ந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி!

April 20, 2018

கொடும்பாதகத் துகளான, தமிழகத்தையும் லெமூரியாவையும் ஒருங்கே ஒழிக்க வந்திருக்கும் இந்த ந்யூட்ரினோவின் உண்மை சொரூபம்….

…நமக்கு விளங்க விளங்க, திரை மெல்ல விலகுகிறது.

-0-0-0-0-0-

வழக்கம் போலவே அவாள் சதி செய்து சுப்பனையும் குப்பனையும் அடியோடு ஒழித்துக்கட்டி, பெரியார் அவதரித்த மண்ணிலேயே, புண்ணியபூமியிலேயே அவருக்குச் சமாதி கட்ட  மற்றவாளுடன் சேர்ந்து நடத்தும் சதி நாடகங்களில், இதுவும் ஒன்று!

தமிழகத்தையே சுடுகாடாக்குவது, நசுக்கிப் பொசுக்கித் துண்டாடி தமிழனின் மண்டையோடுகளின் மீது சதிராடுவது இவாளுக்குக் கால் வந்த கலை.

இதோ பாருங்கள் – இந்த அசைக்கமுடியாத ஆதாரத்தை! ஜெர்மன் காரனே சொல்லிவிட்டான்!

பூனைக்குட்டி பையை விட்டு வெளியே வந்துவிட்டது.

அதாவது – இந்த நாசக்கார ந்யூட்ரினோவுக்கும் ராமன் அய்யருக்கும் உள்ள கள்ளத் தொடர்பைப் புட்டுப்புட்டு வைத்துவிட்டான் ஜெர்மன்காரன்.

யார் இந்த ராமன்?  சர் சி வி ராமன்?

அறிவியலாளன் எனப் பம்மாத்து செய்துகொண்டிருந்தவன். பூணூல். சர்க்கி தொபுக்கடீரென விழுந்தவனுக்கெல்லாம் மேல்ஜாதி என்பதாலேயே சர் பட்டம் கொடுத்துவிட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

அவனுக்குப் போய், பெரியார் சொல்லியும் கேட்காமல்,   தனக்கே கொடுங்கள் எனப் பெருந்தன்மையாகப் பரிந்துரை செய்ததையும் பொருட்படுத்தாமல் — நொபெல் பரிசு கொடுத்துவிட்டார்கள், சங்கப் பரிவாரத்தால் மூளைச்சலவை செய்யப்பட்ட, தமிழக சாதிய விஷச்சூழலையும் பார்ப்பன மனுதர்ம அலங்கோலத்தையும் அறியாத வெள்ளைக்காரர்கள்.

அவன் பார்ப்பனன். ஆகவே இந்துத்துவா வெறியன். குசும்பன். அயோக்கியன். பெயரைப் பார்த்தாலே தெரியவில்லையா அடலேறே?

இந்த ராமனுக்கு வைக்கப் பட்ட பெயர் அந்த, அதே ராமன் தான்!

யார் அந்த ராமன்?

அயோக்கியா ராமன்.  சம்பூகனைக் கொன்ற, திராவிட சூர்ப்பணங்கின் மூக்கை வெட்டிய ஆரியன். திராவிடப் பேரரசனான நம் மகத்தான முன்னோர்களில் ஒருவனான ராவணனைக் கொன்றவன்… பூணூலை அணிந்தவன்.

பின்னாட்களில் அங்குதான் மசூதி கட்டுவார்கள் என நன்றாகவே தெரிந்திருந்தும் தன் ஆலயத்தை, முன்னாலேயே அயோத்தியை ஆக்கிரமித்துக் கட்டிக் கொண்ட கயவன்.

உணர்ந்து அறிந்துகொள் அடலேறே! உண்மை வரலாற்றைப் புரிந்துகொள் இனமானச் சிங்கமே!

பின்னாட்களில் போற்றுதலுக்குரிய பேரரசர் பாபர், இந்தியாவை ஆரிய நச்சுப்பாம்பிடம் இருந்து மீட்டபின் அதனைக் கொண்டாட சகோதரத்துவமும் அமைதியும் நிலவ, அந்த மனுநீதி ராமனின் கற்கட்டுமானத்தைக் கருணையுடன் மறுசுழற்சி செய்து – தொழுகைக்குரிய, மதச்சார்பின்மையைப் போதிக்கும் ஒரு கட்டிடத்தை கட்டினார்.

ஆனால் சங்கப் பரிவாரங்களுக்கு அது பொறுக்கமுடியாமல் அந்த ஒன்றுமறியாத, சகோதரர்களின் இறைவனைத் தொழும் எளிய கட்டிடத்தை, மசூதியைச் சிதைத்துவிட்டார்களே! ஐயகோ!

இப்போது புரிந்ததா,  இந்த ராமன்களுக்கும் ந்யூட்ரினோக்களுக்கும் உள்ள விவகாரமான விஷமத்தனமான தொடர்பு?

அவாள் ந்யூட்ரினோ அறிவியல் என ஆரம்பிப்பது சங்கப் பரிவாரங்களை ஆரத்தி எடுத்து பெரியார் அவதரித்த மண்ணுக்கு அழைத்திடத்தான். காவிகளை உட்புகுத்தத்தான். காக்கி நிஜார்களை அணிவகுக்க வைக்கத்தான்….

ஆனால், இந்தக் கயமைக் குறிக்கோள்களை மறைத்து அவாள்கள் சொல்வார்கள்: இந்த ந்யூட்ரினோ திட்டத்தால் அறிவுப் புலம் வளரும், வளர்ச்சி ஏற்படும் என்றெல்லாம். எல்லாம் புராணக் கட்டுக்கதைகள்.

தமிழகத்துக்கு அறிவியல் தேவையில்லை, எங்களுக்கு எம் தமிழர் தலைவர் பெரியார் போதும்.

தமிழனுக்கு மூளை வேலை செய்யவேண்டாம், உணர்ச்சிகள் எழும்பினால் போதும்!

திராவிடனுக்கு வளர்ச்சி தேவையில்லை, அவன் இனமானம் காக்கப்பட்டால் போதும்!

ஆகவே!

வெட்கிப் பயந்து ஓடுங்கள், பார்ப்பனப் பைசாசங்களே!

-0-0-0-0-0-0-

சமூகநீதி இனமானம் எல்லாம் தமிழகத்துக்குக் கொணர்ந்த திராவிட இயக்கம் வாளாவிருக்காமல் தொடர்ந்து போராடி வருகிறது.

சுப்பனுக்கும் குப்பனுக்குமாகிய நமது இயக்கம் – திராவிடனுக்காக நம் தன்மான இயக்க இனவிடுதலைக்காக, மனு நீதிக்கு எதிராகத் தொடர்ந்து புரட்சி செய்துவருகிறது.

இது பொறுக்காத பார்ப்பனக் குள்ளநரிகள், இங்குள்ள எட்டப்ப நரிகளுடன் சேர்ந்து ஏகடியம் செய்து வருகின்றன.

இப்போது புரிகிறதா, அவாள் ஏன் ந்யூட்ரினோ ந்யூட்ரினோ அது வரவேண்டும் வரம் தரவேண்டும் என அலறுகிறார்கள் என்று?

அதுவும் கன்னியாகுமரியில் உள்ள ஒரு திராவிட, பார்ப்பனரல்லாத, ஆகவே சூத்திர மலையில் தான் அந்தக் கொடும்பாதக அணுகுண்டுத் தொழிற்சாலையை அமைக்கவேண்டுமென்று?

ஏனெனில், திராவிட இனத்தை ஒட்டு மொத்தமாக அழிக்க!

…கன்னியாகுமரியில் இருக்கும், கலைஞரால் அமைக்கப்பட்ட பேறுபெற்ற வள்ளுவனின் மாபெரும் சிலையை உடைத்துத் தூள்தூளாக ஆக்குவதில் ஆரம்பித்து, பின் நம்மையே துப்புரவாக ஒழித்தால்தான் அவாளுக்குத் திருப்தி!
-0-0-0-

சகோதரன் அண்ணன் புரட்சிப் புயலான்  வைகோ, அறிவியல் ஞானி திருமாவளவன்,  போன்றவர்களுக்கெல்லாம் இது தெரிந்திருக்கிறது.

அதனால் தான் – இந்த பார்ப்பன சதியை அம்பலப் படுத்துவதற்காகத் தொடர்ந்து போராடுகின்றனர்.

திராவிட இளைஞர்களும், இனமானப் போராளிகளும் இதில் தங்களை இணைத்துக்கொண்டு பரணி பாடுகின்றனர்.

செயல்தலைவர், திராவிட இயக்க இளைஞரணியின் நிரந்தரத் தலைவர் ஸ்டாலினாரின் சீரிய அறிவியல் பூர்வமான வழிகாட்டுதலில், மீண்டும் திராவிடத் தமிழகம் சீறு நடை போட்டு உலுத்தர்களை உலுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை!

இளவல், திராவிடச் செம்மல், போற்றத்தக்க உதயநிதி ஸ்டாலினார் தலைமையில் மோடிமஸ்தான்களின் முகமூடிகள் கிழிக்கப்பட்டு காவிக்கொடிகள் எரிக்கப்படும் நாள் வந்துகொண்டேயிருக்கிறது. 2021ல் உதயநிதியார்தாம் தமிழக முதலமைச்சர், குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!

உதயநிதியாரின் இளந்திராவிட அக்கினிக்குஞ்சுகள் – திராவிட இளவரசன் இன்பன் ( s/o உதயநிதி s/o ஸ்டாலின் s/o கருணாநிதி), திராவிடச் செல்வி தமன்யா (d/o உதயநிதி s/o ஸ்டாலின் s/o கருணாநிதி) –  டெல்லி செங்கோட்டையில் திராவிடக் கொடியைப் பறக்க விடும் நாளும் வந்திடும்!!

ஆகவே, நம் திராவிடர் – இந்த ந்யூட்ரினோவுக்கு எதிரான முக்கியமான அறப்போரில் வெற்றி பெற்று வாகை சூடுவர் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது… பெரியார் அருளும் ஆசியும் நம் பக்கம் இருக்கிறது.

பகுத்தறிவும் இருக்கிறது. பகலவனும் இருக்கிறான்.

பாடுவோம், முரசு கொட்டுவோம்! எக்களிப்போம்!

எடடா, அந்தக் கொலை வாளினை எடடா என புரட்சிக் கவிஞரின் அகிம்சைக் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம்!

பயமே வேண்டாம் அடலேறே! பொறுத்தது போதும்! பொங்கியெழு!!

கவலை வேண்டேல்! நம் போற்றத்தக்க பாரம்பரியத்தின்படி, யேசுவும் அல்லாவும் நம் பக்கம்தான் துணையிருப்பர். நாமும் அவர்களுக்குத் துணையாயிருப்போம்.

ஏனெனில், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது வெறும் நன்மையின் எண்ணிக்கை மட்டும் அல்ல என்பதைக் கற்றுக்கொள், திராவிடனே!

-0-0-0-0-

வடவர்களையும் பார்ப்பன-பனியாக்களையும் தமிழகத்தில் இருந்து துரத்துவோம்! கருவறுப்போம்! அருவருப்போம்!!

ஒன்று கூடுவோம்! முதற்கண், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் பார்ப்பனக் கயவர்களை ஓட ஓட விரட்டுவோம்!!

ஒழிக ந்யூட்ரினோ!  வாழ்க திராவிடம்!!

வளர்க பெரியார் பெருமை!

விலகுக ஆரிய இருள்!

பொலிக பகுத்தறிவு அருள்!

(இந்தக் கட்டுரையை, அரைகூவலை வெ. ராமசாமியாகிய நான் எழுதவில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் எனும் என் திராவிடத் தாரக மந்திரத்தின் படி ஒழுகி – என் தோழனும் இளவலுமாகிய ‘தறுதலை தீரமணி’ அவர்கள் எழுதிக்கொடுத்ததை, வரி பிசகாமல் ஆரியக் கலப்பில்லாமல் பதிப்பித்திருக்கிறேன். நன்றி!)

4 Responses to “ந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி!”

  1. Singarayan's avatar Singarayan Says:

    நியுட்ரினோ திட்டம் வருவதில் தவறில்லை தான். அதற்காக சம்பந்தமே இல்லாமல் திராவிட இயக்கத்தை திட்ட என்ன அவசியம்.ஏன் இவ்வளவு வெறுமை மனதில்.


    • அய்யா சிங்கராயன்,

      மனதில் வெறுமை இல்லை. வெறும் உறுதிதான்.

      ஆனால் அய்யா தறுதலை தீரமணியார், திராவிட இயக்கத்தைப் புகழ்ந்துதானே இருக்கிறார்? நீங்கள் சொல்வது எனக்கு உண்மையாகவே புரியவில்லை.

      மற்றபடி குவைத் எழவில் அனைவரும் நலம் என நினைக்கிறேன். பக்கத்திலிருக்கும் மொஜில் ஃபார்மஸியில் தலைவலி மாத்திரை வாங்கிச் சாப்பிடவும்.

      மறக்காமல், இரவில் தூங்குமுன் அவசியம் பல் துலக்கவும்.

      நன்றி.

  2. Ranjith's avatar Ranjith Says:

    மதசார்பற்ற யேசுவும் அல்லாவும் உங்களுக்கு துணையாக வருவார்கள். தீரமணியின் தீரா பக்கங்கள்…

  3. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    அய்யா,
    தறுதலை தீரமணி சொல்லி எழுதியதற்க்கேல்லாம் மறுமொழி வருமா? தன்மான சிங்கம், ஆரிய ஆரிருளை அகற்றிய அடலேறி அண்ணன் கருத்துகளுக்கு மற்றொரு மறுமொழியா ! இல்லை இல்லை.,


Leave a Reply to Ranjith Cancel reply

Your email address will not be published. Required fields are marked *