அஞ்சலி: பழ. கருப்பையா

February 11, 2018

ஒரு காலத்தில் – ஓரளவு படிப்பறிவுடனும், நிதானத்துடனும், தர்மாவேசத்துடனும் வளையவந்ததாக என்னால் நம்பப்பட்ட பழ. கருப்பையா அவர்கள்…

…தீராவிடத்தில் ஏகோபித்து ஐக்கியமாகி, தீவட்டிக்கொள்ளைக்காரர்களின் எச்சில் சோற்றுக்கு (சுப. வீரபாண்டியன், அ. மார்க்ஸ் போன்றவர்கள் போல) அலைந்துகொண்டு, வெறுப்பியத்தில் முக்குளித்து உளறிக் கொட்டும் வெகுசாதாரண உடன்பிறப்புகளுடன் போட்டிபோட்டு தம் இருப்பை நிலை நாட்டிக்கொள்ளவேண்டிய காலகட்டம் வந்திருக்கிறது என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் விசனத்தையும் ஒருங்கே கொடுக்கிறது, என்ன செய்ய…

சரித்திர சக்கரத்தைவிட, இம்மாதிரி தரித்திர தண்டக்கருமாந்திர சக்கரங்கள் கொடுக்கும் கேளிக்கைகளுக்கு வேறு அளவேயில்லை.

-0-0-0-0-0-

பல நாட்களாக, இணையமேய்ப்பனாக இல்லாமல் அரசியல் நடப்புகளில் ஆர்வமில்லாமல் – ஆகவே ஏதேதோ உருப்படியான வேலைகளில் ஆழ்ந்திருந்த எனக்கு –  இன்று காலைதான் பழைய பழ. கருப்பையாவின் இறப்பு தெரியவந்தது. சுபம்.

“பிச்சைச்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சனையில் வீழ்ந்தாயடா, கருப்பா…” எனப் பிலாக்கணம் வைக்கவும் தோன்றுகிறது. ஆனால்… நாறுடன் சேர்ந்த பூவும் நாராசம் மிக்கதாகிவிடும் போலும்.

பலப்பல வருடங்களுக்கு முன்னால் அவருடன் சிலபல முறை உரையாடியிருக்கிறேன் என நினைவு. அவர் எழுதியுள்ள கட்டுரைகளில் பலவற்றையும் படித்திருக்கிறேன். நான்தான் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

என் தவறும், அஞ்சலியும்.  :-(

பின்குறிப்பு: என்னுடைய பண்பாடற்ற அஞ்சலிக்குப் பொங்கப் போகிறவர்கள் – எனக்கு நானே எழுதிக்கொண்ட அக்மார்க் அஞ்சலியைப் படிக்கவும். நன்றி.

தொடர்புள்ள பதிவு:

9 Responses to “அஞ்சலி: பழ. கருப்பையா”

  1. ஆனந்தம் Says:

    அவர் என்ன சொன்னார்? லிங்க் தர முடியுமா? நானும் சில நாட்களாக மேல்தேதி (எஸ்ரா) செய்துகொள்ளத்தவறிவிட்டேன்.


    • பலப்பல விஷயங்கள் நடந்திருக்கின்றன – அவர் அறிவுக்கும் வீச்சுக்கும் தொடர்பில்லாத கயவர்களுடைய காக்கைக்கூட்டத்தில் போய் விழுந்துவிட்டார்… (கடந்த சில வருடங்களாகவே! ஏனிப்படியாயிற்று?)

      எதுஎப்படியோ, இந்த மனிதரின் இக்கால ஏச்சுகளுக்கு ‘ஒரு மாதிரி’யான மாதிரி:

      ஆரியம் நஞ்சு – அதன் முறிவு பெரியார் எழுத்தாளர் பழ. கருப்பையா எக்காளம்!
      http://www.viduthalai.in/component/content/article/97-essay/157120-2018-02-10-10-46-10.html

      சோகம்.

      • ஆனந்தம் Says:

        விடுதலை படிக்க நேர்ந்தது வருத்தமானதுதான். ஆனாலும் நன்றிகள். கண்ணகி திராவிடம், திரௌபதி ஆரியத் திணிப்பு என்றும் மேற்படியார் எங்கோ பிதற்றியதாக முகநூலில் யாரோ குறிப்பிட்டிருந்தார். அது பற்றி முழுமையாக அறிந்துகொள்ளவே கேட்டேன். அதற்குள் அவர் மேலும் பிதற்றியிருக்கிறார் போலும். பிதற்றல்கள் இந்த வேகத்தில் போனால் நம்மால் பின்தொடரக்கூட முடியவில்லையே! :-(((

  2. பிரபுதேவா Says:

    கெட்டுப்போவதற்கு கிழவி ஆகும்வரை காத்திருப்பானேன். அவரே தான் சொன்னார்.

  3. Aathma Says:

    Dear sir, I was shocked to hear him speak about Bharathi in a video in Youtube..also I saw few other videos of him speaking..one could see the apparent hatred in those..I think he is more happy being in this ..his natural habitat..


  4. […] பழ. கருப்பையா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு பதிவு […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s