ஏமாற்றமிஸ்ம் + மிடீலத்துவா

November 21, 2021

எனக்கு மிகவும் பிடித்தமான ஆங்கிலப் புத்தகப் பதிப்பகங்களில் – இரண்டு படுபீதியளிக்குமளவுக்குத் தரம் வாய்ந்தவை. கண்கூசுமளவுக்கு ஜொலிப்பவை.

அவை எந்தப் புத்தகத்தை வெளியிட்டாலும் – என்ன துறையைப் பற்றி அல்லது கருத்தாக்கத்தைப் பற்றி இருந்தாலும் – அவை எனக்குத் தோதுப்பட்டால், பட்ஜெட்டில் பணமிருந்தால் அவசியம் வாங்கிப் படிப்பேன்.

(அண்மைய காலங்களில் வாங்காமலும்தான்.

கடைசியில் வாங்கிய (என்னளவில்) பயங்கர காஸ்ட்லி புத்தகம். Death Across Cultures: Death and Dying in Non-Western Cultures. இம்மாதிரி சில அத்தியாவசியமான புத்தகங்களின் விலை, சில சமயங்களில், (அ)நியாயத்துக்கு ஐயாயிரம்-பதினைந்தாயிரம் என ஆகிவிடுகிறது + டெலிவரி சார்ஜஸ்வேறு, மிடீல! இதற்கென்று மறுபடியும் சம்பாதிக்கக் கிளம்பினால் அது இன்னொரு பூதமாகி வாழ்க்கையே தேசலாகிவிடும். ஹ்ம்ம்…. உலகமும் அதன் அங்கமான நானும் சாம்பல் நிறம்தான், ஐயன்மீர்!

அதேசமயம் இப்படிச் செய்யும் விஷயங்களுக்கு என்னளவில் சால்ஜாப்பு செய்துகொள்ள ஒருமாதிரி ப்ராயச்சித்தம் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத் தரவிரக்கத்துக்கும் ரூ 250/- (அது என்ன கணக்கோ!) ஏதாவது பள்ளிக்கு அல்லது பொதுவிவகாரத்துக்குப் போகிறது.

பெருமளவு புத்தகங்களை விலைகொடுத்து (சில சமயங்களில் அழுது)தான் வாங்கிப் படிக்கிறேன் என்றாலும் – நான் கண்டமேனிக்கும் டவுன்லோட் செய்வதில்லை என்றாலும் – ஒவ்வொரு கொள்ளைக்காரனும் அவனுக்கேற்றதுபோல, அவனுடைய மனச்சாட்சியின் குறுகுறுப்பை நிரவிச் சமன்செய்ய ஒரு சால்ஜாப்பை வைத்திருக்கிறான் என்பது உண்மைதான்!)

எது எப்படியோ…

சரி. என்ன எழுதவந்தேன்?

…எந்தமாதிரி த்ராபை-டப்பா பதிப்பகமாக இருந்தாலும் (பெங்க்வின் / ரேண்டம்ஹவ்ஸ் / ஹார்ப்பர்-காலின்ஸ் போல என வைத்துக்கொள்ளுங்கள்) அவற்றிலும் ஒருசில புத்தகங்கள் உருவத்திலும்-உள்ளடக்கத்திலும் நன்றாக வந்திருக்கும் என்றாலும்… இந்த இரண்டு பதிப்பகங்கள் அநியாயத்துக்குத் தரம் வாய்ந்தவை, கொண்டாடப் படவேண்டியவை.

அவை

-0-0-0-0-

ஏமாற்றத்துக்கு வருகிறேன்.

ஒரு பெரிய வீச்சில் (நம் செல்ல ஜெயமோகன்போல – குறு-நடு-பெருகடவுளர் + முரணியக்கம் + காந்தி + திரைப்படவஜனம் + அறம் + மானேதேனே + அட்ச்சிவுடல் + ஆன்மிக நெகிழ்வாலஜி + தேய்வழக்குப் படிமங்கள் + வார்த்தை ஜாலங்கள் +  மாளா அற்பத்தனங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்தாலும் ‘நான் அற்பத்தனங்களுக்கும் உதிரி அரசியலுக்கும் அப்பாற்பட்டவன்’ எனும் மினுக்கல் ++ ஒருமாதிரி கலந்துகட்டி என வைத்துக்கொள்ளுங்கள்), நேர்க்கோட்டு யந்திரகதியில், ஒருசில உபகரணங்களையும் பார்வைகளையும் மட்டுமே கொண்டு  உலகத்தையே அர்த்தம் செய்யகொள்ள, ஆரூடம்சொல்ல என  ‘உதவும்’ பல புத்தகங்கள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்று இந்த எழவு.

படிக்கப்படிக்க அது வீச்சுவீச்சு என வீச்சம்.

ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் இருந்தாலும், அவற்றில் ஒர்ரே ஸெலெக்டிவிடி. ‘எங்கள் கதையாடலுக்கு வேண்டுவதைக் கொள்வோம், ஒத்துவராததை அது எவ்வளவு காத்திரமாக இருந்தாலும் லுஸ்லவுட்டு விடுவோம்’ எனும் கறார்தன்மை.

இத்தனைக்கும் இதே ப்ளடி ஆசாமியின் Debt: The First 5000 Years – 2014வாக்கில் வெளிவந்த புத்தகத்தைப் படித்துவிட்டு வெறுத்திருக்கிறேன். ஆனால் அது வேறு பதிப்பகம். :-(

…ஆகவே, இது நம் நேர்க்கோட்டு-இணைப்பு வாசகர்களின் அமோக ஆதரவையும் புல்லரிப்பையும் பெறும்…

இருந்தாலும்…

இதைப்போய், என் அபிமான ஃபரர், ஸ்ட்ராஸ் & கிரூ பதிப்பித்திருக்கிறார்களே! ஐயகோ!

-0-0-0-0-0-

நாஸ்ட்ரடேமஸ் எழவில் ஆரம்பித்து, டால்டாஸ்டால், ஜேரெட் டயமண்ட், காலெத் ஹொஸ்ஸைய்னி, ஹருகி முரகாமி, ஒரன் பாமுக், யுவால் நோவா ஹராரி… எல்லாஞ்சரீ  போன்ற  நேர்க்கோட்டு புளகாங்கித பல்ப்-வாதிகளையெல்லாம் தூக்கிக் கொண்டாடும் நம் தமிழ்ப்பதிப்புலகம், இப்போது டேவிட் க்ரீபர் இத்தியாதிகளையும் கொண்டாடினால் ஆச்சரியப் படமாட்டேன்.

அதேசமயம், நம் தமிழ்ப்புத்தக உலகம் என்பதே – பதனம்செய்து மேம்படுத்தப்பட்ட மரக்கூழ் வியாபாரம்தான் (என்ன, இக்காலங்களில் அது மறுசுழற்சி செய்யப்பட்ட எலக்ட்ரான்களால் சாத்தியப்படுகிறதும்கூட, அவ்ளொதான்) என்பதில், எனக்குப் பிரச்சினையும் இல்லை.

ஏனெனில் பொருளாதார மேம்பாடும் பணச்சுழற்சியும் இவற்றாலும் சாத்தியப் படுகின்றன என்பதைக் கணக்கில் கொள்கிறேன்.

பொருளாதாரம் முக்கியம், ஐயன்மீர். (கிண்டலுக்காகச் சொல்லவில்லை)

நன்றி.

மிடீல. :-(

11 Responses to “ஏமாற்றமிஸ்ம் + மிடீலத்துவா”

 1. Kannan Says:

  What about Bill Bryson with almost similar title ?


  • Sir, you must be talking about ‘A Short History Of Nearly Everything’ by Bill Bryson? (if not, let me know)

   1. It is a popular history, vast in scope – but not at all in depth. As a non-science guy, he keeps recording his thoughts and discussions with some professionals.

   2. Not only is it not in-dept – it is quite shallow and very uninspiring. But it has a place. It does not claim to be comprehensive at all.

   3. However, BB does not claim that the book will ‘change the way people think about certain things’ etc.

   4. The issue with Graeber et al is that they claim to be so. While being equally shallow, if not agendaful. So he is in the class of Sapiens’ author Yuval Harari.

   (hope this helps, or it does not, as the case may be)

 2. Kannan Says:

  Yes, you are right. Nearly everything is nearly impossible IMHO, but gives a cohesive picture of certain events I think.

  I would certainly put BB above Yual.

 3. Kannan Says:

  Got it, but to his credit, I liked one of his prophesy more than the others. That is algorithms changing people’s behaviour, it helped me cope with guys who got pay hike before me.

  It must be the algorithms, damn.

 4. Kannan Says:

  Spot on :)

 5. சாருதாசன் Says:

  தலைவன் சாருவின் தரமான புத்தக கட்டு ஒன்றின் விலை (தலைவனின் கலிக்ராபி போன்ற கையெழுத்து சேர்த்து) வெறும் ஐந்து லட்சம் மட்டும்.வாங்கிவிட்டீர்களா அடுத்து நான்தான் சாரு நிவேதிதா என்று அவுரங்கசீப் எழுதிய அதி உன்னத புத்தகத்தை முன்பதிவு செய்ய மறக்காதீர்கள்.நன்றி.


  • 🤣🥴😳 யோவ்! யார்பா நீயி? இப்டீ ஹார்ட் அட்டேக் கொட்க்கறே?

   அஞ்சு லச்சமா, அந்த லத்தீக்குவ்யலுக்கு… வாய்ல வண்டவண்டயா வர்தே!

   கலிகால்த்ல இந்தமாரீ தடிமாட்ங்க்ளும் கலிக்ராஃபிய விக்கறானுவளா? போணியாவ்தா, யின்னா?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s