித்தன.

      https://www.jeyamohan.in/113024 படித்ததும் மனம் திருந்திவிட்டேன்! என் தவற்றை உணர்ந்தேன். ;-)

      • Swami Says:

        Anga dhaan (angadam) nikkararu engal Thalaivar. Neenga kashtapattu 5 pagam ezhudhinathukku ore oru pakkathula badhil adi koduthu ongal manathai thiruthinaar!

        Adhuvum ‘Agori’yai nindra edam!? – gory and glory!


      • ஐயா ஸ்வாமீ!

        நான் அவனில்லை.

        ஆகவே நான் கேக் வேகவைக்க முடியாது. மன்னிக்கவும்.

        நான் கட்சி மாறி, தாய்க்கழகத்திலேயே ஐக்கியமாகிவிட்டதால்…

        இனிமேல், எந்தப் பயலாவது என் ஆசானை ஏதாவது இடக்காகக் பேசட்டும்…

        ங்கொம்மாள, ப்ளேடால கிஸீ, நெஞ்ஜில கீற மஞ்சா ஸோத்த எட்த்திருவேன், பட்டா….

        அன்பன்றிப் பிறிதொன்றை அறியா உள்ளத்துடன்,

        ரா.

      • Swami Says:

        Aiaiaiaiaiyo! Katchi maariteengala!? Appo Oo Mu Ka katchiyin gadhi?

        Oo Mu Ka katchiyin Ilaignar Ani Seyalalar padhavi enakku endru naan ninaithukondiruppadhu verum kanavo? Aiyago!

        Arasiyal veru illakiyam veru endru manadhai konjam santhapaduthukolgiren.

        Katchi arambikkum ennathai kai kal vidathirukka vendi virumbi kettu kolgiren!


      • கோபாலுடன் உங்களை ஒப்பிடுவது என் நோக்கமல்ல்…விடுதலை என்றவுடன் தறுதலை வீரமணி ஞாபகம் வருவது போன்று தான் அது..நீங்கள் நக்கீரர் ஆக வேண்டும் என்பது எம் விருப்பமில்லை ராமசாமியாக இருப்பதுவே விருப்பம் நன்றி நன்றி நன்றி.

  4. Anonymous Says:

    https://www.jeyamohan.in/113044#.W532kFUzbIU

    Another salvo of NaMo not attending Mr.Kurien’s funeral!
    Any justifications from your end ?
    Even going by the basic of ‘ no fire without smoke’ , there will be something for you to write about the present condition of GOI.
    If there’s none (how come your illustrious mind NOT seeing any at all is puzzling! ), it is like saying there is no black swan there !
    All the best.

    Regards


    • Sir, I personally know Claude. I have given (part) funds for a venture of his. He is a respectable man. He has done very good things.

      I do not agree with him on many counts, including anarchic politics. Including his diatribes against not only white revolution, but also MSS’ green rev.

      But he was/is NOT a scumbag. He did NOT make money. He did NOT run a BIG NGO. He is not considered a shadowy person.

      I do not know who that friend of Jeyamohan, who wrote that piece of shit is – but he is a liar scumbag. Or at best, an idiot who thinks he knows stuff – just by reading Jeyamohan.

      Like Author, like his fanboy.

      Please do not point to such inane and scummy pieces of bullshit anymore please!

      And, may I request you to do your proper homework?
      __r.

  5. Ramesh Narayanan, Nanganallur Says:

    Will க்றீச்சிடுதல் continue? Is n>5?


    • ஐயா, விடாது எழவு. தமிழுக்கு எழவென்று பேர். அந்த எழவின்ப எழவிற்கு அலக்கியமென்று பேர்.

      ஆக.

      உங்கள் விருப்பப்படி பயந்து நடுங்கலாம், அல்லது பெருமூச்சா விட்டுக்கொண்டு தொடர்ந்து மண்டையில் அடித்துக்கொண்டு படிக்கலாம்.

      நன்றி!

      We are bloody talking in this blog about, the Great Tamil Illiterature, dammit… ;-)

  6. Anonymous Says:

    Thank you,Sir, for your genial response on above. Got your firm rebuttal that not to refer to scummy pieces ( =Taurus excreta) and waste your time thereof- same duly noted. I shall not henceforward.

    Jeyamohan’s point of contention is our PM’s not attending the final rites and not conferring Mr.Kurien with many more awards including the highest Bharat Ratna!

    We are not as proficient as you are on various subjects .
    You are kind in responding to many of readers like me taking us rightfully as a callow .

    On the same token, I tend to wonder as to how come there are only positives on the side of central Govt and no negative at all ..Nothing unworthy that begets your attention such as :-

    Exchange rate sky-rocketting ( 1 USD =Rs.70).
    Tuticorin issues ….All to State Govt ?
    SMEs winding up following demo/GST.
    Workers losing jobs owing to cash flow issues.
    Cash flow issues then lingering on with several companies owing to GST prepayments (for raw materials being bought).
    Tinge of damage to our motto’ unity in diversity’ ..repeat tinge of .
    Loss of lives during demo …factu,factu,factu !
    quid-pro-quo politics/Silencing discordant notes by snatching.

    Thank you Sir for your patience hearing of the matter.
    Sure, more home work to be done by all .

    Regards


Leave a reply to Siva Sankaran Cancel reply