சிவகங்கை சின்னப்பையன் – சில குறிப்புகள்

March 8, 2018

…சிசி என, பசி, கருணாநிதியால் என்னதான் விடலைத்தனமாகக் கிண்டல் செய்யப்பட்டாலும், முக-வால் திராவிடத் தேர்தல் ஊழல் (சிவகங்கை, 2009) ஒன்றைச் செய்து பழநியப்பன் சிதம்பரத்தை ‘வெற்றி’ பெறவைக்க முடிந்தது.

…ஏனெனில் – ‘கோரப் பசி’ பசிதம்பரமும் சரி, கருணாநிதியும் சரி –  இருவருமே மகத்தான ‘அறிவியல் பூர்வமான’ ஊழலாளர்கள் + மனச்சாட்சியிலாக் கொடுங்கொள்ளையர்கள்; இன்னொரு விஷயம்:  இந்த ‘பாம்பின் கால் பாம்பறிந்து’ பரஸ்பர உதவி செய்துகொள்ளும் பாங்குக்கு –  கருணாநிதியின் பெண்கண்மணி கனிமொழியும்,  சிதம்பரத்தின் மகன் கார்த்தியும் – சிலபல வணிகங்களில் பங்குதாரர்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

-0-0-0-0-

சிவகங்கை சின்னப்பையன், சிஐடிகாலனி சின்னப்பெண் – பற்றியெல்லாம் எழுத அவ்வளவு அவகாசமில்லை. ஆக, இந்தக் குறுங்குறிப்பில் பகிர்ந்துகொள்ளப் போவது – இரண்டு விஷயங்கள்:

அ: பணப் ‘பசி’ பற்றிப் பலப்பல ஆண்டுகளாக எதிர்மறை விஷயங்களைக் கேள்விப்பட்டு வருகிறேன். இந்த எழவெடுத்த இணையத்தில் ‘ஒத்திசைவு’ தளம் ஆரம்பித்து எழுதவந்த 2011 ஆண்டில் இப்படிச் சொன்னேன்.

ஒரு சிறிய எடுத்துக்காட்டாக, நம் தமிழக மகாமகோ ஊழல்வாதிகளின் ஒரு அவசர ஜாபிதா போட்டோமானால், நாம் எங்கு தான் நிறுத்துவது என்று தெரியாமல் தான் இருக்கும்… அது இப்படிப் போகலாம்…

காவல் துறை பழைய IG ஸ்ரீபால் குடும்பத்தினர்களிடமிருந்து புதிய ஜாஃபர் சேட் போன்றவர்கள் வரை; இன்பசேகரன், அலாவுத்தின், மாலதி போன்ற IAS சதிகாரிகள்; துரைமுருகன்,  ஆற்காடு வீராச்சாமி, டி ஆர் பாலு, வீரபாண்டி ஆறுமுகம்,  ராசா, வீரமணி போன்ற கருணாநிதியின் தம்பிகள்; அடைக்கலராஜ், தங்கபாலு, ப சிதம்பரம் (இந்த வெள்ளை உடை ‘நேர்மையாளர்’ வசம் உள்ள மோசடிப் பங்குகளும் (shares), கொடகு மலைகளில் உள்ள நூற்றுக் கணக்கான ஏக்கர் விஸ்தீரண பினாமி காபி தோட்டங்களும் பற்றி எழுத ஆரம்பித்தால் எங்கோ மணம் பறக்கும்!)  போன்ற கதர்ப்பதர்கள்

ஏன் எழுதுகிறேன்…  10/05/2011

இந்த அயோக்கியக் கதர்ப்பதர் , தன் மகனுடன் தற்போது வசமாக மாட்டிக்கொண்டிருப்பது பற்றிய என் அளவுகடந்த மகிழ்ச்சியை பகிர்கிறேன். நன்றி! (ஆனால் இதிலிருந்தும் வழுக்கிக்கொண்டு வெளி வந்துவிடுவார்களோ எனவும் சந்தேகமில்லாமல் இல்லை)

அதே சமயம், சிஐடிகாலனி சின்னப்பெண்ணும் தன்னுடைய தனிப்பட்ட முறை அகோரப் பசிக் கொள்ளைகளுக்காகவும், கார்த்தியுடன் இணைந்து அடித்தவைகளுக்காகவும், முறையாக விசாரிக்கப்பட்டு உள்ளே தள்ளப்பட்டால் இன்னமும் இன்னமும் இறும்பூதடைவேன்!

ஆ: கோரப் பசி குறித்து – மாதவ் நலபத் அவர்கள்  எழுதியிருக்கும் இரண்டு ஆங்கிலக் கட்டுரைகளை மிகமிகமிக முக்கியமானவையாகக் கருதுகிறேன்; தயவுசெய்து இவற்றைப் படித்து, யோசிக்கவும். சிதம்பரப் பசி போன்ற கழிசடைத் தலைவர்களைக் கொண்டாடும் காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது விமோசனமே இல்லை என்கிற வருத்தத்துக்குரிய முடிவுக்கு வந்துள்ள என்னைப் பார்த்துப் பரிதாபப் படவும்

முதற்கட்டுரை:

(கார்த்தி-சிறை-தள்ளல் குறித்து,  சிதம்பரம் சார்புள்ள லுட்யன்ஸ் கும்பல் அதிர்ச்சி!)

MADHAV NALAPAT | NEW DELHI | 4 March, 2018 – Chidambaram’s Lutyens clique stunned by Karti detention

இரண்டாவது கட்டுரை:

(பாஜகவைத் தோற்கடிப்பதற்காக அக்டோபர்2018ல் பங்குசந்தையைச் சரிக்க முற்படப்போகும் சதிகாரகும்பல்)

MADHAV NALAPAT | NEW DELHI | 4 February, 2018 – Cabal plans October meltdown in share prices to rout BJP

இந்தக் கட்டுரையில் சில விஷயங்களை (மட்டுமே) நேரடியாக அறிந்திருக்கும் எனக்கு அவற்றின் உண்மைகள் புரிந்துள்ளதால், இந்தக் கட்டுரை பொய்மை ஜோடிக்கும் பீதி பரப்பும் நக்கீரன்/விகடன்/தஹிந்து வகை பப்பரப்பாவாகப் படவில்லை.

ஆகவே அனைத்து விஷயங்களையும் தயைகூர்ந்து படிக்கவும், அசை போடவும், முடிந்தால் பரப்பவும்.

-0-0-0-0-

‘பசி’ப் பிணியும், அதன் திராவிடச்  சகாக்களும் ஊழல்வாதக் குடும்பத்தினரும் பாரதத்திலிருந்து முழுவதுமாக அகற்றப்படவேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. நன்றி!

 

5 Responses to “சிவகங்கை சின்னப்பையன் – சில குறிப்புகள்”

  1. Aathma's avatar Aathma Says:

    Expected more comments.. But none..Athu..

  2. Aathma's avatar Aathma Says:

    Haha..no sir..few years back a man from Pondy was arrested for tweeting something about them..so thought that fear persists..


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *