நெருப்புசெய்யுள்காற்று livingparticle (முழிபெயர்ப்பு ©2021, எஸ்ராமகிருஷ்ணன்)

November 4, 2021

நுமக்கும் நும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

சென்னைக்கு, நேற்று வந்தோம்.   இனியகாலையில் மழையோசையுடன் மஹோமஹோ எம்எஸ்எஸ் அம்மணியின் என்றும்பசுமை வெங்கடேஸ ஸுப்ரபாதம் கலந்து…இன்பலாகிரி.

இங்கு அடைமழை. ‘நின்று பொழிந்து கொண்டிருக்கிறது.’ அவியல்மழைக்காகப் பொறுமையுடன் காத்திருக்கிறேன்.

தெருவெல்லாம் கங்கை ஓடிக்கொண்டிருக்கிறாள். சம்பந்தாசம்பந்தமில்லாமல் – ஆசான் பாஷையில் அன்றிப் பிறிதொன்றில்லாத நுரைநேர் பெருவெள்ளம், இந்த நெடிய பாரம்பரியத்தை நாம் எக்காரணம் கொண்டும் விட்டுவிடலாகாது. அல்லது, ஒரே இளமை துள்ளல் உல்லாசம் ஆன்மிக அட்டகாசம் எனக் கொண்டாட்ட கொத்துபுரோட்டா விடலைத்தனத்துடன் 70வயதை நெருங்கும் தனித்துவமான லத்தீனியன் சொல்லக்கூடுவதுபோல, “என் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பவும். என் ஞமலிக்குப் பொரையுடைமை அத்தியாவசியம்.”

மழை.

இருந்தாலும் இளம் ஹிந்துத்துவ வெறியர்கள் அவ்வப்போது தஸ்க்புஸ்க் என நமுத்துப்போன பட்டாஸ் வெடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னாட்டின் கலாச்சாரவேர்கள் குறித்த அக்கறையே இல்லை. குரு நித்யா சொல்வார், உரத்த அத்வைத சிந்தனைகள்தாம் நம்மை உய்விக்கும், த்வைத வெடிகள் நம்மைப் பேடிக்கச்செய்பவை, வெளிச்சம்வேறு சப்தம்வேறு எனப் பிரிவினை செய்பவை, அவற்றைத் தொடர்ந்து சென்றுவிடலாகாது.

இந்தப் புகை சப்தமெல்லாம் நீரில் கரைந்து ஓடி சமுத்திரத்தில் கலந்தால், வங்கக் கடலின் ஆலிவ்ரிட்லி ஆமைகளுக்குப் பெரும் பிரச்சினையாகி அவற்றின் காது செவிடாகிவிடும் என மிகவும் வருத்தமாகியிருக்கிறது; க்ரிக்கெட்எழவுகளுக்கும் சாதாஎழவுகளுக்கும் ஸ்பெஷல்சினிமா கருமாந்திரங்களுக்கும் புத்தாண்டு க்றிஸ்மஸ் இன்னபிறவற்றுக்கும் அமைதிபூர்வமாகவும் சாத்வீகமாகவும் வெடிக்கப்படுபவை மதச்சார்பின்மைச் சான்றிதழ் பெற்றவை – அவற்றால் ஒரு பிரச்சினையும் இல்லை.

-0-0-0-0-

நேற்று மாலை, நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “சொதசொதவென்று மழை. காலையில் குளிர்… கம்பளிக் கதகதப்பிலிருந்து வெளியே வருவதற்கே பெரும்பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது…”  

ஆஹா!

இவர் என்னுடன் வளர்ந்தவர். சுமார் 30 வயதுவாக்கில், பொதுவாக வளர்வதை நிறுத்திவிட்டுக் குறிப்பாகத் தொப்பையின் சுற்றுவட்டத்தை வளர்ப்பதில் தொடர்ந்து குறியாக இருக்கிறார்.

ஆகவே – ஏதோ ரெண்டுமாதங்களுக்கு ஒருமுறை இவர் என்னிடம் விடாப்பிடியாக ஹலோஹலோ சொன்னாலும் – எனக்கும் இவருக்கும் இருக்கும் ஒர்ரே பொதுவான+சுவாரசியமான துறை, சென்னையின் சீதோஷ்ண நிலவரம். (க்ரிக்கெட் கோடம்பாக்கம் எனப் பேச ஆரம்பிப்பார், இவை எனக்கு ஒத்தேவராதவையாதலால் கத்தரித்துவிடுவேன்)

சென்னையின் தட்பவெப்பம். அதாவது, வெப்பவெப்பம்.

ஸீஸனுக்கு ஏற்றாற்போல உரையாடல், நரையாடல்: காலேல ஒம்போது மணிக்கு என்னமா வெயில்! கத்திரிவெயில், வீட்டுமாடீல அப்பளம் பொரிக்கலாம், மழையே இல்ல, சும்மா ரெண்டு தூறல் போட்டுட்டு நின்னுட்ச்சி, பிசுபிசு என மழை, அடைமழை. வங்கக்கடலில் புயல் மையம் கொண்டுள்ளது, மேலும் தீவிரமடைந்து வடமேற்கில் வீரியம் கொண்டு நகர்ந்து ஒரிஸ்ஸாவில் ஒன்பதாயிரம்பேர் பலி நிச்சயம். இடின்னா அப்படியொரு இடி. கரண்ட உடனே கட் பண்ணிட்டான். வெடவெடக்கும் குளிர், வியர்வை நசநசப்பு, காலேலேர்ந்து கர்ரெண்டே இல்ல, மார்கழில இப்படி இவ்ளோ பனிமூட்டம்,  பனிபெய்யுது – வெளீல போகணும்னா ரெண்டு ஸ்வெட்டர் போட்டுக்கணும்போல.  காலெல வாக் போறப்ப ரெண்டுமீட்டருக்கு அந்தாண்ட யார்னே தெரியலே, அவ்ளோ கரு கும்னு பனீ!

அடேய் பாவீங்க்ளா!

ப்ளடி இதுவரை பேசாத விஷயம், ‘சென்னைல பன்னண்டு இஞ்ச் ஸ்னோ.’  இந்த க்ளைமேட் சேஞ்ச் பூதம் ப்ளடி அதனையும் செய்துவிடும் எனப் பூவலகின்நொந்தர்கள் சொல்கிறார்கள், வாழ்க.

நேற்று இந்த சகஅரைகுறையின் ஊக்கபோனஸ்: அடைமழை + கொடுங்குளிர்(!).

எழவெடுத்த தமிழர்களுக்கு, திருவொற்றியூர் தாண்டாத திராவிடர்களுக்குக் குளிர் என்றால் என்றால் என்ன என ஒரு மசுரும் தெரிவதில்லை. பாவிகள். குண்டுச்சட்டியில் உட்கார்ந்துகொண்டு பொழுதன்னிக்கும் சாப்பிட்டுக்கொண்டிருந்தால் உடல் உப்பி, அந்தச் சட்டியிலிருந்து எப்படித்தான் அவர்கள் வெளிவருவதாம்? அவர்கள் பிரச்சினையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

இந்த எழவுகளெல்லாம் ஒருபுறமிருக்க..

உயர்வநவிற்சி உதவாக்கரைத் தமிழர்களின் மிகைப்படுத்தப்பட்ட கொடும்பிரச்சினைகளின் ஊற்றுக்கண்கள் + தீர்வுகள் எல்லாம் நம் சங்க இலக்கியங்களில்தாம் இருக்கின்றன என்பதை நான் அறிவோம். சங்க இலக்கியங்களில் இல்லாத விஷயம்தான் உண்டோ?

மதுரை ஆடிட்டர் பையன் நக்கீரன்,  தலையாலங்கானத்து எருதின்ற பலேபாண்டியனைப் புகழ்ந்து  மானேதேனே சேர்த்து எழுதிய நெடுநல்வாடைய்லயே சொல்லிப்புட்டான்:

ஒருமாதிரி பின்புலத்துக்காக அதன் ஒரு குளிரூட்டும் பகுதியை அப்படியே கொடுத்திருக்கிறேன்.

என் பொழிப்புரை:

பண்டைத் தமிழர், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்தே மழைக்காலங்களில் கொடுங்குளிரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அடைமழை பெய்து ஒரே வெடவெடுக்கும், பற்கள் தப்புத்தாளம் போடும் ப்ர்ர்ர்ர்ர் குளிர்.  சங்ககால மக்களெல்லாம் நெருப்புக்கங்குகளைச் சுற்றி அமர்ந்து வாட்ஸ்அப் ஃபார்வர்ட் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். டவர் கிடைக்காதவர்கள் அதற்குக் காரணமான ஹிந்துத்துவ அம்பானி-அடானி சதியைப் பற்றிப் புலம்புகின்றனர்.

ஒழிந்தபோது கைகளை நெடுநீட்டித் தீயில் வாட்டி கன்னத்தில் வைத்து சூட்டேற்றிக் கொள்கின்றனர். பிற நானாவித மிருகங்களும் பறவைகளும் குளிரில் நடுங்குகின்றன, பாவம். ப்ளடி.

-0 கெல்வின் அளவுதான் (அதாவது -273 டிகிரி ஸென்டிக்ரேட்)  வெப்பம். பிரபஞ்சமே சங்ககாலக் குளிரில் ஒடுங்கிவிட்டது.

நன்றி.

-0-0-0-0-

தர்க்கரீதியாக – நெடுநல்வாடையின் சங்ககாலத்துக்குப் (அதாவது சுமார் சற்றொப்ப அப்ராக்ஸிமேட்டாக ஆயிரம் வருடங்களுக்கு முன் தான், ற்றொம்ப அதிகமில்லை!) பின் இக்காலத் தேவைகளுக்காக விரித்தால், அகட்டினால், பகுத்தால், தொகுத்தால்…

…அனுதினமும் சென்னையில் பனிபெய்து ஆயிரம் இஞ்ச் ஸ்னோ என்பது உண்மைதானே?

ப்ளடி.

——

12 Responses to “நெருப்புசெய்யுள்காற்று livingparticle (முழிபெயர்ப்பு ©2021, எஸ்ராமகிருஷ்ணன்)”

  1. Kannan Says:

    Chennai’s four seasons are hot, hotter, hottest and torrential rain.

    Enjoy the day with Idlis and mysurpa :)

  2. ஆண்டு பாண்டு லிபராண்டு Says:

    இந்துத்துவ வெறியுடன் அதிகாலைக் குளியல் முடித்து, இறைவனை/இயற்கையை வணங்கி, பட்சணங்கள் பல சமைத்து ருசிப்பீர்கள் என நம்புகிறேன். தீபாவளிக்காக நீங்கள் கொளுத்தும் மத்தாப்பும், சங்குசக்கரமும் மட்டுமேதான் பிரபஞ்சத்தின் காலநிலையைத் தலைகீழாக்கிச் சூரியனைச் சூடாக்கி பூமியை அப்பளமாய்ப் பொரிக்கப் போகிறது, அதை எங்கே அமர்ந்து கொரிப்பீர்களோ?! இந்துப் பண்டிகைகளே இப்படித்தான், இன்பமாய்க் கொண்டாடுங்கள், பிலாக்கணம் வைக்க இன்னும் பல இடங்கள் போகவேண்டும்.


    • ஐயா நன்றி! எல்லா இடங்களிலும், அடியேனும் விசாரித்ததாகச் சொல்லவும்.

      வாழ்க பட்டாஸ்! வளர்க டமார்! வெல்க புகை!

  3. Sridhar Says:

    This is called Once-Chennai-bloke-who-became-a-Bangalorean syndrome. As the weather in Bangalore remains close to the Mediterranean climate, usually they complain about Chennai weather. If Chennai is cool and is comfortable for them, they complain about the Chennaiites who complain about the cool weather.

    On Thu, Nov 4, 2021 at 8:17 AM ஒத்திசைவு… प्रत्याह्वय… resonance… wrote:

    > வெ. ராமசாமி posted: ” நுமக்கும் நும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி > வாழ்த்துகள். சென்னைக்கு, நேற்று வந்தோம். இனியகாலையில் மழையோசையுடன் மஹோமஹோ > எம்எஸ்எஸ் அம்மணியின் என்றும்பசுமை வெங்கடேஸ ஸுப்ரபாதம் கலந்து…இன்பலாகிரி. > இங்கு அடைமழை. ‘நின்று பொழிந்து கொண்டிருக்கிறத” >


    • But, Sir – there are also Tiruchi supremacists who believe that just because they have a couple of overgrown rocks in the vicinity some with random sangam age scribbles, they really bleddy rock. Bah.

      Just because they may have lived in Chennai for a while in a fit of mindless overenthusiasm, they feel it is their moral duty to defend anything Chennai including its ‘world’s (of course) first micro-drones’ AKA mosquitos.

      Also, I provided ‘Sangam Age’ evidence for the Ice Age in TN, especially in Chennai, which seems to be continuing because of Thunderbug and Mangojam.

      But, you have not provided an iota of evidence for who those ‘they’ are.

      Apropos of the above, I request you to please kindly do the needful and redress my grievance at your earliest.

      Yours sincerely,

      Here I remain your bumble savant etc,

      -sgd-

      cc to: other Trichy supremacists as applicable, and for prompt action.

      Please find attached, my aforesaid petition in stamp paper, duly authorized by a Notorious Public.

    • Em Says:

      Sridhar ji,

      You have correctly diagnosed in your own polite way what us plebs call the “Bangalore Bandhaa”. Saying “sss.. so hot” even when the air conditioner is on is one of the symptoms of this condition.

      Having said that, when we moved to Chennai, my kids were perplexed to see people wearing earmuffs and the ubiquitous “monkey cap” during the “Cold season” saying stuff like “Vesha pani”..

      P.S. AC is switched on even during this “cold season” in our home. But as a matter of principle, we will defend Chennai, bcoz u know, Tamzhil-anda, Telugu-thatthu, Kerala-uruli and all that stuff.


  4. tr sridhar Says:

    Sir

    Thank you for the support.

    As they say, it’s the humidity carried from the sea, that forces a Chennaiite, who is known for his warmth or hot air as the case may be, to go for monkey caps and trendy earmuffs.


  5. Sir, Wishing you and your family a bright and happy Deepavali. Tamil Nadu with snowfall………so nice to even think of that. Let’s burst more crackers and bring snowfall to Tamizhagam.


    • Sir, thanks and here’s wishing you the same. 🙏🏿

      Whether are not we are going to have a snowfall thanks surprisingly to ‘global warming’ we may have a freefall, thanks to our dear dravidian lumpen.

      So.

      Let us wish ourselves the very best of all.


Leave a reply to வெ. ராமசாமி Cancel reply