மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் இறப்புக்கு இரங்கலெழவொன்றை இந்த 64வயது இளைஞரணித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தேயாகவேண்டுமென எந்த மடையன் அழுதான்?

October 31, 2017

கோபம்கோபமாக வருகிறது. :-(

(அல்லது) தமிழர்(!) தலைவர்(!!) இசுடாலிர் அவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் பாவப்பட்ட தமிழ்… :-((

-0-0-0-0-0-

தமிழில் பக்கம்பக்கமாக என்றில்லை – அதிகபட்சம் நாலு வரிகளைக் கூடக் கோர்வையாக, தவறில்லாமல் எழுத/பேசத் தெரியாத தமிழ அரைகுறைகள் எல்லாம் எதிர்கால முதலையமைச்சர் ஆகக்கூடாது என்றில்லை. ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் – அவர்கள் தமிழ் தமிழ் என அரற்றிக்கொண்டு வாயோர நுரை தள்ள அலைந்து கொண்டிருக்கக்கூடாது. அவ்வளவுதான். இரட்டைவேடம் பரவாயில்லை. ஆனால் அதற்குமேல் வேண்டவே வேண்டாம், என் செல்ல திராவிடர்களே! தீரா இடர்களே!

…அதுவும் தமிழ் என்பதையே மூலதனமாக வைத்துத் தொடர்ந்து கொள்ளையடிக்கும் திராவிடர்களுக்குக் கொஞ்சமாவது தொழில் சுத்தம் இருக்கவேண்டும் என நாம் நினைப்பது ஒன்றும் தவறில்லையே! இவர்கள் ‘அறிவியல் பூர்வமாக’ நுணுக்கமாக அடித்த படுபகீர் தொடர் பகற்கொள்ளைகளுக்கும், ஆடிட்டர்களையும் கூட்டாளிகளையும் ‘நமக்கு நாமே’ தூக்கில் போட வைத்தமைக்கும் முனைந்த மாளா திட்டமிடலில்/உழைப்பில், சகோதரசகோதரிகளுக்குச் செக்மேட் வைக்கும் பாங்கில், தமிழகத்தைக் கூறுபோட்டு திராவிடக் குறுநில மன்னர்களுக்குப் பிரித்துக் கொடுத்துக் கப்பம் பெற்றுக் கட்சியைக் கைக்குள் கொண்டுவருதலில் — கேவலம் ஒரு 0.001% கூட இந்த இரங்கல் விஷயத்தில் காண்பிக்கக் கூடாதா?

அதுவும் ஒரு அஞ்சலி வகை இரங்கல் ஏரல் எழவுக் கட்டுரை (அதுவும் நாலே வரி!) கூட இவ்வளவு சொதப்பலாகவா இருக்கவேண்டும்?

கழுதைத்தனமான ஒரு இரங்கல் குறிப்பை இந்த மனிதர் எழுதவேண்டும் என எவன் அழுதான், சொல்லுங்கள்? ஆனால், கொஞ்சம் யோசித்தால், தற்போது இந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை ‘குதிரை பேர’ ஆட்சி எனக் கிண்டல் செய்ய, ‘கழுதை பேர’ திமுக இளைஞர் அணிச் செயலாளர் (வயது 64) கோமகருக்கு உரிமையில்லையா என்ன? டிஎம் செல்வகணபதி எனப் பலப்பல பேரங்களை இதே இசுடாலிர் முந்தையகாலங்களில் நடத்தவில்லையா என்ன?

தமிழின் அடிப்படைகளை அறியாமல் இலக்கணத்துக்கும் பூதகணத்துக்கும் வித்தியாசம் ஒரு மசுத்துக்குக்கூடத் தெரியாமல்  – அடியில் இருக்கும் படையை ஆனந்தமாகச் சொறிந்துகொண்டு அடுத்து எங்கே கன்னக்கோல் வைக்கலாம் என்ற சிந்தனையில் இருப்பவர்கள்,   ஏன் பிற விஷயங்களில் மும்முரமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளவேண்டும்? இந்த அழகில் கல்வி பற்றிய தங்களுடைய மேலான அறிவுரைகளை நம் மாணவர்களுக்குக் கொடுக்கவேறு வந்துவிடுகிறார்கள் இந்த அற்பஜீவிகள்.

எங்கே எப்படித் திரியாவரம் செய்யலாம் பணத்தைச் சுருட்டலாம் பொய்மைகளைப் பரப்பலாம் என அலைந்து கொண்டிருக்கும் கழக உடன்பிறப்பு உதிரிகளான கல்வித்தந்தைகளும் மாமாக்களும் ‘மாபெரும் மாணவர் மன்றம்‘ போன்ற பெயரைக்கேட்டாலே படுபயங்கர பீதியளிக்கும் அமைப்புகளை டெம்பரவரியாக உருவாக்கி – தங்கள் தலைவர் இசுடாலிர் அமோகமாக உளறத் தளம் வேறு அமைத்துக்கொடுக்கிறார்கள், கபோதிகள். (இந்தக் குண்டு மாணவர் மன்றம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது?)

சரி. இந்த திராவிட எழவாதாரங்களைப் பற்றிப் புலம்புவதை விட்டுவிட்டு இந்த பாவப்பட்ட மேலாண்மை பொன்னுச்சாமி இரங்கலுக்கு வருவோம். பாவம் அவர். நிம்மதியாகப் போய்ச் சேர்ந்துவிட்டார். நல்லவேளை, அவருக்கு இப்படியாப்பட்ட கந்தறகோள அஞ்சலிகள் எல்லாம் வந்திருக்கின்றன என்கிற செய்தி தெரியவர முகாந்திரமேயில்லை; தப்பித்துவிட்டார். வாழ்க!

-0-0-0-0-0-

இப்படியொரு இரங்கல் செய்தியெழவை வெளியிட்டிருக்கிறார் இசுடாலிர்.

https://www.facebook.com/note.php?note_id=1670764616287683

‘இரங்கல் செய்தி’

தமிழ் சிறுகதை மற்றும் புதின எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி அவர்கள் மறைந்த செய்திகேட்டு துயரமுற்றேன். அவர் எழுதிய “மின்சாரப்பூ” என்ற சிறுகதைத் தொகுப்பு 2007 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. மேலும், ‘கல்கி” இதழின் முதல் பரிசுகளை, அவருடைய சிறுகதை இருமுறை பெற்றுள்ளது. தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்த அவரது மறைவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

:-(

1. அது என்ன ‘மற்றும்’ – இந்த ஸன் கலைஞர் டீவி குப்பை ‘மற்றும்’ தமிழ்க் கொலையை இந்த மனிதர் ஏன் செய்யவேண்டும்?

2. அவர் பொன்னுசாமி அல்லர், பொன்னுச்சாமி – ஒரு பெயரை (அதுவும் இரங்கல் செய்தியின்போதாவது) ஒழுங்காக எழுதக் கூடத் துப்பில்லை இந்தத் திராவிடருக்கு. அல்லது இம்மாதிரிச் செய்திகளை, இசுடாலிருக்காகப் பேய்போல எழுதும் கோஸ்ட் ரைட்டர் அரைகுறைகள் சொதப்பி விட்டார்கள்!

இசுடாலிர் தகப்பனாரும் இறப்பார். நானும் இறப்பேன். நாமெல்லாரும் போய்ச்சேரவேண்டியவர்கள்தாம். ஆனால் இதே இசுடாலிர் எழுதக்கூடும் இன்னொரு அஞ்சலிச் செய்தியில் கொலைஞர் குருணாநிதி எனவா எழுதுவார்? அது அசிங்கமும் மரியாதைக் குறைவும் அல்லவா? ஆக, இதே மரியாதையை ஒரு செத்துப்போன மனிதருக்குத் தராமல் – என்ன மசுத்துக்கு இரங்கல். கொஞ்சம்கூடச் சிரத்தையேயில்லை – எதற்கு இந்த மரியாதையற்ற மரியாதை இரங்கல் பம்மாத்து?

ஹ்ம்ம்ம்… இப்படியெல்லாம் என்னையும் அசிங்கப்படுத்திவிடுவார்கள் ;-) என்பதை நன்றாக அறிந்துதான், நான் எனக்கேஎனக்கான அஞ்சலிக் கட்டுரையை எழுதிக்கொண்டுவிட்டேன். யார் யார் எப்படி அஞ்சலி அகவுவார்கள் எனவும் அதில் விலாவாரியாக இயம்பியிருக்கிறேன். படித்து இன்புறவும்: ‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார் … 

3. மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘மின்சாரப்பூ’ ஸாஹித்ய விருது பெற்றது 2008ல். 2007ல் அல்ல. மானாவாரியாக இணையத்தில் இருந்து கண்ணில்லாத கபோதித்தனமாகக் காப்பியடித்தான் இப்படித்தான் ஆகும். x ஆண்டிற்கான விருதுபெற, அந்தப் படைப்பு  x-6 ஆண்டிலிருந்து x-1 ஆண்டிற்குள் எழுதப் பட்டிருக்கவேண்டும் (சான்று: http://www.sahitya-akademi.gov.in/old_version/Award08.doc). அதாவது 2008 ஸாஹித்ய விருதுக்கு மின்சாரப்பூ 2002-2006 ஆண்டுகளுக்குள் எழுதப் பட்டிருக்கவேண்டும். காப்பியடிப்பதைக்கூடச் சரியாகச் செய்யத் தெரியவில்லை இந்த மாமேதைக்கு.

பிரச்சினை என்னவென்றால் ஜெயமோகன் அவர்களும் 2007 என்றே குறிப்பிட்டிருக்கிறார். கொஞ்சம் சரிபார்த்திருக்கலாம்.

4. ‘மொட்டத்தாத்தா குட்டேல விழ்ந்தான்’ வகையில் -‘ ”கல்கி” இதழின் முதல் பரிசுகளை,’ என ஒரு முன்னேபின்னேயுமில்லாமல் ஒரு சொதப்பல்.

5. ‘தமிழ்மொழிக்குப் பெருமை சேர்த்த அவரது மறைவுக்கு’ என ஒரு அசட்டுத்தமிழ். அவர் மறைவால் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்ந்ததா? பாவிகளா! வொங்களோட மறைவுக்குப் பின்னாலதாண்டா தமிழகத்துக்கே பெரும சேரும்…  அத்துவெரிக்கும் வெற்ம் எர்ம தாண்டா சேறும், தமிள்ப் பண்டிதனுங்க்ளா!

ஒரு வாக்கியத்தை எப்படிக் கட்டமைப்பது – இந்த காற்புள்ளி கமா எழவை எப்படி உபயோகிப்பது என ஒரு அறிவும் இல்லை. பெத்த இரங்கல்!

6. ஒருவர் இறந்தால் அவருடன் தொடர்புடையவர்கள் வாடுவார்கள் என்பது சரியேயல்ல. சிலசமயம், சொத்துப் பிரச்சினை கட்சித்தலைமை இன்னபிற தொடர்பாக ஆனந்தக்கூத்து ஆடுபவர்களும் இருக்கலாமல்லவா? இசுடாலிர் அவர்கள் தம் குடும்பத்துடனே இந்தச் செய்தியைப் பொருத்திப் பார்க்கலாம்.

7. ‘இரங்கல் செய்தி’ — இதற்கு ஏன் மேற்கோள்? எங்கிருந்தேனும் சுட்ட சொற்றொடரா அது? அல்லது அச்சொற்றொடரை, சாதாரணமாக உபயோகிப்பதில்  சம்மதமில்லையா? ஏன் வேண்டாவெறுப்பாக அதனைச் செய்கிறீர்கள்? என்ன உளறலப்பா இது?

8. “மின்சாரப்பூ” – இதற்கு ஏன் இரட்டை மேற்கோள்குறி? யாராவது மின்சாரப்பூ எனச் சொன்னார்களா? அல்லது காற்றுபோனபோக்கில் யாரோ சொன்னது என இதனைக் குறிப்பிடுகிறீர்களா? இது ஒரு புத்தகத்தின் தலைப்புதானே? ஆகவே ஒற்றை மேற்கோள் குறி போதுமானதாக இருந்திருக்குமே! அடிப்படைச் சொதப்பல்?

9. ‘கல்கி”- என்னபா இது!  ஏதாவது மேற்கோள் + உடைமைக்குறியா? தேவுடா! இப்படியெல்லாமா வாசகர்களைப் படுத்தி எடுப்பது. அல்லது கொள்ளையடித்த களைப்பில் தூங்கி வழிந்துகொண்டே மேற்கோள் குறி குறியாகத் தொங்கவிட்டுவிட்டார்களா? என்ன தற்குறிகள்.

10. மேலும் ஓற்றுப் பிழையும் என்ற-எனும் மயக்கமும் – இப்படியெல்லாம் கூட நம் கன்னித்தமிழைக் கதறக்கதறக் கற்பழிக்கமுடியுமா எனத்தான் தோன்றுகிறது. பாவிகள்.

-0-0-0-0-

ஆக… … மேலாண்மை பொன்னுச்சாமி என்றால் யாரென்று தெரியாமலேயே, அதுவும் தமிழென்றால் என்னவென்றும் அறியாமலேயே ஒரு அஞ்சலியை அட்ச்சுவுட்டுவுட்டார் நம் இசுடாலிர் எனத்தான் படுகிறது. தேவையா இது?

ஒரு சிறிய பத்தியைச் சுத்தமாக எழுத முடியாமல் காப்பியடித்தும் உளறிக்கொட்டியும் ஒப்பேற்றியிருக்கும் இந்த ஆளா – எதிர்காலத்தில் நம் முதலையமைச்சராக ஆவதற்குச் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன?

நல்லா வெளங்கிடும்டா நம்ப டமிள் நாட். :-(

பின்குறிப்பு: மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள்மீதும் கோபம்கோபமாக வருகிறது. :-( இவர் போய்ச்சேர்ந்ததினால்தானே எனக்கு இப்படியாப்பட்ட அஞ்சலி வகையறா இரங்கல்களைப் படிக்க நேர்ந்து கிறங்கல்களில் கிறுகிறுத்து அவதிப் பட்டுக்கொண்டிருக்கிறேன்.

 

8 Responses to “மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் இறப்புக்கு இரங்கலெழவொன்றை இந்த 64வயது இளைஞரணித்தலைவர் ஸ்டாலின் தெரிவித்தேயாகவேண்டுமென எந்த மடையன் அழுதான்?”

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 Says:

    இசுடாலிர் பாவம் சார்.

  2. A.Seshagiri's avatar A.Seshagiri Says:

    சார்,இந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும்,இசுடாலினாரின் இரங்கல் செய்தியை காட்டிலும் இன்றைக்கு வந்திருக்கும் இசை மேதமை
    T .M. கிருஷ்ணா அவர்களின் மோதி பற்றிய இந்த ‘பிலாக்கணம்’தான் ரொம்ப பிடித்திருக்கிறது!.எங்கள் பகுதியில் உண்மையிலேயே ‘கூலிக்கு மாரடிப்பவர்கள்’
    உண்டு.பெரும்செல்வந்தர்களோ,பெரியவர்களோ இறந்தால் காசை வாங்கி கொண்டு இக் காரியத்தை செவ்வனே செய்வார்கள்!.அந்த வகையில் சோனியா கொடுத்த விருதை வாங்கிக்கொண்டு அருமையாக புலம்பியிருக்கிறார் இவர்!.சுட்டியை கீழே கொடுத்திருக்கிறேன் படித்து துன்புறவும்.
    http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/nov/01/carnatic-musician-tm-krishna-attacks-prime-minister-modi-over-gujarat-riots-1688670.html


    • Yo man! I am sure, after this award for ‘National Intergration’ he will go on to get the ones for ‘National Differentiation’ and National Numerical Analysis’ etc etc and may even land a Field’s medal, Mommee!

      May be even a Nobel. Why not?

      So, please do not be jealous. Thanks!

  3. mathangi's avatar mathangi Says:

    அவரது குடும்பத்தினர் – பிழை
    அவருடைய குடும்பத்தினர் – சரி

    அவரது – என்பதைத் தொடர்ந்து உயர்திணை வராது


    • நன்றி, மாதங்கி அவர்களே.

      ‘அன்னாருடைய’ இன்னமும் சரியோ? ஏனெனில் ‘அவருடைய’ என்பதை விட அணுக்கம் குறைவானது இந்த ‘அன்னாருடைய’ எனப் படுகிறது. (மேலும் நம் மேதகு இசுடாலிர் அவர்கள் மேலாண்மை பொன்னுச்சாமி இறந்தபின்னர்தாம் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்கவேண்டும் – ஆகவேயும்)

      • mathangi's avatar mathangi Says:

        1. நீங்கள் ஓர் அர்த்தத்தில் சொல்கிறீர்கள்.
        2 சில செய்திக்குறிப்புகளில் ஒருவரைப் பற்றி சிலவற்றைக் கூறிவிட்டு, இறுதியில் அன்னாருடைய ,.. என்ற துவக்கத்துடன் இறுதி வாக்கியம் இருப்பதையும் பார்த்திருப்போம்.
        அன்னார் என்றால் அவர் என்பதைக் குறிப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம்.

        உண்மையில் அன்னார் என்பது புதிய பிழை வழக்குச் சொல்.
        சரி அப்போது அன்னார் எங்கு வரும்?

        திருப்பாவை 17 ஆம் பாசுரத்தில் கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே என்ற வரி இருக்கிறது.
        இதில் கொம்பு+ அன்னார்= கொம்பை ஒத்தவர்
        கொம்பு என்பது இங்கே கொடி என்று பொருள் தரும்.
        கொம்பு அன்னார் = கொடி போன்ற ( இங்கு கொடி போன்ற உடலுடைய பெண்கள் என்று பொருள்
        கொள்ள வேண்டும்)

        3. மேலும், ‘கல்கி” இதழின் முதல் பரிசுகளை, அவருடைய சிறுகதை இருமுறை பெற்றுள்ளது.

        சிறுகதைகள், பெற்றுள்ளன – என இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

        மேலும் இரண்டாம் வரியில் இரண்டாம் வேற்றுமை உருபு ,……. வேண்டாம் போதும் என்று என் சிற்றறிவு சொல்கிறது.


      • நன்றி. :-) கூடிய விரைவில் இசுடாலிர் அவர்களுக்குத் தமிழாசிரியையாகக் களேபரப் பணி செய்ய கழகத்திலிருந்து உங்களுக்கு அழைப்பு வருமாதலால் – இப்போதே உங்களை வாழ்த்தி வணங்கி ஐஸ் போட்டு வைத்துக் கொள்கிறேன்.


Leave a Reply to mathangi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *