திகம்பரப் போராட்டத் தில்லித்தெருக் குடியிருப்புத் ‘தமிழ் விவசாயி’ அரைவேக்காடுகளுக்கு, சிலபல பரிந்துரைகள்
June 21, 2017
இந்தத் தமிழக விவசாயிப் போராளிகளை நாம் எப்படி மறக்கக்கூடும், சொல்லுங்கள்?
23 ஏப்ரல் 2017அன்று, இந்தத் தொப்பையாளர்கள், இந்தக் கேளிக்கையை அநியாயத்துக்கு வாபஸ் வாங்கிய பின்னர், அவர்கள் ‘கோரிக்கைகள்’ ஏற்கப்படவில்லையானால் – மே 25க்குப் பின் மறுபடியும் போராட்டத்தைத் தொடர்வோம் என்றார்கள்.
ஆனால் பாருங்கள், பாவிகள் – 9 ஜூன், 2017லிருந்து தான் மறுபடியும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதென்ன சோம்பேறித்தனம்? கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டாமா? எவ்வளவு நாட்கள்தாம் நாம் காத்திருப்பதாம்? கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி வேண்டாம்?
ஹ்ம்ம்… திராவிடர்கள் இப்படி அநியாயத்துக்குப் பின் வாங்குவதால்தான், ஆரிய வந்தேறிகள் அகங்காரம் பிடித்து அலைகின்றார்கள். அதனால்தான் வேறு வழியேயில்லாமல் சமரச அசுத்த சன்மார்க்க அசத்திய சங்கம் அமைத்து நம் பூசையறைகளில் ஆரியத்தை வரவழைக்கும் அளவுக்குப் போய்விட்டோம்…
-0-0-0-0-0-
…ஏனெனில் அய்யன்மீர், என் நெஞ்சு பொறுக்கியல்லவே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால்…
ஆகவே அவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்தேயாகவேண்டிய பரோபகார தர்மாவேசத்தில் இருக்கிறேன். இது தர்மாவேஷமோ எனச் சந்தேகப்படாமல் என் வெள்ளை மனதுப் பரிந்துரைகளைப் படிக்கவும்…
-0-0-0-0-0-
- நம் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வெளிநாடு செல்லும்போதெல்லாம் அவருக்கு முன்னரே அந்தந்த நாடுகளுக்குச் சென்று – அவரை விமான நிலையங்களிலேயே எதிர்கொண்டு போராட்டத் தட்டிகளையும் ஊக்கபோனஸாக தங்கள் ‘மர்ம ஸ்தானங்களையும்’ ஆட்டுதல் (பிரச்சினையென்னவென்றால் குளிர்ப்பிரதேசங்களில் வேண்டுமளவு பாதுகாப்பு செய்யப்படாவிட்டால், மேற்கண்ட ஸ்தானங்கள் விடைத்துவிரைத்து உடைந்தேவிடும் சாத்தியக் கூறுகெட்டதுகள் இருக்கின்றன; சுபம்.)
- ‘மசான கொள்ளை’ வகை க்ரேன்களைக் கொணர்ந்து, அதிலிருந்து தலை கீழாக நிர்வாணமாகத் தொங்கல். (நமக்கு நாமே என அவர்களுடைய இசுடாலிர் தனமாக, தங்களுடைய குடிநீர் பிரச்சினையையும் தீர்த்துக் கொள்ளலாம்; வாயைத் திறந்துவைத்துக்கொண்டால் போதும்!)
- தம் குஞ்சாமணிகளில் கொக்கிகளை மாட்டிக்கொண்டு அல்லது அலகுகளைக் குத்திக்கொண்டு காவடியெடுக்கும் போராட்டம்.
- பகிரங்கமாக, தத்தம் சிறுநீரிலேயோ அல்லது மற்றவர்களின் மானுடமியத்தையோ உபயோகித்து ஞானஸ்நானம் செய்துகொள்ளுதல்
- மொஹர்ரம் வகை போராட்ட வகையாக சவுக்குகளால் தங்களை மட்டும் அடித்துக்கொள்ளாமல் போகிறவர் வருகிறவர்களையும் சவுக்குகளால் விளாறல்
- எலியூட்டிக்கொள்ளல் ஒத்துவராமையால் தம்மைத்தாமே எரியூட்டிக் கொண்டு அமர்க்களமாகப் போய்ச் சேர்தல்
- வாடிகன் போப் அவர்களின் அரண்மனை வாயிலுக்குச் சென்று – முள்கிரீடம் மட்டும் அணிந்து முதுகில் சிலுவையையும் சுமந்து, அம்மணோ சாமியோ எனக் கூப்பாடு போட்டு மோதியிடம் பேசச் சொல்லி இதென்ன திருச்சபையா தெருச்சபையா என மக்களுக்கு மனக் கிலேசம் வரவித்தல்
- ஐநா சபை முன் எலிப்பெருச்சாளிக் கதைகளை அரங்கேற்றுதல்.
- ஜோர்டன் நதி நீர்ப் பங்கீட்டுக்காக, அதன் பிரச்சினைகளை உடனடியாக ரஷ்யாவை அணுகித் தீர்க்கச் சொல்லி, ஜப்பானில் ஜப்பானை நிர்ப்பந்தித்து ஆஸ்ட்ரேலியாவின் பெர்த் நகரின் நடுத்தெருவில் உட்கார்ந்து கொண்டு திராவிடத் தமிழ்ப் பெருச்சாளிகளைச் சாப்பிடும் போராட்டம்.
- தமிழக விவசாயிகளின் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் வாளாவிருக்கும் ஸவூதி அரேபிய அரசைக் கண்டித்து மக்காவில் மக்காச்சோளக் கதிர்களை வாயில் கவ்விக்கொண்டு மக்குத்தனமாக நடனமாடுதல். அல் அன்ஃபல் அய்யாஹ்க்கண்ணுஹ் கும்பல்ஹ்.
- தமிழக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்காத அரவிந்த்கெஜ்ரிவாலறிவருக்கு, அவர் கட்சியின் சின்னத்தாலேயே செல்லமாகத் தடவிக்கொடுக்கும் போராட்டம்
- ரோஹின்ங்கயா முஸ்லீம்கள் பர்மாவில் ஜிஹாத் வாதம் செய்ததால் அவர்களுக்குப் பிரச்சினை வந்தபோது கஷ்மீர் இஸ்லாமிய தீவிரவாதிகள் அவர்களுக்கு அடைக்கலம் தருவதுபோல தமிழக விவசாயிகளும் கஷ்மீரில் ஸெட்டில் செய்யப் படவேண்டும் என ஜவாஹிருல்லாவிடம் கோரிக்கை வைக்க ராஜபக்ஷவைக் கழுவிலேற்றவேண்டும் எனப் போராடல்
- ஹெலிகாப்டர் ஒன்றை ஒரு வாரத்துக்கு வாடகைக்கு (உபயம்: கவிதாயினி கனிமொழி – அவர் சொத்தில் 0.00000000000000001 சதவீதம் செலவில்) எடுத்து அதிலிருந்து நிர்வாணமாகத் தொங்கிக்கொண்டு தில்லியைச் சுற்றிச் சுற்றி வருவது.
- அமெரிக்க கௌபாய் தொப்பியை அணிந்துகொண்டு (நம்மூர் நடிகர் ஜெய்ஷங்கர் அவர்களைப் போல) – அதாவது அதை மட்டும் அணிந்துகொண்டு, குதிரை மேல் ஆரோகணித்து பின் அவரோகணிக்கமாட்டவே மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்து தில்லித் தெருக்களில் டிங்டாங்கென்று (அது நசுங்காமல்) வளையவந்து போராட்டம்.
- பக்கத்து கேலக்ஸியில் இருந்து பறக்கும் தட்டில் பையப் பையப் பறந்து வரும் ஜந்துக்களிடம் தமிழக விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க கோரிக்கை வைக்கும் தவம் – சாப்பிடும் வட்டத்தட்டில் ஒற்றைக்காலில் பாதி கோமணத்துடன் நின்று வாயில் சீரகச்சம்பா அரிசிச் சோற்றைப் பிண்டம்போல அடைத்துக்கொண்டு — சம்பா சிவசிவ சாம்பார் சிவசிவ.
- அவர்களது ஒவ்வொரு விவசாயப் பெரும்தொப்பையிலும் ட்ராக்டர்களை வைத்து உழுது குறைந்த பட்சம் அரை ஏக்கரா விஸ்தீரணத்துக்குப் பயிரிடுதல்.
நன்றி. ஏதோ என்னால் ஆன உபகாரம்.
June 22, 2017 at 21:32
வாயை வச்சிண்டு சும்மா இருக்கமாட்டேன்கிறீரே! பாரும்! கோவணான்டிகள் எல்லாரும் மறுபடியும் ஜூலை 9-ந் தேதி முதல் தில்லியில் போராட்டம் தொடங்கப் போறார்களாம்!!
https://www.minnambalam.com/k/2017/06/22/1498115801
June 23, 2017 at 13:36
:-)
March 18, 2019 at 10:16
[…] கேவலமும் செய்பவர்களைக்கூட (நான் அய்யாக்கண்ணு போன்ற அம்மணக்குண்டிப் […]