அத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி
July 2, 2018
அழகியல் ஒருபோதும் எழவியல் நலன் கருதியதாக, பொதுநலம் சார்ந்ததாக இருக்காது. உழவியலையே வாழ்வியல் எனக் கருதினால் அதிலும் அழகியல் உள்ளது என்பது செயலாற்றும் தோறும் தெறிக்கும் அன்றி வெறிக்காது.
அது அதுவேயன்றி இது அது அல்ல. அப்படியே அன்றி அது எது என்று கேள்வி ஞானியாகக் கேள்வி கேட்டால் அன்றி – அது நேரிடையாக உளக் கோணலில் திக்கை நோக்கி திக்திக் எனத் திடுக்கிடக் காத்து, உத்தரத்தை நோக்கி நிலைகொண்டிருக்கும்.
நம்மில் ஒருவரின் நம்முள் ஒன்று விலகி நின்று அதை நோக்கிக்கொண்டுமிருக்கும். உடனடியாக நாம் செயலாற்றாவிட்டால் அம்முள் விடுபடவும் செய்யலாம் என்பதால் இறுக்கக் கோமணத்தை அணிவது முக்கியம்.
தோணி ஒரு நல்ல பேட்ஸ்மேனே அன்றி அதை நாம் துடுப்பிட்டுச் செலுத்துந்தோறும் அக்கரைக்கே கொண்டுசெல்கிறது என நினைத்துக்கொள்வது ஒரு பிரமை. மாயை. நட்டாற்றில் நாம் தோணியிலிருந்து இறங்கி மேலே செல்லும் இடத்துக்குப் போகவேண்டுமென்றால் நீச்சல் தெரியாமலிருந்தாலேபோதும். அதுவே ஒருவகை தியானம்.
நுட்பமாக சொல்மாறுபாடுகளுடன் நுண்ணுணர்வு நுங்கெடுக்கப்பட்டால் அன்றி, இது அதைக் கண்டுகொண்டு அதில் ஈடுபடாமல் அதனூடே உள் நோக்கிக் குவிந்து உள்வாங்கிக்கொள்கிறது என்பது பிர பஞ்சப் பெருவெளியில் திளைத்தவர்கள், உடல் இளைத்தவர்கள், காணாததைக் கண்டதுபோல திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சாப்பிடுவது போலத்தானே அன்றி வேறெதுவும் இல்லை என ஒருவழியாக உளாக்கோணல் பக்கங்கள் பக்கம் போனால் அங்கு சாருநிவேதிதா லத்தீ அமெரிக்கச் சவுக்குடன் விளாறக் காத்துக்கொண்டிருப்பார்.
விளாறலுக்குப் பிறகு முச்சந்தியில், நிறைமாத கர்ப்பிணி போல வயிறு சரிய நின்றபடியே உளாறலாகத் தன்னைத்தானே பார்த்துக்கொண்டு ஜென் கவிதைகளை மௌனத்துடன் உரக்க உச்சாடனித்து உலகத் திரைப்பட டிவிடி ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டு இன்னொரு கார்ல் மார்க்ஸ் புகழ்ச்சி யூட்யூப் பேச்சுக் கச்சேரியைக் கேட்காமல் அகலக் கூடாது என்று அடம் பிடிக்கும் என் செல்ல எஸ்ராவேறு.
இல்லாவிட்டால் இன்னொரு தேசாந்திரியைக் கொளுத்திப்போட்டு விடுவேன் என அப்படி ஒரு பிடிவாதம்…
…இந்த நீண்ட கொடுங்கனவிலிருந்து எனக்கு மீட்சியே இல்லையா! அய்யோ!!
ஆகவே, நீயாவது தப்பிச்சி வோட்றாடேய். (பெண்களுக்கு(மிகுந்த மரியாதையுடன்): ஓடுங்கடீ!)
பிகு: தேவையா?
July 2, 2018 at 20:05
Morpheus: “This is your last chance. After this, there is no turning back. You take the blue pill – the story ends, you wake up in your bed and believe whatever you want to believe. You take the red pill – you stay in Wonderland and I show you how deep the rabbit-hole goes.”
July 3, 2018 at 05:55
“Listen, three eyes,” he said, “don’t you try to outweird me, I get stranger things than you free with my breakfast cereal.”
July 3, 2018 at 05:10
புரியல சார்
July 3, 2018 at 05:51
அய்யா, எனக்கும்தான்.
மேலதிக விவரங்களுக்கு பேராசான் தளத்தில் சரணடையவும்.
நன்றி.
July 3, 2018 at 06:28
குருவே !
அதற்குள் மூன்று வாரம் ஆகிவிட்டதா, உங்கள் செல்லத்தை மீண்டும் கடித்திருக்கிறீகள்.
July 3, 2018 at 07:59
ஹ்ம்ம்…
இது ஒரு மாதிரி கிட்டத்தட்ட மாதவுதாய் போன்ற உபாதையோ?
July 3, 2018 at 09:09
அன்பின் சிற்றாசானே!
தானம் கொடுப்பதாக சொன்ன புஸ்தகங்கள் மீது சாய்ந்து தூங்கினால் இப்படித்தான் கொடுங்கனவுகள் வரும். நீங்கள் தருவதாகச் சொன்ன புத்தகப் பட்டியலை நன்கு பார்க்கவும். அதில் மீட்சி உள்ளது. நீங்களே வேண்டாம் என்று கொடுத்துவிட்டு மீட்சி இல்லையா என்று கதறுவது (அடிக்கறாங்க! அடிக்கறாங்க!) திராவிடத்தனமான நாடகமாக இருக்கிறது.
இப்படிக்கு,
ஆ
(ஃபேக் ஐடி வாசகர் கடித ஸ்பெஷலிஸ்ட்.)
July 3, 2018 at 09:39
ஆ, ஆ!
வாட் த ஃபேக், நீங்களுமா இப்படி?
அந்த மீட்சி பிரம்மராஜனுடையது. எனக்கல்ல. :-(
ரா.